புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

First topic message reminder :

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:06 pm

மலைக்கோட்டை மாநகர்



திருச்சியிலும் அதைச் சுற்றியும் புனித யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கும் எண்ணற்ற இடங்கள் உள்ளன. திருச்சிக்கு "மலைக்கோட்டை மாநகர்' என்ற பெயர் பெற்றுத் தந்த 83 மீ. உயரமுள்ள மிகப் பெரிய பாறையானது 3800 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது.

இப்பாறையின் மீது அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலும், தாயுமானசுவாமி கோயிலும் பக்தர்களை ஈர்க்கின்றன. 6 - 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குகைக் கோயில்களும் இங்குள்ளன. இங்குள்ள சிற்பங்கள் கலை, வரலாற்று ஆர்வலர்களைக் கவரும். மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இங்கு பொதுமக்கள் படகுச் சவாரி செய்வதற்கும் வசதிகள் உள்ளன.

ஜம்புகேஸ்வரர் கோவில்: ஸ்ரீரங்கத்துக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சிவனை யானை வழிபட்டதால் இத்தலத்துக்கு திருவானைக்காவல் என்று பெயர் வந்ததாக ஐதீகம்.

கோளரங்கம்: சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே திருச்சியில்தான் கோளரங்கம் உள்ளது. விமான நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையில் உள்ள இக்கோளரங்கம் காலை 10 மணி முதல் மாலை 4.45 வரை திறந்திருக்கும். ஆண்டில் ஜன. 26, ஆக. 15, அக். 2 ஆகிய தினங்களில் மட்டுமே விடுமுறை.

தொ.பே. : 0 431 332190, 331921.



ரங்கநாதசாமி கோயில்: திருச்சி திருவானைக்கோயிலுக்கு அருகிலுள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற கோயில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசாமி கோயில். வைணவர்களின் தலமான இக்கோயிலுக்கு பூலோக வைகுந்தம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மொகலாய மன்னர்களின் படையெடுப்பினால் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானபோதும் இக்கோயில் இன்னும் அழகுடன் காட்சியளிக்கிறது. ஸ்ரீரங்கநாதரும், ரங்கநாயகியும் இக்கோயிலில் வீற்றிருக்கும் முக்கிய தெய்வங்களாகும்.

அரசு அருங்காட்சியகம்: திருச்சி ராணி மங்கம்மாள் மன்றத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. உலோக, கற்சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:06 pm

சமயபுரம் மாரியம்மன் கோயில்: பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபட்டுச் செல்லும் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

வயலூர் முருகன் கோயில்: திருச்சியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பச்சைப் பசும் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள முருகன் கோயில் சிறியதானாலும் மிகவும் புகழ்பெற்றது.

திருவெள்ளறை: திருச்சியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவெள்ளறை கோயில். இக்கோயில் கட்டடக் கலைச் சிறப்பு மிக்கது. இங்கு ஸ்வஸ்திக் வடிவத்தில் அமைந்துள்ள திருக்குளமும் புகழ் வாய்ந்தது.

முக்கொம்பு சுற்றுலா மையம்: திருச்சி மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா மையம் முக்கொம்பு. இங்கு காவிரி, கொள்ளிடம், உய்யக்கொண்டான் ஆறுகள் பிரிவதால் இப் பெயர் ஏற்பட்டது. திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இச் சுற்றுலா மையம் உள்ளது.

குணசீலம்: திருச்சிராப்பள்ளியில் இருந்து 27 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றின் வடகரையில் திருச்சி - முசிறி சாலையில் குணசீலம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி, மனநலம் குன்றியோரைக் குணமாக்கும் சக்தி பெற்றவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பச்சை மலை: திருச்சியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பச்சைமலைக் குன்று இயற்கை விரும்பிகளைக் கவரும் இடம்.

மேலும் திருச்சி நகரிலும் சுற்றுவட்டாரத்திலும் திருஈங்கோய்நாதர் கோயில், கரம்பனூர் உத்தமர் கோயில், பிச்சாண்டவர் கோயில், அன்பில் திருவடிவழகிய நம்பி கோயில், கோவிலடி அப்பக்குடத்தான் கோயில், வெக்காளியம்மன் கோயில் மற்றும் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

புனித லூர்து அன்னை ஆலயம்: மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே உள்ளே இந்த ஆலயம், பிரான்ஸின் பிரசித்தி பெற்ற லூர்துஸ் சர்ச்சின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது.

நத்-அர்-வலி தர்கா: திருச்சி பிரதானக் காவல் நுழைவாயில் (மெயின் கார்டு கேட்) அருகே உள்ளே இத் தர்கா மிகப் பெரிய டோம், இந்தோ - சாராசெனிக் கட்டடக் கலையில் அமைந்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:07 pm

அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த மதுரை

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலேயே அதிசயங்களுக்குக் குறைவில்லை. உதாரணத்துக்கு இரண்டு...

இசைத் தூண்கள்: கோயிலின் வடக்குக் கோபுரத்துக்கு அருகே 5 இசைத் தூண்கள் வரிசையாக நிற்கின்றன. ஒவ்வொரு தூணிலும் 22 தண்டுகள் உள்ளன. அவற்றைத் தட்டினால் பலவிதமாக இசைகள் பிறக்கும்.

இதேபோல, ஆயிரங்கால் மண்டபத்திலும் பலவகையான நாதங்களை எழுப்பும் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

மீனே இல்லாத குளம்: கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திலிருந்து தனது பூஜைக்குத் தேவையான பொன் தாமரை மலரை இந்திரன் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

திருக்குறளின் பெருமையை நிலை நாட்டிய - தமிழை வளர்த்த சங்கப் பலகை இங்குதான் தோன்றியது.

இக்குளத்தில் மீன்களும், இதர நீர் வாழ் உயிர்களும் இல்லாதிருப்பது பேரதிசயம். தன்னை வேண்டித் தவம் இருந்த சைவ நாரைக்கு சிவபெருமான் அருளிய வரத்தின் காரணமாக இக்குளத்தில் மீன்கள் உருவாகவில்லை என்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தாஜ்மகால்: திருமலை நாயக்கர் மகால் 1636-ல் அப்போதைய மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இந்திய -இஸ்லாமிய கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இது திகழ்கிறது.

இத்தாலி நாட்டுக் கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இது தென்னிந்தியாவில் உள்ள பிரமாண்டமான அரண்மனைகளில் ஒன்று. தமிழகத்தின் தாஜ்மகால் என்றும் இதை வர்ணிப்பார்கள்.

இதைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆகின. இரும்பு, சிமெண்ட் போன்றவை இன்றிக் கட்டப்பட்ட இதில் பிரம்மாண்டமான தூண்களும், சுதை வேலைப்பாடுகளால் ஆன அற்புதச் சிலைகளும் உள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:08 pm

அங்கு நடைபெறும் ஒலி - ஒளிக் காட்சிகள் மதுரையின் கடந்த கால வரலாறுகளைத் தத்ரூபமாக இன்றைய தலைமுறையினரின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

திருப்பரங்குன்றம் - அழகர்கோவில்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மதுரையின் தென் கோடியில் உள்ளது. குகைக் கோயில்கள் நிரம்பிய இப்பகுதியில் மயில்களின் சரணாலயம் அமைந்துள்ளது. அழகர்கோவில் பகுதியில் மற்றொரு அறுபடை வீடான பழமுதிர்ச் சோலை உள்ளது.

காந்தி அருங்காட்சிகம்: மகாத்மா காந்தியடிகள் மறைந்த பிறகு, அவரது நினைவாக அமைக்கப்பட்ட 7 அருங்காட்சியகங்களில் முதலாவது மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம். 15.4.1959-ல் அப்போதைய பிரதமர் நேரு இதைத் திறந்து வைத்தார்.

தமுக்கம் அரண்மனை என அழைக்கப்படும் ராணி மங்கம்மாள் அரண்மனையில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1670-ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது நவாபுகளின் பாதுகாப்புக் கோட்டையாகவும், ஆங்கிலேயே நீதிபதிகள் -மாவட்ட ஆட்சியர்களின் இல்லங்களாகவும் இருந்துள்ளது.

காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த வேட்டி, அவர் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி, ராட்டை, தோல் செருப்பு, மரச் செருப்பு உள்ளிட்ட 14 அரிய பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:08 pm

குளிச்சா குற்றாலம்

அங்கே இங்கே குளிப்பதெல்லாம் குளியல் அல்ல. குற்றாலத்தில் குளிப்பதுதான் அசல் குளியல்!

"சீசன்' நேரத்தில் ஒரே நாளில், எத்தனை முறை, எத்தனை அருவியில், எவ்வளவு நேரம் குளித்தாலும் சளியோ, காய்ச்சலோ எட்டிப் பார்க்காது. அதுதான் பொதிகை மலை மூலிகையின் மவுசு.

தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்காவுக் கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றைச் சிக்கெனப் பிடித்து சாரல் மழையாகப் பிழிந்து தருகிறது குற்றால மலை.

இந்த மழை நீர், மலைகளில் தவழ்ந்து, மூலிகைகளைத் தழுவி, சில்லென்ற குளிர்ச்சியுடன், வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்க் கொட்டுவதைப் பார்ப்பதே ஓர் ஆனந்தம்.

இரண்டு முழத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே... அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால்தான் புரியும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில், ஓர் அருவி, இரண்டு அருவி இல்லை; மொத்தம் 8 அருவிகள் உள்ளன. பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:09 pm

பேரருவி

குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.

சிற்றருவி

பேரருவியில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது சிற்றருவி. மலை உச்சியிலிருந்து பேரருவிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி பிரிந்து சிற்றருவியாக உருமாறுகிறது. இதில் சிறுவர்களும் அச்சமின்றி குளிக்கலாம்.

செண்பகதேவி அருவி

குற்றால மலையில் சுமார் 600 அடி உயரத்தில் காணப்படுவது செண்பகதேவி அருவி. சிற்றருவி செல்லும் பாதை வழியாக மலை மீது ஏறிச் சென்றால்தான் இந்த அருவியில் நீராட முடியும். வழியில் அருள்மிகு செண்பகதேவி அம்மன் கோவிலும் உள்ளது. மலை ஏற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல பயிற்சிக் களம்.

தேனருவி

செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால் தேனருவியை அடையலாம். பொதிகை மலையின் உச்சியில் சுமார் ஆயிரம் அடிகளுக்கு மேல் பாலாறாகத் தோன்றி அருவியாக கொட்டுவதால் இது தேனருவியானது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ள இந்த அருவியில் குளிப்பது எதற்கும் ஈடாகாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:10 pm

ஐந்தருவி

குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஐந்தருவி. மலையில் இருந்து விழும் நீர், ஐந்து கிளைகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்கு இந்தப் பெயர். இதில் குளித்தால் ஐம்புலன்களுக்கும் உற்சாகம் ஏற்படும். இரவு, பகல் எந்நேரமும் இதில் குளித்துக் குதூகலிக்கலாம். இங்கும் இடஒதுக்கீடு முறை உண்டு. மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி

ஐந்தருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ளது பழத்தோட்ட அருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்குள் உள்ள இந்த அருவியில் குளிப்பது பேரானந்த அனுபவம். குற்றாலம் சென்றவர்கள் பழத்தோட்ட அருவியில் குளித்தேன் என்று சொல்வதையே பெருமையாக நினைப்பதுண்டு. காரணம் இந்த அருவியில் எல்லோரும் குளித்துவிட முடியாது. எனவேதான் இதற்கு "வி.ஐ.பி. அருவி' என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்த அருவியை உரிமைக் கொண்டாடுவதில் அரசுத் துறைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. எனவே, கடந்த 3 ஆண்டுகளாக இந்த அருவிக்கு செல்லும் பாதை மூடிக்கிடந்தது. இந்த ஆண்டுதான் திறக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள வனத் துறையினரின் அனுமதி பெற்று இந்த அருவிக்குச் செல்லலாம்.

பழைய குற்றால அருவி

குற்றாலம் - கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது பழைய குற்றால அருவி. சுமார் 600 அடி உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது. பெண்கள் காசு கொடுத்து, துணி மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவது நல்லது. "ஜொள்ளு பார்ட்டி'களின் பார்வைகளைத் தவிர்க்கலாம்.

அருவியில் குளித்து முடித்த உடன் குளிர்ந்த உடம்புக்கு இதமான சூடேற்ற மிளகாய் பஜ்ஜி, வடை, டீ, காபி என ஏகப்பட்ட "ஐயிட்டங்கள்' உண்டு. மலைப் பழ வகைள் என குவியல், குவியலாக வைத்து விற்பார்கள். விவரத்துடன் கேட்டு வாங்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:11 pm

இவையும் உண்டு...

குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணிவிடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகு குழாம், பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை. கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும்.

உச்சந்தலை உச்சியிலே...

குற்றாலச் சிறப்புகளில் ஒன்று மூலிகை எண்ணெய் மசாஜ். சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் ஆகியவற்றில் விரும்பும் ஒன்றால் மசாஜ் செய்து குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெய்களில் "போலி'களும் ஏராளம். எனவே, ஒரிஜினல் எண்ணெய்களை தெரிந்து வாங்க வேண்டும்.

குற்றாலநாதர் கோயிலில் தயாரிக்கும் மூலிகை எண்ணெய் சிறப்பானது. பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் மூலிகைகளை சேர்த்து ஆகம முறைப்படி இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு தலைவலி என்ற ஐதீகத்தின் அடிப்படையில் தினந்தோறும் காலை அபிஷேகத்தின்போது இந்த மூலிகை எண்ணெய்யை சிரசில் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த எண்ணெய் 100 மி.லி. ரூ. 8 தான். ஆண்களுக்கு மசாஜ் செய்ய சுமார் 50 பேர் உள்ளனர். மூலிகை எண்ணெய்யை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, உடலின் பாகங்களை அழுத்திப்பிடித்து மசாஜ் செய்யும்போது நரம்புகளும், ரத்த ஓட்டமும் சீரடைகிறது. கொட்டும் அருவியில் குளிக்கும்போது உடலின் உஷ்ணம் தணிகிறது. உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. சுளுக்கு இருந்தாலும் பறந்துவிடும். கட்டணம் ரூ. 20 முதல் 30 வரை.

பெண்களுக்கும் மசாஜ்

பெண்களுக்கு, "சீசன்' நேரத்தில் மட்டும் அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மசாஜ் செய்யப்படும். கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' கொண்டாடப்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:11 pm

சீசன் எப்போ?

தென் மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள்தான் குற்றால சீசன். அப்போதுதான் அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற காலங்களில் மழை பெய்யும் வேளைகளில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும், அதற்கு சீசன் மகத்துவம் கிடையாது.

போக்குவரத்து வசதி: திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்திலும் செல்லலாம். கட்டணம் ரூ. 19. ரயிலில் தென்காசி வரை சென்று (கட்டணம் ரூ. 16) அங்கிருந்து நகர்ப் பேருந்து மூலம் குற்றாலம் செல்லலாம். பிரதான அருவியில் இருந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றுக்கு நகர்ப் பேருந்து வசதி உண்டு.

தங்குமிட வசதி: குற்றாலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. சீசன் காலத்தில் சாதாரணமாக ரூ. 200-க்கு இரண்டு படுக்கைகள் கொண்ட அறை கிடைக்கும். தனியான குடில்களும் உண்டு. வசதிக்கு ஏற்பக் கட்டணம். உணவு விடுதிகளும் உள்ளன.

குற்றாலத்துக்கு அருகே...: குற்றாலத்துக்கு அருகில் 52 கி.மீ., தொலைவுக்குள் பாபநாசம் அணை, முண்டந்துறை புலிகள் சரணாலயம், பாணர்தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியும், 50 கி.மீ., தொலைவில் மணிமுத்தாறு அணை, பூங்கா; 65 கி.மீ. தொலைவில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம், குதிரைகட்டித் தேரியும் உள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:12 pm

நெல்லையில்...

குற்றாலம் செல்ல திருநெல்வேலிக்கு வருவோர் இம்மாவட்டத்தில் உள்ள பிற முக்கியமான சுற்றுலா மையங்களையும் கண்டுகளிக்கலாம்.

காந்திமதி-நெல்லையப்பர் கோவில்: நகரின் மையப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். இசை எழுப்பும் கல் தூண்கள், ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக் குளம், அபூர்வ நகை வகைகள் ஆகியவை இதன் சிறப்பு.

கதீட்ரல் ஆலயம்: 1826 - ம் ஆண்டு அருள்திரு ரேனியஸôல் கட்டப்பட்ட தேவாலயம். நகரின் அடையாளச் சின்னம்.

கிருஷ்ணாபுரம் (11.கி.மீ): கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் உள்ளது. கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆள் உயர கற்சிற்பங்கள் சிறப்பு.

சங்கரன்கோவில் (56.கி.மீ.): இங்குள்ள சங்கரநாராயணர் கோவிலில் சிவனும், விஷ்ணுவும் இணைந்திருப்பர். ஆண்டுதோறும் மார்ச் 21 முதல் 7 நாள்களும், செப்டம்பர் 21 முதல் 7 நாள்களும் கர்ப்பக்கிரகத்தில் சூரிய ஒளி விழுவது ஓர் ஆச்சர்யம்.

பத்தமடை (30கி.மீ.): கோரம்பாய்க்குப் பெயர் பெற்றது. விதவிதமான பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. சுவாமி சிவானந்தர் பிறந்த ஊர் இது.

களக்காடு (47கி.மீ.): சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இயற்கைக் காட்சிகள் நிறைந்தது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக