புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
43 Posts - 57%
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
467 Posts - 55%
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
326 Posts - 38%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
27 Posts - 3%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
mini
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
4 Posts - 0%
vista
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 12:27 am

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:46 am

வளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.
சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும். வளநாட்டின் பெயரும் ஒவ்வொரு காலத்தில் மாறி வந்துள்ளது. தஞ்சாவூரைத் தன்னகத்துடைய நாடு ஒரு காலத்தில் ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாடு’ என்றும், மற்றொரு காலத்தில் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றம்’ என்றும் வெவ்வேறு பெயர்களை உடைத்தாயிருந்தது.

கொங்குமண்டலத்தின் பிரிவுகளில் கோட்டம், வளநாடு என்னும் பெயர்கள் காணப்பட்டில. அஃது இருபத்து நான்கு நாடுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை:-
1.பூந்துறை நாடு
2.தென்கரை நாடு
3.காங்கேய நாடு
4.பொன்கலூர் நாடு
5.ஆறைநாடு
6.வாரக்கனாடு
7.திருவாவினன்குடி நாடு (வையாபுரி நாடு)
8.மணநாடு
9.தலைய நாடு
10.தட்டய நாடு
11.பூவாணிய நாடு
12.அரைய நாடு
13.ஒடுவங்க நாடு
14.வடகரை நாடு
15.கிழங்கு நாடு
16.நல்லுருக்க நாடு
17.வாழவந்தி நாடு
18.அண்ட நாடு
19.வெங்கால நாடு
20.காவடிக்கனாடு
21.ஆனைமலை நாடு
22.இராசிபுர நாடு
23.காஞ்சிக்கோயினாடு
24.குறும்பு நாடு

என்பன. இவற்றில் சில நாடுகட்கு இணை நாடுகள் எனவும் வேறு உள்ளன. பூந்துறை நாட்டின் இணை நாடுகள் பருத்திப்பள்ளி நாடு, ஏழுர் நாடு என்பன. இங்ஙனமே வேறு சிலவும் உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:47 am

கோட்டம், வளநாடு நாடு என்பன இன்ன இன்ன இடத்தில் இருந்தனவென்பது அவற்றைச் சார்ந்துவரும் ஊர்ப்பெயர் முதலிய வற்றால் அறியலாகும். ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டுத் திருவொற்றியூர் , ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத் தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம், உலகுய்யக்கொண்ட சோழவள நாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர், பாண்டியகுலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுத் திருவாணைக்கா, க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்’ என்பன காண்க சில இடங்களில் ஊர்பெயரே கோட்டம் முதலியவற்றின் பெயராக அமைந்திருத்தலும் அவற்றை அறிதற்கு உதவியாகும் ஒரொவழி நாடு இருக்கூறுடையதாகி ‘வகை’ என வழங்கியுள்ளது. நகரங்களும் ஊர்களும் ‘தனியூர் , பற்று, ஊர், குறைபற்று’ என்பனபோலும் பெயர்களால் வழங்கின. சிற் சில ஊர்கள் தமக்குரிய பழம்பெயருடன் சில அரசர் பெயர்களையும் பெயராக ஏற்று வழங்கலுற்றன. ‘கருந்திட்டைக் குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழ புறம், சேவூரான சோழ கேரள நல்லூர், கோட்டாறு ஆன மும்மடிச்சோழ நல்லூர், கருவூரான முடிவழங்கு சோழபுறம், ஏரிநாட்டு விண்ணனேரியான மும்மடி சோழ நல்லூர்’ என இங்ஙனம் வருகின்றன. கல்வெட்டுகளை ஆராய்தலினால் இங்ஙனம் அறியலாகும் உண்மைகள் மிகப் பலவாம்.

நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றோம் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:48 am

ஈதர்ஸ்டன் என்பார் எழுதிய ‘ தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு’ என்னும் புத்தகத்தில் பின் உள்ளவை காணப்படுகின்றன.

மதுரைக் கள்ளர் நாடுகள்

1.மேல்நாடு
2.சிறு குடிநாடு
3.வெள்ளூர் நாடு
4.மல்லாக்கோட்டை நாடு
5.பாகனேரி நாடு
6.கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு
7.கண்டதேவி நாடு
8.புறமலை நாடு
9.தென்னிலை நாடு
10.பழைய நாடு
என்பன
புறமலை நாட்டுக் தலைவரை ஆயர் முடிச்சூட்டுவது வழக்கம் . மேல் நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது. சிறு குடி நாட்டின் உட்பிரிவுகள் ;ஆண்டி , மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர்களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்; வேங்கைப்புலி, வெக்காலி புலி, சாமிப் புலி, சம்மட்டி மக்கள், திருமான்,சாயும் படைத் தாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமைகயில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுர்ண மூர்த்திஸ் வாமி திருவிழா சம்பந்தமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன் மாரி, இரவு சேரி, தென்னிலை, என்ற நான்கு நாடுகளும் சிவகங்கை சமீனில் மற்றொரு பகுதியாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:49 am

பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கள்ளல் , ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும் , சிவகங்கை , சிரஞ்சீவி எஸ், சோமசுந்தரம் பிள்ளை நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன.

1.மேல நாடு : இது ஐந்து தெருவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலை தெருவானது நரசிங்கன் பட்டி முதலிய எட்டு ஊர்களையும் , தெற்கு தெருவானது தெற்கு தெரு முதலிய எட்டு ஊர்களையும் , வடக்கத் தெருவானது வல்லாளப்ட்டி முதலிய 27 ஊர்களையும் பத்துக் கட்டு தெருவானது சிட்டம் பட்டி முதலிய 10 ஊர்களையும் , பறப்பு நாட்டு தெருவானது திருக்காணை முதலிய 8 ஊர்களையும் உடையன. இவர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்கு ச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.

2.நடுவு நாடு: இது மேலூர் முதலிய 20 ஊர்களையுடையது .

3.சிறு குடி நாடு: இதற்கு செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழ வளவு, மேல வளவு, முதலிய பிரிவுகளையும் , பல ஊர்களையும் உடையது முன்பு வெள்ளூரும் இவர்கட்கு கீழ்பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறு குடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:50 am

4.வெள்ளூர் நாடு : இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு , என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர் , அம்பலக்காரன் பட்டி, உறங்கரன் பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களை யுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும் , மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி , சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்காலி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரையென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையென்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர். மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்.

5. அஞ்சூர் நாடு:- இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களை யுடையது.

6.ஆறூர் நாடு:- இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலில்உள்ளது ; ஒக்கூர் , நாலுகோட்டை முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டு தலைவர்களுக்குச் சோழ புறம் சிவன் கோயிலில் பட்டுப்பரிவட்டம் மறியாதைகள் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:51 am

7.மல்லாக்கோட்டை நாடு :-இது சிவ கங்கையின் வடக்கே 8 மைலில் உள்ளது’ மல்லாக்கோட்டை, மாம்பட்டி , ஏறியூர் முதலிய ஊர்களையடையது.

8.பட்டமங்களம் நாடு:- இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடல் புறாணத்திலே கூறப்பெற்ற அட்டாமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தளம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கள நாட்டுக்கும் திருக்கோட்டியூர் பெருமாள் கோவில் தேர்திருவிழாக்களில் பட்டு பரிவட்டம் மரியாதைகள் உண்டு.

9.பாகநேரி நாடு:- இது பாகனேரி ,காடனேரி, நகரம் பட்டி முதலிய பல ஊர்களை யுடையது. இந்நாட்டிற்கு பாகனேரியிலுள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்லா உரிமைகளும் மரியாதையும் உண்டு.
10.கண்டர் மாணிக்கம் நாடு:- இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களையடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும் குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும் ,தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர் திரு விழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகளும் எல்லா உரிமைகளும் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:53 am

11.குன்னங்கோட்டை நாடு:- இது கல்லல் குன்னமாகாளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதித்தான், திறைகொண்ட பெரியான் , சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு, இவர்கள் திருவேங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள்; கண்ணிழந்தவர்க்குக் கண் கொடுத்த ஒரு பக்கதருடைய வழியினர்; இவர்கள் பாண்டிவேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத்தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிகுஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக்குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக்கொடி, புலிக்கொடி, இடபக்கொடி, மீனக்கொடி பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள். காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடீ நாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும்வழக்க முடையவர். இந்நாடு தெற்கே காளையார் கோயிலும் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம்பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களையுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப்பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங்கட்டுவது வழக்கம். இவர்களைப் பட்டத்துச்சாமி பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள்.

12.பதினாலுநாடு:- குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன.

அவை ஏழு கிளை பதினாலுநாடு என்னும் பெயரால் வழங்குகின்றன.

அவை:-

குன்னங்கோட்டை நாடு,
தென்னிலை நாடு,
இரவுசேரி நாடு,
உஞ்சனை நாடு,
செம்பொன்மாரி நாடு,
கப்பலூர் நாடு,
சிலம்பா நாடு,
இருப்பா நாடு,
தேர்போகிநாடு,
வடபோகி நாடு,
கோபால நாடு,
ஆற்றங்கரை நாடு,
ஏழுகோட்டை நாடு,
முத்து நாடு என்பன.


இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம். இவற்றில் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு.

எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக் களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:55 am

இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்கடி நாடு என்னும் நாடுகளும் உள்ளன.

திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடையப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களையுடையது.

கீழக்குடிகாடு:- இது மதுரைக்கு மேற்கில் உள்ளது

திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர்.

அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும்.

கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:58 am

பின் உள்ளவை புதுக்கோட்டைச் சரிதத்திற்காணப்படுவன.

கூற்றம் எனவும் , நாடு எனவும், நாடு வகுக்கப்பட்டது. கூற்றம் பெரும் பிரிவு; நாடு அதன் உட்பிரிவு. கோனாடானது உறையூர்க் கூற்றம் (வடபால்), ஒளியூர்க் கூற்றம் (தென் மேற்கு), உறத்தூர்க் கூற்றம் (வடமேற்கு) எனவும் கானாடானது மிழலைக் கூற்றம், அதளிக்கூற்றம் எனவும் , பகுக்கபட்டிருந்தன. பிற்பட்ட சோழ பாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் சோழ பாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் ஏற்பட்டன.

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள வளநாடுகள்:-

1.ராஜராஜ வளநாடு
2.ஜயசிங்க குலகால வளநாடு
3.இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு
4.கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு
5.விருதராஜ பயற்கர சோழ வளநாடு
6.கேரள சிங்க சோழ வளநாடு
7.சுந்தரபாண்டிய வளநாடு

என்பன.

இப்பெயர்கள் பின்னாளிலும் வழங்கி வரலாயின”.

திருவாளர்கள் சர்கரை இராமசாமிப் புலவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டிற் கண்ட ராயர் எழுவர் பெயர் முன்பு காட்டப்பட்டது. அவர்கட்கு உரியவாக ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும் அதிற் கூறப்பட்டுள்ளன.

அவற்றுள் கூற்றங்கள்:

‘மிழலைக்கூற்றம்,
முத்தூர்க்கூற்றம்.
அரும்புர்க் கூற்றம்,
திருக்கானக் கூற்றம்,
தொகவூர்க் கூற்றம்,
கொடுமளூர்க் கூற்றம் ,
இளையான்குடிக் கூற்றம்
என்பன.

நாடுகள்:-

கருங்குடி நாடு,
உயர்செம்பி நாடு,
கலாசை உருக்கு நாடு,
தடாதிருக்கை நாடு,
உலகு சிந்தாமணி நாடு,
தோராபதி நாடு,
மதுரை உதயவளநாடு,
வாகுள்ள வள நாடு,
சேர சோழ பாண்டி வளநாடு,
வெள்வி நாடு, கானாடு,
கைக்கு நாடு,
மெய்கண்ட நாடு
விரிஞ்சிங்க நாடு,
தொளசிங்க நாடு,
செம்பொன் நாடு,
முடுக்கு நாடு
என்பன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 1:59 am

திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:

“தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, பனையக்கோட்டை நாடு, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.

Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக