புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
33 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
32 Posts - 41%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
399 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
27 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 5 of 84 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 44 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 02, 2013 5:36 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (26)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“இசைதிரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
அசைதிரிந்து இயலா என்மனார் புலவர்” (பொருளியல் 1)

-இது தொல்காபியரின் குறிப்பு !

ஒரு பாடலில் எழுவாய் ,பயனிலை, செயப்படுபொருள் முறையானது முன்பின்னாக இடம் மாறி வரலாம்! எனினும் மொத்தப் பொருளில் மாற்றம் வராது ! ஆனால் பாடலில் வரும் சொற்கள் பாட்டிற்குரிய செறிவோடு வரவேண்டும் ! இல்லையெனில் பாடல் , உரைநடையாகிவிடும் !

-இதுதான் நூற்பாவின் திரள்பொருள் !

இசைதல் – சேருதல்

ஒரு சொல் அடுத்த சொல்லோடு சேருதல், இசைதல்!

உரைநடையில் இச் சேர்க்கை கட்டாயம் !

‘குமணன் நேற்று வந்தான் ’ – இசை திரியவில்லை ;ஆனால் பாடலுக்குரிய அசை திரிந்துள்ளது ! அஃதாவது , அசைச் செறிவு இல்லை ! இதனால் இஃது உரைநடை .

என்ன செய்யவேண்டும் ?

‘ வந்தானே குமணன் நேற்று ’- இசை திரிந்துவிட்டது ! சொற்கள் இடம் மாறிவிட்டன !ஆனால் அசை திரியவில்லை ; பாடலுக்குரிய அசை இறுக்கம் வந்துவிட்டது ! பொருளிலும் மாற்றம் இல்லை .இதனால் இது பாடல் !

‘சிலர் பிழைத்தனர் , விழுந்தனர் பலர் ’ –இசை திரிந்துள்ளது ;உரைநடை இலக்கணம் இல்லை ! காரண காரியத் தொடர்பு இல்லை ! எனவே இஃது இலக்கணமுள்ள உரைநடை இல்லை . அசையும் திரிந்துள்ளது; பாடலுக்குரிய அசை இறுக்கம் இல்லை ;எனவே இது பாடலும் இல்லை !

‘சிலரே பிழைத்தனர் , விழுந்தனர் பலரே !’ – பாடலுக்குரிய அசைகள் வந்து சேர்ந்துவிட்டன ! ‘அசைநிலை’ திரியவில்லை ! எனவே ,இது பாடல் அடியாயிற்று ! முதற் சொல்லே ‘சிலர்’ என்று எவ்விதக் காரண காரியத் தொடர்பும் இல்லாமல் வந்திருந்தாலும் (இசைநிலை திரிந்திருந்தாலும்), அடியின் மொத்தப் பொருள் இனிதே விளங்குகிறது !

பாட்டுக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாட்டைச் சவையாக உணர்த்திவிட்டார் தொல்காப்பியர் !

பொருளியலின் முதல் நூற்பாவில் ‘அசை’, ‘இசை’, ‘பொருள்’ பற்றிச் சிறிது உரைத்துவிட்டு மேலே செல்லலாம் என்ற தொல்காப்பியர் திட்டம் நமக்கு விளங்குகிறது !

......................................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 03, 2013 9:01 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (27)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற்று இயலான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்” (எச்சவியல் 25)

-இதன் பொருளைப் பார்ப்போம் !

‘வாரா மரபின வரக்கூ றுதல்’ = நகர்ந்து வராத பொருட்களை நகர்ந்து வருவதுபோலப் பாவித்துக் கூறுதல் !

“தேங்காய் ஐந்து ரூபாய்க்கு வருமா?” – கேட்கிறோம் ! உடனே , “தேங்காய் நடந்து வருமா?” என்று கேட்கக் டாது ! தொடரின் பொருள்தான் கேட்போனுக்கும் விற்போனுக்கும் தெரிகிறதே?

‘என்னா மரபின எனக்கூ றுதல்’ = பேசாத பொருள் பேசுவதாகப் பாவித்துக் கூறுதல் !

‘இந்த மருந்து காய்ச்சலைக் கேட்கும் ’ – சித்த மருத்துவர் சொல்கிறார் ;உடனே , “மருந்துக்கு வாய் உள்ளதா?” என்று கேட்கக் கூடாது ! மருத்துவர் கூறுவது மக்களுக்குப் புரிந்ததுதானே?

எதனால் மக்களுக்கு மேலே பார்த்த தொடர்கள் குழப்பம் தராது விளங்குகின்றன?

தொல்காப்பியர் விடை கூறுகிறார் – ‘அவ்வவற்று இயலான்’!

இயலான் = மரபான் = மரபால் !

தொடர் மரபுகள் தொன்றுதொட்டு வந்தவை ! தொல்காப்பியருக்கு முன்பே இருந்தவை ! அதனை யாரும் மாற்ற முடியாது ! அரசாணை போட்டு ,“ நாளையிலிருந்து இப்படித்தான் பேசவேண்டும்” என்று உத்தரவிடமுடியாது !

மரபுதான் மொழிக்கு வளமே !

தமிழ் மொழி மரபைப் போற்றுவதில் தொல்காப்பியருக்கு இருந்த அக்கறை நம்மை வியக்கவைக்கிறது !
......................................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 04, 2013 7:39 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (28)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன்னிலை உரைத்தல் தெளிவகப் படுத்தல்என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர் ” (களவியல் 10)

-இதன் சொற்காட்சி வருமாறு ! :-

காதலனும் காதலியும் காதல் வலையில் வீழ்ந்துவிட்டனர் !

அவர்கள் இன்னும் உடலுறவில் ஈடுபடவில்லை !

அதற்குமுன் காதலன் என்ன செய்வான் என்று உளவியல் நுட்பம் (psychological nuance) காட்டுகிறார் தொல்காப்பியர் !

இக்காலச் சூழலில் கீழ்வருமாறு இதனை விளக்கலாம் !

காதலன் முதலில் காதலியை ‘முன்னிலைப் படுத்து’வான்! “நேற்றுப் போனில் பேசும்போது ......நல்ல சொல் ....lofty … என்றாயே என்ன அது ?” – இதுதான் காதலியை ‘முன்னிலைப் படுத்துதல்’ !

இதன்மூலம் தன் சொல்லை அவள் கவனித்துக் கேட்குமாறு செய்கிறான் காதலன் !

பிறகு அவளைப் புகழ ஆரம்பிப்பான் !இதுவே ‘நன்னயம் உரைத்தல்’!

“காலணி வாங்குவதில் உன்னை மிஞ்ச முடியாது! என்னா கச்சிதம் !” – இப்படிக் கூறியதும் அவள் உதட்டில் ஒரு புன்னகை வரும் ! அது அவர்களை நெருக்கமாக்கும் ! இதுவே ‘நகைநனி உறாஅ அந்நிலை அறிதல்’ !

பின் , “நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவே இல்லை; சாப்பாடு இறங்கவே இல்லை !” –என்று தன் உடல் வாட்டத்தை உரைப்பான் அவன் ! தன்மீது இரக்கம் வருமாறு செய்ய அவன் கையாளும் உத்தி அது !இவையே ‘மெலிவு விளக்குறுத்தல், தன்னிலை உரைத்தல், தெளிவகப் படுத்தல்’ !

இவ்வாறு காதலியிடம் தான் கொண்டுள்ள அன்பையும் உறுதிப்பாட்டையும் தெளிவுபடுத்துவான் அவன்!

இதுதான் தொல்காப்பியர் வரைந்த ஓவியம் !

எந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் காதலியிடமிருந்து உதட்டுப் புன்னகை வரும் என்ற நுணுக்கம்கூடத் தொல்காப்பியத்தில் உள்ளதே?

அதிசயமான நூல் தொல்காப்பியம் !
......................................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 05, 2013 9:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (29)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” (புறத்திணையியல் 19)

-வாகைத் திணைக்கு விளக்கமான நூற்பா இது !

போர் வெற்றியை மட்டும் வாகைத் திணையில் தொல்காப்பியர் பாடியுள்ளதாகப் பலரும் நினைக்கின்றனர் !

தவறு அது !

வாழ்க்கை வெற்றியையும் ‘வாகைத்திணை’யில் தொல்காப்பியர் பாடியுள்ளார் !

மேலைச் சூத்திரம் , போர் வெற்றிக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பொதுவானதுதான் !

“அப்பழுக்கற்ற கொள்கைகளை உடையவர்கள் தத்தம் துறைகளில் ,மற்றவர்களைவிட முன்னேற்றம் காட்டித், தம்மை உயர்த்துதல் வாகையாகும் !” –இதுவே மேலே வந்த சூத்திரத்தின் பொருளாகும் !

தாவில் கொள்கை = குற்றமற்ற கோட்பாடு

தாவில் = குற்றமற்ற

தாவிலை = குற்றமில்லை ; இதுவே மருவித் ‘தேவலை’ ஆனது என்று எழுதியுள்ளார்கள் !

கூற்றை = பிரிவை ; துறையை.

’தோழி கூற்று’ , ‘தலைவி கூற்று’ என்ற தொகைச் சொற்களில் வரும் ‘கூற்று’ வேறு ! அது ‘கூறுதல்’ என்ற பொருளில் வருவது !


கூறுவதால் அது ‘கூற்று’! ; காரணப் பெயர்ச் சொல் .

மேல் நூற்பாவில் வந்த ‘கூற்றை’என்பது ,
கூறு + ஐ = கூற்றை என ஆகும் .

இங்கே ‘கூறு’ , ஏவல் வினை அல்ல ; ‘பிரிவு’ என்ற பொருளில் வந்த பெயர்ச்சொல் . கத்தரிக்காயைக் கூறுகட்டி விற்பார்களே , அந்தக் ‘கூறு’ !

போரில் அடைந்த வெற்றியின்போது வாகைப் பூவைச் சூடியதால் ,நாளடைவில் எத்துறையானாலும் ‘வெற்றி பெற்றான்’ என்பதை ‘வாகை சூடினான்’ எனக் கூறும் மரபு ஏற்பட்டது !

நீங்கள் அவ்வளவாக விரும்பாத துறையில் பணி புரிபவரா? கவலையை விடுங்கள் ! அதே துறையில் மற்றவர்களைவிட முன்னேறி , ‘வாகை’ சூடுங்கள் ! தொல்காப்பியர்தான் கூறிவிட்டாரே ? நீங்கள் கேட்கமாட்டேன் என்றால் , அதற்கு நான் என்ன செய்வது ?
......................................





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 06, 2013 9:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (30)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,செய்யுளியலை ,‘மாத்திரை’ என்ற சொல்லால் தொடங்கியுள்ளார் ; இயல் முடிவுச் சூத்திரத்தைச் ‘செய்யுள்’ என்று தொடங்கியுள்ளார் அவர்!

அஃதாவது , ‘மாத்திரையில்’ தொடங்கிச் ‘செய்யுள்’வரை செய்யுளியலை விரிவாகப் பாடியுள்ளார் அவர் !

அவ்வியலில் ஒரு நூற்பா :-

“ மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே ” (செய்யுளியல் 91)

மொழி = சொல் ; தொல்காப்பியத்தில் ‘மொழி’ , ‘சொல்’என்ற பொருளில் 55க்கு மேற்பட்ட நூற்பாக்களில் ஆளப்பட்டுள்ளது !

பழமொழி = பழஞ்சொல் ; இங்கும் ‘மொழி’ , ‘சொல்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் காணலாம் !

மேல் நூற்பாவில் தொல்காப்பியர் ,‘சொல்லாலும் பொருளாலும் முரணி வந்தால் அது முரண்தொடை’ என்கிறார் !

சொல்லால் முரணுவன :-

1. நீளம் × குட்டை
2. குண்டு × ஒல்லி
3.சிறிய × பெரிய
4. உண்டு × இல்லை
5. வட்டம் × சதுரம்
6. உயர்வு × தாழ்வு
7. காய் × பழம்
8. ஓடி × படுத்து
9. கருமை × வெண்மை
10. குவிந்தது × விரிந்தது


பொருளால் முரணுவன :-

1. மான் × புலி
2. மீன் × கொக்கு
3. யானை × பூனை
4. மலை × மடு
5.மனிதன் × மாடு
6. பாம்பு × கருடன்
7. பொன் × இரும்பு
8. வீடு × காடு
9. நீர் × தீ
10. கல் × மண்

இப்போது முரண்தொடை நமக்குத் தெளிவனாலும் ,இதனை எவ்வாறு அழகாகப் பயன்படுத்துவது என்பதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பிய உரைகளும் வழிகாட்டுகின்றன!

‘கருங்கால் வெண்குருகு’ - இதில் எவ்வளவு அழகாகச் சொல் முரண் விழுந்துள்ளது பார்த்தீர்களா?

‘முரண்தொடை’ செய்யுளுக்கு மட்டும்தானா ?

அல்ல ! வழக்கில் எவ்வளவோ முரண்தொடை நயம் உள்ளன !

‘ஏற்றத் தாழ்வு’ , ‘நல்லது கெட்டது’, ‘மேடு பள்ளம்’ , ‘இன்ப துன்பம்’ – இவற்றில் சொல் முரண் வந்துள்ளதைக் காணலாம் !

‘முரண்’ என்பதைத் தொடை நயத்திற்காகப் பார்ப்பது ஒருபுறம் இருக்க,வாழ்க்கையோடு இயைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும் !

அது தனித் தலைப்பு !

.............................



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 07, 2013 10:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (31)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அவன்சோர்பு காத்தல் கடன்எனப் படுதலின்
மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாக லான” (கற்பியல் 33)

-இந் நூற்பாச் சொற்களுக்கு , இளம்பூரணர் உரைப்படி , இவையே பொருள் :-

அவன் சோர்பு = கணவனின் குறைகள்
கடன் = கடமை
மகன் தாய் = காமக் கிழத்தி
செல்வன் = தலைவன் (கணவன்)
பணிமொழி = கணவன் இடும் ஆணைகள்
இயல்பாக லான = முறை மனைவியும் காமக் கிழத்தியும் இருவருமே தலைவன் சொல்லைத் தட்டாமலிருப்பது இயல்பாதலால் .

அஃதாவது , முறை மனைவியானவள் , கணவனின் காமக் கிழத்தியை இழிவுபடுத்த நினைக்கமாட்டாள் ! – இதுதான் சுருக்கம் !

தலைவனின் காமத்திற்குத் தீனி போட அமைந்தவளே ‘காமக் கிழத்தி’! ஆனால் இவள் பரத்தை அல்லள் ! காமக் கிழத்தி வேறு , பரத்தை வேறு! பரத்தைக்குப் பலருடன் ‘தொடர்பு’ இருக்கும் ;காமக் கிழத்திக்கு ஒருவனுடன் மட்டும்தான் !

காமக் கிழத்திக்குச் சரியான எடுத்துக் காட்டு மாதவி !

தலைவனுக்கும் முறை மனைவிக்கும் பிறந்த மகனுக்கு, ஒரு வகையில் தாயாகவே காமக்கிழத்தி நடந்துகொண்டுள்ளாள் அந்தக் காலத்தில் ! இதற்குச் சான்று இத் தொல்காப்பிய நூற்பாவே !

சரி ! கணவனுக்கு ஒரு காமக் கிழத்தி இருக்கிறாள் என்று தெரிந்தும் மனைவி ஏன் பேசாது இருக்கிறாள் ?

‘அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்’ – என்பது தொல்காப்பியர் விடை !

காமக்கிழத்தியை இழிவுபடுத்தினால் அது தன் கணவை இழிவுபடுத்தியது போல ஆகுமாம் !

என்னதான் கணவன் மீது குறைகள் இருந்தாலும் , அவனை விட்டுக்கொடுக்காதவள் மனைவி ! கணவனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது மனைவியின் கடமையாகப் பழந்தமிழகத்தில் கருதப்பட்டது ! சமுதாயத்தின் முன் கணவனைத் தாழ்வானவனாக நிறுத்தக் கூடாது என்பது மனைவியின் கோட்பாடு !

இஃது ஏதோ நடந்து முடிந்துபோன வரலாறு என எண்ணவேண்டாம் ! இன்றும் பல வீடுகளில் மனைவி இந்தக் ‘கடமையை’ச் செய்துகொண்டுதான் இருக்கிறாள் !

இன்றுகூடக் கள்ள நோட்டு அடித்தவனாக இருந்தாலும் , பல கொலைகள் செய்தவனாக இருந்தாலும் மனைவியானவள் கணவனை ஆதரிக்கத்தானே செய்கிறாள் ? சிறையிலிருந்து வந்த கணவனை வீட்டில் அமர்த்திச் சோறுபோட்டுச் , சாப்பிடும்போது விசிறிவிடுகிறாளே மனைவி இன்றும் ?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த இப்பழக்கம் இன்றும் தொடர்வதைத்தானே இது காட்டுகிறது?

இது சரியா தவறா என்பது வேறு ஆய்வு !

.............................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 09, 2013 9:41 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (32)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிபுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (மரபியல் 90)

-பன்னெடுங் காலத்திற்கு முன்பே உலகத்துப் பொருட்களை அறிவியல் முறைப்படி பகுத்துக் கண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு இந்த நூற்பா சான்று !

அஃதாவது, “உலகத்திலுள்ள எதை எடுங்கள் !அவற்றைப் பிரித்து ஆராயுங்கள் ! உங்களுக்கு மிஞ்சுவது ஐந்துதான் ! நிலம் ,தீ, நீர் , காற்று ,ஆகாயம் ஆகிய ஐந்து பொருட்களின் சேர்க்கையாகத்தான் எந்தப் பொருளும் இருக்கும் ! அப்படிப்பட்ட தன்மைதான் மனிதர்கள் உட்பட எல்லாப் பொருட்களுக்கும் !அப்படி உருவான பொருட்களைத்தான் உயர்திணை , அஃறிணை , ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் என்றெல்லாம் பிரித்துள்ளோம் ! அவை அனைத்தையுமே ஒரு மரபுப்படிப் பெயர் கூறிக், குழப்பம் நேராதபடி வழங்கவேண்டும் !” – என்பதே தொல்காப்பியர் கருத்தாகும் !

விசும்பு = ஆகாயம் ; வெட்ட வெளி (space)

“சரி ! அனைத்துமே இந்த ஐந்துக்குள் அடங்கும் என்கிறீர்களே , இதோ ஒரு பிளேட் இட்லி இருக்கிறது , இதற்குள் எங்கே ஐந்து உள்ளன ?” – கேட்கிறீர்களா?

சொல்கிறேன் !

இட்டலி எங்கிருந்து வந்தது ?
மாவிலிருந்து !

மாவு எங்கிருந்து வந்தது ?

அரிசியிலிருந்து !

அரிசி ?

அரிசி , மண்ணில் விளைந்ததுதானே !

வித்து மண்ணில் (நிலத்தில்) நீருடன் சேர்ந்து நாற்றை உருவாக்க , அது சூரிய வெப்பம் ( தீ) முதலியவற்றின் சேர்க்கையால் சத்துக்களைப் பெற்று வளர்ந்து ,காற்று (வளி)மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தித் ,தேவையான இடைவெளிகளுடன் (ஆகாயம்) உள் அணுக்களை உருவாக்கிப் பின் நெல் மணியை உருவாக்குகிறது!

இப்போது தொல்காப்பியர் கூறிய ஐந்து ஆதாரப் பொருட்களும் வந்துவிட்டனவா இல்லையா ?

“ சரி ! இரும்பு ? அது தனி உலோகம்தானே ? அது எப்படி ஐந்தின் சேர்க்கை ?” – கேட்கலாம் !

இரும்புத் தாது நிலத்திலிருந்து வருகிறது ; உருக்குவதற்குத் தீ வருகிறது ;குளிர்விக்க நீரும் , காற்றும் (வளியும்) வருகின்றன ; இரும்பு அணுக்களுக்குள் இடைவெளி (ஆகாயம்) அமைகிறது !

மூலங்கள் (Elements) எல்லாம் சேர்ந்ததுதான் நிலம் ! மூலங்கள் சேராது எந்தப் பொருளும் உருவாகாது ! ‘நிலம்’ என்பதை இப்படித்தான் பார்க்கவேண்டும் ! ஒவ்வொரு பொருளிலும் புல் பூண்டு உள்ள மண்ணைத் தேடிக்கொண்டிருக்கக் கூடாது !

இதனைப் போலவே ‘வளி’ என்பதையும் காற்று மட்டும்தான் என்பதுபோல எடுத்துக்கொள்ளக் கூடாது ! ‘இயங்கு சக்தி ’ (Motional force)என்று எடுத்துக்கொள்ள வேண்டும் !

இப்படிப் பார்த்தால்தான் கண்ணாடி , பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் தொல்காப்பியர் கூறிய ஐந்து பொருட்களால் ஆனவையே என்பது நமக்கு விளங்கும் !

ஐந்து ! – சரிதானா ?

.............................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 10, 2013 1:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (33)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே ” (மெய்ப்பாட்டியல் 10)

- ‘வெகுளி’ எனும் மெய்ப்பாடு இந்த நான்கு காரணங்களால் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர் !

வெகுளி = சினம் ; சீற்றம்

என்னென்ன நான்கு காரணங்கள் ?

1. உறுப்பறை - கை , கால் முதலிய உறுப்புகளுக்கு ஊறு விளைவித்தல் .

2. குடிகோள் – குடிகளை வருத்தல் .

3. அலை – தடியால் அடித்தல் .

4. கொலை – கொல்லுதல் .

1. உறுப்பறை = உறுப்பு + அறை

அறை = அறு + ஐ ; அறு – முதனிலைத் தொழிற்பெயர் ; ஐ – உடைமைப் பொருள் விகுதி .

மூக்கு அறுபட்டவனை ‘மூக்கறையன்’ என்பதுண்டு .

2. குடிகோள் – ஒருவனது குடிக்குக் கேடு விளைவித்தல்.

பேராசிரியர் என்ற உரையாசிரியர் இதனை விளக்குகிறார் –“தாரமுஞ் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்”

தாரம் – மனைவி ; சுற்றம் –உறவினர்.

‘குடி ’ என்ற குழுக் கட்டுக்கோப்பு இன்று மெதுவாக மறைந்து வருகிறது;‘உலகமய மாக்கல் (globalisation)’ இதற்குக் காரணம் ; தவிர்க்க முடியாதது !

குடிக்குக் ‘கோள்’ செய்வது ‘குடி கோள்’ .

‘கோள்’ – என்ற அடிச் சொல்லிற்கு , ‘ஒழுங்கின்மை’ ,‘சரியின்மை’, ‘சீர்கேடு’ என்றெல்லாம் பொருள் உண்டு !

‘அவள் வயிற்றில் ஏதோ கோளாறு’- சொல்கிறார்கள் அல்லவா ? ‘கோள்’இங்கு அடிச்சொல் .

‘அவன் கோள்மூட்டுகிறான் ’ = அவன் ஏதோ தீங்கை மூட்டுகிறான் .

இவற்றில் வந்த ‘கோள்’தான் தொல்காப்பியரின் ‘குடிகோள்’ என்பதில் வந்துள்ளது !

3.அலை – கழி முதலியன கொண்டு தாக்குதல் ; கையால் நம்மைத் தள்ளி அடிப்பதினும் கோலால் (கழியால்) அடிப்பது மிகுந்த சீற்றத்தைத் தரும் !வெளிப்படையான ,தூக்கலான ‘வெகுளி’மெய்ப்பாடு அப்போதுதான் வெளிவரும் !

4.கொலை – ‘ஒருவனைக் கொன்றால் அவனுக்கு வெகுளி பிறக்கும்’ என்று பொருள் கொள்ள இயலாது ; அவன்தான் இறந்துவிட்டானே? இறந்தவனுக்கு எப்படி வெகுளி பிறக்கும் ?

இதற்கும் பேராசிரியர் உரையையே நாடவேண்டும் - “கொலையென்பது ,அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்”.

புகழைக் கொன்றால் வெகுளி வருமா ?

இந்தக் கேள்விக்கு ‘Defamation’ பிரிவில் வழக்குத் தொடுக்கிறார்களே,அவர்களைக் கேட்டால் தக்க விடை கூறுவார்கள் !

“சரி ! என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி ஒருவன் திட்டிவிட்டான் ! அப்போ எனக்குச் சீற்றம் வராதா ? அதைச் சொன்னாரா தொல்காப்பியர் ?” –வினா !

பேராசிரியர் சொன்ன விளக்கப்படி இது ‘கொலை’யில் அடங்கும் !

இதுவரை நாம் பார்த்த ‘வெகுளி’க்கு நேர் மாறான பொருளும் இச் சொல்லுக்கு இருக்கிறது !

“அந்தப் பெண் சுத்த வெகுளியாக இருக்கிறாள்; அடுத்தவீட்டுப் பையனுடன் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் !” – சொல்கிறார்கள் அல்லவா ?

இந்த ‘வெகுளி’க்கு, வெள்ளை மனம் ( plain-hearted) என்பது பொருள் !

வெகுளி – வெ + கு +ளி
கு – எழுத்துப் பேறு ; ‘வெளி’ என்பதே சொல் !

ஏதோ , படிக்கும் உங்களுக்கு வெகுளி வராமல் இருந்தால் சரிதான் !


.............................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 10, 2013 6:40 pm

31. மனைவியின் மாண்பு,
32. பஞ்ச பூதம்
33. வெகுளி
மூன்றும் படித்தேன். முக்கனியாய் சுவைத்தன.
மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள். நாங்கள் பின்தொடர்கிறோம்.




[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 12, 2013 8:41 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (34)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் , ஆறாம் வேற்றுமை எத்தகையது என்பதை ,

“ஆறா குவதே
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுஎனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற்றுமையியல் 18)

-என விளக்குகிறார் .

‘இதனது இது’ என்ற கட்டமைப்பில் (pattern) ஆறாம் வேற்றுமை வரும் என்கிறார் !

அஃதாவது,
‘எனது வீடு ’

ஊரது அமைதி’

- இவைகள் ‘இதனது இது’ என்ற அமைப்பில் ( வாய்பாட்டில்) உள்ளதைக் காணலாம் !

ஏதாவது ஒன்றைக் கூறி , ‘இதனது ’ என்று கூறத் தொடங்கி ‘இது’என்று இன்னொன்றை வைத்து முடிக்கிறோமல்லவா ? அதுவே ‘இதனது இது’!

இதில் இரு வகைகள் :-

1. தற்கிழமை

2.பிறிதின் கிழமை

‘எங்கே ஞாயிறு, திங்கள் கிழமைகள் ?எனக் கேட்காதீர்கள் !

தற்கிழமை – அந்தப் பொருளுக்கு உரியது

பிறிதின் கிழமை – அந்தப் பொருளினும் வேறானது

பாரியது இளமை – தற்கிழமை
பாரியது தேர் – பிறிதின் கிழமை


வீட்டது அகலம் – தற்கிழமை
வீட்டது காவலன் – பிறிதின் கிழமை

செல்வியின் உயரம் –தற்கிழமை
செல்வியின் சங்கிலி – பிறிதின் கிழமை


“சரி ! இப்படி யெல்லாம் அடுக்குகிறீர்களே , இவற்றை ‘இத்தனை’ என்று வரையறுக்கக் கூடாதா ?” – கேள்வி !

தொல்காப்பியர் வரையறுத்துள்ளார் !

அவர் 17 வகைகளுக்குள் பெருமளவுக்கு அடக்கிவிடலாம் என்கிறார் ! :-

1.இயற்கை – ‘மரத்தது பச்சை நிறம்’ (தற்கிழமை)
2. உடைமை – ‘அவளது மெட்டி’ (பிறிதின் கிழமை)
3. முறைமை – ‘ஆட்டது குட்டி’ (பிறிதின் கிழமை)
4. கிழமை (உரிமை) – ‘சோமனது நிலம்’ (பிறிதின் கிழமை)
5. செயற்கை – ‘மண்ணது உருண்டை’ (தற்கிழமை)
6. முதுமை - ‘பேச்சது முதிர்ச்சி’ (தற்கிழமை)
7. வினை – ‘சுந்தராம்பாளது பாட்டு’ (தற்கிழமை)
8. கருவி – ‘எனது கணினி’ (பிறிதின் கிழமை)
9. துணை – ‘ கந்தனது மனைவி’ (பிறிதின் கிழமை)
10 . கலம் – ‘வீட்டது பத்திரம்’ (பிறிதின் கிழமை)
11. முதல் – ‘சாந்தியது ஆடு’ (பிறிதின் கிழமை)
12. ஒருவழி உறுப்பு – ‘ஆட்டது வால்’ (பிறிதின் கிழமை)
13. குழு – ‘மானது கூட்டம்’ (தற்கிழமை)
14. தெரிந்துமொழிச் செய்தி – ‘வள்ளுவரது குறள்’ (பிறிதின் கிழமை)
15. நிலை – ‘குசேலரது வறுமை’ (தற்கிழமை)
16. வாழ்ச்சி - ‘கடலது ஆமை’ (பிறிதின் கிழமை)
17. திரிந்து வேறுபடுவது – கடலையது மாவு (தற்கிழமை)

அப்பாடா ! நமக்கு மூச்சு முட்டுகிறது !

எவ்வளவு நுணுக்கமாகப் பொருட்களையும் அவற்றின் பல்வேறு உறவுகளையும் அலசி ஆராய்ந்துள்ளார் தொல்காப்பியர் பார்த்தீர்களா?

இதன் இரகசியம் என்ன ?

இரகசியம் – தமிழின் தொன்மைதான் !



.............................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 84 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 44 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக