புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10 
6 Posts - 60%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 27 of 37 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 12:55 pm

கவலைய விடுங்க ஐந்து புதிய கோள்களில் மனிதன் உயிர் வாழலாமாம்!

பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன.

இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ் இணையம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 12:57 pm

பாகிஸ்தானில் மேலும் இரு சுகாதார பணியாளர் கொலை.......

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தில் பணியாற்றிய மேலும் இருவரை ஆயுததாரிகள் இன்றும் சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் பணியாற்றிய வேறு 5 சுகாதாரத்துறை பணியாளர்கள் நேற்று புதன்கிழமையும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள்.

இன்னுமொரு தாக்குதலில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சிறார்களுக்கான ஐநாவின் பிரிவான யுனிசெவ் நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை இடைநிறுத்தியுள்ளது.

பேஷாவர் நகருக்கு உள்ளேயும் அருகிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

இன்றைய தாக்குதலில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டத்தை மேர்பார்வை செய்த ஒரு பெண்ணும் அவரது ஓட்டுனரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போலியோ தடுப்புத் திட்டம் குறித்து பழமைவாத கிராமப்புறங்களில் பரந்துபட்ட சந்தேகம் நிலவுகிறது.

அத்துடன் இந்த திட்டத்தை உளவு பார்ப்பதற்கான ரகசிய திட்டமாக இதனை முன்னர் தலிபான்கள் விபரித்திருந்தனர்.

பிபி சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 1:17 am

ஓட்டலில் தகராறு செய்த வழக்கு
சைப் அலிகான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடிகை கரீனா கபூர், அவருடைய சகோதரி கரீஷ்மா மற்றும் 2 நண்பர்களுடன் மும்பை கொலாபாவில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்றார். அவர்கள் அங்கு சத்தம் போட்டு பேசி அரட்டை அடித்ததாக தெரிகிறது. பக்கத்து டேபிளில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இந்திய தொழிலதிபர் இக்பால் மிர் சர்மாவும் அவருடைய மாமனார் ராமன் பட்டேலும் இருந்தனர். சைப் அலிகானும் நண்பர்களும் சத்தம் போட்டு பேசியதற்கு இக்பால் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த சைப் அலிகான், அவரை தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. போலீசில் இக்பால் புகார் அளித்ததை தொடர்ந்து, சைப் அலிகானும் அவருடைய 2 நண்பர்களும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 3 பேர் மீதும் கடந்த வியாழக்கிழமை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 1:21 am

போட்டோவை வைத்துக்கொண்டு
ரவுடியை புகழ்ந்து பேசியதால் மனைவியை தீர்த்துக்கட்டினேன்

திருவொற்றியூர் : ரவுடியை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசியதால் மனைவியை கொலை செய்தேன் என்று திருவொற்றியூர் பெண் கொலையில் சரணடைந்த கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன் (40), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ரூபாவதி (32). நேற்று முன்தினம் மாலையில், மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் சரணடைந்தார்.

போலீசார் பாண்டியனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு மனைவி ரூபாவதி கழுத்து, வயிறு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியனிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் பாண்டியன் அளித்த வாக்குமூலம்:

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி செல்லா. இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார். நான், கடந்த 2006 முதல் 2009 வரை துபாயில் வேலை பார்த்து வந்தேன். அப்போது ரூபாவதிக்கும், செல்லாவுக்கும் இடையே பழக்கம் இருந்திருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வீட்டில் செல்லாவின் போட்டோவை வைத்து கொண்டு அவரை பற்றி மனைவி ரூபாவதி புகழ்ந்து பேசுவார். நான் பலமுறை கண்டித்தும் அந்த பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் ரூபாவதியை கொலை செய்து விட்டேன். இவ்வாறு பாண்டியன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:10 am

எடியூரப்பாவின் அரசியல் தந்திரங்களுக்கு பாஜக அரசு பணியாது: முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர்

எடியூரப்பாவின் அரசியல் தந்திரங்களுக்கு பாஜக அரசு பணியாது என்று முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.

இது குறித்து தார்வாடில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக அரசு வகுத்துள்ள மக்கள் நலத்திட்டங்கள், படிப்படியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.மேலும் திட்டப்பணிகளுக்கு பணப்பற்றாக்குறையோ அல்லது திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித இடையூறும் இல்லை.

இந்த நிலையில், திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று கர்நாடக ஜனதா கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை. நான் கும்பகர்ண தூக்கத்தில் இல்லை. மாறாக, கர்நாடக ஜனதா கட்சிதான் கும்பகர்ணதூக்கத்தில் மூழ்கியுள்ளது. எடியூரப்பா வகுக்கும் அரசியல் தந்திரங்களுக்கும் பாஜக அரசு பணியாது.

-இவ்வாறு அவர் கூறினார்

தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:11 am

சொத்து குவிப்பு வழக்கு : 1032 கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், 1032 கேள்விகளுக்கு தோழி சசிகலா பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குக்காக, கடந்த புதன்கிழமை முதல் தினமும் நேரில் ஆஜரான சசிகலா, நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இன்றுடன் சசிகலாவிடம் விசாரணை முடிவடைந்தது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் இன்று கேட்ட 56 கேள்விகளுடன் சேர்த்து மொத்தம் 1032 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும், அவற்றை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்தும், வருமான வரி செலுத்தியது உட்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். பெரும்பாலான கேள்விகளுக்கு சசிகலா, ஆமாம், இல்லை, தெரியாது, உண்மையாக இருக்கலாம் என்றே பதிலளித்ததாகத் தெரிகிறது.

தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:14 am

பாரதி, ராமானுஜத்தை மாணவர்கள் நேசிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பாரதியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோரை மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும் என்று இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ராமானுஜனின் 125-வது பிறந்த தின விழாவில் அவர் பேசியது:

பாரதியை விட பாரதி பற்றிய பாடல்களையும், காந்தியை விட காந்தியத்தையும், ராமானுஜத்தைவிட அவரது கணிதத்தையும், பெரியாரைவிட பகுத்தறிவையும் படிக்க வேண்டும். வரலாறு என்பது படிப்பதற்காக மட்டும் அல்ல. அதை படிப்பவர்கள் தங்களது வாழ்விலும் வரலாறு படைக்க வேண்டும்.

கணிதம் என்பது கசப்பானது அல்ல. வார்த்தைகளை கவிதைகளாக்குவது போல எண்களை கவிதைகளாக மாற்றத் தெரிந்தால் கணித மேதை ஆகலாம். எண்களின் கவிஞராக இருந்தவர் ராமானுஜம்.

கணிதத்தின் காதலன் ராமானுஜம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் வரும். ராமானுஜத்துக்கு கணிதம் மீது காதல் வந்தது. ஒன்றின் மதிப்புக்கு பின்பு பூஜ்ஜியத்தை போட்டால் ஒன்றின் மதிப்பு அதிகமாகும்.

எண்ணும், எழுத்தும் நன்கு தெரிந்தால்தான் கல்வியில் முன்னேற முடியும். எண்ணுக்கு ராமானுஜரும், எழுத்துக்கு பாரதியும் தலைவராக இருந்து வருகின்றனர். எனவே, ராமானுஜத்தையும், பாரதியையும் மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் உள்ளவரை ராமானுஜமும், பாரதியும் வாழ்வார்கள்.

குறைந்த ஆண்டுகளே வாழ்ந்த இருவரது தனிப்பட்ட வாழ்வில் பல சோதனைகள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி இருவரும் சாதனை படைத்தனர். எனவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்றார்.

விழாவையொட்டி ஈரோட்டின் கணித முன்னோடிகளான ஏ.பி.நாடார், யு.எஸ்.லட்சுமி நாராயணன், கே.வி.சுப்பிரமணியன் ஆகியோரின் திருவுருவப்படங்களை திருவுருவப்படங்களை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் திறந்துவைத்தார். ராமானுஜம் கைப்பட எழுதி அச்சிடப்பட்ட அரிய கணித நூல்கள், அறிவியல் நூல்கள் அடங்கிய சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இங்கு வைக்கப்பட்டிருந்த ராமானுஜனின் சிலையை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டன். விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செயலர் க.நா.பாலன், செயற்குழு உறுப்பின் டி.ராஜன உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 2:38 pm

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜனவரி முதல் வாரத்தில் மின் உற்பத்தி துவங்கும்

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில்
ரூ .13,500 கோடி செலவில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் போராட்டம் காரணமாக கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் பணிகள் மீண்டும் தொடங்கியது. அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் பல கட்ட ஆய்வுகள் நடத்தியது. மின் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்னதாக அணு உலையின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்களுக்கு விளக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த ஜூன் 9ம் தேதி நக்கநேரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 11ம் தேதி சங்கநேரியிலும், 21ம் தேதி சிவசுப்பிரமணியபுரத்திலும் கலெக்டர் தலைமையில் முகாம்கள் நடத்தப்பட்டன.முதல் அணு உலையில் மின்உற்பத்திக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இதை ஆய்வு செய்வ தற்காக இந்திய அணுசக்தி துறை செய லாளர் ஆர்.கே. சின்ஹா நேற்று காலை கூடங்குளம் வந்தார்.

பின்னர் அணுசக¢தி கழக உயர் அதிகாரிகள் மற்றும் ரஷ்ய அணுசக்தி கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூடங்குளத்தில் இந்த வார இறுதியிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி தேவைப்படுவதால் ஜனவரி தொடக்கத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.1000 மெகாவாட் கிடைக்குமா?கூடங்குளத்தில் 2 ஆயிரம் மெகவாட் மின்சாரம் உற்பத்தியாகும் போது தமிழகத்திற்கு 955 மெகாவாட் மின்சாரம் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கினாலும் படிப்படியாகதான் 1000 மெகாவாட்டை எட்ட முடியும். அதற்கு மேலும் ஒரு மாதம் ஆகலாம். உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 4:34 pm

உலகிலேயே மிக நீண்ட புல்லட் ரயில் சேவை சீனாவில் துவக்கம்

உலகிலேயே மிக நீண்ட தூர புல்லட் ரயில் சேவை சீனாவில் இன்று துவக்கப்பட்டது.

பெய்ஜிங்கில் இருந்து குவான்சோ இடையே 2,298 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை இன்று காலை துவங்கியது. இவ்விரு நகரங்களுக்குச் சென்று வர இதுவரை சுமார் 22 மணி நேரங்கள் ஆனது. ஆனால் இந்த புல்லட் ரயில் சேவையால் வெறும் 7 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

ஒரு மணி நேரத்துக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் பயணிக்கும்.

தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 4:35 pm

திருமணம் ரத்து : மண்டப முன்பணத்தை திரும்ப வழங்க நீதிமன்றம் உத்தரவு

மும்பையில், திருமண மண்டபத்துக்கு அளித்த முன்பணத்தை, திருமணம் ரத்தானதால் திரும்ப ஒப்படைக்குமாறு தானே மாவட்ட நுகர்வோர் அமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்காக ஒரு மண்டபத்துக்கு நுகர்வோர் ஒருவர் 50 ஆயிரம் முன்பணம் செலுத்தினார். ஆனால் திருமணம் நின்று போனதால், அந்த முன்பணத்தை நுகர்வோர் கேட்டதற்கு, மண்டப உரிமையாளர் தர மறுத்தார். இதனை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, முன்பணத் தொகை 50 ஆயிரமும், அபராதமாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் சேர்த்து வரும் 45 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மண்டப உரிமையாளர் திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 27 of 37 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக