புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 21 of 100 •
Page 21 of 100 • 1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

இது வெயில் காலம்; இளம் பெண்களே ஜாக்கிரதை!
நான் ஒரு கல்லூரி மாணவி; சமீபத்தில், நானும் என் தோழியும், பஸ்சில் பயணம் செய்தோம். ஒரு சீட் மட்டுமே காலியாக இருந்ததால், தோழி அமர்ந்து கொள்ள, நான் நின்று கொண்டேன். என் அருகில் நின்றிருந்த இளைஞன், தோழியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்து, திடுக்கிட்டு போனேன்.
காரணம், வெயில் காலம் என்பதால், சிறிது லூசான, சுடிதார் டாப் அணிந்திருந்தாள் தோழி. அதன் கழுத்துப் பகுதி, சற்று அகலமாக, இருந்ததால், அவள் உட்கார்ந்திருந்த நிலையில், மேலிருந்து பார்த்தால், அவளது உள்ளாடை வரை தெரிந்தது. இதைத் தான் அந்த இளைஞன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தோழியிடம் விவரம் சொல்லி, எச்சரித்தேன்.
இளம் பெண்களே... லூஸ் டைப் உடைகளை அணியும் போது, ஜாக்கிரதையாக இருங்கள். இது, ஜொள்ளு பார்ட்டிகளிடமிருந்து உங்களை காப்பாற்றும்.
— ஆர். அனுஜா, சென்னை.

மிச்சம் வைத்தால் தான் கவுரவமா?
என் நண்பனுக்கு, 'பிரமோஷன்' கிடைத்ததால், 'ட்ரீட்' கொடுக்கிறேன் என்று, மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு, அழைத்து சென்றான். பல உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தான். சாப்பிட்டு முடிக்கும் போது, நண்பன், ஒரு பரோட்டாவையும், 'சிக்கன் ரோஸ்ட்'டின் ஒரு பகுதியையும் அப்படியே வைத்து விட்டான். 'ஏன் இப்படி அனாவசியமாக உணவு பொருட்களை வீணாக்குகிறாய்?' என்று கேட்டேன். 'முழுவதையும் சாப்பிட்டு, 'கிளீன்' செய்தால், அது, 'பிரஸ்டீஜ்' இல்லை...' என்றான்.
இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருளை, இப்படி மிச்சம் வைப்பது, நமக்கு தான் நஷ்டம். இதில், கவுரவம் என்ன வேண்டி இருக்கிறது. மிச்சம் வைப்பது எல்லாம், போலி நாகரிகம். இதை தவிருங்கள் நண்பர்களே!
— அ.கிருஷ்ணகுமார், பெருங்களத்தூர்.

மனித நேயம் பெருகட்டுமே!
எங்கள் எதிர் வீட்டில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், புதிதாக குடிவந்தார். தினமும், மாலையில் வேலை முடிந்து வரும் போது, அவருடைய பைக்கில், ஒரு முதியவர் இருப்பார். ஒவ்வொரு நாளும் வெவ்வேறான பெரியவர்களை, அவர் அழைத்து வருவதை, தெருவில் உள்ள அனைவரும் புரியாமல் பார்ப்போம்.
ஒருநாள், அவருடைய மகனிடம், இது பற்றி கேட்டேன். 'அது வேற ஒண்ணுமில்லை அங்கிள்... அப்பா, தினமும் வேலை முடிந்து வரும் போது, வழியில் இருக்கிற முதியோர் இல்லத்துக்கு போய், அவங்க அனுமதியோட, அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். தினமும், ஒரு தாத்தா எங்க வீட்டுக்கு வந்து, காபி அல்லது டிபன் சாப்பிடுவார். திரும்ப, அப்பாவே கொண்டு போய், விட்டுட்டு வருவார். அங்கே இருக்கிற பாட்டிக, யாரும் வர மாட்டேங்கிறாங்க. அதனால, வாரத்துக்கு ஒரு முறை, நானும், அம்மாவும் போய், அவங்களை பார்த்து, பேசிட்டு வருவோம்...'என்றார்.
வயதான காலத்தில், தனிமை வாட்ட, உறவினர்களின் ஆதரவின்றி இருப்போரை, வீட்டிற்கு அழைத்து வந்து, அளவளாவுவது, அவர்கள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நல்ல செயலைச் செய்யும் அக்குடும்பத்தின் மீது, தனி மரியாதையே வந்து விட்டது. இது போன்ற நல்ல உள்ளங்கள் பெருகினால், வருங்காலத்தில் முதியோர் இல்லங்களே இல்லாமல் போகும். குறைந்தது, மாதத்திற்கு ஒருமுறையாவது, நானும், என் குடும்பத்தோடு, ஏதாவது ஒரு இல்லத்திற்கு சென்று வர தீர்மானித்துள்ளேன்.
— எம்.ராஜன்,திருநகர்.

வியக்க வைத்த ஆசிரியர்!
என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அடுத்த தெருவில் வசிக்கும் அவனுடைய வகுப்பாசிரியர், மாலை நேரத்தில், டியூஷன் எடுக்கிறார். 'கணக்கும், ஆங்கிலமும் நன்றாக நடத்துவார்...' என்று, பையன் சொன்னதால், டியூஷனில் அவனை சேர்த்து விடலாம் என நினைத்து, அவனை அழைத்துக் கொண்டு, ஆசிரியர் வீட்டுக்கு சென்றேன்.
வீட்டு ஹாலில் நிறைய மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பாடம் நடத்தியபடியே, எங்களை திண்ணையில் அமரச் சொல்லி, கையால் சைகை செய்தார். பின், சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, 'வாங்கம்மா...' என்றவர், என் பையனைப் பார்த்து விழிகள் விரிய, 'டேய் கிருஷ்ணா... எங்கடா வந்தே?' என்றார். '
சார்... என் பையனையும் நீங்க, டியூஷன்ல சேர்த்துக்கிடணும்...' என்றேன். அதற்கு அவர், 'மன்னிச்சுருங்கம்மா... என் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு எடுத்துக்கிற வழக்கமில்லை. அப்படி செய்தால், நான் வகுப்பில் ஒழுங்கா பாடம் நடத்துறது இல்லைன்னு அர்த்தம். என் மனசாட்சி இடம் கொடுக்காது. இங்க வர்ற பசங்க வேற வகுப்பிலேயோ அல்லது வேற பள்ளிலேயோ படிக்கிறவங்க தான். இவனுக்கு, நான் பள்ளியிலேய நல்ல புரியுற மாதிரி பாடம் எடுக்கிறேன். டியூஷன் எல்லாம் வேண்டாம்...' என்று கூறினார்.
அவர் மறுத்ததில் எனக்கு வருத்தமில்லை. தன் வகுப்பில் படிக்கும் மாணவர்களை, டியூஷனுக்கு வரச் சொல்லி, கட்டாயப்படுத்தும் காலத்தில், இப்படியும் ஒருவரா என்ற வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வு, என்னுள் ஏற்பட்டது.
— ரா.கலைச்செல்வி, சிவகங்கை.

போதைப் பேர்வழிகளே... உஷார்!
சமீபத்தில், சென்னையிலிருந்து, கோவைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். வழியில், குடி போதையில் இருந்த இருவர் ஏறினர். பஸ் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களில் ஒருவன், பஸ்சிற்குள்ளேயே வாந்தி எடுத்தான். இருவரும் ரவுடியை போல் தோற்றமளித்ததால், யாரும் தட்டிக் கேட்கவில்லை. நடத்துனரும், பார்க்காத மாதிரி, பாவனை செய்தார். பஸ் கோவையை அடைந்தது. போதை மன்னர்கள் இருவரும் இறங்கினர். அப்போது, நடத்துனரும், ஓட்டுனரும் பாய்ந்து வந்து, அவர்கள் தலைமுடியை கொத்தாக பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்; அதுமட்டுமல்லாமல், வாந்தியை, அவர்கள் சட்டையாலே, துடைக்க வைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தாமதித்து நடவடிக்கை எடுத்த காரணத்தை கேட்டேன். 'வழியில், இறக்கி விட்டிருந்தால், இந்த நிகழ்ச்சியை மறந்து, மறுபடியும், இதே போல் செய்வர். 'மாமியார் வீட்டில்' இரண்டு நாள் இருந்தால், மீண்டும் இது போல செய்ய மாட்டார்கள்...' என்று கூறினார் நடத்துனர். அவர்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறையை பாராட்டினேன். போதை மன்னர்களே... இனி உஷாராக இருப்பீர்கள் தானே!
— மு.கணேஷ் பாபு, கோவை.

பெண்களே... 'அங்கே' வைக்காதீர்!
நான், கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிர் வரிசையில், சில பெண்களும், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண், அர்ச்சனை செய்ய, பெயர், நட்சத்திரம் எல்லாம் சொல்லி, அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடுவதற்காக, சில்லரை காசுகளை, தன் ஜாக்கெட் உள்ளே கையை விட்டு, தேடி எடுத்து, தட்டில் போட்டார். இதைப் பார்த்த அர்ச்சகர், முகத்தை, ஒரு மாதிரியாக சுளித்துக் கொண்டார். இவ்வாறு காசை எடுக்கும் போது, எதிரிலிருந்து பார்ப்பவர்களுக்கும், அருவருப்பாக இருந்தது. கோவிலுக்கு செல்பவர்கள், காணிக்கை செலுத்த, சில்லரைகளை, பர்சில் வைத்து, எடுத்துச் செல்லலாமே!
— ப.ரவிராஜா,சிவகங்கை.

நேரு, பெட்ராண்டு ரஸ்ஸலை சந்தித்த போது, ""சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை நான் வரவேற்கிறேன்,'' என்றார் ரஸல்.
"ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகிறவர் நீங்கள்' என்று ரஸல் கூறுவது போல இருந்தது. ஒரு கணம் திகைத்தார் நேரு.
ரஸல் விளக்கினார். ""கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. சைபர் என்கிற எண்ணை கண்டு பிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியாதான். அந்தப் பெருமையை நினைவு படுத்தும் வகையில்தான் அப்படிச் சொன்னேன்,'' என்றார். இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார் நேரு.
"ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகிறவர் நீங்கள்' என்று ரஸல் கூறுவது போல இருந்தது. ஒரு கணம் திகைத்தார் நேரு.
ரஸல் விளக்கினார். ""கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. சைபர் என்கிற எண்ணை கண்டு பிடித்து உலகத்துக்கு கொடுத்ததே இந்தியாதான். அந்தப் பெருமையை நினைவு படுத்தும் வகையில்தான் அப்படிச் சொன்னேன்,'' என்றார். இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார் நேரு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பையனை பார்க்க, பெண் கேட்கக் கூடாதா?
என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த வாலிபன் ஒருவன், அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணை விரும்பி, வீட்டு பெரியவர்களிடம் கூறியிருக்கிறான். பின், பெரியவர்கள், பெண் வீட்டிற்கு சென்று பேசியிருக்கின்றனர். அந்தப் பெண், 'நான் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்...' என்று கூறியிருக்கிறாள். இதைக் கேள்விப்பட்ட வாலிபன், ஆண்களுக்கே உரிய கர்வத்துடன், 'என்னைப் பார்த்த பின் தான், கல்யாணம் செய்துப்பேன்னு சொல்ற பெண், எனக்கு வேண்டாம்...' என்று கூறி விட்டான்.
எத்தனையோ மாப்பிள்ளைகள், 'பெண்ணை பார்த்து, எனக்கு பிடித்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறுவதில்லையா... அதையே ஒரு பெண் சொன்னால், அவள் ஆணவம் பிடித்தவள், பிடிவாதக்காரி, அடக்கமில்லாதவள் என்று முடிவு செய்து விடுவதா... ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?
கொஞ்ச நாட்களுக்கு முன், அந்தப் பெண்ணின் படிப்பு, அந்தஸ்துக்கு ஏற்ப, வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை அமைந்து, திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
இந்தப் பெண்ணை, 'ரிஜக்ட்' செய்த பையனுக்கு தான், இன்னும் பெண் தேடி கொண்டு இருக்கின்றனர்.
— சியாமளா கபிலன், ராமநாதபுரம்.

பேராசை கொண்டு...
ஒரு நாள், என் மாமாவின் கடைக்கு, முன்பின் தெரியாத சிலர் வந்து, 'எங்களிடம் கள்ள நோட்டு இருக்கிறது; நீங்கள் நூறு ரூபாய் கொடுத்தால், இருநூறு ரூபாய் தருவோம். அது, கள்ள நோட்டு என்று, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சந்தேகமாக இருந்தால், நீங்களே மாற்றிப் பாருங்கள்...' என, கூறியுள்ளனர். என் மாமாவும், சபலப்பட்டு, நூறு ரூபாய் கொடுத்து, இருநூறு ரூபாய் பெற்று, அதை, மாற்றியிருக்கிறார். யாரும் கள்ள நோட்டு என்று கண்டுபிடிக்காததால், மேலும் ஆசை வந்து, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து, அந்த நபர்களிடம் இருந்து, நான்காயிரம் ரூபாய் வாங்கினார். இந்த பணத்தையும் வெளி ஆட்களிடம் கொடுத்துள்ளார். இப்போதும் யாரும் கண்டுபிடிக்காததால், பேராசைபட்டு,
40 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு, அவர்களிடம் சென்றுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள், பணத்திற்கு பதிலாக அடி, உதை கொடுத்து அனுப்பி விட்டனர்.
அதன்பின் தான் தெரிந்தது, அவர்கள் கள்ள நோட்டு அடிப்பவர்கள் அல்ல; நல்ல நோட்டையே கள்ள நோட்டு என்று சொல்லி கொடுத்து, சபலப்படுத்தி, பின், பெரும் தொகையுடன் வரும் போது, அடித்து, பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் ஏமாற்றுக்காரர்கள் என்று!
எங்கள் ஊரில், நிறைய பேர் இப்படி ஏமாந்துள்ளனர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்!
— கே.வி.கதிர்ச்செல்வன், திருக்கோவிலூர்.

இதையுமா வீடியோ எடுப்பர்!
சமீபத்தில், உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகன், வெளிநாட்டில் வேலை செய்வதால், விமான டிக்கெட் உடனடியாக கிடைக்காததால், அவரால், இந்தியா வர முடியவில்லை. வேறு வழியின்றி, மகன் இல்லாமல், இறுதி சடங்கை செய்தனர். சடங்கு நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, மகனுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு தம்பி, தங்கைகளின் திருமண, வீடியோ படத்தை, அனுப்பி வைப்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். அப்பாவின் இறுதி சடங்கை படம் எடுத்து, அனுப்பி வைத்தது, மனதை என்னவோ செய்தது. தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள அத்தகைய வேலை அவசியமா? அங்கு சம்பாதிக்கும் பணத்தால், இந்த இழப்பை ஈடு கட்ட முடியுமா!
வெளிநாட்டுக்கு போய், பணம் சம்பாதிக்கும் இளைஞர்கள், இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
— ஜெ.கண்ணன், சென்னை.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 100