புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 07, 2013 8:48 am

First topic message reminder :

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 220px-Anwar_Ibrahim-edited
Yang Berhormat Dato' Seri
Anwar Ibrahim

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 220px-Dato_Sri_Mohd_Najib_Tun_Razak
Yang Amat Berhormat Dato' Sri
Mohammad Najib Abdul Razak

13-வது மலேசிய பொதுத் தேர்தலில் மோதும் முக்கிய இரு கட்சிகள்:

பாரிசான் நேசனல் (Barisan Nasional) - தேசிய முன்னணி
மற்றும்
பாக்காத்தான் ராயாட் (Pakatan Rakyat) - மக்கள் கூட்டணி

தேசிய முன்னணியில் இணைந்துள்ள முக்கிய கட்சிகள் விபரம்:
1.United Malays National Organization (UMNO) - அம்னோ
2. Malaysian Chinese Association (MCA) - மலேசிய சீனர் சங்கம்
3. Malaysian Indian Congress (MIC) - மலேசிய இந்திய காங்கிரஸ்
4. Malaysian People's Movement Party (GERAKAN) - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
5. People's Progressive Party (PPP) - மக்கள் முற்போக்கு கட்சி
6. Parti Pesaka Bumiputera Bersatu (PBB) - ஐக்கிய பூமிபுத்ரா பெசாக்கா கட்சி
7. Sarawak United People's Party (SUPP) - சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
8. Parti Bersatu Sabah (PBS) - சபா ஒற்றுமைக் கட்சி
9. Liberal Democratic Party (LDP) - மக்கள் சுதந்திரக் கட்சி
10. Parti Bersatu Rakyat Sabah (PBRS) - சபா மக்கள் ஐக்கிய கட்சி
11. United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO) - ஐக்கிய மூருட் காடாசான் பாசோக் மோமோமோகுன் கட்சி
12. Sarawak Progressive Democratic Party (SPDP) - சரவாக் மக்கள் முற்போக்கு கட்சி
13. Sarawak People's Party (PRS) - சரவாக் மக்கள் கட்சி

மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விபரம்:
1. Parti Keadilan Rakyat (கெஅடிலான்) மக்கள் நீதிக் கட்சி
2. Democratic Action Party - (டி.ஏ.பி) - ஜனநாயக செயல் கட்சி
3. Islamic Party of Malaysia - (பாஸ்) - மலேசிய இஸ்லாமிய கட்சி
4. Sarawak National Party - (சினேப்) - சரவாக் தேசியக் கட்சி
5. Malaysian People's Party - (பி.ஆர்.எம்) - மலேசிய மக்கள் கட்சி
6.Socialist Party of Malaysia - (பி.எஸ்.எம்) - மலேசிய சோசலிசக் கட்சி
7. Malaysian Democratic Party - (எம்.டி.பி) - மலேசிய ஜனநாயகக் கட்சி
8 Sabah Progressive Party - (சாப்) - சபா முன்னேற்றக் கட்சி

மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த தேர்தலில் கிளந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை மக்கள் கூட்டணியிடம் பறிகொடுத்தது. இதனால் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்த தேசிய முன்னணி மக்களுக்கு சலுகைகளையும், பணத்தையும் வாரி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரியில் மலேசிய தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்க உள்ளேன். இச்செய்திகள் மலேசிய நாளிதழ்கள் மற்றும் இணையத் தளங்களிலிருந்து எடுத்து வழங்கப்பட உள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:32 pm

இரு தொகுதிகளில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட பிஎஸ்எம் முடிவு – செமினியில் மும்முனைப் போட்டி உறுதி

பொதுத்தேர்தலில் கோத்தா டாமன்சாரா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிகளில், பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி போட்டியிட பிகேஆர் வழிவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்களது கை முஷ்டி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிகேஆரிடம் விடாப்பிடியாகக் கூறிவந்த பிஎஸ்எம், தற்போது தங்களது பிடியை தளர்த்தி பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் சுமூகத் தீர்வுக்கு வந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது பிஎஸ்எம் கட்சிக்கு அரசியல் கட்சியாக பதிவு கிடைக்கவில்லை. எனவே, அப்போது பிஎஸ்எம் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.

சுங்கை சிப்புட் தொகுதியில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும், கோத்தா டமானசாராவில் கட்சித்தலைவர் முகமட் நசிர் ஹிஷாமும் வெற்றி பெற, செமினியில் கட்சியின் தலைமைச்செயலாளர் அருட்செல்வம் தோல்விகண்டார்.

இருப்பினும் அருட்செல்வன்(படம்) வரும் பொதுத்தேர்தலில், செமினி தொகுதியில் பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவரான டாக்டர் முகமத் நாசிர் ஹாசிம் இன்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிகேஆர் கட்சி செமினி தொகுதியில் தங்கள் வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தற்போது பிஎஸ்எம் கட்சியும் அத்தொகுதியில் போட்டியிடுவதால், அங்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

செல்லியல்.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Apr 18, 2013 6:37 pm

நல்ல பகிர்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:37 pm

நஜிப்பின் வலையில் ஹிண்ட்ராப் விழுந்தது; BN-க்கு வேதமூர்த்தி முழு ஆதரவு!

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் -னை மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பச் செய்யுமாறு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை குழு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களுடைய நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்றும் சொன்னார்.

நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்ட, இந்திய சமூகத்துக்கான பிஎன் ஹிண்ட்ராப் ஐந்து ஆண்டு கால
பெருந்திட்டத்தை அமலாக்குவதற்கான புரிந்துணர்வுப் பத்திரத்தில் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கையெழுத்திட்ட சடங்கில் வேதமூர்த்தி பேசினார். அந்த நிகழ்வு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்றது.

நாட்டைவிட்டு தப்பி ஓடி லண்டனில் ஐந்தாண்டுகளாக வாழ்ந்த வேதமூர்த்தி கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நாடு திரும்பியிருந்தார்.

அவர் கைது செய்யப்படலாம் என பேசப்பட்டபோதும் அதுபோன்ற எந்தவொரு பிரச்னையும் இன்றி அவர் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

2007-இல் விசாரணை அற்ற ISA சட்டத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் இண்டாரப் போராட்டத்தை அனைத்துலக ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவும் வேதமூர்த்தி நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

செம்பருத்தி.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:38 pm

வேதா தரப்பினர் ‘ஹிண்ட்ராப் கடத்தல்காரர்கள்’ என உதயா சொல்கிறார்

உதயாஹிண்ட்ராப் அமைப்பை உருவாக்கிய இரண்டு சகோதரர்களில் ஒருவரான பி உதயகுமார் தமது இளைய சகோதரர் பி வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் தரப்பு அந்த இயக்கத்தை ‘கடத்தி விட்டதாக’ குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிண்ட்ராப் பெருந்திட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தை பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரிக்கும் சடங்கு நிகழ்வதற்குச் சற்று முன்னர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் உதயகுமார் அவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட ஆறு முக்கியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு புதிய கூட்டரசு அரசாங்கம் 100 நாட்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அந்தப் பெருந்திட்டம் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன்-னும் பக்காத்தான் ராக்யாட்டும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

நாடு கடந்து வாழ்ந்த வேதமூர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியா திரும்பிய பின்னர் அவரது முகாமை இப்போது தான் முதன் முறையாக உதயகுமார் சாடியுள்ளார்.

அவர் திரும்பிய பின்னர் உதயகுமார் தமது மனித உரிமைக் கட்சியில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் ஹிண்டராப்புக்கு தாம் தான் தலைவர் என ( ultimately the de facto leader of Hindraf )அவர் கூறி
வந்துள்ளார்.

பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு யாரையும் கேட்டுக் கொள்வது ஹிண்ட்ராப் போராட்டத்தில் ஒரு பகுதி அல்ல என அவர் வலியுறுத்தினார்.

“பொதுத் தேர்தல் நிகழவிருக்கும் வேளையில் அது ஏற்கக் கூடிய அறிகுறி அல்ல,” என்றார் உதயகுமார்.

“ஹிண்டராப்பின் மூத்த தலைவர் என்ற முறையில் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியிடப்பட்ட 12 அம்ச ஹிண்ட்ராப் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே ஐந்து தசாப்தங்கள் தாமதமாகி விட்டன. இந்திய ஏழைகளுக்கு அம்னோ அன்பளிப்புக் கூடைகளும் அரிசி பொட்டலங்களும் மட்டுமே வழங்கப்படுகின்றன.”

2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் ஹிண்ட்ராப் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அது பிஎன்-னை ஆதரிக்காது என்றும் உதயகுமார் சொன்னார்.

பக்காத்தான் கட்டுக்குள் இருந்த மாநிலங்கள் ஏழை இந்தியர்களுக்கு ‘வழங்காததற்கு’ பக்காத்தான் பொறுப்பேற்க தயாராக இல்லை என்பதால் ஹிண்ட்ராப் பக்காத்தானை ஆதரிக்க முடியாது என்றும் உதயகுமார் சொன்னார்.

“ஏழை இந்தியர்களைப் பொறுத்த வரையில் பிஎன் அதிகமாக ஏமாற்றுகிறது. பக்காத்தான் குறைவாக ஏமாற்றுகிறது. நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அம்னோ கோமாளிக்கு பதில் பக்காத்தான் பொறுப்பேற்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. அதன் தொடர்பில் நாங்கள் கோத்தா ராஜா ஸ்ரீ அண்டாலாஸ் திகுதிகளில் போடியிடப் போகிறோம்,” என்றார் அவர்.

செம்பருத்தி.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 10:09 am

கட்சி மாறினால் 5 மில்லியன் இழப்பீடு வேட்பாளர்களுக்கு பிகேஆர் அதிரடி உத்தரவு!

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற அனுபவத்தின் காரணமாக, பி.கே.ஆர் தற்போது தங்களது வேட்பாளர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை விதித்திருக்கிறது.

அதாவது, பிகேஆர் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னாலோ அல்லது தேர்தலில் வெற்றிபெற்ற பிறகோ கட்சியை விட்டு விலகும் பட்சத்தில், இழப்பீடாக 5 மில்லியன் ரிங்கிட் கட்சிக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஸ்டீவன் சூங்(படம்) கூறுகையில்,

“பிகேஆர் சார்பான வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் பெற்றவர்கள், அதிலிருந்து பின் வாங்கக் கூடாது. அப்படி பின்வாங்குவதாக இருந்தால் கட்சிக்கு 5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகத் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலில், சில தொகுதிகளில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பிறகு தங்களை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 10:43 am

கோத்தா ஆலம் ஷாவில் ஹிண்டாராப் கணபதி – பூச்சோங்கில் கோபிந்த் சிங் போட்டி

சிலாங்கூர் மாநிலத்தில் ஜ.செ.க கட்சி 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.

அதன்படி, பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கோபிந்த் சிங் டியோவும்(படம் இடது), கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சார்லஸ் சந்தியாகோவும் (படம் வலது) Charles-Santiago-Sliderபோட்டியிடவுள்ளனர்.

மேலும் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் ஹிண்டாராப் போராட்டவாதியும், சிலாங்கூர் ஜ.செ.க. உச்சமன்ற உறுப்பினருமான வி.கணபதிராவ் போட்டியிடவுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டுத் தேர்தலில், இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹிண்டாராப் போராட்டவாதி மனோகரன் மலையாளத்திற்கு பதிலாக, இம்முறை கணபதிராவ் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:00 am

அம்னோதான் இப்ராகிம் அலியை நிறுத்தியது – போட்டு உடைத்தார் மகாதீர்! ஒரே மலேசியா சித்தாந்தம் சிதைந்தது!

அம்னோவும், பெர்க்காசாவும் ‘ஒன்றுக்குள் ஒன்று‘ என்பது சுல்கிப்ளி நோர்டினை வேட்பாளராக நியமித்த போதே வெளி உலகிற்கு தெரியத் தொடங்கிவிட்டது.

அதற்கு அடுத்த கட்டமாக இப்ராஹிம் அலி விவகாரத்தில், பாசீர் மாஸ் தொகுதியில் கடைசி நேரத்தில் தே.மு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வராமல் போனபோது அதில் அம்னோவின் தலையீடு இருந்தது என்பது வெட்டவெளிச்சமானது.

ஆனால் அதை எல்லாம் விட, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி இரவு என்.டி.வி 7 என்ற தொலைகாட்சி அலைவரிசைக்கு அளித்துள்ள நேர்காணலின் மூலம், இத்தனை நாட்களாக அம்னோவும், பெர்க்காசாவும் இணைந்து செயல்பட்டு வந்தது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

மகாதீரின் நேர் காணல்

நேற்று இரவு என்.டி.வி 7 தொலைக் காட்சியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மகாதீர், பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியடைய வேண்டுமானால் பெர்க்காசா போன்ற இனம் சார்ந்த அமைப்புகளின் ஆதரவு நிச்சயம் வேண்டும், காரணம் ‘அவர்கள் எங்களுக்காக செயல்படுகிறவர்கள்‘ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த அரசாங்கம் பலவீனமடையும் போது,மலாய் இனத்தின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. அதனால் தான் பெர்க்காசா போன்ற அமைப்புகள் மலாய் இனத்தை காக்கப் தொடர்ந்து போராடி வருகின்றன” என்றார்.

“பெர்க்காசாவை ஆதரிப்பதால் சீனர்களின் வாக்குகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது, அவர்கள் தொடக்கத்திலிருந்தே தங்களது மொழி, கலாச்சாரங்களைத் தாண்டி மலாய்காரர்கள் உட்பட உள்ளூர் வாசிகளுடன் ஒன்றாகக் கலக்க மறுக்கிறார்கள். ஆனால் மற்ற குடியேறிகளான அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தோனேசியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்” என்றும் மகாதீர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

“அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறுபவர்கள் அந்நாட்டின் கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே அங்கு வாழ்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் சீனர்கள் மட்டும் இங்குள்ள மக்களுடன் ஒன்றுபட மறுக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய மொழி, இனம், கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து செல்லட்டும்” என்று மகாதீர் மேலும் பட்டவர்த்தனமாக கூறியுள்ளார்.

“இதனால் சீனர்களின் வாக்கு கிடைக்காது. மற்றும் மலாய் இனம் அல்லாதவர்களால் தேசிய முன்னணிக்கு 20 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்கிற போது, மலாய் இனத்திற்காகப் பாடுபடும் பெர்க்காசா போன்ற அமைப்புகளையும் இழந்து விட்டால் தேசிய முன்னணி வேறு எங்கு போகும்? அதனால் தான் பெர்க்காசா வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:01 am

மகாதீரால் தோல்வியடைந்துள்ள நஜிப்பின் ஒரே மலேசியா திட்டம்

பிரதமர் நஜிப் என்னதான் ஒரே மலேசியா போன்ற திட்டங்களை அமல்படுத்தி, இனப்பாகுபாடு இன்றி ஆட்சி நடத்துவது போல் நாடகமாடினாலும், அடிப்படையில் தேசிய முன்னணி அரசாங்கம் இனவாத கொள்கைகளை தான் கடைபிடித்து வருகிறது என்பது மகாதீர் போன்ற அக்கட்சியின் முக்கிய புள்ளிகளின் வாயால் அவ்வபோது தானாகவே வெளிப்பட்டுவிடுகிறது.

அதிலும் மகாதீர் முன்னாள் பிரதமர் என்பதும் இன்றைக்கும் அம்னோவில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நஜிப்பைக் கவிழ்ப்பதற்கு மகாதீர் ஒருவரே போதும்

நஜிப்பைக் கவிழ்ப்பதற்கு நாட்டில் வேறு யாரும் தேவையில்லை. மகாதீர் ஒருவரே போதும் – அவர் அவ்வப்போது வெளியிடும் மாறுபட்ட கோணல் மாணலான கருத்துக்களே போதும், என்பதற்கு பல சான்றுகளைக் கூறலாம்.

ஏற்கனவே நஜிப் நாடாளுமன்றத்தை கலைக்க தாமதப்படுத்திய போது, தேர்தலில் மோசமாக தோல்வியுற்றால் நஜிப் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என எதிர்மறையான கருத்து வெளியிட்டு அம்னோவுக்குள் குழப்பத்தை விதைத்தவர் இதே மகாதீர்தான்.

பின்னர் ஒருமுறை நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோரைப் பற்றி கடுமையாக விமர்சித்த மகாதீர், ரோஸ்மாவின் நடவடிக்கையால் நஜிப்பின் தலைமைத்துவ தோற்றத்தில் களங்கம் ஏற்படுகின்றது என்ற தொனியில் கருத்துரைத்தார்.

ஆனால், பின்னர் அவரே,நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் சுயசரிதை வெளியீட்டின் போது கலந்து கொண்டு பேசிய போது, ரோஸ்மாவின் சுயசரிதையை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அடுத்துவரும் 100 அல்லது 200 வருடங்களுக்கு அது சரித்திரமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

அது உண்மையாகக் கூறியதோ அல்லது உளறிக் கொட்டியதோ அல்லது கிண்டலாகக் கூறியதோ – அதை மகாதீர் ஒருவரே அறிவார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:01 am

இப்ராகிம் அலியோடு இணைந்து பிரச்சாரம்

இதற்கிடையில் நஜிப் மலேசியா முழுக்க சுற்றி வந்து ஒரே மலேசியா என முழங்கி, அனைவரும் மலேசியர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் என பிரச்சாரம் செய்து வந்த போது, அதனை முறியடிக்கும் வண்ணம், திசை திருப்பும் வண்ணம், மகாதீரோ இனத் தீவிரவாதி இப்ராகிம் அலியோடு இணைந்து கொண்டு பெர்க்காசா கூட்டங்களில் கலந்து கொண்டார்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது பெர்க்காசா மற்றும் இப்ராகிம் அலி பற்றி இந்த தொலைக்காட்சி நேர்காணலின் போது மகாதீர் வெளியிட்டிருக்கும் கருத்து இந்த பொதுத் தேர்தலில் முக்கிய இடம் வகிக்கப் போகின்றது என்பதோடு மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்களிக்கும் மனப்போக்கையும் திசை திருப்பப் போகிறது எனலாம்.

“மற்ற இனத்தவர்கள் எப்படி போனால் எங்களுக்கு என்ன? அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தான் மலாய் இனத்தை காப்பாற்ற முடியும்” என்பது போல் அமைந்துள்ளது மகாதீரின் கூற்று

.இதனால் மலாய் இனம் அல்லாதவர்களின் வாக்குகள் அனைத்தும் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகாதீரின் கைப்பிடிக்குள் – அவர் வகுக்கும் வியூக சிந்தனைகளின் அடிப்படையில்தான் அம்னோவும் நஜிப்பும் இயங்கி வருகின்றார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்களும், எதிர் கட்சித் தலைவர்களும் வாய்கிழிய கத்தி வந்தாலும் அப்போது அதனை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போதோ நிலைமை வேறு!

பெர்க்காசாவின் இரண்டு தலைவர்களை அம்னோ சார்பாக பொதுத் தேர்தலில் நிறுத்தி விட்டு, ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல், வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டியவர் வேண்டுமென்றே சதி செய்துவிட்டார் என ஒரு பக்கம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க நஜிப்பும் அம்னோவும் முயன்று வருகின்றார்கள்.

ஆனால் மகாதீரோ பொதுத் தேர்தலுக்கு 9 நாட்களே இருக்கும் நிலையில் பெர்க்காசா வேட்பாளர்களை நிறுத்தியது நாங்கள்தான் – அதாவது அம்னோதான் நிறுத்தியது என போட்டு உடைத்து விட்டார்.

அதற்கு காரணமும் கண்டுபிடித்துக் கூறுகின்றார். மலாய்க்காரர் அல்லாதவர்களை வெறுப்பேற்றும் வண்ணம் – அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட தங்களின் மனங்களை மாற்றிக் கொள்ளும் வண்ணம் விஷமத்தனமான – ஒரு பல இன நாட்டில் விஷத்தை விதைக்கும் – இனத் துவேஷத்தை வளர்க்கும் – கருத்துக்களை உதிர்த்திருக்கின்றார்.

இதனால், நஜிப்பின் மதிப்பும் மரியாதையும், தலைமைத்துவ தோற்றமும் மகாதீரின் திருவாய் மொழியால் ஒரேயடியாக சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது எனலாம்.

தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து தாக்கும் ‘பூமராங்‘ ஆயுதம் போல், ஒரு காலத்தில் தேசிய முன்னணியை காப்பாற்றிய மகாதீரின் பேச்சே – பல பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அதே மகாதீரின் பேச்சே – இந்த முறை அதே தேசிய முன்னணியைப் பொதுத் தேர்தலில் கவிழ்க்கவும் பயன்படப் போகிறது என்பதுதான் விதியின் விந்தையான விளையாட்டு!

- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:02 am

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Muthth10

“என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு கவலைப்படப் போவதில்லை” – சுல்கிப்ளியை முத்தமிட்ட தேவேந்திரன் கருத்து

வேட்புமனு தாக்கல் அன்று சுல்கிப்ளிக்கு முத்தம் கொடுத்து, இந்திய மக்கள் அனைவரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான ம.இ.காவைச் சேர்ந்த அந்த இந்தியரின் பெயர் என்.தேவேந்திரன் என்று தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக அனைத்து இணையதளங்களிலும் சுல்கிப்ளிக்கு முத்தம் கொடுப்பதைப் போன்ற அவரது புகைப்படம் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது செயல் குறித்து இந்திய மக்கள் கொதித்து எழுந்ததுடன், அவருக்கு எதிராக தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வந்தனர்.

ஆனால் அது பற்றியெல்லாம் தான் கவலைப் படப்போவதில்லை என்று தேவேந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேவேந்திரன் கூறுகையில், “பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை எனக்கு இருக்கிறது. சமூகத்திற்கு அது பிடிக்காமல் போகலாம் அதற்காக அவர்கள் என்னை விமர்சனம் செய்யலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சுல்கிப்ளியை நாடாளுமன்ற வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த போது எனக்கும் அவர் மீது கடுமையான கோபம் வந்தது. எனது ஆதரவாளர்கள் 100 பேருடன் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்றேன். ஆனால் சுல்கிப்ளி வெளியே வந்தவுடன் இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். அதனால் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கன்னத்தில் முத்தமிட்டது மிதமிஞ்சிய செயல் என்பதை ஒப்புக்கொண்ட தேவேந்திரன், தான் யாரிடமும் பணம் வாங்கியோ அல்லது யார் சொல்லையும் கேட்டோ அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இறுதியாக, இது தேர்தல் சமயம் என்பதால் மக்கள் தன்னை சில நாட்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும், அதற்குப் பின் மறந்துவிடுவார்கள் என்றும் தேவேந்திரன் கூறியுள்ளார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக