உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.புதிய இடுகைகள்
» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
by koogai Today at 12:27 am

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by koogai Today at 12:24 am

» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by koogai Today at 12:06 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by koogai Yesterday at 11:57 pm

» மீண்டும் புதிதாய்
by SK Yesterday at 9:08 pm

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 9:01 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Yesterday at 8:51 pm

» (கேள்வி -பதில் -கல்கி)
by சிவனாசான் Yesterday at 8:48 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:43 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவனாசான் Yesterday at 8:34 pm

» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by சிவனாசான் Yesterday at 8:30 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:29 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:24 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Yesterday at 8:12 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:46 pm

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» கௌரவம் தரும் நோபல்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Yesterday at 5:24 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Yesterday at 4:48 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Yesterday at 4:42 pm

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by சிவா Yesterday at 4:36 pm

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Yesterday at 4:32 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Yesterday at 4:23 pm

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Yesterday at 1:57 pm

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Yesterday at 9:11 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:00 am

» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:57 am

» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by சிவா Yesterday at 8:15 am

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by சிவா Yesterday at 8:03 am

» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...!!
by புவனா Mon Oct 15, 2018 9:09 pm

» ஆன்மிக தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:11 pm

» தீபாவளி கலாச்சாரம் ?
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:02 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:52 pm

» ஐப்பசி நிகழ்வுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:42 pm

» இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:40 pm

Admins Online

உறுப்பினராக இணையுங்கள்

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 6:47 pm
16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 8:23 pm
Baby Heerajan அவர்களே ,
பதிவிடுமுன் சரியான பகுதியில் பதிவிடவும் .கவனம் ப்ளீஸ்
அறிமுகப்பகுதியில் இருந்து சினிமா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23078
மதிப்பீடுகள் : 8549

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 8:55 pm

கலங்கரை விளக்கம் படத்தில் பஞ்சு அருணாச்சலம்
எழுதிய பாடல்

பொன்னெழில் பூத்தது புது வானில்


:
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39937
மதிப்பீடுகள் : 11668

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 9:41 pm
16.12.2017

நன்றி அய்யாசாமி சார்.

உலக அளவில ரெகார்ட் 1899 லே இருந்து உற்பத்தி செய்யப்படுதாம். 1902 லேயிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம். அந்தக் காலத்தில அரக்கில ரெகார்ட் எல்லாம் செய்யப்பட்டாதாமே. அந்த ரெகார்ட்டை ‘78 ஆர்.பி.எம்’னு சொன்னங்களாம். அது எதனாலேன்னு தெரியுமா? அந்த ரெகார்ட் ஒரு நிமிஷத்துக்கு 78 தடவ சுத்துமாம். இந்த விஷயம் இப்போதான் எனக்குத் தெரியும். 1973 வரையில இந்த மாதிரி ரெகார்ட்தான் வந்துச்சாம். அதுக்கப்புறமா பிளாஸ்டிக் ரெகார்ட் வர ஆரம்பிச்சுதாம்.


'தூக்குத் தூக்கி' என்கிற பேர்ல ஒரு நாடகம் வந்துச்சாம். அதுக்கப்புறம் அதே பேர்ல ரெண்டு தடவ தமிழ் படம் வந்துச்சாம். 1935 ல ஒரு தடவ வந்துச்சாம். ஆர் பிரகாஷ் இயக்கத்துல, சி.வி.வி.பந்துலு, கிளௌன் சுந்தரம், கே.டி.ருக்மணி இவங்கல்லாம் நடிச்சு ரிலீஸ் ஆச்சாம். அதுக்கப்புறம் சிவாஜி நடிச்ச தூக்கு தூக்கி படம் 1954 ல வந்திருக்கு. அந்த நாடகத்தில இருந்த நிறைய சீன்ஸ் ரெண்டு படத்திலேயும் இருக்காம்.

சில கலர் use பண்ண முடியலியே.


Baby Heerajan
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 9:45 pm
16.12.2017

'வள்ளித் திருமணம்' என்கிற இசை நாடகம் நடந்துச்சாம். அப்புறம் இந்த நாடகம் ஸ்ரீவள்ளி, வள்ளித்திருமணம், வள்ளி கல்யாணம், ஸ்ரீமுருகன் இந்தப் பேர்ல எல்லாம் படமா ரிலீஸ் ஆகியிருக்காம்.

இதே மாதிரி 'கோவலன்' என்கிற பேர்ல நாடகம் வந்ததாம். அதுக்கப்புறமா இதே பேர்ல சைலண்ட் படமும் வந்துச்சாம். பேசும் படமும் வந்துச்சாம்.

Baby Heerajan
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sat Dec 16, 2017 11:37 pm
பறக்கும் பாவையில் ஜேசுதாஸ் பாடிய பாடல் சுகம் எதிலே…….

சந்திரபாபு இறக்கும் போது K.J.ஜேசுதாஸ் நான்கு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.அதனால் சந்திரபாபுவுக்காக பாடும் வாய்ப்பு ஜேசுதாசுக்கு கிடைத்திருந்தாலும்,ஜேசுதாசுக்காக பாடும் வாய்ப்பு சந்திரபாபுவிற்கு கிடைக்கவில்லை.ஏனெனில் சந்திரபாபு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.ஜேசுதாஸ் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்..அதேசமயம் சந்திரபாபு இறந்து விட்டதால், விஜய் ஜேசுதாசுக்கும் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன்,வாலி இரண்டு பேரின் பெயரையும் ,டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sun Dec 17, 2017 12:33 am
16.12.2017

நன்றி மூர்த்தி.

எனக்கு சினிமா பற்றிய விஷயம் எதுவும் தெரியாது. ஒரு ஆர்வக்கோளாறால, நெட்ல தேடும்போது கிடைக்கிற விஷயங்களை share பண்றேன். அதுதான் உங்களை போலவங்க இருக்கீங்களே. தப்பை சரி செய்றதுக்கு.   சந்தோஷமா இருக்கு எனக்குத் தெரியாத  விஷயங்கள் படிச்சு.

இன்னொரு தடவ  நன்றி .

Baby Heerajan மீண்டும் சந்திப்போம்  

avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sun Dec 17, 2017 7:34 am

-

-
தூக்கு தூக்கி - தகவல்கள்
--------------------------
தூக்கு தூக்கி மூன்றாவது முறையும் படமாக வந்தது
நாடகமே உலகம் என்ற தலைப்பில்!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39937
மதிப்பீடுகள் : 11668

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sun Dec 17, 2017 7:35 am


மூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி!’


‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக,
‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’
என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி.

‘நாடகமே உலகம்’ என்பதையே தலைப்பாக வைத்து, 1979ல்
‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார்,
கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில்
கே.ஆர். விஜயா நடித்தார்!

தந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’
என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று
உணர்கிறார் கே.ஆர்.விஜயா !

கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு
செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று
உணர்கிறார் !

தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக்
காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி
செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி
(அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால்
பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார்.

‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன்,
எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று
கே.ஆர். விஜயா பேச வைக்கப்படுகிறார்.

விருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி
(மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’
என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன
முத்திரைகள்.

எண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’
கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது
போலும்.
[color:b5da= #009900]
மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற
கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே?
-
-----------------------------------
நன்றி -கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36
தினமலர் - நெல்லைப் பதிப்பு 8-8-2016
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39937
மதிப்பீடுகள் : 11668

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Sun Dec 17, 2017 2:06 pm
17 .12 .2017

அய்யாசாமி சார்.

அப்போ தூக்குதூக்கி கதை மூணு தடவ படமா வந்திருக்கு போல,  1935, 1954, 1979 ல.

அதில உள்ள 5 வாக்கியங்களோ, பழமொழிகளோ :

1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி
4. கொலை செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்  

நாடகமே உலகம் படத்திலும் இந்த அஞ்சும் உண்டா?

Baby Heerajan
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Mon Dec 18, 2017 1:45 pm
சூப்பருங்க சூப்பருங்க


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7781
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Mon Dec 18, 2017 2:12 pm
18 .12 .2017

இந்த  சூப்பருங்க சூப்பருங்க  யாருக்கு SK, அய்யாசாமி சாருக்கா, எனக்கா?

கவிஞர் மருதகாசிதான் 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதுறதா இருந்துச்சாம். அவர்கிட்ட பதிபக்தி கதையை சொன்னாங்களாம். அவரும் கேட்டிருக்கார். யோசிச்சார். அப்புறமா சொல்லிட்டாராம், "இப்படிப்பட்ட கதைக்குப் பாட்டுக்களை எழுதணும்னா, அதுக்கு suitable கவிஞர் பட்டுக்கோட்டையார்தான். அவர வச்சு நீங்க 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதிக்கோங்கோ" ன்னுட்டாராம். எம்புட்டு பறந்த மனசு!!!

கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு வக்கீலும், அந்த வக்கீலின் மனைவியும் நல்ல பழக்கமாம். ஒரு நாள் கண்ணதாசன் வக்கீல் வீட்டுக்குப் போனாராம். கதவைத் தட்டினாராம். வக்கீலின் மனைவி "Who is that?" ன்னு கேட்டாராம். கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா? ரொம்ப interesting. "An Outstanding Poet Standing Outside" எப்படி அட்டகாசமா சொல்லியிருக்கார் பாருங்க.

சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பெயரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம். தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளி ன்னு சொல்லுச்சாம்.

உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்கள்ல முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா?

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Wed Dec 20, 2017 12:38 am
20.12.2017 

ஆனந்தன், ராஜஸ்ரீ, எம்.ஆர்.ராதா இவங்க நடிச்சு 1964ல ரிலீஸ் ஆன ஒரு படம். 

இந்தப் படத்துல ஒரு சின் ................................ ன ரோல்ல நடிச்ச ஒரு பொண்ண, எம்.ஆர்.ராதா உத்து உத்து பாத்துட்டு இருந்தாராம்.  அந்த சின்ன பொண்ண பக்கத்தில கூப்ட்டார்.  

கூப்ட்டு ................... 

"ஒம்பேர் என்னம்மா?" ராதா கேட்டாராம்.  

அதுக்கு அந்தப் பொண்ணு 

"ஏம்ப்பேரு தெய்வநாயகி" ன்னாராம்.  

"இதென்ன, இப்டி ஒரு பேர வச்சிருக்கே. நல்ல, மாடர்னா பேரு வைக்க கூடாது? அப்பதான் முன்னுக்கு வர முடியும்". னு ராதா சொன்னாராம்.  

ஒடனே பக்கத்திலே இருந்த அந்தப் பொண்ணோட அப்பா, "அண்ணே, அப்டீன்னா  நீங்களே ஒரு நல்ல பேர வச்சுருங்களேன்" ன்னு சொல்லிட்டாராம்.  

அந்த சமயத்தில நல்ல பேரா இருந்த 'விஜயா' ன்னு பேர வச்சுட்டாராம், ராதா. 

ஆக, தெய்வநாயகி இப்படி கே.ஆர். விஜயா ஆயிட்டாராம், எம்.ஆர்.ராதாவால.  தெய்வநாயகியா இருக்கும்போது ஒரு சின்ன ரோல்ல நடிச்சாரே, அந்தப் படம் 'மகளே உன் சமத்து' என்ற படமாம். அதுக்கப்புறமும் 'விளக்கேற்றியவள்' என்கிற படத்திலயும் ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம்.  


அப்போதான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன்னோட படம் 'கற்பகம்' படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தாரா?  அந்த சமயத்தில இந்த கே.ஆர்.விஜயாவைப் பார்த்த first sight லேயே 

"இந்த மாதிரி பொண்ணத்தான், இப்படிப்பட்ட ஒரு மூஞ்சியைத்தான்யா நான் தேடிட்டு இருக்கேன்" ன்னு சொல்லி ஒரே சந்தோஷமாம்.  

'கற்பகம்' படத்துக்கு புக் ஆயிட்டார், முன்னாள் தெய்வநாயகி, இந்நாள் கே.ஆர்.விஜயா. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Wed Dec 20, 2017 1:31 am
20.12.2017 

நிறைய தடவை நடத்தப்பட்ட MR ராதாவின் ரொம்ப ரொம்ப பிரபலமான நாடகம் 'ரத்தக்கண்ணீர்'. 

"இயக்குனர் சொல்றபடில்லாம் நான் நடிக்க மாட்டேன்"ன்னு சொல்லி ரொம்ப நா ................... ள் சினிமால நடிக்காமயே இருந்தாராம். பெருமாள் முதலியார் அவரை கம்ப்பெல் பண்ணி இந்தப் படத்தில் நடிக்க வச்சாராம். 

இந்தப் படத்ல, ராதாவின் மனைவி ரோல்லயும், தாசி ரோல்லயும் நடிக்க யா ............. ரும் முன்வரலியாம். 

எதுக்கு, ஏன், வொய்யி, எந்துக்கு, ஏதுக்கு? மனைவியா நடிச்சா, ராதாட்ட அடி வாங்கணும். தாசியா நடிச்சாக்கா ராதாவை அடிக்கணும். அந்த காலத்தில, பொம்பளைங்க இப்படி நடிக்க ஒத்துக்குவாங்களா ? கண்டிப்பா இல்ல. பேர் கேட்டுபோயிரும்னு பிரபலமான எந்த நடிகையும் நடிக்க தயாராவே  இல்லியாம். 

அப்புறம் என்ன, ஆந்திராவுக்கு ஓடினாங்களாம், நடிகையை தேடி. அங்க இருந்த ஸ்ரீரஞ்சனினு ஒருத்தர இஸ்துகினு வந்தாங்களாம். இவர் ராதாவின் மனைவியா நடிக்க.  இப்ப தாசி ரோலுக்கு ஆல் வேணுமே. அப்டீ இப்டீன்னு MN ராஜம் கெடச்சாராம். 

ரத்தக்கண்ணீர் நாடகத்தை ஜனகள் நிறைய தடவை பார்த்திருக்காங்களாம். அதே பேர்ல சினிமா வந்ததும், சினிமா எப்படி இருக்குமோன்னு எதிர்பார்ப்பு இருந்துச்சாம். படத்தை பார்க்க அலை மோதினாங்களாம். நாடகம் நல்லா ஓடியது போலவே, சினிமாவும் ஓஹோ ................... ன்னு ஓடுச்சாம். 

இந்தப் படத்துக்கு அப்புறம், ராதாவுக்கு சினிமாவில ஒரு பிடிப்பு வந்துச்சாம். 

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 on Fri Dec 22, 2017 12:47 pm
22.12.2017 

வங்காள கதாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற நாவல் தேவதாஸ். இந்த நாவல் தான் தேவதாஸ் படம். பல மொழிகள்ல நிறைய தடவை படமாக்கப்பட்டுச்சு. இந்தப் படம் மொதல்ல தமிழ்ல 1938 லேயும், அதுக்கப்புறமா 1953 லேயும் ரிலீசாச்சு. 

1953 படத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி, லலிதா, நம்பியார், ரங்காராவ் நடிச்சிருந்தாங்க. சாவித்திரியின் சின்ன வயசு கேரக்டர்ல சச்சு நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கில ரிலீஸ் ஆச்சு. இந்தக் கதையின் விசேஷம் என்னான்னா எத்தனை தடவ இந்த படத்தை எடுத்தாலும் ஹிட்டாச்சு. 

தெலுங்கில கிருஷ்ணா நடிச்சு 1993ல எடுத்தாங்களாம். இப்படம் ரிலீசாவுதுக்கு முன்னால, நாகேஸ்வரராவின் தேவதாஸ் படத்தை மறு ரிலீஸ் செஞ்சாங்களாம். நா ................ ப்பது வருஷங்கள் கழிச்சு வெளியிடப்பட்டும் ஹிட்டாச்சாம். இதனால் கிருஷ்ணா படத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டுச்சாம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

 

Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை