புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
68 Posts - 43%
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
2 Posts - 1%
சிவா
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
429 Posts - 48%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
304 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
29 Posts - 3%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Fri Mar 11, 2011 10:45 pm

நண்பரே உங்கள் ஞான கவிதை சேவையை கண்டு உலகம் உங்களை உற்று நோக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அடியேன் கருத்து,மேலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கு எடுத்து செல்லும் ஈகரை தமிழ் களஞ்சியதுக்கும் அடியெனின் நன்றி.
ஆர்.கண்ணன்
சென்னை


gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Fri Mar 11, 2011 11:02 pm

இரவு வணக்கம் நண்பரே

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Mar 14, 2011 10:31 am

இந்தத் தொடரைப் பிடித்துப்பாராட்டும் நந்த்பர்களுக்கு நன்றி !
ஒரு சிறிய இடைவெளி ஏற்படுகிறது.நான் ஒரு பத்து நாளோ ரிஷி கேஷ் செல்ல எண்ணீருக்கிறேன்
நண்பர்கள் பொருத்தருளுமாறு வேண்டிக்கொல்கோறேன் .
சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Mar 14, 2011 10:41 am

நண்பர்களே ,
நான் சென்ற ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை என்றபிரதிநிதியாக டஞ்சை டம்ஃஜ் பல்கலைக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ,
தமிழ் நாடு முழுவதும் ஓலைச் சுவடிகளை தேடியெடுத்தேன் .
சென்ற ஆண்டு மட்டும் ஐந்து மாதங்கள் எய்த களப்பணியில் சுமார் 89,000
ஓலைகள் சேகரம் செய்யப்பட்டு ,தற்போது தஞ்சையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது .
இதர்க்காக தமிழ் மரபு அரக்கட்டளையில் துணை தலைவர்ஜேர்மனியை சேர்ந்த சுபாஷினிக்கும் ,எனக்கும் ஒரு பாராட்டுக் கூட்டமும் கருத்தரங்கமும் தஞ்சையில் 3/3 /11 ஆண்ட்ரூ நடைப் பெற்றது .
வரும் 26/3 ஆண்ட்ரூ எனக்கு சென்னையில் சாதனையாளர் என்ற விருது வழங்கி பாராட்டுகின்றனர் .
இந்த மகிழ்வை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
பகிர்ந்தாள் பாதியாகாது இரட்டிப்பு ஆகிவிடும் .
நன்றி நண்பர்களே
அன்புடன்
சுகுமாரன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 14, 2011 11:40 am

நீங்கள் உண்மையில் சாதனையாலரே உங்கள் தமிழ் பணியும் ஆன்மீக பணியும் சிறக்கவும் மென்மேலும் கீர்த்தி அடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் தங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 23, 2011 11:58 am

எனக்கு புரிந்தது இதுவே ! (22)-*

*மேலும் மேலும் அனுபவம் !*

இந்த உலகில் மனதைவிட ஆச்ச்சிரியமான ஒரு வஸ்து இருக்கிறதா ? சந்தேகமே !
பிரபஞ்ச ரகசியத்தின் மொத்த அறிவும்அதன்
ஆழத்தில்தானே புதைந்துக் கிடக்கிறது !


தியானம் செய்ய விருபுபவர் ,இந்த மனம் எவ்வாறு
செயல் படுகின்றது ?என்பதை முதலில் விரிவாக அவசியம்
தெரிந்து கொள்ளவேண்டும்

இந்த உடலுக்கு நாம் சொந்தக்காரர் என்றாலும்
இந்த மனதிற்கு நாம் மட்டுமே சொந்தக் காரர் இல்லை !
இந்த மனம் ஜன்ம ஜன்மமாக யார்யாரோ உருவாகியது !
இப்போது நம்மிடம் வந்திருக்கிறது ! பல பெயர் உடைய பலரால் உருவாக்கப்பட்டது

நம்மிடம் என்றால் இந்த ஜன்மத்தில் இந்த உடலில் இருக்கும் ஆத்மாவைத் தான் குறிக்கும் .

இந்த ஜீவாத்மாவும் இதற்க்கு முன் பல உடலைக் கண்டது !
மனதின் பதிந்துள்ள சமஸ்காரங்களின் படி
பெரும்பாலும் வாழ்ந்து ,மீண்டும் சில பதிவுகளை
அதேமாதிரியே சேர்த்துக்கொண்டு ,மீண்டும் மீண்டும்
இந்த பிறப்பு இறப்பு வட்டத்தில் இருந்து வருகிறது !

நமக்கு துணைப் பாத்திரமாக நமது வாழ்வில் நாம்
சந்திக்கும் நண்பர்கள் மனைவி மக்கள் ,தாய், தந்தை
பிற உறவினர் என நம்முடன் கொடுக்கல் வாங்கல்
உறவு உள்ள உயிர்களும் நமது சுழலில் பிறந்து வாழ்ந்து வருகின்றனர் !
இதையே தொட்ட குறை விட்ட குறை எனப்படும் .


இதில் நாம் வளர்க்கும் மிருகங்களும் ,
நம்மைச்சுற்றி உள்ள ,தெரு பிராணிகளும் அடங்கும் .
நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிரினமும் நம்முடன் தொடர்புடையது தான் !


நம்மிடம் எதோ ஒன்றை கொடுக்கவோ அல்லது பெறவோ ,
இந்த சிக்கலான கணக்கைத்தீர்க்கத்தான் ஒவ்வொருவரும் வருகிறார்கள் !
அவ்வாறு செய்ய அவர்கள் மனதில் பதிந்துள்ள உள்ள சமஸ்காரம்
அவர்களை தூண்டுகிறது ! சிலரை நமக்கு பார்த்ததும் பிடிக்கிறது !
சிலரை பார்க்கும் போதே பிடிக்கவில்லை !
சில ஊரை நாம் முதலில் பார்க்கும் போதே முன்பே பார்த்த ஞாபகம் வருகிறது ! சில
பாடம் படித்ததும் புரிகிறது ! சில சுட்டுப் போட்டாலும் வருவதில்லை !
சிலர் என்ன எழுதினாலும் அது இலக்கியத்தரத்தில் இருக்கிறது சிலருக்கோ தெரிந்ததை
தெளிவாக சொல்லவே திண்டாட்டம் !
இவ்வளவும் நமது மனத்த்தில் உள்ள சமஸ்காரம்
தான் காரணம் ! அது படுத்தும் பாடு ! அப்பப்பா !

நாம் நமது சமஸ்கார பதிவில் இருக்கும் கர்ம பீஜத்த்தின்படி மீண்டும் ,பழைய
மாதிரி செய்யல்களையே செய்கிறோம் ! நல்லவைகளை செய்யது நமது கணக்கை
நாம் தீர்க்கிறோம் என்றால் சரிதான் ! ஆனால் முன்பு செய்து நமது இப்பிறவியின்
துயரங்களுக்கு காரணமாக தீய சமஸ்கார புதை பதிவும் சேர்ந்தே வருகின்றதே !

மீண்டும் அதே தீய செய்யலை செய்ய சமஸ்காரம் தூண்டுகிறதே !
மீண்டும் மீண்டும் நாம் அதே தீய செய்யலை செய்யது மீண்டும் சேற்றை
பூசிகொள்கிறோமே ! இதை புரிந்து கொண்டு இந்த சமஸ்கார்தின்
கரபீஜதில் இருந்து எப்படி தப்புவது ! மீண்டும் அதே தீய பதிவு மீண்டும் பதியாமல்
எவ்வாறு பார்த்துக்கொல்ல்வது என்பதை i சென்ற பகுதியிலும்
இனி வரப் போகும் பகுதியிலும் சற்று விரிவாக ஸமகாரத்தைப் பற்றி
புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் !

இதில் கலந்து வரும் வட மொழி வார்த்தைகள் சிலரை சற்று
மிரட்டுவது போல் இருக்கலாம் ! ஆனால் இதில் மேல் புரிதலுக்கு
நாம் போக நினைக்கும் போது ஒரே மாதிரி
வார்த்தைகளை பயன்படுத்துவது ,
ஆதியில் இருந்து இன்றுவரை தொடரும் வார்த்தைகளை
நாம் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வது ,
மேலே இன்னும் ஆழமாக செல்லும் போது
எந்த குழப்பத்தையும் உண்டாக்காது !

இந்த சமஸ்காரப் பதிவில் இருக்கும் விந்தையே
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்
நல்லதும் ,தீயது எது ஆனாலும்
தொடர்ந்து பதிவு ஆகிவருகிறது !
நல்லவைகள் செய்யதால் கெட்டவைகள்
கழிந்து போகும் என்பது கிடையாது ! முடியவும் முடியாது !


கர்மங்கள் அனைத்தும் நிச்சயம் ஒரு பதிவை பெறும் அது கர்மாசயம்
அந்த செயல் மூலம் கிடைக்கும் அனுபவம் ஒரு நினைவை பதிக்கும்
அது தான் வாசனை !

இதைத்தான் ஓஷோ விலங்குகளில் தங்கமாக இருந்தாலும் ,
இரும்பாக இருந்தாலும் விலங்கு விலங்குதானே என்கிறார் !
செயல்கள் அவை நல்லவை ஆனாலும் தீயவை ஆனாலும்
ஒரு பதிவை பெற்றே தீரும் ! நல்லவை மீண்டும் நல்லது செய்யத்தூண்டும் ,கெட்டவை
மீண்டும் கெட்டவை செய்யத்தூண்டும் !
இதனால் பிறவி வட்டத்தை நிச்சயம் ஏற்ப்படுத்தும் !
இதில் செயலற்று இருத்தல் என்ற பேச்சே எழக்கூடாது !

செயலாற்றும் இருக்க இயலாது !

கர்மம் புரிதலே ஒரு
யோகமாக பயிலும் யுக்தி புரியவேண்டும் !

நமது தொடர்ந்து வரும் பழங கணக்கான கொடுக்கல் வாங்கல் படியே சிலரை ஏமாற்றுகிறோம்
சிலரிடம் ஏமாந்து போகிறோம் .! எதற்கும் நமக்கு காரணம் புரியாமல் புலம்புகிறோம் !

ஏன் எனில் ஏமாறுவதற்கும் ,அதற்கான காரணம் நடைபெற்றதற்கும் இடையே காலம் எனும்
பெரும் இடைவெளி உள்ளது !
இந்த இடைவெளி புரியாததால் நடைபெறும் சம்பவங்களின் தொடர்பு நமக்கு புரிவதில்லை !

ஆனால் நடை பெறும் ஒவ்வரு காரியத்திறிக்கும் நாம் தகுதியானவர்கள்
(deserve ) தான் ! இதில் எந்த குழப்பமும் வேண்டாம் !
இதில் குறையும் வேண்டாம் ! இதில் நமக்கு தெளிவுஇருந்தால் மனதில்
நமக்கு அமைதி உண்டு ! எதற்கு நாம் தகுதியாக முன்பே இருக்கிறோமோ
அதையே இப்போது பெறமுடியும் !இப்போது நாம் செய்யும் செயல்கள் நமது கணக்கில் சேர
சற்று கால தாமதம் ஆகும் ! இதில் காலம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் !


ஆனால் காரண காரியம் பற்றிய கர்மக் கணக்கு ம்ட்டும்
துளியும் பிசகாமல் இயங்கி வருகிறது !.நாம் ஒவ்வொரு பிறவியிலும்
பெறுகின்ற சிறிதளவு ஞானத்தால் ,நாமாக சில வழிகள் ஆன்மீக வழியில்
சென்று சிறிதளவு ,நமது சமஸ்காரத்தின்வலித்து
வந்து நடக்கும் செயல் பாடுகளில் இருந்து தப்பலாம் .
சிறிதாவது சமஸ்காரங்கள் குறைக்கலாம் .!


இதன் மூலம் நாம் பிறந்த இந்த பிறவியின் பயனை நாம் சிறிதளவாவது பெற்று
,ஓரளவிருக்கு ஒரு படி மேலே செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் .!

இதில் சமஸ்காரத்தில் நினைவு என்பதை உருவாக்கும்
வாசனைப் பற்றியும் சற்று அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும் !
செய்யும் காரியங்கள் கர்மபீஜதை உருவாக்கி காரியங்களை
செய்யத்தூண்டும் ! எனவும் அந்தக் காரணங்களில் பெறும் அனுபவம்
வாசனை என்ற பதிவாகி ,அந்த செய்யலின் நினைவை அத்தகைய
சுழ்நிலை வரும்போது உண்டாக்குகிறது என முனமே பார்த்தோம் .

இதில் அனுபவம் என்பது என்ன ?

அது நாம் செய்யும் செய்யலால் நாம் பெற்ற
ஒருவகை இன்பமோ துன்பமோ அல்லது பயமோ தான் அனுபவம் !
இந்த அனுபவத்தை அறிவாக மாற்றவேண்டும் .

அதாவது இந்தசெயலை செய்தால் இன்பம் உண்டாகும் அல்லது துயரம் உண்டாகும் என்று தெளியவேண்டும் .

அது தான் அனுபவத்தால் பெறும் அறிவு !

இப்படி அனுபவம் அறிவாக மாறும் போது மட்டுமே ,அனுபவம் பெறுவது நிற்கும் !
அது வரை அனுபவம் பெற்றுக்கொண்டே தான் இருப்போம் !
அனுபவம் பெறுவதே வாழ்கையாகி விடும் ! வாடிக்கையும் ஆகிவிடும் !
அனுபவத்தால் என்ன பயன் ! அது மீண்டும் வாசனையைத்தானே தூண்டும் !
அதில் இருந்து பெறும் அறிவைப் பெற்றுவிட்டால் மேலும் அதே அனுபவம்
மீண்டும் மீண்டும் கிட்டாமல் தப்பித்துவிடலாம் !
இந்த அனுபவம் ஒரு உணர்ச்சியின் வடிவில் அல்லது உருவின்வடிவில் இருக்கும் என
புரிந்து கொள்வது இப்போது போதும் .! பின்பு இதை மேலும் பார்ப்போம் .

அன்புடன்

அண்ணாமலை சுகுமாரன்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:53 pm

இத்தனை நாள் எங்கு சென்றீர்கள் நண்பரே..

வாழ்க்கையில் பலமுனைகளில் நமக்கு உதவும் பல வழிகாட்டுதல்கள் நிறைந்த இக்கட்டுரை என்னை மிகவும் ஈர்த்தது நண்பரே..

தொடருங்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Apr 01, 2011 7:59 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (23)-*

*விதியும் , ஸமஸ்காரமும் ! *

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
ஒரு எதிர்வினை நிச்சயம் உண்டு !
நெல் போட்டால் நெல் தான் முளைக்கும் என்பதை நம்பினால் ,
காரண காரியத்தையும் நம்ம்பிதான் ஆகவேண்டும் !
இதை நம்பாவிட்டால் வாழ்வில் நடைபெறும்

பலசம்பவங்களின் தொடர்பு புரியாமல் ,பயணம் குழப்பம் நிறைந்ததாக ஆகிவிடும் .

நமது வாழ்வில் நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் நிச்சயம்
ஒரு பின்புலம் நிச்சயம் இருக்கும் !
காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை !

இந்த விளைவின் பயனை சித்தர்கள் வினைப் பயன் என்பார்கள் !
ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் கூடவே ஒரு கண்ணுக்குத்தெரியாத
வினைப்பயன் தொகுதி எனும் மூட்டை உண்டு !

உதாரணமாக நாம் ஒருவரைக் கன்னத்தில் கோபத்தில்
அடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் ! அவர் உடனே
உங்களை திருப்பி அடித்து விட்டால் உடனே உங்களின்
அந்த வினைப் பயன் உடனே முடிந்துவிடுகிறது !
கர்மக் கணக்கு அப்போதே முடிகிறது !
இரண்டு பேருக்கும் சமஸ்காரம் மட்டும் உண்டு !
அது அடிக்கும் சமஸ்காரம் !
அது கர்ம சுமையாக உங்கள் கணக்கில் சேருவதில்லை !

ஆனால் திருப்பி அடித்தவருக்கும ஒரு சமஸ்காரம்
எனும் பதிவு கிடைத்துவிடுகிறது !
அந்த சமஸ்காரம் அவரை கர்மபீஜமாக இருந்து
அடிப்பது என்ற செயலை
அந்த மாதிரியான சுழல் வரும்
போதெல்லாம்செய்து மேலும் மேலும் அடிக்கத்தூண்டும் .!


மேலும் நினைவாக அந்த வாசனை
கன்னத்தில் வலி வரும் போதும் ,வேறு
யாரையாவது வேறு யாரோ அடிப்பதை
பார்க்கும் போதும் ,இவருக்கும்
இந்த அடிக்கும் ஆசை தன்னை அறியாமல் வரும் .
இவர் அடிப்பதில் ஒரு சந்தோசம் காண ஆரமிப்பார் ,


ஏனெனில் இவரிடம் இவர்முன்பு ஒருமுறை அடித்ததால்

படிந்த சம்ஸ்காரத்தின் மூலம் விழுந்துவிட்ட கர்மபீஜம் ,விதை அவரிடம் இருப்பதால் மேலும் மேலும் அவர் அடிக்க எண்ணுகிறார் .

மீண்டும் அடிப்பதால் மீண்டும் ஒரு கர்மபீஜம் பெறுகிறார் .

எனவே விளைவது அவர் மனது ஒரு வன்முறைக் காடாக மாறுவதே !

முடிவு அவருக்கு வேறு யாரோ இவரை நைய புடைத்து
இவருக்கு வன்முறையில் இருக்கும் ஆர்வத்தை
பயம் எனும் வலிய உணர்ச்சியினால்
போக்கும் வரை தொடரும் !


அதே சமயம் .மேலும் மேலும் சமஸ்காரமும்
பெருகிக்கொண்டே இருக்கும் .!

ஒருவேளை அந்த அடிப்பட்ட மனிதர் ஒரு பண்பட்ட
ஜீவனாக இருந்து ,அடிபட்டதும் ஒன்றும் பேசாமல்
அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டால் ,
அவர் இந்த சமஸ்கார வட்டத்தில் இருந்து விடுப்பட்டுப் போகிறார் !
ஆனால் உங்களுக்குத் தான் நீங்கள் செய்த வினையின் பயன்
தொடர ஆரமிக்கும் .! நீங்களும் யாரிடமாவது காரணம் இல்லாது
கன்னத்தில் அடிவாங்கும்வரை அது தொடரும் !

இத்தகைய வினைப் பயன் மூன்று வழியில் வெளிப் படும்
என சித்தர்களும் ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள் .!

அவை சஞ்சிதம் எனும் முறப பிறவியில் செய்யத வினையில் ,இன்னும் அந்த வினையின் பயனை அனுபவிக்காமல் எஞ்சி நிற்கும் கர்ம சுமை !

பிரரப்ப்தம் என்பது வினைப் பயனில் இந்தப் பிறவிக்கு என பங்கீடு செய்யப் பட்ட
வினைகள் ! இந்தக் காரியங்கள் இந்தப் பிறவியில் உங்களுக்கு நடந்தே தீரும் !
அது சஞ்சிதத்தின் ஒரு பகுதியாகவோ ,அல்லது முழுமையாகவோ இருக்கலாம் !
இதைத்தான் பேச்சு வகையில் உன் பிராப்த்தம் இதுதான் எனக் கூறுகிறோம் .!

ஆகாமியம் என்பது இந்தப் பிறவியில் செய்து ,அடுத்தப் பிறவிக்கு என சேரும் சுமை !

இவ்வாறு நாம் இப்பிறவியில் பிறந்திருக்கும் போது ,
நாம் இதுவரை செய்த கர்மங்களின் பயன் ,
அதாவது நல்ல கர்மம் செய்யதால் நல்லது ,
தீய கர்மம் செய்தால் தீயது ஒரு சுமைபோல்
அதன் வினைப் பயனை நிறைவேற்ற காத்திருக்கிறது .!
இவ்வாறு நாம் இப்பிறவியில் அனுபவிக்கப்போகும்
செயல்களில் பெரும் பகுதி நமது பூர்வ வினையின்
காரணமாக நமக்காக காத்திருக்கிறது !

அதில் கழியாமல் மீதி இருக்கும் வினைப்பயன் சஞ்சிதம்
இபபிறவிக்காக காத்திருக்கும் வினைப்பயன் பிராரப்த்தம்
இந்த பிறவியில் நாம் செய்யும் நல வினை ,கெட்ட வினைகளின்
தொகுப்பாக அடுத்தப் பிறவிக்கு காத்திருக்கும் வினைப் பயன்
ஆகாமியம் !

இதனால் தான் நல்லது மட்டும் செய்யும்
சிலருக்கு ஏன் நல்லது மட்டும் நடப்பதில்லை !
சிலசமயம் எதிர்பாராத துயரமும் வருகிறதே ?
எனும் தீராத சந்தேகம் வருகிறது !
உண்மையில் அவர்கள் பெறும் பலன்கள்
பிரார்ப்ப்த்தம் எனும் வினைபயன் படி என்றோ
செய்ததற்கு இப்போது பலனை அனுபவிக்கிறார்கள் !
இதிலும் ஒரு வரிசை கிராமம் உண்டு !

இவ்வாறு வினைப் பயன்களுக்கும் , ஸமஸ்காரத்திர்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவே இதை இப்போது பேசவேண்டி வந்தது !
சமஸ்காரம் ஒரு மனதின் பதிவு !
அது இந்தப் பிறவியில் நடக்கப் போகும்
செயல்களில் நம்மை நமது பூர்வ கர்மபீஜம் என்னும் செய்ல்

ஊக்கம் ஆன ஆசையாகவோ , அல்லது வாசனை எனும் நினைவாகவோ ,
நமக்கு பூர்வ ஜன்மத்தில் செய்து பழக்கமான செயல்களியே மீண்டும் செய்யத்தூண்டும்
ஒரு புதைப் பதிவு !

ஆனால் சஞ்சிதம் ,பிரரப்ப்தம் ஆகாமியம் என்பது
நாம் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின்
பிரதிபலனான பெறும் வினைப் பயன் ஆகும் !
நாம் புண்ணியம் செய்திருந்தால்
பலருக்கு உணவுகொடுத்து பசிப்பிணி ஆற்றி இருந்தால் ,
இப்பிறவியில் நம் பசி ஆற்ற பலர் அவர்களது
கர்மக் கணக்கு தீர்க்க உணவுடன் காத்திருப்பார்கள் !
உபசரிக்க பலர் இருப்பார் !

நாம் சென்ற பிறவியில் பாவம் பல செய்து
காரணம் இல்லாமல் பிறரை துன்புறித்தினாலோ ,
அல்லது செய்யத வேலைக்கு கூலிதராமல் இருந்திருந்தாலோ ,
அத்தகயத்துன்பத்தை நாமும் அனுபவித்துதான் தீரவேண்டும் !

இந்த சமஸ்காரத்திர்க்கும் , கர்ம வினைப் பயனின் ,
விதி எனப் படும் வலித்து வந்து ஊட்டும் முறைக்கும்
உள்ள தொடர்பை சற்று சரிவர புரிந்து கொள்வது
இனி நமது வாழ்வில் நடை பெறும் காரியங்களில் ஸமஸ்காரத்தை வெல்வது எவ்வர்று ?இந்த
விதி எனும் வினைப் பயனின் கொடிய பிடியில் இருந்து தப்ப இயலாதா? என்பதையும்
விரிவாக பார்க்கும் போது , உதவியாக இருக்கும் !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 12, 2011 7:36 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (24)-*

*காரண காரியத்தின் கதை !*

இந்த கர்ம வினைப் பற்றிய கணக்குகள் ,சமஸ்காரம்
இவைகளிப் பற்றி முந்தையப் பகுதியில் கூறியது சற்று மயக்கம்
தருவது போல் இருக்கும் .படிப்பதற்கும்சுவை கொஞ்சம் குறைவாகக் கூட இருந்திருக்கும் . !
ஆனால் சுவை தருவது அனைத்தும் நல்ல பலன் பலன் தாரா !
சற்று சிரமப்பட்டு தான் சுகத்தையும் ஞானத்தையும் பெறமுடியும் .

ஊட்டியின் எழிலைக் காண வேண்டும் ஆனால் மலை ஏறித்தான் ஆகவேண்டும் !
மலை ஏறுவது சற்று சிரமத்தைதான்தரும் ! ஆனால் சிரமம் பார்த்தால் சிகரத்தை அடைய முடியாது ! சிறந்ததை பெறவும் முடியாது !
படிப்பதற்கு இன்பம் தரும் இலக்கியம் மட்டுமே ஞானத்தை தராது !
இன்பம் தருவது மட்டுமே நூல்களின் பயனல்ல !


இந்த ஞானம் பெறும் வழிமுறையிலேயே முதன்மையானது
மனம் என்றும் புலன் வழி செல்லாமல் அறிவு வழியில் இருப்பதுதான் ! புலனடக்கம் மட்டும் தான் !

புலன்கள் எப்போதும் நம்மை வெளியே , வெளி இன்பத்தியே செலுத்தும் !
இன்பம் என்னவோ வெளியில் இல்லை என்பது தெரிந்ததும் ,
நாமோ நம்மை உள்ளே நோக்கும் வழியில்
உண்மையைத் தேடி இப்போது பார்க்க முயன்றுக் கொண்டு இருக்கிறோம் !


கீதை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறது !
இருப்பினும் அதை எந்த காலத்திலும் அனைத்து மக்களும் படிக்கவோ அதன் படிப்பினையை உணரவோ முயன்றதில்லை !
அனைத்து மக்களும் படித்தும் உடனே தெளிந்ததில்லை !
கீதை என்று ஒன்று இருப்பதாக தெரியவே பல பிறப்புகள் வேண்டும்
படித்துப் புரிந்து கொள்வது என்பது எப்போதோதான் நடை பெறுகிறது !
கீதை என்னவோ எப்போதும் இருந்துதான் வருகிறது !

நூல்நிலையத்தில் ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் ,வகை வகையாகஇருக்கத்தான் செய்கின்றன !
மனிதர்களிம் எத்தனை வகைகள் அத்தனை வகை புத்தகங்கள் !
புதிது புதிதாக வரவுகள் தொடரும் ! அவரவர்க்கு பிடித்ததை
அவ்வரவர் படிக்கின்றனர் ! அனைவரும் கீதையை தேடுவர் எனக் கூறமுடியாது !

வகை வகையாக இருக்கும் புத்தகங்களை தாண்டிய சிலரே
கீதை மாதிரி புத்தகத்திலும் என்ன இருக்கு என நோக்க வருகின்றனர் !
இந்த நோக்கம் வரவே ஜன்மங்கள் பல ஆகிவிடுகின்றன !
இங்கு நான் கீதை என்றுக் குறிப்பிடுவது ஞான நூலை குறிப்பிடவே !

அவரவர்க்குத் தனித்தனி கீதை போன்ற நூல்கள் உள்ளது .

எல்லோருக்கும் போதிமரத்தின் கீழ அமர்ந்தால் ஞானம் வந்துவிடுமா ? அவரவர்க்கு வேறு வேறு மரம் போதி மரம் ஆகும் .

இந்தக் கர்மக் கணக்கையும் ,ஸமஸ்காரத்தையும் சற்று சரிவர புரிந்து கொண்டால் , அதன் மாய வலையை நாம் சமாளிக்கும் வித்தை புலப் படும் !

எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், ‘இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,என
அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.விளங்கும்
ஆன்மா எனப் படும் பேரறிவாகும் !
இதை தெரிந்துகொண்டால்நாம் உணரத்தேரிந்து கொண்டால் , அடைய முடியாது எதுவும் இல்லை என்று ஆகிவிடும்

பொதுவாக நம்முடைய அறிவு எனப் படுவது படிப்படியாக உயர்ந்து சென்று அதன் உயர்ந்த நிலைக்கு செல்லும் பாகுபடுத்தலே ! தனியாக ஏதாவது நடந்தால் , ஏதாவது நிக்ழ்ச்சிகள் தொடர்பின்றி துண்டுதுண்டாக இருந்தால் அது அறிவு பூர்வமானதுஎன நாம் ஒப்புக்கொள்வதில்லை !

ஒரு ஆப்பிள் கிழே விழுந்தால் நமக்கு திருப்ப்தியில்லை !
எப்போதும் ஆப்பிள்கள் கிழே விழுந்தால் தான் நமக்கு திருப்தி !
அதே நிகழ்ச்சி திருப்பித்திருப்பி நடை பெறவேண்டும்
அப்போதுதான் அதை நியதி என்போம் ! அதை ஒரு விதியாக்குவோம் !

அதுவே விஞ்ஞானம் என்போம் .
அதற்க்கு புவியீர்ப்பு விசை எனப் பெயரும் கொடுப்போம் !

இதில் உள்ள உண்மை என்னவென்றால் தனி கொள்கையை
விஞானம் ஏற்பதில்லை ! பொதுக் கொள்கையை திருப்பித்திருப்பி
நடப்பதைத்தான் ஒரு நியதி என நம்பி அதற்க்கு
ஒரு விதி எனவும் பெயர் கொடுக்கிறது !
அது அந்தப் பொருளின் இயல்பை கொண்டே
அந்த இயல்பின் அடிப்படையிலேயே
விளக்கப் படுவதால் அந்த விதியை நம்புகிறோம் !

ஆப்பிள் கிழே விழும் இயல்பைக்கொண்டே
அது ஏன் விழுகிறது என அதற்க்கு ஒரு விசையை
புவியீர்ப்பு விசை பெயர் எனப பெயர் கொடுக்கிறோம் !
அதை நம்புகிறோம் ! புறக்காரணகளால் விளக்கப் படுபவை
விஞான ரீதியில்லை என நம்புகிறோம் !

பொருளுடைய இயல்பின் அடிப்படையில் அமைந்த விளக்கம் தான்
விஞஞான ரீதியான விளக்கம் !

அது மாதிரியே உலகில் நடை பெறும் காரியங்கள் எல்லாம் ஒரு நியதியில் இருந்தால் தான் அது அறிவு பூர்வமானது ! எதோ தொடர்பில்லாமல் ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு மாதிரியாக நடந்தால் அது எப்படி அறிவு எனும்
நியதியில் பாகுபடுத்தலில் உட்ப்படும் ! .
அது எந்த நியதியிலும் இல்லை என்றால் அது எந்த விதியிலும் அடங்காதே ?

அப்போது நமது வாழ்வைக் கட்டுப் படுத்தும் விதிதான் என்ன ?
அதை யாரும் கண்டுபிடிக்காமல் அனாதியாக வருவதால்
அதற்க்கு ,நியூடன் எடிசன் என யார் பெயரும் , எந்த ரிஷியின் பெயரும் இடப்படாமல்பொதுவாக மக்களால் விதிஎன அழைப்படுகிறது !

அந்த விதி எதைப் பொறுத்து இருக்கிறது ?
அதுவே காரண காரியம் !


ஒரு காரியம் என்பது ஒரு காரணத்தின் மாறுபட்ட வடிவம் தான் !
காரணத்தின் ஒழுங்கு படுத்தப் பட்ட வடிவமே அந்தக்
காரணமே ---காரியத்திற்கு அடிப்படை என்பதுவே
பரிணாம வாதத்தின் அடிப்படை ! சூன்யத்தில் இருந்து
இந்த உலகம் வரவில்லை ! அதற்கும் ஒரு காரணம் இருந்தது !

நடை பெறும் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம்
இருதே ஆகவேண்டும் ! விதையில்லாமல் இதுவும் முளைப்பதில்லை !
காரணம் இல்லாமல் காரியமும் நடைபெறுவதில்லை !

விளைவை மேம்படுத்த விஞ்ஞானம் விதையைத்தான் முதலில்
மேம்படுத்துகிறது !

காரியத்தையும் மேம்படுத்த காரணத்தை தான்
சீராக்கவேண்டும் .!

ஆனால் விதை போட்டால் உடனேவா விளைகிறது ?

அப்படியே காரியம் நடக்கும் போது விதை போட்டது நினைவில் இருப்பதில்லை !
எது நடந்தாலும் ஏன் நடந்தது என்கிறான் !
காரணம் அவன் நினைவில் இருப்பதில்லை .

பலசமயங்களில் காரணம் பல ஆண்டுகளுக்கு முன் கூட இருக்கும் ,சில சமயங்களில் காரணம் பல ஜென்மங்களின் முன் கூட இருக்கும் .

ஒரு கல் விழுத்தாலும் ,உடனே எழும் கேள்வி ஏன் இந்தக் கல் விழுந்தது என்பதுதான்
! இதில் இருந்து தெரிவது என்னவென்றால்
எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்
மனதிலேயும் உள்ளது !

விஞஞானம் என்பதும் எது நடந்தாலும் ஏன் ஏன் எனக் கேட்டு அதற்க்கு விடை
கண்டுபிடிப்பதிலேயே அறிவை \வளர்க்கிறது !
எந்த ஒருகாரியம் தொடங்க்வதற்கும் நிச்சயம் ஒரு
காரணம் இருக்கும் என்ற ஊகம் என்றும் மனிதனின் மனதில் ஆழமாக உண்டு !
இந்த முன் ,பின் என்ற ஊகம் தான் ( precedence and succession )
இதுவே காரண காரிய விதிக்கு (LAW OF CAUSATION ) அடிப்படையாகும் !

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்று காரியமாகவோ ,அல்லது காரியமாகவோ
மாறி ,மாறி இருக்கின்றன !
ஒரேசெயல் ஒரு சமயத்தில் காரணமாகவும் ,மற்றொரு சமயத்தில்
காரியமாகவும் இருக்கிறது !இதுவே காரண காரிய விதி !
இதுவே நமது வாழ்வின் விதி !

நமது கர்ம வினை என நாம் கூறும் வினைத்தொடர்
நாம் முன்பு போட்ட விதையை இப்போது அறுவடை செய்வது ஆகும் !
என்ன நாம் எப்போ போட்டோம் ,என்னபோட்டோம் என நமக்கு
மறந்து போவதால் ,நாம் சற்று அரற்றுகிறோம் !

மேலும் சமயத்தில் அறுவடை என்றால் வரவு பட்டும் கிடைப்பத்ல்லை !
யார்யாரோ அப்போது கொடுத்து வைத்தசில கடன்காரர்களும் வசூலிக்கக்க இப்போது
வந்து நம்மை பாடாக படுத்திவிடுகிறார்கள் !

எதை எதையோ கேட்கிறார்கள் !
நமக்கு அடையாளம் தெரியாததால் ,
கொடுக்கும் போது அழுதுகொண்டே கொடுக்கிறோம் !

இப்போதைக்கு இது போதும் !
இனி இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் பார்ப்போம் !
கொடுத்துவைத்தது எப்போது ஆரமித்தது ?
சமூகத்திற்கே வசூலிப்பு உண்டா ?
ஆதி காரணம் என்ன ?
அடுத்ததில் இன்னும் பார்ப்போம்
அன்புடன் ,

அண்ணாமலை சுகுமாரன்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 12, 2011 8:53 pm

எதிர்பார்க்கிறேன் அய்யா அடுத்த பகுதியை கொஞ்சம் சீக்கிரம் இடுங்கள் மிக நல்ல கருத்துக்கள் எளிமையான உதாரணங்கள் தொடரவேண்டும் உங்கள் இந்த அற்புத பணி

Sponsored content

PostSponsored content



Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக