ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

Admins Online

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:56 pm

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

@krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:56 pm

ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.

எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?

'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:58 pm

@krishnaamma wrote:ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'

மேற்கோள் செய்த பதிவு: 1208347

சொல்லலாம்....ஆனால் அப்படி 'கம்பல்' பண்ணுவது 'ஜனநாயகம் இல்லை' என்று கொடி பிடிப்பார்களே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Mon May 23, 2016 11:00 pm

வீரப் பெண்மணி!

சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று, மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.

பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து, அந்த ஆளிடம், 'இப்போ நீ இந்தப் பொண்ணை, 'வீடியோ' தானே எடுத்தே...' என்று கேட்டார்.

அந்த ஆள், 'இல்லையே...' என்று தடுமாறியபடி பதில் கூற, சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார். அந்த இளம் பெண்ணை, இரண்டு, 'வீடியோ'க்கள் எடுத்திருப்பது தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின் துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை, 'வீடியோ' எடுத்திருக்கிறான். உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும் ஒப்படைத்தார் அப்பெண்மணி.

போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும் என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து, அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல் நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார பாராட்டினேன்.
இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம் தேவை!

கே.எம்.பரூக், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by ayyasamy ram on Tue May 24, 2016 9:08 am

இக்கால பெண்கள் வீரமும் விவேகமும்
நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்...
-
:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 24, 2016 10:35 am

@ayyasamy ram wrote:இக்கால பெண்கள் வீரமும் விவேகமும்
நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்...
-
:நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1208371

அப்படி இருந்தால் தான் கொஞ்சமாவது பிழைக்கலாம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by M.Jagadeesan on Tue May 24, 2016 4:14 pm

அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Wed May 25, 2016 12:27 am

@M.Jagadeesan wrote:அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1208405

அவங்க உட்கார்ந்து இருக்கும்போது, அந்த ஆள் பின்னாலிருந்து எடுத்திருக்கலாமே ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty படித்ததில் பிடித்தது

Post by கவின் on Fri May 27, 2016 8:00 am

ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த இறைவனிடமிருந்து (?) , என்ன விதமான கருணையை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 43

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Sat May 28, 2016 1:16 am

இந்த 2 வரிக்காக ஒரு திரி வேண்டாம் கவின், எனவே ஏற்கனவே இருக்கும் திரியுடன் இதை இணைத்து விடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 31, 2016 1:26 am

ஆசிரியையின் அணுகுமுறை!

பள்ளி ஆசிரியையான என் தோழி, தன் மகளின் பிளஸ் 2, 'ரிசல்ட்' வந்த அன்று, மகளின் வகுப்பு தோழிகளுக்கு, வீட்டில், 'பார்ட்டி' வைத்தாள். உணவு பரிமாறியபடியே, 'எங்கள் காலத்தை போல் அல்லாமல், இப்போது, மேற்படிப்புக்கு பல கல்லூரிகள், தேர்தெடுக்க பல பாட பிரிவுகள் உள்ளன.

அதனால், நம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விரும்பிய பாடப்பிரிவோ, கல்லூரியில் இடமோ கிடைக்காதே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். இது இல்லன்னா அது என்பது போல் மேற்படிப்பு படிக்க, பல வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேளுங்கள்; உதவ, தயாராக இருக்கேன்...' என்று கூறினாள்.

தோழியின் நம்பிக்கையான வார்த்தை, எதிர்காலத்தை சமாளிக்கும் தைரியத்தை, அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளதை, 'ஆன்ட்டி இருக்காங்க நமக்கு உதவ...' என்று வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பேசிக் கொண்டே சென்றதன் மூலம் அறிந்தேன்.

தோழியின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கையான பேச்சால், மதிப்பெண் குறைந்தாலும், தவறான வழியை அம்மாணவியர் நாட மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.

ப்ரீதா ரங்கசாமி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 31, 2016 1:27 am

மழலையர் பள்ளியில் சேர்க்க போகிறீர்களா?

சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.

வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.

இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.

பி.மேனகா, வேடப்பட்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 31, 2016 1:29 am

@krishnaamma wrote:மழலையர் பள்ளியில் சேர்க்க போகிறீர்களா?

சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.

வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.

இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.

பி.மேனகா, வேடப்பட்டி.
மேற்கோள் செய்த பதிவு: 1209345

அடப்பாவிகளா...எத்தனை சின்னக் குழந்தைகள் ?.அதுகளைப்போய் இப்படி படுத்தலாமா? ............... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 31, 2016 1:30 am

தண்ணீரை சேமிக்க...

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முடிந்து, வீட்டுக்கு புறப்படும் மாணவ - மாணவியர் தங்கள் தண்ணீர் பாட்டிலில் உள்ள மீதமான தண்ணீரை, பள்ளி வளாகத்திலிருக்கும் பெரிய பிளாஸ்டிக் வாளியில் கொட்ட வலியுறுத்துகின்றனர். அப்படி சேரும் நீரை, அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றுகின்றனர். இப்படி சேரும் நீரின் அளவு, ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!

இதைப்பார்த்து, அங்குள்ள மற்ற பள்ளிகளும், இதை பின்பற்றுகின்றனர். நீரை வீணாக்காமல் சேமிக்கும் குணம், பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தினரை, கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்!

மைதிலி நாராயணன், பெங்களூரு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by krishnaamma on Tue May 31, 2016 1:31 am

பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!

ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.

எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.

பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?

எஸ்.மனோகரி, திருவாரூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை! Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum