புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- GuestGuest
First topic message reminder :
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்
1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்
""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.
தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?
கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:
""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.
இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.
ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.
இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.
பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.
"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.
""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.
""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.
""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.
""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.
பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.
ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.
ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?
எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.
தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.
அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.
""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.
முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.
""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.
""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.
கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்

ஒரு வேடிக்கைக் கதை. ஆனால் எவ்வளவு ஆழமானது தெரியுமா? அரசர் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதித்தார். அவன் மரண தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டினான். அரசரும் கருணையில், ""நீ ஏதாவது அதிசயம் செய்தால் பிழைக்கலாம்'' என்றார். ""அரசே! உங்கள் பட்டத்துக் குதிரையை ஆகாசத்தில் பறக்கவைக்க என்னால் முடியும். ஒரு வருடம் அதற்குப் பயிற்சி கொடுக்க அனுமதிக்க வேண்டும்'' என்றான். மன்னரும் அனுமதித்தார். ஆனந்தமாக உண்டு மகிழ்ந்து பொழுதைக் கழித்தான் அவன். ""ஒரு வருடம் கழித்து இது நடக்காது. நீ சாவாயே...'' என்று நண்பர்கள் கேட்டபோது, ""ஒரு வருடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இயல்பாகவே சாகலாம். தண்டனை கொடுத்த ராஜா மனம் மாறலாம். அல்லது அவரது ஆட்சி மாறலாம். ஏன் அவரேகூடச் சாகலாம்... குதிரைகூடச் சாகலாம். அடுத்த குதிரைக்கு நான் ற்ண்ம்ங் கேட்கலாம்..!'' என்றபடிக் குதித்துக் கொண்டு ஓடினான் அந்தக் கைதி.
எப்படியாவது மரணத்தை ஒத்திப்போட மருந்தும் மருத்துவரும் போராடுகிறபோது, அர்த்தமற்ற அரசியலுக்கும் மதத்துக்கும் ஜாதிக்கும் தமிழ் இளைஞன் சாகலாமா? தமிழ் இளைஞனே மரணத்தைக் கொல்... சாவைச் சாவடி! வாழப் பழகு. போராடு! போராடு! உயரப் பார்! துயரங்களைத் தூக்கி எறி.
வெற்றியை நோக்கிப் பயணப்படு... வெற்றி நிச்சயம்!

16. சாய்வதற்கு ஒரு தோள்... அவசியமா?
இன்றைக்கு எல்லோருக்கும் உள்ள ஓர் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஆம்... தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒருவர் இருந்தால் நல்லது என்றே பலரும் ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகை மனநோய். மன ஊனம்.
உண்மையில் உடல் ஊனமுற்ற பலர்கூட இந்த எதிர்பார்ப்பிலிருந்து விலகிச் சுயமாக இயங்கவே விரும்புகிறார்கள். ஆனால் கையும் காலும் வலுவாக இருந்தாலும், மனது பலவீனம் அடைந்த சிலர் யாரையாவது சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்.
இந்தப் பலவீனத்தைத்தான் சிறுசிறு ஜோதிடர்கள், சின்னச் சின்ன சாமியார்கள் வசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மூளையை அடகு வைத்துவிட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பிறர் வசம் விட்டவர்கள் வாழ்வில் மிகப் பெரிய நிலையை ஒருபோதும் எய்த முடியாது.
புத்தர், உலகை உலுக்கிய மனிதருள் ஒருவர். அவர் யாரைக் கேட்டுத் துறவு பூண்டார்? சகல உயிர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் கருணாமூர்த்தி அவர். ஆனால் அவர் ஆறுதலுக்காகச் சாய்ந்து கொள்ள ஒரு தோள் கேட்கவில்லை.
கோயிலில் உள்ள சாமிகளுக்குப் பேரும் புகழும் எதனால் தெரியுமா? பெருவாரியான மனிதர்களின் புலம்பலை, பிலாக்கணத்தை மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்வதுதான். எதிர்த்துப் பேசாமல், எவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் கடவுளின் ஸ்பெஷாலிட்டி. அதனால்தான் அவருக்கு இவ்வளவு பாப்புலாரிட்டி. அதாவது பலரது எதிர்பார்ப்பான சாய்ந்து கொள்ள ஒரு தோள் என்கிற ஆசையே கோயில்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிட்டது.
எப்போதும் சிலர் தங்களின் உறவுக்காரர்களில் ஒரு சிலர் பெயர் சொல்லி, ""அவர் என்னைக் கைதூக்கிவிட்டிருக்கலாம்... ஆனால் மனுஷர்..... செய்யமாட்டார்'' என்று திட்டுவார்கள்.
என் நண்பர் ஒருவர் உண்டு. எப்போதும் யாராவது இன்னொரு நண்பர் பெயர் சொல்லி, ""அவனுக்கு இப்பதான் போனஸ் வந்துருக்கு. எனக்கு ஐயாயிரம்தான் தேவை... கொடுக்கலாம். மனசே கிடையாது'' என்பார். எப்போதும் யாருக்கு என்ன கிடைத்தது என்று கணக்கு வைத்திருப்பார். தான் சம்பாதித்து யாருக்காவது ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணமே அவருக்கு வந்ததில்லை. ஆனால் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். இத்தகைய மன ஊனங்கள் மாறவேண்டியவை.
இதற்கு நேர்மாறாக இருந்தவர்கள் உண்டு. மகாகவி பாரதி கடையத்தில் வாழ்ந்தபோது அவர் தங்கியிருந்த வீட்டுக்குடையவர் பத்தாறு வேட்டி அணியக் கொடுத்தார். இடுப்பு வேட்டி -பஞ்சகச்சம் கட்டக்கூடியது பத்து முழம், மேல் துண்டு - அங்கவஸ்திரம் ஆறு முழம். புது வேட்டி, துண்டோடு தெருவில் இறங்கிய பாரதி அங்கே தெருவில் குளிரில் நடுங்கிய ஏழையைப் பார்த்ததும் இடுப்பு வேட்டியைக் கழற்றி ஏழைக்குக் கொடுத்துவிட்டு மேல்துண்டை இடுப்புக்கு அணிந்துகொண்டு வீடு திரும்பினார்.
கொடுக்கும்போது மேல்துண்டைக் கொடுத்தால் போதாதா என்று யாரோ கேட்டதற்கு, ""அதெப்படி... அவன் வெளியே இருக்கிறான், குளிராதோ... வீட்டுக்கு உள்ளே இருக்கிற எனக்கு இது போதாதா?'' என்றார் வள்ளல் மகாகவி பாரதி.
அவரா ஏழை? கவியரசர் அல்லவா? பிறர் தோளில் சாயும்படி வாழ்க்கை அவரை நிர்பந்தித்தது. ஆனால் பலரையும் தன் தோளில் சாய்ந்து கொள்ளச் சொல்லும் வாக்கை அவர் மனம் பெற்றிருந்தது.
வாழ்வில் புகழ் பெற்ற, மிக்குயர்ந்த பெருமக்கள் வரலாறுகளை ஊன்றிக் கவனியுங்கள். வெற்றியாளர்களின் விசேஷ குணம் இது. தோள் கொடுத்துத் தாங்கத் தயார்; சாயத் தோள் வேண்டியதில்லை என்பதே அவர்கள் அறிவிப்பு. ஏசுபிரான் அப்படித்தானே உலகோரைத் தம் நிழலில் இளைப்பாற அழைப்பு விடுத்தார்.

ஓர் ஏழை இளைஞன் நெடுநாள்கள் ஆசைப்பட்டு விலையுயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகள் வாங்கியிருந்தான். ஓடும் ரயிலில் அட்டைப் பெட்டியைத் திறந்து அவற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக ஜோடியில் ஒன்று ஜன்னல் வழியாகத் தவறி வெளியே விழுந்தது. ஒரு விநாடி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது. அடுத்த விநாடியே மற்றொன்றையும் பெருமிதத்துடன் வெளியே வீசினான். உடன் இருந்தவர்கள், ""என்ன தம்பி இப்படிச் செய்துவிட்டீர்கள்?'' என்றனர்.
""ஐயா... காலணியில் ஒன்றை மட்டும் நான் வைத்திருந்தால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. ரயில் தண்டவாளம் அருகே மற்றொன்றை யாராவது கண்டால் அவர்களுக்கும் பயன் இல்லை. மற்றொன்றை வீசிவிட்டால் எடுக்கிறவராவது சந்தோஷப்படட்டும் என்றுதான் வீசினேன்'' என்றான்.
தன் துயரத்தை இறக்கிவைக்கத் தோள் தேடும் பலவீனம் அவனிடம் இல்லை. பிறர் துயரம் தீர்க்கும் பெருந்தன்மைப் பலம் அவனிடம் இருந்தது. அதனால்தான் ஊர் பேர் தெரியாத அந்த இளைஞனைப் பற்றி லட்சக்கணக்கானோர் படிக்கும் இந்தப் பத்திரிகையில் இன்று நான் எழுதுகிறேன்.
எப்போதும் ஏதாவது ஒரு துக்கத்தை, துயரத்தை மூட்டைகட்டி வைத்துக்கொண்டு யாராவது அகப்படமாட்டார்களா, அவர்கள் மேல் இறக்கி வைக்கலாம் என்கிற சுயபச்சாதாப நிலையில் இருந்து வெளியேறுங்கள். ஊன்றுகோலுக்கு ஏங்காதீர்கள். உங்களுக்கு ஊனம் இல்லை என்று உணருங்கள். பிறரால் நான் கைதூக்கிவிடப்பட வேண்டியவன் என்ற எண்ணமே ஒரு கெட்ட வார்த்தை. பலரை உயர்த்தும் பலம் நமக்குள் இருக்கிறது என்று தயவுசெய்து உணருங்கள்.
சென்னையில் முன்னொரு முறை ஒரு குப்பத்தில் குடிசைகள் தீப்பற்றிப் பேரழிவு நேர்ந்தது. அப்போது ஒரு பெண்மணி எரிகிற தன் வீட்டிலிருந்து பொருள்களை மீட்காமல் பூட்டியிருந்த அடுத்த வீட்டை உடைத்து நிறைய பொருள்களைக் காப்பாற்றினார்.
""உனக்கென்ன பைத்தியமா?'' என்று கேட்டபோது, ""அவர்கள் வீட்டில் அடுத்த வாரம் திருமணம். அதற்காக நிறைய விலை உயர்ந்த பொருள்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். என் பொருள் போனால் கொஞ்சம்தான் கஷ்டம். ஆனால் அவர்கள் குடிசை எரிந்தால் ஏகப்பட்ட கஷ்டம்... திருமணம்கூட நின்று போகும். அதனால்தான் அவற்றை மீட்டேன்'' என்றார்.
அவரது தீரம் வெற்றிக்கான விதை!
நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நகரும் பெரியவர் ஒருவர் உடல் ஊனமுற்றவர்களின் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாட்டில் ஒரு சங்கம் நடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? திருமணமே செய்து கொள்ளாத வித்யாகர் ஆதரவற்ற அனைவரையும் ஆதரிக்கும் குடும்பஸ்தனாக "உதவும் கரங்கள்' நடத்துகிறார் தெரியுமல்லவா?
ஒரு குழந்தைகூடப் பெறாத தெரஸô எல்லோருக்குமே மதர் தெரஸô என்பது ஞாபகம் இருக்கிறதா?
சாய்வதற்குத் தோள் தேடுகிறவர்கள் சாய்ந்தே போகிறார்கள்! இருக்கும்போதே இறந்து விடுகிறார்கள்.
கம்பீரமாக இமயமலை போல் இருப்பவர்கள் காலம் கடந்தும் வாழுகிறார்கள்.
இமயமலை போல இதய உறுதி கொள்ளுங்கள். சாய்வதற்கு ஒரு தோள் தேடாதீர்கள். வெற்றி நிச்சயம்!

17. புறக்கணிப்பைப் புறக்கணியுங்கள்
""சார்... நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்...'' தயக்கம் இழைந்த மகிழ்ச்சியுடன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து தாறுமாறாகக் கிழிக்கப்பட்ட காகிதத்தைத் தன் ஆசிரியரிடம் நீட்டினான் அந்தச் சிறுவன். கவிதையையே படிக்காமல் காகிதத்தைப் பறித்துக் கசக்கி எறிந்துவிட்டுத் தலையிலே ஒரு குட்டு வைத்தார் ஆசிரியர்.
""நாலு வார்த்தை உருப்படியா எழுத வக்கில்ல... கவிதை எழுதறானாம் கவிதை. உருப்படற வழியப் பார்...'' என்று எரிந்துவிழுந்தார் ஆசிரியர்(!). அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அந்தப் பையன் கவிதை எழுதவே இல்லை.
பல நூறு பள்ளிக்கூடங்கள் மகாகவிகளின் மயானங்கள். சுய சிந்தனையாளர்களின் சுடுகாடுகள். எத்தனையோ எதிர்கால எழுச்சியாளர்களின் எலும்புக் கூடுகள் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் புதைக்கப்பட்டுள்ளன.
அதுசரி! அந்தப் பையன் அதன் பிறகு எழுந்து நின்று எதிர்த்து வென்று ஏன் எழுதிக் குவிக்கவில்லை? அவன் சந்தித்த முதல் புறக்கணிப்பு. முதல் புறக்கணிப்பைத் தாங்கி ஜெயிக்க அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது அவனிடம் இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான். ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் செத்துப் போகிறான். காதலிக்க நினைக்கிறான். அவன் காதலிக்க நினைத்தவள் புறக்கணிக்கிறாள். கரைந்து போகிறான் அல்லது கலைந்து போகிறான். நெருப்பிலிருந்து எழுகிற ஃபீனிக்ஸ் பட்சி மாதிரி மீண்டும் புறப்படத் தெரிவதில்லை.
வேலை தேடும் இளைஞன் எல்.ஐ.சி. ஏஜென்ஸி எடுப்பான். ஆம்வே விற்பனையாளன் ஆவான். மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்று முதல் நாள் கழுத்தில் டை, கையில் பை என்று காதல் ரோஜா மாதிரிப் புறப்படுவான். ஆனால் வாடிக்கையாளர்களின் அலட்சியம், அவமதிப்பு, அக்கறையின்மை தாக்கியதும் வாடிப் போவான்... வதங்கிச் சாவான். முன்னேறத் துடிக்கும் எண்ணம் உண்டு. முயற்சியும் உண்டு. என்றாலும் ஆயிரம் பேர் புறப்பட்டால் ஐந்து பேர்தான் வெற்றி பெறுகிறார்கள். ஏன்? ஏன்? எங்கே அவன் தடுத்து நிறுத்தப்பட்டான்? முதல் புறக்கணிப்பு.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் முதல் புறக்கணிப்பிலேயே முனை முறிந்து போவார்கள். "இருவர்' என்ற திரைப்படம் ஒன்று... மணிரத்னம் அவர்களின் மணியான படம். கிட்டத்தட்ட அமரர் எம்.ஜி.ஆர்., டாக்டர் கலைஞர் இருவரையும் மனத்தில் வைத்து எடுத்த படம். வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் வாய்ப்புக்காக எம்.ஜி.ஆர். பட்ட அவமானங்கள், வேதனைகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. பல நூறு புறக்கணிப்புகளை ஜீரணித்தே எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவராக உருவானார்.
நடிப்புக்கே இலக்கணம் வகுத்த பல்கலைக்கழகம் அமரர் சிவாஜி. ஆனால் கேமரா முன் மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது பிரபலமான ஒருவர் சொன்ன வார்த்தை: ""குதிரை மூஞ்சி மாதிரி இருக்கு... இதுல எப்படி நடிப்பு வரும்?''
சாதாரணமான கணேசன் சாதனையாளர் நடிகர் திலகம் ஆனது எப்படி? திரையுலகம் தந்தது புறக்கணிப்பு. அதை வென்றது சிவாஜியின் அர்ப்பணிப்பு. உங்களுக்கும் இந்த உரம் இருக்கிறதா? உருப்பட முடியும்... உயர முடியும். கலை உலகில் மட்டும்தான் இந்தக் கொடுமை என்பதில்லை. அறிவுலகிலும் இதே கதைதான்.
உலகத்தைப் பற்றிய புதிய உண்மைகளைக் கண்டறிந்தவர் கலிலியோ. கத்தோலிக்கத் திருச்சபை அவரைக் கண்டித்தது... மத விரோதி என்று அறிவித்தது... மன்னிப்புக் கேட்கச் சொன்னது. ஆனால் அப்படி நடந்ததற்காக இப்போதுள்ள போப்பாண்டவர் மன்னிப்புக் கேட்டார். அது மட்டுமா, கலிலியோ பற்றிய திருச்சபை அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தப் பண்புக்காக இப்போதுள்ள போப்பாண்டவரை நிச்சயம் வாழ்த்த வேண்டும். அது வேறு விஷயம்.
கலிலியோவின் கண்டுபிடிப்பு... கண்டது புறக்கணிப்பு... ஆனால் வென்றது அர்ப்பணிப்பு. முதல் புறக்கணிப்பில் முறிந்துவிட வேண்டாம். மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலே வா. உனக்கொரு உன்னதமான எதிர்காலம் காத்திருக்கிறது.

இப்போது ஒரு ஆச்சரியமான உண்மை சொல்லுகிறேன். முன்னேற்றப் பாதையில் நூறு பேர் பயணப்பட்டால் முதல் புறக்கணிப்பிலேயே தொண்ணூறு பேர் நின்றுவிடுகிறார்கள். மீதம் பத்துப் பேர்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள். ஆனால் முதல் புறக்கணிப்பை முறியடித்ததாலேயே தொண்ணூறு சதவீதம் வெற்றி வந்துவிட்டது. மீதம் பத்து சதவீதப் பயணம்தான் பாக்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்த 90 சதவீதம், 10 சதவீதம் என்கிற வெற்றி, தோல்விக் கணக்கை விளங்கிக் கொள்ளுங்கள். பெரிய மனிதர்கள் எல்லோருமே இதைக் கடந்தவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
திருக்குறளைச் சங்கப் புலவர்கள் புறக்கணித்தார்கள் என்று ஒரு கதை உண்டு தெரியுமா? திருக்குறளையே தமிழ்ப் புலவர்கள் ஏற்க மறுத்தார்கள். உலகின் தலைசிறந்த அறிவாளித் தமிழன் வள்ளுவனே புறக்கணிப்பைக் கண்டவன். வென்றவன். அவனது நூலை மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் விட, சங்கப் பலகை அதனை ஏந்தி வந்து குறள் அருமை கூறியது என்றொரு கதை உண்டு.
திருக்குறள் அருமை தண்ணீருக்குத் தெரிந்தது. தமிழ் படித்தவனுக்குத் தெரியவில்லை! எல்லாக் காலத்திலும் இதேதான் கதை. ஒவ்வொரு திருவள்ளுவனும் முதல் புறக்கணிப்பை வென்றால்தான் முடி சூட முடியும்.
கம்பன் கவிதையை அரங்கேற்ற முடியாதபடித் தில்லை அந்தணர் புறக்கணித்தனர் என்றும் ஒரு கதை உண்டு. எல்லோரும் சேர்ந்திருக்கும் அவையில்தான் கவிதையை அரங்கேற்ற வேண்டும். ஆனால் கம்பன் கவிதைக்காக ஒரு நாளை ஒதுக்கி ஒன்றாகச் சேராது அவர்கள் புலமையைப் புறக்கணித்தனர். ஒரு நாள் தீட்சிதர் மகனை நாகம் தீண்டி இறந்தபோது அந்தணர் அனைவரும் அந்த வீட்டில் சேர்ந்திருந்தனர் என்றும் கம்பன் நாகபாசப் படலம் என்ற பகுதியைப் படிக்க, விஷம் தீண்டிய சிறுவன் விஷம் நீங்கி எழுந்தான் என்றும் வரலாறு உண்டு. புறக்கணிப்பை வென்றே கம்பன் கவிஞன் ஆனான்.
தில்லை அந்தணர்கள் மட்டுமல்ல, திருவரங்கத்து வைணவரும் கம்பனைப் புறக்கணித்ததற்கு, ""என்னைக் குற்றம் கண்டு என் நாவைப் பழிப்பினும் நல்லோரன்றே மற்றை நாவலரே'' என்ற சடகோபர் அந்தாதியே சான்று.
இவ்வளவு ஏன்? மகாகவி பாரதியைத் தமிழ் உலகம் முதலில் புறக்கணித்தது. தமிழ் உலகம் தலை வணங்கி ஏற்ற பின்னும்கூடத் திராவிட இயக்கங்கள் புறக்கணித்தன. ஆனால் பின்னாளில் மகாகவியை மறுதலித்தமை நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று... தாங்கள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று டாக்டர் கலைஞர் அவர்கள் பேசிய பேச்சுகளைப் பாரதி விழாக்களில் நான் கேட்டிருக்கிறேன். அவர் கைப்பட எழுதிய எழுத்தைப் பாரதி நினைவு இல்லத்திலும் பார்த்திருக்கிறேன். புறக்கணிப்பைப் புறக்கணித்தே பாரதி ஜெயித்தார்.
புறக்கணிப்பைப் புறக்கணியுங்கள்... முதல் புறக்கணிப்பின் முதுகெலும்பை முறியுங்கள். வெற்றி நிச்சயம் !

18. நிஜத்தை நேசி....பொய்யைப் புதை!
பிறர் தன்னைப் புகழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தவறே அல்ல. ஆனால் வலுக்கட்டாயமாகப் புகழ வைப்பது ஓர் ஆக்கிரமிப்பு. புகழ் இருப்பதுபோலத் தோற்றம் ஏற்படுத்துவது அக்கிரமம். அது உண்மையான வெற்றியாகாது. இன்று வெற்றி பெறாமலேயே தங்களை வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்ளப் பலர் விரும்புகிறார்கள். நட்பே! உனக்கு அப்படி ஓர் எண்ணம் வேண்டாம்.
நிஜமான புகழ், துணையோடு துய்த்த தூய கலவி. செயற்கைப் புகழ், வள்ளுவர் உவமை சொன்னது போல, பிணத்துடன் நடத்திய உடலுறவு. அசிங்ம். அருவருப்பு. பலர் கூச்சமில்லாமல் பாராட்டுக்கும் புகழுக்கும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். மாலைகள் சூட மலர் பறித்துத் தருகிறார்கள். சுவரொட்டி ஒட்டக் கூழ் காய்ச்சுகிறார்கள். ஒரு விஷயம். புகழுக்கான தகுதி தனக்கு உள்ளது எனப் புரிந்து வைத்திருப்பது தலைமைப்பண்பு. ஆனால் புகழைப் பிறரிடமிருந்து ஜப்தி செய்வது அநாவசியம்.
விளக்குகிறேன்.
பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தமது உரைகளை உதவியாளருக்கு டிக்டேட் செய்கையில் சில இடங்களில் "கைத் தட்டல்' என்று குறிக்கச் சொல்லுவார். தன் வெற்றியைப் பற்றிய தீர்க்கமான தீர்மானம் அது. கைத்தட்டல் என்று குறித்துக் கொள்ளும்போது ஆரம்பத்தில் அவரது உதவியாளர் திகைப்படைந்தார். ஆனால் சர்ச்சிலின் கணிப்பு ஒருபோதும் பொய்யாவதில்லை என்பதைக் கண்டு பின்னர் அவர் வியப்படைந்தார். புகழத் தக்கவன் என்ற இந்தக் கணிப்பு தவறில்லை. ஆனால் கைத்தட்ட வேண்டிய இடத்தில் கைத்தட்ட ஆள் செட்அப் செய்திருந்தால் அசிங்கம்...அநாகரீகம். அப்படி ஜெயிக்காதீர்கள்.
தகுதி இருந்தும் செயற்கைப் புகழ் தேடுவது தவறு. தகுதியே இல்லாமல் வெற்றியாளனைப் போல் காட்டிக் கொள்வது தவறல்ல. போக்கிரித்தனம். அது ஆபத்தான அணுகுமுறையும் கூட.
புதுப் பணக்காரர்கள் நாலு காசுகளை வீசி எறிந்தால் புகழ்ந்து தள்ளத் தமிழ்ப்பேச்சாளர்கள் சிலர் தலையைச் சொறிந்துகொண்டு முன் வருகிறார்கள். இது கறுப்புப் புகழ். கள்ளத் தொடர்பு. கண்டிக்கத் தக்கது.
மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். பாராட்டுக்கும் புகழுக்கும் தான் தகுதி உடையவன் என்ற தெளிவு, உங்களை உயர்த்தும். ஆனால் அதற்கான ஏற்பாடு உங்களைத் தாழ்த்தும். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வெயின் வாழ்க்கையில் அப்படி ஒரு சுவையான நிகழ்ச்சி.
அவருக்குப் பிரெஞ்சு தெரியாது. அந்தக் காலத்தில் பிரெஞ்சு என்பது ஒவ்வொரு ஆங்கிலக் கலைஞனுக்கும் சின்ன வீடு மாதிரி.
மார்க் ட்வெயினின் எழுத்துகளைப் பாராட்டி பாரீசில் ஒரு மிகப்பெரிய விழா நடந்தது. விழா நடந்த அதே பல்கலைக் கழகத்தில்தான் மார்க் ட்வெயினின் மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிரெஞ்சு மொழி நன்கு தெரியும்.
மகனை அழைத்து ""எனக்குப் பிரெஞ்சு தெரியாது. பிரான்ஸ் மக்கள் மொழிப்பற்று மிக்கவர்கள். எனவே பேசுகிற எல்லோரும் பிரெஞ்சில்தான் பேசுவார்கள். நான் ஒரு முட்டாளைப் போல அங்கே இருக்க வேண்டியிருக்கும். ஆனால் எனக்குப் பிரெஞ்சு தெரியாது என்பது அவர்களுக்குத் தெரியக்கூடாது. எனவே நீ என் பக்கத்திலேயே இரு. எனக்குச் சைகை காட்டு. நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். முகத்தை சீரியஸôக வைத்துக் கொண்டால் நானும் அப்படியே. சமாளித்துவிடலாம்.''என்றார் மார்க் ட்வெயின்.
ஆனால் விழா நடந்தபோது தர்மசங்கடம் ஒன்று நேர்ந்துவிட்டது. விழாவில் பேசியவர் மார்க் ட்வெயினை ஓஹோ என்று புகழ்ந்தபோது சபையே கைத் தட்டியது. மகனும் கைத்தட்டினான். அவனைப் பார்த்த மார்க் ட்வெயின் தன்னைப் புகழுகிறார்கள் என்று தெரியாமலேயே கை தட்டினார். சபை இதைப் பார்த்து சிரித்தது. இந்தச் சங்கடம் அடிக்கடி அரங்கேறியது. மகன் நெளிய ஆரம்பித்தான். பலர் இந்தக் கூத்தைப் பார்த்துச் சிரிக்கும்போது மகனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகன் சிரிக்கும்போதெல்லாம் ஒப்பந்தப்படியே மார்க் ட்வெயினும் சிரித்தார். மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மகனுக்கு அவமானத்தால் வியர்த்துக் கொட்டியது.

அறைக்குள் திரும்பியதும் தந்தையிடம் கோபமாக ""என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்களை "ஆஹா, ஓஹோ' என்று புகழும்போது நான் கைத்தட்டாமல் இருக்க முடியுமா? நீங்கள் கைத் தட்டினால் அசிங்கம் இல்லையா? உங்களைப் பெரிய மகான் என்று ஒருவர் பாராட்டினார். நீங்கள் கையை உயர்த்திப் பிரமாதமாகக் கைத்தட்டுகிறீர்கள். என் சக மாணவர்கள் என்னை எப்படிக் கேலியாகப் பார்த்தார்கள் தெரியுமா? என்று சீறினான் மகன். அமைதியாக மார்க் ட்வெயின் சொன்னார். ""வருத்தப்படாதே...என் வாழ்க்கையில் இப்போதுதான் முதல் முதலாக நான் உண்மையாக நடந்திருக்கிறேன். நான் செய்ய விரும்பியதை இன்றுதான் செய்திருக்கிறேன். மேடைகளில் என்னைப் புகழும்போது பிறர் கைத் தட்டுகையில் நானும் கைத்தட்ட விரும்பியதுண்டு. ஆனால் மொழி புரிந்ததால் தட்டியதே இல்லை. முதல் முதலாக மொழி புரியாததால் தவறாக ஓர் உண்மை அரங்கேறிவிட்டது'' என்றார்.
ஓர் முக்கியமான உண்மை -தான் புகழத்தக்கவன் என்கிற தீர்மானம் பிறர் புகழும்போது ஏற்படவில்லை. எழுதும்போதே தனக்கு ஏற்பட்டது என்று புகழின் நுட்பமான ரகசியத்தை மார்க்ட்வெயின் புரியவைத்தார்.
அண்மையில் ஒரு கொடிய நிகழ்ச்சி. அண்மையில் என்னிடம் ஒருவர் தமது புத்தகத்தைப் பாராட்டி முன்னுரை தரும்படிக் கேட்டுக் கொண்டார். நான் விரும்பிய புத்தகங்களைப் படிக்கவே எனக்கு நேரம் கிடைக்காதபோது இதைப் படிக்கும் சுமை என் மீது திணிக்கப்பட்டது. எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு நேரம் இல்லை என மறுத்தேன். அவரோ ""படிக்கவே வேண்டாம்...சும்மா பாராட்டி ஒரு முன்னுரை கொடுங்களேன்'' என்றார். அநியாயமில்லாயா இது.
நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு செய்தி உண்டு. அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தபோது அவரை ஒரு நிருபர் பேட்டி கண்டார். ""நீங்கள் பெற்ற பாராட்டுகளிலேயே உயர்வானது இதுதானே'' என்றார். கொஞ்சம் யோசித்துவிட்டு ராஜரத்தினம் பிள்ளை சொன்னாராம். ""ஒரு கல்யாணத்திலே நான் நாகசுரம் வாசித்தபோது நரிக்குறவர் ஒருவர் வெளிச்சத்துக்கு கியாஸ் லைட் தாங்கிக் கொண்டு வந்தார். தோடி ராகம் வாசிக்கும்போது நான் ஒரு பிருகா அடிச்சேன். சந்தோஷத்தில் அந்த மனுஷர் கியாஸ்லைட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிச்சு "ஆஹா' அப்படீன்னார். அதுதான் எனக்குக் கிடைச்ச பாராட்டுகளிலேயே உசத்தி'' என்றார். ""இந்த ஜனாதிபதி விருது'' என்று நிருபர் இழுத்தவுடன்...""ஜனாதிபதி என்ன என் வாசிப்பைக் கேட்டுட்டா கொடுத்தார். எவனோ கொடுக்கச் சொன்னான்...எடுத்துக் கொடுத்தார். அவ்வளவுதான்'' என்று ஒரு போடுபோட்டார்.
நிஜமான புகழ்...நிஜமான புகழ்...வெற்றியின் வேர். பொய்யான புகழ்...பொய்யான புகழ்....தோல்வியின் தாய். புரிந்தவருக்கு வெற்றி நிச்சயம்.

19. வைராக்கியம் இருக்கிறதா? வெற்றி நிச்சயம்!
வெற்றி நிச்சயம். யாருக்கு? திறமை, உழைப்பு, வைராக்கியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை, தலைமைப் பண்புகள் இவை யாவும் உடையவருக்கு வெற்றி நிச்சயம். கடந்த ஐம்பது அத்தியாயங்களில் இதைத்தான் விதவிதமான வார்த்தைகளில், வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, வேறு வேறு வகையில் சொல்லிக் கொண்டிருந்தேன். எல்லோரும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரே விஷயத்தில் அல்ல... வெவ்வேறு விஷயங்களில்.
எல்லோரும் எல்லா விஷயங்களிலும் சமமான திறமை உடையவர்கள் என்பது காதில் பூ சுற்றுகிற வேலை. ஆனால் ஒவ்வொரு விஷயத்தில் ஒவ்வொருவர் திறமைசாலியாக இருப்போம். இது சரியான அணுகுமுறை. எனவே தமது திறமையை அடையாளம் கண்டவர்கள், திறமையை வளர்க்க வேண்டிய வழிமுறை கண்டவர்கள், வெற்றிக்கான சங்கல்பம் செய்தவர்கள் வெற்றியின் முதல் படி ஏறுகிறார்கள். கடும் உழைப்புதான் வெற்றியின் இரண்டாம் படி. குறிக்கோளை நிறைவேற்ற உழைக்காமல் முடியாது நட்பே.
நன்கு புரிந்துகொள். விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி, தொழிலிலும் சரி வெற்றி பெற்றவர்கள் ஒரு நொடியில் மேலே வரவில்லை. நெடுங்காலக் கடின உழைப்பே அவர்கள் வெற்றி ரகசியம். இதை அதிர்ஷ்டம் என்று சில தோல்வியாளர்கள் சொல்லுவார்கள். தவறு.
இப்போதெல்லாம் திருப்பதி போய் வருவது மிகச் சுலபம். மக்கள் நடமாட்டம் இல்லாத மலைக்காடாக இருந்தபோது அனந்தவாழ்வான் என்ற பக்தன் திருமலையில் பெருமாள் புஷ்ப கைங்கர்யத்திற்குத் திருமலையில் தோட்டம் போட்டார். தண்ணீருக்காகக் குளம் வெட்டினார். மண்ணைத் தோண்டுவது அவர் வேலை. மண்ணை அள்ளிக் கொண்டுபோய்க் கொட்டுவது அவர் மனைவி வேலை. அவர் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. ஆனாலும் உழைத்தார். இந்த வைராக்கியத் திடம், திண்மை இருந்தால்... நட்பே... வெற்றி நிச்சயம்.
ஐயோ, இது பழங்கதை என்கிறீர்களா? அக்டோபர் 14, 2002 சென்னை "தினமணி' படித்தீர்களா? ஒரிஸôவில் குண்டுபரசி என்கிற கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிக்கக்கூட நீரின்றி நெடுந்தொலைவு போய்த் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்கிறபோது விவசாயம் எப்படிச் சாத்தியம்? ஆனால் துர்வாலநாயக் என்ற ஏழை - ஒற்றை மனிதர் குளம் வெட்டி மழைநீரைச் சேமிக்கச் சொல்லி மக்களிடம் மன்றாடினார். பயன் இல்லை. இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த ஒற்றை மனிதர் தனியே மண் வெட்டி, தானே அதைக் கொட்டி இறுதியில் ஒரு குளம் வெட்டிவிட்டார். மழைநீர் நிரம்பியதால் ஆண்டு முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் அங்கே இல்லை.
உச்சகட்டச் செய்தி இனிமேல்தான் சொல்லப் போகிறேன். அந்த நண்பருக்குப் பார்வை கிடையாது. நட்பே... உனக்கு இந்த வைராக்கியம் இருக்கிறதா..? உனக்கு வெற்றி நிச்சயம். விடாமுயற்சி... வெற்றியின் அடுத்த படி. இந்தியாவின் பட்ஜெட்டைவிடப் பன்மடங்கு பெரிய பட்ஜெட் போடும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஃபோர்டு நிறுவனம். ஆனால் ஹென்றி ஃபோர்டை அதிர்ஷ்டம் மேலேற்றவில்லை. காரணம், அவர் ஐந்து முறை திவாலானவர்.
அவர் சொன்ன தாரக மந்திரம் என்ன தெரியுமா?
""வெற்றியில் இருந்து கற்றுக்கொள்வதைவிடத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.''
நட்பே... நீ தோல்வியில் இருந்து என்ன கற்றுக்கொண்டாய்? இப்போதுள்ள வி.ஜி.பி. கோல்டன் பீச், எம்.ஜி.எம்., கிஷ்கிந்தா, பிளாக் தண்டர் இவற்றுக்கெல்லாம் பாட்டி வீடு அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட். ஆனால் அதை உருவாக்கும் முயற்சியில் வால்ட் டிஸ்னி சொத்து சுகம் இழந்து பல முறை தெருவுக்கு வந்தார், தெரியுமா?

நட்பே... உன் மேல்துணிகூட அழுக்கடையாமல் மேலே வர நீ நினைக்கலாமா? உலகப் புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனர் ஆரம்பத்தில் டயோட்டா கார்பரேஷனுக்குச் சிறிய பொருள்கள் வழங்கும் சிறு வணிகர். அவரது வித்தியாச வித்தியாசமான யோசனைகளுக்காகப் பலராலும் கேலி செய்யப்பட்டுப் பழிக்கப்பட்டவர். அவர் உருவாக்கிய தொழிற்சாலை இயற்கைச் சீற்றங்களால் பலமுறை சிதைக்கப்பட்டது; சின்னாபின்னமாக்கப்பட்டது. அவரது விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் அது படைக்கப்பட்டது. இந்தத் தோல்வியைத் தின்னும் வெற்றிப் பசி உனக்கு இருக்கிறதா...
நட்பே... உண்மையைச் சொல். உன்னால் எத்தனை எத்தனைத் தோல்விகளைத் தின்ன முடிந்தது? வெளியூர் விஷயங்களை விடு. 90 -களில் முடிந்த கதை என்று சொல்லப்பட்ட டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியை இன்று ஆயிரம் கோடிக்கு மேல் வரவு - செலவுடைய நிறுவனமாக்கி ஜெயித்த கதை எழுதும் வேணு சீனிவாசனை உனக்குத் தெரியுமா?
நட்பே... உனக்குத் தெரியும் என்றால் இந்த நாடு உருப்படும். உனக்கும் வெற்றி நிச்சயம். விடாமுயற்சிக்கு அடுத்த வெற்றிப் படி தன்னம்பிக்கை. "கடவுள்' என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாகத் தப்புத்தப்பாக எல்லோராலும் அர்த்தம் செய்யப்பட்ட அடுத்த வார்த்தை தன்னம்பிக்கை. திறமை உள்ளவர்கள் தன் திறமை மீது வைக்கும் நம்பிக்கைதான் தன்னம்பிக்கை. ஆனால் திறமையே இல்லாமல் தன் மீது நம்பிக்கை வைத்தால் அது அசட்டுத்தனம்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு என் பள்ளித் தோழர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். எவ்வளவு காலமானாலும் வளர்வதில்லை என்ற பிடிவாதம் அவருக்கு. பள்ளிக் காலத்தில் பார்த்த அதே அசட்டுக் காமெடித்தனம். முட்டாள்தனமான பேச்சு. ஆனால் தன்னைப் பற்றி அப்படி ஒரு உயர்ந்த அபிப்ராயம். இந்தக் குழப்பமற்ற தெளிவு உனக்கு உண்டா?
நட்பே இன்னும் ஒன்று. தன்னம்பிக்கை வேறு... தலைக்கனம் வேறு. பாண்ட்ஸ் டப்பாவில் சுண்ணாம்புத் தூளை அடைத்து விற்கும் பிளாட்பார வியாபாரி போலத் தன்னம்பிக்கை Brand -ல் தலைக்கனத்தை விற்பவர்கள் உண்டு. இதற்கு நேர்மாறான இன்னொரு கோணம். தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிய அதைத் தலைக்கனம் என்று முத்திரை குத்துவார்கள். கலங்காதே... கலையாதே... கம்பீரமாக நில். குமரிக் கரையில் திருவள்ளுவர் நிற்பது போல் உயர்ந்து நில்.
அவர்களது விமர்சனம் எப்படிப்பட்டது தெரியுமா? கட்டிளங்காளை, கன்னியை மணந்து அழகான பிள்ளை பெற்றுத் தோளில் சுமந்து போவதைப் பார்த்து, ""காமுகன் கன்னியைக் கற்பழித்து... ஒரு பாவத்தைச் சுமந்து போகிறான்'' என்று பேடிகள் பேசுவது போல... அந்த ஆண்மையற்றவர்களை அலட்சியம் செய்தால் அது தலைக்கனம் அல்ல, நட்பே... அது தன்னம்பிக்கை. இந்தத் தன்னம்பிக்கையோடு பொறுமை, தலைமைப் பண்புகள்... இப்படிப் படிப்படியாக நடந்தால் வெற்றி நிச்சயம்,

நட்பே... வெற்றி நிச்சயம். பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றி பெறுதல் என்று நினைத்துவிட வேண்டாம். கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவன்கூடக் காசு வைத்திருக்கிறான். வேசிகள்கூட ஏ.சி.யில் இருக்கிறார்கள். பணத்துக்கு அப்பாலும் வெற்றி கணக்கிடப்படும். நேர்மை, சுயமரியாதை, கெüரவம் இவையெல்லாம்கூட வெற்றி - தோல்வியின் நிர்ணயப் புள்ளிகள். அதற்காக நேர்மையாக இருக்கிறவன் ஏழ்மையில் இருக்க வேண்டும் என்கிற அர்த்தமற்ற வெற்றி ஒரு வெற்றியே அல்ல. பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் அவர் மனைவி ரேஷன் கடையில் இரண்டு பைகளில் கோதுமை வாங்கிக்கொண்டு தூக்க முடியாமல், நடக்க முடியாமல் சிரமப்பட்டார்... ""ஆஹா என்ன நேர்மை!'' என்று செய்தி படித்தபோது நான் மகிழவில்லை.
ஒரு நேர்மையான மனிதனுக்கு எவ்வளவு கீழான இடத்தை இந்த இந்தியச் சமூகம் கொடுக்கிறது என்று சமூகத்தின் மீது எனக்குக் கோபம் வருகிறது. உங்கள் யாருக்கும் அப்படிக் கோபம் வரவில்லையா? ஏழ்மையிலும் நேர்மை என்பது பாராட்டுக்குரியது. ஆனால் நேர்மைக்குப் பரிசே ஏழ்மை என்றால் சமூகம் தவறான பாதையில் போகிறது என்று பொருள். அதை நாம் மாற்றியே தீரவேண்டும். திறமை, சீர்மை, நேர்மை இவை மட்டும் இன்றிச் செல்வம், சிறப்பு, புகழ் இவையும் சேர்த்துப் பெறுவதே சரியான வெற்றி.
இது என் பார்வை. வெற்றி என்பது எப்போதும் subjective. அது சுயம் சார்ந்தது. பிறரால் தீர்மானிக்கப்படுவது அல்ல. வெற்றிப் படிகளை விவரித்தேன். கற்றுக் கொள்வதும் கால் வைப்பதும் இனி உங்கள் விருப்பம். விரிவாகச் சொன்னதைச் சுருக்கமாகச் சொல் என்கிறீர்களா? சொல்கிறேன்.
திருக்குறளில் ஊக்கம் உடைமை, மடிஇன்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, வினைத்திட்பம் இந்த அதிகாரங்களைத் தமிழன் சரியாக விளங்கிக் கொண்டிருந்தால் உலகத்தின் அதிகாரம் இந்நேரம் தமிழன் கையில் இருந்திருக்கும். ஆனால் தமிழ் மட்டுமே படித்தவர்கள் திருவள்ளுவரைப் புலவராகவே காட்டிக் குறள் படித்தவனைக் கையாலாகாதவன் ஆக்கிவிட்டார்கள். தமிழையும் படித்த நான் அவரைத் தலைவராகக் காட்டுகிறேன். புலவராவதைவிடத் தலைவராவதே தமிழன் முன்னுள்ள தலையாய பணி.
திருவள்ளுவரைப் புரிந்துகொண்டால் நட்பே நீயும் தலைவராகலாம். எல்லா வகையிலும் உன்னைத் தகுதிப் படுத்து... ஈடுபடு... போராடு... வெற்றி கொள். புகழோ, இகழோ இறைவனிடம் ஒப்படைத்துவிட்டுப் புன்னகையோடு புறப்படு. வெற்றி நிச்சயம்.
இந்தத் தொடர் முடிவடைவதாக நான் கருதவில்லை. காரணம், ஆரம்பம், முடிவு என்றெல்லாம் உண்மையில் எதுவும் இல்லை. எல்லாம் சுழற்சியே... இயக்கமே. கடல் ஆவியாவதும் மேகமாவதும் மழையாவதும் நதியாவதும் மீண்டும் கடல் ஆவதும் எப்படி நிற்பதில்லையோ அப்படியே கருத்துகள் கட்டுரைகள் ஆவதும் கதையாவதும் காகிதமாவதும் மீண்டும் கருத்துகள் ஆவதும் நிற்பதே இல்லை. மீண்டும் எங்கெங்கோ, எப்படி எப்படியோ, யார் யாராகவோ சந்திக்கப் போகிறோம்.
வணக்கம். வாழ்த்துகள். வெற்றி நிச்சயம்!

- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6