உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டச் செய்திகள்
4 posters
Page 2 of 4 •
1, 2, 3, 4 

சிவகங்கை மாவட்டச் செய்திகள்
First topic message reminder :

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !
![]()
![]()
![]()
![]()

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
தேவகோட்டை அருகே கோட்டூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரேவதி. இருவரும் தேவகோட்டை க.க.மு. தெருவில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகின்றனர்.
இவர்களிடம் கோட்டூரை சேர்ந்த சிவகுருநாதன்,45, ஏலச்சீட்டு சேர்ந்தார். கடந்த 2013ல் ரூ.1லட்சம், ரூ.50 ஆயிரம் சீட்டுக்களில் சேர்ந்து பணம் கட்டினார்.
ஏலச்சீட்டு தவணை காலமும் முடிந்தது. இதையடுத்து, சீட்டு பணத்தை தருமாறு செல்வத்திடம் அடிக்கடி சிவகுருநாதன் கேட்டார். இது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கோட்டூர் முனை ஆர்ச் அருகே சிவகுருநாதன் அவரது நண்பர்களுடன் நின்றிருந்தார். அங்கு வந்த செல்வம், அவர் மனைவி ரேவதி வருவதை பார்த்து சீட்டு பணத்தை தருமாறு கேட்டார். இதில் ஆத்திரமுற்ற செல்வம், சிவகுருநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
வேலாயுதபட்டிணம் போலீசில் சிவகுருநாதன் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை விசாரிக்கிறார்.
இவர்களிடம் கோட்டூரை சேர்ந்த சிவகுருநாதன்,45, ஏலச்சீட்டு சேர்ந்தார். கடந்த 2013ல் ரூ.1லட்சம், ரூ.50 ஆயிரம் சீட்டுக்களில் சேர்ந்து பணம் கட்டினார்.
ஏலச்சீட்டு தவணை காலமும் முடிந்தது. இதையடுத்து, சீட்டு பணத்தை தருமாறு செல்வத்திடம் அடிக்கடி சிவகுருநாதன் கேட்டார். இது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கோட்டூர் முனை ஆர்ச் அருகே சிவகுருநாதன் அவரது நண்பர்களுடன் நின்றிருந்தார். அங்கு வந்த செல்வம், அவர் மனைவி ரேவதி வருவதை பார்த்து சீட்டு பணத்தை தருமாறு கேட்டார். இதில் ஆத்திரமுற்ற செல்வம், சிவகுருநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
வேலாயுதபட்டிணம் போலீசில் சிவகுருநாதன் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை விசாரிக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
காரைக்குடியில் மனைவி தாக்கியதில் கணவன் படுகாயம்
காரைக்குடி, : காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக மத்துகட்டையால் மனைவி தாக்கியதில் கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யமுனா (23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யமுனா வீட்டில் இருந்த பருப்பு கடையும் மத்துகட்டையால் பாலகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீஸ் எஸ்ஐ ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் எழுதினர்.
பிளஸ்-2 தேர்வுகள்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று முதல் தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் இந்த பிளஸ்-2 தேர்வினை எழுதுகின்றனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 174 மாணவிகளும் சேர்த்து 7 ஆயிரத்து 485 பேரும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 மாணவர்களும், 4 ஆயிரத்து 698 மாணவிகளும் சேர்த்து 8 ஆயிரத்து 498 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையமும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் முனுசாமி சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வுகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 111 மாணவர்களும், 8 ஆயிரத்து 872 சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 983 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி விருதுநகர், சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 3 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் 54 மையங்களிலும் தலா ஒரு நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது போல சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை புனிதஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் அடித்துக்கொலை போலீஸ் நிலையத்தில் தந்தை சரண்
சிவகங்கை அருகே உடைக்குளம் கிராமத்தில் காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணை தந்தை அடித்துக்கொன்றுவிட்டு போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தார்.
காதலனுடன் மாயம்
சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47) விவசாயி. இவரது மகள் தமிழ்செல்வி (19). இதே ஊரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (27). தமிழ்செல்வியும், பூமிநாதனும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தமிழ்செல்வி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் விசாரணை நடத்தி வெளியூரில் பூமிநாதனுடன் இருந்த தமிழ்செல்வியை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் தான் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை
இந்த நிலையில் தமிழ்செல்வியின் தந்தை தங்கராஜ் நேற்று சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜர் ஆகி தன்னுடைய மகள் தமிழ்செல்வியை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் பொன்ரகு ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 3-ந்தேதி இரவில் நான் தூக்கத்தில் விழித்து பார்த்த போது வீட்டில் படுத்து இருந்த போது எனது மகளை காணவில்லை. பின்னர் வெளியே வந்து பார்த்த போது வயல்காட்டுப்பகுதியில் அவர் சென்று கொண்டு இருந்தார். இதனால் திரும்பத்திரும்ப தன்னை அவமானப்படுத்துகிறாளே என மகள் மீது ஆத்திரம் வந்தது. உடனே அவளை பின்தொடர்ந்து சென்று அங்கிருந்த கட்டையால் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை மண்ணெண்னை ஊற்றி எரித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கவுரவத்திற்காக மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கூறுவது உண்மையா? தமிழ்செல்வியை அவர் மட்டும் கொலை செய்தாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
கருக் கலைப்பில் பெண் சாவு:சிகிச்சை அளித்த பெண் மீது கணவர் புகார்
காரைக்குடி அருகே புதுவயலில் கருக் கலைப்பு மருந்து கொடுத்ததில் கர்ப்பிணிப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மருந்து கொடுத்த பெண்ணை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சாக்கோட்டை அருகே புளியங்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கருப்பாயி (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கருப்பாயி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தாராம்.
இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த கருப்பாயி, புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர் லீலாவதியை வெள்ளிக்கிழமை காலை சந்தித்தாராம். அப்போது கருவை கலைக்க அவர், லீலாவதிக்கு மருந்து கொடுத்தாராம். பின்னர் 1 மணி நேரத்தில் கருப்பாயி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டாராம். தகவலறிந்ததும் கணவர் மருதமுத்து சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிந்து கருப்பாயி சடலத்தைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தலைமறைவாக உள்ள லீலாவதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
காதல் படுத்தும் பாடுஇதுதான்......... எல்லாத்துக்கும் மூல காரணம் ஊடகங்களில் ( டி,வி.) ஓடும் கணக்கில்லா கற்பனை கதைகள்தான் என்றால் மிகையாகாது.........தண்டனையும் கடுமையாக கையாளப்படவில்லை................

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
சிவகங்கையில் அதிகரிக்குது கொள்ளை சம்பவங்கள்
சிவகங்கை : சிவகங்கையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை கீழக்கண்டனி, பனையூரில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி, காளவாசலில் அ.தி. மு.க., நிர்வாகி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை, நாட்டரசன்கோட்டையில் 35 பவுன் நகை கொள்ளை உட்பட 2015 துவக்க முதல் 2 மாதத்தில் 30க்கும் மேற் பட்ட கொள்ளை, திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சிக்காமல் இருக்க, பல்வேறு நூதன முறைகளை கையாளுகின்றனர். இது போன்ற கொள்ளையர்களின் சில உத்திகளை பார்க்கையில், அனுபவமிக்கவர்களே சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் பல இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.
போலீசார் கூறுகையில்,"" மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் தான் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவம் நடப்பதால், அந்த நேரத்தில் ரோந்து தீவிரப்படுத்தி உள்ளோம். மெயின் ரோடுகளை தவிர்த்து, தெருக்களிலும் ரோந்து செல்ல திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் பூட்டிய வீடு களில் அதிகம் நடக்கிறது. வெளியூர் சென்றால் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கலாம். ரோந்து பணிக்கென கூடுதல் போலீசார் தேவை. பொதுமக்களும் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங் களை தடுக்க ஒத்துழைக்கவேண்டும், என்றனர்.
சிவகங்கை : சிவகங்கையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை கீழக்கண்டனி, பனையூரில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி, காளவாசலில் அ.தி. மு.க., நிர்வாகி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை, நாட்டரசன்கோட்டையில் 35 பவுன் நகை கொள்ளை உட்பட 2015 துவக்க முதல் 2 மாதத்தில் 30க்கும் மேற் பட்ட கொள்ளை, திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சிக்காமல் இருக்க, பல்வேறு நூதன முறைகளை கையாளுகின்றனர். இது போன்ற கொள்ளையர்களின் சில உத்திகளை பார்க்கையில், அனுபவமிக்கவர்களே சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் பல இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.
போலீசார் கூறுகையில்,"" மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் தான் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவம் நடப்பதால், அந்த நேரத்தில் ரோந்து தீவிரப்படுத்தி உள்ளோம். மெயின் ரோடுகளை தவிர்த்து, தெருக்களிலும் ரோந்து செல்ல திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் பூட்டிய வீடு களில் அதிகம் நடக்கிறது. வெளியூர் சென்றால் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கலாம். ரோந்து பணிக்கென கூடுதல் போலீசார் தேவை. பொதுமக்களும் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங் களை தடுக்க ஒத்துழைக்கவேண்டும், என்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது
தேவகோட்டையை அடுத்த வேலாயுதப்பட்டினம் அருகே உள்ளது பாரதிவேலங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமி கல்லலில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கல்லல் அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் கார்த்தி(வயது28).ஆட்டோ டிரைவர். இவர் அந்த சிறுமியை திருமணத்திற்காக கடத்தி சென்றாராம்.
இது குறித்து சிறுமியின் தந்தை தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கைது செய்தார்.

காரைக்குடியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் நள்ளிரவில் 2 வீடுகளில் புகுந்து நகைகளை பறித்துக்கொண்டு ஓட்டம்
காரைக்குடியில் நள்ளிரவில் 2 வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களை தாக்கி நகைகளை பறித்துச்சென்றனர்.
வங்கி ஊழியர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல்-பைபாஸ் சாலையில் உள்ள கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர், வின்சென்ட் (வயது 50). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி எலிஷா; மகள் மெர்சி. இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் நள்ளிர வில் வின்சென்ட் வீட்டிற்குள் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் வீட்டின் பின் சுவர் வழியாக ஏறிக்குதித்து பின் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
சத்தம் கேட்ட வின்சென்ட் மனைவி, மகளுடன் எழுந்து பார்த்தார். அப்போது உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கையில் கட்டை மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். வின்சென்ட் வீட்டில் இருந்த சேரை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினார். கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளி, அவரது இடுப்பில் பலமாக தாக்கினர். இதில் வின்சென்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் கொள்ளையர்கள் எலிசாவிடம், ‘நேரமாகிறது சீக்கிரமாக உனது நகைகளை கழற்றி எங்கள் பையில் போடு. நாங்கள் அடுத்த வீட்டிற்கு கொள்ளையடிக்க செல்கிறோம். நாங்கள் அடுத்த வீட்டிற்கு செல்லும் வரை நீங்கள் யாராவது சத்தம் போட்டால் திரும்பி வந்து உங்களை கத்தியால் குத்திக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியபடி எலிஷாவின் கழுத்தில் கிடந்த சங்கிலி, காதில் கிடந்த தங்கத்தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 5½பவுன் தங்க நகைகளையும், 3 செல்போன், ரொக்கம் ரூ.670 ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர்.
அடுத்த சம்பவம்
அடுத்து முகமூடி கொள்ளையர்கள் அருகில் உள்ள மாருதி நகர் பகுதியை சேர்ந்த சித்திபாத்திமா (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து, அறைக் கதவை வேகமாக தட்டி தள்ளினர். வீட்டின் உள்ளே இருந்த சித்திபாத்திமாவும், அவருடைய மகளும் பயத்தில் எழுந்து கதவு திறந்து விடாமல் இருக்க கதவை தாங்கி பிடித்து நின்றனர்.
ஆனால் கொள்ளையர்கள் பலமாக கதவை தள்ளியதால் கதவு திறந்து கொண்டது. சித்திபாத்திமாவும், அவருடைய மகளும் வீட்டிற்குள் கீழே விழுந்தனர். பின்னர் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து சித்திபாத்திமாவை மிரட்டி அவரது காதில் கிடந்த தங்கத்தோட்டை பறித்தனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்த போது அவர் சத்தம் போட்டு அலறினார். எனவே கொள்ளையர்கள் அவர்களை தாக்கிவிட்டு கையில் சிக்கிய செயினின் ஒரு பகுதியை மட்டும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து காரைக்குடி வ.உ.சி சாலையில் உள்ள ஒரு இரும்பு கடை, ஆட்டோ மொபைல் கடை, செல்போன் கடை ஆகியவற்றின் பூட்டையும் முகமூடி கொள்ளையர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணம் ஏதும் இல்லாததால் சென்று விட்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவம் குறித்து காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

தேவகோட்டை நகராட்சியில் சுகாதாரக்கேடால் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேவகோட்டை நகராட்சி பகுதி முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிலையத்தின் அவலம்
திருச்சி- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் தேவகோட்டை பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
இந்த பகுதியில் இதுதான் பிரதான பஸ்நிலையம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதிக மக்கள் பயன்படுத்தி வரும் இந்த பஸ்நிலையம் சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. இந்த பஸ்நிலையத்தில் ஒரு கட்டண கழிப்பறையும், மற்றொரு இலவச கழிப்பறையும் உள்ளன.
இலவச கழிப்பறை சரியாக பராமரிக்கப்படாததால் பஸ்நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் துணிகளால் மூக்கினை மூடியபடி நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பஸ்நிலையத்தை சுத்தம் செய்வதும் இல்லை. எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பஸ்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் கோபுர விளக்குகள் இருந்தும் சரிவர எரிவது இல்லை. இதனால் பஸ்நிலையத்தின் சில பகுதிகள் இரவுநேரத்தில் இருள் சூழும் நிலை உள்ளது.
கோரிக்கை
தேவகோட்டை நகராட்சி அதிகாரிகள் நகர் பகுதியைச் சுற்றி வந்து பார்வையிட்டு சுகாதாரப் பணிகளை முடுக்கி விடாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் வேகமக பரவி வரும் சூழ்நிலையில் சுகாதாரம் சரியாக பேணி பாதுகாக்கப்படாததால் எந்த நேரமும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு இதில் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்க பொதுச்செயலாளர் வக்கீல் ராஜபாண்டியன் சுகாதார சீர்கேட்டினை தடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறாவயலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
காரைக்குடி அருகே ஆளில்லாத ரயில்வே கேட் பகுதியில் பேக்கரி ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே ஆறாவயலைச் சேர்ந்த ரெத்தினம் மகன் மணிகண்டன் (27). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை காலை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி பின்பகுதியில் உள்ள மாத்தூர் - கண்டனூர் ஆளில்லாத ரயில்வே கேட் பகுதியில் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டி.எஸ்.பி. முத்தமிழ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இக்கொலைக்கான காரணம் உனடியாக தெரியவில்லை. இதுகுறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை ஆசிரியர் தேர்வு
தேவகோட்டை : கற்பித்தலில் புதுமையை புகுத்திய தேவகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தேர்வு பெற்றுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனம், கற்பித்தலில் புதுமையை கையாண்ட ஆசிரியர்கள் 75 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கமும் ஒருவர்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை நேரில் பார்வையிட கல்வியியல் பயிற்சி நிறுவன கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கான இயக்குநர் ஜெரோம் தலைமையிலான குழுவினர் இந்த பள்ளிக்கு வந்தனர்.
இயக்குநர் ஜெரோம் கூறுகையில்,"" தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 5 லட்சம் ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் பல விதமாக கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு 75 ஆசிரியர்களை தேர்வு செய்து,அவர்கள் கற்பித்தலில் கையாளும் புதுமைகளை ஒளி,ஒலி காட்சியாக படம் பிடித்து, பிற ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் கொண்டு செல்கிறோம். தொடர்ந்து இது போன்ற புதுமை குறித்து மற்றவர்களுக்கு காண்பிக்க உள்ளோம்,'' என்றார்.
தேர்வு பெற்ற தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கூறுகையில், "" இன்றைய கல்வி முறை அறைக்குள்ளேயே கற்று, மாணவர்களுக்கு போரடிக்கும் விதமாக உள்ளது. திருக்குறள், அபிராமி அந்தாதி, பாடல்களை நடனம் மற்றும் இசையோடு அதற்குரிய கலைஞர்கள் மூலம் பயிற்சியளித்தேன். பொம்மலாட்டம் மூலம் கற்பித்தோம். முக்கியமான இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று களப்பயிற்சிகளை அளிப்பதில் மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். அதே போல் மாணவர்கள் படிக்க படிக்க பாடங்கள் சம்பந்தமாக வினாடி வினா போன்று நிகழ்ச்சிகளை ஆசிரியர்களின் துணையோடு நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் இந்த முயற்சி பலனளித்ததால் தொடர்ந்து கேள்விப்படும் புதுமைகள் அனைத்து வழிகளையும் கற்பித்தலுக்கு பயன்படுத்துகிறேன்,'' என்றார்.

அழகப்பா பல்கலைக்கு தேசிய தூய்மை விருது, தேசிய அளவில் 4வது இடம்
காரைக்குடி: இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் துாய்மை மற்றும் சுகாதார பணிகளை தர வரிசைப்படுத்துவதற்கான ஆய்வு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டது.
6500 உயர்கல்வி நிறுவனங்கள் துாய்மை மற்றும் பசுமை வளாக திட்ட தரவரிசைக்காக தங்கள் நிறுவனம் தொடர்பான விபரங்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பித்திருந்தனர். அதில் 4792 நிறுவனங்கள் தகுதி பெற்றன.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் கூறும்போது: மனித வள அமைச்சகத்தின் சார்பாக காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்கு மூன்று பேர் அடங்கிய ஆய்வுக்குழு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி வந்தது.
அதன் அடிப்படையில் இந்திய அளவில் காரைக்குடி அழகப்பா பல்கலை நான்காம் இடம் பெற்றுள்ளது. தமிழக பல்கலைகளில் அழகப்பா பல்கலை மட்டுமே துாய்மை மற்றும் பசுமை வளாக விருதை பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இவ்விருதை அழகப்பா பல்கலை பெற்றுள்ளது, என்றார்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|