by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
No user |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
சிவகங்கை மாவட்டச் செய்திகள்
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம்
தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.
தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்று தான் சிலை வைக்க முடியும் எனக்கூறி, தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று முன்தினம் சிலையை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக, தாசில்தார் கண்ணன், வன திட்ட அலுவலராக மாற்றப்பட்டார். டி.எஸ்.பி., கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட சிலையை அகற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், ''சிலையை அகற்றியதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக தாசில்தார் மாற்றப்பட்டுள்ளார். அரசிடம் அனுமதி பெறாமல் சிலை அமைத்தது தவறு தான்.
''அதே நேரம் அவர்கள் தற்போதைக்கு சிலையை மூடிக் கொள்கிறோம். அனுமதிக்கு பின் திறந்து கொள்வதாக கேட்டுள்ளனர். இதில், சமரசம் அடையாத தாசில்தாரால் இச்சூழல் வந்துவிட்டது,'' என்றார்.
எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில், ''டி.எஸ்.பி., கணேஷ்குமாரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது,'' என்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
504 கிடாய்கள்.. ஊரே திரண்டு சீர்வரிசை.. ஊர் ஊருக்கு வண்டி.. மிரட்டிவிட்ட அதிமுக மாவட்ட சேர்மன்!
அதிமுகவைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன். மணி பாஸ்கரனின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று அவரது சொந்த ஊர் அருகே நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊரே திரண்டு சீர் வரிசையோடு, 504 கிடாய்களை கொண்டு வந்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்துள்ளார் அதிமுக மாவட்ட சேர்மன்.
சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குன்னத்தூரில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு விழாவுக்கு, பொன்.மணி பாஸ்கரனின் சொந்த ஊரான பொன்னடப்பட்டி கிராம மக்கள் மட்டுமல்லாது, மாவட்டம் முழுக்க இருக்கும் அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
அதிமுகவினரை அழைத்து வர வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாவட்ட சேர்மன்
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருப்பவர் பொன். மணி பாஸ்கரன். இவர் சிங்கம்புணரி எஸ்.புதூர் அருகே உள்ள பொன்னடப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் தொழிலதிபராக இருந்து வரும் இவர் கடந்த 2019ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சில் 1வது வார்டில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் மாவட்ட சேர்மன் பதவியையும் பெற்றார். அதிமுகவில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கொரோனா காலத்தில்
2019ல் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் பொன். மணி பாஸ்கரன். மேலும் தனது சொந்த ஊரான பொன்னடப்பட்டி கிராம மக்களுக்கு பல நாட்களுக்குத் தேவையான சமையல் பொருட்களை வழங்கி இருந்தார். இதனால், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
வரவேற்பு நிகழ்ச்சி
இந்நிலையில், பொன்.மணி பாஸ்கரனின் மகள் திருமணம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், தனது சொந்த ஊரான பொன்னடப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் இன்று வரவேற்பு விருந்து நடத்தியுள்ளார். இதில் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஊரிலும்
இந்த திருமண வரவேற்பு நிகழ்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தார் பொன்.மணி பாஸ்கரன். மேலும், அதிமுக தொண்டர்கள், வரவேற்பு விருந்துக்கு வருவதற்கான வாகன ஏற்பாடுகளையும் அவரே செய்து இருந்தார். இதற்காக ஒவ்வொரு ஊருக்கும் அதிமுக கிளை செயலாளர்களிடம் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
504 கிடா
மேலும், இந்த வரவேற்பு விருந்துக்காக நேற்று மாலை பொன்னடப்பட்டியில் இருந்து 505 ஆட்டுக் கிடாய்கள், ஆளுயர குத்து விளக்குகள், சேலை, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் என ஊர் மக்கள் தப்புத் தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து சீர் வரிசை கொண்டு வந்தனர். அதிமுக மாவட்ட சேர்மன் தனது மகள் திருமண வரவேற்பை பிரமாண்டமான முறையில் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசியில் திருவிழா தொடங்கி பங்குனி வரை நடைபெறுவதால் மாசி-பங்குனித் திருவிழா எனப் பெயா்பெற்றது. இந்தத் திருவிழாவுக்கு முன்னதாக மீனாட்சிபுரம் இளைஞா் குழுவினரால் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். மாலையில் பூத்தட்டு ஏந்தி ஊா்வலமாக பக்தா்கள் கோயிலை அடைந்து அம்மனுக்கு மலா்ச் சொரிந்து வழிபட்டனா்.
இரவு முத்தாலம்மன் கோயிலிலிருந்து பூப்பல்லக்கு புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தது.
இந்தக் கோயில் மாசி-பங்குனித் திருவிழா வருகிற 14-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. மாா்ச் 21 -இல் கரகம், மது, முளைப்பாரி ஊா்வலமும், மாா்ச் 22-இல் காலையில் காவடி, பூக் குழி, பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் கோயில் கரகம் பருப்பூரணியில் சோ்த்தல், இரவு காப்புப் பெருக்குதல் நடைபெறும். மாா்ச் 23-இல் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலாவும், மாா்ச் 24 -இல் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
பூச்சொரிதல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மது குடித்து வீட்டிற்கு வந்த தந்தை; 'டாஸ்மாக்'கிற்கு தீ வைத்தார் மகன்
காரைக்குடி: தந்தை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஆத்திரத்தில், 'டாஸ்மாக்' கடைக்கு தீ வைத்த வாலிபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்துார் மெயின் ரோட்டில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
சில வாரங்களுக்கு முன் இக்கடை மீது வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீ வைத்து வீசி விட்டு தப்பினார்.
இதில், பணம் மற்றும் மது பாட்டில்கள் சேதமாகின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு மதுக்கடைக்கு வந்த வாலிபர், தன் கையில் வைத்திருந்த இரு மண்ணெண்ணெய் கேனை தீ வைத்து கடைக்குள்வீசினார். இதில், விற்பனையாளர் இளையான்குடி இண்டுகுளம் மாயழகு மகன் அர்ச்சுனன், 46, படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடையில் இருந்த, 76 ஆயிரத்து, 880 ரூபாய் மற்றும் 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் எரிந்து நாசமாயின. தப்பிய வாலிபரை போலீசார் தேடினர்.
இதற்கிடையில், பள்ளத்துார், சாத்தப்பசெட்டியார் தெரு, ராஜசேகர் மகன் ராஜேஷ் பாண்டி, 21, என்பவர், தீக்காயத்துடன் வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் மதுக்கடைக்கு தீ வைத்ததாக தெரிவித்தார்.
பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததுடன், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஏ.எஸ்.பி., ஸ்டாலின் அவரை விசாரித்த போது, தந்தை அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தில் பிரச்னை செய்ததால், ஆத்திரத்தில் மதுக்கடையை தீ வைத்து கொளுத்தியதாக தெரிவித்தார்.
போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சுகி சிவத்தை மறித்து பாஜகவினர் போராட்டம்:
ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவத்தை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டக்காரர்களின் கால்களில் விழுந்து சமாதானம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமய சொற்பொழிவாளர் சுகி சிவத்தை எதிர்த்து போராட்டம் செய்த பாஜக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இங்கு நடந்த கம்பன் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சமய சொற்பொழிவாளர் சுகிசிவம் சென்றபோது அவரை வழிமறித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினார். இந்துக்களுக்கு எதிராக சுகி சிவம் பேசி வருவதாகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கால்களில் விழுந்து கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாஜகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் காரணமாக காரைக்குடியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்