உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டச் செய்திகள்
4 posters
Page 3 of 4 •
1, 2, 3, 4 

சிவகங்கை மாவட்டச் செய்திகள்
First topic message reminder :

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
காரைக்குடி:அழகப்ப செட்டியார் மகள் உமையாள் ராமனாதன் 90-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரோட்டரி பியர்ல் சங்கமம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடியில் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
சப்-கலெக்டர் ஆஷா அஜீத், அழகப்பா பள்ளி குழும தலைவர் ராமனாதன் வைரவன், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்திய மூர்த்தி, டி.எஸ்.பி.கார்த்திகேயன், காரைக்குடி நகராட்சி தலைவர் சுந்தராம்பாள், ரோட்டரி துணை ஆளுனர் முத்துக்குமார், பியர்ல் சங்கமம் பட்டய தலைவர் நாச்சியப்பன், தலைவர் நாவுக்கரசு, செயலாளர் சாந்தகுமார், இயக்குனர் சங்க சேவையாளர் சரவணக்குமார், தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா, மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழிப்புணர்வு ஊர்வலத்தில் பல்வேறு பள்ளியை சேர்ந்த 5,700 பேர் பங்கேற்றனர்.

ஜலகண்ட அய்யனார் கோயில் கண்மாயில் கொட்டப்படும் கழிவு
காளையார்கோவில்: காளையார்கோவில் _- பரமக்குடி செல்லும் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே ஜலகண்ட அய்யனார்கோயில் கண்மாய் உள்ளது.
இக்கண்மாயின் அருகில் விறகு லாரிகள், சரக்கு வேன்கள் நிறுத்தப்படுகின்றன. கோடை காலத்திலும் வற்றாத இக்கண்மாய் தண்ணீரில் வாகனங்களை டிரைவர்கள் கழுவுவது வழக்கம். கடந்தாண்டு ஏற்பட்ட கோடை வெப்பத்தால் வறண்டு விட்ட இக்கண்மாயில், கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த கண்மாயையும், அதன் கரைப்பகுதியையும் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும், கண்மாய்க்குள் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரையும் அசுத்தம் செய்து வருகின்றனர். கோழிக்கடைகளில் தேங்கும் கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், டீக்கடைகளின் பிளாஸ்டிக் கப்புகள், எச்சில் இலைகள், பழைய துணிகள் ஆகியவை இங்கு கொட்டப்படுகிறது.
தற்போது பெய்து வரும் சிறு மழையால் குப்பை, கழிவுகளில் இருந்து துர்நாற்றம் பரவி வருகிறது. இக்கண்மாய் அருகில் உள்ள 150 க்கும் அதிகமான வீடுகளில் வசிப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
இக்கண்மாயை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, குப்பை கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுதம் வைத்திருந்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிவகங்கை:காரில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட நெல்லை வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாட்டரசன்கோட்டை அருகே 2010 செப்., 9 ல் சிவகங்கை தாலுகா போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். காரில் வாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்ற மூன்று பேரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், ' மூவரும் நெல்லை வையாபுரிநகரைச் சேர்ந்த அய்யப்பன், சிதம்பரம், கீழ்ஆம்பூரைச் சேர்ந்த சங்கர், 31 என்பது தெரியவந்தது. மேலும் கூலிப்படையைச் சேர்ந்த மூவரும் நெல்லையில் கவுன்சிலர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக சென்னையில் வாடகை காரை எடுத்து வந்து, நாட்டரசன்கோட்டையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தனர்,' என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு சிவகங்கை முதன்மைக் குற்றவியல் நடுவர்மன்றத்தில் நடந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் அய்யப்பனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிதம்பரம் இறந்துவிட்டார்.நேற்று சங்கருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்
தேவகோட்டை: தேவகோட்டை வள்ளியப்பச்செட்டியார் ஊரணி வடகிழக்குப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் இரண்டு வருடமாக சாய்ந்துள்ளது.மின்கம்பமும் சேதமடைந்த நிலையில் உள்ளது. ரோட்டின் அருகேயே மின்கம்பம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வேன் டிரைவர் கைது
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.
உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.
அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 40 பவுன் நகை மீட்பு
தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டை நோட்டம் பார்த்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் முகமதுதாரிக் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியில் நின்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிவகங்கை, கல்லல், மானாமதுரை, சிப்காட் பகுதி, நாச்சியார்புரம், குன்றக்குடி, மணக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் மானாமதுரையை அடுத்த கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(வயது24), முருகப்பாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மணிக்காளை(25) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

சிவகங்கை கோர்ட்டில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் உட்கார்ந்த வாலிபர்
சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்த சிறிய அரிவாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் சிலரை விரட்டிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி அறைக்குச் சென்ற அந்த வாலிபர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாலிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி இருக்கையில் அமர்ந்து ரகளை செய்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 24) என தெரிய வந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போது தான் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
முனியசாமிக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகிறார்.

தொடர் புகார் எதிரொலி டெண்டர் ரத்து
சிவகங்கை நகராட்சியில் ஷெட்யூல் ரேட் பட்டியல் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்ததையடுத்து, 2 கோடி ரூபாய்க்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. நகராட்சி 9 வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2018-19 ல் 2 கோடி ரூபாய்க்கு சாலை, கால்வாய் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான 'டெண்டர்' இன்று (அக்., 9) அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரர்களுக்கு ஷெட்யூல் ரேட் (பணி மதிப்பீட்டு விலை) பட்டியல் வழங்க நகராட்சி அதிகாரிகள் மறுத்தனர். இதனால் டெண்டர் போட முடியாமல் ஒப்பந்ததாரர்கள் தவித்தனர்.
இதுகுறித்து தி.மு.க., நகரச் செயலாளர் துரைஆனந்த் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகியிடம் புகார் தெரிவித்தார். மேலும் 'குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ெஷட்யூல் ரேட் பட்டியல் வழங்குவதாக,' தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து இன்று நடக்கவிருந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ஒத்தி வைக்கப்படுகிறது,' என்றனர்.

காரைக்குடி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா கூட்டம் காரைக்குடியில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் மணிகண்ட பிரபு தலைமை வகித்தார். செயலாளர் தென்னரசு துவக்கி வைத்தார். முன்னாள் தாலுகா செயலாளர் கணேசன், மாநில இணைச் செயலாளர் பாலசந்திரபோஸ் பேசினர்.
தாலுகா தலைவராக உதயசூரியன், செயலாளராக மணிகண்ட பிரபு, பொருளாளராக லெனின், துணை தலைவராக செந்தில்நாதன், துணை செயலாளராக ேஷக்முகம்மது தேர்வு செய்யப்பட்டனர்.
தாலுகா தலைவராக உதயசூரியன், செயலாளராக மணிகண்ட பிரபு, பொருளாளராக லெனின், துணை தலைவராக செந்தில்நாதன், துணை செயலாளராக ேஷக்முகம்மது தேர்வு செய்யப்பட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 31-ந்தேதி வரை 144 தடை
மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டதுடன், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர். மருதுபாண்டியரின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.
மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் பாதுகாப்புடன் மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று(நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவோ, பேசவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

லாரி பறிமுதல்: டிரைவர் கைது
திருப்புத்துார் : திருப்புத்துாரில் திருட்டு மணலுடன் வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.'
திருப்புத்துாரில் காளியம்மன் கோயில் பகுதி யில் எஸ்.எஸ்.ஐ.,கண்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். நள்ளிரவு 3:30 மணிக்கு சிங்கம்புணரி ரோட்டிலிருந்து இணைப்பு ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதி இல்லாமல் திருட்டு மணல் இரண்டு யூனிட் இருந்தது.மணலையும், லாரியையும் கைப்பற்றிய போலீசார், டிரைவர் மாதவன் நகர் ராஜூ மகன் பிரகாஷ் 36, என்பவரைக் கைது செய்தனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பு மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக இந்நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.காரைக்குடி திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்ட நிலையில் அது நகருக்கு வெளியே பைபாஸ் சாலையாக அமைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

கடன் தொல்லையால் தற்கொலை
தேவகோட்டை அருகே முப்பையூர் குட்டையன் குடியிருப்பை சேர்ந்தவர் மதிவாணன் 46,. இவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். கொரோனா காரணமாக இவர் வெளிநாடு செல்லாமல் இங்கேயே இருந்து உள்ளார். இவருக்கு அதிக கடன் இருந்ததால் தொல்லை ஏற்பட்டுள்ளது. மதிவாணன் எலிபேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவசாய நிலத்தில் மது அருந்தியவா்களை கண்டித்த மருத்துவ மாணவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (60). இவரது மகன்களான கிறிஸ்டோபா் (21), ஜோசப் (19) ஆகிய இருவரும் வெளிநா ட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தனா்.
இந்நிலையில், இருதயராஜ் தனது இரு மகன்களுடன் அண்ணாமலை நகா் அருகே உள்ள அவரது விவசாய நிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அங்கு சிலா் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பாா்த்த இருதயராஜ் மற்றும் கிறிஸ்டோபா், ஜோசப் ஆகிய 3 பேரும் அவா்களைத் தடுத்தனா். அப்போது இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மா்ம நபா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் 3 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதில் கிறிஸ்டோபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இருதயராஜ் மற்றும் மற்றொரு மகன் ஜோசப் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டோபா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
‘‘சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. காரைக்குடி, மித்ராவயல் பிர்க்காக்கள் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன்கார்டுகள் அச்சடித்து வரப்பெற்றுள்ளன. அதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. மீதி இருதினங்களில் வழங்கப்படும். மேலும் 2,000 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஏற்கனவே உள்ள ரேஷன்கார்டுகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்டுகளுக்கு அரசு தெளிவுரை வந்ததும் வழங்கப்படும், என்றார்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|