புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
60 Posts - 41%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
311 Posts - 50%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
21 Posts - 3%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 1:27 pm

First topic message reminder :

வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,

அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?

கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்

2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது

சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்

சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்


பகுதி 1

இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Ruins

"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 P-4

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Maya

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 What-Do-the-Mayan-Carvings-Depict-2

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 15, 2012 2:39 pm

சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:21 am

நன்றி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Apr 16, 2012 12:10 pm

பகுதி---9

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%201

இதுவரை உலகில் வாழ்ந்த இனங்களில் அதியுயர் அறிவுடன் வாழ்ந்ததாக கருதப்படும் ஒரே இனம் மாயா இனம்தான். அந்த மாயா இனம் பற்றியும், அவர்கள் '2012 இல் உலகம் அழியும்' என்று கூறியது பற்றியும் பேச ஆரம்பித்த இந்தத் தொடர், அது தாண்டி வேறு சில இடங்களிலும், விடை தெரியாத சில மர்மங்களிலும் பயணித்தது. இதுவரை எம்மால் பார்க்கப்பட்டவை கூட சிறிய அளவுதான். பார்க்க வேண்டியவை இன்னும் நிறையவே உண்டு. ஆனாலும் நாம் அவற்றையும் ஆராய ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். 2012 மார்கழி வரை கூட நீண்டாலும் ஆச்சரியம் இல்லை. அப்புறம் இந்தத் தொடர் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

2012ம் வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி உலகம் அழியும்" என்று மிகப்பெரிய எழுத்தில் எல்லா நாட்டு மக்களும் அலறும்படிக்கு, ஒரு குறித்த நாளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் மாயா இன மக்கள். இந்தியாவில் இது பற்றி அதிக அளவில் பேசப்படாவிட்டாலும், மேற்குலகம் தினம் தினம் இதைப் பேசிக் கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏதோ ஒன்று, ஒவ்வொரு கணமும் இதை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுவாசி மக்களான மாயா இனத்தவர்கள் கணித்த ஒரு 'நாட்காட்டி' (Calendar). ஒரு குறித்த நாளில் ஆரம்பித்த அந்த நாட்காட்டி, 2012ம் ஆண்டு மார்கழி 21ம் திகதியுடன் முடிவடைகிறது. முடிவடைகிறதென்றால், அப்படியே முடிந்து போகிறது. அதற்கு அப்புறம் அதில் எதுவுமே இல்லை.

சரி, அவர்கள் நாட்காட்டி முடிந்தால் நமக்கென்ன? அறிவே இல்லாத காட்டுவாசிகள் உருவாக்கிய ஒரு நாட்காட்டி முடிவடைகிறது. அவ்வளவுதானே! அதற்கேன் நாம் இப்படிப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டும்? உலகம் அழியும் என்று பல காலகட்டங்களில், வெவ்வேறு விதமாகப் பலர் சொல்லியிருந்தார்களே! அவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லையே! அப்புறம் ஏன் மாயன் சொன்னதில் மட்டும் நாம் மிகுந்த நம்பிக்கையை வைக்க வேண்டும்? இந்து மதம் கலிகாலத்துடன் உலகம் அழியும் என்கிறது. கிருஸ்தவ மதமும் உலக அழிவை வலியுறுத்துகிறது. அதிகம் ஏன்? கடந்த 2000ம் ஆண்டு கூட, உலகம் அழியும் என்று ஒரு மிகப் பெரிய நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ளவில்லையே! இவற்றிற்கெல்லாம் அதிக அங்கீகாரம் கொடுக்காத நாம், மாயாக்களுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எமக்கு சுலபமாக எழுந்துவிடுகிறதைத் தடுக்க முடியாதல்லவா?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%202

ஆனால்............!

மாயன் சொன்னவற்றை தவறு என்று வெகு சுலபமாக தட்டிக் கழித்துச் செல்ல அறிவியலாளர்களுக்கே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதைத் தீவிரமாகவே அவர்கள் பார்க்கின்றனர்? மாயன் சொன்னவை உண்மையாகலாமோ என்னும் பயம் அவர்களுக்கும் உண்டு. மாயன்களின் சுவடுகளும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடிகளும்தான் இந்தப் பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டன. மாயன்கள் சொன்னவற்றை அறிவியலுடன் பொருத்திப் பார்க்கும் போது, ஏற்பட்ட வியப்புத்தான் இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை உலகில் இருந்த, இருக்கின்ற எந்த இனத்துக்குமே இல்லாத விசேசங்கள் பல, மாயன்களுக்கு இருந்திருக்கிறது. அந்த ஆச்சரியப்படும் விசேசத் தன்மைதான் மாயன்களிடம் இப்படி ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மாயன்கள் கணிதம், வானியல், கட்டடக் கலை, நகர அமைப்பு, அறிவியல், உணவு வேளாண்மை, கலை, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்திலும் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போ? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். அதுதான் எம்மை வியக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொன்னால் அதைச் சரியாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் மாயா இனத்தவர்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாமா.....!

இன்று நாம் பயன்படுத்தும் கணிதம், 'தசம கணிதம்' (Decimal System) என்னும் அடிப்படையைக் கொண்டது. அதாவது 10ஐ அடியாகக் கொண்டு உருவாக்கிய கணிதம். 1, 10, 100, 1000, 10000...... இப்படி. அத்துடன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எனப் பத்து இலக்கங்களையும் எமது கணக்கியலில் நாம் பயன்படுத்துகிறோம். இப்படி 10ஐ அடியாக (base10 or radix10 ) மனிதன் கணிக்க ஆரம்பித்ததற்கு ஒரே காரணம் அவனுக்கு கைகளில் 10 விரல்கள் இருந்ததுதான். ஆரம்ப காலங்களில் கை விரல்களால் கணக்கிட்ட வழக்கம் தொடர, அதுவே கணிதமுமாகியது.

இப்பொழுது இப்படிப் பாருங்கள்.......! மனிதனுக்கு ஒரு கையில் மூன்றே மூன்று விரல்கள்தான் இருக்கிறது என வைத்துக் கொண்டால், இரண்டு கைகளிலும் மொத்தமாக அவனுக்கு 6 விரல்கள் இருந்திருக்கும். அப்போது, மனிதனின் கணிதவியல் 6ஐ அடியாகக் கொண்டு இருந்திருக்கும். அதாவது 1, 6, 36, 216, 1296....... என இருந்திருக்கும். என்ன புரிகிறதா…? ஆனால் 6ஐ அடியாகக் கொண்டு கணிப்பதை விட, 10ஐ அடியாக கொண்டு கணிப்பது, மிகப்பெரிய எண்ணை அமைப்பதற்கு சுலபமாக இருக்கும். காரணம் 10 என்பது 6ஐ விடப் பெரியது. 'அடி எண்' (base or radix) பெரிதாக இருந்தால், அதிக எண்ணிக்கையில் கணிப்பது இலகுவாக இருக்கும்.

ஆனால் கணினியை (Computer) எடுத்துக் கொள்ளுங்கள். கணினிக்கு பத்து விரல்கள் கிடையாது. அதற்கு இருப்பது இரண்டே இரண்டு விரல்கள்தான். ஆம்! கணினிக்கு 1, 0 என இரண்டே இரண்டு விரல்கள்தான் உள்ளது. மின்சாரம் சென்றால் 1, மின்சாரம் செல்லாவிட்டால் 0. ஆகையால், கணினி, 2ஐ அடியாகக் கொண்டே கணிக்கிறது. அப்படிக் கணிப்பதை பைனரி சிஸ்டம் (Binary System) என்பார்கள். அது 1, 2, 4, 8, 16..... என அமையும். கணிதத்தில் 'அடி எண்' அதிகமாக இருந்தால் கணிப்பது சுலபம் என்றேன் அல்லவா? ஆனால் மனிதனை விடக் கணினி மிக மிக வேகமாகக் கணிக்கிறதே! அப்படிக் கணிப்பதற்குக் காரணம் மனிதன் கணிப்பது போல பத்து இலக்கங்கள் இல்லாமல், கணினிக்கு இரண்டே இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தப்படுவதுதான். அந்த இரண்டு இலக்கங்களும் 1, 0 ஆகும்.

சரியாகக் கவனியுங்கள், சுலபமாய் எண்களை அமைப்பது என்பது வேறு, வேகமாய்க் கணிப்பது என்பது வேறு. இரண்டும் வேறுவேறான விசயங்கள் என்பதைத் தவற விட்டுவிடாதீர்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%203

இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்........!

அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20ஐ அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள். கைவிரல்கள் பத்து, கால் விரல்கள் பத்து என இது அமைந்திருக்கிறது. 20ஐ அடியாகக் கொள்வதை, 'வைஜெசிமல் சிஸ்டம்' (Vigesimal System) என்பார்கள். அது 1, 20, 400, 8000, 160000..... என அமையும். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20ஐ அடியாகக் கொண்டு கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்கு வைத்திருக்கவில்லை. மூன்றே மூன்று இலக்கங்களைத்தான் பாவித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும், கணினியைப் போல வேகமாய்க் கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

புள்ளி, நேர்கோடு, நீள்வட்டம் என்னும் மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்று இலக்கங்கள். இவற்றில் புள்ளி 1ஐயும், நேர்கோடு 5ஐயும், நீள்வட்டம் பூச்சியத்தையும் குறிக்கிறது.
மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%204

புள்ளிகளையும், கோடுகளையும் வைத்து, லட்சங்களில் எப்படி மிகப் பெரிய எண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில விளக்கப் படங்களையும் உங்களுக்கான புரிதலுக்காகத் தருகிறேன்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%206

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%209

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%207

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%208

இதனுடன் இன்னுமொரு விசேசமாக, எண்ணிக்கைகளை இலக்கங்களால் மட்டுமில்லாமல், 'ஹிரொகிளிஃப்' (Hieroglyph) என்னும் சித்திர எழுத்துகள் மூலமும் எழுதியிருந்தார்கள். இந்த வழமை மாயாக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தனிச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தச் சித்திர எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள பெரிதாக உதவியது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2010

இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள் கோடிக்கனக்கான எண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக கணித்துவிடுகிறார்கள். நாம் கோடிகள், ஆயிரம் கோடிகள் என்பவற்றை ஊழல் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும் போது, மாயன்கள் எதற்கு அவற்றைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா....? வானியலில். வானத்தில் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத் துல்லியமாக கணித்தார்கள் மாயன்கள். அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில் எங்கள் அமைதியையே குலைக்கும், '2012 இல் உலகம் அழியும்' என்பதில் கொண்டு வந்து விட்டும் இருக்கிறது.

மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள் எதை ஆராய்ந்தார்கள் என்று தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம். ஆம்! சூரியனையும், அதன் கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போது, மாயன்கள் பால்வெளி மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள். வெறும் கண்களால் சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய், வியாழன் ஆகியவற்றை மட்டுமே பார்க்கக் கூடிய எமக்கு, மாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள் என்றால், அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான்.

மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்? எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போமா..?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:16 pm

சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 1:36 pm

நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 16, 2012 3:34 pm

சூப்பருங்க
வரட்டும் அடுத்த தொடர்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 17, 2012 12:13 pm

பகுதி-----------10

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%201

கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது, பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான்.

அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப் புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்க நாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில் ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள் தோன்றியிருந்தன. அப்படித் தோன்றிய மதங்களும், அதனைக் கடைப்பிடித்த இனங்களும், நாம் வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள். பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன என்றும் நம்பி வந்தார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%202

கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.

அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%203

மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.

மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது. 'பிரமிட்' (Pyramid) என்றதும் எகிப்தின் பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். "மாயன்களிடமும் பிரமிட் இருந்ததா?" என்று நீங்கள் பிரமிக்கலாம். 'உலகின் விந்தைகளும், மர்மங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்' என்று நான் ஆரம்பத்தில் சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%204

வானியலை மாயன்கள் எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா? என்ன செய்தார்கள் மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%205

பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள்? இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள்? நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள்? என்னும் கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது. அதை அறிவதற்கு முன்னர் இந்தப் படங்களைப் பாருங்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%206

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%207

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%208

இவையெல்லாம், நாம் தற்போது வானத்தில் உள்ளவற்றை ஆராய உபயோகிக்கும் சில வானவியல் அவதான நிலையங்கள் (Observatory Dome). வேறு வேறு இடங்களில் இருப்பவை.

என்ன பார்த்துவிட்டீர்களா……….?

இப்போ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் அவதானிக்கக் கட்டப்பட்ட கட்டடத்தைப் பாருங்கள். யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்? இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம்? அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா….? எல்லாமே தற்செயல்தானா...? சரி, அதை நீங்களே பாருங்கள்!

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%209

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2010

வானத்தை ஆராய்வதற்கென்று தனியாக அவதானிப்பு நிலையம் ஒன்றை மாயன்கள் அந்தக் காலத்திலேயே கட்டியிருக்கிறார்கள். அப்ப்டிக் கட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அது நவீன காலத்து அவதானிப்பு நிலையத்துடன் பொருந்தும்படி கட்டப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது.

ஒரு மனிதன், தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும் திடமாக நிலைப்படுத்தி அமர்ந்து கொள்வதற்கு, தனக்கென ஒரு கலாச்சார நாற்காலியைத் தயார்படுத்துகிறான். அந்தக் கலாச்சார நாற்காலியை இனம், மொழி, மதம், நாடு என்ற நான்கு கால்களுடன் அவன் அமைத்துக் கொள்கிறான். உலக நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு இனமும், தனக்கென ஒரு தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்து வைத்திருக்கவே விரும்புகின்றது. அப்படி அவர்கள் விரும்பும் அடையாளத்தில், அவர்களுக்கென உருவாக்கிய நாட்காட்டிகளும் (காலண்டர்) அடங்குகின்றன. இந்த அடிப்படையில், உலக மக்களிடையே பல நாட்காட்டிகள் வழக்கத்தில் உண்டு. வெவ்வேறு நாட்காட்டிகள் இருப்பது குழப்பத்தை உருவாக்கியதால், பின்னாட்களில் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என ஒரு நாட்காட்டியைக் கொண்டு வந்தனர். அப்படி தற்காலப் பாவனைக்கு நாம் வைத்திருக்கும் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) எனப்படுகிறது. கிரிகோரியன் என்பவர் வத்திக்கானில் பாப்பாக இருந்தவர்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2011

கிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365 நாட்களையும், நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366 நாட்களையும் கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமக்கென ஒரு நாட்காட்டியை அல்ல, மூன்று நாட்காட்டிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறு அடிப்படையகளில், வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.

ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol q’ij) என்னும் மூன்றும்தான் மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்' என்னும் முதல் நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

'ஷோல் அப்' என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன் நாட்காட்டி போல, சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது 365 நாட்களைக் கொண்டது. ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2012

நாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்த நாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள், ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360 நாட்கள் வருகிறது. கடைசியாக வரும் 19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது. மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான 'வேயெப்' மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.

மாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமது தற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறி மாறி வரும். கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பான மாதம் ஆகும். கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்ட மாதம் அது. கடவுளை வணங்கி கொண்டாடும் மாதமாக இது அமைகிறது. கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம் திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.

மாயன் நாட்காட்டியின் மேலதிக மர்மங்களுடன் அடுத்த தொடரில் சந்திக்கிறேன்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 12:22 pm

சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 1:36 pm

சிந்திப்போம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Apr 18, 2012 12:20 pm

வணக்கம் இன்று 2 பகுதிகள் பதிவிடுகிறேன் ,இரண்டிலும் உலக அழிவு பற்றிய தகவல்கள் உள்ளதால் (இந்த கட்டுரையின் பாதியில் இருந்து ஆரம்பிக்கிறது )அந்த பகுதியை சிறிது கவனமாக படிக்கவும்

பகுதி -----------11

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%201

மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம். மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று 365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டது. ஆனால் இவை இரண்டுமே குறுகிய காலக் கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள். மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை 'நீண்ட கால அளவு நாட்காட்டி' (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன் (Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது.
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%202

படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட 'ஷோல்க் இஜ்' (Cholq ij) என்னும் பெயருடைய நாட்காட்டி. ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது, 13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும்.

இதே போல, 365 நாட்களைக் கொண்ட, பெரிய சக்கரமுள்ள இன்னுமொரு 'ஷோல் அப்' (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு. ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது 'ஷோல்டுன்' (Choltun) என்னும் இந்த நாட்காட்டிதான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%203


இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும். அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும் 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது.

அதாவது ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி, கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.

மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான் மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால், மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றை தவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான் இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும் என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம் கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதை வாசியுங்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%204

மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0 4 Ahau என்றுதான் இருக்கும். இதில் வரும் 'ஆகவ்' (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள் என்பதாகும். அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும் போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 …….. இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும். பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012.

என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் பாருங்கள்………!

0.0.0.0.0. 4 Ahau 8 Cumku

1.0.0.0.0. 3 Ahau 13 Ch´en

2.0.0.0.0. 2 Ahau 3 Uayeb

3.0.0.0.0. 1 Ahau 8 Yax

4.0.0.0.0. 13 Ahau 13 Pop

5.0.0.0.0. 12 Ahau 3 Zac

6.0.0.0.0. 11 Ahau 8 Uo

7.0.0.0.0. 10 Ahau 18 Sac

8.0.0.0.0. 9 Ahau 3 Zip

9.0.0.0.0. 8 Ahau 13 Ceh

10.0.0.0.0. 7 Ahau 18 Zip

11.0.0.0.0. 6 Ahau 8 Mac

12.0.0.0.0. 5 Ahau 13 Zotz´

13.0.0.0.0. 4 Ahau 3 Kankin

இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிது விட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள், வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.

1 நாள் = 1 கின் (Kin) (1x1) 1 day

20 கின் = 1 வினால் (Winal) (20x1) 20 days

18 வினால் = 1 டுன் (Tun) (18x1) 360 days

20 டுன் = 1 காடுன் (Katun) (20x1) 7200 days

20 காடுன் = 1 பக்டுன் (baktun) (20x1) 144,000 days

13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13x1) 1,872,000 days

இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், 'டுன்' என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். 'காடுன்', 'பாக்டுன்' என்பன அதற்கும் மேலே!

1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள்.

இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர். இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5x5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday).

இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால், ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி (11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழி மாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும்.

இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ, எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்? எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!

சில காலங்களின் முன் 'ஹபிள்' (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை 'நாசா' (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு 'செயற்கைக் கோள்' (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%205

இந்த 'ஹபிள்' மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம். அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றை, மாயனுடன் சரி பார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது.

நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்ற அமைப்பில் இருக்கிறது. அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%206

பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள் உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக் கிடையாகப் பரவியிருக்கிறது.


உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%207


எங்கள் சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளி மண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்து நான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இது கொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். .

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச் சுற்றுகிறது. எங்கள் பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது. ஆனால் எங்கள் சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே, மேசையில் இருக்கும் மின்விசிறி (Table fan) போல, பால்வெளி மண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது. என்னால் முடிந்த அளவுக்கு இதை படமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%208

எங்கள் பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%209

எங்கள் சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமான ஒன்று. எங்கள் சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள்.

அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்த இடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள் எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்திய ரேகையைச் சந்திக்கிறது. இம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்திக்கப் போகிறது தெரியுமா...? 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2010

அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும் 26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது?

இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை. இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில் உண்டு.

சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2011

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2012

ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின் ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம். ஒரு முறை நடக்காவிட்டாலும், ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால், நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 7 Photo%2013

சரி......! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……! இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று.



Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக