புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 9:01 pm

அருமையிருக்கு

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 12, 2011 11:12 pm

பதிலுக்கும ,அன்பிற்கும் நன்றி ,
கொஞ்சம் பேராவது படித்த பின் இடலாம் என்று சிறிது தாமதம்
செய்கிறேன் .
ஒரு இருபது பெயராவது தொடர்ந்து படிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன் .
இன்னும் அதிகம் படித்தல் எழுதுவது ஒரு பயனுள்ள பணி என்ற எண்ணம் என்னுள் வரும் .
இனி விரைவில் இடுகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 8:26 am

சுகுமாரன் அவர்களே சிரத்தையாய் வாசித்து பின்பற்றும் சிலபேர்கள் தான் மகத்துவமானவர்கள்.

எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள் என்று கணக்கெடுத்து வான் ம்ழை பொழிவதில்லை. தம் கடமையை அது செய்கிறது.

சிறந்த படைப்புக்கள் வழங்குவோர் அந்த வான் ம்ழை போலத்தான்.

தொடர்ந்து வருகை தாருங்க்ள்.. யாம் பயனுறுகிறோம்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 19, 2011 6:47 am

எனக்கு புரிந்தது இதுவே ! (25)-*



காலம் என்னும் கனவு ! *

காரணம் காரியம் தான் உலகை ஆளும் விதிகள் எனப்பார்த்தோம்
காரணம் எல்லாம் காரியம் ஆவதற்குள் காலம் என்று ஒன்று இடையில் புகுவதால் எந்த காரணம் எந்தக் காரியம் ஆகிறது என்ற அறிவு நமக்கு இல்லாமல் ஆகிறது ! மேலும் அதில் இடம் என்ற ஒன்றும் சேருகிறது
இந்த இடம் அந்தக் காரியம் நடை பெறும் இடத்தை குறிக்கும் .

இதில் விந்தை என்ன வென்றால் விதை போட்ட இடத்தில் தான் செடி முளைக்கும் என்பதில்லை ! விதை விதைப்பது ஒரு இடம்
செடி வருவது ஒரு இடம் !
விதை போடுவது ஒரு சமயம் ,
செடியைப்பார்ப்பது வேறுசமயம் !


எந்த ஒரு காரணமும் காரியம் ஆவதற்கு
காலம் என்று ஒன்றும் இடம் என்று
ஒன்றும் தேவைப் படுகிறது .!


அதாவது அந்த காரணம் காரியமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் நடை பெறும் .
இதையே வள்ளுவரும்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்”

:உலகத்தையே பொருளாக கைகொள்ள கருதினால்
உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து
அறிந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் கிட்டும். என்று வள்ளுவர் கூறுகிறார் .!
!
குறளில் கூறப் பட்டுள்ள உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து என்பதில் தான் இருக்கிறது வெற்றியின் மர்மமும் ,ரகசியமும் !

வெற்றி என்பது நாம் எண்ணியது நடைபெறுவது தானே !

தோல்வி என்பது காரியங்கள் நாம் நினைத்தபடி நடைபெறாததுதானே !

இவ்வாறு காலமும் இடமும் மாறுவதால் நாம் காரண காரியத்தை புரிந்து கொள்ளாமல் துயறுருகிறோம் .என்ன செய்தால்
என்ன விளையும் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை !புரிவதில்லை !

நாம் செய்யும் செயல் அதன் எதிர்வினையாக
அதுவே தானே , அதேப் போல் தானே நடைபெறவேண்டும் ,அதுஎப்படி மாறும் ? என மயக்கமுறுகிறோம் .


அதற்க்கு எனன செய்வது என அறியாமல் திகைக்கிறோம் !
சற்று இதை விரிவாக சிந்தித்துப் பார்ப்போம் !

நடை பெறும் ஒவ்வொரு செயலும் எதற்காக நடை பெறுகிறது ?
அது ஒரு விளைவை ஏற்ப்படுத்தவேண்டிதானே ?
நமக்கு நாம் செய்த செயல் தெரிகிறது
அதனால் ஏற்ப்பட்ட விளைவு தெரிவதில்லை !
நம் சஞ்சிதமாக பெற்று இப்பிறவியில் அனுபவிக்கும் பிராரர்த்தம்
நமக்கு நாம் முன்பு செய்த செயலால் விளைந்த விளைவையே தருகிறது !


அதே செயலை மட்டுமே மட்டும் தருவதில்லை !

உதாரணமாக ,சும்மா ஒரு பேச்சிக்கு தான் , நாம் ஒருவர் பொருளை
வஞ்சகமாக பறித்துக்கொள்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள் !
நமது பொருளும் அதே போல் இப்பிறவியில் பறிபோகும்
சாத்தியமும் உண்டு ! ஆனால்
அது மிக சாதாரண தண்டனை ! சொல்லப் போனால் இதில் தண்டனையே இல்லை !
பொருள் இழப்பு சிலசமயம் சிலரிடம் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது !
அவரிடம் அதிக பொருள் இருக்கும் போது சிறிது பொருள் இழப்பு அவருக்கு சரியான தண்டனை ஆகாது !பலசமயம அவர் இதை உணரவே மாட்டார் !

ஆனால் முன்பு நாம் செய்த பாவச்செயல்லால் ,பொருள் இழைந்த காரணத்தால் பொருள் இழந்தவர் மகள் திருமணம் தடை பட்டிருக்கலாம் ! அவரதுமகனின் வேலைக்காக அந்தப்
பணம் வைக்கப்பட்டிருந்து அதனால் ,அவரது மகனுக்கு வேலை வாய்ப்பு பறிபோயிருக்கலாம் ! அதனால் அவர் மனம் துன்பம் மிக
அடைந்திருக்கலாம் !
இப்போது இந்தப் பிறவியில் நமக்கு காரணம் இல்லாமல்

மனத துன்பம் வாய்க்கும் .
மகளின் திருமண தாமதம் மகனின் வேலை பெறுதலின் தாமதம் போன்ற இவைஎல்லாம் நாம் பறித்த பணத்தின் விளைவுகள் ! அதே மாதிரி மனத்துயரம் நமக்கும் வாய்க்கும் ! இதில் செயல் மட்டுமல்ல அதல் விளைவால் கிடைத்தஉணர்வுகள்
,மனத்துயர்தான் அளவு ! நாம் சரியாக அதே அளவு
மனத்துயரத்தை , அவர் நம்மால் பெற்றதை நாம் இப்பிறவியில் அடைகிறோம் !.

இப்படியாக இப்பிறவியில் நமது பூர்வ கர்ம வினைத்தொடர் காரணமாக
சில வினைகள் நமது காரணம் இன்றி தானே நடைபெறுகிறது .!
பல வீடுகளில் பணமிருந்தும் மகளுக்கு திருமணம் தள்ளிப்போகும் !
படிப்பிருந்தும் மகனுக்கு வேலை தாமதப்படும் ! இவ்வாற்று பல காரியங்கள் நாம்
முன்பே செய்த காரணங்களளால் நாம் அனுபவிப்பதற்காக காத்திருக்கிறது !
இப்போது எங்கே ? என்பது மற்றொரு மர்மம் !

இது என்ன என்னமோ கதை மாதிரி இருக்கிறது என்கிறீர்களா ?
உண்மையில் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் மிகச்சிறந்த
பல சிறந்த இலக்கியங்கள் பொதிந்துக் கிடைக்கின்றன ?
நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நாம் கற்ப்பனை செய்யவே முடியாது !

நாம் ஏதாவது சிறந்த இலக்கியத்தை படைக்கிறோம் என்றாலே
அது எங்கோ முன்பே நடை பெற்றது என்றுதான் பொருள் ! அடைய முடியாததையும் சாததியமில்லாததையும்
நமது மனம்த்தால் கற்பனை செய்யமுடியாது !


முதலில் விஞஞான கதைகளாக இருந்தவைகள்தான் ,கற்பனை செய்ய முடிந்ததவைகள்தான் இப்போது
விஞஞான உண்மைகளாக மாறின !
,
உண்மையில் கற்பனை என்று ஒன்று இல்லை !
நாம் ஒரு நிலையில் காப்பியம் படைக்க முனைத்து இருக்கையில்
நமது மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டு ,நமது விருப்பத்தின்
தீவிரத்திற்கு தகுந்த படி இலக்கியம் ஒன்றை ஆகாய பேரறிவில் இருந்து பெறுகிறது !


பிரபஞ்ச மனம் என்பது இதுவ்றை மனித குலம் மொத்தமும்
அடைந்த அறிவின் பதிவேடு ! அது என்றும் வளர்ந்து கொண்டே
வருகிறது ! தொடர்பு அறுபடாமல் இருக்கிறது !

வேதங்கள் பெற்றமுறை அப்படித்தான் ,அவை அதோடு முடிந்துவிடவில்லை !
என்றும் நடை பெறும்முறைதான் அது !
தொடர்ந்து நடப்பதுதான் விஞ்ஞானம் ! .


நமது சனாதன மதத்தை பொறுத்தவரை ,
விஞ்ஞானமும் , மெய்ஞஞானமும் வேறுவேறல்ல !

சிறந்தஇலக்கியமும் சிறந்த இசையும் படைக்கப் படுபவை அல்ல !
அவை பிரபஞ்ச அறிவில் இருந்து பெறப்படுவையே !
அதற்க்கு நாம் அதன் நிலையில் ( இடத்தில் ) ,தகுந்த முறையில்
தேவையான ஈர்க்கும் தீவிரத்துடன் இருந்தால் போதும் !

இனி காலம் என்பதைப் பற்றி அது என்ன என்பதை பற்றி பார்ப்போம் !
உண்மையில் காலம் இடம் ,காரணம் காரியம் இவைகள் தனித் தனியே இல்லை !
இவ்வைகளைதனியே கூறவே முடியாது ! இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் அதுஎதுவாக
இருந்தாலும் சரி எந்த வடிவில் இருந்தாலும் சரி ,
மற்ற அணுக்களை சார்ந்தே இயங்குகிறது ! அதே மாதிரி காலமும் ,இடமும் சார்புடையதே
!

ஆனால் எந்த மனிதனும் ,மற்றொரு மனிதனை எதிர்ப்பார்த்து இல்லை !
யாரும் மற்றவர் உதவியை எதிர்நோக்கி வாழ்வதில்லை ! ஒரு மயக்கத்தில் ஒரு மனிதனை வேறு ஒரு மனிதன் காப்பதாக எண்ணினாலும் உண்மையில் யாரும்யாரையும்
சார்ந்து இல்லை ! அனைவரிடத்திலும் ஒரே சமமான ஆற்றல் உடைய ஆத்மா அந்த மனிதனை வழி
நடத்த இருக்கிறது !
ஆனால் அவன் பெற்று சுமக்கின்ற கர்ம சுமையிலும்
அவனில் பதித்திருக்கும் சமஸ்காரத்திலும்
மனித்தருக்கு மனிதர் வேறு படுகின்றனர் !

காலம் என்றும் சார்புடையது ! நமது மனத்தின் மாறுதலுக்கு
தக்கபடி அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது !
நல்ல ஒரு சினிமாவை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது
முன்று மணி நேரம் போவதே தெரியவில்லை ! மூன்று மணி மூன்று நிமிஷமாக போனது
என்கிறோம் !அதுவே நமக்கு பிடிக்காத ஒன்றை
செய்யும் போது ஒரு நிமிஷம் போவது ஒரு யுகம் போவது
மாதிரி இருக்கிறது என்கிறோம் .! சிறிது நேரத்திலேயே ,
பலவருடம் வாழ்ந்ததாக கனவு கண்டு விடுகிறோம் .!

சிலருக்கு மாதம் போவதே தெரியவில்லை ! பலருக்கு
ஒவ்வரு நாளும் தள்ளுவதே பெரும் பாடாக இருக்கிறது !
நாம் ஒருமாதம் எனக் கொள்வதும் ,வேறு ஒரு மதத்தினர் ஒரு மாதம் எனக்கொள்வதும்
ஒன்றாக இருப்பதில்லை ! நாளைக்கு
24 மணி என்ற போதும் நாள் ஓடியது ! ஒரு நாளைக்கு
60 நாழிகள் என்ற போதும் நாள் ஓடியதுதான் !
காலத்தை அளப்பது நமது மனம் தான் !
காலத்தை தனியே அளப்பது முடியாது !

காலம் என்பதை தனியாக நினைத்துப்பார்ப்பதே இயலாது !
காலம் என்றால் ஒன்று முன்னால் நடந்த கடந்த காலம் ,
அல்லது அதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ் காலம் !
அல்லது இனி நடக்கப் போகும் எதிர்க்காலம் ! ஆனால் இவைகளுக்கு இடையே பொதுவானது
இவை தொடர்ந்து இருப்பது !


நினைத்துப்பார்ப்பதர்க்குள் காலம் கடந்த காலம் ஆகிவிடுகிறதே !
மனமோ எப்போதும் இனி நடக்கப் போகும் எதிர்க் காலத்தை
கடந்த காலம் ஆக்கும் வினையில் தானே மும்முரமாக இருக்கிறது !
ஆனால் இதில் தான் இருக்கிறது வெற்றிக்கான சுட்ஷமம்

அடுத்தப் பகுதியில் இடம் எதை சாரும் ? இன்னம் சற்று கர்மத்தின்
லிலைகள்சற்று பார்ப்போம் !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun May 01, 2011 5:00 am

எனக்கு புரிந்தது இதுவே ! (26)-*
பொது மனிதன் - தனிமனிதன்*



இடம் என்பதும் காலத்தைப போன்றதே !
இடத்தையும் தனியாகப பிரித்துக் கூறமுடியாது


இடம் என்பது என்ன என்று நம்மால் அறிய முடியாது !
ஆனாலும் அது இருக்கிறது !.அதை சுட்டிக்காட்ட அதன்
எல்லைகளை தான் சுட்டிக்காட்ட முடியுமே தவிர
இடம் என்பதை எதையும் சாராமல் சுட்டிக்காட்ட முடியாது .


நிறம் ,எல்லை ,பொருள் இவைகளை சாராத
ஒரு இடத்தை நாம் சுட்டிக்காட்ட முடியாது .!

இடம் மற்ற பொருள்களை சார்ந்து இருப்பது போல்
காலமும் எப்போதும் இரண்டு நிகழ்ச்சியை சார்ந்து இருக்கிறது


ஒன்று முன்னால் நடந்தது ,அடுத்தது அதைத்தொடர்ந்து நடப்பது
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடப்பது
என்ற கருத்தால் இணைக்கவேண்டும் அப்போது தான் காலம் வரும் !

இவ்வாறு காரண காரியம் என்ற இயக்கம் ஒரு வினைத்தொடர் ,
அது காலம் ,இடம் இவற்றில் இருந்து பிரிக்க முடியாமல்
இருக்கிறது ! அதேப்போல் காலமும் இடமும்
சார்பில்லாமல் தனியாக இருக்கமுடியாது !

ஒரு சுவர் மேஜை போன்ற பொருள்களைப்போல காலத்திற்கும் ,
இடத்திற்கும் இருப்பிடம் கிடையாது !
ஆனால் காலமும் இடமும் எங்கும் ஒரு நிழல் போல் சுழ்த்திருக்கிறது !

உண்மையான இருப்பு இல்லையென்றாலும் .
காலமும் ,இடமும் இல்லை எனக் கூறமுடியாது !


ஏனென்றால் இந்தப்பிரபஞ்சத்தில் அனைத்து
நிகழ்ச்சிகளும் காலம் ,இடம் என்பது மூலமாகவே நடை பெறுகின்றது !

இவ்வாறு நாம் பிறக்கும் போதே நாமுடன் கூட வரும் கர்மச்சுமைகளை அடிப்படையாகக் கொண்டு .நாம் இப்பிறவியில் ,செய்யும் செயலுக்கு நேரடி விளைவாக விளைவுகள் வராமல் ,
நம்மிடம் உள்ள கர்ம சுமையின் படி நமக்கு பலன் வந்து சேருகிறது .

மேலும் நம்முடன் வரும் சமஸ்காரம் நம்மை செய்ததையே செய்யவும் , பார்த்ததையே
பார்க்கவும் தூண்டுகின்றன ! நமது எண்ணத்தின் வகைகளை
அது தான் நிர்ணயிக்கிறது !

நமக்கு இப்பிறவியில் சேரும் செல்வம் புகழ் , மனைவி ,மக்கள்
போன்ற சில வகைப் பலன்களில் நாம் ஒன்று செய்தால் ,அது படி பலன் வராமல் அது சேர்த்து வைத்திருக்கும் சஞ்சிததில் ,இப்பிறவிக்கு என ஒதுக்கப் பட்ட
ஆகாமியத்தின் படி,நமக்கு வேறு விதமாக கூடுதலாகவோ குறைவாகவோ
பலன் கிடைக்கும் . !

நமக்கு இப்பிறவியில் பார்க்கும் , ,இருக்கும் ,தகுதிகளுக்கும்
நாம் செய்த செயல்களுக்கும் ,அதனால் வரும் விளைவுகளுக்கும்
தொடர்பு நேரடியாக இராமல் மாறுபடும் .!

ஆனால் இப்பிறவியில் நாம் கற்கும் கல்வி பெறும் ஞானம் ,
செய்யும் தர்மம் ,செய்யும் கடவுள் பக்தி இவைகளினால் பெறுபவைகளை ,
நமது ஆகாமியம் தடுக்காது ! எனவே இத்தகைய செயல்களில்
இப்பிறவியில் ஈடுபட்டால் இதனால் நாம் அதன் செயலுக்கு ஏற்ற விளைவை முழுமையாக
பெறலாம் ! நூறு சதவிகித பலனை உறுதியாக பெறலாம் !

எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இப்பிறவியை முழுமையாக
பயன்படுத்த உதவும் .வாழ்வின் productivity அதிகமாகும் ..!

மேலும் இப்பிறவியில் சேரும் செல்வம் புகழ் , மனைவி ,மக்கள்
போன்றவற்றில் என்ன கிடைக்கிறதோ அதற்குத்தான் நாம் தகுதியாவர்கள்
என நாம் மனம் தெளிவதுதான் தான் ,வாழ்வில் மன அமைதியயும் ,
சஞ்சலமற்ற தன்மையையும் வழங்கும் .

இயற்க்கை நியதியுடன் ஒத்துப் போவது தான் அறிவுடைய செயல் ,!
ஆற்றின் வெள்ளத்துடன் எதிர்நீச்சல் போடும் வீரமும் ,திறமையும்
நமக்கு இருக்கலாம் அல்லது இருப்பதாக நினைக்கலாம் .
ஆனால் இந்த முயற்ச்சியில் நமக்கு தான் சக்தி இழப்பே தவிர
ஆற்றிற்கு என்னக் குறைவு ! அது அதன் திசையில் சுகமாக
பயணிக்கிறது ! நாம் தான் அதை எதிர்த்து பயணம் செய்ய
முயன்று தோற்கிறோம் .!

இதில் நுட்பமான சில விஷயங்கள் உள்ளன .

தன முனைப்பு என்பது தேவை இல்லை என்பது அல்ல .

ஆனால் முனைப்பு முடிந்ததும் அதன் விளைவை உடனே எதிர்ப்பார்க்கக் கூடாது .

இதையே கீதை சொல்கிறது பலனை எதிர்ப்பாராதே என .

ஆனாலும் இப்பிறவியில் நாம் கற்கும் கல்வி பெறும் ஞானம் ,

செய்யும் தர்மம் ,செய்யும் கடவுள் பக்தி இவைகளினால் பெறுபவைகளை ,
நமது ஆகாமியம் தடுக்காது என்பதை நினைவில் வைத்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் .
இனி நாம் இப்பிறவியில் பிறக்கும் இடத்தில் நமது சுழலை நிர்ணயிக்கும்
நமது அடிப்படை வாழ்வை நமக்கு அமைத்துத் தரும் நமது தாய் தந்தையின்
கர்ம வினைகளுக்கும் நமக்குமுள்ள தொடர்பு ஏதாவது நம்மை பாதிக்குமா எனப்
பார்ப்போம் !

நாம் இவ்வாறு இவைகளை எல்லாம் விரிவாக அலசுவது ,நமது செயல்களின்
நமது செய்யல்களின் உண்மையான பலன்களை இப்பிறவியில் நமக்கு கிடைக்காமல் தடை
செய்யும் சக்திகள் எவை எவை என தெரிந்துகொள்ளவே .!
தடை செய்யும் சக்திகளை தெரிந்து கொண்டால் அவைகளில் இருந்து தப்பிப்பது எப்படி
என சிந்திக்கலாம் !

நாம் முன்பே பார்த்திருக்கிறோம் ., நாம் ஒவ்வருவரும் தனித்தனி ஆத்மா தான் ,!
நமக்குள் ஜன்ம ஜென்மமாக தொடர்ந்து வரும் கொடுக்கல் வாங்கல் கணக்கை
தீர்க்கத்தான் நம்மிடம் இருந்து பெறவோ அல்லது நமக்கு தரவோ நமது தாய தந்தையர்
கடமைப் பட்டுள்ளனர் . நமது ஜீவாத்மாவும் அதன் வினைப் பயனின் படியே தனது இப்
பிறவிக்கான தாய் தந்தையை அடைகிறது !

ஆனால் அவரவர்கள் செய்யும் கர்மத்தின் பலன்கள், வினைதொடராக
அந்த அந்த ஆத்மாக்களை தான் சேருமேத்தவிர , ,
அவர்களின் தாய் தந்தையர்கள் செய்யும் கர்மங்களின் பலன்கள் அவர்களின்
வாரிசுகளையோ சேராது !

தாய்தந்தயர்கள் தங்களின் ,கணக்கு வழக்கின் படி தமது வாரிசுகளுக்கு
சேரவேண்டியதை சரிவர செய்வது அவர்களின் முக்கிய சுதர்மமாகும்

அதை நிறைவேற்றிய பின் தான் அவர்கள் வரும் பிறவிக்காக
ஏதாவது செய்யது புண்ணிய பலன்களை சேர்க்க முடியும் .
எனவேதான் மகளுக்கு திருமணம் செய்யாமல் காசியாத்திரை போன்ற
புண்ணிய யாத்திரைகள் செய்யவது கூட பயன் தராது என விதித்திருக்கிறார்கள் !

சில குடும்பங்களில் பிறப்பதால் இப்பிறவியில் சில பரம்பரை நோய்கள்
வருவதற்கு வழியிருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனரே ,
அப்போது தந்தையின் கர்மத்தை மகனோ ,மகளோ அனுபவிக்க வேண்டயுள்ளதே என ஒரு வினா எழலாம் ! சில குடும்ப சாபம் தொடரும் என கதைகள் இருக்கின்றதே , என்றால் அவைகள் அறிவியலுக்கு ஒத்துவராதவையே !
எங்காவது ஒற்றை நிகழ்வாக சில அற்புதங்களும் ,விபத்துக்களும் நடக்கலாம் .ஆனால்
அது ஒரு தொடர் அல்ல !

நமது சனாதன மதத்தின் அறிவியல் ஆரம்பம் முதல் ஒவ்வரு உயிரும் வேறு வேறு எனவும்
ஒன்றில் ஒன்றில் கலப்பு இல்லாமல் தனித்தனியே உள்ளது என உறுதியாக கூறுகிறது .!
நாம் செய்யும் வினைகளுக்குத்தான் நாம் பொறுப்பு !

நமது வினையை கழிக்கவே நமது பிறப்பு !

அப்ப்டியே தான் அனைவரும் வருகின்றனர் !

இந்த பரம்பரை நோய் என்பது பொய் என மருத்துவ துறையில் முப்பது ஆண்டுகள்
கல்வி போதித்த ஒரு ஆராச்சியாளர் ஒரு அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார் !
ஆங்கிலத்தில் தான் !

தனது *The Biology of Belief* என்ற முப்பது ஆண்டு ஆராச்சி நூலில் *Bruce
H. Lipton,*
பல ஆச்சிரியமான முடிவுகளை தெரிவிக்கிறார் .

நாம் நமது உடலின் இயக்கம்கள் நமது cell களாலும் DNA வாலும் நிர்ணயிக்கப்
படுவதாக நினைத்து வந்தோம் .ஆனால் முனைவர் லிப்டன் அவைகளை ஆதாரப் பூர்வமாக
மறுக்கிறார் .நமது மனதின் ஆழ்ந்த உள்மன நம்பிக்கைகளும் , நேர்மறை எதிர்மறை
உணர்வுகளுமே DNA, CELL களை இயக்குவதாக நிருபித்துள்ளார் !

நாம் நம்பும் பரம்பரை வியாதிகள் பீடீப்பது நம்பிக்கையில் தான் நடை
பெறுகின்றது என நிரூபிக்கிறார் .

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை பிரித்து அதை வேறு ஒரு தாய தந்தையிடம் வளர்க்க
சொன்ன போது, அந்தக் குழந்தைக்கு
அது யாரிடம் பிறந்ததோ அந்த பெற்றோரின் பரம்பரை வியாதிகள் வரவில்லை !

மாறாக அது எங்கே தனது பெற்றோராக எண்ணி வளர்கிறதோ அந்தத் தாய தந்தையரின்
வழியில் வரும் பரம்பரை வியாதிகள் அதை பிடிப்பதாக அவர் நிரூபிக்கிறார் .

மேலும் நாம் இதுவரை கூறிவந்த மனம் ,ஆத்மா எனும் புற பொருளின் ஆளுமை இவைகளைப் பற்றியும் மிக புதிய ஆராச்சி முடிவுகளை தந்துள்ளார் .
அது பற்றி அவர் பேசி உள்ள பல பகுதிகள் ஒளிப்படங்களாக கிடைக்கின்றன .
ஆர்வமுள்லோரின் வசதிக்காக அவைகளை தந்துள்ளேன்.
முழுவதும் கேட்டால் பல வியக்கத்தக்க உண்மைகளை அறியலாம் .!
இது குறித்து இந்தத் தொடரின் முடிவில் தனியாக எழுத நினைக்கிறன் .

அவர் எழுதியது பற்றிய சில ஆங்கிலக் குறிப்பு இதோ !

*The Biology of Belief is a groundbreaking work in the field of New
Biology. Author Dr. Bruce Lipton is a former medical school professor and
research scientist. His experiments, and that of other leading edge
scientists, have examined in great detail the processes by which cells
receive information. The implications of this research radically change our
understanding of life. It shows that genes and DNA do not control our
biology; that instead DNA is controlled by signals from outside the cell,
including the energetic messages emanating from our positive and negative
thoughts. Dr. Lipton’s profoundly hopeful synthesis of the latest and best
research in cell biology and quantum physics is being hailed as a major
breakthrough showing that our bodies can be changed as we retrain our
thinking.*

*“Bruce Lipton’s book is the definitive summary of the new biology and all
it implies. It is magnificent, profound beyond words, and a delight to read.
It synthesizes an encyclopedia of critical new information into a brilliant
yet simple package. These pages contain a genuine revolution in thought and
understanding, one so radical that it can change the world.” -Joseph Chilton
Pearce author of Magical Child and Evolution’s End*

*Believing in The Biology of Belief*

*Most fascinating about this book is that Lipton correlates the research
findings of quantum physics and biology to conclude that quantum science,
when adapted to cell biology research confirms the essence of the law of
attraction, that humans attract circumstances based on thoughts and
emotions. Humans are not pre-programmed by DNA with respect to health,
behavior, or success. DNA may pre-dispose people, but environment, including
thoughts, can change cell behavior.*

*The most disturbing thing about this book is that it is a self published
version of a manuscript Lipton presented at a scientific conference. View
graphs accompanying the presentation are still referenced in the book, but
not included, giving The Biology of Beliefs an amateurish appearance.*

*Bruce’s presentation will explore: *

*The formerly hidden connections between biology, psychology and
spirituality *

*How environment, including your thoughts and emotions, controls the
character of every cell *

*How to become the master of your fate rather than the ‘victim’ of your
programs *

*The way to make success a self-fulfilling prophecy, rather than a
day-to-day struggle*

இது வரை நாம் மனிதர்களின் பொதுவான தன்மைகளைப் பற்றி , ஓரளவிற்கு
நமது உடல் ,நமது மூச்சு ,நமது மனம் , நாம் வருபோது கொண்டு வரும் கர்ம சுமை
,நமது எண்ணங்களை உருவாக்கும் சமஸ்காரம் இவைகளை பற்றி பார்த்தோம் .


மனிதனின் பொதுவான தன்மைகள் அனைவரிடமும் ,உள்ளது .ஆனால் இவைகளில் பெரும்பான்மை சக்திகள் இன்னும் உபயோகிக்கப் படாமலேயே இருக்கிறது !
நன் மும்பே கூறியபடி ,நமது துயரங்களுக்கு விடையும் ,விடிவும் நம்மிடம் முன்பே
தரப் பட்டுள்ளது ! நாம் தான் அவைகளை உதாசீனப் படுத்திவிட்டு
துன்பத்தில் துயரப்ப் படுகிறோம்.!


நாம் பெரிய ஒரு பொங்கி ஓடும் ஜீவ நதியின் கரையில் அமர்ந்து கொண்டு
தாகத்தால் வருந்தி வருகிறோம் .!
குவிந்து கிடக்கும் சோற்று குவியலிடையே அமர்ந்து பசியால் வாடி வருகிறோம் .!
புதைந்து கிடக்கும் வைர புதலளின் மேல் நின்று கொண்டு வறுமையை எண்ணி
வாடுகிறோம் !

.தங்களுக்கு உள்ளும் , தங்களை சுற்றியும் ,எல்லையற்ற ஆனந்த
சுரங்கம் இருக்கிறது என்பது உணரப் படாமலேயே இருக்கிறது !
நரகம் என்பது என்ன ?
அறியாமைதான் நரகம் !
அறிவுதான் ஆனந்தம் !

இனி நம் உடலைப் பற்றிய அறிவை தக்க வழியில் பயன் படுத்தி தனி மனித வாழ்வை
எவ்வாறு உயர்த்தி , எப்படி நாம் எண்ணிய படி வாழ்வது ? ,நாம் எண்ணியவற்றை
எவ்வாறு பெறுவது ? என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம் .
வாழும் போதே ஆனந்தமாக வாழ்வதும் , ஆனந்தமே செல்வத்தை ஈர்க்கும்
எளிய முறை என்பது பற்றியும் இன்னும் பார்ப்போம் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

நான் இதில் இணைப்புகளை தந்துள்ளேன் !
புதிய உண்மைகளை முனைவர் லிப்டன் மிக சுவையாக விளக்குகிறார் !
cell DNA பற்றி அவர் விளக்குவதை பற்றிய கருத்துக்களை பாருங்கள்

Biology of Belief Part 1
https://www.youtube.com/watch?v=R9JqD25rhxs&feature=related

Biology of Belief Part 2
https://www.youtube.com/watch?v=8lBpgfVgAmQ&feature=related
Biology of Belief Part 3
https://www.youtube.com/watch?v=FDygbJMT1Rc&feature=related
Biology of Belief Part 4
https://www.youtube.com/watch?

v=toH2faRugHo&feature=relatedv=FDygbJMT1Rc&NR=1v=8lBpgfVgAmQ&NR=1

குறிப்பு .
சற்று தாமதமாகவே எனது இடுகைகள் இப்போதெல்லாம் வருகின்றன .
நானும் தாமதத்தை உணர்கிறேன் .
ஆனாலும் இவ்வளையும் நான் எழுதினாலும் இன்னும் இதில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்கள் என்னுள் ஊடுருவிப் பரவவில்லை
நான் அது வயமாகவில்லை ..
நானும் சில மன சிக்கல்களில் சிக்கி உழன்று வருகிறேன் .

படிக்கும் சிலர் தரும் உற்ச்ச்சாக மொழிகளே என்னை இன்னும் தீவிரமாக
விரைந்து இடுகைகளைப் போட ஊக்கப்படுத்தும் .
நன்றி நண்பர்களே !

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 9:32 am

கலைவேந்தன் wrote: இவை காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக ஈகரையில் சேமிக்கப்ப்படுகின்றன... அதிக ஈர்ப்பு கொண்ட அரட்டைகள் காலத்தால் மறைந்துவிடும்.. இவை போன்ற வாழ்க்கை தத்துவங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்...

சுகுமாரன் ஐயா ! கலை அவர்கள் சொல்லியது 100% உண்மை! தொடர்ந்து இந்த நற் செயலை செய்து வாருங்கள்

animations



உலகம் உங்களை நினைவில் வைத்திருக்கும்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 01, 2011 11:39 am

ஒரு சந்தேகம் ...

கர்மப்பலன்கள் ... அடுத்தடுத்த பிறவியில் அதற்கான பலன்கள் ... இவற்றுக்கெல்லாம் அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளதா..?

இப்பஇறவியில் மனச்சான்று இல்லாமல் நடப்பவர்கள் சிறப்பாக வாழ்கிறார்களே... அவர்கள் அடுத்த பிறவியில் அதற்கான பலன்களை அனுபவித்தாலும் அதை உணர்ந்து அனுபவிக்கிறார்கள..?

இல்லையெனும் பட்சத்தில் அவை வீணான சிந்தனைகள் அல்லவா..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat May 07, 2011 8:38 am

அன்புள்ள நண்பர் கலை வேந்தன் ,

//ஒரு சந்தேகம் ...

கர்மப்பலன்கள் ... அடுத்தடுத்த பிறவியில் அதற்கான பலன்கள் ... இவற்றுக்கெல்லாம் அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளதா..?

இப்பஇறவியில் மனச்சான்று இல்லாமல் நடப்பவர்கள் சிறப்பாக வாழ்கிறார்களே... அவர்கள் அடுத்த பிறவியில் அதற்கான பலன்களை அனுபவித்தாலும் அதை உணர்ந்து அனுபவிக்கிறார்கள..?

இல்லையெனும் பட்சத்தில் அவை வீணான சிந்தனைகள் அல்லவா..?//

இந்த வினா மனித சமூகத்தின் ஆரம்ப நினையில் இருந்து இருந்து வரும் மிகப்பாரம்பரிய கேள்வியாகும் .இதற்க்கு பதில் சொல்லத்தான் அனைத்து சனாதன தர்மங்களும் முயன்று வருகின்றான் .
போகப் போக இனி வரும் பகுதிகளில் உங்களுக்கு சிறிது தெளிவு தானே புலப்படலாம் .இல்லையில் இந்தத்தொடரின் கடைசித் தருணங்களில் நாம் அனைத்து வினாக்களையும் ஒன்றாகவேப் பார்க்கலாம் .ஆனால் ஒன்று மட்டும் உறுதி நண்பரே .
நமது சனாதன மதமே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பிரச்னையை அயர்வின்றி ஆய்ந்து ஒரு தெளி கண்டிருக்கிறது .
விடை இங்கு மட்டுமே உண்டு .
அன்புடன்
சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat May 07, 2011 8:41 am

*எனக்கு புரிந்தது இதுவே ! (27)-*




*அடிப்படை கேள்விகள்
*
உலகம் அது படைத்தபடி அப்படியே தான் இருக்கிறது !
உலகம்படைப்பின் முழுமையடைந்ததும் தான் உலகில் உயிர்கள் தோன்ற ஆரமித்தது !
அதில் இருந்து உலகம் எந்த வகையிலும் மாறவில்லை
அதில்பிறகு எந்த புதிய மாற்றமும் இறைவனால் தோன்றவில்லை.

ஆனால் உயிர்கள் மட்டும் பரிணாமம் பல வகையில் அடைந்தன.
உயிர்களில் பல மாற்றம்கள் அடைந்து இப்போது
மனிதன் என்ற பரிணாமத்தில் உயர் நிலை அடைந்துள்ளோம்.
மனிதனின் தோற்றத்திலும் அவனது அறிவிலும் வியக்கத்தக்க மாறுதல்கள்
உண்டாயின. அவன் அறிவு வளர வளர அவன் இயற்கையை ஆள நினைத்தான்.
அவன் இயற்கையை புரிந்து கொள்ள முயற்சிதான்.
இயற்கைக்கும் அவனுக்கும் ஒரு போராட்டம் ஆரமித்தது.
அதனுடன் ஒரு போட்டிதொடங்கியது.
இயற்கையை அவன் மாற்ற ஆரமித்தான் .
ஆறுகளை அதன் போக்கை மாற்றினான் ,அதை தேக்கி வைத்தான் !
போட்டி போட்டு தான் வாழ்வதற்காக அவனுடன் வாழ உரிமைப் படைத்த
அணைத்து விலங்குகளையும் சக உயிர்களையும் கொன்று குவித்தான் !
அனைத்து மரங்களையும் வெட்டி வீழ்த்தினான் !
எது தேவை எது தேவையற்றது என்ற ஒரு நிதானம்
அவனிடம் இல்லாது போயிற்று ! முனேற்றம் என்ற
என்ற நினைப்பிலே அவன் இயற்கையில் பல மாற்றமுடியாத
மாசுகளை படைத்து விட்டு இப்போது என்ன தீர்வு
என இயற்க்கையிடமே தேடி நிற்க்கிறான் !


இத்தனைகேடுகளும் இத்தனை மாசுகளும் ,பூமியின் வெப்பமும் ,ஆகாயத்தில் ஓட்டையும்

அவனின் சுயநலத்தால் தானே விளைந்தது .

நிலத்தையும் ,நீரையும் மனிதனால் மட்டும் எப்படி மாசு படுத்த முடிந்தது ?
மற்ற எந்த விலங்கும்எமத உயிரினமும் செய்ய இயலாத இந்தக் காரியங்களை
மனிதன் எனும் சமூக விலங்கு மட்டும் எப்படி ஏற்ப்படுத்த முடிந்தது ?
மனிதன் என்னும் ஒரு உயர் சமூக விலங்கிற்க்குத்தான் மனம் இருக்கிறது.
ஆனால் மனிதன் உட்ப்பட அனைத்து விலங்குகளுக்கும் மூளை இருக்கிறது.


அனைத்து விலங்குகளுக்கும் இதயம் ,நுரையீரல் ,என அனைத்து
உறுப்புகளும் மூளை உட்ப்பட மனிதனுக்கு இருப்பது போலவே இருக்கிறது .
மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது அவனின் மனம் மட்டுமே.
மனம் என்பதில் தான் சமஸ்காரம் எனும் பூர்வ கணக்கு வழக்கு ,
அவனைத்தூண்டும் பூர்வ அறிவு பொதிந்துள்ளது. அது பிறவி தோறும் அவனை
வழிநடத்துகிறது. சில பதிவுகள் அழிகிறது ,பல புதிய பதிவுகள் உண்டாகின்றன.


மனிதன் முதலில் தோன்றிய போது எந்த சமஸ்காரமும் இராதே
எது அவனை செலுத்தியது என சந்தேகம் வரலாம்.

ஆனால் மனிதன் தோன்றியது பரிணாம வளர்ச்சியிலே தான்.
எனவே தான் வாழ பிற உயிரை மாய்க்கும் ,
பிற உயிரின் வாழ் உரிமையை பறிக்கும் தீய பதிவு ஒவ்வொரு
மனிதனிடமும் ஆழ பதிந்துள்ளது.

இன்னும் அவனது விலங்கு மனம் மாறாத பல மனித மனங்கள்
இவ்வுலகில் உண்டு. அந்த தீய சமச்காரத்திலேயே
உழன்று அதேப் போல் செயல்களை செய்து அது மாதிரி
பதிவுகளையே மேலும் மேலும் சேர்த்துவரும்
மனித மனங்கள்தான் இன்னும் இந்த உலகில் அதிகம்.


நமது முனிவர்களும் சித்தர்களும் இவ்வுலகைப் பற்றியும் ,
அதன் நிகழ்வுகளைப் பற்றியும் நுணுக்கமாக ஆராய்ந்த போது
இரு விஷயங்கள் அவர்கள் கண்டனர் ஒன்று மெய் பொருள்
அடுத்து தோற்றம் மெய்ப் பொருள் மாறாத ஒன்று .
எல்லாவற்றையும் அது மாறச்செய்து வருகிறது .
இந்த உலகத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது .
அது மட்டும் மாறவில்லை . அது நிரந்தரம் .
அது சாஸ்வதம் . அதற்க்கு அழிவில்லை.


சத என்பது சத்தியம் அது என்றும் இருப்பது
அதைப்பற்றி அறியும் போது அது சித் ஆகிறது
அதை அறியும் போது உண்டாகும் அனுபவம்
ஆனந்தம் . அத்தகைய சத சித் ஆனந்தமே
பரம்பொருள் !

அதை உணரும் ஒவ்வொருவரும்
அடைவதும் அத்தகைய நிலையே !


தோற்றத்திலே இருவகை உண்டு
சேதனம் அசேதனம் !
அசேதனம் என்பது சடப் பொருள் !
சேதனம் என்பது உயிர்ப் பொருள் அனைத்து ஜீவ ராசிகள்
உலகம் இவ்விரு விதங்களால் ஆனதுதான் .


எந்தப் படைப்பு அதிக புலன்களை தாங்கி வருகிறதோ
அது ஞான சேகரிப்பில் ஈடுபடுகின்றன என்கிறது உபநிஷதம் !


பரிணாம வளர்ச்சியில் மனிதன் தான் அதிக புலன்கள் உள்ளவன் .
அவன் வெளிப்புறம் செல்லுமாறு உள்ள புலன்களை
உட்ப்புரமாக செலுத்தி உள்ளே நோக்க
அவனிடன் உள்ளே புதைத்துள்ள பரம் பொருள் புலனாகின்றது .
சத்சித் ஆனந்தத்தை உணர்கிறான் !


விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக மனிதன் மின்சாரம் ,புவியீர்ப்பு
முதலியவைகளை கண்டு அவைகளை தனது வாழ்க்கைக்கு
பயன்படுத்தி வருகிறான் . ஆனால் மின்சாரம் என்றால் என்ன
என்ற கேள்விக்கு இன்னும் அவனளால்முழுமையான பதில் சொல்ல முடியாது .
சுதந்திரமான மின் அணுவின் ஓட்டமே மின்சாரம் எனப்படும் .
ஆனால் மின்அணு ஏன் ஓடுகிறது , ஏன் அதற்க்கு சுதந்திரம் ?
இதை யார் செய்தது ? என பல கேள்விகள் இன்னும் உண்டு ?
இப்படியேதான் பல அடிப்படை கேள்விகள் இன்னும் மனிதனுக்கு தீரவில்லை .


அதை வெளியே தேடுவது விஞ்ஞானம் !
அதை அகத்தில் நம்மிடம் தேடுவது மெய்ஞானம் !


மனித மனதிற்கு முன்னால் வைக்கப் பட்டிருக்கும் மிகப் பெரிய புதிர்
வாழ்க்கை என்பது என்ன ? என்பது தான் .

ஏன் வாழ்கிறோம் ? எதற்க்காக வாழவேண்டும் ?
அதைத்தேடித்தான் இத்தனை காலமும் அவன் வாழ்த்து வருகிறான் !
ஆமாம் ! வாழ்கை என்பது தான் என்ன ?
அதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம் !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:51 am

அருமை நண்பரே... மெய்ப்பொருள் மாயை என்பதெல்லாம் கூட நம் மனத்தின் மாறுபட்ட நிலைகள் தானே..

எனக்கு மாயையாகப்படும் பணம் ஒருவருக்கு மெய்ப்பொருளாகவும் ஒருவருக்கு மெய்ப்பொருளாகப் படும் சித்த ஞானஙக்ள் மற்றொருவருக்கு வெறும் மாயையாகவும் தென்படவும் மனம் தானே காரணம்..?

இதை ஒட்டித்தான் அகம் பிரமாஸ்மி என்றார்களோ..

அரிய சிந்தனைகளைப் பகிர்தலுக்கு மிக்க நன்றி நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக