ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 1:08 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 12:42 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/09/2022
by mohamed nizamudeen Today at 12:33 pm

» தென் ஆப்ரிக்காவில் பாரதி பெயரில் விருது
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» ரூ. 168 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்!
by Dr.S.Soundarapandian Today at 12:10 pm

» படமும் செய்தியும்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» ஆன்லைன் விளையாட்டால் கணவனுடன் வாக்குவாதம்! மனைவி தற்கொலை!
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» சொன்னாங்க….சொன்னாங்க…!
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» சிலிர்ப்பூட்டும் சேதி
by Dr.S.Soundarapandian Today at 11:59 am

» அண்ணன் முன் தூக்குப்போட்டு நடித்த தம்பி பரிதாப சாவு!
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by ayyasamy ram Today at 8:43 am

» 'பாரத் கவுரவ்' ரயில் திட்டம்; ரூ.5.50 கோடி வருவாய்
by ayyasamy ram Today at 6:59 am

» இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி தேர்வு
by ayyasamy ram Today at 6:55 am

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by ayyasamy ram Today at 6:31 am

» 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நவராத்திரி முதல் நாள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
by sncivil57 Yesterday at 8:33 pm

» கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்குப் பாராட்டு!
by mohamed nizamudeen Yesterday at 3:43 pm

» எளிமையான வாழ்க்கையே இனிமை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» உலக நதிகள் தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» யாருக்கும் அஞ்சாதே
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» கருவிலேயே குழந்தைகள் ஸ்மாரட்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:20 pm

» இந்திரா காந்தியுடன் ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» ஒரு வயது குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் பெண்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
by ayyasamy ram Yesterday at 11:41 am

» 25 கோடி பரிசு பெற்றும் தலைமறைவான கோடீஸ்வரர்!
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» உடல் எடையைக் குறைத்தால் பரிசு ரூ. 10 இலட்சம்!
by mohamed nizamudeen Yesterday at 9:49 am

» போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள்! எச்சரிக்கை!!
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…
by ayyasamy ram Yesterday at 7:17 am

» ஒன்பது படிகளில் கொலு வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 7:00 am

» நிர்வாக அறிவிப்பு
by கவியரசு.சுபசு சுரபி கார்த Sun Sep 25, 2022 10:03 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கவியரசு.சுபசு சுரபி கார்த Sun Sep 25, 2022 9:53 pm

» கணக்கு வாத்தியார் வீட்டு நம்பர்
by ayyasamy ram Sun Sep 25, 2022 7:24 pm

» கவிதைத் தூறல்!
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:25 pm

» முத்தான முப்பது முப்பது மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:23 pm

» ஆதார் – பட விமர்சனம்
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:20 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:19 pm

» சமந்தாவுக்கு 2-வது திருமணம்…
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:09 pm

» கடும் கோபமான யாஷிகா ஆனந்த்
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:08 pm

» பத்திரிகையாளராக நடிக்கும் அதிதி சங்கர்
by ayyasamy ram Sun Sep 25, 2022 2:07 pm

» மீண்டும் நடிக்க வரும் காஜல் அகர்வால்..
by ayyasamy ram Sun Sep 25, 2022 1:59 pm

» கருணாஸ் நடித்த 'ஆதார்' கதை, புத்தகமாக வெளியீடு!
by mohamed nizamudeen Sun Sep 25, 2022 8:28 am

» அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்!
by mohamed nizamudeen Sun Sep 25, 2022 8:25 am

» தேன் தேன் தித்திக்கும் தேன்!
by mohamed nizamudeen Sun Sep 25, 2022 8:00 am

» மட்டன் சாறு வடகறி
by mohamed nizamudeen Sun Sep 25, 2022 7:50 am

» வாயால வடை சுடுறவன்...!
by T.N.Balasubramanian Sat Sep 24, 2022 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

+11
தமிழ்நேசன்1981
கிருஷ்ணா
ரா.ரா3275
விமந்தனி
பாலாஜி
சின்னக் கண்ணன்
ஜாஹீதாபானு
உமா
Muthumohamed
யினியவன்
krishnaamma
15 posters

best இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:30 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best இட்லி பிரை (Idly fry)

Post by krishnaamma Fri Jun 04, 2010 1:20 pm

தேவையானவை:

10 இட்லி
உப்பு
எண்ணெய் - வதக்க
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
2 - 4 ஸ்பூன் தோச மிளகாய் பொடி
அல்லது சாதா மிளகாய் பொடி

செய்முறை:

இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
ஒரு பேசினில் போடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
வறுத்த இட்லி துண்டுகளின் மீது கொட்டவும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு நன்கு குலுக்கவும்.
சுவையான மாலை டிபன் ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Fri Jun 04, 2010 1:23 pm

இதில் மேலும் மசாலா வேண்டுபவர்கள், பூண்டு போடலாம். மேலும் காய்கறி வேண்டுவோர் , பீன்ஸ் , காரட், உருளை, குடை மிளகாய் போன்ற காய்களை மெலிதாக அரிந்து, வதக்கி சேர்க்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best இட்லி மசாலா fry

Post by krishnaamma Wed Jun 05, 2013 10:00 pm

தேவையானவை:

10 இட்லி
2 - 3 பெரிய வெங்காயம்
2 - 3 தக்காளி
பச்சை மிளகாய் - தேவையான அளவு
உப்பு
எண்ணெய் - வதக்க
மஞ்சள் பொடி
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
பச்சை மிளகாய் போடவும்.
நன்கு வதக்கவும் .
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
வெங்காயம் தக்காளி கலவையில் போடவும்.
கிளறி உடனே இறக்கவும்.
சுவையான மாலை டிபன் ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best முருங்கைகீரை இட்லி

Post by krishnaamma Wed Jun 05, 2013 10:08 pm

தேவையானவை :

இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்.
கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம் அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by யினியவன் Wed Jun 05, 2013 10:23 pm

சென்னையில் அந்தம்மா இட்லி
ஈகரையில் கிருஷ்ணாம்மா இட்லி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Wed Jun 05, 2013 10:26 pm

யினியவன் wrote:சென்னையில் அந்தம்மா இட்லி
ஈகரையில் கிருஷ்ணாம்மா இட்லி

ஈகரையில் 'இந்தம்மா ' இட்லி என்று போடவேண்டியது தானே இனியவன் ? புன்னகை நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by யினியவன் Wed Jun 05, 2013 10:34 pm

அந்தம்மா ன்னு சொன்னதில் மரியாதை இல்லம்மா - அவங்கள அப்படி சொல்றதில தப்பில்ல

உங்கள இந்தம்மான்னு மரியாதை இல்லாம சொல்ல முடியாது
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by Muthumohamed Thu Jun 06, 2013 12:16 am

எப்படியோ அம்மாவின் இட்லி பதிவு சூப்பருங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Thu Jun 06, 2013 9:52 am

யினியவன் wrote:அந்தம்மா ன்னு சொன்னதில் மரியாதை இல்லம்மா - அவங்கள அப்படி சொல்றதில தப்பில்ல

உங்கள இந்தம்மான்னு மரியாதை இல்லாம சொல்ல முடியாது

நன்றி அன்பு மலர் நன்றி இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best இன்ஸ்டன்ட் இட்லி பவுடர்

Post by krishnaamma Thu Jun 06, 2013 10:05 am

தேவையானவை :

2 கப் புழுங்கல் அரிசி
2 கப் பச்சரிசி
2 கப் உளுத்தம் பருப்பு

செய்முறை :

எல்லாவற்றையும் நன்கு களைந்து வடிகட்டி வைக்கவும்.
அது காய்ந்ததும், எல்லாவற்றையும் கொஞ்சம் கொர கொரப்பாக, மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொள்ளவும்.
இட்லி செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அதில் சோடா உப்பு கொஞ்சம் மற்றும் உப்பு போட்டு வென்னிரைக் கொட்டி நன்கு கலந்து வைக்கணும்.
10 - 12 மணிநேரம் கழித்து பொங்கி இருக்கும் அப்போ இட்லி வார்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best சான்ட்விச் இட்லி

Post by krishnaamma Thu Jun 06, 2013 10:18 am

தேவையானவை :

இட்லி மாவு
காரட் துருவல் கொஞ்சம்
பச்சை மிளகாய் தேவையானால்


செய்முறை :

இட்லி வார்க்கும் போது எண்ணெய் தடவிய தட்டில் முதலில் அரை கரண்டி மாவை இட்லி தட்டில் விடுங்கோ பிறகு துருவி வைத்துள்ள காரட்டை அதில் வைக்கவும்.
அதன் மேல் மீண்டும் இட்லி மாவை விடவும் .
இதே போல மற்ற தட்டுகளிலும் விடவும்.
இட்லி வெந்ததும் கட் செய்து பார்த்தல் இட்லி நடுவிலே சிகப்பாக காரட் தெரியும்.
குழந்தைகளுக்கு பார்க்கவே பிடிக்கும் இந்த சான்ட்விச் இட்லி, சாப்பிடவும் பிடிக்கும்.
கறிகாயும் சேரும் உடலுக்கும் நல்லது.
சாஸுடன் பரிமாறலாம்.

குறிப்பு: இது போல உங்களுக்கு பிடித்தமான காயை உள்ளே வைத்து இந்த சான்ட்விச் இட்லி தயாரிக்கலாம் புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best அவல் இட்லி

Post by krishnaamma Thu Jun 06, 2013 11:44 am

தேவையானவை :

கெட்டி அவல் 2 கப்
மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்

கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்

செய்முறை:

அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'அவல் இட்லி' thayaar.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best ஓட்ஸ் இட்லி

Post by krishnaamma Thu Jun 06, 2013 6:55 pm

தேவையானவை :

மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
பாம்பே ரவை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்

செய்முறை:


வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் இட்லி' தயார் .

குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best ஓட்ஸ் & கோதுமை ரவை இட்லி

Post by krishnaamma Thu Jun 06, 2013 6:58 pm

தேவையானவை :

மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - டாலியா -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்

செய்முறை:


வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் கோதுமை ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி' தயார் .

குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை