புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 10:04 am

அட டா இப்டு இருகா? எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 812496
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 07, 2011 1:42 am

எனக்குப் புரிந்தது இதுவே --9


ஐந்தில் இருக்குது உடம்பு !*

இதுவரை உலகில் விஞ்ஞான அறிஞர்கள் கண்டதுவோ
ஆக மொத்தம் நூற்றுப் பதினேழு மூலங்கள்(elements);
நம் மெய்ஞான சித்தர்களுக்கோ மொத்தமே எல்லாமே ஐந்துதான் .!
பூதங்கள் ஐந்துதான் உலகை ஆக்கும் மூலங்கள்ஆகுது !

ஆகாயம் ,வாயு , நெருப்பு, நீர் , மண்
இவையே பூதங்கள் ஐந்து ! இவையே மூலங்கள் ஐந்தும்
இவையே தனித்தும் இணைந்தும் ஆகின்றன
உலகப்பொருட்கள் யாவையுமாய் ! அதுவே ஆகின்றது
நமது மேனியுமாகவும் !

ஐம்பூத ஆற்றல்களும் பதினைந்து பகுதிகளாக, ஒரு கணக்குடன் பிரிந்து ஆயின இந்த மேனியாக என்று சித்தர்கள் கண்டனர் ! இதுவே உடலின் ரகசியம் நமது சித்தர்கள் வழியில் !

மண்ணின் ஐந்து பாகம் ஆகியது உறுப்புகள் -
மெய் ,வாய் ,கண் ,மூக்கு செவி என !
தண்ணீரின் நான்கு பாகம் - கண்ணில் சுரக்கும்
விழி நீர் , உள்முகமாக சுரக்கும் நிலவமுது ,
சூரிய அமுது , நாத ஜலம் என்னும் உயிரின் ஆற்றல் !

நெருப்பின் மூன்று கூறுகள் - வலக் கண்ணில்
சூரிய ஒளி, இடக் கண்ணின் சந்திர ஒளி ,
மற்றும் மூலக்கனல் ஆகிய ஜாடராக்கினி !
காற்றின் இரண்டு கூறுகள் - பிராண வாயுவும் ,
அபான வாயுவும் ! ஆகாயத்தின் கூறு
தலையில் இருக்கும் துவாதசாந்தப் பெருவெளி !

இவை மட்டுமா ? இந்த உடம்பின் ரத்தம்,
தசைகள், தோல், நரம்பு ,கோபம் ,தாபம்
நடத்தல் ,வினையாற்றல் அத்தனையும்
ஐம்பூத ஆற்றலே !

இத்தனையும் ஆகும் ஒன்றுடன் ஒன்று
முறையுடன் இணைந்து , வேறுவேறு விகிதத்தில்
ஆகுது வெவ்வேறு பொருட்களாக ! இத்தகு
ரசாயன மாற்றத்திற்குப் பெயரே பஞ்சீகரணம் !

மண்ணுடன் மண் சேர ஆவது எலும்பு !
மண்ணுடன் நீர் சேர ஆவது தசைகள் !
மண்ணுடன் நெருப்புச் சேர ஆவது தோல் !
மண்ணுடன் வாயு சேர ஆவது நரம்பு !
மண்ணுடன் ஆகாயம் சேர ஆவது ரோமம் !

காற்றுடன் மண் சேர ஆவது உமிழ் நீர் !
காற்றுடன் நீர் சேர ஆவது சிறுநீர் !
காற்றுடன் நெருப்புச் சேர ஆவது வியர்வை !
காற்றுடன் வாயு சேர ஆவது ரத்தம் !
காற்றுடன் ஆகாயம் சேர ஆவது சுக்கிலம் /சுரோணிதம் !

நெருப்புடன் மண் சேர ஆவது பசி !
நெருப்புடன் நீர் சேர ஆவது தாகம் !
நெருப்புடன் நெருப்புச் சேர ஆவது நித்திரை !
நெருப்புடன் வாயுச் சேர ஆவது சோம்பல் !
நெருப்புடன் ஆகாயம் சேர ஆவது ஆண்பெண் சங்கமம் !

வாயுவுடன் மண் சேர ஆவது கிடத்தல் !
வாயுவுடன் நீர் சேர ஆவது நடத்தல் !
வாயுவுடன் நெருப்பு சேர ஆவது மடக்கல் !
வாயுவுடன் வாயுச் சேர ஆவது ஓடுதல் !
வாயுவுடன் ஆகாயம் சேர ஆவது குதித்தல் !

ஆகாயத்தில் மண் சேர ஆவது விருப்பு !
ஆகாயத்தில் நீர் சேர ஆவது வெறுப்பு !
ஆகாயத்தில் நெருப்புச் சேர ஆவது அச்சம் !
ஆகாயத்தில் வாயுச் சேர ஆவது வெட்கம் !
ஆகாயத்தில் ஆகாயம் சேர ஆவது மோகம் !

இதுதான் உடலின் ரசாயனம் !
இந்தக் கெமிஸ்ட்ரி அறிந்தால்
ஆவது என்னவா ?

”நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்"
இது தானே வள்ளுவர் குறள் ! இந்த சங்கம விகிதம்
தெரிந்தால் எது எது சேர்ந்து என்னவாகிறது ? அதற்கு
எதை எதை மேம்படுத்தவேண்டும் என அறியலாம் !

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
-- திரு மூலர்

நினைவில் கொள்ள சூத்திரம் போல்
சில சங்கதிகள் சொல்லப்படுகிறது .
ஆர்வமுள்லோர் தனியேப் பயில
பல புத்தகங்கள் சந்தையில் உண்டு .

இதில் பலசொற்கள் தனித்தமிழில் இருப்பத்தில்லை
மூலத்தில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே
பயில்தல் மேலும் படிக்க வசதியாகும் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:18 am

பஞ்சீகரணம் பற்றிய விளக்கம் நன்று ஐயா!



எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 12:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 07, 2011 2:32 pm

எனக்குப் புரிந்தது இதுவே --10

"மன வாசம் *




ஞானேந்திரியமாகிய மேனி ,வாய் ,மூக்கு ,கண் , காது
இவையும் கர்மேந்திரியமாகிய நாக்கு,கை,கால், குதம் ,குய்யம் ஆகிய
இந்த புறக் கருவிகள் பத்தையும் ஆள்வதும் ,
அவைகளுக்கு காரணமாகி ,அவற்றை உள்முகமாக
அறியும் கருவி அந்தக் கரணம் !

அந்தக் கரணம்என்பது மனம் புத்தி ,சித்தம்,அகங்காரம் !

மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்துவது இந்த மனமே!
மனமுடையவன் தான் மனிதன் !
அகத்தில் ஸூக்ஷ்மமாக இருப்பதால் அகம் !
உடலுக்கு உள்ளே இருந்து இயங்குவதால் உள்ளம் !
இதுவே அறிவுக்கு ஆதாரம் !
உணர்ச்சிக்கு உறைவிடம் !
இந்த மனம் இல்லையெனில் ஆய கலை அறுபத்து நான்கும் இல்லை !
அறிவு நூல், விஞ்ஞானம், மெய்ஞானம் எதுவும் இராது !

மனத்தினால்தான் மனத்தை அறியமுடியும் !
மனத்தின் வலிமை எல்லையில்லாதது !
இம்மனம் விரிய விரிய வலிமை குறையும் !
அதுவே அடங்க அடங்க பலமாகும் !

உடலும் மனமும் பிரிக்க இயலாதது !
உடல் சுகமாக இருந்தால் மனதும் சுகமடையும் !
உடலைப் பேணி இந்திரியங்களை அடக்கினால்
தானும் வலுவாகும் !

எண்ணங்கள், உணர்ச்சிகள் ,வாசனைகள் ,பழக்கங்கள்
ஸம்ஸ்காரங்கள் இவை யாவும் சேர்ந்ததே மனமாகும் !
இதற்கு தானே இயங்கும் நிலை இல்லை !

மதி இயங்குவதும் , மதி சூரியனைப் பற்றி இயங்குவது போல் தான் !
ஆன்மாவான சூரியப் பிரகாசம் இல்லையேல்
மனமும் பிரகாசிப்பதில்லை ! கடன் வாங்கிய
பிரகாசத்தினாலேயே பிற வஸ்துகளையும் மனம்
விளங்கச் செய்கிறது !

ஆன்ம பிரகாசம் இல்லையேல் உலகப் பொருள் எதுவும்
மனிதனுக்குப் புலப்படாது ! ஆன்மாவின் வெளிச்சத்தில்
உடலின் இந்திரியங்கள் மூலம் புறத்தே உள்ள பொருட்களைப்
பற்றி அதன் வடிவைப் பெறுவதே மனத்தின் மாண்பு!
மனம் இல்லாவிட்டால் ,அது இயங்காவிட்டால்
புலன்கள் செயல் பட்டாலும் வடிவை உணரமுடியாது !

மனம் எதை விரும்புகிறதோ அதன் மயமாகும் !
உலகின் புறப் பொருளை பற்றின் அது அசுத்தமாகும் !
இறைவனைப் பற்றும்போது அடைவது இணையற்ற இன்பம் !
ஆசைகளை அடக்கினால் மனமும் அடங்கும் !

இம்மனமே உடல் முழுதும் பரவி அதற்கு
வேகம் கொடுத்து இயங்கச் செய்கிறது !
அறிவு மூளையைச் சார்ந்தது
அன்பும் அருளும் மனத்தைச் சார்ந்தது !

இந்த நெறிபடைத்த மனம் எதையும் பற்றும் ,
விடும் , பற்றி விடும் , விட்டுப் பற்றும்
விட்டும் விடாது , பற்றவும் விடாது விட்டும் நிற்கும்
இத்தனை சக்தியும் அதன் இயல்பான ராஜச, தாமச இயல்பாலே !

ஆகினும் அதன் ஆதி வாசனை விடாது அதைப் பற்றி நிற்கும் !
அது மனம் உதிக்கும் போது உதிக்கும் ,அது பிற
இன்பத்தில் லயிக்கும் போது லயிக்கும் !
மனம் செய்யும் கர்மங்கள் அழிந்தாலும் ,
அதன் வாசனை மட்டும் மனத்தில் வீசி நிற்கும் !

செய்த கர்மத்திற்குத் தக்கபடிஅமைந்த அந்த ஆதி வாசனை
அந்தக்கரணத்தை தானே இயக்கும்;
அந்த வாசனைக்கு அவித்தை எனவும்
மாயை எனவும் பெயருண்டு !

மனமே பற்றுக்கும் விடுதலைக்கும் காரணம்;
இந்த மனத்தையும் அந்தக் கரணத்தையும் வென்றவர்களே மகான்கள் !
செய்கையில் செய்கையின்மையும் ,
செய்கையின்மையில் செய்கையும் காண்பவனே உத்தமன் !
அவனே சும்மா இருக்கும் சுகம் அறிந்தவன் !

இன்னும் மனத்தில் மகிமையும் நுட்பமும் தொடரும்.

மன மாயை மாயை இம் மாயை மயக்க
மனமாயைதான் மாயும் !மற்றொன்றில்லை
பிணை மாய்ப்பதில்லை ,பிதற்றவும் வேண்டாம்
தனியாய்ந்திருப்பது தத்துவமும் தானே !
-- திரு மந்திரம்

மனத்தின் மாண்பு பற்றி இதுவரை சுருக்கமாகக் கூறியவற்றை
மீண்டும் ஒரு முறை படித்து அது குறித்து சிறிது சிந்திக்க வேண்டுகிறேன் .
அதை சிந்திக்கும் போதே அது மனதில் ஒரு பதிவாகும் .

இருமுறை படித்தாலே இதன் நுட்ப்பன் அத்தனையும் எளிதில் விளங்கும் .
ஒவ்வரு வரியும் அர்த்தங்களால் செரிவூட்டப்பட்டவை .

இத்தனைக் கருத்தும் நம்சித்தர் பெருமக்கள் நமக்குத்தந்த
சிந்தனைக் கருவூலமாகும் .
எனக்குப் புரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
இதில் தவிர்த்துப் போக சாய்ஸ் இல்லை

அவசியம்வேண்டாத பகுதி ஒன்றும் நம் உடலில் இல்லை
அத்தனைக் கச்சித அற்ப்புத அமைப்பு . இப்பிறப்பு !
தயை கூர்ந்து அனைத்தையும் படிக்கவும் .

கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மியாக இருக்கலாம்
ஆனால் இந்த பிரம்ம ஞானத்தைத் தேடித்தான்
பல பிறவி ,ஆயிரம் ஆயிரம் மையில்கள்
அலைந்து திரிகிறோம் .

இதில் என்னுடையதுஎனும் பகுதி ஒன்றும் இல்லை !
அனைத்தும் நம் சித்தர் பெருமக்களின் ஈட்டிய வைப்பு தான் .

நானும் உங்களுடன் தரும் போதே பெறுகிறேன்
பெற்றதை பகிர்ந்து கொள்கிறேன் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 10, 2011 12:40 am

எனக்குப் புரிந்தது இதுவே -11

ஆன்மாவின் ஐந்து சட்டைகள்!*


படைப்பின் சிகரம் இந்த மனிதன் !
மனிதனைப் படைத்தது பற்றி இறைவனே
பெருமை கொள்ளலாம் ! மனிதனால் மட்டுமே
வினைப் பதிவுகளைக் கழிக்க இயலும் ! வினையின் பதிவு
அகற்ற மனிதராய்ப் பிறந்தே தீரவேண்டும் ! தேவர்களும்கூட !

ஐந்து உடம்புகள் கொண்டது ஆன்மா !
ஆன்மாவிற்கு ஐந்து கோசம் !
அதுவே உடம்பின் 96 தத்துவத்தில்
கோசங்கள் எனப்படும் .அவையே அன்னமய கோசம் ,
பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் ,ஆனந்தமய கோசம் என்பனவாம் !

முதலாவது நாம் புறத்தில் காணும் உடம்பு ! அதில்
உணவு செரிப்பது, ரத்த ஓட்டம், மூளை, இதயம்,
சிறுநீரகம் ,நுரையிரல் ,அப்பப்பா ! அத்தனையும்
வியக்கவைக்கும் செயல்பாடுகள்கொண்டவை !
ஆனால் அதிசயம் தெரியுமா ?
இவை அத்தனையும் நமது கட்டுப்பாட்டில் இல்லை !
இத்தனை முன் எச்சரிக்கை இறைவனுக்கு !
எத்தனை நம்பிக்கை இந்த மனிதனைப்பற்றி !

இந்த உடல் உணவால் ஆனது ! அதுவே அன்னமய கோசம் !
உடலின் வளர்ச்சிக்கு உணவே காரணம் !
உணவைப் போற்றி மதிப்பவர்கள் ,தவறாமல்
உணவைப் பெறுகின்றனர் !
உணவு உடம்பை வளர்க்கவே !
அங்கு ருசி வரும்போது ,உணவு உண்பதும்
ஒரு கர்ம வினையாகிறது !
உணவே நம்மை உண்ணத் தொடங்கும் !

ஸ்தூல சரீரத்தின் உள்ளே உள்ளது பிராணமய கோசம் !
இது வடிவத்தில் புற உடலை ஒத்தது !
புலன்கள் பிராணனைத் தொடர்வன !
பிராணனே உயிர்களின் ஆயுளை நிச்சயிக்கும் !
பிராணனைப் போற்றுவோர் முழு ஆயுளைப் பெறுவர் !
ஸ்தூல உடலின் ஆதாரம் பிராணனே !
புலன்கள் பிராணனின் ஆற்றலாலேயே இயங்குவன !
பிராணனின் ஒழுங்கற்ற செயல்பாடே நோய்கள் !
அனேகமாக மாந்தரனைவரும் இந்த
இரண்டு உடம்பில் மட்டுமே வாழ்கின்றனர் !

பிராணமய கோசம் , மனோமய கோசத்தால் நிரப்பப்பட்டுள்ளது !
பிராணனை விட நுண்ணியதுமனம் !
அறிவு, உணர்ச்சிகள், கருத்துக்கள் ,
ஸம்ஸ்காரங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்
இந்த மனோமய கோசமே !

அடுத்து வருவது விஞ்ஞானமய கோசம் ! இது விழிப்படைந்து
எதையும் முடிவு செய்யும் புத்தியால் ஆனது ! மனோமய கோசத்தின் உள்ளே உள்ளது இது !
ஆத்ம சாதனைகளால் இது விழிப்புற்று
மனத்தை நடத்தும் போது மனிதன் மேதையாகிறான் !
சிரத்தை , ரிதம் ,சத்தியம், யோகம், இவை
விஞ்ஞானமய கோசத்தின் அங்கங்கள் !

ஐந்தாவதாக வருவது ஆனந்தமய கோசம் !
இது விஞ்ஞானமயகோசத்தின் உள்ளே உள்ளது !
இது ஆனந்த மயமானது !
இன்பம் ,மகிழ்ச்சி இவை இதன் அங்கங்கள் !
விருப்பத்திற்குரிய பொருளையோ நபரையோ பார்ப்பது இன்பம் !
விருப்பத்திற்குரியதை அடைவது மகழ்ச்சி !]
விருப்பத்திற்குரியதை அனுபவிப்பது சந்தோஷம் !

ஒவ்வோர் உடம்பும் அந்தந்த நிலையில்
பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது !
நாம் தனியே தோன்றினாலும் ,பிரபஞ்சத்தின் ஓர் அங்கமே !

நமது ஸ்தூல உடம்பு ஸ்தூலப் பிரபஞ்சத்துடனும்,
மனோமய உடம்பு பிரபஞ்ச மனத்தினுடனும் ,
விஞ்ஞானமய உடம்பு மஹத் எனும் பிரபஞ்ச புத்தியுடனும் ,
ஆனந்தமய உடம்பு இறையனுபவத்துடனும் தொடர்பு கொண்டவை !

ஆமாறறிந்தேன் அகத்தின் அரும் பொருள்
போமாறறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லி இனியோர் இடரில்லை
நாமா முதல்வனும் நாமெனலாமே
- திரு மூலர்

அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Feb 13, 2011 6:46 am

எனக்குப் புரிந்தது இதுவே -13

மனம்தான் மூளையா ?

விஞ்ஞானம எதையும் நேரில் கண்ணால் கண்டால்தான் நம்பும் ! எனவே நமது பண்டைய சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப்பட்டிருக்கும் அந்தக்கரணம் என்பதில் உள்ள மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் இவை அவர்களுக்குத் தெரியா;
ஏன் எனில் கண்ணுக்குப் புலப்படாதவை; எனவே இல்லை எனக் கொண்டனர் .
எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி, மூளைதான் அவற்றைச் செய்வதாகக் கூறிவிட்டார்கள் . அந்தக்கரணம் என்றாலே கண்ணுக்கு தெரியாத பொறிகள் என்றுதான் பொருள் .
கண்ணுக்குக்குத் தெரியும் பொறிகள் 10; தெரியாதவை 4 .

மூளை என்பது மனம் இல்லை ! இதை நான் முன்பே பலமுறை கூறியிருக்கிறேன் .
மூளை ஒரு பொறி ,ஒரு இயந்திரம் ,பதிவு செய்யும் இயந்திரம் .
அது மனம் எனும் ஆற்றல் இல்லாமல் செயல் படாது;
மனமோ ஆத்மா இல்லாமல் செயல் படாது!
எண்ணங்கள் தோன்றுவதற்கு மனமே காரணம் !
அவை தொடர்வதும் மனத்தில் தான் !
எண்ணங்கள் தோன்றுவதற்குப் பழைய பதிவுகளும் ,விருப்பு வெறுப்புமே காரணம்; அடுத்தது சூழல் !

எண்ணம் எப்படித் தொடங்குகிறது என நோக்கிக் கொண்டே இருந்து அது தோன்றும்போதே மாய்ப்பதுதான் ரமணரின் மார்கம் !

எண்ணத்தை வளரவிட்டால் அது இழை போல விரிந்து கொண்டே போகும் .!
எல்லா எண்ணமும் நம்மிடம் மட்டும் தோன்றுவதில்லை;
பல பிறரிடம் இருந்தும் நம்மைப் பற்றும்;
அதை இல்லாமல் ஆக்கினால்தான் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடலாம் !
நல்லது செய்தாலும்,தீயது செய்தாலும் மனத்தில் பதிவு தொடர்ந்துதான் ஆகும் !

’விலங்கைத் தங்கத்தில் செய்தால் என்ன?இரும்பில் செய்தால் என்ன ?
விலங்கு விலங்குதான்’ என்கிறார் ஓஷோ !
மனம்தான் பழைய பதிவுகளை ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து சேமித்து ஆன்மாவுடன் தொடர்ந்து வருவது !
நமது மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டது !

பிரபஞ்ச மனத்தில் எல்லா மனங்களும் மொத்தமாகச் சேர்த்துவைக்கப் பட்டிருக்கும். அது ஒரு supper computer போன்றது .!
எண்ணங்கள் மூளையில் பதிவாகிறது ,ஒரு கருவியைப் போல மட்டும் !
மூளை இந்த உடலுடன் அழிவது! ஆனால் மனம் நுண் பொருள் !
உடல் அழிந்தாலும் அது அழிவதில்லை;
மனம் இல்லாமல் மூளை வேலை செய்யவே செய்யாது !

அனேகமாக எகிப்தியர்களும் நமது பண்டைய கருத்துக்களையே கொண்டிருந்தனர் போலும் ! அவர்கள் மம்மி தயாரிக்கும் போது மூளையைச் சேமித்து வைக்கவில்லை; மூக்கு வழியே உறிஞ்சி எடுத்து வெளியே வீசி விட்டனர்! ஆனால் இதயம், நுரையீரல் முதலியவற்றைப் பாதுகாத்தனர் !
மூளையைப் பற்றி இன்னும் பல ஆராயத்தக்கது !
அப்படியே மனம் பற்றியும் தான் !
மனத்தின் ஆற்றல் குறித்த ஆய்வுகளும், அதற்கும் மூச்சுக்கும்
இடையே உள்ள இணைப்பும் வரும்காலத்தில் மிகப் பெரிய அறிவியல் முன்னேற்றத்தை மனித குலத்திற்குத் தர உள்ளன!

இதுவே எனக்கு புரிந்தது !
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 14, 2011 10:23 am

எனக்குப் புரிந்தது இதுவே---14



இன்னுமொரு முகப்புரை !


தமிழ்ச் சித்தர்கள் 18 என்பர்; ஆனாலும் ,இன்னும் அதிகம் உண்டு !
18 என்பது நட்சத்திர கூட்டம் போல் ஒரு குறியீடே ! சித்தர்கள் உண்டு பல கோடி !
அவர்கள் கண்ட வாழ்வியல் முறை ,வைத்திய முறை , அறிவியல் முறை ,
மற்றும் ரசாயனம் போன்றவற்றை இன்னும் ஒரு மறைபொருளாகவே
கருதப்பட்டு வருகிறது ! கதியுள்ள சிலருக்கே கிட்டுகிறது .

திருமூலர் எழுதிய திருமந்திரமே இன்னும் சரியான முறையில்
பகுத்தாயப்படவில்லை .
அந்த உயர்ந்த தத்துவங்களை - மறை பொருளான ரகசியங்களைத் தற்கால வாழ்வில்
எப்படிப் பயன்படுத்தி ,வாழ்வில் வெற்றியையும் ,நிலைத்த இன்பத்தையும்
அடைவது என்னும்உண்மையை உணர்ந்து கொள்ளும் பொருட்டு
நானெடுத்த ஒரு சிறு முயற்சிதான்இத்தொடர் ! .

இதற்கு ” எனக்குப் புரிந்தது இதுவே!” என்று பெயர் சூட்டியதற்குக்
காரணமே , இதில் இடம்பெறும்
கருத்துக்களை எனது பாணியில் எனக்குப் புரிந்த வழியில்
கூறுவதற்குத்தான் !.
இதில் யாரையும், எந்த மூலத்தையும் நான் சுட்டிக்காட்ட முதலில்
விரும்பவில்லை ; ஏனெனில் அப்படி மூலத்தையும் ஆதாரத்தையும் காட்டி ஓர் ஆராய்ச்சிக்
கட்டுரை எழுதும் நோக்கம் எனக்கு என்றுமே இருந்ததில்லை.
வழிவழி வந்த தமிழ்ச் சித்தர்களின் அறிவியல் ஞானத்தைச் சரியான முறையில்
வருங்கால இளைஞர் சமுதாயம் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்னும்
ஒரு பேரவாவேகாரணம் .
அவர்களின் அறிவியல் ஞானம் ஒன்றும் பத்தாம் பசலி இல்லை !
இன்று அது புத்திளைமை பெற்று மீண்டும் உலகை ஆளக் கிளம்பிவிட்டது !
இதுதான் இன்று மேலை நாடுகளில் எதையோ புதிதாகக் கண்டதுபோல் மாதம்தோறும்
பல நூல்கள் பல லக்ஷம் பிரதிகள் விற்றுத் தீருகின்றன .
நமது நாட்டுப் பெரியோரும் அதை வாங்கிப் படித்துப் பாராட்டுகின்றனர் .
எனவேநமக்கும் நமது முறைகளை நமது வழியில் எளிதாக மீண்டும்
நினைவு படுத்த வேண்டியகட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
எனவே ஒரு முகவுரை போல் சித்தர் இலக்கியத்தில்
உள்ள ரகசிய முறைகளை வாழிவில் பயன்படுத்தி எப்படி இன்புற்று வாழ்வது என்பதை
மிகச் சுருக்கமானஅறிமுகம்போல் கூறும் முயற்சி இது !

இதையே ஒரு நூல் வடிவில் கொணரும் எண்ணமும் உண்டு .படிப்போர் மனத்தில்
எளிதாகப் பதிய வேண்டும் என்னும் நோக்கில் எளிய சொற்களையே கையாண்டுள்ளேன் .
இதை மிக விரிவான உரை வடிவில் எழுத வேண்டாம் என எண்ணியே
மிகச் சுருக்கமாக
ஒரு வரி,இரு வரியில் ஒவ்வொரு அரிய செய்தியும் அமையும்படி எழுதியுள்ளேன்;
இதைத் தவிர இதில் எந்தக் கவிதை எழுதும் முயற்சியும் இல்லை .

உண்மையில் இத்தொடர் முழுமை பெற்றதும் ,இது இதுவரை எதை நோக்கி, எத்தனை
காலம் நடை போட்டது ,ஏன் உடலின் தத்துவங்கள் இத்தனை விரிவாக எடுத்து
கூறப்பட்டது என்பதுபுரியும்
.நமது உடலைப் புரிந்து கொள்வதே தலையான அறிவு ;
தன்னை அறிவதே எல்லா அறிவிலும் தலை சிறந்தது!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றிச் சித்தர்களாலும் ,
உபநிஷங்களிலும்மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்த பேருண்மையை
மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சியே இக்கட்டுரை; ஆனால் இத்தகைய அறிவே மனித குலம்
தற்போது அனுபவித்துவரும் எல்லாவிதத் துயரங்களையும் தீர்க்கும்
நல்விடிவாக அமையப்போவது திண்ணம் !

இந்த உண்மைகளை அறிவியல் ரீதியில் அறிவியல் அறிஞர்களுக்கு அவர்களின்
முறைப்படுத்தப்பட்ட விதிகளின் படி வருங்காலம் விளங்க வைக்கும் என
உறுதியாக நம்புகிறேன்;
அறிவியல் உண்மையாகக் கூறப்பட்டு வரும் பல உண்மைகள் இதுவரை
எத்தனை எத்தனை மாற்றங்கள் கண்டுவருகின்றன என்பது நாம் அனைவரும் காண்பதுவே .

ஆமல் சித்தர்களும் ,உபநிஷங்களும் கூறியவை அன்றிலிருந்து இன்றயவரை
எத்தகைய மாற்றங்களும் இன்றி இன்றயவரை நிலைத்து நிற்கின்றன .

ஆனால் அத்தகைய உண்மைகளுக்கு இன்றயவரை அறிவியல் அங்கிகாரம் மட்டும் கிட்டவில்லை .
ஆயினும் அதுவரை காத்திராமல் அவரவர்க்குப் புரிந்ததைத் தங்கள் அன்றாட
வாழ்வில்நலபெற பயன்படுத்துமாறு நான் வேண்டுகிறேன் !

இதில் தலைப்பு என்னமோ " ’எனக்குப் புரிந்தது இதுவே" என இருந்தாலும்
இத்தனையும் எனக்குப் புரிந்து விட்டதாகக் கூறமுடியாது;

இதனையும் புரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் ?
இதை விடுத்து "எனக்குத் தெரிந்தது இதுவே!"’
என்று ஒரு தலைப்புக் கொடுத்தால் இத்தனையும் எனக்குத் தெரியும் என்னும்
தன்முனைப்பு என்னைக் கெடுத்து விடலாம்.

இன்னும் நானும் மாணவன்தான் ; பயணத்தின்போதே
பயிலும் எண்ணத்துடன் தான்
இத்தொடரைத் தொடங்கினேன்.

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 14, 2011 6:34 pm


எனக்குப் புரிந்தது இதுவே---15


*நான் எனும் சுமை ! *


நமது உடல் என்னவோ 96 தத்துவங்களைக் கொண்டு
இயங்கினாலும் , இதில் ஒரு மாபெரும் நடுநிலை சக்தி
இருபிரிவாக உடன்பாடு சக்தியாகவும் ,எதிர்மறை சக்தியாகவும்
பிரிந்து இரு வழியே என்றும் செயல்பட்டு வருகிறது !
சுவாசம் ,நாடி ,நரம்பு,ரத்தம் ,மூளை எல்லாவற்றிலும் சரிசமமாக இந்த இரு சக்திகளும் செயல்படுகின்றன.

எதிர் இரட்டைகளான

நல் வினை - x தீவினை
தோன்றுதல் xமறைதல்
ஆக்குதல் x அழித்தல்
பகல் x இரவு
வளர்பிறை x தேய்பிறை
குளிர்ச்சி x வெப்பம்
மழை x வறட்சி
மலை x மடு
சோலை x பாலை
பிங்கலை x இடைகலை
பிறப்பு x இறப்பு
நறு மணம் x துர் நாற்றம்
இன்பம் x துன்பம்
சிரிப்பு x அழுகை
விருப்பு x வெறுப்பு
அடக்கம் x ஆவேசம்

இவை போன்ற எண்ணற்ற முறைகளில் இப்படியாக உடலில் இயங்குவன
உடன்பாடு, எதிர்மறை என்னும் இருவேறு எதிர்மறை சக்திகளே ஆகும்.

இயற்கையின் இருபிரிவாகப் பிரபஞ்சம் முழுவதும்,
செயல்கள் அனைத்திலும் பிரிந்து இயக்கி வரும் சக்திகள் இவையே !
நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும், நினைக்கும் ஒவ்வொரு நினைவிலும்
அதன் ஒவ்வொரு கருவிலும் இந்த இருவேறு உடன்பாட்டு சக்தியும் ,
எதிர் மறை சக்தியும் தவறாமல் நிலை பெறும் .
இவற்றிடையே நடுநிலை காண்பதே வாழும் வழி !

இத்தகைய பேதங்களை உண்டாக்குவதற்குக்
காரணமாகவும் ,காரியமாகவும் விளங்குவது
இப்பிரபஞ்சத்தில் காணும் சித்தும் அசித்தும் ஆகும் !
ஆத்ம சக்தியை வளரச்செய்து அதைக்கொண்டு
நம் உடலில் உள்ள எதிர்மறை சக்திகளை ,அடக்கியும் ,
உடன்பாட்டு சக்தியை விருத்தி செய்தும்
தனது அறிவைக் கொண்டு நடு நிலையை என்றும்
உடலில் நிலைநாட்டித் திறம்பட வாழும் வழி காண்பதே
மெய்ஞானம் ஆகும் !

மனிதனின் அன்றாட வாழ்வில் அவன்
மொத்தநேரமும் முன்றே நிலையில் தான்
இருக்கிறான்;அவை அவஸ்தைகள் எனப்படும் !

விழிப்பு நிலை எனப்படும் ஜாக்கிரத்,
கனவு நிலை எனப் படும் ஸ்வப்னம்,
உறக்க நிலை எனப் படும் ஸுஷுப்தி;
இம்முன்று நிலையிலேயே மாறி மாறி இருப்போம் !

ஒரு அவஸ்தையில் நமக்கு சாந்த குணம் இருக்கிறது
வேறு நிலையிலோ கோபம் பொங்கி வருகிறது !
ஆனால் அவ்விரு நிலையிலும் வாழ்வது ஒருவனே !

இந்த நிலைகளை அவன் எடுக்கக் காரணம் அவனது
மனம் இருக்கும் நிலைகளே ஆகும் !
மனமோ மாறி மாறி இந்த முன்று அவஸ்தைகளில்
ஒருவனை இருத்தி பேதம் ஆக்குகிறது !

இன்னும் இதை விரிப்பின்
விழிப்பு நிலையில் உறக்க நிலை ,
விழிப்பு நிலையில் கனவு நிலை ,
உறக்க நிலையில் விழிப்பு நிலை,
உறக்க நிலையில் கனவு நிலை என
இன்னும் நிலை பிரிந்து , மனம் பல்வேறு நிலையில் செயல்படும் .

கனவு நிலையிலோ கேட்கவே வேண்டம் !நம் மனத்தில் இருந்தே
கனவில் பல ரூபங்களைப் பார்க்கிறோம் ! நாம் செய்யக் கூடாது என நினைக்கும்
காரியங்களைக் கனவில் செய்கிறோம் ! ஆனால் கனவு காண்பவனும் ,
பின்பு விழித்து கொண்டவனும் ஒருவனே ! ஒரே மனமே !

உறக்க நிலையில் நான் எனும் அகங்காரம் நீங்குவது போல்
மற்ற இரு அவஸ்தையிலும் நான் நீங்க வேண்டும் ! விழிப்பு நிலையிலும்
நான் எனும் உணர்வு இல்லாது காரியங்கள் ஆற்றப் பயில வேண்டும் .
மனம் பண்படவேண்டும் ! நான் தானாகவே விலக வேண்டும் !

நான் என்பதை எந்த முயற்சியாலும் விலக்க முடியாது !
நான் என்பதே மனம் ! நான் என்பதே சித்தம் !
சட்டையைக் கழற்றுவது போல் மனத்தையும்
கழற்ற முடியுமா ! இதற்க்கு மனத்தை நசிக்கச் செய்ய வேண்டும் !

இதற்கு முதலில் மனத்தை அறிந்துகொள்ள வேண்டும் !
மனத்தில் இருக்கும் மனத்தைக் காட்டிலும் உயர்ந்ததான
புத்தியைக் கொண்டே அந்த மனத்தை அறியவேண்டும் !
அதை நம் வழியில் வசப்படுத்த வேண்டும் !

பின் அதை கொண்டே அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாய்க்க வேண்டும் .
மனத்தின் மாயங்கள் குறையக் குறைய 'நானும்' சற்று குறையும் !

பழகிய காரியம் செய்யும் போது " நான் "சற்று அடங்கி இருக்கும் ,
நடக்கும் போது கால் நினைவு எப்போதாவது வருகிறதா ?
ஆனால் காலில் ஒரு வலி ஏற்பட்டால் மனம் காலிலேயே நிற்கிறது;
அந்த வலியை எப்போதும் காட்டுகிறது ! ஒரு செயலைப் பழக்கமாக்கி
அதை ஒரு குணமாக்கும் போது 'நான்' சற்று குறைகிறது !
'நான்' குறையக் குறைய அது ஒரு இன்ப நிகழ்வாக மாறுகிறது !

நான் படிக்கிறேன் என்னும் உணர்வு இல்லாமல் படிப்பவனுக்கு
படிப்பே ஓர் ஆனந்த அனுபவமாகிறது !
தன்னை மறந்து ஆழ்ந்து படிக்கும் போது அங்கே மனம் தன்னை மறுக்கிறது .
அருகில் வருபவர் கூட மனதில் போதிவதில்லை !

அதுவே நான் படிக்கிறேன்
எனப் பரீட்சைக்குப் படிப்பது பெரும் துன்பமாகிறது !
இந்த 'நான்' உணர்வு போனால் இதுவே ஒரு யோகமாகும் !

இத்தனை பெருமை உள்ள மனத்தை மேலும் மேலும்
ஆய்வு செய்வதுஅதை அறிந்து கொள்வது
அதை ஒழித்துக் கட்டத்தான் என அறிவது விந்தைதானே !

மனத்தில் இருக்கும் நான் எனும் அகங்காரம் முதலில் ,
பின்பு புத்தி ,சித்தம், கடைசியில் மனம்
என இவற்றை ஒவ்வொன்றாக மாய்க்கும்போது ஆத்மாவிற்கும்
மனிதனுக்கும் இடையில் ஏதும் இல்லை !

மனோ நாசம் என்பது சமாதி எனும் இறுதி நிலை;
அதற்குமுன் மனத்தை வசப்படுத்தி வாழும் முறையைப் பயின்று ,
பின் மனம் இல்லாது மாறும் நிலை காணலாம் !
அடுத்து தச வாயுவையும் ,முக்குணகளையும் பற்றிப் பார்ப்போம் !

நான் என்னும் அகங்காரம் இல்லாமல் எதைச்செய்தாலும்
அது மிக இலேசாகும்;
சுமையும் குறையும், பதிவும் இராது !
விளைவுகளான பாப புண்யங்களும் இல்லை !
வினை மட்டும் உண்டு !ஆனால் விருத்தி ஏதும் இராது !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 9:27 pm

மிகவும் ஆழமான கருத்துக்களுடனும், படித்துப் புரிந்துகொள்ள எளிமையாகவும் உள்ளது ஐயா!

தொடருங்கள்! புத்தகமாக வெளியாகும் பொழுது சிறந்த வரவேற்பு இருக்கும்!



எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக