புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
87 Posts - 64%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
sram_1977
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:46 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்

1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்

""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:38 pm

25. ஜாலியாகக் கஷ்டப்படுங்கள்!

நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மகன் பி.காம். படித்துக் கொண்டிருக்கும் மாணவன்தான். ""மேலே என்ன படிக்கப் போகிறாய்? சிஏ. படிக்கும் எண்ணம் உண்டா?'' என்றேன். "இல்லை' என்று ஒரு வரி பதிலை உதிர்த்துவிட்டு ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வி.யில் சேனல் விளையாட்டைத் துவக்கிவிட்டான். நான் விடுவதாக இல்லை. ""ஏன்... சி.ஏ. படிக்கலாமே... என்ன கஷ்டம்?'' என்றேன். ""சி.ஏ. பாஸ் பண்ணனும்னா நிறைய நேரம் படிக்கணுமாம். பதினெட்டு மணி நேரம் படிக்கணும்னு ஒரு ஆடிட்டர் சொன்னாரு. நான் ஆடிட்டேன். பதினெட்டு மணி நேரம் யார் படிக்கிறது? போரு... ரொம்ப கஷ்டம்'' என்றான். படிக்கும் வயதில் படிக்கக் கஷ்டப்படுபவர்கள் பிற்காலத்தில் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள் என்பதை அவனுக்குப் புரியவைக்க நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

இன்னொரு மாணவர் கதை.

அவர் வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ஒரு கல்லூரி. அதற்காக மோட்டார்பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் அசட்டு அப்பா. ஆனால் மாணவர் மோட்டார் பைக்கில் கிண்டி ஸ்டேஷனுக்கு வருவார். அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி மாம்பலம் வருவார். அங்கு தி. நகர் பஸ் டெர்மினஸில் தன் பெண் நண்பியுடன் பஸ்ஸில் அமர்ந்து கலகலப்பாய்க் கலந்துரையாடியபடி கிண்டி தாண்டி வந்து கல்லூரியில் இறங்குவார். மாலை மறுபடியும் அதேபோல் தி. நகரில் அவரைப் பாதுகாப்பாக விட்டுவிட்டு ரயில் பிடித்து கிண்டி வந்து பைக்குடன் வீடு திரும்ப மணி ஏழரை ஆகிவிடும். காதல் சரிதான். அதற்காகக் காலத்தைத் தொலைக்கிறார். நிகழ்காலத்தை மட்டுமல்ல, தன் எதிர்காலத்தையும் தொலைக்கிறார். இது இந்தியாவின் போதாத காலம். இது நியாயமா? கஷ்டப்பட வேண்டிய இளம் பருவத்தில் ஜாலியாக இருக்கவே அவர் ஆசைப்படுகிறார்.

ஆசை ஆசையாய்த் தன் மகளை வளர்த்த அம்மா ஒருத்திக்குத் திடீர் என்று பி.பி., சர்க்கரை... எல்லாக் கஷ்டமும். காரணம் என்ன தெரியுமா? ரொம்ப சிறிது. மகளை எப்படியாவது எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க வேண்டும் என்பது அன்னையின் ஆசை. மகளோ சிரமப்பட்டு யார் படிப்பது என்ற ஒரே காரணத்துக்காக மறுத்துவிட்டாள். தாயின் கனவு அறுந்தது. பி.பி. பிறந்தது. படிக்க வேண்டிய காலத்தில் படிப்பதற்குக் கஷ்டப்பட்டால் எதிர்காலம் என்னவாகும்? யோசிக்க வேண்டாமா?

ஈரோட்டில் சி.கே.கே. அறக்கட்டளை என்கிற தரமான இலக்கிய அமைப்பு நடத்திய விழாவில் நண்பர் லேனா தமிழ்வாணன் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார். காசு கொடுத்து அவர் வாங்கிய புத்தகத்தில் ஒரு வரிக்கு - அந்தப் புத்தகத்தின் விலை முழுவதும் கொடுக்கலாம் என்றார். அது என்ன வரி? "கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள்' என்பதே.

ஆம். வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்பட்டால் என்ன?

அது மட்டுமல்ல. இனம் புரியாத எதிர்பாராத கஷ்டங்கள் வராமல் இருக்கத் திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே. காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்கப் படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே. உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே. பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்கச் சமையல் என்கிற கஷ்டம் படலாமே. ஒழுங்கற்ற எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க, திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

எனவே கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள் என்ற வாக்கியம் ஒரு வாழ்க்கைச் சூத்திரம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:38 pm

பிள்ளைப் பேறுகூட ஒரு கஷ்டம்தான். தாய் அதைப் படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலமுறை ஜாலியாக இருக்க விரும்புகிறது. கஷ்டமே இருக்கக் கூடாது என்று கனவு காணுகிறது.

ஆப்ரஹாம் லிங்கன் சின்ன வயதில் கஷ்டப்பட்டார். ஜனாதிபதியாக உயர்ந்து நின்றார். வயலில் கஷ்டப்பட உழவன் தயாராக இல்லை என்றால் எவனுக்காவது சோறு கிடைக்குமா?

"நீ சேற்றில் கால்வைப்பதால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்கிறோம்' என்று உழவனுக்குப் புதுக்கவிஞன் நன்றி கூறுகிறான். உழவு என்ற சொல்லே சிரமத்தைப் புலப்படுத்தும் சொல்தான்.

பள்ளிக்கு நடக்க, புத்தகம் திறக்க, பாடம் படிக்க, துணிமணிகளை அடுக்க, அம்மா அப்பாவுக்கு உதவியாக உழைக்க இளம்பிள்ளைகள் மறுதலிக்கிறார்கள். இது சோம்பல். மனநோய். நாளைய பெரும் துயருக்கான வித்து. சோக கீதத்தின் பல்லவி. வெற்றியாளனை விளக்கிய தமிழ்மறை, "மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார்' என்று உழைப்பைத்தான் உயர்த்திப் பேசியது. இன்று கொஞ்சமாகக் கஷ்டப்படாதவர்கள் நாளை நிறையவே கஷ்டப்படப் போகிறார்கள் என்று எச்சரிக்கிறேன்.

சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறது. இதை மாணவருக்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார். கூட்டில் இருந்து அது வெளியேறும் துயரத்தைப் பார்க்கட்டும் என்று மாணவர் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார். அது கூட்டில் இருந்து வரும் வேதனையைக் கண்ட மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு அது வெளியேறும் ஓட்டையைப் பெரிதுபடுத்தினான். அது சுலபமாக வெளி வந்துவிட்டது. மாணவன் மகிழ்ந்தான். ஆனால் வண்டு மகிழவில்லை.

வெளியே வந்தும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்..? அதன் சிறகுகளை அசைக்கக்கூட முடியவில்லை. செய்தி அறிந்த ஆசிரியர் காரணம் கண்டுபிடித்தார். கூட்டில் இருந்து சிறிய துளைவழி வெளியேறச் சிரமப்படும்போதுதான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்துப் பழகுகிறது. அதற்கு வாய்ப்பே இல்லாததால் இறகுகளை அசைக்க அதற்குத் தெரியவே இல்லை.

சிரமங்கள்தான் நம்மைப் பலப்படுத்துகின்றன. கஷ்டங்கள்தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:39 pm

26. தயக்கமா? மயக்கமா?

சிலர் எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவார்கள். சிலர் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டும் பழகுவார்கள். அறிமுகப்படுத்தாமல் பிறருடன் எப்படிப் பேசுவது என்று சிலர் வெகுவாகத் தயங்குவார்கள். அதிகமாக எல்லை மீறிப் பழகி அவமானத்தை அள்ளிக் கொண்டு வருபவர்களும் உண்டு. தன் வயதுக்கொத்த சமவயதுக்காரர்களிடம் மட்டுமே சிலர் பழகுவார்கள். தம்மைவிட வயதானவர்களுடன் பழக நேர்ந்தால் சிலர் கிண்டலடிப்பார்கள். அல்லது உம்மென்று இருந்து கழுத்தை அறுப்பார்கள். சிலரது இயல்பு தம்மைவிடச் சின்னப் பையன்களிடம் மட்டுமே பழகுவார்கள்...

இவர்களில் யார் செய்வது சரி? யார் செய்வது தவறு?

முதல் விஷயம்... பழகுங்கள். தயக்கம் இன்றிப் பிறருடன் இன்முகத்துடன் பேசிப் பழகுங்கள். விமானத்தில், ரயிலில், பேருந்தில் பக்கம் பக்கமாகப் பயணம் செய்யும்போது மணிக்கணக்காக ஊமைகள் போலவே பயணிப்பவர்கள் சிலர் உண்டு. மேலை நாட்டவர்கள் விமானப் பயணங்களில் அருகில் உட்காரும்போதே ஹலோ... அல்லது ஹாய்... அல்லது குட்மார்னிங் சொல்லி இன்முகத்துடன் புன்னகை புரிவார்கள். "மேற்கொண்டு பேசுவது உன் விரும்பம்' என்று பந்தை நம் பக்கத்தில் தள்ளிவிடுவார்கள்.

ஒரு முறை சிங்கப்பூர் பயணத்தின் போது எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மகன் என் அடுத்த இருக்கையில் இருந்தார். பளிச்சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு இயல்பாக, அறிவுபூர்வமாகப் பேசிக் கொண்டு வந்தார். தயக்கம் இன்றிப் பழகும் அவர் ஒரு வெற்றியாளர் என்று தீர்மானித்தேன்.

தேவையற்ற தயக்கம், கேட்பதா... வேண்டாமா என்ற குழப்பம், இவை முன்னேற்றத்தின் எதிரிகள். மற்றவரும் மனிதர்தான்... அளவாக, அறிவாகப் பேசினால் யாரும் வெறுக்கமாட்டார்கள். மனதிற்குள் இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்துக் கொண்டு பேசுங்கள்... தவறில்லை.

இராமனால் தூது அனுப்பப்பட்ட அனுமன் சீதையிடம் பேசும்முன் எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டதாக வால்மீகி எழுதுகிறார். எதிர்த் தரப்பில் இருப்பவர் பயந்துவிடக் கூடாது. வெறுப்படைந்துவிடலாகாது. சந்தேகப்பட்டுவிட்டால் சகலமும் கெட்டுவிடும். எனவே சொல்லின் செல்வனாகிய அனுமனே ஒத்திகை பார்க்கிறான் என்றால் நாம் ஒத்திகை பார்த்துக் கொண்டு பேசலாமே!

தீர்க்கமாக, தீர்மானமாக, தெளிவாகப் பேசுகிறவர்கள், பழகுகிறவர்கள் அபரிமிதமான வெற்றி அடைவது நிச்சயம். எனவே வேண்டாத தயக்கத்தை விட்டொழியுங்கள். ஒரு முறை சுவாமி ராமதீர்த்தர் லண்டன் பயணம் செய்கிறார். கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தார். ஐரோப்பியர் ஒருவரும் அதே நேரத்தில் மேல் தளத்திற்கு வந்தார். சுவாமி ராமதீர்த்தர் புன்னகை புரிந்து வரவேற்றுத் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். பேச்சு வளர்ந்தது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:41 pm

லண்டனில் சுவாமி ராமதீர்த்தர் எங்கே தங்கப் போகிறார் என்று அறிய ஐரோப்பியர் விரும்பினார். ""நண்பர் வீட்டில்'' என்றார் ராமதீர்த்தர். ""அந்த நண்பரின் முகவரி தெரியுமா?'' என்றார் ஐரோப்பியர். ""தெரியாது'' என்றார் ராமதீர்த்தர். ""அந்த ஏரியா - இடமாவது தெரியுமா?'' என்றார் ஐரோப்பியர். ""தெரியாது'' என்றார் சுவாமி. ""லண்டனில் நீங்கள் தங்கப்போகும் நண்பரின் வீட்டு முகவரி இன்றி நண்பரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அது சுலபமல்லவே'' என்றார் ஐரோப்பியர். ""அவரைக் கண்டுபிடிப்பது கடினமே அல்ல... ஏன் என்றால் ஏற்கெனவே அவரை நான் கண்டுபிடித்துவிட்டேன்... இதோ என் எதிரில் நிற்கும் நீங்கள்தான் அந்த நண்பர்'' என்றார்.

ஐரோப்பியர் திகைத்து, ""நானா... நான் எப்படி உங்கள் நண்பராக முடியும்?'' என்று இழுத்தார். சுவாமி ராம்தீர்த்தரோ, ""நண்பரே... நீங்களும் மனிதன். நானும் மனிதன். நாம் நண்பராவதற்கு இதைவிட என்ன தகுதிகள் வேண்டும்'' என்றார். ஐரோப்பியர் கைகுலுக்கித் தழுவிக் கொண்டு தன் வீட்டில் தங்க அழைத்தார். சுவாமியும் தங்கினார். தயக்கம் இன்றிக் கூச்சம் இன்றிப் பழகுவது வெற்றிக்கான வித்து.

இன்னொரு முக்கிய விஷயம். நம்மைவிட வயதில் சிறியவர்களுடன் பழிகினால் மனசு இளமையாக, உற்சாகமாக இருக்கும். அதுவும் அவசியம். ஷீரடி சாயிபாபா சின்னப் பையன்களுடன் கோலி ஆடுவார் தெரியுமா? மனம் சந்தோஷமாக இருக்க இதுவே சரியான வழி. நம்மைவிடப் பெரியவர்களுடன் பழகினால் அறிவு வேகமாக விருத்தியாகும் தெரியுமா? பல புத்தகங்கள் படித்த அனுபவம், வெற்றி ரகசியம் முதியவர்களுடன் பழகினால் கிடைக்கும்... தெரியுமா? எழுத்தாளர் அகிலன், மூத்த திரு. கி.வா.ஜ.வுடன் பழகினார். அமரர் மீ.ப. சோமு அமரர் ராஜாஜியுடன் பழகினார். முன்னேற விரும்புகிறவர்கள் மூத்தவருடன் பழக வேண்டும். நான் என்னைவிட முதுமையான டாக்டர் ஒüவை நடராஜனுடனும், அமரர் கி.வா.ஜ. அவர்களுடனும், அமரர் குன்றக்குடி அடிகளாருடனும் தயங்காது பழகினேன். இவை என் வெற்றியின் ரகசியம்.

நம்மைவிடச் சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும். பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும். சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்.

பழகுங்கள்... பழகுங்கள்... பழகுங்கள்... தயக்கம் இன்றிப் பழகுங்கள்.



மூலம்-தினமணி

shivaca
shivaca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 17/08/2011

Postshivaca Sun Aug 21, 2011 12:37 am

உங்கள் சேவைக்கு நன்றி . இன்னும் தொடர்ந்து எலுதினால் நலமாக இருக்கும்.



வாழ்க வளமுடன்
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக