புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
34 Posts - 76%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
370 Posts - 78%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 18 of 37 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:08 am

மூன்று குழந்தை பெற்றுக் கொள்ளரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்

மாஸ்கோ :""ஒரு குடும்பத்துக்கு, மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வற்புறுத்தியுள்ளார்.ரஷ்ய பார்லிமென்ட்டில், அதிபர் புடின் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், "12 ஆண்டுகளாக, ரஷ்யாவின் மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. மக்கள் தொகை அதிகரித்தால் தான், பல விஷயங்களில் நாம் முன்னேற முடியும். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும், குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும்' என்றார்.ரஷ்யாவில் மக்கள் தொகை சரிந்ததால், இரண்டாவது குழந்தை பெறுபவர்களுக்கு, கணிசமான நிதி உதவி, கல்வி உதவி தொகை, வீட்டு வசதி ஆகிய சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ரஷ்யாவில், இந்த ஆண்டு மக்கள் தொகை, சற்று அதிகரித்துள்ளது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:09 am

காந்திஜி எழுதிய கடிதம் ரூ.48 லட்சத்துக்கு ஏலம்

லண்டன் :மகாத்மா காந்தி எழுதிய இரண்டு கடிதங்கள், லண்டனில், 48 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போயின.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பல பொருட்கள், ஏலம் விடப்பட்டு, அந்த பணம், பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.காந்தியடிகள், 1922ம் ஆண்டு, குஜராத்தின், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, ரவீந்திர நாத் தாகூரின் சகோதரர், த்விஜேந்திர நாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். தான் நடத்தி வந்த, "யங் இந்தியா' இதழுக்கு உதவும் படி, த்விஜேந்திர நாத்துக்கு, காந்தியடிகள் பென்சிலால் எழுதிய, இரண்டு பக்க கடிதம், லண்டனில் உள்ள, "சோத்பி' நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.இந்த கடிதத்துக்கு, 5 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 43 லட்ச ரூபாய்க்கு விலை போனது.தன் நண்பர் ஒருவரின் தாய் இறப்புக்கு, காந்தியடிகள் எழுதிய அனுதாப கடிதமும், ஏலம் விடப்பட்டது. 2.5 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த கடிதம், 5 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:10 am

குன்றத்தில் ரூ.25 லட்சம் உண்டியல் வருவாய்

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், 25 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.இங்கு 25 நிரந்தர மற்றும் இரண்டு கிரிவல உண்டியல்கள் உள்ளன. நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் 25 லட்சத்து 27 ஆயிரத்து 435 ரூபாய், 247 கிராம் தங்கம், 819 கிராம் வெள்ளி இருந்தது.கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:16 am

கல்லூரியிகல்லூரியில் மாணவர்கள் ஒப்படைத்த மொபைல் போன்கள் மொத்தமாக "அபேஸ்'ல்

நாசிக் : தேர்வு எழுதும் முன், கல்லூரி பாதுகாப்பு அறையில், மாணவர்கள் ஒப்படைத்த, 200 மொபைல் போன்கள் திருட்டு போனதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ளது, கே.கே.வாக் இன்ஜினியரிங் கல்லூரி. கடந்த செவ்வாய் கிழமை, கல்லூரியில் தேர்வு நடந்தது. தங்கள் மொபைல் போன்களை, கல்லூரி, பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.அதன்படி, அனைவரும், தங்கள் மொபைல் போன்களை, பாதுகாப்பு அறையில் கொடுத்துவிட்டு, தேர்வு எழுதச் சென்றனர். தேர்வு எழுதி முடித்ததும், மொபைல் போன்களை பெற்றுக் கொள்ள, பாதுகாப்பு அறைக்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.மாணவர்கள் ஒப்படைத்திருந்த, மொபைல் போன்கள் அனைத்தையும், யாரோ, ஒட்டுமொத்தமாக, "ஆட்டை' போட்டிருந்தனர்.

தேர்வு வேலையில் தாங்கள் மும்முரமாக இருந்த நேரத்தில், யாரோ, பாதுகாப்பு அறையை உடைத்து, மொபைல் போன்களை திருடிச் சென்று விட்டனர் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.ஆசை ஆசையாக வைத்திருந்த மொபைல் போன்கள், திருடு போனதால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், நாசிக் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 200 போன்களையும், மொத்தமாக அள்ளிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.பெரும்பாலான நேரம், மொபைல் போன்களில், மெசேஜ் அடித்தும், பேசியும் நேரத்தை கடத்திய மாணவர்களுக்கு, மொபைல் போன்கள் காணாமல் போனது, அவர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:20 am

நீண்டநாள் வாழும் இந்தியர்:ஆய்வில் தகவல்

புதுடில்லி:இந்தியர்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்றும் வய‌தான காலத்தில், மோசமாக உடல்நிலை பாதிகப்படுகின்றனர். என ஆய்வு தெரிவிக்கிறது.சராசரியாக இந்தியரின் ஆயுட்காலம் 63 வயது‌ வரையிலும் பெண்கள் 67.5 வயது வர‌ை வாழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் ஆண்கள் 54.6 வயது வரை உடல்நிலை நல்ல ஆரோக்யமாக இருப்பதாகவும் பெண்களுக்கு 57.1 வயது வரை ஆரோக்யமாக வாழ்வதாகவும் ‌அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதன் பின்னரே உடல் நோய்வாய்பட்டு மோசமாகிறது என்கிறது அந்த ஆய்வு.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:28 pm

எஸ்.ஆர். கோபி மீது இன்னொரு வழக்கு

அவனியாபுரம் : தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி. இவர் வீடு மதுரை வில்லாபுரத்தில் உள்ளது. பக்கத்து வீட்டின் சுவரில் விளம்பரம் எழுத கோபி எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதி பெற்று சுவர் விளம்பரம் வரைய வந்தவருடன் தகராறு செய்தார். அவ்வழியாக வந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தட்டிக்கேட்டார். அவரிடமும் கோபி தகராறில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் புகார்படி கோபி மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:29 pm

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது புகார்

சென்னை :அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்து வரும், தி.மு.க., பிரமுகர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நீலகண்டன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதன் விவரம்:திரு.வி.க., நகர் தொகுதி, 74வது வார்டு, அன்னை சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருபவரும், முன்னாள் சாராய வியாபாரியுமான சாமிக்கண்ணு வசிக்கிறார். இவர், அப்பகுதி தி.மு.க., வட்டச்செயலர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்க சென்ற போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிகாரிகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து, அரசு நிலத்தை மீட்க உதவிட வேண்டும். தி.மு.க., பிரமுகர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:30 pm

போலீஸ்காரரிடம் திருடிய எஸ்.ஐ.,

மேலூர்: மதுரை மேலூர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரரின் பணம் கீழே விழ, அதை எடுத்து வைத்துக் கொண்ட எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானார்.மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரவு பாரா பணியில் உசிலம்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர் சேகர் இருந்தார். அவரது நண்பர் செந்தில், 13 ஆயிரத்து 500 ரூபாயை எழுமலையில் உள்ள மற்றொரு நண்பரிடம் கொடுக்க சொல்லி கொடுத்துள்ளார். இரவில், பேன்ட்டில் இருந்த பணம் ஸ்டேஷனுக்குள் விழுந்ததை சேகர் கவனிக்கவில்லை. பணம் காணாமல் போனது குறித்து நேற்று காலை எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீசாரும் காணாமல் போன பணத்தை இன்று பகல் முழுவதும் தேடினர். இன்று மாலை, சேகருடன் இரவு பணியில் இருந்த மதுரை அச்சம்பத்தை சேர்ந்த எஸ்.ஐ., பழனிச்சாமி,52, ஸ்டேஷனுக்குள் பணம் கிடந்ததாக கூறி இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். பகல் முழுவதும் தேடிய பணம் மாலையில் கிடைத்தது எப்படி ? என விசாரணை நடந்தது. கீழே விழுந்த பணத்தை இரவே பழனிச்சாமி எடுத்து வைத்துக் கொண்டது தெரிய வர, பணம் திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த எஸ்.ஐ., பழனிச்சாமி தலைமறைவானார்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:30 pm

மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:31 pm

போலீஸ் குடியிருப்பு பகுதியில் யானைக்கூட்டம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு குட்டியுடன் வந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இருந்து இன்று ஒரு குட்டியுடன், ஏழு யானைகள் பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின் அங்கிருந்து அணையின் மேல்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வரியத்துக்கு உட்பட்ட நீர் உந்து நிலையம் அருகே சென்று நின்று கொண்டது.இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி சதீஷ் உத்தரவுப்படி, பவானிசாகர் ரேஞ்சர் பெர்னார்ட் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அங்கு மூன்று மணி நேரம் போராடி, பட்டாசுகள் வெடித்து, யானை கூட்டத்தை வனத்துக்குள் விரட்டினர்.இதன்பின் காட்டுக்குள் சென்ற யானை கூட்டம், சிறிது நேரம் அங்கேயே நின்றது. இதன்பின் மீண்டும் வனத்துறையினர் பட்டாசு வைத்து விரட்டியதால் விளாமூண்டி வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.யானை கூட்டம் புகுந்ததால் அச்சம் அடைந்த குடியிருப்பு மக்கள், அதன்பின் நிம்மதியடைந்தனர்.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 18 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 18 of 37 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக