புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
11 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
9 Posts - 4%
Jenila
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
2 Posts - 1%
jairam
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 25 of 37 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 31 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:06 am

ஒரே ஆண்டில் 10 டெஸ்டில் தோல்வி : இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போது பிறக்கும் நல்ல வழி.

இந்திய கிரிக்கெட் அணியைப்போல் ஒரே அடியாக டாப்பிற்கு போவதற்கும் போன வேகத்திலேயே அதள பாதாளத்தில் விழுவதற்கும் வேறு அணியே கிடையாது. டோனி தலைமையில் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி அபார வெற்றிகளை குவித்து வந்தது. டெஸ்ட் அரங்கில் ஆஸி. அணிக்கு சவுக்கடி கொடுத்து முதலிடத்தை பிடித்தது இதே டோனி அன்கோ தான். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ஒருநாள் உலககோப்பை போட்டிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் டூரிலேயே இந்திய அணி தள்ளாடியது. அங்கு அப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடக்கவே இந்திய அணி வீரர்கள் படாதபாடுபட்டனர்.

அப்போதே இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் விழித்துக்கொள்ளவில்லை. அதன் விளைவு தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அதன் பின்னராவது விழித்தார்களா என்றால் இல்லை. தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-2 என தோற்றுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 10 டெஸ்டில் தோல்வியை சந்தித்துள்ளது. பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் சரியில்லை, வீரர்கள் காயம் என தோல்வியை தழுவும் சமயங்களில் கேப்டன் டோனி காரணம் கூறுகிறார். இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்.

அதற்கு மாற்று ஏற்பாடுகளை யார் தான் செய்வது?. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜாகீர்கானை மட்டுமே அதிகம் நம்பியிருந்து விட்டனர். அவர் சொதப்ப துவங்கியதால் வேகப்பந்து வீச்சு துறையே முடங்கியது மாதிரி ஆகிவிட்டது. இவை தவிர சொந்த மண்ணில் நமது சுழற்பந்து வீச்சும் தேய்ந்து கொண்டே போவதும் வேதனையாக உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு கண்டாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரை துவக்க ஜோடியை மட்டுமே நம்பி இருப்பது முட்டாள்தனமானது. மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும். அதே போல் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்கு கொண்டு வரும் தருணமும் இது தான். சீனியர் வீரர்களை தொடர்ச்சியாக ஆட வைக்காமல் சில போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து பார்க்கலாம்.

மேலும் டோனியை டெஸ்ட் போட்டி கேப்டனாக தொடர்ந்து நீடிக்க செய்வது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிய நேரம் இது தான். வெளிநாட்டு மண்ணில் நேர்ந்த தோல்விகளுக்கு தான் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டதாக அவர் கருதுவதாக தெரிகிறது. அதனால் தான் அவர் சக அணி வீரர்களுடன் முன்பு போல் போட்டிகள் தொடர்பாக ஆலோசிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சச்சின் இந்த தொடரில் 8 இன்னிங்சில் 112 ரன் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரி 18.66 தான். எல்லோரும் அவர் ஓய்வு பெற வேண்டும் என ஆவேசப்படுகின்றனர். ஆனால் இதை அவரிடம் முறைப்படி யார் எடுத்து சொல்வது என்பது தான் கேள்வி. அடுத்து ஆஸி. தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தேர்வுக்குழுவினரோ? அல்லது பிசிசிஐ தலைமையோ சச்சினை அழைத்து பேசினால் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கோச் மாற்ற வேண்டிய நேரம் இது

இந்திய அணியின் இந்த தொடர் தோல்விக்கு அணியின் பயிற்சியாளர் பிளட்சரும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும். கேரி கிறஸ்டனின் சிறப்பான பங்களிப்புக்கு பிறகு பிளட்சரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தது. ஆனால் அவரது முன்னிலையில் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் பிளட்சர் வீரர்களிடம் சரியாக ஆலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைதற்கு முன்பே அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:08 am

அதிகாலை பயங்கர தீ விபத்து : ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் 6 விமானங்கள் எரிந்து நாசம்.

சித்தூர்: ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 விமானங்கள், ஹெலிகாப்டர் எரிந்தது. தீ விபத்துக்கு நாசவேலை காரணமா என விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர தலைநகரமான ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் பயிற்சி விமானங்கள், அரசு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விமான நிலையத்தில் திடீரென தீ பிடித்தது. தீ பிடித்த இடத்தில் விமானங்களுக்கான வெள்ளை பெட்ரோல் பேரல்கள் இருந்தன. தீ மளமளவென பரவியது. பயங்கர சத்தத்துடன் பேரல்கள் வெடித்து சிதறின. 3 முறை பயங்கர வெடிசத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அலறியபடி வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். சம்பவ இடம் அருகே சென்றனர்.

இதற்கிடையில் தீ விபத்து குறித்து அறிந்த விமானத் துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 5 பயிற்சி விமானங்கள், அரசு விமானம், ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் ஆகியவை கருகியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதன்மை செயலாளர் தலைமையில் உடனடியாக நேரடி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது நாசவேலை காரணமா என விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ.200 கோடி அளவுக்கு சேதம் இருக்கும் என தெரிகிறது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:09 am

கடும் போராட்டத்துக்குப் பின்
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்.

புதுடெல்லி : பதவி உயர்வு இடஒதுக்கீடு மசோதாவை கடும் போராட்டத்துக்குப்பின் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேறியது.
இதையடுத்து மாயாவதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவுக்காக நாங்கள் கடுமையாக போராடவில்லையென்றால், இந்த சாதனையை செய்திருக்க முடியாது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அரசுக்கும், எதிர் கட்சிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் மக்களவையிலும் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற ஐ.மு கூட்டணி மற்றும் தே.ஜ கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு மாயாவதி கூறினார்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:12 am

அமெரிக்காவில் வங்கியில் கொள்ளை
ரோம்னி முகமூடியுடன் வந்த மர்ம நபர் கைவரிசை

வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி போல முகமூடி அணிந்த வந்த மர்ம நபர், வங்கியில் கொள்ளையடித்து விட்டு தப்பினார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு புளோரிடா மாகாண கொடியை போல சட்டையும், மிட்ரோம்னி போல முகமூடியும் அணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் 5 கவுண்டர்களில் இருந்த ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்ககின்றனர்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:13 am

விரைவில் தடை சட்டம் : சுவிட்சர்லாந்து வங்கிகளில் இனி கறுப்புப் பணத்தை பதுக்க முடியாது...

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்க முடியாதபடி அந்நாடு தடை சட்டம் கொண்டு வர உள்ளது. சுவிட்சர்லாந்து நாடு கறுப்புப் பணம் பதுக்குவோர்களின் புகழிடமாக உள்ளதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தடை சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தடை சட்டத்திற்கான வரைவு மசோதாவை வரும் புத்தாண்டில் வழங்குமாறு பெடரல் கவுன்சிலிடம் அந்நாட்டு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சட்ட விரோத பணம் பரிவர்த்தனை மற்றும் வரி ஈர்ப்பு தொடர்பான பிரச்சனைகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை சட்டம் கொண்டு வந்தால் வங்கிகள் மட்டும் அல்லாது சுவிட்சர்லாந்தில் நிதி நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு அமைப்பும் கணக்கில் வராத பணத்தை எந்த நாட்டில் இருந்தும் பெற முடியாது நிலை ஏற்படும். பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்ட 700 பேர் சுவிட்சர்லாந்திலுள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் ரூ.6000 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாக அரவிந்த கெஜ்ரிவால் புகார் அளித்திருந்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:17 am

ஆப்கனில் கண்ணிவெடிக்கு 10 சிறுமிகள் பலி.

ஜலாலாபாத் : ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணம் சாபர்ஹர் மாவட்டத்தில் 9 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக காலையில் விறகுகளை பொறுக்கச் சென்றனர். அப்போது அங்கு புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை ஒரு சிறுமி மிதித்து விட்டார். அது வெடித்ததில் 10 சிறுமிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அந்த கண்ணிவெடி 1980களில் ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக நடைபெற்ற போரின்போது புதைத்து வைக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சாபர்ஹர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 12:20 am

காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றாலைகளில் மின் உற்பத்தி உயர்வு.

நாகர்கோவில்: தென்மாவட்ட காற்றாலைகளில் மின்உற்பத்தி 3000 மெகாவாட்டாக உயர்ந்தது. காற்றழுத்த தாழ்வு காரணமாக வழக்கத்திற்கு மாறாக காற்று அதிவேகமாக வீசி வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக மின்உற்பத்தி அதிகரித்தது. கடந்த ஞாயிறு அன்று உச்சகட்டமாக தென்மாவட்ட காற்றாலைகள் மூலம் 1517 மெகாவாட் மின்உற்பத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வினாடிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மதியம் 12 மணிக்கு அதிகபட்சமாக 1,849 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் மாலை 5 மணி நிலவரப்படி 1432 மெகா வாட்டாக குறைந்தது.இதுபற்றி காற்றாலை பொறியாளர் ஜெயக்கண்ணன் கூறியதாவது: கடந்த இருநாட்களை விட நேற்று காலை காற்று அதிவேகத்துடன் உள்ளது. அதாவது வினாடிக்கு 16 முதல் 17 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. எனவே தென்மாவட்ட காற்றாலை மின்உற்பத்தி 3000 மெகாவாட்டை தாண்ட வாய்ப்புள்ளது. எனினும் மின்சாரம் தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காக கொண்டு செல்லப்படுவதால் இங்கு மின்தடை ஏற்பட்டிருக்கலாம். சுழற்சி முறையில் மின்வாரியத்தினர் மின்விநியோகம் செய்து வருகின்றனர் என்றார்.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:56 am

அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்ய அதிபர் ஒபாமா ஆதரவு.

வாஷிங்டன், டிச. 19-

அமெரிக்கா கனெக்டிகட் நியூடவுன் பள்ளியில் அதி நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 20 பேர் ஒன்றும் அறியாக் குழந்தைகள். இச்சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூ டவுனில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட அதிபர் பராக் ஒபாமா பிஞ்சு குழந்தைகள் இறந்ததற்கு கண்ணீர் வடித்தார். இந்நிலையில், அதிபர் பராக் ஓபாமா இதுபோன்று சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நவீன தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம் கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ளார்.

இதற்காக வரும் நாடாளுமன்ற முதல் கூட்டத்திலேயே, தடை செய்வது குறித்து மசோதா கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:02 am

காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு அமெரிக்க வீராங்கனை பெயர்.

கலிபோர்னியா, டிச. 18-

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் 487 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிலவை ஆய்வு செய்த இந்த விண்வெளி ஓடங்கள், 1,14,000 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது. சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றி வந்த, இந்த 2 விண்வெளி ஓடங்களின் இயக்கமும் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த விண்வெளி ஓடங்களை, ஒன்றன் பின் ஒன்றாக நிலவின் மேற்பரப்பில் உள்ள மலைகளின் மீது மோதி வெடிக்கச் செய்ய நாசா திட்டமிட்டது. இதனையடுத்து நாசா விண்வெளி நிலையத்திலிருந்தபடி 'எப்', 'பிளோ' என பெயரிடப்பட்ட அந்த 2 விண்வெளி ஓடங்களையும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மலையின் மீது மோதச்செய்து, அமெரிக்க விஞ்ஞானிகள் தகர்த்தனர்.

30 வினாடி இடைவெளியில் எப்-பும், பிளோ-வும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வெடித்துச் சிதறின. இருளான நேரத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததால், பூமியில் இருந்து இதை பார்க்க முடியவில்லை. இந்த விண்வெளி ஓடங்கள் மோதி தகர்ந்த இடத்திற்கு, அமெரிக்காவின் முதல் விண்வெளி பெண் வீராங்கனையான சேல்லி ரைட்-டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மரணமடைந்த சேல்லி ரைட் நினைவாக, இந்த பெயரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையங்கள் அங்கீகரிக்க வேண்டும் என நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:04 am

14 பேருக்கு கோர்ட்டு வழங்கியுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு சர்வதேச அமைப்பு கோரிக்கை

புதுடெல்லி, டிச. 18-

'அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்' என்றழைக்கப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபையில் தலைமை அலுவலகத்தின் மூத்த செயல் அலுவலர், ஜி. அனந்த பத்மநாபன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்களின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ள 14 கருணை மனுக்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். குறிப்பாக, 2001-பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பான முன் விசாரணைகள் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கொள்கைக்கு வேறுபட்டவையாக உள்ளது.

1995-ம் ஆண்டில் ஆட்டோ சங்கர், 2004-ம் ஆண்டில் தனன்ஜாய் சாட்டர்ஜி ஆகியோர் தூக்கிலிடப்பட்ட போது, பொதுவான அறிவிப்புக்கு பிறகுதான் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், அஜ்மல் கசாப் விவகாரத்தில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. மனித உரிமை ஆர்வலர்களால் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அவரை தூக்கில் போட்டதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை கருதுகின்றது.

தாங்கள் விதித்த 13 மரண தண்டனைகள் தவறுதலாக வழங்கப்பட்ட தீர்ப்பு என ஓய்வு பெற்ற 14 நீதிபதிகள், தங்களுக்கு (ஜனாதிபதி) மனு செய்துள்ளதையும் தாங்கள் சீராய்வு செய்ய வேண்டும்.

தங்களின் பரிசீலணையில் உள்ள கருணை மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து, அனைத்து மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை தங்களைக் கேட்டுக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 25 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 25 of 37 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 31 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக