புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 7:22 pm

புகைப்படங்கள் மூலம் உறவுகளை பலப்படுத்தலாமே!

என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; பழைய புகைப்படங்களை துடைத்து சுவற்றில் மாட்டிக் கொண்டிருந்தார். 'இப்போதெல்லாம் யார் பழைய புகைப்படங்களை மாட்டுகின்றனர்; எதற்கு இந்த வீண் வேலை...' என்றேன்.

அதற்கு அவர், 'அப்படி சொல்லாதே... நம் பெற்றோர் மற்றும் முன்னோர், உறவினர் புகைப்படங்களை இப்படி மாட்டி வைப்பதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களோட வேர்களை அறிமுகப்படுத்துறோம். வெளியே செல்லும் போது நம் தாய், தந்தையரின் படங்களை வணங்கிச் செல்ல வலியுறுத்துவதுடன், பெற்றவர்கள் நம்மை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டனர் என்று குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லணும்.

படங்களில் உள்ள உறவினர்களை சுட்டிக் காட்டி, யார் யார் என்ன உறவு முறைன்னு சொல்லிக் கொடுக்கணும். நாம, நம்ம வீட்டு பெரியவங்க படங்கள மூலையில் தூக்கிப் போடுறதால தான், நம்ம குழந்தைகளும், வயசான காலத்தில நம்மள மூலையில் தூக்கிப் போடுறாங்க; புகைப்படங்கறது பழைய சம்பவங்கள் நினைவுபடுத்துற ஒரு அழியாத நினைவுச் சின்னம்...' என்றார்.

நண்பரின் பதில் என்னை சிந்திக்க வைத்தது.

வி.ஜீவானந்தம், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 03, 2014 9:24 pm

புகைப்படங்கறது பழைய சம்பவங்கள் நினைவுபடுத்துற ஒரு அழியாத நினைவுச் சின்னம்...
அருமையிருக்கு

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:16 pm

விமந்தனி wrote:
புகைப்படங்கறது பழைய சம்பவங்கள் நினைவுபடுத்துற ஒரு அழியாத நினைவுச் சின்னம்...
அருமையிருக்கு

எஸ்...எஸ்.....எஸ்..........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:17 pm

அட! தெருவிலுமா?

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம்... நிசப்தமாக இருந்த எங்கள் தெருவில், திடீரென, வாசலில் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தேன்.

மூன்று இளம்பெண்கள் மற்றும் மூன்று வாலிபர்கள். எங்கிருந்தோ பைக்குகளில் வந்தவர்கள், வண்டியை நிறுத்தி ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்; யாரும் நிதானத்தில் இல்லை. பெண்கள் ஓடுவதும், பையன்கள் அவர்களை விரட்டி விரட்டி மொபைல் போன் கேமராவில் படம் பிடிப்பதும், பின் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சிரிப்பதும், நடைபாதையில் புரளுவதுமாய் அமர்களம் செய்தனர்; அந்த கோலத்தில் படமும் எடுத்துக் கொண்டனர்.
நான், அவர்களைப் பார்த்து, 'யார் நீங்க.... எங்கிருந்து வர்றிங்க, என்ன செய்துகிட்டிருங்கீங்க...' என்று சத்தம் போட்டேன்.

'ஒண்ணுமில்ல ஆண்டி... சும்மா தமாஷ்...' என்றான் ஒருவன். அதில் ரொம்ப அலம்பல் செய்த பெண்ணைக் கூப்பிட்டு, 'பாத்தா படிக்கிற பொண்ணுங்களா தெரியறிங்க... அவனுங்க மேலே இப்படி விழுந்து, புரண்டு படம் புடிச்சுக்கிறீங்களே... இன்னைக்கு இது தமாஷா தெரியலாம்; நாளைக்கு அவனுங்க எடுத்திருக்கிற போட்டோக்களால உங்க வாழ்க்கைக்கு பாதிப்பு வராதுன்ங்கிறது என்ன நிச்சயம்.

அந்த படங்கள வச்சு உங்கள மிரட்டலாம்; நெட்ல போட்டு அசிங்கப் படுத்தலாம். இதனால, உங்க எதிர்காலமே பாழாக வாய்ப்பு இருக்கு. எத்தனை நாடகத்துலயும், சினிமாவுலயும் பாத்திருப்பிங்க... புத்தி வேணாம். ஒழுங்கா அவங்கவங்க வீட்டுக்குப் போங்க இல்லன்னா, போலீசுக்கு போன் போடுவேன்...' என்று மிரட்டியதும், மெதுவாக முணுமுணுத்தப்படி, பைக்கில் பறந்தனர்.
பீச்சுகளிலும், பப்புகளிலும் போட்ட ஆட்டங்கள் போதாதென்று, இப்போது ஆள் இல்லாத தெருக்களிலும் அரங்கேற துவங்கிவிட்டனரே என்ற கவலை ஏற்பட்டது.

பெண்களை கண்காணிக்காமல், கண்டிக்காமல் விட்டுவிட்டு அசம்பாவிதம் நேர்ந்த பின், 'ஐயோ... குய்யோ...' என்று அரற்றுவதில் என்ன லாபம் பெற்றோர்களே!

கமலை, சேலையூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:18 pm

எனக்கு தெரிந்தவரின் மகன், சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்கிறார். அவர் மகனுக்கு, அதே துறையை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்தார். இருவருக்கும், லட்சத்தை தாண்டி சம்பளம்.

அவர்களுக்கு முதலில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் வேலைக்கு இடைஞ்சல் என, அந்த பெண் குழந்தையை, அப்பா வழி தாத்தா வீட்டில் வளர விட்டனர். அடுத்து, மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்கவே இந்த குழந்தை, அம்மா வழி தாத்தா வீட்டில் வளர விடப்பட்டது.

முதல் குழந்தைக்கு தற்போது, நான்கு வயது; இரண்டாவது குழந்தைக்கு, இரண்டு வயது. இரண்டு குழந்தைகளுமே, பெற்றோர் பாசம் கிடைக்காமல் வாடிப்போய் வளர்ந்து வருகின்றனர். பிள்ளைப் பாசம் இல்லாமல், பணமே குறியாக உள்ள இந்த மாதிரி ஜென்மங்களை என்னவென்பது!

முதியோர்களை பராமரிக்க மனம் இல்லாமல், முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளுவதை போல, இந்த பிள்ளைப்பாசம் இல்லாதவர்களுக்கு, 'குழவி இல்லம்' ஏற்படுத்திக் கொடுத்தால், சுயநல இன்பத்துடன் வாழ்வர்.

பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதாது; அதற்கு பாசத்தையும் ஊட்டி, வளர்க்க வேண்டும் என்பதை, இக்கால இளம் தம்பதியினருக்கு யார் அறிவுரை சொல்வது?

கு.அருணாசலம், தென்காசி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 7:54 pm

பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்...

என் தோழியின் கணவர் கட்டடங்களுக்கு ஒயரிங் செய்யும் எலக்ட்ரிஷியன். அத்துடன், மின் சாதனங்களை பழுது பார்க்கவும் செய்வார். சில மாதங்களுக்கு முன், புதிதாக மின்சாதன பொருட்களை விற்கும் சில்லரை விற்பனை கடை ஒன்றை திறந்தார்.

சமீபத்தில், நானும், என் கணவரும் தோழியின் கடை வழியாக செல்ல நேர்ந்தது. நான்கைந்து வாடிக்கையாளர்கள் நின்றிருக்க, என் தோழி தனியாளாக அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தாள். வாடிக்கையாளர்கள் சென்றதும், அவளிடம் வியாபாரத்தை பற்றி விசாரித்தோம். 'ரெண்டு மாசத்துலேயே பொருட்களோட பேர், பயன்பாடு, விலை பற்றி முழுசாக தெரிஞ்சுக்கிட்டேன்; இப்போ எல்லாமே அத்துப்படி. நான் கடைய பாத்துக்கிறதால என் கணவர் வெளி வேலைகள கவனிச்சிக்குறாரு; அதோட செலவு போக, மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்...' என்று சொன்னாள்.

திருமணம் ஆகும் வரை வெளியுலகமே தெரியாத வெள்ளந்தியாக இருந்த தோழியின் தற்போதைய வளர்ச்சியை நினைத்து பெருமையாக இருந்தது.பெண்களை கிணற்று தவளையாக நினைத்து, ஒரு வட்டத்திற்குள் அடக்காமல் வாய்ப்பு கொடுத்தால், வருமானத்தை பெருக்கி, வாழ்வை செழிக்க செய்வர் என்பதற்கு, என் தோழி ஒரு உதாரணம்.

வி.மோகனாராஜன், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 7:55 pm

இயற்கைச் சூழலும் கல்வியே!

கிராமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர், தன் குழந்தைகளை மாதம் ஒருமுறை அருகிலிருக்கும் நர்சரி கார்டன், செங்கல் சூளை, திராட்சைத் தோட்டம் மற்றும் ஜல்லி உடைக்கும் குவாரி போன்றவற்றிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இது குறித்து, அவரிடம் கேட்டபோது, அவர், 'பொதுவாக குழந்தைகள சினிமா, கடற்கரை, கோவில் திருவிழாக்களும், சொந்தக்காரங்க வீடுகளுக்கும் கூட்டிச் செல்றது தான் வழக்கம். ஆனால், அப்படி செய்யாம, இந்த மாதிரி மாறுபட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்றதால, அவங்களுக்கு புது அனுபவம் கிடைக்கிறது.

'நர்சரி கார்டனுக்கு செல்லும் போது அங்குள்ள செடிகள், மரக்கன்றுகள், பூச்செடிகள் போன்றவற்றை பாக்குற போது, மனசுக்குள் உற்சாகமாகி, தாங்களும் செடி வளர்க்கணுன்னு ஆசைப்படுவாங்க. செங்கல் சூளைய பாக்கற போது, செங்கல எப்படி தயாரிக்கறாங்க, அங்க இருக்கிற தொழிலாளர்கள் எப்படி எல்லாம் வெயிலில் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்கன்னு புரியுற போது, வாழ்க்கையோட இன்னொரு பகுதியையும் தெரிஞ்சுக்கிறாங்க.

இதனால, படிப்பில கவனம் செலுத்துவாங்க. நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு இடங்களுக்கும் கூட்டிச் செல்லும் போது, அவை குழந்தைகளுக்கு பயனுள்ள பொழுதுபோக்காக அமைவதுடன், பொது அறிவு வளர்ச்சிக்கும் உதவும்...' என்றார்.

இதுபோன்ற இடங்களை நாம் மேலோட்டமாக பார்க்கிறோம். ஆனால், அவற்றால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பது உண்மை தான்!

இ.ஆல்பர்ட் நெல்சன், கொடைரோடு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 7:56 pm

சட்டைப்பை இடமா, வலமா?

சமீபத்தில், என் நண்பரை சந்தித்தேன். அவர் அணிந்திருந்த சட்டைப் பை இடப்பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கம் தைக்கப்பட்டிருந்தது. புதிய பேஷனாக இருக்குமோ என எண்ணி, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'இடதுபக்கப் பாக்கெட்டில், மொபைல் போன் வைக்கும் பழக்கம் நம்மிடையே வந்து விட்டது; ஆனால், அந்த இடப்பக்கத்தில் தான் நம்முடைய இதயம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம்.

மொபைல் போனிலிருந்து வெளியேறும் மின்னணு கதிர் வீச்சுகளும், மென் துடிப்புகளும் இதயத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால் தான், சட்டைப் பையை இடப் பக்கத்திலிருந்து, வலப் பக்கத்துக்கு மாற்றி விட்டேன்; வரும் முன் காப்பது தானே புத்திசாலித்தனம்!' என்றார். நண்பருடைய விளக்கம், எல்லாருக்கும் ஒரு வழிகாட்டுதல் என்று எனக்கு தோன்றியது.

எஸ்.ராமன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 10:56 am

krishnaamma wrote:நண்பர்களுக்கு தண்டச் சோறு போடுகிறீர்களா?

சோறு போட்டவர் அறிவதில்லையா.. இவருக்கு நம்மால எத்தனை நாட்களுக்குத்தான் போட முடியும். காலம் நேரம் கண்டிப்பாக மனித வாழ்க்கையை மாற்றக்கூடிய சுட்டிகள். ஒரு வகையில் அவரும் அதை உணர்த்தியிருக்கலாம்.

நல்ல பதிவு.
நன்றி : வாரமலர் —கோ. பிரசன்னா, கோவை.
மேற்கோள் செய்த பதிவு: 997807

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 12:58 pm

அடுத்த தலைமுறையையும் தாக்கும் மது அரக்கன்!

சமீபத்தில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். அன்றைய தினம், எட்டு வயது மதிக்கத்தக்க கிராமத்து சிறுவன் ஒருவன், வயிற்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தான்; அவனது அலறல் சத்தம் மருத்துவமனையை அதிர செய்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் அவனை பரிசோதனை செய்ததில், அவனது குடல்வால் பாதித்திருப்பதை அறிந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்ல கூறினார்.

முதலில், அவனுக்கு மயக்க ஊசி போடப்பட்டது. ஆனால், மயக்க ஊசியின் மருந்து, அச்சிறுவனின் உடம்பில் உள்வாங்கியும், மயக்க நிலை நீடிக்கவில்லை. அவனுக்கு சட்டென்று நினைவு திரும்பியதில், உச்சகட்ட வலியால் துடிதுடித்து அழுதான். இதைக் கண்ட மருத்துவர் செய்வதறியாது திகைத்தார். பின் நிதானித்து, ரத்த பரிசோதனை ரிப்போர்ட்டை மறுபரிசீலனை செய்ததில், அவனுடைய ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததால், அச்சிறுவனுக்கு மயக்கம் வரவில்லை என்பது புரிந்தது.

மருத்துவர், அச்சிறுவனை நோக்கி, 'நீ தண்ணி அடிப்பியா... உண்மையைச் சொல்லு...' என, கண்டிப்புடன் கேட்டார். அவன், 'இல்லை...' என்று மறுத்தான்.

மருத்துவர், அவனது தாயாரிடம் பக்குவமாக விசாரித்ததில், சிறுவனின் தாய், தன் மகனுக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும், தன் கணவர்தான் நிரந்தர குடிகாரர் என்று, கண்ணீர் மல்க புலம்பினாள்.
குடிகார தந்தையின் ரத்த மரபணுக்கள் தான் அவனது பிறப்பு. அதாவது, இச்சிறுவனின் ரத்தமும், ஆல்கஹாலின் தன்மையை பெற்று விட்டது. இந்த உண்மையை அவர்களிடம் விளக்கி, சிகிச்சையை தொடர்ந்தார்.

மருத்துவரின் விடாமுயற்சியால், அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
ஒருவனுடைய குடிப்பழக்கம், அவனை மட்டுமல்லாமல், அவன் சந்ததிகளையும் பாதிப்படைய வைக்கிறது.
இளைஞர்களே... தீமையை தரும் மதுவை அருந்தாதீர்கள்; மதுவை விலக்கி, உங்கள் வாழ்க்கையையும், சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் காப்பாற்றுங்கள்!

பா.கோதண்டராமன்,திருபுவனம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக