ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Jan 03, 2018 11:03 pm

03.01.2018 

அனுப்பினதுல ஏதாவது தப்புன்னு தெரிஞ்சா, அப்புறமா திருத்த முடியல. 'மேற்கோள்' மட்டும்தான் இருக்கு. 'திருத்து' 'delete' ஐ காணோம். எப்பவுமே அந்த மூணும் தெரியாதா? 
 
பீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த 
சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம். 
எப்படி ? ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி.  AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.
 
Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Jan 03, 2018 11:41 pm

03.01.2018 

AVM குமரனுக்கு ம்யூசிக் மேல ரொம்ப ஈடுபாடு உண்டாம். இசைஞானம் உள்ளவராம். அவர் படங்களுக்கு சுதர்சனம் ம்யூசிக் போட்டார்னா, அவர் பக்கத்தில போய் உக்காந்துக்குவாராம் குமரன். சில நேரங்கள்ல சில ட்யூன்களை விசிலடிச்சு காட்டுவாராம். AVM படங்களுக்கு ம்யூசிக்கு இவர் பங்களிப்பு நிறைய இருக்குமாம்.
 
Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jan 04, 2018 4:23 am

04.01.2018


MGR முதல்ல தமிழ் படத்திலதான் நடிச்சிருக்காராம், சதிலீலாவதி, 1936 ல. 

மூணு வேற மொழி படங்களில நடிச்சிருக்காராம். 

Ek Thaa Raja 1951 - ஹிந்தி, 

சர்வாதிகாரி 1951 - தெலுங்கு, 

ஜெனோவா 1953 - மலையாளம். 

இதெல்லாம் தமிழ்ல இருந்து அங்க போச்சான்னு தெரியல. டப்பிங்கா இருக்குமா, ரீமேக்கா, தெரியல. 


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jan 04, 2018 4:28 am

04.01.2018
NS கிருஷ்ணன் - கலைவாணர் 

MGR - புரட்சி நடிகர் [கலைஞர் கொடுத்ததாம்]


MGR - பொன்மனச் செம்மல் [வாரியார் கொடுத்ததாம்] 


MGR - மக்கள் திலகம் [தமிழ்வாணன் கொடுத்ததாம்]


சிவாஜி கணேசன் - நடிகர் திலகம், சிம்மக்கு ரலோன்,  செவாலியே

 
பிரபு - இளைய திலகம் 

ஜெமினி கணேசன்  - காதல் மன்னன் 

 
Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Jan 04, 2018 10:56 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 3:38 am

06.01.2018

கல்யாண பரிசு 1959 

ஸ்ரீதர் ஒரு நல்.............ல கதைய எழுதினார். அதுவும் காதல் கதை. அந்தக் கதைய அவரே இயக்க போறதா சொன்னார். யார்கிட்டே சொன்னார் ? கிருஷ்ணமூர்த்தி & கோவிந்தராஜன். இவங்க யார் தெரியுமோ ? அவரோட பார்ட்னர்கள். அவங்க ரெண்டு பேரும் பயந்தாங்களாம். எதுக்காம் ? அவரால இப்படிப்பட்ட ஒரு நல்ல கதை பாழாயிறக்கூடாதேன்னு தான். வேறே யார்கிட்டேயாவது குடுக்கலாம்னு சொன்னாங்க. 

அப்புறமா அப்டி இப்டீன்னு ஸ்ரீதரே அந்தப் படத்த இயக்க சம்மதிச்சாருங்க. பின்னே என்ன ! அவரோட முதல் படமே தடாலடியா, கன்னா பின்னான்னு ஓடுச்சு. சும்மாவா, தேசிய விருதுல்ல கெடச்சுது. இவ்வளத்துக்கும், ஸ்ரீதர் யார்கிட்டேயும் உதவியராக இருக்கல. எல்லாம் அவர் சினிமா அனுபவம் தான்.

இந்தப் படம் தெலுங்கிலே 'பெல்லி கானுகா' என்கிற பேர்ல ரீமேக் ஆச்சு. இதுல நாகேஸ்வரராவும் சரோஜாதேவியும் நடிச்சாங்க. இந்தியிலே 'நஜ்ரானா' பேர்ல உருவாச்சு. இந்தியில வையந்திமாலாவும் ராஜேந்திரகுமாரும் நடிச்சாங்க. 

இந்த இந்திப்படத்த பத்தி ஒண்ணு சொல்லணும். இந்தப் படம் தயாரிக்கும்போதுல்ல, சரோஜாதேவி தான் இந்தியிலும் நடிப்பார்னு சொன்னாங்க. சரோஜாதேவியும் ஆசையா காத்துக்கிட்டு இருந்தார். ஆனா அவர் ஆசை வீணா போச்சு. அவரோட கோபத்த ஏதோ ஒரு பேட்டியில கூட சொல்லியிருந்தாராம். 


அந்த சமயத்தில 'சசுரால்' என்கிற வேற இந்தி படத்துக்கு இயக்குனர் எல்.வி. பிரசாத் சரோஜாதேவிய புக் செஞ்சார். இதுல அவரோடு ராஜேந்திரகுமார் நடிச்சிருந்தார். ஒரே நேரத்துல அந்த நzரானாவும், இந்த சசுராலும் ரிலீஸ் ஆச்சு. அந்த   நzரானா படுத்துருச்சு. இந்த சசுரால் சக்க போடு போட்டுச்சு. நம்ம சரோஜாதேவிக்கு சந்தோஷம் தாங்கல. கேக்கவா வேணும். 

தமிழ்ல எத்தனையோ காதல் படங்க வந்திருந்தாலும் இந்த கல்யாண பரிசு படமும் சிறந்த காதல் பட வரிசையில் நிக்குதுல்ல. அதுவும் முக்கோண காதல் கதை. avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 4:02 am

06.01.2018

களத்தூர் கண்ணம்மா 1960

அட்வோகேட் சீனிவாசன்இவர் யார்னு தெரியுமாநம்ம 
கமலோட அப்பாவாம்இவர் பிரபலமானசினிமா 
தயாரிப்பாளரின் நண்பராம்அந்த நண்பர்................. அவர்தாங்கமெய்யப்பசெட்டியார்சீனிவாசன் ஒருநாள் கமலை 
செட்டியாரோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்

"என் பையன சினிமாவில சேர்க்கலாம்னு நெனச்சிருக்கேன்
நல்லா துருதுருன்னு இருக்கான்ஏதாவது சான்ஸ் இருந்தா 
சொல்லுங்களேன்னு சொல்லிட்டு வந்திருக்கார்.

செட்டியாரும் "சரின்னு சொன்னதோட சும்மா இருக்கலீங்கஜாவர் சீதாராமன கூப்ட்டாராம்

"ஒரு சின்ன பையன வச்சு ஒரு கத எழுதுங்களேன்ன்னு 
சொன்னாராம்.அந்தக் கதைதான் இந்தப் படமாம்இதிலேதான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக 
அறிமுகமானார்

இதிலே ஒரு விஷயத்த கவனிச்சீங்களா? ஒரு குழந்தைக்காகவே ஒரு கதைய எழுத வச்ச குழந்தை 
நட்சத்திரம் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்னு 
தெரியுதுல்ல.

தமிழ்ல இந்தப்படம் ஓஹோன்னு ஓடியது போலதெலுங்கிலே 
டப் செஞ்சு அங்கேயும் நல்லா ஓடுச்சாம்அது மட்டும்  இல்லஇதே படம் 'மாவுரி அம்மாயிஎன்கிற பேர்ல 
தெலுங்கிலே ரீமேக் ஆச்சாம் இந்த ரீமேக் படத்துல கமல் 
நடிக்கலியாம்

தமிழ்,தெலுங்குலே மட்டுமாங்கஇந்தியிலும் ரீமேக் ஆச்சாம்
இதிலே டெய்சி ராணி என்கிற சிறுமி தான் கமல் ரோல்ல 
சிறுவனா நடிச்சிருந்தாராம்சிங்களத்திலேயும் ரீமேக் ஆகி
ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சாம்இன்ட்ரஸ்ட்டிங்ல?

"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ................." என்னாமாதிரி 
பாட்டுல்லகொத்தமங்கலம் சுப்பு எழுதியதுகன்னா பின்னான்னு பேசப்பட்ட பாட்டுபடம்நூறு நாள் ஓடோ ஓடுன்னுஓடுச்சுல்ல.

avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 4:57 am

06.01.2018 

ராஜ பக்தி 1960


சரித்திர படம். நாடக நடிகர் வி.சி.கோபாலரத்தினம் 'ராஜபக்தி' ன்னு ஒரு நாடகம் எழுதினாராம். இதே பேர்ல படம் உருவாயிருக்கு. இதிலே நடிச்சவங்க எல்லாருமே பெரிய நட்சத்திரங்கள். அதனால எல்லாரையும் ஒரே நேரத்தில நடிக்க வைக்க முடியாம போச்சாம். ஏன்னா ஒரே சமயத்தில எல்லோருக்கும் கால்ஷீட் கிடைக்க கஷ்டமா போச்சாம். அதனால ஒவ்வொருத்தரையும் தனித்தனியே நடிக்க வைக்க வேண்டியிருந்ததாம். அத்தனை பேரும் அப்போ ரொம்ப பிசியாச்சே. அதனாலே படக்கதை ஒரு கோர்வையா வராம இருந்ததாம். பலமான நடிகர்களே படத்துக்கு பலவீனமாயிட்டாங்களாம். படம் புஸ் ...........................
 
1937 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு  போலயே. அதிலே ப்பி.எஸ்.ரத்னாபாய் ஹீரோயினாம், ட்டி.என்.பட்டாபிராமன் ஹீரோவாம். இந்த படத்திலே ஒரு அதிசயம் என்ன தெரியுமா? ஒரு பிரபலமான டைரக்டர் நடிச்சிருக்காராம். நம்ம ஜாம்பவான்களுக்கு தெரியும். என்ன மாதிரி கத்துகுட்டீங்களுக்காக சொல்றேன். பி.ஆர்.பந்துலு இல்லே, அவர்தான்  இதுலே நடிச்சிருக்காராம்.

ɒilυzɘɘH
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 5:21 am

06.01.2018

ராஜா  தேசிங்கு 1960

இந்தப் படம் அந்த காலத்து  தெருக்கூத்து  நாடகமாம். எம்.ஜி.ஆருக்கு இன்னொரு வெற்றி படம். இந்தப் படம் உருவான சில நாட்களுக்கு பின்னால, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் லடாயாம்.  அந்தாங்க மனஸ்தாபம். அப்புறம் என்ன ஷூட்டிங் இஸ்டாப். .......................... அப்புறமா எப்படியோ எல்லாம் சரியாபோச்சுன்னு சொல்லுங்க. 

படப்பிடிப்பு மறுபடியும் தொடர்ந்துச்சு. படபிடிப்பு முடியிறதுக்கு முன்னால இதுவர எடுத்த படத்த பார்க்கலாமேன்னாராம், எம்.ஜி.ஆர்.  

"பாற்கடல் அலை மீது......." ன்னு ஒரு பாட்டு வருதாமே. தசாவதாரம் பத்திய பாடலாம். இந்த பாட்டு பத்மினி ஆடுற பெரீ....................................ய பாடல் காட்சியாம். இந்த பாடல பத்தி MGR க்கு தெரியாது. அவர் அத பாத்து, லேனா செட்டியார் கிட்ட அந்தப் பாடல் படத்துல வேணான்னுட்டாராம். அந்தப்பாட்ட எடுத்துட்டாங்களாம். சூப்பர் ஸ்டார் சொன்னதாச்சே. மீற முடியுமா?  

அப்புறம் என்ன, கட் .......................... .  படப்பிடிப்பு முடிஞ்சுது. திடீர்னு லேனாவுக்கு ஒரு ஆச வந்திருச்சாம். எப்படியா.............வது நீக்கப்பட்ட அந்தப்பாடல சேர்க்கணும், என்ன செய்யலா....................ம்னு யோசிச்சார்..............  யோசிச்சார். 

அப்பாட, ஒரு ஐடியா அவருக்கு வந்திருச்சுல்ல. அந்த பாட்டுக்கு 'தசாவதாரம்'னு பேர் வச்சாராம்.  சென்சார்கிட்டே ஒரு சர்டிபிகேட்டும்  வாங்கினாராம். ராஜா தேசிங்கு படத்தோட இடைவேளை முடிஞ்சதும் இந்த தசாவதார பாட்ட ட்ரைலர் மாதிரி போட்டுட்டு, ராஜாதேசிங்கு படத்த போட ஆரம்பிச்சாங்களாம். 

எம்.ஜி.ஆர். விருப்பப்படி அந்தப்பாட்டு படத்துல வரல. லேனா ஆசைப்பட்டபடி படத்துடன் பாட்டு திரையில காட்டினாங்கல்ல. ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறிச்சு பாத்தீங்களா?  ஒரு கல்லில ரெண்டு மாங்கா ...........................................
 
1936 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு போல. லட்சுமி - ட்டி.கே.சுந்தரப்பா, ஹீரோயின், ஹீரோவாம்.  ராஜா சந்திரசேகர் தான் இயக்குனராம். 
 
ɐıןnzǝǝH
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 5:37 am

06.01.2018

ரேவதி 1960

இந்தப் படத்த பத்தி ஒரு முக்கியமான தகவல் இருக்கு தெரியுமோ  ............ . 

'சந்திப்பு' என்கிற பேர்ல 1958 லேயே ஆரம்பமான இந்தப் படம், சென்சார் போர்டால தணிக்கை செய்யப்பட்டது வேற பேரால. அது வந்து... 'தியாக உள்ளம்' என்கிற பேர்ல. இந்த பேர்ல இந்தப் படம் மலேசியாவுல மட்டும்தான்  ரிலீஸ்  ஆச்சாம்.  சென்னையிலே ரிலீஸ் பண்றதுல தயாரிப்பாளருக்கு என்னமோ பிரச்சினையாம். 

ஏன்னா மறுபடியும் இந்தப் படம் தணிக்கையாச்சாம். அப்போ 'தியாக இதயம்' னு பேர மாத்தினாங்களாம். தணிக்கையாளர்களுக்கு இந்தப் படத்து மேலே என்ன வெறுப்போ என்னவோ, மறுபடியும், கடைசியில 'ரேவதி' பேர வச்சு தணிக்கைய ஒரு வழியா முடிச்சாங்களாம்.  

சரி நா........லு தடவ பேர மாத்தினாங்கள்ல. படம் ரிலீசாச்சோ. அதுவும் இல்ல.  படத்தோட பேர மாத்தி........... மாத்தி வச்சாங்கல்ல,  அம்புட்டுதான். எந்த.......... டிஸ்ட்ரிப்யூட்டரும்   படத்த வாங்க தயாரா இல்லியாம்.  சென்.............டிமென்ட்.  அதனால ................இந்தப் படம் ....................................  பொட்டிகுள்ளேயே ........................படுத்துருச்சாம்.    

ailuzeeH
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Jan 06, 2018 10:22 am

களத்தூர் கண்ணம்மா படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசியவிருது வாங்கினார்  கமல்ஹாசன்
இந்த படத்திற்கு சம்பளமாக ஒரு  காரும் ஒரு  அல்ஷெஷன் நாளையும் வாங்கினார்
அது அப்போதைய கதாநாயகனைவிட அதிகம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 1:37 pm

06.01.2018

ஆமா, களத்தூர் கண்ணம்மா பட ஷூட்டிங்ல, மெய்யப்ப செட்டியார்
கமல்ட்ட,  

"இந்தப் படத்ல நடிக்க உனக்கு என்ன வேணும்" னு கேட்டாராம். கமல் உடனே, 

"எனக்கு ஒரு காரும், அல்சேஷன் நாயும் வேணும்"னு கேட்டாராம்.  

செட்டியாரும், "நீ பொழச்சுக்குவேடா" ன்னு  சிரிச்சுட்டே சொன்னாராம். 

SK, நீங்க சொன்ன மாதிரி, அப்போ ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால  சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று தேசிய விருது வாங்கினார். நடிச்ச முதல் படத்திலேயே தேசிய விருது. 

களத்தூர் கண்ணம்மா படத்தின் நூறாவது நாள் விழாவிலே, கமல் கேட்ட மாதிரியே, மெய்யப்ப செட்டியார் அவருக்கு ஒரு புத்தம்புது  ஃபியட் கார் பரிசாக  கொடுத்தாராம். இப்படி விலை உயர்ந்................................த பரிசை வாங்கிய முதல்....................  குழந்தை கமல். 

நாய் கொடுக்கல. விழாவிலே கொடுக்காம, அப்புறமா தனியா பார்த்து  கொடுத்திருப்பாரோ?. 

இந்தப் படத்தின் ஷூட்டிங் இடைவேளையில, சாவித்திரிக்கும், ஜெமினி கணேசனுக்கும் [இந்தப் படத்தின் ஹீரோயின், ஹீரோ], பொழுதுபோக்கு, கமல்தான்.  கமலின் அப்பா சீனிவாசனும், அண்ணன் சாருஹாஸனும், அந்தப் படத்தில் எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்களாம். சின்னப்ப பையனா இருந்தாலும், சொல்லிக்கொடுக்கிறதை நல்..............ல grasp பண்ணிக்குவானாம். 

அந்த செட்ல குட்டிகமல் எப்பவுமே துருதுருன்னு ஒரு இடத்தில நிக்கா........................ம, அங்க இங்க சுத்திகிட்டு இருப்பாராம். AVM செட்டியார் ரூம்குள்ள போக , யா ............ ருக்கும் அனுமதி இல்லையாம். ஆனா இந்த குட்டிப் பையனுக்கு exception. அவர் இஷ்டத்துக்கு போவாரு, வருவாரு. 

ஒருநாள் திடீர்னு, செட்ல குட்டிப்பையன காணோமாம். ஸ்டூடியோ முழுக்.....................க தேடிட்டாங்க, எங்கயுமே அந்தப் பய இல்ல. அப்புறமா பாத்தாக்கா, செட்டுக்கு மேல லைட்மேன் நிக்கிறதுக்கு பலகை போட்டு கட்டி வச்சிருப்பாங்கல்ல, அங்க ஏறி நின்னுட்டு இருந்தானாம். அவன கீழ கொண்டு வர்றது பெரும்பாடா போச்சாம். சுட்டி பையா. 

அப்புறமா, பாதகாணிக்கை, பார்த்தால் பசி தீரும் [ரெட்டை வேஷம்], கண்ணும் கரளும் [மலையாளம்], ஆனந்தஜோதி, வானம்பாடி படங்களில் இவர்  குழந்தை நட்சத்திரம். 

Hөөz∩ꞁ!ɐ
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Jan 06, 2018 2:00 pm

ராஜா தேசிங்கு 1960 சூப்பருங்க சூப்பருங்க

ரேவதி 1960 சோகம் சோகம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 4:34 pm

06.01.2018 

ரேவதியை நெனச்சு நீங்க ஏன் அழுறீங்க? 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Jan 06, 2018 4:55 pm

@heezulia wrote:06.01.2018 

ரேவதியை நெனச்சு நீங்க ஏன் அழுறீங்க? 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1256000

ரேவதியை எப்போ ரிலீஸ் பண்ணுவாங்கனு நெனச்சேன் இப்போ ரிலீஸ் ஆனா எப்படி இருக்கும்னு நெனச்சேன் அதான் அழுகை வந்திருச்சு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 5:03 pm

06.01.2018 

அட நீங்க ஒண்ணு, படம் ரிலீஸ் ஆகலேன்னுதானே கவலைப்பட்டீங்க. ரிலீஸ் ஆனா   மகிழ்ச்சி நடனம்

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Sat Jan 06, 2018 5:06 pm

தமிழ் ராக்கர்ஸ் இருக்க நமக்கென்ன கவலை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5835
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 7:44 pm

06.01.2018 


நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 

ஒரே செட்டில் மூணு முக்கிய கேரக்டர்களை கொண்டு எடுக்கப்பட்டது. அதுவும் எத்தன நாள்ல தெரியுமா? பத்தே பத்து நாள்ல  படம் தயாரிக்கப்பட்டு முடிஞ்சுதாம். டெக்னாலஜி  வளராத அந்த காலத்திலேயே இப்படி. படத்திலுள்ள பாட்டுக்கள், சீன்கள், எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் ரொம்ப புகழ்ந்து பேசினாங்களாம். 


கல்யாணப் பரிசு படத்துக்கப்புறம் இந்தப் படம் ஸ்ரீதர் எடுத்த ஒரு முக்கோண காதல் படமாம். குட்டி பத்மினியின் நடிப்பு பேசப்பட்டதாம்.  இந்தி படத்திலும் அவர்தான் குழந்தை நட்சத்திரமாக நடிச்சாராம்.  ஸ்ரீதர்தான் இயக்குனராம்.
 
Busy  நடிகர்கள வச்சு எடுத்தா படத்த சீக்கிரம் முடிக்க முடியாதுன்னு முத்துராமனையும் தேவிகாவையும் தேர்ந்தெடுத்தாராம். அப்புறமா கன்னட நடிகர் கல்யாணகுமாரை செலெக்ட் செஞ்சிருக்கார். கல்யாணகுமாரை நடிக்க வைப்பது சரியா வராதுன்னு சிலர் சொன்னாங்களாம். அதையெல்லாம் ஸ்ரீதர்  ........................................... ஊஹும் காதுலே போட்டுக்கவே இல்லியாம்.  
 
வாகினி ஸ்டூடியோவில ஆஸ்பத்திரி செட் போட்டாராம். படப்பிடிப்பு நடக்கும்போது ஜனங்க வந்து பாக்க பர்மிஷன் குடுத்திருந்தாராம். முதல்ல படத்துக்கு பாட்டெல்லாம் வேணாம்னு நெனச்சாராம். அப்புறமா பாட்டசேத்துக்கிட்டாராம். எல்லாப்பாட்டுமே ஹிட்டோ ஹிட், இல்லியா?
 
இந்த படத்திலே மனோரமா நோயாளியா நச்சிருப்பர்ல. மொதல்ல ராமாராவ் தான் நோயாளியா வச்சு படமெடுத்திருந்தாராம். அப்புறமா மாத்தி மனோரமாவ நோயாளியா நடிக்க வச்சு, மறுபடியும் படத்த எடுத்தாராம். 


தெலுங்கிலேயும், இந்தியிலேயும் கூட அட்டகாசமா ஓடுச்சாம். ரொம்ப வருஷங்களுக்கப்புறம் 1977 ல கன்னடத்துல உருவாச்சாம். இதுல மஞ்சுளாவும் அசோக்கும்  நடிச்சாங்களாம். இதுல ஒரு அதிசயமோ அதிசயம் என்ன?  டாக்டரா யாரு நடிச்சார்? கொஞ்சங்கூட நெனச்சு பார்க்க முடியாது. சூப்பர் ஸ்டார்தாங்க.  ஆமாங்க, ரஜினிகா................... ந்த் தான் டாக்டர் கேரக்டர்ல நடிச்சிருந்தாராம். நம்ப முடியுதா?

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 06, 2018 7:59 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Jan 06, 2018 8:19 pm

06.01.2018

இது சத்தியம் 1963 

இந்த படத்தில மொதல்ல எம்.ஜி.ஆர். தான் நடிக்கிறதா சொன்னாங்களாம். பட பூஜையும் நடந்துச்சாம். அதுக்கப்புறமா தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில ஏதோ கசமுசாவாம். அம்புட்டுதான். அவர் போயிட்டார். 


அசோகன் ஹீரோவா வந்துட்டாராம். ரா.கி.ரங்கராஜனோட நாவல் ஒண்ணு இந்தப்படமா உருவாச்சாம். இதுல கவனிக்க வேண்டியது என்னான்னா, இந்தி நடிகை ஹேமமாலினி இந்த படத்துல நடிச்சிருந்தாராம். அவருக்கு வசனம் ஒண்ணும் இல்லியாம். ஒரு டான்ஸ் மட்டும் ஆடிட்டு போயிட்டாராம். இது அவருக்கு முதல் படமாமே. படம் ஓஹோ என்கிறதால இந்தியிலே ராஜேஷ்கன்னாவ வச்சு உருவாச்சாம்.


********************************
காட்டு ரோஜா 1963

பத்மினி அவரது கல்யாணத்துக்கு  பிறகு நடிக்க வந்த படமாம். கல்யாணத்துக்கப்புறம் அவர் அமெரிக்காவிலே செட்டில் ஆகப்போறதா இருந்துச்சாம். 


அப்போ சரோஜாதேவி டாப்பில இருந்த நேரமாம். இந்த ரெண்டு பேருக்கும்தான் சரியான போட்டி இருந்ததா பேசிக்கிட்டாங்களாம். அதனால கண்ணதாசன் அவரோட குறும்புத்தனத்த பாட்டிலே காட்டினாராம். அந்த பாட்டுதான்................. உங்களுக்கு தெரியாம இருக்குமா? 


"ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ, அன்று போனவள் இன்று வந்துவிட்டாளென்று  புன்னகை செய்தாயோ"னு பத்மினி பாடுறமாதிரி படத்திலே ஒரு பாட்டு இருக்குல. 


அது அவர் சரோஜாதேவிகிட்டே சொல்ற மாதிரி இருந்துச்சாம். வேடிக்கையா இல்ல?   

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 07, 2018 12:19 am

06.01.2018
 
நவராத்திரி 1964
 
படம் "சக்கை போடு போடு ராஜா" ன்னு ஓடுச்சாம். தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ராவ், இந்தப் படத்த வாங்கி அவரே ஹீரோவா நடிச்சாராம். இந்தியிலேயும் உருவாகி அதிலே சுனில்தத் நடிச்சிருந்தாராம்.
 
இதிலே ஒரு அதிசயம் என்னானா எம்.ஜி.ஆருக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு போச்சாம். அவர வச்சு ஒரு படம் இயக்க APN முன்வந்தப்போ,
" 'நவராத்திரி' மாதிரி ஒரு கதையில நானும் நடிக்கணும்"னு சொன்னாராம் எம்.ஜி.ஆர். அதுக்குத்தான் MGRர வச்சு எடுத்த படம் 'நவரத்தினமாம்.   
 
'நவராத்திரி' யில ஒரு ஹீரோயின் ஒன்பது ஹீரோக்கள சந்திக்கிறாப்பல இருக்கும். 'நவரத்தின'த்தில ஒரு ஹீரோ ஒன்பது ஹீரோயின்கள சந்திக்கிறார்.
 
நாட்டிய கலைஞர்கள்  இருக்காங்களே, அவங்க டான்ஸ் ஆடும்போது மொகத்தில என்னமா  பீலிங்க்ஸ்  காட்டுறாங்க, காட்டுறாங்களா? அத மாதிரி  சினிமாவிலேயும்  செஞ்சா  என்னான்னு  ஏ.ப்பி.நாகராஜனுக்கு 
ஒரு எண்ணம் வந்துச்சாம். அப்டி மொகத்திலே நவரசங்களையும்       
காட்டணும்னா யாரை அவர் செலக்ட் பண்ணியிருப்பார்னு நெனக்கிறீங்க. அதே, அதே............................தான். நீங்க நெனக்கிறது சரிதாங்க. நடிகர் திலகம்தான். சிவாஜி ஒன்பது வேஷத்தில எப்டி நடிச்சிருப்பார் என்கிற ஆசை ஜனங்களோட எதிர்பார்ப்புல இருந்தாச்சாம். 
இந்த ஒன்பது வேஷங்களில தெருக்கூத்தாடி வேஷம் ரொம்ப நல்ல
ரோல்.  
 
ஹீரோ ரெடி. ஹீரோயின்? சிவாஜி என்ற சிங்கத்தை எதிர்த்து நடிக்க யாரை செலெக்ட் செய்றது? சாவித்திரியை செலெக்ட் செஞ்சது நல்லதா போச்சு. சரியாவும் இருந்துச்சு.
 
ஒம்போ...................து வேஷம் போட்டு நடிச்ச சிவாஜியை, ஒத்த பொண்ணா நின்னு, அந்த ஒம்போ............................. து வேஷத்துக்கும் ஈடு கொடுத்து சிவாஜியை ஓவர்டேக் செஞ்சு நடிச்சாருல்ல, சாவித்திரி.
 
அ............. ஒரு முக்கியமான விஷயம். 'நவராத்திரி' யும் 'முரடன் முத்து' வும் ஒரே சமயத்திலே உருவாகிக்கொண்டிருந்துச்சாம். அந்த சமயத்தில சிவாஜி நடிச்ச படங்கள ஒரு லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்,  அப்போதான் தெரிஞ்சுச்சாம் அவர் அதுவரைக்கும் 98 படங்கள்ல நடிச்சிருந்தார்னு. 
நாகராஜனுக்கு ஒரே ஆச்சரியமா போச்சாம். போச்சுடா! இப்போ பாருங்க. நவராத்திரியும், பந்துலுவின்  முரடன் முத்துவும் ஒரே சமயத்திலே உருவாகிக்கிட்டு இருந்துச்சாம். ரெண்டுமே ஒரே நாளிலே ரிலீசாவுறதுக்கு வேற  ரெடியா இருந்துச்சாம்.
 
இப்போ எந்த படத்த நூறாவது படம்னு அறிவிக்கிறதூன்னு நாகராஜன் பந்துலுகிட்டே பேசினாராம். ஆனா........... நாகராஜனுக்கு, புதுமையான கான்செப்ட் கொண்ட நவராத்திரியை தான் நூறாவது படமா அறிவிக்க ஆசைப்பட்டாராம். பந்துலு ஜென்டில்மேனாட்டம் ஒத்துக்கிட்டாராம். எப்படீன்னு கேக்குறீங்களா. இத படிச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.  "முரடன் முத்து படத்தில, ஒரு காட்சி முன்னதாக ரிலீஸ் செஞ்சு அத 99 வது  படம்னு  அறிவிச்சுறலாம் " ன்னு பந்துலு சொன்னாராம்.
நாகராஜன் மனம் நெகிழ்ந்து போனாராம்.
 
அதேபோல ரெண்டு படங்களும் ஒரே நாள்ல ரிலீசாச்சாம். காலை காட்சியில முரடன் முத்துவும், பகல் காட்சி நவராத்திரியாம். இப்படியாக நவராத்திரி சிவாஜியின் நூறாவது படமாச்சாம். நல்லா இருக்குல்ல இந்த தகவல்? சிவாஜியின் சாதனையாச்சே. அதுவும் 12 வருட நடிப்பு பள்ளியில 100 படங்க நடிச்சிருந்தாராமே.
 
அந்த தெருக்கூத்து பாட்டுல தெருக்கூத்து கலைஞர்களை போல கவிதை நடை பாடல்கள பாடி நடிக்கணும்ல. சிவாஜி அத ஈ..................சியா செஞ்ஜிருவார்னு நாகராஜனுக்கு தெரியும். ஆனா............ சாவித்திரி எப்படி நடிக்க போறாரோன்னு நெனச்சாராம். அவர் மட்டுமில்ல. சிவாஜிக்கே சந்தேகம் வந்திருச்சாம். அவர் வேற தெலுங்கு பொண்ணாமே. அவர் எப்டி தமிழ்ல கவிதை பாட்டை பாடப் போறார்னு நெனச்சாங்களாம்.
 
சாவித்திரிக்கு ரிகர்சல் குடுத்தாராம் நாகராஜன். அம்புட்டுதான். அவர் டேக்கே  இல்லாம  கவிதை நடை பாட்டை அவரே பாடி நடிச்சார். அப்டித்தானே?  எல்லோரும் அசந்து போனாங்களாம்.
 
அவருக்கு தமிழக அரசு கொடுத்த 'நடிகையர் திலகம்' னு பட்டம் எந்த வருடத்திலே, எந்த படத்துக்கு கெடச்சுதுன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sun Jan 07, 2018 8:27 pm

கொஞ்சம் பொறுங்கள்.நடிகையர் திலகம் (தெலுங்குவில் மகா நதி) படம் விரைவில் வருகிறது பார்த்துச் சொல்லலாம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 07, 2018 11:05 pm

07.01.2018

ஆமா மூர்த்தி, 

சாவித்திரியின் வாழ்க்கை  படமா வருது. தமிழ் & தெலுங்கில படமாக்கப்படுகிறது. தமிழிலும் 'மகாநதி' பேர்லியே ரிலீஸ் ஆகும்னு எதிர்பாத்தாங்களாம். ஆனா இல்ல. படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சிருச்சாம்.  இறுதிக்கட்ட வேலையெல்லாம் நடந்துட்டு இருக்காம். 

தயாரிப்பு : வைஜெயந்தி மூவீஸ் 
டைரக்டர் : தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் 
இசை : மிக்கி J மேயர் 
சாவித்திரியாக : கீர்த்தி சுரேஷ் 
ஜெமினியாக : துல்கர் சல்மான் 

மகளிர் தினமான மார்ச் 8 2017 அன்னிக்கி, இந்தப் படத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுச்சாம். அப்போ ஜெமினி கணேசனாக நடிக்க யார் பேரையும் சொல்லலியாம்.  படக்குழு, முன்னணி நடிகர்களிடம் பேசியிருக்காங்க.  அதுக்கப்புறம்தான் இந்த துல்கர் சல்மானை செலெக்ட் செஞ்சாங்களாம். - மாலைமலர், சமயம், ஹிந்து, விகடன் 

சமந்தா பத்திரிகை நிருபராகவும், சாவித்திரி நடிச்ச சில முக்கிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அலூரி சக்ரபாணியாக  பிரகாஷ்ராஜ்  நடிக்கிறாங்களாம். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Mon Jan 08, 2018 12:40 am

சாவித்திரிக்கு  நடிகையர் திலகம் விருது தமிழக அரசு கொடுத்ததா? பக்கத்தில் அம்மா இருக்காங்க ,கலைமாமணி விருது கொடுத்ததாக சொல்றாங்க. நடிகர் திலகத்திற்கு பேசும்படம் பத்திரிக்கை நடிகர் திலகம் என கொடுத்ததாமே.நடிகையர் திலகம் விருது? தெரியலையே.
மதிய உணவு தயாராக காத்திருக்கிறது. அப்புறமா வர்றேன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 08, 2018 4:15 am

08.01.2018

புதிய பறவை 1964

இந்த படத்தில சிவாஜியோட அப்பாவா தாதா மிராசி நடிச்சிருக்காராமே. தாதா மிராசி டைரக்ட்டும்  செஞ்ச படம்.  நடிகர்களின் ட்ரெஸ் எல்லாம் சிங்கப்பூர் & இங்க்லாந்து நாடுகள்லே இருந்து தச்சு வந்துச்சாம். எந்த படம் 'புதிய பறவை' யா ஆச்சுன்னு தெரியுமாங்க? 

ரெபேக்கா 1940 --> Chase A Crooked Shadow 1958 --> சேஷ்  அங்க்கா 1963  [பெங்காலி  படம்] 1963  

இந்த பெங்காலி படத்தில் குட்டி குட்டியா மாத்தி வந்த படம் இந்த புதிய பறவை 1964.  

சஸ்பென்ஸ்  கதை. சிவாஜியின் முதல்  சொந்த தயாரிப்பு.  படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்ட முதல் பாட்டு  எது தெரியுமாங்க? "பார்த்த ஞாபகம் இல்லையோ........." 

ஆப்பிரிக்காவிலே இருந்து ஒரு மியூசிக் பார்ட்டி சென்னைக்கு அப்போ வந்திருந்துச்சாம். அந்த பார்ட்டியை  இந்த பாட்டுக்கு யூஸ் செஞ்சுக்கிட்டாங்களாம்.  "எங்கே நிம்மதி ............' இந்த பாட்ட பத்தி ஒரு விஷயம் என்னான்னு தெரியுமா? கிட்டத்தட்ட  நூற்றுக்கணக்கான வாத்திய கருவிகளை யூஸ் செஞ்சாங்களாம், 

இந்த பட ரிலீச பத்தி ஒரு விஷயம். பிரபுவுக்கு சொந்தமா சென்னையில 'சாந்தி' ன்னு ஒரு சினிமா தியேட்டர். இப்ப அது இல்ல. இந்த படத்த, அந்த தியேட்டர்லயே 1964 ல ரிலீஸ் செய்ய முடியலியாமே. அந்த சமயத்தில அந்த தியேட்டர்ல 'சங்கம்' னு ஒரு ஹிந்தி படம் ஓடிட்டு இருந்துச்சாம். பேரகன் னு ஒரு தியேட்டர். அதுலதான் புதிய பறவை ரிலீசாச்சாம். மொதல்ல நல்லாவே ஓடலியாம். அப்புறமா பிச்சுகிட்டு போச்சாம், 132 நாள். படமும் ஹிட், அம்புட்டு பாட்டும் ஹிட்டோ ஹிட். அதுலேயும் அந்த "எங்கே நிம்மதி ............." பாட்டு இருக்கே சொல்லவே வேணாம்.  அமோகமாக ஓடிய படம். 2010ல சாந்தி தியேட்டர்ல re-ரிலீஸ் செஞ்சு 50  நாள் வரை ஓடுச்சாம். 


1965ல 'சிங்கப்பூர் CID' ன்னு தெலுங்கு படம், அதுவும் ஓஹோ. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum