புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 Poll_c10 
11 Posts - 79%
Barushree

1 Post - 7%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 5 of 46 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 25 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 10:01 am

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 M6xrTBJdS2Ky43TwemDP+dscn7235

குளத்து தண்ணியில் கலந்த பாயசம் அவ்வளவையும் குடித்ததால் , குருவி இன் தொப்பை ரொம்ப பெரிசாகிப்  போச்சாம்............. அதால  பறக்கவே முடியலியாம்...........பாவம், மெல்ல மெல்ல நகந்து நகந்து பாட்டி  யாத்துக்கு  வந்ததாம் ................

கொல்லைப்புற வாசலில் நின்று " பாட்டீ, பாட்டீ" என்று கூப்பிட்டதாம்.

பாட்டி வந்து பார்த்தாளாம் யார் கூப்பிடரா என்று..................பார்த்தால்

குண்டு குருவி..............."அச்சச்சோ............என்ன ஆச்சு ? " என்றாளாம்..................

ஆதியோடந்தமாய்  எல்லாத்தையும் சொல்லித்தாம் குருவி..............கேட்ட பாடீக்கும் வருத்தமாய் போச்சாம்......." சரி இப்போ என்ன வேண்டும் ? " என்று கேட்டாளாம்...............

"நான் கொஞ்சநேரம்  படுத்துக்கறேன், அப்புறம் என்னால் முடிந்ததும் பறந்து போறேனே " என்று கேட்டதாம்.............

" ஆஹா, அதுக்கென்ன, பேஷாய் படுத்துக்கோ, அதோ அந்த மாட்டு கொட்டில் இருக்கு பாரு, அங்கே போய் படுத்துக்கோ " என்றாளாம்.

குருவியும்  மெல்ல நகர்ந்து போய் அங்கு படுத்துக்கொண்டதாம்........ஒரு 10 நிமிஷம் தான் ஆகி இருக்கும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு பொல்லாத கண்ணு குட்டி, இந்த குருவியை பார்த்த்ததாம்............

முதலில் பயந்து போச்சாம் ....அப்புறம் மெல்ல கிட்டே வந்து பார்த்ததாம்..............குருவி நல்லா தூங்கிக்கொண்டு இருந்ததாம்.................

சரி என்று போகப்பார்த்த கன்னுக்குட்டி இன் கண்ணிலே குருவி அடைத்து வைத்திருந்த வைக்கோல் பட்டதாம்.............

"ஹை, வெக்கோல்" என்று சொல்லிக்கொண்டே அதை பிடித்து தன் வாயால் இழுத்ததாம்....சாப்பிடத்தான்......ஆனால் என்ன ஆச்சு?.....................

( இப்போ குழந்தைகளே சரிக்க ஆரம்பிச்சுடுவா.............புன்னகை...கைகளை தட்டி யும் சிரிப்பார்கள் புன்னகை )

அவ்வளவுதான் ...... குருவி குடித்த எல்லா தண்ணியும் அருவி மாதிரி வெளியே கொட்டித்தாம், முதலில் குருவிக்கு ஒன்னும் புரியலை....தன் சிறகை 'பட பட' வென அடித்துக்கொண்டதாம்..................அப்புறம் விஷயம் புரிந்ததும் 'விர் ' என்று பறந்து போய் மரத்து மேலே உட்கார்ந்து கொண்டதாம்...............

கீழே  பார்த்தால்......ஒரே தண்ணி............. வெள்ளக்காடாய்  இருக்காம், அதில் பாட்டி இன் ஆடு மாடெல்லாம் மிதக்கிரதாம்...பாட்டி வீட்டுக்குள்ளும் ஒரே தண்ணியாம்................

அதைப்பார்த்ததும் குருவி இப்படி பாடித்தாம்.........

" ஆடும் மாடும் கொளம் கொளம்   .................

அம்மையார்  வீடும் கொளம் கொளம்....................."..................

இப்படி பாடிட்டு பறந்து போச்சாம்....அவ்வளோதான் .........

"கதை முடிஞ்சுதாம்.........கத்தரிக்கா  காச்சுதாம்................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 3:28 am

அருமை க்ரிஷ்ணாம்மா . குழந்தைகளுக்கு ஏற்றார் போல் கதை சொல்கிறீர்கள் .. அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:43 am

shobana sahas wrote:அருமை க்ரிஷ்ணாம்மா . குழந்தைகளுக்கு ஏற்றார் போல் கதை சொல்கிறீர்கள் .. அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1153904

நன்றி ஷோபனா, அடுத்த கதை " குரங்கும் குருவியும்" இன்று இரவு அல்லது நாளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 12:48 am

3 வது கதை :  குரங்கும் குருவியும் புன்னகை

குழந்தைகளுக்கு, வீணாக  தனக்கு தேவை இல்லாத விஷயத்தில்  தலை இடுதல்  கூடாது என்று அறிவுரை சொல்லும் கதை.

ஒரு ஊரில், ஒரு குருவி தன் குடும்பமான ஆண் குருவி மற்றும் 3 குட்டி குருவிகளுடன் ஒரு அடர்ந்த மரத்தில் கூடு கட்டி சுகமாய் வாழ்ந்து வந்ததாம். சந்தோஷமாக வாழ்ந்து வந்த அந்த பறவைகளுக்கு ஒருநாள் சோதனை நாளாக ஆச்சாம் ......... ஆமாம் ,  அன்னைக்கு கார்த்தாலே இருந்து தொடர்ந்து ஒரே  மழை.

நல்ல வேளை இந்த குருவிகள் தங்கள் கூட்டை மரபோந்தில் கட்டி இருந்ததால் இவைகள் மேல மழை தண்ணி படலை, எல்லா குருவிகளும்  உள்ளே உட்கார போது மான இடம் இருந்தது. என்றாலும் அந்த  பெண் குருவி சுமா இல்லாமல் வாசலில் உட்கார்ந்து கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாம்.

அதை கவனித்த ஆண் குருவி, " ஏய் , உள்ளே வந்துடு, மழை மேலே  படப்போகிறது, அப்புறம் சளி பிடிக்கும், மேலும் உன்னை பார்த்து குழந்தைகளும் அங்கு வந்தால் கீழே விழுந்துடும்" என்று எச்சரிக்கையாக சொன்னது.

அந்த எச்சரிக்கையை  அந்த பெண் குருவி கவனித்ததாகவே  தெரியலை. வெளியே வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக  இருந்தது. அப்போது மழை இல் நன்கு நனைஞ்சுண்டே  ஒரு குரங்கு இந்த மரத்தடிக்கு வந்தது.

அதைப்பார்த்த குருவிக்கு பாவமாய் இருந்தது. அந்த குரங்கு குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தது. இந்த கருவி சும்மா இல்லாமல்,

" ஏ குரங்கே!, மழைக்கு முன்னே வீடு போய் சேர்ந்திருக்கலாமே !"  என்றது .

அந்த குரங்கு சுற்றும் முற்றும் பார்த்தது, அதற்கு குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரியலை. எனவே பார்த்துவிட்டு பேசாமல் இருந்தது.

ஆனால் உள்ளே இருந்த ஆண் குருவிக்கு இந்த குரல் கேட்டது , அது உடனே, " ஏய் யாருடன் பேசுகிறாய்  ? " என்றது.

"இதுவும் அந்த குரங்கிடம் பேசுகிறேன்." என்றதாம்.

அதற்கு அந்த ஆண் குருவி, " ஐயோ ! மரத்துக்கு மரம் தாவும் அதனிடம் நமக்கு என்ன பேச்சு?, நீ உள்ளே வா என்றதாம் " ..............

இது உடனே, " ஏன் பேசினா என்ன ? " என்றதாம்.

" வேண்டாண்டி, நான் சொன்னா கேளு, அது ரொம்ப பொல்லாதது, நம்மை ஏதாவது
செய்துடப்போரது........... இன்னும் குட்டிகளுக்கு சரி வர பறக்கக் கூட தெரியலை.....வேண்டாம் நமக்கு இந்த வம்பு" என்றது.

ஆண் குருவி சொன்னதைக்கேட்காமல் இந்த பெண் குருவி, மீண்டும் எட்டிப்பார்த்தது . அந்த குரங்கு அங்கேயே, குளிரில் நடுங்கிக்கொண்டு, நின்று கொண்டிருந்தது.............

இந்த பெண் குருவி," ஏய் , உன்னைத்தான்  இங்கே மேலே பாரு, நீ வீட்டுக்கு போகலையா? .இங்கே ஏன் நடுங்கிக்கொண்டு நிக்கற? " என்று விசாரித்தது.....................

இப்போது குரங்குக்கு புரிந்துவிட்டது குரல் எங்கிருந்து வருகிறது என்று. எனவே, அண்ணாந்து பார்த்து சொன்னது ," எனக்கு வீடு என்று எதுவும் இல்லை".............

தொடரும்.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 1:12 am

இதைக்கேட்ட குருவிக்கு ரொம்ப ஆச்சர்யம் தாங்கலை, இவ்வளவு பெரிய குரங்கு, அழகாய் 2 கை மற்றும் 2 கால் உள்ள மனிதர்களைப்போல இருக்கு, ஆனால் இருக்க வீடு இல்லையா? ...ஏன் அப்படி என்று தெரிஞ்சுகாட்டா அதுக்கு தலையே வெடித்திடும் போல இருந்ததாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 OXfOLL5xTuqfF1W7O3eU+funny-monkey-sitting-in-rain

அதனால் , ரொம்ப ஆச்சர்யமாய் , " என்ன, உனக்கு வீடு இல்லையா? "......என்றது .

மீண்டும் அந்த குரங்கு மேலே பார்த்து, " ஆமாம் .........எனக்கு வீடு இல்லை".........என்று கடுப்பாய் சொன்னது.

உடனே இந்த குருவி சும்மா இல்லாமல், "உனக்குத்தான் கை கால் எல்லாம் இருக்கே, நீ அழகாய் நல்லா கூடு கட்டிக்க வேண்டியது தானே? "............" அப்போ தானே மழை, புயல் எல்லாத்திலிருந்தும்   தப்பிக்கலாம்"...........என்றது.

குரங்கு ஏதும் பேசலை......பேசாமல் நின்று கொண்டிருந்தது. இந்த குருவி விடாமல், " என்ன பேச்சையே காணும்? " என்றது.

அதற்குள் அந்த ஆண் குருவி, " சொன்ன கேளுடி, குழந்தைகள் கூட தூங்கி போச்சு, நீ பேசாமல் கதவை சார்த்தி விட்டு உள்ளே வா " என்றது.

இது அதக் கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல், " நல்லா கரணை கரணையாய் கையும் காலும்
வெச்சிண்டு  இருக்கு அந்த குரங்கு, ஒரு வீடு கட்ட என்ன கேடாம்? " என்றது.

" ஏய், அதெல்லாம் பத்தி நமக்கு என்ன?..நீ வாயை முடு, உள்ளே வா "..என்றது ஆண் குருவி.

ஆனால் அந்த பெண் குருவி மீண்டும் கிழே பார்த்து, " ஏய் , குரங்கே!...........நான் தெரியாமத்தான் கேட்கறேன், நல்லா தின்னு தின்னு கொழுத்து போயிருக்க நீ, நல்லா கரணை கரணையாய் கையும் காலும் வெச்சிண்டு இருக்கே, ஒரு கூடு கட்ட துப்பில்லையே உனக்கு............ஆனால் எங்களைப்பார் , எங்களுக்கு குட்டி  குட்டி கால் இரண்டும் ஒரு சின்ன அலகும் தான் இருக்கு......... ஆனால் இதை வைத்தே நாங்க எவ்வளவு அழகாய் கூடு கட்டி இருக்கோம்....வெயில் மழை எதானாலும் எங்களுக்கோ எங்கள் குட்டிகளுக்கோ கஷ்டமே இல்லை............நீயும் இருக்கியே இவ்வளவு வளர்ந்து...................ஒரு கூடு கட்டக் கூட  தெரியாமல்."...................என்று கெக்கலித்து சிரித்தது...................ஜாலி ஜாலி ஜாலி

அவ்வளவு  தான் அந்த குரங்குக்கு  வந்ததே  கோபம் ...................

தொடரும் ....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 1:34 am

"ஏய், விட்டா என்னடி நீ பேசிண்டே   போற"? என்று கீழிருந்து உறுமியது...............

அப்போதும் விடாமல் இந்த பெண் குருவி........." ஏய் , நீ என்ன என்னை மிரட்டற?.....ஒரு கூடு கட்டக் கூட  தெரியலை  உனக்கு, சொன்னால் கோவம் மட்டும் வருதா? "என்றதாம்.

அந்த ஆண் குருவி, "ஏய், உனக்கு வாய் அதிகம், பேசாமல் உள்ளே வா"  என்று இதை உள்ளே இழுத்ததாம்..

அதற்கு அந்த பெண் குருவி, " இதோ இப்படி கதவை சர்த்திவிட்டால் அந்த குரங்கால் ஒன்றும் செய்ய முடியாது " என்று அப்பாவியாய் சொன்னதாம். அதுக்கு தெரியலை குரங்கு ஒரே நொடி இல் மரம் ஏறிவிடும் என்று................

குருவிகள் இரண்டும் கதவை சார்த்த பார்த்ததாம் ................ஆனால், அதற்கு முடியலை...........காலம் கடந்து போச்சு ..............

குருவி இன் ஏளனப் பேச்சால்  வெகுண்ட குரங்கு , " ஆமாம் எனக்கு கூடு கட்டத்தான் தெரியாதே தவிர அதை பிய்த்து எறியத் தெரியும் , இப்போ பார்"  என்று  சொல்லிக்கொண்டே நாலே எட்டில் கூட்டுக்கு   அருகில் வந்து விட்டதாம் குரங்கு..............

ஆண் குருவியும் பெண் குருவியும் குரங்கை கிட்டக்க பார்த்து அலறிய அலறலில் குட்டிகள் முழிச்சுடுத்தாம் ...........என்ன ன்னு தெரியாமல் அதுகளும்  'கீச் கீச்' என்று கத்தித்தாம்  ...............

கோபம் குறையாத அந்த குரங்கு, அந்த  ஆண் குருவி கெஞ்சியும்  கேட்காமல், நீண்ட தன் கையை விட்டு குருவிக்கூட்டை எடுத்து மழை இல் வீசியதாம் ..................சோகம்..............

கொட்டும் மழை இல் கூடும் பிஞ்சு போய் , குருவிக் குஞ்சுகளும்  மூலைக்கு ஒன்றாக சிதறிப்போச்சாம்.........

அந்த குருவிகள் இரண்டும் பாவம் அழுததாம்.......கூட்டைவீசிய குரங்கு குருவியை பார்த்து,
 
"அனாவசியமாய் என்னை கோபப்படுத்தியதன் விளைவை பார்த்தாயா?.............என்ன தற்பெருமை வேண்டி இருக்கு உனக்கு? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கும் , எதற்காகவும் யாரையும் இகழகூடாது........மீறினால் விளைவு விபரீதமாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு ஓடிப்போச்சாம்...............

அவ்வளோதான்.............."அதனால தான் நமக்கு தேவை இல்லாத விஷயத்தில் மூக்கை விடக்கூடாது, மத்தவர்களை அவர்களின் பலம் தெரியாமல் கிண்டல் பண்ணக் கூடாது... ..புரிந்ததா? " என்று கேட்கணும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 2:58 am

அம்மா , வி பொத்தானை பாவித்தேன் .. ரொம்ப அருமை ... புதிய கதை எனக்கு .
குழந்தைகளுக்கு ஏற்றார் போல் இருக்கு .. நன்றி க்ரிஷ்ணாம்மா .
அவசியம் சேஷு உக்கு சொல்லறேன் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 2:20 pm

shobana sahas wrote:அம்மா , வி பொத்தானை பாவித்தேன் .. ரொம்ப அருமை ... புதிய கதை எனக்கு .
குழந்தைகளுக்கு ஏற்றார் போல் இருக்கு .. நன்றி க்ரிஷ்ணாம்மா .
அவசியம் சேஷு உக்கு சொல்லறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1154082

மிக்க நன்றி ஷோபனா...............ஏதோ என்னால் சேஷுக்கு சில கதைகள் சொல்ல முடிவது ரொம்ப சந்தோஷம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:31 pm

அடுத்த கதை............."காத்தடிக்குது தூள்   பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது  அக்கா அக்கா கதவைத்திற................" இரவு அல்லது நாளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 30, 2015 11:15 pm

கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும் கதை நல்லாயிருக்கு கிருஷ்ணாம்மா. நான் இப்போ தான் படிச்சேன். கதை நகரும் விதம் ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நானும் என் பெண்ணுக்கு சொல்லி பார்க்கிறேன் அவளிடமிருந்த எந்த மாதிரி கமெண்ட்ஸ் வருதுன்னு பார்ப்போம்.

கதை சொல்லிட்டே இருங்க. படிக்க படிக்க நல்லாயிருக்கு.

மற்ற கதைகளையும் படிச்சுட்டு வர்றேன்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 46 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 25 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக