உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - குருக்ஷேத்திரம்
by lakshmi palani Today at 2:07 am

» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 9:27 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் Full PDF download
by BookzTamil Yesterday at 9:22 pm

» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» தங்கத்தால் உருவான விடுதி-ஹோட்டல்-
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» “தருமரை விட பல மடங்கு நல்லவன் விகர்ணன்” மகாபாரதத்தில் உணர்த்திய கண்ணன்
by RAJESH KANNAN R Yesterday at 8:48 pm

» தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
by vseenu Yesterday at 7:08 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:27 pm

» 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» 3 மாநில பா.ஜ., தலைவர்கள் மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» கண்
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:29 pm

» 'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» துளித்தேன்
by கோவிந்தராஜ் Yesterday at 3:26 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by RAJESH KANNAN R Yesterday at 3:12 pm

» இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:56 pm

» இதயத்திலிருந்தவனே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:48 pm

» பாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:45 pm

» முகமூடியின் பக்க விளைவுகள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:43 pm

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:37 pm

» இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:34 pm

» உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:27 pm

» நாம் அவர் பக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» குழந்தை உள்ளம்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தன்னம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» பாரத மாதாவைப் பார்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» எது சரி?
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» அறிஞர் அண்ணாவின் மொழிபெயர்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» அதுதான் சரி!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதிய காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» மறதி!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» தந்தை பெரியாரின் பண்பு
by ayyasamy ram Yesterday at 11:14 am

» எழுத்தாளர் மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,
by ayyasamy ram Yesterday at 11:13 am

» செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 10:55 am

» காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 10:34 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by rajabhai Yesterday at 10:11 am

» பொன்மொழிகள் - லியோ டால்ஸ்டாய்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அகிம்சை கற்பித்த குறள்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 6:02 pmதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas on Wed Jul 22, 2015 6:10 pm

நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 6:22 pm

முதல் கதை :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY

ஒரு குட்டி குரங்கு சாலை வழியாக குதித்து குதித்து போய்க் கொண்டிருந்ததாம்  .............அப்போ அது வாலில் ஒரு முள் குத்திடுத்தாம்..........ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதால வலி தாங்க முடியலை......என்ன செய்வது? எப்படி முள்ளை  எடுப்பது என்று தெரியலையாம்.......

சுத்தும் முத்தும் பார்த்ததாம்....அங்கே ரோடு ஓரம் ஒரு அம்பட்டன் ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டு இருந்தானாம்.................. அவன் கையில்  கத்தியை பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............

நேர அவனிடம் போய், "என் வாலில் முள் குத்தி  விட்டது, எடுத்து விடு "என்றதாம்..................

அவன் பயந்து போய்  "ஐயோ ! என்னால் முடியாது ...........அதை ஒரு டாக்டர் தான் செய்வார் " என்றானாம்.

"ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க, நீயே எடு" என்று அவனை மிரட்டியதாம்  அந்த குரங்கு.

அவனும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்க பார்த்தானாம்....குரங்கு ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவனால்..... அதனால் அவன் சொன்னானாம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆட்டினால் முள் வராது , உன் வால்  தான் வெட்டுப்படும்...எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு" என்றானாம்.

அது வும் சரி என்று சொன்னதே தவிர அவன் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டு துளி வால் வெட்டு பட்டு போச்சாம்........ரத்தமும்   வந்துச்சாம்.........

அவ்வளவு தான், ரத்தத்தை பார்த்து பயந்து போன  குரங்கு ஒரேடியாக கூப்பாடு  போட்டதாம். " இவன் என்வாலை வெட்டிட்டான்..............இவன் என்வாலை வெட்டிட்டான்........." என்று.

என்னடா  இது வம்பாய் போச்சு.............இன்று யார் மூஞ்சில முழித்தோமோ  என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கை சமாதானப்படுத்தப் பார்த்தான் அவன்.

ஏய், குரங்கே!............கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யாலாம்? என்று கேட்டானாம்..............

கோபமாய் இருந்த குரங்கு, "நீ  ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.

அதற்கு   அவன், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகு சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டு போட்டு விடவா?" என்று கேட்டானாம்.

கொஞ்சம் கோபம் குறைந்த குரங்கு, வாலில்  கட்டு போட ஒப்புக்கொண்டது. ஆனாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் கத்திவேண்டும் என்று கேட்டது. இவனும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே  தந்தானாம்.

குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து  போச்சாம்................

தொடரும்................

Last edited by krishnaamma on Wed Jul 22, 2015 7:58 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 6:24 pm

@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1152513

நன்றி ஷோபனா , அன்றே அடிக்கணும் என்று பார்த்தேன், கிருஷ்ணா அப்பா வீட்டில் இருந்ததால் முடியலை புன்னகை.......அது சரி எப்படி ஸ்ரீ ஆஞ்சநேயர் படம் மாத்தினீங்க? சூப்பர் ஆக இருக்கு ! ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜெய் ஸ்ரீ ராம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by balakarthik on Wed Jul 22, 2015 6:31 pm

அருமை தொடருங்கள் எங்க வீட்டுல நரியை வைத்து சொன்னாங்க இந்த கதையை ஊருக்கு ஊர் விலங்கினம் மாறுபடுமோ அது சரி வாலிருக்குற விலங்கு எல்லாத்துக்கும் இந்த கதை பொருந்தும்

ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 6:40 pm

கத்தியை கையில் வைத்துக்கொண்டு இருந்தால் சும்மா இருக்குமா கை?.......மேலுள்ம் அது குரங்கு வேற.................எனவே, கையில் கத்தியை பிடித்துக்கொண்டு சுழற்றியபடி போச்சாம்.............

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! OTY2CmPYQYyyd50HY0xT+risk-living

கொஞ்ச தூரத்தில் ஒரு கிழவி 'கூடை முடைந்து' கொண்டிருந்தாளாம்..............(இந்த மாதிரி புதிய சொற்களால், குழந்தைகளின் சொல் திறனை நாம் அதிகப்படுத்துகிறோம் புன்னகை ) ...........அவள் கஷ்டப்பட்டு கூடை முடைவதை பார்த்த குரங்கு,

" பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொண்டு பின்னு ...............என்றதாம்.

பாடிககு அந்த உதவி தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....

அதை பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி"...., இந்தா என்றதாம்.

அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...ஒரு ரெண்டு சுத்து கூட முடைந்து இருக்க மாட்டா, பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்.............

அவ்வளவு தான் இதை பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். ...." நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால்..அதை உடைத்து விட்டாயா? "............என்று சத்தம் போட்டதாம்.

பயந்து போன பாட்டி, வேண்டுமானால் கத்திக்கு பதிலாக இந்த குட்டி கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.

சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு................

தொடரும்..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 6:41 pm

@balakarthik wrote:அருமை தொடருங்கள் எங்க வீட்டுல நரியை வைத்து சொன்னாங்க இந்த கதையை ஊருக்கு ஊர் விலங்கினம் மாறுபடுமோ அது சரி வாலிருக்குற விலங்கு எல்லாத்துக்கும் இந்த கதை பொருந்தும்
மேற்கோள் செய்த பதிவு: 1152521

போடுங்கோ நான் அதை கேட்டது இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 7:36 pm

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Wz9bFot6S2G5fZCHZpvX+8067f78c412df95db66446adcc41832d
கொஞ்ச தூரம் அந்த அரைகுறையாக முடையப்பட்ட கூடையுடன் நடந்தது  அந்த குரங்கு.................அங்கு ஒருத்தன் மாம்பழம் வித்துக்கொண்டு இருந்தானாம்............அவனிடம் கூடை இல்லாததால் கை இல் வைத்து கொண்டு விட்டுக்கொண்டு இருந்தானாம்............

இதை பார்த்த குரங்கு அவனிடம் போய், " ஏம்பா!  உனக்கு கூடை வேண்டுமா? "  என்று கேட்டதாம்..

அவன் எங்கே இந்த குரங்கு எல்லா பழங்களையும் துவம்சம் செய்து விடுமோ என்று பயந்து ஆமாம் வேண்டும் என்று சொன்னானாம்...............

இந்தா இதை எடுத்துக்கோ, உன் பழங்களை இதில் வைத்து தூக்கிக்கொண்டு போய் உன் வியாபாரத்தை கவனி...........என்று அன்பாக சொன்னதாம்..........

அவனும் சரி என்று வாங்கி, அதில் பழங்களை அடுக்கி, தூக்கினானாம் பாரு......கூடை பிஞ்சு  எல்லா பழங்களும்  கொட்டிபோச்சாம்.............சோகம்

கோபம் வந்து விட்டது குரங்குக்கு............." நல்லதுக்கே காலம் இல்லை, நீ பாவம் என்று நான் நினைத்தால்.........என்ன செய்து வெச்சிருக்கே  ? " என்று சத்தம் போட்டது........

பயந்து போன அந்த ஆள், " பொதுவாய் நீ நல்லவன், உன்னை பார்த்தால்  நல்ல பசி யாக இருப்பது போல இருக்கு, அது தான் உனக்கு கோவம் வருகிறது, , எனவே, உன் கூடைக்கு பதிலாக 2 மாம்பழம் தரேன் வாங்கிக் கொள் ..... அதை சாப்பிட்டு பசியாறு " என்று அன்பாய் சொன்னனாம்........

குரங்குக்கும் அப்போது தான் நினைவில் வந்தது, காலை இல் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது.எனவே அவன் தந்த 2 மாம்பழங்களை வாங்கிக்கொண்டு நடையை கட்டியது ...........ஜாலிஜாலிஜாலி

தொடரும் .......................

Last edited by krishnaamma on Wed Jul 22, 2015 9:45 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by சரவணன் on Wed Jul 22, 2015 7:53 pm

ஆஹா இது சிந்துபாத், கன்னித் தீவு விட பெரிய கதையா தொடரும் போலருக்கே. ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலருக்கே.... ரிலாக்ஸ்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 7:56 pm

@சரவணன் wrote:ஆஹா இது சிந்துபாத், கன்னித் தீவு விட பெரிய கதையா தொடரும் போலருக்கே. ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலருக்கே.... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1152541

எஸ் ......எஸ் ....எஸ் .............ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 8:12 pm

அது குட்டி குரங்கானதால், 1 மாம்பழம் சாப்பிட்டதுமே அதுக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு.............அப்படியே கொஞ்சநேரம் தூங்கி விட்டது.............கண்ணு தொறந்து பார்த்தல் சாயங்காலம்............

மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........

பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............

ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................

அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................

அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.

அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
"எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................

அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன். புன்னகை

மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................

தொடரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas on Wed Jul 22, 2015 8:19 pm

க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma on Wed Jul 22, 2015 9:41 pm

@shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ஷோபனா புன்னகை....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் புன்னகை................அப்போ தான் பிடிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas on Wed Jul 22, 2015 10:00 pm

@krishnaamma wrote:
@shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ஷோபனா புன்னகை....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் புன்னகை................அப்போ தான் பிடிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152581

நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by விமந்தனி on Wed Jul 22, 2015 10:15 pm

கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை