புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
68 Posts - 45%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
5 Posts - 3%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
9 Posts - 4%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
6 Posts - 3%
Jenila
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
viyasan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 10 of 29 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 03, 2018 12:49 pm

SK wrote:அந்த நாள் அருமையான படம் இதை ஒரேயொரு முறை  தான் பார்த்திருக்கிறேன் மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்க காத்திருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1255722

"அந்த நாள்"  சினிமா அந்த நாளிலேயே,வந்தவுடன் பார்த்தேன்.
அக்கால சினிமாவில் பாட்டுகள் நடனங்கள் அதிகம் இடம் பெறும்  
ஆனால் இதில் பாட்டுகளும் கிடையாது நடனமும் கிடையாது .
நன்முறையில் எடுக்கப்பட்ட துப்பறியும் கதை.
பொதுவாக டைரக்ஷனில் சில குறைபாடுகள் இருக்கும்.
அவை பெரிதாக விமரிசிக்க பட்டதுண்டு.
ஆனால் இதில் directional flaw இல்லை என்று சொல்லப்பட்டாலும்
இதிலும் ஒரு குறை கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் காட்சியில் சிறிது தூரத்தில் இருந்து . சிவாஜி கணேசன் சுடப்படுவார்.
பிறகு flash back காட்சிகள் . கடைசி காட்சியில் கொலை நடந்த சம்பவம்,
பண்டரிபாய்,கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு close range இல் கணேசனை
தேசத்துரோகம் செய்யாதே என வற்புறுத்த கணேசன் மறுத்து துப்பாக்கியை பிடுங்க
முயற்சிகையில் துப்பாக்கி வெடித்து அவர் இறப்பார்.
கடைசி காட்சி --அந்த காலத்தில் பெரிய சஸ்பென்சாக பேசப்பட்டது.
ஜாவர் சீதாராமன் துப்பறியும் நிபுணராக வந்து (வெளுத்து வாங்கினார்).
எதிர்பார்த்தது என்று சொல்லி முடிப்பார்.  
அருமையான படம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 6:13 pm

03.01.2018 

1954ல, கொல்கத்தால விஸ்வநாதன்னு ஒருத்தர் நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தாராம். இவரை ஹீரோவா நடிக்க வைக்க S பாலசந்தர் தீர்மானம் செஞ்சாராம். இந்தப் படத்தில பாட்டு கெடயாது, டான்ஸ் கெடயாது, சண்ட கெடயாது. போதுமே, கண்டுபுடிச்சிருப்பீங்களே. ஆமாங்க................... ஆமா. SB முதல் முதலா AVM ல டைரக்ட் செஞ்ச படம், 

அந்த நா............................ள். 

விஸ்வநாதனை வச்சு பா..........................தி படம் எடுத்தாச்சாம். செட்டியார் படத்தை பார்த்திருக்கா............ர். 

"சரியில்ல, சரியில்ல. விஸ்வநாதனை வச்சு படத்தை எடுத்தது சரியில்ல, எனக்கு புடிக்கல, சிவாஜியை வச்சு எடுங்க. படத்தை மறுபடியும் சிவாஜியை வச்சு எடுங்க" ன்னு செட்டியார் சொல்லிட்டா...............ர். 

SB ஊஹூம். செட்டியாருக்கு 'சுர்....................ரு'ன்னு கோவம். வாசுமேனன்னு தயாரிப்பு நிர்வாகி. அவரை செட்டியார் கூப்ட்டாராம். 

"SBக்கு பாக்கி சம்பளம் எவ்வளவோ, அதை கொடுத்து கணக்கை முடிச்சு அவரை அனுப்பிச்சுருங்க. இதுவரை எத்தனை ரீல் படம் எடுத்திருக்கோ, அத்தனை ரீலையும் எடுத்துட்டு வாங்க. என் கண் முன்னாலேயே எல்லா...........த்தையும் போட்டு எரிங்க." ன்னு திடுதிப்புன்னு சொல்லிட்டாராம். 

SB, அம்புட்டுதான், வெலவெலத்து போயிட்டார். பின்ன, இருக்காதா............ ? உடனே, 

"சா..................ர், இஸ்ட்டா....................ப், நான் எடுத்த படத்தை, எனக்கு முன்னாலேயே எரிக்க போறீங்களே, நல்லாவா இருக்கு. சரி சரி, நான் உங்க வழிக்கே வந்துர்றேன். நீங்க சொன்ன மாதிரியே சிவாஜியை வச்சு , அவர் சம்பந்தப்பட்ட ஸீனை எல்.............லாம் திருப்பி எடுத்துர்றேன்." ன்னு கெஞ்சா................த குறையா, அழா..........................த குறையா சொன்னாராம். 

அதனால தான் அந்தநாள் படம் நெருப்பிலிருந்து தப்பிச்சுது. - தினத்தந்தி 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 6:53 pm

03.01.2018 

ஒரு பாட்டை ஒருவர் முதல் பலர் பாடியிருக்காங்க. ஆனா ஒரே பாட்டை ஒருத்தருக்கு மேல எழுதியிருக்காங்களா? இதோ சில. இந்தப் பாடல்களை ரெண்டு பேர் எழுதியிருக்காங்க. 

எப்பவுமே ரெண்டு மொழிகளில உள்ள பாட்டுகள இங்கலிஷ் பகுதியை ராண்டார் கை எழுதுவாராம். தமிழ் பகுதிகளை நம்ம கவிஞர் யாராவது எழுதுவாங்களாம். ஹிந்தி வரிகளுக்கு ப்பி.பி.ஸ்ரீனிவாஸைத் தேடுவாங்களாம்.

உலகின் முதலிசை தமிழிசையே - தவப்புதல்வன் - இந்தப் பாடலில வரும் தமிழ்ப் பகுதியை கண்ணதாசனும், ஹிந்திப் பகுதியை பர்கத் சைபி ன்னு ஒருத்தரும் எழுதியிருக்காங்க.

தூ ஹை ராஜா மை ஹூன் ராணி - வறுமையின் நிறம் சிகப்பு - இந்திப் பகுதி ப்பி.பி.ஸ்ரீனிவாஸ் & கடைசி நாலு வரி கண்ணதாசன் எழுதியிருக்காங்க. நாலு வரிதானே நாம ஏன் எழுதணும்னு கண்ணதாசன் நெனச்சாரா? இல்லியே. ஈகோ இல்லாம எழுதி குடுத்துட்டார்ல. 

நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி - தமிழ்ப் பகுதியை வாலியும், இங்க்லீஷ் வரிகளை ராண்டார் கை எழுதியிருக்காங்க. 

சரி இதுல்லாம் ரெண்டு மொழிகளில வரும் பாட்டு. ஒரே மொழில வரும் பாட்டை ரெண்டு பேர் எழுதியிருக்காங்களா? அப்படி கேட்டால் ஆ.................................மா. 

மருதமலையானே - துணைவன் - முதல் பாதிய மருதகாசியும், அடுத்த பாதியை கண்ணதாசனும் எழுதினாங்க. பாடல் முழுசையும் நாந்தான் எழுதுவேன்னு ரெண்டுபேரும் சொல்லலியே.

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு - சிகப்பு ரோஜாக்கள் - பல்லவியை கண்ணதாசனும், சரணங்களை கங்கை அமரனும் எழுதியிருக்காங்க.

சரி....................... இப்டி ஒரு பாட்டை ஸ்ப்ளிட் செஞ்சு ரெண்டு பேர் எழுதியிருக்காங்க. அந்தப் பாட்டுகளும் ஹிட்டோ ஹிட்டாயிருக்கு. ஆனா இந்தப் விஷயத்தில வைரமுத்துவைப் பத்தி ஒண்ணு படிச்சேன். தாய்க்கு ஒரு தாலாட்டு படப் பாட்டுக்களில ஒரு பாட்டு மட்டும் வாலிக்குக் குடுத்து, மத்த எல்லா பாட்டுக்களையும் வைரமுத்துவுக்கு குடுத்திருக்காங்க. ஆனா வைரமுத்து மொறச்சுகிட்டு ஒரு பாட்டை மட்டும் வேற ஒருத்தருக்குக் குடுக்கணும்னா எல்லா பாட்டையும் அவருக்கே குடுத்துருங்க ன்னு சொல்லிட்டாராம். அவருக்கென்ன........... ஒரு படப் பாடல்களை ஒருத்தரேதான் எழுதணுமாம். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 7:23 pm

03.01.2018 

16 வயதினிலே 

சில்வர் ஜூபிலி படம். 25 நாள்ல எடுக்கப்பட்ட படமாம். படம் எடுத்து முடிஞ்சவுடன், கொறஞ்சது 20 தடவையாவது டிஸ்ட்ரிப்யூட்ட்டர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டதாம். 

விநியோகஸ்தர்கள் இல்லாமலேயே, தயாரிப்பாளரால் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் தமிழ் படமாம். 

இந்தப் படம்தான் முதல்முதலா அவுட் டோர் ஷூட்டிங், அதாவது கிராமத்திலேயே போயி முழுப்படமும் எடுக்கப்பட்ட படமாம். 

டைரக்ட்டராவும், திரைக்கதைக்காகவும் பாரதிராஜாவுக்கு முதல் படமாம். 

கௌண்டமணிக்கு முதல் படமாம். 

ரஜினிகாந்துக்கு முதல் கலர் படமாம். 

இளையராஜாவும், கமலும் சேர்ந்த முதல் படம். தவிர பாரதிராஜா - ரஜினி, பாரதிராஜா - ஸ்ரீதேவி இவங்களுக்கும் முதல் படம். 

கங்கை அமரன் பாடலாசிரியரான முதல் படம். 

கமலுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கெடச்சுதாம். 

சிறந்த இயக்குனருக்காக பாரதிராஜாவுக்கும், சிறந்த நடிகருக்காக கமலுக்கும் தமிழக அரசின் திரைப்பட விருது கெடச்சுதாம். 

அஞ்சு மாநில விருது கெடச்ச படமாம். 

ஹிந்தியிலேயும், தமிழிலேயும் ரீமேக் ஆச்சாம். ரெண்டிலேயும் ஸ்ரீதேவிதான் ஹீரோயினாம். 

பாரதிராஜா முதலில் இந்தப் படத்துக்கு 'மயில்'னு பேர் வச்சு, ரோஜாரமணி, நாகேஷ் இவங்கள நடிக்க வைக்கலாம்னு நெனச்சு, 'இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவன'த்திலே இருந்து நிதி வாங்கி படம் எடுக்கலாம்னு நெனச்சாராம். ஆனா அந்த நிறுவனம் அவரோட ஸ்க்ரிப்ட்ட பாத்துட்டு, முடியாதுன்னு சொல்லிருச்சாம், அதுவும் எந்த ஒரு காரணமுமே இல்லாம. இதப் பத்தி கேள்விப்பட்ட SPB, பாரதிராஜாவ டைரக்டர் ராஜாகண்ணு கிட்ட இன்ட்ரdயூஸ் செஞ்சு வச்சாராம். அந்த டைரக்டர்ட்ட பாராதிராஜா, சிகப்பு ரோஜாக்கள் பத்தியும், மயில் பத்தியும் சொன்னாராம். அவருக்கு சிகப்பு ரோஜாக்கள் மேல இன்ட்ரெஸ்ட் இல்லேன்னுட்டாராம், மயில் வேணும்னா பாக்கலாம்னாராம். ஆனா அந்தப் படத்துக்கு பேர மாத்த சொன்னாராம். அதுக்கப்புறம்தான் 'மயில்' என்ற பேரு '16 வயதினிலே'ன்னு மாறுச்சாம். திரைக்கதையில அங்கங்க கொஞ்சம் மாத்தி, அப்புறமா படத்த எடுக்க ஆரம்பிச்சாங்களாம். 2013 ல இத ஒரு இண்ட்டர்வ்யூல பாரதிராஜா சொன்னாராம். 

பாரதிராஜா கமலை ஹீரோவாகப் போட நெனச்சாராம். கமல் அதிகமான பணம் கேட்டாராம். அதனால சிவகுமார நடிக்க வைக்க மத்தவங்க ஏற்பாடு செஞ்சாங்களாம். ஆனா பாரதிராஜா அந்த ரோல்ல கமல்தான் நடிக்க முடியும்னு சொல்லி கமல் கேட்ட பணத்துல கொஞ் .......................... சம் கொறச்சு கொடுத்தாராம். கமலும் ஒத்துகிட்டாராம். 

'செவ்வந்தி பூ முடிச்ச' பாட்டையும் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாட்டையும் மொதல்ல SPB யைத்தான் பாட வைக்கணும்னு இளையராஜா நெனச்சாராம். ஆனா அந்தச் சமயத்தில SPB க்கு தொண்டை சரியில்லாம போச்சாம். அதனாலதான் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கார். 

இந்தப் படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்திலேயே box office ஹிட்டாம். படம் பணத்தை அள்ளுனதினால, ப்ரொட்யூஸர் ராஜ்கண்ணு income tax வந்திருமோன்னு பயந்து எங்கேயோ போய் ஒளிஞ்சுகிட்டாராம். 



[அப்புறம் மாட்டிகிட்டாரா இல்லியா?]

பாரதிராஜாவின் கதையையும், இளையராஜாவின் இசையையும், ஸ்ரீதேவி, ரஜினி, கமல் நடிப்பையும் திரை விமர்சகர்கள் பாராட்டினாங்களாம். 

ரஜினிக்கு அப்போ தமிழ் சரளமா பேச வராதாம். பாக்கியராஜ் தான் வசனத்தை எல்லாம் ரஜினிக்கு வாசிச்சு காட்டி பேச சொல்லி கொடுத்தாராம். 


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 8:12 pm

03.01.2018

அப்போ பாலசந்தர் மேடை நாடகங்களை நடத்திட்டிருந்தாராம். 'அரங்கேற்றம்' படத்துக்கப்புறம், அதே மாதிரி வித்தியாசமான படங்களை எடுக்க ப்ளான் பண்ணிட்டாராம். அபூர்வ ராகங்கள் படத்துக்கு மத்த எல்லாரையும் செலெக்ட் செஞ்சுட்டாராம். ஆனா ஒரே ஒரு கேரக்டருக்கு ஆளைத் தேடினாராம். கன்னட நடிகர்களையும் பார்த்தாராம். யாரும் அவர் நெனச்ச மாதிரி இல்லியாம். 

அந்தச் சமயத்தில, சென்னை ஃபிலிம் ச்சேம்பரில் ஆக்டிங்க்கான பயிற்சி பள்ளி ஒண்ணு இருந்துச்சாம். அந்தப் பள்ளியில மூணு பேர் டாப் ரேங்க்கர்ஸாம். அந்த மூணு பேரையும் பாலச்சந்தர் பார்த்தபோ ஒருத்தர மட்டும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். எதையாவது நடிச்சுக் காட்டச் சொன்னாராம். அந்த ஒருத்தர் சிவாஜி மாதிரி நடிச்சு காட்டினாராம். உடனே பாலச்சந்தர் "என்னப்பா, என்ன செய்ற?" ன்னு கேட்டாராம். அவர் "சிவாஜி சார் மாதிரி நடிக்கிறேன்."ன்னு பயந்து சொன்னாராம். "நீ சிவாஜி மாதிரி நடிக்கணும்னா, நான் சிவாஜியையே நடிக்க வச்சிருப்பேனே. உன்னை கூப்டிருக்க மாட்டேனே." ன்னு சொல்லி, அங்கிருந்து கோபமா எழுந்து போயிட்டாராம். 

ரெண்டு நாளாச்சு. அந்த நபர் பாலச்சந்தர் முன்னால வந்து பவ்யமா நின்னாராம். ஸ்டைலாவும், ஆக்ட்டிவாவும் நடந்துட்டு, அவர் சொந்த நடையைப் போலவே, வசனத்தை அள்ளி வீசியிருக்கார். "அப்பாடா, என் கதைக்கு, அந்த கேரக்டருக்கு, நீதாம்பா சரியான ஆள்" னு தமிழ் சினிமா உலகத்துக்கு அறிமுகம் செஞ்சு வச்சார்.

அவரே நெனச்சு பார்த்திருக்க மாட்டார், அவர் பின்னால சூப்பர் ஸ்ட்டார் ஆவார்னு. அவர் பேர் 'சிவாஜிராவ் கெய்க்வாட்' ன்னு பேராம். 'அபூர்வ ராகங்கள்' படத்துக்காக அவர் பேர 'ரஜினிகாந்த்' னு வச்சாராம். படமும் அமோகமா சக்ஸஸ் ஆச்சு. 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 8:40 pm

03.01.2018

அவளுக்கென்று ஒரு மனம் 1971

ஸ்ரீதர் தயாரிச்சு, இயக்கிய படம். ஒரே நேரத்திலே தமிழிலயும், ஹிந்திலேயும் எடுத்தார். ஸ்ரீதருக்கு இப்போதிலிருந்து தான் கஷ்டம் தொடங்க ஆரம்பிச்சுதாம். காஞ்சனா, பாரதி, ஜெமினி, முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த் நடிச்சிருக்காங்க. 

தமிழிலயாவது சுமாரா ஓடுச்சாம். 'துனியா க்யா ஜானே' பேர்ல வந்த இந்தி படம் டுபுக்குன்னு மூழ்கிருச்சு. 

"மலர் எது என் கண்கள் தானென்று" என்கிற சுசீலா பாட்டு இருக்குல்ல. 'காம்போ ஆர்கன்' ன்னு ஒரு வாத்தியக் கருவியாம். அதுக்கென்னன்னு கேக்குறீங்களா? இந்தப் பாட்டுக்கு ஒருத்தர் இதை யூஸ் செஞ்சாராம். அது யாருன்னு நெனக்கிறீங்க? வேற யாருமில்ல. இ ................ளை ............................ய ........................... ரா ............................... ஜா..................... ஆமாங்க, இளையராஜா இந்தப் பாட்டுக்கு இந்த காம்போ ஆர்கன் வாசிச்சிருக்காராம். 

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 Ww0qqs
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 10 K37kso
இந்தப் பாட்டுக்கு எம்.எஸ்.வி. போட்ட மெட்டைப் புகழ்ந்து எழுதியிருக்காராம், இளையராஜா. எம்.எஸ்.வி. மேலே அவருக்கு இருந்த மரியாதை இந்தப் பாட்டுக்கப்புறம் கூடிருச்சாம். 

இந்தப் படத்தை பற்றிய ஒரு புதுமையான தகவல். அந்தக் காலத்தில இந்திப் படங்களை ரிலீஸ் செய்யும்போது மும்பைல விடுவாங்களாம். அங்கே ஓடுறதைப் பொறுத்து, அந்தப் படத்தின் விலை பிக்ஸ் செய்யப்பட்டு, மத்த ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் படத்தை வாங்குவாங்களாம். 'அவளுக்கென்று ஒரு மனம்' இந்திப் படம் மும்பையில ரிலீஸ் ஆச்சாம். அங்கே புஸ்வாணமாயிருச்சு. டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் யா......................ரும் வரல. அட்வான்ஸ் கொடுத்தவங்க வந்து நின்னுட்டாங்க. ஸ்ரீதர் என்ன செய்றதுன்னு தெரியாம ................................... அப்புறமா அவருக்கு ஒரு யோசனை தோணுச்சு. அவங்களை கூப்பிட்டு, "படத்தில சில காட்சிகளை மாத்தி ஒரு நாலாயிரம் அடிக்கு படத்தை மறுபடியும் எடுத்துத் தர்றேன். என்ன சொல்றீங்க" ன்னு கேட்டாராம். அவங்களும் சம்மதிச்சாங்க. அப்டீ இப்டீன்னு அஞ்சாயிரம் அடிக்கு எடுக்க வேண்டியதாயிருச்சாம். டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு திருப்தியாம். என்ன செஞ்சு என்னத்துக்கு. அப்படியும் சரியா ஓடலியாம். 

'Illustrated Weekly' னு ஒரு இங்க்லீஷ் பேப்பர். அந்தப் பத்திரிகையில இந்த இந்திப் படத்தைப் பத்தி விமர்சனம் எழுதும்போது, "ஸ்ரீதருக்கு டைரக் ஷனே தெரியலே. இவர்லாம் டைரக் ஷன் வேலையை விட்ரலாமே. இவர் இனிமே டைரக்ட் செஞ்சா இவர் படத்தை யாரும் வாங்க மாட்டாங்க"னு எழுதி இருந்துச்சாம். 

ஸ்ரீதர் மான நஷ்ட வழக்கு போட்டு, 

எம்புட்டுக்கு, 

அம்பது லட்சத்துக்கு, 

அதுக்கப்புறம் என்னவெல்லாமோ நடந்து, சமரசமாகி, பத்திரிகை வருத்தம் தெரிவிச்சுதாம். 

ஸ்ரீதரின் அனேக படங்களில ஜானகி பாடிய ஒரு பாட்டாவது இருக்குமாம். எம்.எஸ்.வி. இந்தப் படத்தில ஒரே நடிகைக்கு மூணு பேர பாட வச்சிருக்காரு. ஆமாங்க, பாரதிக்கு, சுசீலா, ஜானகி & எல்.ஆர்.ஈ. இந்த மூணு பேரும் மூணு பாட்டு பாடியிருக்காங்க. 

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - ஜானகி 
மலர் எது என் கண்கள்தானென்று சொல்வேனடி - சுசீலா 
எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை - LR ஈஸ்வரி 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 9:06 pm

03.01.2018

அன்னை வேளாங்கண்ணி 1971

தங்கப்பன்னு ஒரு டான்ஸ் மாஸ்டர் இருந்தாராம். (கமல்ஹாசனுக்கு சினிமாவில சான்ஸ் இல்லாதப்போ இந்தத் தங்கப்பனிடம்தான் அஸிஸ்ட்டண்டா இருந்தாராம்). கமலின் இந்த குரு தயாரிச்சு, இயக்கிய படம் இந்தப் படம். படத்தின் டைட்டில்ல உதவி டைரக் ஷன் பேர்ல கமல்ஹாசன் பேர் இருக்கு. 

சடையப்ப செட்டியார் பைனான்ஸ் கொடுத்து உதவி செஞ்சிருக்கார். இந்தச் செட்டியார் சிக்காகி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிட்டார். திடீர்னு ஒரு நாள், அவர் தங்கப்பனை கூப்பிட்டு அனுப்பி, "நேத்து எனக்கு ஒரு கனவு வந்துச்சு. நம்ம படத்துல ஜெமினி நடிக்கிரார்ல, அவருக்கு ஜோடியா ஜெயலலிதாவை நடிக்க வைக்கணும்னு யாரோ சொன்னாங்க. யாருன்னு தெரியல. அதனால அவங்களையே நடிக்க வைங்க. அவங்க சம்பளத்தைப் பத்தி கவலைப்படாதீங்க. எம்புட்டு கேட்டாலும் குடுத்துருங்க" அப்படீன்னு சொன்னார். 

தங்கப்பன் ஜெயலலிதாகிட்டே போயி விஷயத்தைச் சொன்னார். கனவு சமாச்சாரத்தால அவரை அந்தப் படத்தில நடிக்க வைக்கிறதுக்கு ஜெயலலிதாவே சந்தோஷப்பட்டார். அப்புறம் என்ன, கால்ஷீட் கொடுத்துட்டார். 

கமல்ஹாசன் இந்தப் படத்தில ஸ்ரீவித்யா கூட நடிச்சிருந்தாராம். ஆனா அந்த சீன் படத்தில கட். அப்புறம் ஜெமினி கணேசன், ஸ்ரீதர் கிட்டே கமலை கூப்பிட்டு போனாராம். ஸ்ரீதர் கமலை ஏற இறங்க பாத்துட்டு, படத்தில நடிக்கிற அளவுக்கு மூஞ்சி இல்லைன்னு நெனச்சு, நடிக்கல்லாம் வேண்டாம். வேணும்னா அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்துட்டு போவட்டும்னு சொல்லிட்டாராம். 

சினிமா இண்டஸ்ட்ரியில தங்கப்பனுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. அதனாலதான் ஜெமினி கணேசன், சுந்தரராஜன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், SV சுப்பையா, ஸ்ரீகாந்த், வின்சென்ட், தேவிகா, ரமாபிரபா, சச்சு, VR திலகம் இவங்கல்லாம் guest ரோல்ல நடிச்சாங்களாம். 

சாம்-டி-தாசன் என்கிறவர் வசனம் எழுதியிருக்கார். தமிழில மட்டுமில்லீங்க, இந்தி, மலையாளம், தெலுங்கு னு மத்த மொழில கூட இந்தப் படம் ஹிட்டாச்சு. 



Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 9:21 pm

03.01.2018

அழியாத கோலங்கள் 1979

பாலு மகேந்திராவுக்கு இது முதல் தமிழ்ப்படமாம். ஒளிப்பதிவுக்காகவே பேசப்பட்ட படமாம். மத்த தமிழ் படங்களை விட தனித்தன்மையாவும், புதுமையாவும் இருந்துச்சாம். இந்த படத்தின் கொஞ்ச ஸீன் இவரோட சொந்த வாழ்க்கையை வச்சு எடுத்தாராம். 

கமல்ஹாசன் இந்தப் படத்தில guest ரோல்ல வர்றாராமே. பாலு மகேந்திராவின் நட்புக்காக அவர் ரோலை மட்டும் மூணு லொகேஷன்ல ஒரே நாளல்ல முடிச்சு கொடுத்தாராம். 

பாலு மகேந்திரா மொதல்ல அவரோட friend இளையராஜாவை ம்யூசிக்கு செலக்ட் செஞ்சாராம். ஆனா சலீல் சௌத்திரிதான் இவரோட படத்துக்கு ஆசைப்பட்டாராம். ஏன்னா, பாலுமகேந்திரா எடுத்த கோகிலாங்கற கன்னட படத்துக்கு அவர்தான் இசையாம். 

கோகிலா கன்னட படம் பாலு மகேந்திரா எடுத்து ஓஹோ ....................... ன்னு ஓடுச்சாம். இந்தப் படத்தின் வெற்றிக்கப்புறம் தமிழ்ல ஒரு படம் எடுக்கலாமே ...................... நெனச்சாராம். இந்த சமயத்துலதான் மகேந்திரன் முள்ளும் மலரும்காக பாலு மகேந்திராவை கூப்பிட்டாராம். அதுவும் எதுக்கு? ஒளிப்பதிவுக்காக. இவர் தயங்கினாராம். ஏன்னா தமிழ் படத்தை எடுக்கிற mood ல அப்போ அவர் இல்லியாம். அப்புறமா சரீன்னுட்டாராம். 

அதுக்காண்டி, இயக்குனர் வேலைய கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு, முள்ளும் மலரும்காக ஒளிப்பதிவாளர் வேலைக்கு போயிட்டாராம். முள்ளும் மலரும் வெற்றிக்கு அப்புறம், விட்டு வச்சிருந்த படத்த எடுத்து, அழியாத கோலங்கள் னு பேர் வச்சுட்டாராம். 27 நாட்கள் ஷூட்டிங் நடந்துச்சாம். 

சர்வதேச திரைப்பட விழாவில் உதிரிப்பூக்கள் படத்தோடு இந்தப் படமும் செலக்ட் செய்யப்பட்டுச்சாம். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 9:37 pm

24.12.2017

அன்பே வா 1966

இந்த படத்தின் சிறப்பு என்னான்னு நான் சொல்லி உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டியதில்ல. 

வெளியூருக்கு போய் ஷூட்டிங் நடத்துவதே அந்த காலத்ல ரொம்ப குறைவாமே. அப்படிபட்ட காலத்தில, இந்த படத்தில வர்ற நிறைய சீன்கள் சிம்லாவுல போய் எடுத்தாங்களாம். 

எம்.ஜி.ஆர். இந்த படத்த பத்தி என்ன சொன்னாராம்? "நான் நடிச்ச படங்கள்ல இந்த படம் வித்தியாசமா இருக்கும்". அப்டீன்னு சொன்னாராம். 

ஏ.வி.எம். நிறுவனம் எடுத்த முதல் கலர் படமாமே. 

இந்த நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் நடிச்ச ஒரே படமாம் இது!!! 

இத மட்டுமில்லீங்களாமே. 

எம்.ஜி.ஆர வச்சு திருலோகசந்தர் எடுத்த ஒரே படமும் இது தானாம்ல? அப்டீயா? 

இந்தப் படத்தின் சில பகுதிகள் ராக் ஹdஸன் என்பவர் நடிச்ச "Come September" என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவலாம். 

இந்த படத்தில எம்.ஜி.ஆருக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. படங்களில எம்.ஜி.ஆருக்குன்னே ஒரு பார்முலா உண்டாம். ஒரு ஜாலியான கேரக்டரா, பணக்காரரா இந்த படத்தில வருவார்ல. அவரோட வீட்டிலேயே வாடகை குடுத்து, அந்த வீட்டிலிருக்கும் சரோஜாதேவிய லவ் பண்றதுதான் கதை. கலகலப்பா போகும். 

ஒரு படத்தில திருலோகசந்தர் அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்தாராம். அப்போ அவருக்கு எம்.ஜி.ஆர் கூட பழக்கம் ஏற்பட்டுச்சாம். எம்.ஜி.ஆர். அப்போ தன்னோட கழுத்தில ஒரு தங்க சங்கிலியும், முழுக்கை சட்டைய மடிச்சு, அந்த மடிப்புக்குள்ள ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வச்சுகிட்டு ஷூட்டிங்குக்கு வருவாராம். நேர தி.சந்தர்கிட்டே போயி தனது கழுத்திலே இருக்கிற சங்கிலிய அவர் கழுத்தில போட்டுட்டு, அந்த நூறு ரூபாயையும் கொடுத்து மேக்கப் போட சொல்வாராம். அப்புறமா ஷூட்டிங் முடிஞ்சு போகும்போது சங்கிலியையும், நூறு ரூபாய் நோட்டையும் திருலோகசந்தர் எம்.ஜி.ஆர். கிட்டே திருப்பி கொடுத்துருவாராம். 

திருலோகசந்தர் 'அன்பேவா' கதைய எம்.ஜி.ஆர்.கிட்ட சொன்னாராம். அவர் என்ன செஞ்சார்? 

ஹா............ஹா.............. ...ஹா............. சிரிச்சாராம். 

பிறகு என்ன சொன்னார்? 

"என்னவோ நீங்க ஆட சொல்றீங்க, நானும் ஆட தயார். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன்" னு சொன்னாராம். 

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" னு ஒரு பாட்டு இந்த படத்தில இருக்குல்ல? அந்த பாட்டு நல்ல பிரமா...........ண்டமா இருக்கணும்னு சொன்னாங்களாம். அதுக்கு திருலோகசந்தர் என்ன கேட்டார் தெரியுமா? 

"எனக்கு ஒரு ரிக் ஷா வண்டி கொடுங்க" னு கேட்டாராம். 


அவங்களும் குடுத்தாங்க. 

"இப்...........ப பாருங்க அந்த பாடல் காட்சிய பிரமாதமா எடுத்து காட்டுறேன்" னு 

சொல்லி அந்த பாட்ட அந்த வண்டியில எடுத்திருக்கார் தி.சந்தர். 

இதில ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயமும் இருக்கு. படிங்க ................ படிங்க. 

தி.சந்தர் ஒரு காலண்டர்ல நட்சத்திரங்கள் பிரிண்டாகி இருந்தத பார்த்தாராம். ஒடனே அந்த நட்சத்திரங்கள போட்டோ எடுத்தாராம். அப்புறமா அந்த போட்டோவிலுள்ள நட்சத்திரங்கள ஸ்க்ரீன்ல ஓட விட்டாராம். அப்புறமா கார்ட்டூன் பொம்மைங்கள வச்சு பூத்தூவ வச்சிருக்கார். கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே இப்படியெல்லாம் மாயாஜாலம் செஞ்சிருக்கார் தி.சந்தர். 

இப்போல்ல தெரியுது அந்த பாட்டு இம்புட்டு அருமையா எப்படி வந்துச்சூன்னு. பாருங்க, இந்த டைரக்டர்களுக்கு எப்படியெல்லாம் மூள வேல செய்யுதுன்னு. எல்.............லாம் நமக்காக தானே, நாம ரசிக்கிறதுக்கு தானே. 

எம்.ஜி.ஆர். தி.சந்தர் கிட்டே 



"இனிமே நீங்களே எனக்கு படம் பண்ணுங்க"னு  

கேட்டுக்கிட்டாராம். ஆனா அந்த சமயத்துல அவர் நிறை........................ய சிவாஜி படங்களுக்கு கமிட் ஆகி இருந்தாராம். அதனால எம்.ஜி.ஆர வச்சு படம் எடுக்க தி.சந்தருக்கு நேரமே கெடக்....................கவே இல்லியாம். 

இந்த வருஷத்தில ரிலீஸ் ஆன 9 MGR படங்கள்ல, இந்தப் படத்துக்குத்தான் அமோக வெற்றியாம். 30 லட்சம் செலவழிச்சு எடுத்த இந்தப் படம், அள்ளி கொடுத்தது 62 லட்சமாம். 

Fight ஸீன் எல்லாம் ராமாவரம் தோட்டத்ல நல் .......... லா ப்ராக்டிஸ் செஞ்சதுக்கப்புறமா ஷூட்டிங் எடுத்தாங்களாம். 

இந்தப் படம் எல்லா தியேட்டர்களிலேயும் வெள்ளிவிழா நோக்கி போயிட்டு இருந்துச்சாம். திடீர்னு, எல்லா தியேட்டர்கள்லேயிருந்தும் இந்தப் படத்தை எடுத்துட்டாங்களாம். என்னான்னு கேட்டா AVMமின் வேற ஒரு படம் ரிலீஸ் ஆச்சாம். 


"படம் வெள்ளிவிழா முடியுற வரைக்கும் படம் ஓடட்டும்"னு 

MGR AVMட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தாராம். அவங்க முடியவே முடியாதுன்னுட்டாங்களாம். இதனால்தான் AVMக்கும், MGRக்கும் இந்த ஒரு படத்தோடு connection விட்டு போயிருச்சாம். 

இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக, AVMஇன் ஏழு ஃப்ளோர்களிலும் set போட்டிருந்தாங்களாம். 

Climax ஸீன். 

இன்னொரு set தேவைப்பட்டுச்சாம். அதனால, AVM செட்டியார்ட்ட போயி, 


"இங்கே ஃப்ளோர் இல்ல, விஜயா வாஹினி ஸ்டூடியோவில வாடகைக்கு வாங்கலாமா"

ன்னு கேட்டாங்களாம். அவரோ, நீங்க சிம்லாவில ஷூட்டிங் முடிச்சுட்டு வாங்கன்னாராம். இவங்களும் சிம்லாவுக்கு புறப்பட்டு போயாச்சு. 

Outdoor ஷூட்டிங் முடிஞ்சுது. திரும்ப சென்னைக்கு வந்துட்டாங்க. வந்து பாத்தாங்கன்னா, பயங்கரமான ஆச்சரியம். செட்டியார் இவங்ககிட்ட என்ன சொன்னார் தெரியுமோ? 

"ஏழாவது ஃப்ளோர் பக்கத்திலேயே இன்னொரு ஃப்ளோர் கட்டியாச்சு. அங்க உங்க க்ளைமாக்ஸ் ஸீன் எடுத்துக்கோங்க"ன்னு 


சொல்லிட்டாராம். சிம்லாவுக்கு போய் வந்த அந்த ஒண்ர மாசத்தில இப்படி கட்டி முடிச்சார் பாருங்க, எல்லாம் அவருடைய planning. செட்டியாரா, கொக்கா. 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4289
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 10:31 pm

03.01.2018

சிங்கார வேலனே தேவா – கொஞ்சும் சலங்கை

1962-ம் ஆண்டு SM சுப்பையா நாயுடுவுக்கு  ஒரு  சிக்கலாம். 
 

‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதில 

ஒரு நாதஸ்வர வித்வானும், 

ஒரு சூப்பர் talent ஆன பாடகியும், 

கீர்த்தனைகளையெல்லா............ம் மிஞ்சுற அளவுக்கு அக்மார்க் தமிழிசை மரபுல அசத்தலாக ஒரு மெட்டும் 

ரெடி செஞ்சுட்டாராம்,  SMS.  

காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிஹர்சல்லாம்
முடிச்சுட்டு ரெடீ ...................... யா இருந்தாராம். சுசீலாவை பாட கூப்ட்டாங்களாம்.  எப்பேர்ப்பட்ட மலையயும்  சாதா.........................ரணமாகத் தாண்ட்ற  அவருக்கு  அன்னிக்கி  ராசி இல்ல போல.  SMS எதிர்பார்த்த அளவுக்கு நாதஸ்வர பிருக்காகளை [?] அவரால் பாட முடியலியாம். 


அப்புறமா  P லீலா  வந்தாராம்.  அவரும் தன் பங்குக்கு ட்ரை செஞ்சாராம். ஊஹும், அவராலும்  முடியலியாம். SMS போட்ட ட்யூனுக்கு  தலைவணங்கி   விலகிட்டாராம். நல்ல பாடுற ரெண்டு பேரும் கை நழுவி, இப்போ  யாரை பாட வைக்கலாம்ங்றதுதான் அந்த சிக்கல்.                                   

இசையமைப்பாளர்  S.M சுப்பையா நாயுடு, முதல்ல இந்தப் பாட்டைப் போடறதா இல்லியாம். ஞான சம்பந்தரின் தேவாரப் பாட்டு "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு" ஐத்தான் முதல்ல போட எண்ணி, காருக்குறிச்சி அருணாச்சலமும்  வாசிச்சுட்டுச் போனாராம்  நாதஸ்வரத்தில, இப்போதைய மெட்ல.

அப்புறமா நாதமாக மட்டும் இல்லாம, ஒரு பாடகியின் குரலும் சேர்ந்தா நல்லா இருக்குமோன்னு  நெனச்சாராம் . தேவாரப் பாட்டை  ஏனோ போடல. கவிஞர் கு.மா.பா. “சிங்கார வேலனே தேவா” ன்னு மாத்தி எழுதினாராம். 

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்னு நினைச்சி, ஏற்கனவே வாசிச்சு கொடுத்தது, கொடுத்தது தானாம். அதை மாத்த யா...................ருக்கும் மனசில்லையாம். பாட்டையும், இசையையும் காப்பி & பேஸ்ட் செஞ்சுட்டாங்களாம். ஆனா கேக்கும் போது அப்படி மிக்ஸ் செஞ்சிருக்காங்கன்னு சொல்லவே முடியலியாம்.

இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் செலெக்ட் செஞ்சார் இசையமைப்பாளர்?

 
இத்தனைக்கும்,  இதுக்கு முன்னால ஜானகி அவ்வளவா கனமான பாட்டை பாடினதும் இல்லையாமே. அப்போ தான் அவருக்கு சினிமாப் பாட்டு பாட ஆரம்பிச்ச புதுசாம்.

பிற்காலத்தில  மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே இந்தப் பாட்டைல்லாம் சுசீலா பாடியிருக்கார். நாதஸ்வரத்துக்கு ஈடாக தன்னாலும் பாடிக் கொடுக்க முடியும்னு தில்லானா மோகனாம்பாள் படத்தில் சுசீலா proove செஞ்சார், “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” பாட்டு மூலமா. ஆனாலும் சுசீலாவின் மற்ற பாடல்கள் “மன்னவன் வந்தானடி”  போல ஆழமான பாட்டாக இல்ல.

இப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா" என்னும் ஆழமான இசையுள்ள பாட்டுக்கு, ஜானகியை எப்படி செலெக்ட் செஞ்சாங்க என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா ஆச்சரியப்பட்டு போவீங்க..  

சில வருஷங்களா அப்பப்போ சில பாட்டுக்களை மட்டுமே பாடிக் கொண்டிருந்த  எஸ் ஜானகியை P லீலாதான்  suggest செஞ்சாராம். 

ஜானகியை கூப்ட்டாங்களாம். மெட்டை  போட்டுக் காட்டியிருக்காங்க.

ஜானகி அதை கேட்டுட்டு தைரியமா : இந்த நாதஸ்வர சங்கதிகளை முழுவதுமே சரளியாக[?]  பாடினா சரியா வராது.  நான் இதை ராகமாகவே பாடிர்றேன்.

SMS : இதை ஸ்வரமாகப்  பாடறதே பலருக்கு ரொம்ப கஷ்டம். வெறும் ராகமா பாடறதுன்னா இன்னும் கஷ்டமாச்சே.

ஜானகி : இல்ல சார்  இந்த பாட்டுக்கு இதுதான் சரியா வரும். நான் பாடறேன்.

ஜானகி உறுதியாகக் சொல்றார்.

புதுசா வந்த கத்துக்குட்டி எனக்கென்ன புத்தி சொல்றதுன்னு நினைக்காம, SMS சரீன்னுட்டு, நாதஸ்வரமா குரலான்னு தெரியாத அளவுக்கு “சிங்கார வேலனே” பாட்டை ஜானகி அட்டகாசமா பாடியிருக்கார். ரெக்கார்டிங் முடிஞ்ச பிறகு, காருகுறிச்சி அருணாசலம் 


“இந்தப் பொண்ணு பிற்காலத்துல பெரிய பாடகியாக வரும்" னு சொன்னாராம். 

நடந்துச்சா இல்லியா?

இப்படிப்பட்ட ஜானகி, அருணாசலம் ஆசி கெடச்ச ஜானகி, அவரது 75வது வயசில், இந்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கலாம்னு நெனச்சுதாம்.  அதையே அவர் வாங்க மறுத்தது, எவ்வளவு பெரிய விஷயம்!!!

Heezulia


Sponsored content

PostSponsored content



Page 10 of 29 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக