புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10 
30 Posts - 83%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 8 of 76 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 42 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 10:08 pm

பகவதி, முதல் எழுத்து ஒன்றி வந்தால் - மோனை
இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் - எதுகை

குறில் நெடில் நிச்சயம் உண்டு (எதுகைக்கு)

ஆடு என நெடிலில் வந்தால் காடு என்று நெடிலில் அடுத்த சீர் இருந்தால் தான் "டு" என்பது இங்கு எதுகை ஆகும். காடு என்பதற்கு பதிலாக "எடு" என சீர் குறிலில் துவங்கினால் எதுகை ஆகாது.

மோனைக்கு இது போன்று நெடில் குறில் கிடையாது. அன்பு ஆண்மை இவ்விரண்டு சீர்களில் அ விற்கு ஆ மோனை தான்.
நன்றி மகிழ்ச்சி நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 10:16 pm

naka wrote:திரு ஐயா, இன்னொரு குறள் முயன்றுள்ளேன் தங்களின் திரியில். குற்றம் நீக்கி குறள் அமைத்திடுவீர்கள் என நம்புகிறேன்.

நமக்கென்ன வந்ததென நகர்ந்திடும் நினைவகற்றின்
நமக்குள்ளே நமைந்திடுமே
நலம்

நமக்/கென்/ன - வந்த/தென நகர்ந்/திடு/ம் நினை/வகற்/றின்
நேர்/நிரை/நேர் - நேர்/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நிரை/நேர்
கூவிளங்காய் - தேமா –புளிமாங்காய் - கூவிளங்காய்

நமக்/குள்ளே நமைந்/திடுமே நலம்
நேர்/நேர் நிரை/நேர் நிரைபு
தேமா - புளிமா - பிறப்பு

எதுகை - நமக்கென்ன , நமக்குள்ளே
மோனை - நமக்கென்ன, நகர்ந்திடும், நமக்குள்ளே, நமைந்திடுமே.
நாக அவர்களுக்கு வணக்கம். உங்களின் ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். அதே வேளை, நான் சொல்லிய அந்த "மரபுப் பா பயிலரங்கம்" சென்று அங்கு கொடுக்கப்ட்டுள்ள ஒவ்வொரு பாடத்தையும் படித்தீர்களா? தயவு செய்து முதலில் அதை படியுங்கள். ஒவ்வொரு பாடமாக. முதலில் உங்களை ஒரு பள்ளி மாணாக்கனாக நினைத்துக்கொண்டு, ஒரு நோட்டில் தனித்தனிப் பாடமாக குறிப்பு எடுத்துக்கொண்டு, அதில் சொல்லியிருக்கும் உதாரணம் ஒவ்வொன்றாக படித்து அதைப்போலவே நீங்களும் வேறு உதாரணங்கள் யோசித்து எழுதிவாருங்கள். அந்தத் திரியில் ஒரு படத்திற்கு பின்னால் நிறையப்பேர் பின்னுட்டங்கள் இட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு கிரிகாசன், யதுமானவள் போன்றவர்கள். அதையும் படியுங்கள். எழுத்தில் தொடங்கி, சீர் அசை, அடி, தொடை என்று பாடங்கள் மிகவும் எளிமையான முறையில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே அவசரப்படாமல் படியுங்கள்.
நமக்கென்ன வந்ததென நகர்ந்திடும் நினைவகற்றின்
நமக்
குள்ளே நமைந்திடுமே நலம்

மேலே உள்ள உங்களின் குறளில் இருக்கும் ஆறு இடத்தில் ஐந்து இடத்தில் தளை தட்டுகிறது. வெண்பாவில், இயற்ச்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளை மட்டுமே வரவேண்டும். இங்கு, கலித்தளை நான்கு இடத்திலும், நிரையொன்றிய ஆசிரியத்தளை ஒரு இடத்திலும் வருகிறது.

வந்த/தென = தேமா என்று குறித்துள்ளீர்கள். அது உண்மையில் வந்/ததெ/ன = தேமாங்காய் ஆகும்.
அவ்வாறே, நமக்குள்ளே நமைந்திடுமே என்பதை தேமா, புளிமா என்று பிரித்துள்ளீர். உண்மையில் அது புளிமாங்காய், கருவிளங்காய் ஆகிறதே?
நலம் என்ற ஈற்றுச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்பாட்டில் வராது.
நாக அவர்களே, நான் உங்களுக்கு மீண்டும் சொல்வது, அசை பிரிப்பதில் இருந்து முறையாக , நிதானமாக, அவசரப் படாமல் பாடங்களைப் படியுங்கள் என்பதே. அகர முதல் எழுத்தெல்லாம்...என்ற திருக்குறளை எடுத்துக்கொண்டு அதை அசை பிரித்துப் பாருங்கள். அவ்வாறே ஒவ்வொரு குறளாக செய்து பாருங்கள். திருக்குறளில் உள்ள ஈற்றுச்சீர்களை உன்னிப்பாக கவனியுங்கள். ஒவ்வொரு குறளும் காசு, பிறப்பு, நாள் மலர் வாய்பாட்டில் எதில் வருகிறது என்று பாருங்கள். முறையாகச் செய்தால் நீங்கள் நிச்சயம் ஒரு சிறந்த வெண்பா புலவராக வருவீர்கள் என்பது திண்ணம். வாழ்த்துக்கள் நாக அவர்களே.



அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jun 09, 2012 11:32 pm

அருமையான திரி தொடக்கம்
வாழ்த்துக்கள் ஐயா தொடர்வதற்கு சூப்பருங்க
இரண்டு பதிவுகளை மட்டும் தான் படிக்க முடிந்தது.அவ்வபோது சிறிது சிறிதாக படிக்க முயற்சிக்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 7:10 am

[quote="இரா.பகவதி"]
குறள் வெண்பா : 010

அய்யா அருமையாக சீர் பிரித்து விளக்கியுள்ளீர்கள் மகிழ்ச்சி நன்றி , எப்படி நேர்பு , காசு என்பதை சொல்லுவது, மேலும் எதுகை மோனை கூட மறந்துவிட்டது அய்யா சோகம் அன்பு மலர்
நன்று தம்பி பகவதி, "மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரி நமது கவிதைகள் பக்கத்தில் உள்ளதே. அதில் மிக எளிமையாக பாடங்கள் உள்ளன. முறையாக படித்துப் பார்க்கவும். மறந்தது எல்லாம் ஞாபகம் வந்துவிடும் தம்பி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 7:20 am

பிஜிராமன் wrote:செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு


நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு


தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு


எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

செய்திடவே வந்திருக்கோம் செய்திகளை நீர்தரவே
கொய்திடுவோம் நற்கனியை பார்


ஐயா, அருமையான ஒரு அழைப்பு வெண்பா........

அனைவரும் வந்திங்கு அன்புடன் சேர்ந்து
நனைவார்கள் நற்குறளால் தான்


நன்றிகள் ஐயா தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி இராமன். அருமையான குறள் வெண்பாவிலேயே பின்னுட்டம் இட்டுள்ளீர்கள்.

வாருங்கள் என்தம்பி வந்தனங்கள் சொல்கின்றேன்
தாருங்கள் தண்டமிழ்வெண் பா


பாருங்கள் இத்திரியை பக்குவமாய் பாட்டெழுத
யாருண்டு இங்கெமக்கு இன்று

தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 7:25 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 7:27 am

அதி wrote:அருமையான திரி தொடக்கம்
வாழ்த்துக்கள் ஐயா தொடர்வதற்கு சூப்பருங்க
இரண்டு பதிவுகளை மட்டும் தான் படிக்க முடிந்தது.அவ்வபோது சிறிது சிறிதாக படிக்க முயற்சிக்கிறேன்.

அதியிங்கு வந்ததுடன் அற்புதபின் னுட்டம்
கதிகலங்கிப் போனேன்நான் காண்

சும்மா விளையாட்டுக்கு எழுதினேன் அதி....கதி கலங்கிப் போய் விட வில்லை. ஒரு எதுகை மோனைக்காக. தொடர்ந்து வாருங்கள், நிதானமாகப் படியுங்கள். நீங்களும் வெண்பா எழுத முயலுங்கள். முடியாதது ஏதுமில்லை. முயற்சி திருவினையாக்கும் அன்றோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 10, 2012 8:06 am

நன்று தம்பி பகவதி, "மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரி நமது கவிதைகள் பக்கத்தில் உள்ளதே. அதில் மிக எளிமையாக பாடங்கள் உள்ளன. முறையாக படித்துப் பார்க்கவும். மறந்தது எல்லாம் ஞாபகம் வந்துவிடும் தம்பி.
ஓகே!!!! நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 11:03 am

குறள் வெண்பா : 011

வற்றாத வற்றல் வறுக்க உதவாதே
வற்றிய வற்றலே நன்று


----- பி.ஜி.ராமன்

வற்/றா/த - வற்/றல் - வறுக்/க - உத/வா/தே
வற்/றிய - வற்/றலே - நன்/று

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நிரைநேர்பு

தேமாங்காய் – தேமா – புளிமா – புளிமாங்காய்
கூவிளம் – கூவிளம்காசு

எதுகை : வற்றாத, வற்றிய
மோனை : ற்றாத -றுக்க; ற்றிய - ற்றலே
ஈற்றுச்சீர் : நன்று = நேர்பு = காசு

மிக எளிய தமிழில் மிக மிக ஆழமான ஒரு கருத்தை சொல்லியிருக்கும் தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். பிஞ்சிலே பழுத்தது சுவையாகாது அவ்வாறே பக்குவப்படாத எதுவுமே பயனாகாது!! மகிழ்ச்சி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 4:52 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 8 of 76 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 42 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக