புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

First topic message reminder :

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 10, 2017 3:33 am

M.Jagadeesan wrote:ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1244139

அப்பிடி சொல்கின்ற மாதிரி தெரியவில்லையே ,அய்யா.

sivanaasaan wrote:திருக்குறளுக்கு பலபேர் கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல் >>>>>>

அதாவது திருக்குறளுக்கு பலர் பதவுரை எழுதி உள்ளார்கள் .அவை ஏற்புடையாவையாகவே உள்ளது என்கிறார். அறிவாளிக்கு எதிர்ப்பதம் திருக்குறளில் இருக்கும் என்று சொல்கின்றமாதிரி எனக்கு படவில்லை அய்யா.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Sat Jun 10, 2017 12:22 pm

Muthumohamed wrote: சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

.
மேற்கோள் செய்த பதிவு: 869858

இ.பு.ஞானப்பிரகாசன் wrote:[b]

‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1244043

முட்டாள்’ எனும் சொல் எப்படித் தோன்றிற்று என்று அகராதி கூறுவதை அறியும் ஆர்வமுள்ளவர்கள்    
http://www.eegarai.net/t130775p125-topic#1212533 மற்றும் http://www.eegarai.net/t130775p125-topic#1212567 ஆகிய பதிவுகளைப் பார்க்கலாம். அருமையான பள்ளி ஆசிரியர் அமையப்பெற்ற மூர்த்திக்குப் பாராட்டுக்கள்!

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 10, 2017 2:03 pm

M.Jagadeesan wrote:ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1244139

ஐயா! மேலே திரு.ரமணியன் அவர்கள் கூறியிருப்பதே என் கருத்தும். திருக்குறளுக்கு அனைவரும் அவரவர் பாணியில் விளக்கம் அளிப்பது போல, இந்த ‘முட்டாள்’ எனும் சொல்லுக்கும் அவரவர் தங்களுக்குத் தெரிந்த விளக்கத்தை அளிக்கலாமே என்றுதான் சிவனாசான் அவர்கள் கூறியிருக்கிறார். ‘அறிவாளி’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் திருக்குறளில் இருக்கும் என அவர் சொல்ல விரும்பியிருந்தால் அதை அவர் நேரிடையாகவே சொல்லியிருப்பார். இப்படிப் பூடகமாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லையே!

மேலும், திருக்குறளுக்கு விளக்கம் எழுதும்பொழுது யார் எது எழுதினாலும் உலகம் அதை ஏற்றுக் கொண்டு விடாது. சரியாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்பது ஒரு குறள். இதன் பொருள் "ஒருவர் போற்றுவதற்குத் தகுதி உள்ளவரா இல்லையா என்பது அவர் போன பிறகு அவருக்குள்ள நல்ல பெயர் அல்லது கெட்ட பெயர் மூலமாகத்தான் தெரியும்" என்பது. இதே கருத்தைக் கொஞ்சம் முன்பின்னாக மாற்றி வேறு வேறு சொற்களில் அவரவர் பாணியில் கூறலாம், தவறில்லை. ஆனால், கருத்தின் அடிப்படையையே மாற்றும் அளவுக்கு, "ஒருவர் தகுதி உள்ளவரா இல்லையா என்பது அவர் பிள்ளைகள் மூலமாகத்தான் தெரியும்" என விளக்கம் சொன்னால் ஏற்க முடியுமா? வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்த ஆங்கிலேயர் ஒருவர் இப்படிச் செய்யப் போக, அவருக்கு அதுவரை பாடம் கற்பித்து வந்த புகழ் பெற்ற தமிழறிஞர் ஒருவர் "இனி என் முகத்திலேயே விழிக்காதே" எனக் கடிந்து திருப்பி அனுப்பிய நிகழ்வு வரலாற்றில் உண்டு.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், கண்ணோட்ட வேறுபாடு எனும் பெயரில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கண்ணோட்டம் மாறுபடலாம். ஆனால், இது சரி, இது தவறு என்பது மாறாது. தவறான கருத்துக்களை, தவறான விளக்கங்களை, வேண்டுமெனவே உள்நோக்கத்தோடு பரப்பி விடப்படும் கட்டுக்கதைகளைக் கண்ணோட்ட வேறுபாடு எனும் பெயரால் ஏற்றுக் கொள்ளவோ, விவாதத்துக்கு உட்படுத்தவோ முடியாது, கூடாது. நான் திரு.முத்து மொஹமது அவர்களைக் குறை சொல்லவில்லை. இந்தக் கதை இணையத்தில் ஏராளமான இடங்களில் காணப்படுகிறது. அதையே நம்பி அவரும் இங்கே பகிர்ந்திருக்கிறார். ஆனால், தவறான கருத்துக்களை நாம் ஆதரிக்கக்கூடாது! அது தவறு செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.

சொல்லப் போனால், இந்தக் கருத்துக்கு இந்தளவுக்கு முதன்மை கொடுத்து நாமெல்லாரும் விவாதிப்பதே தவறு. இது இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு இன்னும் முதன்மைத்தனத்தைக் கூட்டி, மென்மேலும் இப்படிப் புரளி கிளப்பினால் என்ன என்கிற குறுகுறுப்பைத் தூண்டும். எனவே, இதை இத்தோடு விட்டுவிட்டு வேறு எதையாவது விவாதிப்போம். இந்தத் திரியை இத்துடன் மூடி விடுவது நல்லது.

நன்றி! வணக்கம்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 10, 2017 4:56 pm

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் . ( 114 )

பரிமேலழகர் உரை :
====================

தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.).

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மருள்ளும் , பரிமேலழகரின் உரை தனித்து விளங்குவது .
மேலேகண்ட குறளுக்கு அவர் கொண்ட உரையைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது .

"எச்சம்" என்னும் சொல்லுக்கு  " புகழ் ' என்ற பொருளும் உண்டு.. பொதுவாக " எச்சம்" என்னும் சொல்லுக்கு "விட்டுச் சென்றது " என்று பொருள் கொள்ளலாம் .

"விட்டுச் சென்றது " புகழாக  இருக்கலாம் அல்லது மக்களாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒருபொருளாகக்கூட இருக்கலாம் .

எனவே "எச்சம் " என்னும் சொல்லுக்கு " மக்கள் " என்று பரிமேலழகர் பொருள் கொண்டது தவறு என்று நாம் சொல்லமுடியாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 10, 2017 5:09 pm

M.Jagadeesan wrote:தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் . ( 114 )

பரிமேலழகர் உரை :
====================

தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.).

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மருள்ளும் , பரிமேலழகரின் உரை தனித்து விளங்குவது .
மேலேகண்ட குறளுக்கு அவர் கொண்ட உரையைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது .

"எச்சம்" என்னும் சொல்லுக்கு  " புகழ் ' என்ற பொருளும் உண்டு.. பொதுவாக " எச்சம்" என்னும் சொல்லுக்கு "விட்டுச் சென்றது " என்று பொருள் கொள்ளலாம் .

"விட்டுச் சென்றது " புகழாக  இருக்கலாம் அல்லது மக்களாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒருபொருளாகக்கூட இருக்கலாம் .

எனவே "எச்சம் " என்னும் சொல்லுக்கு " மக்கள் " என்று பரிமேலழகர் பொருள் கொண்டது தவறு என்று நாம் சொல்லமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1244235

ஐயா! தங்களுடைய அருமையான விளக்கத்துக்கு முதற்கண் நன்றி! பரிமேலழகரையே குறை சொல்லும் அளவுக்குச் சிறியேன் திமிர் பிடித்தவன் அல்லேன். நான் சொல்ல வந்தது ஓர் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே! அதையே நீங்கள் வாதப்பொருளாக்குவது நம் விவாதத்தின் மையப்பொருளையே விட்டு விலகிச் செல்ல வைக்கிறது.

உடனே நீங்கள், ‘முட்டாள்’ எனும் சொல் பற்றிய மேற்படி விளக்கம் குறித்து விவாதிக்காமல் வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்று நீதானே சொன்னாய் என என்னைக் கேட்கலாம். நான் சொன்னது இந்த விதயத்தை இத்துடன் முடித்து விட்டு வேறு திரியில், வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்ற பொருளில்தான்.

பரிமேலழகர், எச்சம் என்பதற்கு மக்கள் எனும் பொருளும் உண்டு என்று கூறியிருக்கிறார். ஆனால், நான் குறிப்பிட்ட ஆங்கிலேயர் மேற்படி குறளையே அவ்வாறு திருத்தி எழுதினார். அதனால்தான் தமிழறிஞருக்குச் சீற்றம் எழுந்தது. எனவே, நான் சொன்ன அப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதும் உண்மையே! சான்று: பெரியோர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - வானதி பதிப்பகம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 10, 2017 6:11 pm

ஐயா !

வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்த ஆங்கிலேயர் யார் ?
அவர் திருத்திய குறட்பா எது ?
அவரைக் கடிந்துகொண்ட தமிழ்ப் புலவர் யார் ?

எனக்கு இதுவரையில் இந்த வரலாறு தெரியாது ;ஆகையால் தெரிந்துகொள்ளக் கேட்கிறேன்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Sat Jun 10, 2017 6:33 pm

M.Jagadeesan wrote:ஐயா !

வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்த ஆங்கிலேயர் யார் ?
அவர் திருத்திய குறட்பா எது ?
அவரைக் கடிந்துகொண்ட தமிழ்ப் புலவர் யார் ?

எனக்கு இதுவரையில் இந்த வரலாறு தெரியாது ;ஆகையால் தெரிந்துகொள்ளக் கேட்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1244237

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 3 1757813334 அவையெல்லாம் மறந்து போனதால்தான் ஐயா குறிப்பிடவில்லை. அந்த நூலும் வீட்டில் எங்கே இருக்கிறதோ தெரியவில்லை. கிடைத்தால் கண்டிப்பாகப் படித்து உங்களுக்கு அந்த விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 10, 2017 6:56 pm

2012 வருடத்திய "முட்டாள்" , ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும்
நம்மை கலகலப்பாக்கிக் கொண்டு வருகிறார்.
ரசிக்கும்படியான கருத்துமிக்க உரையாடல்கள்.

ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 12, 2017 5:36 pm

WH ஸ்காட் என்னும் ஆங்கிலேயே கலெக்டர் தமிழின்பால் ஆர்வம்கொண்டு தமிழ் கற்றார் . திருக்குறளும் கற்றார். ஆர்வ மிகுதியின் காரணமாக திருக்குறளில் சில திருத்தங்கள் செய்தார் .தாம் செய்த திருத்தங்களுக்கு பூவாளூர் தியாகராஜ செட்டியார் என்னும் தமிழ்ப் பண்டிதரிடம் அங்கீகாரம் பெற விரும்பினார் .

பூவாளூர் தியாகராஜ செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்தவர் .இவருடைய இடத்தில்தான் , இவருடைய ஓய்வுக்குப் பிறகு , டாக்டர் . உ .வே . சா . அவர்கள் தமிழ்ப் பண்டிதராக அக்கல்லூரியில் வேலை பார்த்தார் . இவ்விருவருமே திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

WH ஸ்காட் திருக்குறளில் செய்த திருத்தங்களைக் கண்ணுற்ற செட்டியார் வெகுண்டு எழுந்தார் .
தம் முகத்தில் இனி விழிக்கவேண்டாம் எனக்கூறி அனுப்பிவிட்டார் .

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் .

என்ற குறட்பாவை

தக்கார்  தகவிலர் என்ப தவரவர்
மக்களாற் காணப் படும் .

எனத் திருத்தினாராம் . தக்கார் , மக்களாற் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகைநயம் பெற்று விளங்குகிறதே எனச் சொன்னாராம் . ஆனால் அவர் சொன்னதையெல்லாம் செட்டியார் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை .அடிக்காத குறையாக விரட்டிவிட்டாராம் .

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறளைப் படித்த கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி .  அவர்கள்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு .

என்று வள்ளுவர் எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப் பட்டாராம் .ஆனால் திருத்தம் எதுவும் செய்யவில்லை. அவர்சொன்ன காரணம்

தீயினால் , வாயினால் ஆகிய சொற்கள் எதுகை நயம் பெற்று விளங்குகிறது மேலும்
வாயினால் சுட்ட வடு என்று ஈற்றடி இருந்தால் வா , வ ஆகிய முதலெழுத்து ஒன்றி அடிமோனை பெற்று விளங்கும் என்றுசொன்னாராம் .

திருக்குறளில் பல குறட்பாக்கள் எதுகை நயம் இல்லாமலேயே உள்ளன. அவற்றையெல்லாம் வள்ளுவப் பெருந்தகை அறியாதவரல்ல . செய்யுள் இலக்கணத்தைவிட கருத்துக்கே அவர் முதலிடம் தந்தார் என்பது இதனால் விளங்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 12, 2017 8:09 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக