ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Today at 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Yesterday at 11:24 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Yesterday at 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Yesterday at 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by T.N.Balasubramanian Yesterday at 4:28 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Yesterday at 1:51 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 12:13 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:50 am

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:26 am

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 am

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» அறிமுகம்
by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Balki_73 Thu Sep 16, 2021 12:55 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:54 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 12:02 pm

» இளா ......னியோ & எல்லா .......ம் நீயோ
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 11:44 am

» நிச்சயமாக படித்து பின்பற்றுங்கள்.
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:36 am

» .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:32 am

» புகையில்லாத பீச்!
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:27 am

» வலி மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
by curesure4u Wed Sep 15, 2021 8:14 am

» திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.
by velang Wed Sep 15, 2021 7:31 am

» கம்பன் கவிதை
by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

+5
ரேவதி
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
9 posters

வாழ்த்து சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Fri Dec 23, 2011 10:38 am

First topic message reminder :

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி புன்னகை

சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சோகம் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சோகம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி புன்னகை இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down


வாழ்த்து Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Wed Oct 31, 2018 8:36 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:பச்சை பயறு இட்லி !


தேவையானவை:

பச்சை பயறு  ஒரு கப் 

உளுத்தம் பருப்பு அரை கப் 

பிளைன் ENO Fruit  சால்ட் 1 /4  ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை :


பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 5 Icon_smile 
மேற்கோள் செய்த பதிவு: 1283686
சுவையான பயத்தம்பருப்பு
இட்லி அருமை அம்மா
நன்றி
நேற்று தான் செய்தேன் ஐயா, இப்பொழுது தான் படம் போட்டேன் ...பாருங்கள்...........சுவையாக இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

வாழ்த்து கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Fri Nov 01, 2019 11:05 am

கேழ்வரகு முருங்கை இலை அடை!

தேவையானவை:
கேழ்வரகு மாவு 1  கப்
உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
உப்பு
பச்சை மிளகாய் 2

செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் வெது  வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
அப்படியே நன்றாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

வாழ்த்து Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Fri Nov 01, 2019 11:16 am

கேழ்வரகு முருங்கை இலை தோசை!

தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
மைதா 1  டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு 2   - 3  டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு  2   - 3  டேபிள் ஸ்பூன்
பச்சை  மிளகாய் - பொடியாக நறுக்கியது  2   - 3  டீ ஸ்பூன்
முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது  2   - 3  கைப்பிடி
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் சூடான  தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம்.
மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

வாழ்த்து Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 01, 2019 12:03 pm

நல்ல தகவல் மிக்க நன்றி அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4558
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

வாழ்த்து Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Sat Nov 02, 2019 11:13 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவல் மிக்க நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1306339

நன்றி மாமா, நலமா நீங்கள்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

வாழ்த்து பேல் பூரி !

Post by krishnaamma Sat Mar 07, 2020 9:26 pm

பேல் பூரி: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். நல்ல balancedfood . இதற்க்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பட்டாணி , வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள் அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி , பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி,எலுமிச்சைச் சாறு போன்றவை. மற்றபடி பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி, சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க வைத்த்குக்கொண்டால் "பேல்" அருமையாக இருக்கும் புன்னகை

சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிக ளையும் செய்து வைத்துக கொள்ள வேண்டும் .

முதலில் பூரி செய்யும் விதம்:

ரவை ஒரு கப்
மைதா ஒரு கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவுக்கு உப்பு
பொரிக்க எண்ணெய்

மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும்.
இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும்.
இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.
தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.
ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

அடுத்து இனிப்புச் சட்னி:

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்


பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை)

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.


அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

குறிப்பு: பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.

இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

சிவா likes this post

Back to top Go down

வாழ்த்து 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Mon Aug 16, 2021 9:00 pm

'அவல் இட்லி'  -நிமிடங்களில்....

தேவையானவை :

கெட்டி அவல் 2 கப் (சிவப்பு அவல் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் )
மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'அவல் இட்லி' தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

சிவா likes this post

Back to top Go down

வாழ்த்து Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை