ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 9:32 pm

22.12.2017

MSV அறிமுகப்படுத்திய பாடகர்கள் :

P ஜெயசந்திரன் – மணிப்பயல் 1973 


ஜாலி ஆப்ரஹாம் – வணக்கத்துக்குரிய காதலியே 1978

AV ரமணன் – மன்மதலீலை 1976

TL மகராஜன் – ஒரு வீடு ஒரு உலகம் 1978

சிவாஜிராஜா – அன்புள்ள அத்தான் 1981

சந்திரபோஸ் – ஆறு புஷ்பங்கள் 1977

Heezulia


Last edited by heezulia on Fri Dec 22, 2017 9:51 pm; edited 1 time in total
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 9:41 pm

22.12.2017


சரிதா இத்............தான பேருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்காராம்.

ப்ரகதி - வீட்ல விசேஷங்க

நக்மா – காதலன், பாஷா, love birds , அரவிந்தன்

மீனா – எஜமான், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

நதியா – மிஸ்டர் குமரன், த்ருஷ்யம்

சௌந்தர்யா – அந்தப்புரம்

மதுபாலா – அழகன்

சிநேகா – புன்னகை தேசம்

ராதா – எங்க சின்ன ராசா

விஜயசாந்தி – போலீஸ் லாக்கப், மன்னன்

சுஷ்மிதா சென் – ரட்சகன்

தபு – சிநேகிதியே, காதல் தேசம்

ஜெயபாரதி – வருஷம் 16


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 9:49 pm

22.12.2017

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு ரொம்ப கொஞ்சமா இருக்கு.

தமிழ் சினிமா பேச ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஆகியும்,
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலதான் பெண்
இயக்குனர்கள் வந்து போயிருக்காங்க. இதிலும் பெருசா
பேசப்பட்டவங்க என யாருமே இல்லாததும் 
இன்னொரு குறை. அந்த குறையை போக்க பல பெண்கள் சினிமாவில காலடி எடுத்து வச்சாங்க.

1936ல TP ராஜலட்சுமி 'மிஸ் கமலா' என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கார். அதற்கப்புறம் வந்த 'மதுரை வீரன்' (1938) படத்தையும் இவர் இயக்கினார். 

இவருக்கு அப்புறம் கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சு தெலுங்கில ‘மீனா’ன்னு படத்தை 1973ல விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய 'ராம் ராபர்ட் ரஹீம்' படம் 1980ல இதே பேர்ல தமிழில் ரிலீஸ் ஆச்சு.

இடையில் பானுமதி, சாவித்திரின்னு ஆசைக்கு ஒண்ரெண்டு படங்கள டைரக்ட்டி பார்த்துக் கொண்டதோடு சரி. அதற்கிடைல யாராச்ச்சும் வந்து போனாங்களா இல்ல, வராமலே போனாங்களான்னு தகவல்கள் தெரியல. 

1980ல வந்த 'மழலைப் பட்டாளம்' திரைப்படத்தின் மூலமா இயக்குனரா அறிமுகமானார் நடிகை லட்சுமி. ஒரு கலகலப்பான குடும்பக் கதையா அமஞ்ச இந்தப் படம், இன்னிக்கும் ரசிச்சு பார்க்கும் படங்களில் ஒண்ணா இருக்கு.

80களில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா 'சாந்தி முகூர்த்தம்' திரைப்படத்தின் மூலமா 1984ல இயக்குனரானார். நீண்ட இடைவெளிக்கு பின்னால ‘நானே வருவேன்’1992, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ 2014 ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

இயக்குநர் P. ஜெயதேவி ‘விலாங்கு மீன்’ என்ற திரைப்படம் மூலமா இயக்குநராக அறிமுகமானார். பல திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கார். இவர் இயக்குநர் வேலு பிரபாகாரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்குப் பின்னால வந்தவங்களாக சுஹாசினி மணிரத்னம், நடிகை அம்பிகா, V ப்ரியா, மதுமிதா, JS நந்தினி & சமீபமாய் லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ரஜினியின் இரு மகள்கள். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 9:57 pm

22.12.2017

நடிகர் திலகம் படத்தின் கால்ஷீட் பற்றி அவர்கிட்ட யாராவது பேச வந்தா, என் தம்பி சண்முகத்தை போய் பாருங்கன்னு நடிகர் திலகம் சொல்லிட்டு, அவர் அக்கடா ......................... ன்னு உக்காந்துருவாராம். அவருடைய கால்ஷீட் விஷயங்களை எல்லாம் முடிச்சுட்டு, சண்முகம் நடிகர் திலகம்கிட்ட அவருடைய ஷூட்டிங் நாளை பற்றி பேசுவாராம். 

நடிகர் திலகத்துக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர்கள்ல சி.வி.ராஜேந்திரனும் ஒருத்தராம். இந்த டைரடக்கரும், சண்முகமும் ஒருநாள் ஒரு ஃபோட்டோவை நடிகர் திலகத்திடம் காட்டி, “உங்க அடுத்த படத்ல இவர் அறிமுகம் ஆகப் போகிறார்” னு சொன்னாங்களாம். அந்த photoவை பார்த்த நடிகர் திலகம் ஆச்சரியமாய், சந்தேகத்துடனும், ஒரு புன்சிரிப்புடனும், இவர் நடிப்பாரா, நடிக்க வருமான்னு நெனச்சாராம். அந்த photoல இருந்தது வேற யாருமில்லைங்க, சாட்சாத் அவர் மகன் பிரபுதான்.

அப்பாவுக்கு மகன் நடிப்பாரான்னு சந்தேகம் இருந்தாலும், மகன் நடிக்க ஆசைப்பட்டு, நடிக்க தயாராயிட்டாராம். சிவாஜிக்கு அந்த சந்தேகம் வந்ததுக்கு காரணம், அவர்கூட அவருடைய மூத்தமகன் ராம்குமார் நடிச்ச அறுவடைநாள் படம் ஓடல. அதனால ராம்குமார் அதுக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டார். அதனாலதான் பிரபு நடிக்கிறதுக்கு சிவாஜி தயங்கினார். அப்புறமா சம்மதிச்சார். சங்கிலி 1982 முதல் முதலா அப்பாவும் மகனும் சேர்ந்து நடிச்சாங்க. ஆனா பிரபு போலீஸ் ஆfeeசரா வரணும்னு சிவாஜி ஆசைப்பட்டாராம். தலையெழுத்து யாரை விட்டுச்சு?


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 10:42 pm

22.12.2017

ரோஹிணி [1953] இப்படி ஒரு தமிழ் படம் வந்துச்சாம். நடிகை மாதுரிதேவி இந்தப் படத்தை தயாரிச்சாராம். இவர்தானான்னு சொல்லுங்க.இந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்ட ஜி. ராமநாதனை மாதுரி கூப்ட்டாராம், அவரும் வந்தாராம். பாட்டுக்களை மருதகாசி எழுதினாராம். இவரும் ராமநாதனை போலத்தானாம்ல, பாட்டு எழுதுற விஷயத்தில யா .................. ரும் தலையிட கூடாதாம். 

ரோஹிணி ஒரு பெங்காலி படத்தின் ரீமேக்காம். அதனால மாதுரி அந்தப் பெங்காலி படத்தின் பாட்டு ரெக்கார்டை எல்லாம் போட்டு காட்டி இதுபோல ம்யூசிக் போடுங்கன்னு ராமநாதன்ட்ட சொன்னாராம். போதுமே, இது ராமநாதனுக்குத்தான் பிடிக்காதே. 


மாதுரியின் தொல்லையை தாங்கமாட்டாம, அந்தப் படத்தின் பாதிலியே வெளியே வந்துட்டாராம். அப்புறமா KV மகாதேவன்ட்ட போயி நடந்ததை சொல்லி, அவரை அந்தப் படத்துக்கு இசையமைக்க சொன்னாராம். KVM மும் சரீன்னுட்டு அந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்டாராம். 

பொன்முடி [1950] ன்னு ஒரு படமாம். இதுல நரசிம்ம பாரதி கதாநாயகனாம். நாரதரா இருப்பவர்தான் நரசிம்ம பாரதியாம்.

இந்தப் படத்தில இவருக்கு எல்லா பாட்டையும் ராமநாதன் பாடினாராம்.

'அல்லி பெற்ற பிள்ளை' ன்னு ஒரு படம். இதுக்கு KVM இசையமைச்சிருந்தார். அந்த படத்தில "எஜமான் பெற்ற செல்வமே" பாட்டு ராமநாதன்தான் பாடியிருந்தாராம். பாட்றது மட்டுமில்லாம நடிக்கவும் செஞ்சிருக்காராமே. 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்கிற படத்தில முனிவரா நடிச்சிருப்பாராமே. 

சேலத்துல 'மாடர்ன் தியேட்டரஸ்'னு ஒரு ஸ்டூடியோ இருக்குதாமே. அதுல ஒருத்தர் துணை நடிகரா இருந்தாராம். இவர்தான், சீர்காழி கோவிந்தராஜன். இவர் திறமையை ராமநாதன் பார்த்தாராம். அவர்கிட்ட போயி, "வேணும்னா பாரு, நான் சொல்றேன், நீ சிறந்த பாடகனா வருவே"ன்னு ராமநாதன் சொன்னாராம். அதேமாதிரி நடந்துசுல்ல, நடந்துச்சுல. 

கோமதியின் காதலன் [1955] படத்தில ராமநாதன்தான் ம்யூசிக். அதுல கோவிந்தராஜனை பாட்டுக்களை பாட வச்சாராம், ராமநாதன். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 10:58 pm

22.12.2017

‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி ? அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா? "கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 11:04 pm

22 .12 .2017

பீம்சிங் ‘சகோதரி’ என்ற படத்தை டைரக்ட் செஞ்சார். படமும் முடிஞ்சு தயாரானது. எல்லார்கூடயும் சேர்ந்து மெய்யப்ப செட்டியாரும் படத்தைப் பார்த்தார். பார்த்து முடிஞ்சதும் ‘ஒரு நாள் டைம் கொடுங்க’ன்னுட்டு கெளம்பி போயிட்டாராம்.

அடுத்த நாள், “ஏதோ ................... சரியில்லாத மாதிரி இருக்குதே. படத்தில் எமோஷன் எல்லாம் சரியா இருக்கு. உணர்ச்சிபூர்வமான இந்தப் படம் இப்படியே போனா, ரொம்ப இறுக்கமா இருக்கும். சில இடங்கள்ல கொஞ்சம் காமெடி போட்டு சரி செஞ்சா படம் நல்லா இருக்கும். இல்லேன்னா படம் ஒரே சோகமா இருக்கும்’’னு சொன்னார். உடனே ‘‘சந்திரபாபுவை வச்சு ஒரு காமெடி ட்ராக் வச்சுரலாமே”ன்னு ஒரு சஜெஷன் கொடுத்தாராம்.

சந்திரபாபுவை வச்சுதான் சகோதரி படத்தில காமெடி ட்ராக் சேர்க்கப் போறாங்கன்னு சந்திரபாபுவுக்கு தெரிய வந்துச்சு. அந்த சான்ஸை மிஸ் பண்ண அவர் விரும்பல. ஒரு கணிசமான தொகையை சம்பளமாகக் கேட்டாராம். அதுக்கு செட்டியாரும் ஒத்துகிட்டாராம்.

படத்தைதான் எடுத்து முடிச்சாச்சே, ரிலீஸ் செஞ்சுரலாம்னு நெனக்காம, அதை எப்படி மெருகேற்றலாம் என்கிற அக்கறை மெய்யப்ப செட்டியாருக்கு எப்பவுமே இருக்குமாம். அதனாலதான் சகோதரி படம் வெற்றிப்படமா வந்துச்சாம்.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 11:11 pm

22 .12 .2017

B லெனின் – இவர் தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் & இயக்குனர்.

B கண்ணன் – இவர் பாரதிராஜா படங்களுக்கு ஒளிப்பதிவாளர்.

இவங்களுக்கு என்னான்னு கேக்குறீங்களா? இவங்க ரெண்டுபேரும் பீம்சிங்கின் மகன்களாம்.

பீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம். எப்படி ? ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி. AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 11:22 pm

22 .12 .2017

விஜயகுமாரி நடிச்ச சாரதா நல்லா ஓடுனதால, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் AL சீனிவாசன் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கினாராம். அதுக்கு சாரதா ஸ்டூடியோன்னு பேர் வச்சாராம்.

பாதகாணிக்கை படம் எடுக்கும்போது, விஜயகுமாரிக்கு மேக்கப் சரியா வரலியாம். அப்போ நல்ல மேக்கப் போட்றதுன்னா ஹரிபாபுங்கறவர்ட்ட மேக்கப் போட்டுக்குவாங்களாம். அதனால விஜயகுமாரியையும் அவர்ட்ட அனுப்பினாங்களாம். மேக்கப் போட்றதுக்கு ஹரிபாபுவின் வீட்டுக்குத்தான் போகணுமாம். அப்படி விஜயகுமாரி போயிருந்தப்போ, அங்க NTR மேக்கப் போட்றதுக்கு வந்திருந்தாராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்களாம். அப்போ NTR விஜயகுமாரியை தெலுங்கு படத்தில நடிக்க கூப்ட்டாராம். விஜயகுமாரி தனக்கு தெலுங்கு தெரியாதுன்னு சொல்லி, நடிக்க வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். தெலுங்கு படிக்கிறதுக்கு ஈஸிதான்னு சொல்லி, அவரே சொல்லிகொடுப்பதாவும் NTR சொன்னாராம். விஜயகுமாரி ஊஹும் சொல்லிட்டாராம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Dec 23, 2017 11:03 am

@heezulia wrote:22.12.2017

‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி ? அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா? "கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1254438

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6407
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 23, 2017 1:38 pm

23.12.2017 


பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே  தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?  


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Dec 23, 2017 2:26 pm

நீங்கள் பதிவை தொடருங்கள் நிஷா

அனைத்தும் அருமை

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6407
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Sat Dec 23, 2017 6:17 pm

@heezulia wrote:23.12.2017 


பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே  தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?  


Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1254487

இணைந்து 15 நாட்களுக்குள் 450 மேல் பார்வையாளர்கள் 60 கு மேல் மறுமொழிகள்.
நீங்கள் சினிமா சம்பந்த கேள்வி கேட்டு அதற்கு மறுமொழி யாரும் தரவில்லையா ?
என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?

நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sat Dec 23, 2017 9:55 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். அந்த வகையில் சினிமா ஆர்வம் எனக்கில்லை.ஆனால் பாடல்களில் ஆர்வம் உண்டு,முக்கியமாக கர்நாடக இசைப் பாடல்களில்……

நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்....
என்ற  ஆதங்கத்திற்காக இந்தக் கருத்தும்…..
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..

இது பொன்முடி படத்தில் லலிதா,பத்மினி நடனம்………..இது ஓர் இரவில் ஒரு பாடல்…..

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Dec 24, 2017 1:59 pm

24.12.2017 
நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?
ரமணியன்
நீங்க சொல்லிட்டீங்களே, அதனால ஈகரைய ஒரு ரவுண்டு அடிச்சேனே.  அரசியல்,   புதுப்பட    துணுக்குகள்,   அந்தக்காலத்து விளம்பரங்கள், சின்ன அறையை பெருசா காட்ட டிப்ஸ் இப்படி என்னவெல்லாமோ இருக்கு. மூர்த்தி சொன்ன மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி எதுவுமே இல்லியே. நான் என்ன செய்றது? 

ஒர்த்தர் தொடர்ந்து ஏழெட்டு பதிவுகள் போட்டாலும், அதை யா ................... ரும் கண்டுக்கல. அநேக தலைப்புகள்ல ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு. அநேக பதிவுகள் நவம்பருக்கு அப்புறமா எதுவுமே இல்ல. டிசம்பர்லேயும் எட்டாம் தேதியோடு நிக்குது.  இப்படி ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து, இப்பதான் ஈகரையை பற்றி நல் ......................லா  தெரிஞ்சுகிட்டேன். 
 
நான் சுற்றி சுற்றி வர்றதோ, சினிமா, சினிமா பற்றிய தகவல்கள், சினிமா சம்பந்தப்பட்டவங்க, அதாவது, டைரக்டர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்கள் [பழசு, புதுசு], பாடல்களை பற்றிய தகவல்கள் இப்படி நிறைய நிறைய எழுதிட்டு இருக்கேன், மொத்தம் பத் ................. து  தலைப்புகள்ல. 

ஆனா ஒரு பெரீ ............................ ய திருப்தி என்னான்னா, நான் எழுதுறத ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்க. குறிப்பா தெரிஞ்சதும், தெரியாததும், சினிமா & பாட்டூஸ் பகுதிகளை ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படிச்சிருக்காங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவை பிடிக்காதவங்க இருக்கு முடியுமா என்ன! அதுக்கு காரணம், நான் எழுதுறது ஈகரையில் இருப்பவங்களுக்கு ரொம்ப புதுசா இருக்கு. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. பதில் போடாதவங்களை பற்றி கவலைப்பட போறதில்ல. ஈகரையை வலம் வந்ததுல, இதை நான் தெரிஞ்சுகிட்டேன். 

மொத்தத்தில் என்னான்னா, ஒரு பத்து பேர் இருந்தாக்கூட, மேடைப் பேச்சாளர்களோ, பாட்டு கச்சேரில பாட்றவங்களோ, தொண்டை கிழிய பேசணும், பாடணும்ங்கிறீங்க. நான் தயார். 
by மூர்த்தி :
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..
தொடர்ந்து எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன் மூர்த்தி. நன்றி. 

அது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் பிடிக்குமா, ஆடியோ பற்றி ஒண்ணும் எழுதலியே. பாட்டு என்னன்னாலும் கேளுங்க. ஆடியோவோ, வீடியோவோ, க்ளாஸிகல் மட்டுமில்ல, எந்த வகை பாட்டானாலும் சரி, கேளுங்க. கெடச்சா அனுப்புறேன். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Mon Dec 25, 2017 10:33 am

வீடியோ பாடல்களை விட ஆடியோ பாடல்கள் அமைதியாக கேட்க முடியும். சினிமாப் பாடல்களில் சில கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டவை உண்டு. தற்காலப் பாடல்கள் ஒரு சில தவிர மற்றவை மேற்கத்தய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவதுடன் ஆங்கில சொற்களை சேர்த்து எழுதுவதால் விரும்புவதில்லை. தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதுவேன் எனச் சொன்ன கவிஞர் தாமரையை ஒதுக்கி விட்டது தமிழ் சினிமா.இன்றைய சினிமா ஒரு சில தவிர அனைத்தும் வியாபார நோக்கம் கொண்டவை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Mon Dec 25, 2017 1:51 pm

@murthy wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். …

நன்றி மூர்த்தி.
ஈகரை தமிழ் களஞ்சியம், பல்வேறு ரசனைகள் உள்ளவர்கள் ரசனைக்கேற்ப பல பகுதிகளை கொண்டுள்ளது. படிப்பவர்கள் அந்தந்த பகுதிகளை தேர்ந்து எடுத்து படிக்கிறார்கள். சிலர் கருத்தை பதிவு செய்கிறார்கள். பலர் மறுமொழி இடுவதில்லை. கோர்வையாக எழுதமுடியதோ என்ற பயமாகவும் இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவர் முனைவரொருவர் மிகவும் அரிதாக மறுமொழி இடுவார்.95 % அவருடைய மறுமொழிகள் ஸ்மயிலிகள் தான்.
வேறொருவர் இம் என்றால் இருநூறு அம் என்றால் ஆயிரம் என பதிவுக்குள் போடுவார். மறுமொழி அரிது அரிது.
மற்றுமொருவர் தன்னுடைய பதிவுகள் ,மற்றவர்கள் பதிவுகள் படித்து மறுமொழியும் இடுவார். ஆழ்ந்து கவனித்தால் ஆரம்ப பதிவு அவருடையதாக   இருந்தாலும் மற்றவர்கள்  பதிவாக இருந்தாலும் முடிவு பதிவு அவருடையதாகவே இருக்கும்.
பகுதிகள் பலவிதம் -- பதிவர்கள் பலவிதம் --ஒவ்வொருவரும் ஒருவிதம்.

ஏன் நான் ஆரம்பித்த ஒரு கட்டுரை தொடர், போதிய பார்வையாளர்கள் இல்லாததால் நானே அதை நிறுத்திவிட்டேன்.மறுமொழிகள் இல்லை என்று மருகவில்லை.புரிந்துகொண்டேன் நிறுத்திவிட்டேன்.

மறுமொழியை பற்றி கவலை படாத இரு பதிவர்கள் கருமமே கண்ணாயினர் செயல் என்று மூன்று தலைப்புகளில் இப்பவும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்காக யாரும் மறுமொழி இடவேண்டாம் என கூறவில்லை. மறுமொழி இட்டால்தான் பதிந்தவர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும். அதுவும் புதியவர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.

குதிரையை குளத்தருகே கொண்டுதான் செல்லமுடியும் நீரை குடி என்று கட்டாயப்படுத்தமுடியாது என்ற ஆங்கில சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:20 am

29.12.2017 

சினிமா உலகத்தில MGR க்கு 'சின்னவர்' னு பேராம். அப்போ பெரியவர் யார்னு கேக்குறீங்களா? 'MGR நாடக மன்றம்' னு அப்போ இருந்துச்சாம். இந்த மன்றத்தை பொறுப்பெடுத்து MGR இன் அண்ணன் சக்கரபாணி நடத்தி வந்தாராம். அப்போ அவரை எல்லோரும் 'பெரியவர்' னு கூப்பிட்டதால MGR ஐ சின்னவர்னு கூப்ட்டாங்களாம். 

MGR சூப்பரான ஃபோட்டோகிராஃபராம். எந்த நாட்டுக்கு போனாலும் அவருக்கு புடிச்ச ஜாமான்களை வாங்கும்போது அதுல கண்............டிப்பா கேமரா இருக்குமாம். அவருடைய வீட்ல பலப்பல வகையான கேமரா இருந்துச்சாம். கடைசி நாட்கள்ல அந்த கேமராக்களை, அவருக்கு புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாராம்.

MGR ஐ ஃபோட்டோ எடுக்கிறது ஈஸியில்லியாம். அவருக்கு தெரியாம யாரும் அவரை போட்டோ எடுக்கவே முடியாதாம். அவரை போட்டோ எடுக்கிறவர் எங்கேயிருந்து எப்படி எடுப்பார், அவர் எடுக்கிற போட்டோவின் ரிஸல்ட் என்னான்னு முதல்லேயே சூப்பரா கணக்கு போட்டுருவாராம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:23 am

29 .12 .2017 

துளிவிஷம் : 

நரசுஸ் காபி - என்ன காபி ஞாபகமா ? 

இந்த நரசுஸ் காபி உரிமையாளர் பி.எல்.நரசு தயாரிச்ச முதல் படம் தான் துளிவிஷம். 

பிரபலமான ஒரு நாடகம் இந்தப் படமாக மாறுச்சாம். ஏ.எஸ்.ஏ.சாமி இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செஞ்சார். நடனம் மற்றும் இசையமைத்தது கே.என்.தண்டாயுதபாணி.

கிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ், டி.வி.நாராயணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் நடிச்சிருந்தாங்க. தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. 

படம் ஓடல.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:27 am

29 .12.2017 

சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பேரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம். 

தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளின்னு சொல்லுச்சாம். 

உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்களில முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:31 am

29.12.2017 

பட்டுக்கோட்டையார் முதல் முதலாக மெட்டுக்கு எழுதிய முதல் பாட்டு – சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் – புதையல் 1957

SSR பாடிய பாட்டு செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு – புதுமைப் பெண் 1959

MGR & ஜெமினி கணேசன் இணைந்த படம் முகராசி 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:35 am

29.12.2017 

உரிமைப்போர் [1998]ங்கற படத்த ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல பார்த்தேன். ரஞ்சிதா, அருண் பாண்டியன் நடிச்சது. ஒரு கல்யாண ரிசப்ஷன். பாட்டுக் கச்சேரி நடக்குது. பாடகர் சுரேந்தர் பாடுறார். ஆனா ........................ அது அவர் குரல் இல்ல. தேவா பின்னணி பாடியிருக்கார். ஏன்னா இந்தப் படத்துக்கு தேவா ம்யூசிக். ஆக, சுரேந்தருக்கு தேவா பின்னணி பாடியிருக்கார்னு தெரியுது.

காதல் காதல் காதல் படத்தில் ஜாலி ஆப்ரஹாம் ஹீரோவாம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாட்டு. ஆனா இவருக்காக மலேசியா வாசுதேவன் பாடினாராம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:38 am

29.12.2017 

ராஜகுமாரி 1947 – ASA சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர். இருந்தாலும் ASA சாமி அப்போ பிரபலமா இருந்தாதால டைட்டில்ல கதை வசனம், சினாரியோ & டைரக் ஷன் ASA சாமி,BA Honsன்னு போட்டு, உதவி ஆசிரியர் மு.கருணாநிதின்னு போட்டிருக்கு.

அடிமைப் பெண் படத்தில் situation பாட்டு ஒண்ணை எழுதி MGR office இல் கொடுத்துட்டாராம், கவிஞர். பாட்டை வாங்கினவர் எங்கோ தவற விட்டுட்டாராம். அது மட்டுமில்லாம, MGR ட்ட கவிஞர் இன்னும் பாட்டு எழுதி குடுக்கலன்னுட்டாராம். MGR கவிஞரை பார்த்தபோ, ஏன் பாட்டு குடுக்கலன்னு கோவிச்சுகிட்டாராம். கவிஞர் பதில் சொல்றதுக்கு சான்ஸ் கொடுக்கலியாம். அதனால ரெண்டு பேருக்குமான connection விட்டு போச்சாம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:46 am

29.12.2017 

'கவலை இல்லாத மனிதன்' - சங்கர் டைரக்ட் செஞ்சது. படம் முடிஞ்சவுடனே தணிக்கைக்கு போச்சு. இந்தப் படத்ல "கண்ணோடு விண் பேசும் ஜாடை"ன்னு ஒரு பாட்டு இருக்காம். இந்தப் பாட்டில  "மது .......இது மாது ................. மிதம் இது மீதம்" னு வரிகள் வருது. 

கண்ணதாசனோட பாட்டு. தணிக்கை அதிகாரிகள் அந்த பாட்டோட பல்லவியையே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எல்லோருக்கும் என்ன செய்றதுன்னு தெரியலயாம். கவிஞர் வந்தாராம். நடந்தத கேட்டாராம். 

"இதுல கவலை பட்றதுக்கு என்ன இருக்கு. பல்லவிய வேற மாதிரி மாத்திரலாமே " ன்னு சொல்லி "மனம் இது மாறும், அனுதினம் சுகம் தேடும்' னு வரிகளை உடனே மாத்தி, கொஞ்ச நேரத்தில எல்லோர் மனசிலேயும் ஒரு நிம்மதிய வரவழச்சாராம். எப்பூடீ............................

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 29, 2017 2:02 am

29.12.2017 

மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:

"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்துட்டு புறப்படுங்கோ"

"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"

"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கணும்"

"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"

"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"

"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".

"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"

இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாததாமே. நாகேஷ் தானா........... சேர்த்துக்கிட்ட வசனமாம்.


என்ன ஒரே குழப்................பமா  இருக்கா? இந்த வசனங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில வருது. சிவாஜியும், நாகேஷும் பேசிகிட்டது. ஏ.பி.என். னாக்கா AP நாகராஜன் இந்தப் படத்தின் டைரடக்கர்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum