புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
52 Posts - 39%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
5 Posts - 4%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
mruthun
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
7 Posts - 3%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
5 Posts - 2%
Karthikakulanthaivel
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:37 am

பல ஊர்ப்பெயர்கள் இன்னோர் பெரால் அமைந்திருத்தலும் அவ்தவிடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் எமக்குத் தெரிந்தன கீழ்வருவன:-

1.காங்கெயன்பட்டி
2.சோழகன்பட்டி
3.ராயமுண்டான்பட்டி
4.வாலியன்பட்டி
5.தொண்டைமான்பட்டி
6.கண்டியன்பட்டி
7.சாதகன்பட்டி
8.துண்டுராயன்பாடி
9.ஆரமுண்டான்பட்டி
10.ஓசையன்பட்டி
11.வில்லவராயன்பட்டி
12.செம்பியன்களர்
13.உலகங்காத்தான்பட்டி
14.மலைராயன்பட்டி
15.திராணிபட்டி
16.கலியராயன்பட்டி
17.சாணூரன்பட்டி
18.கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
19.ஏத்தொண்டான்பட்டி
20.பத்தாளன்கோட்டை
21.பாப்பரையன்பட்டி
22.மாதைராயன்பட்டி
23.சேதிராயன் குடிக்காடு
24.நல்ல வன்னியவன் குடிக்காடு
25.வல்லாண்டான்பட்டி
26.வாண்டையானிருப்பு
27.தென்கொண்டானிருப்பு
28.நரங்கியன்பட்டி
29.பாலாண்டான்பட்டி
30.கண்டர்கோட்டை
31.வன்னியன் பட்டி
32.பாண்டுராயன்பட்டி
33.சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
34.காடவராயன்பட்டி
35.சாளுவன்பேட்டை
36.நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
37.செம்பின் மணக்குடி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:38 am

இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது.

1.துண்டுராயன்பாடி
2.பலபத்திரன்கோட்டை
3.காங்கெயன்பட்டி
4.ஆற்காடு
5.சுரக்குடிப்பட்டி
6.சோழகன்பட்டி
7.உறத்தூர்
8.விண்ணமங்கலம்
9.திருக்காட்டுப்பள்ளி
10.பூண்டிபானமங்கலம்
11.அன்பில்
12.மாங்குடி
13.கண்டர்கோட்டை
14.கிள்ளிக்கோட்டை
15.பாத்தாளன் கோட்டை
16.வாழவந்தான் கோட்டை
17.பனையக்கோட்டை
18.காசாங்கோட்டை
19.பட்டுக்கோட்டை
20.கல்லாக்கோட்டை
21.கோட்டைப்பத்து
22.பிங்களக்கோட்டை
23.திருமங்களக்கோட்டை
24.வத்தனாக்கோட்டை
25.மல்லாக்கோட்டை
26.எயிலுவான்கோட்டை
27.நடுவாக்கோட்டை
28.மயிலாடுகோட்டை
29.வாளமரங்கோட்டை
30.துரையண்டார்க்கோட்டை
31.தெற்குக்கோட்டை
32.சூரக்கோட்டை
33.சத்துருசங்காரக்கோட்டை
34.நாயக்கர்கோட்டை
35.ஆதனக்கோட்டை
36.மாதைராயன் புதுக்கோட்டை


என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:38 am

முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம். ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் ‘செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா’ எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர்.

பலபத்திரன் கோட்டை என்பது ஐயனார்புரத்தின் மேற்கே முக்கால் நாழிகை யளவில் உள்ள விண்ணனூர் பட்டியில்மஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முன்னிருந்த பலபத்திரச் சோழகரால் கட்டப்பட்டது. பிறகோட்டைகளின் வரலாறுகள் பின்பே ஆராய்ந்து தெரியவேண்டியிருத்தலின் அவற்றைக் குறித்து ஒன்றும் எழுதாதுத விடுக்கின்றோம். இப்பொழுது இக்குலத்தாரில் அரசரும், குறுநில மன்னருமாயுள்ளார் வரலாறுகள் அடுத்த அதிகாரத்திற் காட்டப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:41 am

கள்ளர் சரித்திரம்

நான்காம் அதிகாரம்

புதுக்கோட்டை மன்னர்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:42 am

கள்ளர் சரித்திரம்

ஐந்தாம் அதிகாரம்

நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல்


தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும்.

வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:43 am

சேர மண்டலம்

வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு’.

பாண்டி மண்டலம்

‘வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.’

சோழ மண்டலம்

‘கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கொல்லையெனச் சொல்’.

தொண்மை மண்டலம்

‘மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு’.

கொங்கு மண்டலம்

‘வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்குக்
கழித்தண் டலைசூழுங் காவிரிநன் னாடா
குழித்தண் டலையளவு கொங்கு.’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:44 am

சோணாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே திருமுனைப்பாடி நாடு என்றும் ஒன்று உளதாயிற்று. இதற்கு வேறு சில பெயர்களும் உண்டு. கங்க மண்டலம், ஈழ மண்டலம் என்பன இங்கு ஆராய்ச்சிக் குரியவல்ல. சோழ மன்னர்களின் ஆணை பரவிய இடைக் காலத்தில் பாண்டி மண்டலத்திற்கு ராஜராஜ மண்டலம் எனவும், தொண்டை மண்டலத்திற்கு ஜயங்கொண்சோழ மண்டலம் எனவும், கொங்கு மண்டலத்திற்கு அதிராஜராஜ மண்டலம் எனவும், சோழ கேரள மண்டலம் எனவும் பெயர்கள் வழங்கலாயின. அவை பின்பு விளக்கப்பெறும். இம் மண்டலங்களின் உட்பிரிவுகள் வளநாடு , நாடு, கோட்டம், கூற்றம் என்னும் பெயர்களால் வழங்கின. வளநாடு அல்லாத பிரிவுகள் பழைய தமிழ்ச் சங்க நாளிலே இருந்திருக்கின்றன என்பதற்குச் சங்க நூல்களில் அப்பெயர்கள் காணப்படுதலே சான்றாகும்.

இடைக்கழி நாடு, ஏறுமா நாடு, கோனாடு, பறம்பு நாடு, மலையமானாடு, மழவர் நாடு, மாறோக நாடு, முக்காவனாடு, பல்குன்றக்கோட்டம், குண்டூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் என்னும் பெயர் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன.

பிற்பட்ட தமிழ் நூல்களிலும் நாட்டு வழக்குகள் பயின்றுள்ளன. சைவசமயகுரவராகிய சந்தரமூர்த்தி சவாமிகள் தேவாரம் திருநாட்டுத் தொகையில் மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுக்கை நாடு, நாங்கூர் நாடு, நறையூர் நாடு, மிழலை நாடு, வெண்ணி நாடு, பொன்னூர் நாடு, புரிசை நாடு, வேளூர் நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம் என்னும் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றிலுள்ள ஊர்களில் ஒரோவொன்றன் பெயரும் கூறியுள்ளார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:44 am

பெரியபுராணத்திலே மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு, மருகல் நாடு என்பன வந்துள்ளன. இங்ஙனம் பிறவற்றுள்ளும் காண்க.

கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து அவற்றிலிருந்து நாட்டின் பிரிவுகளைப் பற்றிய பல அரியசெய்திகள் வெளியாகினறன. அவை ஒருவொறு இங்கே விளக்கப்படும்; கோட்டம், நாடு என்னம் பிரிவுகள் தொண்டைமண்டத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் சோழமண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது உதாரணமாக ‘களத்தூர் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத்தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம் என வருவது காண்க. இதன்படி ஊர், கூறு, நாடு, கோட்டம், மண்டலம் என்பன முறையே ஒன்றின் னொன்று உயர்ந்தனவாகும் வளநாட்டின் உட்பட்ட நாடு என்பதற்குப் பிரதியாக கூற்றம் என்பதும் காணப்படுகிறது. ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றம் ராஜாசிராய வளநாட்டுப் பாச்சீற் கூற்றம், நித்தவினோத வளநாட்டு ஆவூர்கூற்றம் நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றம், கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்றம்’ என வருதல் கண்க. சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும். ‘சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான்’ என வருகின்றது. சில இடங்களில் கோட்டமாவது , வளநாடாவது கூறப்படாமல் , மண்டலத்தை யடுத்து நாடு, கூற்றம் என்பன கூறப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:45 am

மண்டலம், கோட்டம், நாடு முதலியவற்றின் பெயர்கள் காலத்திற்கு காலம் மாறியும் வந்துள்ளன. தொண்டை மண்டலத்திற்கு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் ஏற்பட்டு விட்டது வெளிப்படை. ‘தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடு’ என இங்ஙனம் வருகின்றன. இவ்வாறே பாண்டி நாட்டிற்கு ராஜராஜ மண்டலம் என்றும், கொங்கு நாட்டிற்கு சோழ கேரள மண்டலம் என்றம் பெயர்கள் வழங்கியுள்ளமை ‘ பாண்டிநாடான் ராஜராஜ மண்டலம்’ என்றும், கோனேரி மேல்கொண்டான் கொங்கான சோழகேரள மண்டலம் என்றும் வருதலால் அறியலாகும் அதிராஜராஜ மண்டலத்து வெங்கால நாடு என வருதலால் கொங்கிற்கு அப்பெயருண்மையும் பெறப்படும். ஈழ நாடும் ‘ மும்மடி சோழமண்டலம்’ எனப்பட்டது. இவையெல்லாம் சோழ மன்னர்களின் வெற்றிக்கு அடையாளங்கள் ஆகும்.

தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாகவும் 79 நாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தது. ‘ நாளாறு கோட்டத்து புலியூர்க்கோட்டம்’ , ‘ கோட்டமோ ரிருபானான்கு கூறுநா டெழுபத்தொன்பான்’ என்பன காணக.
கோட்டம் இருபத்து நான்காவன:-
1.ஆமூர்
2.இளங்காடு
3.ஈக்காடு
4.ஈத்தூர்
5.ஊற்றுக்காடு
6.எயில்
7.கடிகை
8.காளியூர்
9.களத்தூர்
10.குன்றபத்திரம்
11.சிறுகரை
12.செங்காடு
13.செந்திருக்கை
14.செம்பூர்
15.தாமல்
16.படுவூர்
17.பல்குன்றம்
18.புழல்
19.புலியூர்
20.பேயூர்
21.மணையில்
22.வெண்குன்றம்
23.வேங்கடம்
24.வேலுர்

என்பன.

ஒவ்வொன்றன் பின்னும் கோட்டம் என்பது சேர்த்துக் கொள்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:45 am

தொண்டைநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயரெய்தியவிடத்தும் அங்ஙனமே கோட்டம் என்னும் பிரிவுகளை உடைத்தாய் , இருந்தது. ஆமூர் கோட்டம் , படுவூர் கோட்டம், பல்குன்றக்கோட்டம், காலியூர் கோட்டம் , எயிற்கோட்டம் , ஊற்றுக்கோட்டம், வெண்குன்றகோட்டம், செங்காட்டுக்கோட்டம் , புலியூர்கோட்டம், புழற்கோட்டம், மணையிற் கோட்டம், களத்தூர்கோட்டம் முதலிய ஜெயங்கொட்ட சோழமண்டலத்தில் இருந்தனவாக சாசணங்களால் அறியலாகும். முற்பட்ட சில சோழர்காலத்தில் கோட்டம் என்றிருந்தது, பின் வந்த சோழர் காலத்தில் சோழ மண்டலத்தின் பிரிவு முறைப்படி வள நாடு என மாறியும் இருக்கிறது. ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மணிமங்களம்’ என்பது உதாரணமாகும். .

சோழ, பாண்டிய, சேர மண்டலங்களில் கூற்றம் , வளநாடு முதலியவை எத்துணைப் பகுதிப் பட்டிருந்தனவென்னும் வரையரை புலப் படவில்லை உறையூர் கூற்றம், பாச்சிற் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், வெண்ணிக்கூற்றம் , ஆவூர் கூற்றம் , கழார் கூற்றம், பட்டினகூற்றம், பாம்புணிகூற்றம், வேளூர் கூற்றம், ஒளியூர் கூற்றம் உறத்தூர் கூற்றம், சூரலூர் கூற்றம் என்னும் கூற்றங்களும்; மங்கல நாடு , மருகல் நாடு , மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு, ஆக்கூற் நாடு, அம்பர் நாடு, அதிகை மங்கை நாடு, இடையள நாடு, நறையூர் நாடு, தேவூர் நாடு பொய்கை நாடு, மண்ணி நாடு, நென்மலி நாடு , புறங்கரம்பை நாடு, பனையூர் நாடு, திரைமூர் நாடு, பிரம்பூர் நாடு, குறும்பூர் நாடு, மிழலைநாடு, குறுக்கை நாடு, விளத்தூர் நாடு, திருக்கழுமல நாடு, திருவாலிநாடு, வெண்ணையூர் நாடு, நாங்கூர் நாடு, கொண்டல் நாடு, ஒக்கூர் நாடு, உறத்தூர் நாடு, பாப்பாநாடு, பைங்காநாடு, அம்பு நாடு, கற்பிங்க நாடு, ஊமத்த நாடு, காசா நாடு, தென்னவநாடு, மீய்செங்கிளி நாடு, எயிநாடு, புறக்கிளியூர் நாடு, மேற்கா நாடு, கார்போக நாடு, வடவழிநாடு, பிடவூர் நாடு, குழிதண்டலை நாடு, நல்லாற்றூர் நாடு, ஏரியூர் நாடு, இடையாற்று நாடு, ஊற்றத்தூர் நாடு, மீகோழை நாடு , கோ நாடு முதலிய நாடுகளும் ;

அருண்மொழித்தேவர் வளநாடு , பாண்டியகுலாசணி வள நாடு, நித்தவினோத வளநாடு, ராஜராஜ வளநாடு, ராஜேந்திர சிம்ம வளநாடு, உய்யகொண்டான் வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, கேரளாந்த வளநாடு, ஜயசிங்க குலகாள வள நாடு, ராஜாசிரய வளநாடு, கடலடையா திலங்கை கொண்டான் வளநாடு, விருதராஜ் பயங்கர வளநாடு என்னும் வளநாடுகளும் சோழமண்டலத்தில் இருந்தனவாக கல்வெட்டுக்கள் முதலியவற்றால் தெரிவிக்கின்றது.

Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக