புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
96 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
7 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
223 Posts - 52%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
16 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 44 of 84 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 64 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 28, 2015 8:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (338)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

க -  இது உயிர்மெய் எழுத்து !

இதில் , முதலில் நிற்பது எது?

க் – கின் மீது ‘அ’ ஏறியதா? இல்லை ‘அ’வின் மீது ‘க்’ ஏறியதா? எது முதலில்?

இப்படியொரு சிந்தனை அந்தக்காலத்தில் ஏற்பட்டுள்ளது !

ஒலி நுட்ப அறிவு ஏனோ பிற்காலத்தில் மழுங்கிவிட்டது ! தமிழிசை நம்மைவிட்டுப் போனது இப்படித்தான் !

நமது ஐயத்திற்குத் தொல்காப்பியர் விடை கூறுகிறார் –
 “மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே” (நூன். 18)

அஃதாவது , ‘க்’குத்தான் முதலில் தோன்றியது ! பிறகு ‘அ’ , அதன்மீது  ஏறியது !

இவ்வாறு இரண்டு ஒலிகள் கலப்பதை இளம்பூரணர் உவமை காட்டி அழகாக விளக்குகிறார் !-

“மெய்யு முயிரும் முன்னும் பின்னும்பெற நிற்கு மென்றமையால் , அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி , விரல் நுனிகள் தலைப்பெய்தாற் போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும் !”

ஒரு விரலும் இன்னொரு விரலும் சேர்ந்தால் , இரண்டும் தனித்தனியே தூக்கலாகத் தெரியும் ! ஆனால் பாலில் நீர் கலந்தால் , அந்தக் கலவையில் நீரைத் தனியே பார்க்க முடியாது ; பாலையும் தனியே பார்க்க முடியாது !

இப்படித்தான் ‘க்’கும் ‘அ’வும் சேர்ந்து , ‘க’ உண்டாகிறது என்பது இளம்பூரணர் விளக்கம் ! ‘க’ ,தோன்றிய பிறகு , ‘க்’ ஒலிப்பு எங்கே போனது ? ‘அ’எனும் உயிர் ஒலி எங்கே போனது ? என்றெல்லாம் கேட்கக் கூடது !

இந்த இலக்கணத்தின்உடனடிப்  பயன்பாடு ஒன்றைக் கூறுகிறேன் !

‘அக்கம்’ , ‘அகம்’ என்று இரு சொற்கள் உள்ளன ! அகராதியில் , அல்லது அகர வரிசையில் இவற்றை அடுக்கச் சொல்லுகிறார்கள் உங்களை ; முதலில் ‘அக்கம்’ எழுதி , அதற்குகீழ் ‘அகம்’ என்று எழுதுவீர்களா? இல்லை ‘அகம்’ என்பதை முதலில் நிறுத்தி அதன் கீழ் ‘அக்கம்’ என்ற சொல்லை எழுதுவீர்களா?

தொல்காப்பியர் என்ன சொன்னார்?

‘மெய்யின் வழியது உயிதோன்றும்’ என்றாரல்லவா?

ஆகவே ‘க்’ வந்தபின்தான் ‘க’ வரும் !

அஃதாவது – அக்கம்
                         அகம்
- என்பதுதான் அகர வரிசை !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 31, 2015 4:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (339)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன் மரபில் அடுத்து –

“வல்லெழுத் தென்ப கசட  தபற” (நூன் . 19)
வல்லெழுத்துகளைத் தொல்கப்பியர் இவ்வாறு கூறியுள்ளார் !

இவர் கூறியது –

க  ச  ட  த  ப  ற -  என்ற உயிர் மெய்களையா ?

க்  ச்  ட்  த்  ப்  ற் -  என்ற  மெய்களையா ?

தொல்காப்பியத்தில்  நமக்கு விடை கிடைக்கவில்லை !

ஆனால் இளம்பூரணர் உரையில் விடை உள்ளது !-

“க  ச  ட  த  ப  ற   -  க  ச  ட  த  ப  ற  என்னும் தனி மெய்களை ! ”

அஃதாவது –
தொல்காப்பியர் கூறிய 6 வல்லெழுத்துகள் – க்,  ச்,  ட்,  த்,  ப்,  ற்

இதைப் போலவே , தொல்காப்பியப்படி –

6 மெல்லெழுத்துகள் -  ங்  , ஞ்  , ண்  , ந்  , ம் , ன்

6 இடையெழுத்துகள் -  ய்  , ர்  , ல்  , வ்  , ழ் , ள்
இவற்றுக்குத் தொல்காப்பிய நூற்பாக்கள் !-

“மெல்லெழு தென்ப  ஙஞண  நமன” (நூன் . 20)

“இடையெழுத்  தென்ப  யரல  வழள” (நூன் . 21)

இன்றைய பயன்பாட்டிற்குத் தகக் கூறுவதானால் –

1. வல்லொற்றுகள் 6 – க்,  ச்,  ட்,  த்,  ப்,  ற்
  உயிர்மெய் வல்லெழுத்துகள் 6 - க  ச  ட  த  ப  ற  

2. மெல்லொற்றுகள் 6 –  ங்  , ஞ்  , ண்  , ந்  , ம் , ன்
   உயிர்மெய் மெல்லெழுத்துகள் 6 -  ங  , ஞ  , ண  , ந  , ம , ன

3. இடையொற்றுகள் 6 –  ய்  , ர்  , ல்  , வ்  , ழ் , ள்
   உயிர்மெய் இடையெழுத்துகள் 6 -  ய  , ர  , ல  , வ  , ழ , ள

                                                                                    ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 07, 2015 12:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (340)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் தொல்காப்பியர் கூறினாரல்லவா?

இப்போது அவை சொற்களில் எப்படி அடுத்தடுத்து வருகின்றன எனக் காட்டுகிறார் !-
“அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக்  குடனிலை தெரியுங் காலை” (நூன் . 22)

‘அம் மூ ஆறும்’ – அந்தப் 18 மெய்களும்,
‘வழங்கியல் மருங்கில்’ – தனி மெய்யாகவும் உயிரோடு சேர்ந்த உயிர்மெய்யாகவும் சொற்களில் பயிலும்போது ,
‘மெய்ம்மயக்கு’ –  மெய்யின் அருகே வேறுமெய் நிற்பது ஒருவகை ;
‘உடனிலை மயக்கம்’ – மெய்யின் அருகே அதே மெய் நிற்பது இன்னொருவகை !
!
இதற்கு நச்சர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-

1. கட்க – இச் சொல்லில் ,  ‘ட்’டும் அதற்கு அருகே ‘க’வும் நிற்கின்றன; ‘க’வில் முதலில் நிற்பது ‘க்’ ; ஆகவே இங்கு , ‘ட்’ எனும் மெய்யும் , அதனருகே வேறொரு மெய்யும் (க்) ,நிற்கின்றன ;  இதனை ‘ மெய் முன் மெய் ’ என்போம் .
- இது மெய்ம்மயக்கம் !

2. காக்கை  – இச் சொல்லில் ,  ‘க்’கும் அதற்கு அருகே ‘கை’யும் நிற்கின்றன; ‘கை’யில் முதலில் நிற்பது ‘க்’ ; ஆகவே இங்கு , ‘க்’ எனும் மெய்யும் , அதனருகே அதே இன  மெய்யும் (க்) ,நிற்கின்றன ;  இதனையும் ‘ மெய் முன் மெய் ’ என்போம் .

- இதுவும் மெய்ம்மயக்கமே !

3. கரு – இச் சொல்லில் ,  ‘க’வும் அதற்கு அருகே ‘ரு’வும் நிற்கின்றன; இங்கு , உயிர் மெய்யும்(க) , அதனருகே வேறொரு உயிர் மெய்யும் (ரு) ,நிற்கின்றன ;  இதனை ‘ உயிர்மெய் முன்  உயிர்மெய் ’ என்போம் .
- இது உடனிலை மயக்கம் !

4. துணங்கை – இச் சொல்லில் ,  ‘ண’வும் அதற்கு அருகே ‘ங்’கும் நிற்கின்றன; இங்கு , உயிர் மெய்யும்(ண) , அதனருகே  வேறொரு  மெய்யும் (ங்) ,நிற்கின்றன ;  இதனை ‘ உயிர்மெய் முன்  மெய் ’ என்போம் .
- இதுவும் உடனிலை மயக்கமே !

5. கல்  – இச் சொல்லில் ,  ‘க’வும் அதற்கு அருகே ‘ல்’லும் நிற்கின்றன; இங்கு , உயிர் மெய்யும்(க) , அதனருகே தனியாக  வேறொரு தனி மெய்யும் (ல்) ,நிற்கின்றன ;  இதனையும் ‘ உயிர்மெய் முன்  மெய் ’ என்போம் .
- இதுவும் உடனிலை மயக்கமே !

6. வில்  – இச் சொல்லில் ,  ‘வி’யும் அதற்கு அருகே ‘ல்’லும் நிற்கின்றன; இங்கு , உயிர் மெய்யும்(வி) , அதனருகே வேறொரு தனி  மெய்யும் (ல்) ,நிற்கின்றன ;  இதனையும் ‘ உயிர்மெய் முன் மெய் ’ என்போம் .
- இதுவும் உடனிலை மயக்கமே !

7. ஆளை - இச் சொல்லில் ,  ‘ஆ’வும் அதற்கு அருகே ‘ளை’யும் நிற்கின்றன; இங்கு , உயிரும்(ஆ) , அதனருகே வேறொரு தனி உயிர்மெய்யும் (ளை) ,நிற்கின்றன ;  இதனை ‘ உயிர் முன்  உயிர்மெய் ’ என்போம் .
- இதுவும் உடனிலை மயக்கமே !

8. ஆம்பல் - இச் சொல்லில் ,  ‘ஆ’வும் அதற்கு அருகே ‘ம்’மும்  நிற்கின்றன; இங்கு , உயிரும்(ஆ) , அதனருகே வேறொரு  மெய்யும் (ம்) ,நிற்கின்றன ;  இதனை ‘ உயிர் முன்  மெய் ’ என்போம் .
- இதுவும் உடனிலை மயக்கமே !

நச்சர் விளக்கம்  இவ்வாறிருக்க , இளம்பூரணர் உரையே தெளிவாக உள்ளது !

இளம்பூரணர் கருத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால்  ,சொல்லில் ‘ஒரே எழுத்து அடுத்தடுத்து மெய்களாக நின்றால்’ அதனை ’உடனிலை மெய்ம்மயக்கம்’ என்றனர் .
எடுத்துக்காட்டு – பக்கம் = ப + க் + க் + அ + ம் ; இங்கு இரு ‘க்’ அருகருகே நிற்பதால் – உடனிலை மெய்ம்மயக்கம் !
சொல்லில் வேறு வேறு மெய்யெழுத்துகள் அருகருகே நின்றால் அது ‘வேற்றுநிலை மெய்ம்மயக்கம்’.
எடுத்துக்காட்டு – பங்கம் = ப + ங் + க் + அ + ம் ; இங்கு  ‘ங்’ அருகே வேற்றின மெய் (க்)நிற்பதால் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம் !

இளம்பூரணர் உரையே  நூன் மரபில் தொல்காப்பியர் எழுதிய பிற நூற்பாக்களோடு இயைந்து செல்கிறது !

இதனைப் போகப் போக நாம் காணலாம் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 08, 2015 4:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (341)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொற்களின் நடுவே மெய்கள்  வந்தால் , எதனை ‘உடனிலை மெய்மயக்கம்’ , எதனை ’ ‘வேற்றுநிலை மெய்ம்மயக்கம்’ என்பதை மேலே பார்த்தோம் !

இதனைத் தொடந்து , மெய்ம்மயக்கத்தை விரிவாகக் கூறுகிறார் தொல்காப்பியர் !-
“டறலள வென்னும் புள்ளி முன்னர்க்
கசப  வென்னு  மூவெழுத் துரிய ” (நூன் . 23)

‘டறலள  என்னும் புள்ளி முன்னர்’ – ட்  ற்  ல்  ள்  என்னும் மெய்களின் முன்னே,

‘கசப  என்னும்  மூவெழுத்து  உரிய’ – க  ச  ப  என்னும் உயிர்மெய்கள் வருவதற்கு உரிமை உடையன !

இதற்கு இளம்பூரணர் கொடுத்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்  !-

1. கட்க -   ‘ட்’ முன்னே ‘க’ வந்தது !
- இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ! ( ‘ட்’டின்  அருகே உள்ள ‘க ’வை,  க் + அ எனப் பிரித்தால் முதலில் நிற்பது ‘க்’ என்பதைக் கவனிக்க ! ‘ட்’டும் ‘க்’கும் வெவ்வேறு மெய்கள் என்பதையும் கவனிக்க !)

2. கற்க -   ‘ற்’ முன்னே ‘க’ வந்தது !
- இதுவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ! ( ‘ற்’றின்  அருகே உள்ள ‘க ’வை,  க் + அ எனப் பிரித்தால் முதலில் நிற்பது ‘க்’ என்பதைக் கவனிக்க ! ‘ற்’றும் ‘க்’கும் வெவ்வேறு மெய்கள் என்பதையும் கவனிக்க !)

3. செல்க -   ‘ல்’ முன்னே ‘க’ வந்தது !
- இதுவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ! ( ‘ல்’லின்  அருகே உள்ள ‘க ’வை,  க் + அ எனப் பிரித்தால் முதலில் நிற்பது ‘க்’ என்பதைக் கவனிக்க ! ‘ல்’லும் ‘க்’கும் வெவ்வேறு மெய்கள் என்பதையும் கவனிக்க !)

இவ்வாறே கீழ்வரும் வேற்றுநிலை மெய்ம்மயக்கங்களைக் காணலாம் !

4. கொள்க

5. கட்சிறார்

6. கற்சிறார்

7. செல்சிறார்

8. கொள்சிறார்

9. கட்ப

10. கற்க

11. செல்ப

12. கொள்ப

(கட்சிறார் – கள்ளைக் குடிக்கும் சிறார்; கற்சிறார் – கல்வியைப் பயிலும் சிறுவர் )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 10, 2015 7:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (342)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘ட்’ ,  ‘ற்’ , ‘ல்’ , ‘ள்’ ஆகிய மெய்கள் , பிற மெய்களோடு எப்படி மயங்கும் என்று சற்றுமுன் பார்த்தோம் !

இப்போது ,  ‘ல்’  , ‘ள்’ ஆகிய இரு மெய்கள் முன் ,  ‘ய’ , ‘வ’ அருகே எப்படி வரும் என விதி ஓதுகிறார்தொல்காப்பியர் ! :-

“அவற்றுள்
லளஃகான்   முன்னர் யவவுந் தோன்றும் !” (நூன் . 24)

‘அவற்றுள்’ – ட்ற்ல்ள் , ஆகிய நான்கனுள்,
‘லளஃகான் முன்னர் ’ – ல் ள் , ஆகிய இரு மெய்களின் முன்னே,
‘யவவுந் தோன்றும்’ – ய , வ ஆகிய உயிர்மெய்களும் வரும்!

இதற்கு , இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகத் தரலாம் ! –

1. கொல்யானை – ‘ல்’ ல்லின் அருகே ‘யா’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !

2. வெள்யானை – ‘ள்’ளின் அருகே ‘யா’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !

3. கோள்வளை – ‘ள்’ளின் அருகே ‘வ’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !
4. வெள்வளை – ‘ள்’ளின் அருகே ‘வ’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !

இதே விதிக்கு நச்சர் தந்த எடுத்துக்காட்டுகளைக் கீழ்வருமாறு விளக்கலாம் !
5. செல்வம் - ‘ல்’ ல்லின் அருகே ‘வ’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !

6. வெள்யாறு -  ‘ள்’ளின் அருகே ‘யா’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !
7. ‘கள்வன்’ - ‘ள்’ளின் அருகே ‘வ’ என்ற உயிர்மெய் வந்துள்ளதைக் காணலாம் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 10, 2015 7:02 pm

PostDr.S.Soundarapandian Tue Feb 10, 2015 7:03 pm

PostDr.S.Soundarapandian Sun Feb 15, 2015 12:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (343)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன் மரபில் நிற்கிறோம் !

எந்த எழுத்து எந்த எழுத்தின் அருகே நிற்கலாம் என்பதை ‘மயக்கம்’ என்ற கலைச் சொல்லால் விளக்கி வருகிறார்  தொல்காப்பியர் ! –
“ஙஞணந மனவெனும் புள்ளி முன்னர்த்
தத்த மிசைக ளொத்தன நிலையே ” (நூன் . 25)

‘ஙஞணநமன  எனும் புள்ளி முன்னர்த்’ – ங ,ஞ, ண, ந, ம, ன  எனும் மெய்யெழுத்துகளின் முன்னே,
‘தத்தம்  மிசைகள்  ஒத்தன நிலையே’ – அவற்றின் இன எழுத்துகள் அருகே வரலாம் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-

1. தெங்கு – ‘ங்’கின் இன எழுத்தாகிய ‘கு’ அருகே வந்தது ; (கு – மென்றொடர்க்       குற்றியலுகரம்)

2. மஞ்சு – ‘ஞ்’சின் இன எழுத்தாகிய ‘சு’ அருகே வந்தது ; (சு – மென்றொடர்க் குற்றியலுகரம்)

3. வண்டு – ‘ண்’ணின் இன எழுத்தாகிய ‘டு’ அருகே வந்தது ; (டு – மென்றொடர்க் குற்றியலுகரம்)

4. பந்து – ‘ந்’தின் இன எழுத்தாகிய ‘து’ அருகே வந்தது ; (து – மென்றொடர்க் குற்றியலுகரம்)

5. கம்பு – ‘ம்’மின் இன எழுத்தாகிய ‘பு’ அருகே வந்தது ; (பு – மென்றொடர்க் குற்றியலுகரம்)

6. கன்று – ‘ன்’னின் இன எழுத்தாகிய ‘று’ அருகே வந்தது ; (று – மென்றொடர்க் குற்றியலுகரம்)

இதே தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !

7. கங்கன் -  ‘ங்’கின் இன எழுத்தாகிய ‘க’ அருகே வந்தது .

8. கஞ்சன் -  ‘ஞ்’சின் இன எழுத்தாகிய ‘ச’ அருகே வந்தது .

9. கண்டன் -  ‘ண்’ணின் இன எழுத்தாகிய ‘ட’ அருகே வந்தது .

10. கந்தன் -  ‘ந்’தின் இன எழுத்தாகிய ‘த’ அருகே வந்தது .

11. கம்பன் -  ‘ம்’மின் இன எழுத்தாகிய ‘ப’ அருகே வந்தது .

12. மன்றன் -  ‘ன்’னின் இன எழுத்தாகிய ‘ற’ அருகே வந்தது .
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 16, 2015 7:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (344)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ண , ன – ஆகிய இரு மெல்லெழுத்துகள் அருகே எந்த எழுத்துகள் அருகே நிற்கத் தக்கவை என்று இப்போது உரைக்கிறார் தொல்காப்பியர் ! –
“அவற்றுள்
ணனஃகான்  முன்னர்க்
கசஞப  மயவவ் வேழு முரிய” (நூன் . 26)

’ ணனஃகான்  முன்னர்’ – ண , ன ஆகிய இரு மெல்லெழுத்துகளின் அருகே,
‘கசஞப  மயவ  அவ் வேழும்  உரிய’ – க , ச , ஞ , ப , ம , ய , வ எனும் அந்த ஏழு எழுத்துகளும் வரலாம் !

இளம்பூரணர், இந்த விதிக்குத் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-
1. வெண்கலம் -  ‘ண்’ணின் அருகே ‘க’ வந்தது .

2. புன்கண் -  ‘ன்’னின் அருகே ‘க’ வந்தது .

3. வெண்சாந்து -  ‘ண்’ணின் அருகே ‘சா’ வந்தது .

4. புன்செய் -  ‘ன்’னின் அருகே ‘செ’ வந்தது .

5. வெண்ஞாண் -  ‘ண்’ணின் அருகே ‘ஞா’ வந்தது .

6. பொன்ஞாண் -  ‘ன்’னின் அருகே ‘ஞா’ வந்தது .

7. வெண்பலி -  ‘ண்’ணின் அருகே ‘ப’ வந்தது .

8. பொன்பெரிது -  ‘ன்’னின் அருகே ‘பெ’ வந்தது .

9. வெண்மாலை -  ‘ண்’ணின் அருகே ‘மா’ வந்தது .

10. பொன்மாலை -  ‘ன்’னின் அருகே ‘மா’ வந்தது .

11. மண்யாது -  ‘ண்’ணின் அருகே ‘யா’ வந்தது .

12. பொன்யாது -  ‘ன்’னின் அருகே ‘யா’ வந்தது .

13. மண்வலிது -  ‘ண்’ணின் அருகே ‘வ’ வந்தது .

14. பொன்வலிது -  ‘ன்’னின் அருகே ‘வ’ வந்தது .

நச்சர் இதே தொல்காப்பிய விதிக்குத் தரும் வேறு சில  எடுத்துக்காட்டுகளைக் கீழ்வருமாறு விளக்கலாம் !-
15. எண்கு -  ‘ண்’ணின் அருகே ‘கு’ வந்தது .

16. பண்பு -  ‘ண்’ணின் அருகே ‘பு’ வந்தது .

17. வெண்மை -  ‘ண்’ணின் அருகே ‘மை’ வந்தது .

18. மண்யாறு -  ‘ண்’ணின் அருகே ‘யா’ வந்தது .

19. எண்வட்டு -  ‘ண்’ணின் அருகே ‘வ’ வந்தது .

20. புன்கு -  ‘ன்’னின் அருகே ‘கு’ வந்தது .

21. மென்ஞாண்-  ‘ன்’னின் அருகே ‘ஞா’ வந்தது .

22. அன்பு -  ‘ன்’னின் அருகே ‘பு’ வந்தது .

23. வன்மை -  ‘ன்’னின் அருகே ‘மை’ வந்தது .

24. இன்யாழ் -  ‘ன்’னின் அருகே ‘யா’ வந்தது .

25. புன்வரகு -  ‘ன்’னின் அருகே ‘வ’ வந்தது .

நச்சர், தம் உரை ஈற்றில் இதனையும் குறிக்கிறார் – “எண்வட்டு , வினைத் தொகை ; எண்கு , புன்கு - பெயர்”.
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Fri Feb 20, 2015 11:09 pm

Dr.S.Soundarapandian wrote: தொடத் தொடத் தொல்காப்பியம் (4)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

களவியல் ,கற்பியல் என்று தொல்காப்பியத்தில் இரண்டு இயல்கள் உள்ளன.இவற்றில் தோழிப்பெண் தலைவியிடம் எந்தெந்தச் சூழல்களில் எவ்வெவற்றைப் பேசலாம், தாய்,தலைவியிடம் எப்போது பேசலாம்,தலைவன் தலைவியிடம் எம்மாதிரியான இடங்களிற் சொல்லாடலாம்,பேசுவோர் என்னென்ன கருத்துப்படப் பேசலாம் என்றெல்லாம் தொல்காப்பியர் விதிகளை வகுத்துள்ளார்!
ஓர் எடுத்துக்காட்டு :-
” பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே “ (களவியல் 12)
என்பது அவர் வகுத்துள்ள விதி.
அஃதாவது,தோழி தலைவனிடம், “ நீ தலைவியிடம் இப்படி இரகசியமாகப் பழக எண்ணுகிறாயே,இது நல்ல பண்புதானா?” என்று கேட்கும்போதும், தலைவன்(காதலன்),தலைவியை நினைத்து நினைத்து உடல் மெலியும்போதும்,தோழி தலைவனைக் கேலிசெய்யும்போதும்,தோழி தலைவியைச் சந்திக்கத் தலைவனை அனுமதிக்கும்போதும் , தலைவனானவன் தோழியிடம் பேசலாம்” என்பது இவ் விதியின் பொருளாகும்.
இங்கு நமக்கு ஓர் ஐயம் வருகிறது! யாரிடம் யார் எப்படிப்பேசினால் இவருக்கென்ன? இதற்கு விதி தேவையா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன!
இவற்றுக்கு விடை தொல்காப்பியத்தில் இல்லை! உரையாசிரியர்களிடமும் இல்லை!
விடையை நாம் சமுதாயத்திலிருந்து பெறவேண்டும்!
வீட்டில் சிறுமி அதிகமாகப் பேசினால் என்ன சொல்கிறார்கள்? “ இந்தா வயசுக்குத் தக்கன பேசு! “ என அதட்டுகிறார்கள் அல்லவா? என்ன பொருள்? ஒரு சிறுமி இவ்விவற்றை இந்த அளவுதான் பேசவெண்டும் என்று நம் முன்னோர்கள் பாதை வகுத்துள்ளார்கள் என்பதுதானே?
அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்புகிறார் ஒருவர்; அப்போது வாசல் காப்போன்,”சார்,கோபமாக இருக்கிறீர்களா? காபி சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டால் வீட்டுக்காரர் அதை விரும்புவாரா? அதே கேள்வியை வீட்டுக்குள் சென்றதும் அவரின் மனைவி கேட்டால் அவர் மகிழ்வார்!
வங்கியில் பணம் எடுக்கிறீர்கள் ; அப்போது ,யாரோ ஒருவர் ,”சார்! பணத்தை எண்ணிப்பார்த்தீர்களா?”என்று கேட்டால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ”ஆகா! நம் பணத்துக்கு ஆபத்து! நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் !” என நினைக்கமாட்டீர்கள்?உங்களிடம் ஒரு மனக் கலவரம் ஏற்படாது? அதே நேரத்தில், வங்கிக் காசாளர்,”சார்! பணத்தை என்ணிப்பார்த்தீர்களா? சரியாக இருக்கிறதா?”என்று கேட்டால் நீங்கள் அகமகிழ்வீர்கள்!
நாம் பார்த்த இந்த எடுத்துக்காட்டுக்களிலிருந்து என்ன தெரிகிறது?

யாரும் எதையும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது;பேச்சுக்கு (பேச்சைத்தான் ‘கூற்று’ என்று தொல்காப்பியம் எழுதுகிறது) ஒரு வரன்முறை உண்டு! யார், யாரிடம், எப்போது ,எதைப் பேசலாம் என்றெல்லாம் பழந்தமிழர்கள் கோடு போட்டு வாழ்ந்தனர்! அதைத்தான் சூத்திரங்களாக எழுதினார் தொல்காப்பியர்!
ஐயம் நீங்கியதா?
* * *
[You must be registered and logged in to see this link.] தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 44 3838410834

Sponsored content

PostSponsored content

Page 44 of 84 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 64 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக