புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:46 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்

1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்

""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:15 pm

சைவ சமயத்துக்குப் பிற சமயங்களால் துன்பம் நேர்ந்தபோது அஞ்சாமல் தலைமை ஏற்று நின்ற தமிழ் முதல்வர் சம்பந்தர். அது மட்டுமா? பாண்டிய நாட்டில் திருநீறு வைத்தாலே தீட்டு என்று அரசருக்கு அஞ்சி மக்கள் திருநீறு வைக்காதபோது நெற்றி நிறைய நீறு பூசி, திருநீற்றுப் பதிகம் பாடி, மன்னருக்கே திருநீறு கொடுத்த தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்.

எனவே நம்பர் ஒன் என்பது அவரைத் தேடி வந்தது. அவரைக் கொல்லப் பல முயற்சிகள் நடந்தன. பல ஆபத்துகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது என்றாலும் அவர் எதிர்கொண்டார்.

நம்பர் 2-ல் செüகரியங்கள் அதிகம். நம்பர் ஒன்னில் சங்கடங்கள் அதிகம். என்றாலும் நம்பர் 1 தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்பர் ஒன் ஆக வேண்டும் என்றால் தகுதி, உழைப்பு, தியாகம், தலைமைப் பண்புடன் ஆக வேண்டுமே ஒழிய தவறான பாதைக்குத் தாவக் கூடாது.

ஒரு சில சைவ மடங்களில்கூட அசைவ வேலைகள் செய்து தலைமையைப் பெற ஆசைப்படுகிறார்கள். அதுவல்ல சரியான வழி...


ஞானசம்பந்தர் மாதிரி அஞ்சாமை, பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் நம்பர் ஒன் ஆக வேண்டும்.

மகாபாரதத்தில் வியாசர் ஓர் அருமையான விளக்கம் சொல்லுகிறார்...

""எவன் பெரியவன் என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ஆச்சரியமானது. நான்கு வர்ணங்களில், அந்தணரில் அறிவு அதிகம் உடையவனே பெரியவன். அரசரில் பலம் அதிகம் உடையவனே பெரியவன். வணிகரில் பணம் அதிகம் வைத்திருப்பவனே பெரியவன். நாலாம் வர்ணத்தில் மட்டுமே வயது மூத்தவன் பெரியவன்.

காலம் மாறிவிட்டது. வர்ணாச்ரமம் வடிவம் மாறிவிட்டது... என்றாலும் வியாசரின் அணுகுமுறை ஆழ்ந்த அறிவு, மாற முடியாது.

உங்கள் ஆசிரியரைவிட நீங்கள் அதிகம் படித்தால் நீங்கள் நம்பர் ஒன். உங்கள் மேல் அதிகாரியைவிட உங்கள் பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன். உங்களைச் சுற்றி இருப்பவரைவிட உங்கள் பண பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன்.

வயது மூத்தவர்களை மரியாதையுடன் நடத்தினால் அப்போதும் நீங்கள் நம்பர் ஒன்.

செüகர்யம் கருதி நம்பர் டூ ஆகவேண்டாம். சங்கடம் என்றாலும் நம்பர் ஒன்தான் நமது லட்சியம்.

இந்த லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:17 pm

12. நாம் எந்தக் கட்சி?

வாழ்க்கையில் வெற்றி பெறும் கலையை முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தந்துவிட முடியாது. நாமாகத்தான் கற்க வேண்டும். உள்வாங்க வேண்டும். பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரே மாதிரித்தான் பாடம் நடத்துவார். அதிகமாக உள்வாங்கும் திறன் உடையவன் முதல் மதிப்பெண் பெறுகிறான். மழை சமமாகப் பெய்தாலும் களிமண் நீரை உள்ளே விடாது. மணல் முழுக்க உள்ளே உறிஞ்சும். செம்மண்ணும் மணலும் கலந்த பூமி அதிகம் உள்வாங்கிக் கொஞ்சம் வெளியே நிறுத்தும். தாவரங்கள் செம்மண் பூமியில் தளதளவென்று வளருகின்றன.

சுயமாக முன்னுக்கு வந்த கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து, ""நீங்கள் முன்னுக்கு வந்த டெக்னிக்கைச் சொல்லிக் கொடுங்கள்'' என்றால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களைச் சுயநலவாதி, கர்வி, தான் மட்டும் முன்னேற ஆசை என்று உலகம் வாரி வைகிறது. சொல்லித் தரக்கூடாது என்ற எண்ணம் அல்ல. இது சொல்லித் தரமுடியாதது என்பது ஏன் பலருக்குப் புரிவதில்லை? பரபரப்பில்லாமல் சிந்தித்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியவரும்.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது? ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதைவிடக் கற்றுக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சிவாஜி கணேசன் கல்லூரியில் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டார். சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக் கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர், புகழ்பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைத்து வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இது பிழை.

இன்னொரு செய்தி. புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரின் வீட்டைத் தேடிப்போய் ஒருவர் தம்மை முன்னேற்றி விடும்படிக் கேட்டிருக்கிறார். நடிகர் மவுனமாகவே இருந்ததும், ""நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன். நீங்க சில டெக்னிக் கத்துக் குடுத்து வாய்ப்பும் வாங்கிக் குடுத்தா நான் நிச்சயம் பெரிய நடிகனா ஆக முடியும்... மத்தவங்களை வளர்க்கணும்னு உங்களுக்குக் கடமை இருக்கு'' என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

""இதோபார்... இப்படி எந்த இடத்திலும் போய் நான் நிற்காததால்தான் பெரிய நடிகனாக இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, படார் என்று கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். போனவர் அப்ùஸட். நடிகரை மண்டைக் கனம் பிடித்தவர் என்று வசை பாடுகிறார். உண்மை அது அல்ல. நிறையக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதையும் சொல்லித் தர முடியாது. பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம். நமது அக்கறையை அதிகப்படுத்த வேண்டும்.

"சமைத்துப்பார்' என்கிற புத்தகத்தைப் படித்துச் செய்த சமையலைவிட அருமையாகச் சமைக்கிற அம்மணிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறார்கள். அவர்கள் குழம்பு கொதிக்கும் போதே, "உப்பு கம்மி... புளி அதிகம்' என்று ரிப்போர்ட் கொடுப்பார்கள். இது அனுபவம் மட்டுமல்ல... பழக்கம் மட்டும் காரணம் அல்ல. மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம் பூரணமாக விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைக் கற்றுக் கொள்ளும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:18 pm

தூக்கத்தில் இருந்து உடல் விழித்தால் போதாது. மனதும் விழிக்க வேண்டும். வீட்டு ஜன்னலை விரியத் திறந்தால் போதாது. மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால் திறக்க வேண்டும். அப்போதுதான் நிறைய நிறைய உள்வாங்க முடியும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற பொன் மொழி கோடி கோடி பெறும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது.

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர். கண்ணில்லாத போதும் கல்வி கற்பது எப்படி என்று அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன் கற்றுக் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் கற்றுக் கொடுக்காத ஆற்றலை ஹெலன் கெல்லர் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப் பொருளாக்கியது.

விழிப்புலன் இல்லாத அவர் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு பொருளையும் உணர்ந்து பெயர் குறிக்கும் வித்தையை அவரது ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். ஹெலன் கெல்லர் ஒரு படி மேலே போய் ஒரு பொருளைத் தொட்டுவிட்டு அதன் நிறம் இன்னது என்று சொல்லத் தொடங்கினார். இது ஆசிரியர் சொல்லித் தராதது. விழிப்படைந்த மனம் அவர் விரல் நுனியில் பூரணமாய் நின்றதால் கண்களின் வேலையைக் கைகளே செய்தன. பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டால் படிப்பே முடிந்துவிட்டதாகப் பலர் கருதுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் எதையும் பூரணமாகக் கற்றுத் தர முடியாது. வேண்டுமானால் எப்படிக் கற்க வேண்டும் என்கிற தொடக்கத்தைச் சொல்லித் தரலாம். "கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த படிப்பும் எத்தனை நாள் வரும்?' என்ற கிராமத்துக் கவிதையை உணருங்கள். உயர்வது நிச்சயம்.

ஆசார்ய ரஜனீஷ் இதை விளக்க ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு மகாராஜா மகன் மிக மக்காய் இருந்தான். பவர் உள்ள பல குடும்பங்களில் "மக்கு மகன்' பிரச்சினை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. "என்ன செய்யலாம்' என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பல துறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பிவந்தான்.

அவனது நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன், அறிவாளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைப் பாராட்டினர்.

ஒரு கிழவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். ""என்ன படித்தாய்?'' என்றார். ""நிறைய நிறைய... சோதிடம் கூட முறையாகக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால்கூடச் சொல்வேன்'' என்றான். கிழவர் மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, ""இது என்ன?'' என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ கணக்குப் போட்டான். அப்படி இப்படி தலையை ஆட்டிக் கொண்டான். ""உங்கள் கையில் உள்ளது வட்டமானது. ஒளியுடையது'' என்று விடை சொன்னான். கிழவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், ""அடையாளங்களைச் சொல்லுகிறாயே ஒழிய அது இன்ன தென்று சொல்லக்கூடாதா?'' என்றார். ""அது எங்கள் பாடத் திட்டத்தில் இல்லை'' என்றான் இளவரசன். ""யூகித்துச் சொல்'' என்றார் கிழவர். உடனே இளவரசன் ""பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லிவிடுவேன்... அது ஒரு வண்டிச் சக்கரம்'' என்றான்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:20 pm

மடப்பயல்... சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவனும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை.

YOU CAN EDUCATE FOOLS; BUT YOU CAN NOT MAKE THEM WISE என்பது சத்தியம். முட்டாளைப் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது. அதனால்தான் கீதையில், ""புத்திமான்களுக்குள் நான் புத்தி'' என்கிறான் கண்ணன். புத்தியில்லாத புத்திமான்கள் அநேகம் பேர். "செவன்த் சென்ஸ்' பெறப் பலர் தியானம் செய்கிறார்கள். "காமன் சென்ஸ்' இல்லாவிட்டால் இவர்களை என்ன செய்ய..? படிக்காத மேதைகளும் உண்டு; படித்த முட்டாள்களும் உண்டு. நாம் எந்தக் கட்சி..? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:23 pm

13. இல்லாத தளை; பொல்லாத சிறை!

அண்மையில் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றில் முழுநாள் பயிற்சிப் பட்டறை நடத்த நேர்ந்தது. நான் ஒருவனே அனைவரையும் கொண்டு செலுத்துவது சிரமம் என்பதால் தொழில்துறை நிர்வாக இயலில் திறன்மிகு நண்பர் ரவி என்பவரிடம் ஒரு மணி நேரம் வகுப்பை ஒப்படைத்தேன். அவர் வகுப்பைக் கையாண்ட விதம், சொன்ன செய்திகள் மிக நன்றாகவே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மனிதர்கள் எந்த விஷயத்தையும் புதிய கோணத்தில் பார்த்தால், சிந்தித்தால் முன்னுக்கு வரலாம். ஆனால் உழுத சாலில் உழுவது மாதிரி, திரும்பத் திரும்பப் பழைய பாணியில் சிந்திக்கிறார்கள்... யோசிக்கிறார்கள். ஷாம்பூ என்பது 1980-களில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருளாக இருந்தது. என்ன காரணம்? அதன் விலை. அதை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து ஒரு ரூபாய்க்கு விற்க நினைத்தாரே... அவர் மகா புத்திசாலி. புதிய சந்தையைத் தனக்கு உண்டு பண்ணிக் கொண்டார்.

வாட்ச் எனப்படும் மணிக்கூடு இப்போது பத்துக்கும் இருபதுக்கும் விற்கிறது. அதன் ஆரம்பக் காலங்களில் நகைக் கடைகளில் விற்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் அது. மத்தியதர வர்க்கத்துக்கு எட்டாத பணக்கார அணிகலனாக இருந்த வாட்சை ஏழைகளுக்கு எட்டும் பொருளாக்க எடுத்த முயற்சியில் முதலில் கிடைத்தது மரண அடி. டைமெக்ஸ் நிறுவனம் முதலில் விலை குறைந்த வாட்ச்சுகளை அறிமுகப்படுத்தியதும் தமது கடைகளில் அந்தக் குறைந்த விலைப் பொருள்களை விற்க நகைக் கடைகள் மறுத்தன. டைமெக்ஸ் நிறுவனம் சோர்ந்து போகவில்லை. எங்கே வைத்து விற்றார்கள் தெரியுமா? மருந்துக் கடைகளில். மத்தியதர மக்கள் வந்துபோகும் மருந்துக்கடைகள் மூலம் விற்பனையைத் தொடங்கிப் புதிய வரலாறும் பெரும் சந்தையும் பெற்றது அந்த நிறுவனம்.

ஐஸ்கிரீம் விற்பனையில் கோன் ஐஸ் பெரும் விற்பனையாகிறது. என்ன காரணம்? உருகும் நிலை உள்ள ஐஸ்கிரீமை வைத்துச் சாப்பிட எப்படியும் ஒரு பாத்திரம் கண்டிப்பாக வேண்டும். அது பிளாஸ்டிக் அல்லது பேப்பரில் இருக்கும். அதையே தின்னுகிற பிஸ்கெட்டில் செய்தால்..? எவ்வளவு அருமையான எண்ணப் பாய்ச்சல் அது. தொழில் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இத்தகைய எண்ணப் பாய்ச்சல் அவசியம்.

ஜி.டி. நாயுடுவுக்கு இப்படிப்பட்ட பாய்ச்சல் அதிகம். என் நண்பர் ஒருவர்... மணி என்று பெயர். அவரும் வித்யாச வித்யாசமாகச் சிந்திப்பார். வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒரு நாள் காலையில் சீக்கிரம் எழுவதைப் பற்றி வற்புறுத்திக் கொண்டிருந்தார். புகழ் பெற்ற ஆங்கிலப் பொன்மொழியான, "காலை முதலில் எழும் பறவைக்கு ஏகப்பட்ட புழுக்கள் கிடைக்கும். தாமதமாக எழும் பறவைக்கு எதுவும் மிஞ்சாது' என்பதைச் சொன்னார். நண்பர் மணி எழுந்து, ""ஸார்... அப்படியானால் காலை முதலிலேயே எழுந்திருந்து வெளியே போகும் புழுக்கள் கண்டிப்பாகச் செத்துப் போகுமே! அதனால் நாம் பறவையாக இருந்தால் முதலில் எழுந்திருக்க வேண்டும். புழுவாக இருந்தால் தாமதமாக எழுந்திருக்க வேண்டும்... சரியா?'' என்றார். ஆசிரியர் புழுப்போலச் சுருண்டு விட்டார். எண்ணப் பாய்ச்சல் ஜிவ்வென்று உங்களை மேலே தூக்கும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

பயிலரங்கில் நண்பர் ரவி சொன்ன இன்னொரு அருமையான செய்தி. கரும்பலகையில் ரோமன் எழுத்துகள் V, VI என்று குறித்துக் கொண்டே, ""இது என்ன என்ன?'' என்று கேட்டார். எல்லோரும் ஐந்து, ஆறு என்று சரியாகச் சொன்னார்கள். திடீர் என IX என்று எழுதிவிட்டு, இது என்ன? என்றார். உடனே ஒன்பது என்றார்கள். ""இதோடு ஒரே ஒரு கோடு சேர்க்கலாம். ஆனால் அழிக்கக்கூடாது. இந்த ஒன்பதை யாராவது ஆறாக மாற்ற முடியுமா?'' என்றார். பலரும் தத்தளித்தார்கள். பிறகு அவரே சாக்பீஸ் எடுத்து S என்று எழுதினார். ""இப்போது படியுங்கள் SIX, அதாவது ஆறு'' என்றார். உடனே ஒருவர் எழுந்து, ""நீங்கள் ஒரு கோடு என்றீர்கள். பிறகு "எஸ்' போட்டால் எப்படி?'' என்றார்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:39 pm

ந என்பதும் ஒரு கோடுதான். நான் நேர்கோடு என்று சொல்லவில்லை. நீங்களாக அல்லவா நேர்கோடு என்று எல்லை வகுத்துக் கொண்டீர்கள். மேலும் IX என்பதை எண்ணாக மட்டுமே எலலை வகுத்துப் படித்தீர்கள். அதை 'ஐ", 'எக்ஸ்' என்ற எழுத்தாக ஏன் பார்க்கத் தோன்றவில்லை? ஆங்கிலத்தில் இப்படி யோசிப்பதை "லாட்டரல் திங்கிங்' (Lateral Thinking) என்கிறார்கள்'' என்றார். உண்மை. இல்லாத எல்லைகளை நம் மனம் தானாக வகுத்துக்கொண்டு சிறைப்பட்டு முன்னேற முடியாமல் திணறுகிறது; குழம்புகிறது. பல சமயங்களில் நமக்குத் தடைகளே இல்லாதபோதுகூடத் தடைகள் இருப்பதான பிரமையில் நாம் இருக்கிறோம்.

உலகப்போரின் போது ஒரு குற்றவாளியை நீண்டகாலம் இருட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். பிறகு ஒருசமயம் விடுதலை செய்து வெளியே அழைத்தபோது அவன் வெளியேற மறுத்துவிட்டான். விடுதலையை விரும்பவில்லை அவன். வற்புறுத்தி, ""வெளியே வா'' என்றபோது, ""கதவுகளை நீங்கள் திறக்கவில்லையே'' என்றான். ""ஆரம்பத்தில்தான் உன் கதவுகளைப் பூட்டியிருந்தோம். சில காலமாக உன் கதவுகளைப் பூட்டுவதே இல்லை. மனத்தளவில் நீ அடிமைப்பட்டுச் சிறைப்பட்டிருந்தாய்'' என்றான் ஜெயில் அதிகாரி.

மகாபாரதத்தில் ஒரு இடம். சூதாடி, பாண்டவர் அடிமையான பிறகு சபைக்கு இழுத்துவரப்பட்ட பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள். ஆனால் கண்ணன் காத்தான். பாஞ்சாலி கோபத்தில், ""துரியோதனனைக் கொன்று, துச்சாதனனைக் கொன்று ரத்தம் பூசி என் குழல் முடிப்பேன்'' என்று சபதம் செய்தாள். நடுங்கிப் போன திருதராஷ்டிரன் அவளைச் சமாதானப்படுத்த, ""வரங்கள் கேளம்மா... தருகிறேன்'' என்றான். ""பாண்டவர்கள் ஐந்து பேரும் அடிமைகள் அல்ல என்று விடுவிக்க வேண்டும்'' என்றாள். ""தந்தேன்'' என்ற திருதராஷ்டிரன், ""நீ விடுதலை பெற வேண்டும் என்ற வரம் கேட்கவில்லையே... ஏன்'' என்றான்.


""நான் அடிமை அல்லவே... என்னை அடிமையாக்கினால்தானே விடுதலை என்ற பேச்சே பிறக்கும்?'' என்றாள் பாஞ்சாலி. தருமன் தன்னை அடிமை என்று வைத்து ஆடினாலும் தான் அடிமை அல்ல என்றே அவள் உணர்கிறாள். அவளுக்கு இருந்த அறிவு இன்று பல பாஞ்சாலிகளுக்கு இல்லையே... இல்லாத சிறைக்குள் எத்தனை அடிமைகள்! நம் எண்ணங்களின் குறுக்கமே நமக்குச் சிறையாகலாமா? சுதந்திரமாகச் சிந்தியுங்கள். எண்ணப் பாய்ச்சலில் அண்டவெளியில் பாய்ந்து பழகுங்கள்.

எதற்கும் நாம் அடிமையில்லை என்று உணருங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:45 pm

14. கேள்விகளுக்குப் பதிலா? பதிலுக்குக் கேள்வியா?

கேள்வி கேட்டால் சிலருக்குக் கோபம் வரும். ""ஏன் இப்படித் தாறுமாறாகக் கேள்வி கேட்கிறீர்கள்? ஏடாகூடமாகப் பேசாதீர்கள்'' என்று எரிந்துவிழுவார்கள். நமது பள்ளிக் கூடங்களில்கூட மாணவர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை.

கேள்விகளுக்குப் பதில் சொல்லும்படியே தயாரிக்கப்படுகிறார்கள். ஆசிரியர் பாடம் நடத்திய பிறகு கேள்விகளையும் அவரே தருகிறார். பதிலையும் அவரே கொடுக்கிறார். கேள்வியும் நானே, பதிலும் நானே என்கிற இந்தக் கூத்துக்கு "நோட்ஸ்' என்று பெயர்.

அதை அச்சிட்டு விற்று ஆசிரியரே அவசியம் இல்லை என்று அவமானப்படுத்தவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற கேலிக்கூத்தில் ஒரு முட்டாள் மாணவன்கூட அறிவாளி மாதிரி தேர்வு பெறுகிறான். இந்த வெற்றி வெற்றியே அல்ல. கல்வித் திட்டத்தின் ஓட்டை. மூட்டை மூட்டையாய் மூடர்களை உருவாக்கும் கல்விமுறை இது.

பாடங்களைப் புரிந்து கொண்டால், மாணவன் கேள்வி கேட்கக் தோன்றினால், அன்றைக்குத்தான் உண்மையான அறிவு அவனுக்கு ஆரம்பம் ஆகும். கேள்விகள் அறிவுலகச் சாவிகள், அதைத் தடுப்பவர்கள் பாவிகள். ஒரு சமயச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.

குசேலர் கதையை உபன்யாசகர் அழுது அழுது சொல்லிக் கொண்டிருந்தார். ""இருபத்தேழு நட்சத்திரமாக இருபத்தேழு குழந்தைகள். "அம்மா... சாப்பாடுன்னா என்னம்மா?' என்று தாயைக் குழந்தைகள் கேட்டன. அந்தத் தாய் என்ன பண்ணுவாள். ஒண்ணு ரெண்டு பெத்தவங்களே அல்லாடறோம். இருபத்தியேழு பிள்ளைகள். அந்தக் குசேலர் என்ன பாடுபடுவார்?'' என்று சமயச் சொற்பொழிவாளர் கதையளந்து கொண்டிருந்தார்.

பளிச்சென்று ஒரு பத்து வயதுப் பையன் எழுந்தான். ""இருபத்தேழு குழந்தைகள்னா முதல் பையனுக்கு இருபத்தேழு வயசாவது இருக்கணுமே சார்... அவன் வேலைக்குப் போயிருந்தா கஷ்டம் இருக்காதே'' என்றான். உபன்யாசகர் குசேலரைவிடப் பரிதாபமாக விழித்தார். சபையில் இருந்த பெரியவர்கள் (?), ""அதிகப் பிரசங்கி, உட்கார்'' என்று அவனை அடக்கினர். ""ஒரே பிரசவத்தில் நாலைந்து பிறந்ததா?'' என்று குட்டிப் பயல் மூர்க்கமாய்க் கேட்டான். நான் கேள்வி கேட்ட அவனைத்தான் மதிக்கிறேன். உளறுவாய் உபன்யாசகரை வெறுக்கிறேன்.

ஏன்? எப்படி? எதனால்? எவ்வாறு? என்ற விதம்விதமான கேள்விகள்... வகைவகையான சாவிகள். கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையோ, திறமையோ பெரியவர்களுக்கு இல்லாமல் போனதுதான் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை. பெரியவர்கள் வைத்திருக்கும் ஒரே பதில், ""நாங்கள்ளாம் பெரியவங்க சொன்னால் நம்பினோம். இப்படியா கேள்வி கேட்டோம்?'' என்கிறார்கள். இது பதில் அல்ல. மழுப்பல். தொடர்ந்து முட்டாள் பரம்பரையைத் தோற்றுவிக்கும் முயற்சி.

மரத்திலிருந்து பழம் ஏன் கீழே விழுகிறது என்று ஒருவன் கேட்டதால்தான் புவியீர்ப்புச் சக்தி என்ற உண்மை கண்டறியப்பட்டது. பறவைகள் மட்டும் பறக்கின்றனவே... மனிதன் ஏன் பறக்க முடியவில்லை என்ற கேள்விதான் விமானத்தை விளைவித்தது. உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு கேள்வியை வைத்திருப்பவனே விஞ்ஞானியாய் விளைந்தான். மெய்ஞானிகள் மட்டும் என்ன? உபநிடதங்கள் கேள்வி - பதில் பாணியில் இருப்பது எதனால்? கேள்விகளே சாவியாய் விஞ்ஞானியும், கேள்விகளே வேள்வியாய் மெய்ஞானியும் வாழ்ந்திருக்கிறார்கள். மறக்க வேண்டாம்.

"நான் யார்?' என்ற கடுமையான கேள்விதான் வெங்கட்ரமணனைப் பகவான் ரமணராக்கியது. ""நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் ஆர்?'' என்ற கேள்விதான் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரை மலரவைத்தது.

தான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுவிட்டுப் போகும் ஆட்டு மந்தைகளைத்தான் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைவிடக் கொடுமை, சிந்திக்கத் தெரியாத ஜென்மங்களைத்தான் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆக்குகிறார்கள். கேள்வி கேட்கும் மாணவர்களை ஆசிரியர்களுக்கு அறவே பிடிப்பதில்லை. மடத்தனமாக மண்டையை மண்டையை ஆட்டும் மடையர்களைத்தான் மதகுருமார்களுக்கு ரொம்பவும் பிடிக்கிறது.

""மீன் தண்ணீரில் வாழும்'' என்று பாடம் நடத்தும் ஆசிரியர் உடனே கேள்வி எப்படி வரும் என்பதைச் சொல்லிவிடுகிறார். "மீன் எதிலே வாழும்?' என்ற கேள்வியை எழுதிப் போடுகிறார். மாணவர்கள் "தண்ணீரில்' என்று விடை எழுதும்படித் தயாரிக்கப்படுகிறார்கள்.

"அட கடவுளே... இதுவா கல்வி? மீன் ஏன் தண்ணீரிலே வாழுகிறது? தண்ணீரில் எவை எவை வாழும்? தரையில் ஏன் மீனால் வாழ முடியாது?' இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் மாணவனுள் தோன்ற முடியாதபடி தோன்ற வேண்டிய கேள்வியை ஆசிரியர் தயாரித்து அளிப்பது சரஸ்வதியைச் செருப்பால் அடிப்பதற்குச் சமம்.

மனிதனுக்குள் கேள்விகள் தோன்றாதபடி ஒருவர் தடுப்பது தெருநாயைப் பிடித்து இனவிருத்தியை ஒடுக்க ஆண்மை நீக்கம் செய்யும் மாநகராட்சி வேலைக்குச் சமம். சிந்தியுங்கள். சிந்திக்கச் சொல்லுங்கள். சிந்திக்கச் செய்யுங்கள். கேள்வியையும் ஆசிரியரே கொடுத்தால் விடையை நோக்கிப் பாயும் வேகம்தான் மாணவனிடம் வரமுடியும். அரை அங்குலம் கூட அறிவை நோக்கி நகரமாட்டான். மாறாக, "மீன் ஏன் தண்ணீரில் மட்டுமே வாழ்கிறது? ஏன் தரையில் வாழ்வதில்லை?' என்று அவன் யோசித்தால், தரையில் வாழும் உயிர்களுக்கு நுரையீரல் அவசியம் என்ற பொறி தட்டும்.

இந்த நாட்டில் தேர்வுகளில் வெற்றி பெற எவனுக்கும் அறிவே தேவையில்லை. முந்தைய பத்தாண்டுகளின் கேள்வித்தாள்களே போதும். அதற்கான பதில் தயாரித்துக் கொண்டால் எந்த மடையனும் இந்த நாட்டில் பட்டம் வாங்க முடியும். முதல் வகுப்பு முட்டாளாக முடி சூடிக் கொள்ள முடியும்.

இப்போது சொல்லுகிறேன். கேள்விகளுக்குப் பதில் தருவது கல்வி ஆகாது. கேள்வி கேட்கும்போதுதான் கல்வி ஆரம்பமாகிறது. கேள்விகளைத் தயாரித்து, அதற்கான பதிலையும் தயாரித்து அதை எழுதும்படி மாணவர்களையும் தயாரிப்பவன் ஆசிரியனே அல்ல. பதில்களைக் கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் தயாரிக்கும்படி மாணவனைத் தயாரிப்பவனே உண்மையான நல்லாசிரியன். ஒன்றிரண்டு பேர் அப்படி இருக்கிறார்கள். அவர்களை நூறுநூறு முறை நான் வணங்க விரும்புகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:45 pm

ஒரு சின்னக் கதை.

எதிர் எதிராக இரண்டு புத்த மடாலயங்கள். இரண்டு குருமார்கள் பத்துப் பத்து மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குருமார்களின் மடம் மட்டும் எதிர் எதிராக இல்லை; மனமும் எதிர் எதிராகவே இருந்தது. அதனால் தங்கள் மாணவர்களை எதிர் மடாலய மாணவர்களுடன் பேசக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தனர். தடுக்கத் தடுக்க ஆசைகள் அதிகமாகும்தானே? ஒரு பத்து வயது மாணவன் எதிர் மடத்தின் ஏழு வயது மாணவனை ஒருநாள் கடைவீதியில் சந்தித்தான்.

பேசும் ஆசையில், ""எங்கே போகிறாய்?'' என்று சாதாரணமாகக் கேட்டான். அவனோ, ""காற்று என்னை எங்கே கொண்டு போகிறதோ அங்கு போகிறேன்'' என்று தன் லகுவான மனோநிலையைக் கவிதையாக வெளிப்படுத்தினான். மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை.

தனது ஆசிரியரிடம் வந்து நடந்ததைச் சொல்லி, ""இப்படிப் பேச நீங்கள் கற்றுத் தரவில்லையே'' என்றான். சுருக்கெனக் கோபப்பட்ட ஆசிரியர், ""அந்த வாத்தியார் ஒரு அதிகப்பிரசங்கி. அவர் மாணவன் அப்படித்தான் இருப்பான். இதற்குத்தான் அவனோடே பேசாதே என்றேன்'' என்று சீறினார். பிறகு, ""மடையா... காற்று என்னை எங்கே கொண்டு போகிறதோ அங்கே போகிறேன் என்று அவன் சொன்னால், காற்று இல்லையென்றால் என்ன செய்வாய் என்று நீ கேட்டிருக்க வேண்டாமா?'' என்று பதில் தயாரித்துக் கொடுத்தார். ""ஆஹா... நாளை கேட்கிறேன்'' என்றான் மாணவன்.

மறுநாள், ""எங்கே போகிறாய்..?'' என்று ஆரம்பித்ததும், ""என் கால்கள் என்னை எங்கே கொண்டு போகிறதோ அங்கே போகிறேன்'' என்றான். பயல் முகம் வாடிவிட்டது. ஆசிரியர் தயாரித்துக் கொடுத்த பதில் பயன்படாமல் போய்விட்டது. மறுபடியும் ஆசிரியரிடம் ஓடினான்.

""மடையா... கால்கள் இல்லையென்றால் எங்கே போவாய்... என்று கேட்கக் கூடாதா?'' என்று மறுபடியும் தயாரித்தார். ஆனால் மறுநாளோ, ""எங்கே போகிறாய்?'' என்று கேட்டதும் எதிர்மடாலய மாணவன், ""காய்கறி வாங்க'' என்று எதிர்பாராத பதிலைச் சொல்லி வீழ்த்தினான்.

எதற்கும் தயாராகவே இருக்கும் எதிர்மடாலய மாணவனை அவ்வப்போது தயாரிக்கப்பட்ட மாணவனால் வெல்ல முடியவில்லை. வாழ்க்கை ஒரு வித்தியாசமான பரிட்சை. இங்கே கேள்வி, பதில் இரண்டையும் தயாரித்துத் தந்துவிட முடியாது. எங்கும் எப்போதும் எதற்கும் தயாராய் இருங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:47 pm

15. சாவது பெரிதல்ல... வாழ்வதே பெரிது!

அண்மையில் எனக்கொரு இன்ப அதிர்ச்சி. என் மதிப்பிற்குரிய தென்கச்சி கோ. சுவாமிநாதன் என் அலுவலகம் வந்திருந்தார். மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தேன். சிரிக்கச் சிரிக்கப் பேசி எனக்குச் சிறகு முளைக்க வைத்தார். உரையாடல் பல பக்கம் சுற்றிச் சுற்றித் தமிழக இளைஞர்களைப் பற்றி வந்தது. அவர் சொன்ன செய்தியில் உறைந்து போனேன்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் இடம் எது என்று கேட்டவர் - தமிழகம் என்று "இன்று ஒரு தகவலை' வானொலி இல்லாமலேயே வாயொலி மூலம் வழங்கினார். அரசியல் தலைவர்கள் மரணம், கைது, கொலை, பதவியிழப்பு என்று எது நடந்தாலும் தன்னை மாய்த்துக் கொள்வதில் தமிழகம் தலைமை தாங்குகிறது என்றார். துக்கப்பட வேண்டிய, வெட்கப்பட வேண்டிய விஷயம் இது என்று துடித்துப் போனேன்.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது தற்கொலை செய்து கொண்டவர்கள் பதினாறு பேர் என்றும் அதில் பதினான்கு பேர் தமிழ்நாடு, ஒருவர் ஒரிசா, மற்றவர் மலேசியா என்றும் சொன்னார். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், ஒரிசாவிலும் மலேசியாவிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் அந்தப் பகுதியினர் அல்லர்; அவர்களும் தமிழ்நாட்டிலிருந்து போனவர்கள்... சிறந்த சிந்தனையாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் க.ப. அறவாணன் இதுபற்றி மிகுந்த அக்கறையுடன் ஓர் ஆய்வு மேற்கொண்டார் என்றும் புலப்படுத்தினார். அவரது ஆய்வில் தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் அதிகத் தற்கொலைகள் என்று கண்டறியப்பட்டது.

இன்னொரு செய்தி... தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் தமிழ்நாட்டிலேயே அதிக சினிமாக் கொட்டகைகள் உள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்தில் தற்கொலை செய்கிறவர்கள் அதிகம், சினிமாக் கொட்டகைகள் அதிகம் என்கிற இரண்டையும் இணைத்து யோசிப்பதா, வேண்டாமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

கலைஞர் கைதானபோது நிகழ்ந்த தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் எண்ணிக்கையில் இன்னும் அதிகம். தமிழகத்து அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாத என்.டி. ராமாராவின் பதவிக் கவிழ்ப்பு நிகழ்ந்தபோது அவரது ஆந்திரத்தில் ஒருவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது அதிர்ச்சியாக இல்லையா? தமிழன் வாழ்ந்து சாதிப்பதைவிடச் சாகத் தயாராக இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயமா? அவமானப்பட வேண்டிய விஷயமா? நமது தலைவர்கள் தங்கள் தொண்டர்களைப் போராடி வெற்றி பெறும் வீரர்களாக உருவாக்கி இருக்கிறார்களா? அல்லது சாவதே வீரம் என்று மூளைச் சலவை செய்துவிட்டார்களா? அல்லது வேறு பல காரணங்களால் மரணத்தின் விளிம்பில் நிற்கும் தமிழ் இளைஞன் புகழ் பெறும் ஒரு காரணத்துக்காகக் காத்திருந்து சாகிறானா? யோசியுங்கள்... யோசியுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:47 pm

வேறு சமயத்தைச் சார்ந்த ஒரு சமயச் சொற்பொழிவாளரும் நானும் அடிக்கடிச் சந்தித்து நிறைய கருத்துகள் பரிமாறிக் கொள்வோம். அவர் சொன்ன செய்தி இன்னும் கவனிக்க வேண்டியது. தமது மதம் சொல்லும் கண்டிப்பான ஒழுக்க நெறிகளின்படிச் சரியாக வாழ முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால் இளைஞர்கள் முன்வர மறுக்கிறார்கள். ஆனால் உணர்ச்சியைத் தூண்டுகிற சமயவாதிகள், "நமது மதத்துக்காகச் சாக யார் தயார்?' என்று வெறியூட்டினால், பல இளைஞர்கள் நான், நீ என்று முன்வருகிறார்கள் என்று வருத்தப்பட்டார். வாழ்வதற்கு மதமா? சாவதற்கு மதமா என்று யோசியுங்கள்... யோசியுங்கள்.

ஜாதித் தலைவர்கள், சமயவாதிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் தற்கொலையைத் தூண்டுகிறார்கள். தன்பொருட்டுத் தீக்குளித்தோருக்கு, நாவறுத்தோருக்கு, தற்கொலை செய்ய முயன்றவருக்கு, அவர்களின் பரம்பரைக்குப் பணம், பதவி, பட்டம் தருவதன் மூலம் தற்கொலை ஊக்குவிப்புத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கிறோம் என்று உணரமாட்டார்களா? அடுத்த தலைமுறையை அறுத்தெறியும் எந்தத் தலைமையையும் இனி ஆதரிக்கக் கூடாது என்று தீர்மானியுங்கள். நாடு உருப்படும்.

தற்கொலை என்பது வீரமா? கோழைத்தனமா என்ற தத்துவ விவாதம் காலம்காலமாக நடக்கிறது. உளவியல் நிபுணர்கள் மூட்டை மூட்டையாகக் காரணங்களை முன் வைக்கிறார்கள். இவை எதுவும் எனக்குத் தேவையில்லை. நாமாகப் பிறக்கவில்லை; எனவே நாமாகச் சாகக் கூடாது. இதுதான் என் பார்வை. எப்படியும் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் உயிர்க்குலத்துக்கு முன் உள்ள ஒரே கொள்கை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் சாவுதான் தீர்வு என்றால், ஒரு நாளைக்குள் எத்தனை முறை சாவது? எத்தனை முறை பிறப்பது?

மரண தண்டனை பெற்றவனுக்குக்கூட முதல் நாள் ஹார்ட் அட்டாக் வந்தால் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கே இருக்கிறது. ஒற்றை உயிர் - அதை அர்த்தமற்ற விஷயங்களுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் அழிப்பது அறிவுடைமையா?

தற்கொலை முடிவுக்கு வருகிறவர்கள் பற்றிய ஆய்வில் தெரிய வந்த அதிர்ச்சியான செய்தி - இவர்கள் அதிகம் திரைப்படம் பார்க்கிறவர்கள். சினிமாவை வாழ்க்கை என்று ஏமாந்த பாவிகள். வாழ்க்கையையும் சினிமா மாதிரியே நடத்துகிறார்கள். தற்கொலைகூட அவர்களைப் பொறுத்தவரை முடிவு அல்ல... ரசிகர்களைக் கலக்கும் ஒரு காட்சி போலவே தோன்றுகிறது. அடப்பாவிகளா... காட்சி முடிந்து ரசிகன் கைதட்டியதும் நடிகன் எழுந்து வருவது போல வர முடியாது என்பது இவர்களுக்குத் தோன்றுவதே இல்லை!

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக