புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
69 Posts - 40%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
50 Posts - 29%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
320 Posts - 50%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
197 Posts - 31%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
22 Posts - 3%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 1:27 pm

First topic message reminder :

வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,

அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?

கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்

2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது

சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்

சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்


பகுதி 1

இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Ruins

"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 P-4

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Maya

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 What-Do-the-Mayan-Carvings-Depict-2

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 13, 2012 8:29 pm

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 224747944 உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 224747944 உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 1357389உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 59010615உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Images3ijfஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Images4px
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Apr 14, 2012 12:41 pm

பகுதி----7

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%201

மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.

இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தே வாழ்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார். ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி, பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது.

பகுத்தறிவுவாதி, பகுத்தறிவுவாதி அல்லாதவர் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தான் நினைப்பது மட்டும்தான் சரி என்னும் நினைப்பால் இருவருமே அடுத்தவனை அலட்சியப் படுத்துகின்றனர். தவறாக மதிப்பிடுகின்றனர். ஆனால் கோட்பாட்டு ரீதியில், இந்த இரண்டுவிதமான மனிதர்களுக்குமிடையில், நூலிழை போல இன்னும் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் 'விடை தெரியா விந்தைகள்'. விடை தெரியாத பல விந்தைகள் இன்னும் உலகில் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கான விடையின்றி, காரணங்களே தெரியாமல் பல விசயங்களும், மர்மங்களும் எம்மிடையே இருந்து வருகின்றன.

இன்று எமக்கு இருக்கும் நவீன அறிவை வைத்துக் கொண்டும் கூட, அவற்றின் காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணங்கள் தெரியப்படுத்தப்படாத காரியங்களை அறிவியல் முழுமையான உண்மையாக ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை மிஸ்டரி என்னும் ஒன்றுக்குள் அடக்கி, அதன் விளக்கத்தை அறிவியல் ஆராய்ந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.

இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%202

மேலே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%203

ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை, 'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%204

தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது.

"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."

இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?

இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%205

இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.

இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.

இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….?
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%206

கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%207

மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?

அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.

உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.

சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%208
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%209

அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 Photo%2010

இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது

செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......!

பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள்.

இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.

இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines)

நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.

அது என்ன நாஸ்கா லைன்ஸ்? அதை அடுத்த பதிவில் பார்ப்போமா.....!



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 14, 2012 12:50 pm

மிக விறுவிறுப்பாக செல்லுகிறது .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 1:12 pm

நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 14, 2012 1:19 pm

நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 3:53 pm

அது என்ன நாஸ்கா லைன்ஸ்?

காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக...!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 4:08 pm

றினா wrote:அது என்ன நாஸ்கா லைன்ஸ்?

காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக...!!!

நானும் தான்..., மகிழ்ச்சி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 15, 2012 1:46 pm

பகுதி---8

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_1_201237-554

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை.

கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, 'பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?' எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் 'அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Liines) என்பதைத்தான். தமிழில் அதை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமா?

அது என்ன நாஸ்கா கோடுகள்? இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!

தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca) என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள், சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று நினைத்து விடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லாமே மனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500 சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_2_201237-554

இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது. அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.

இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் 285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது. அதாவது கால் கிலோமீற்றர் நீளம். அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_3_201237-554

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_1_201237-556

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_2_201237-556
எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர், யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்? 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.

இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_3_201237-556
இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_1_201237-558

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_2_201237-558

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_3_201237-558

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_1_201237-60

கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போல, தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால், அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர், அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக் காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்க வைக்கிறது.

இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறைய யோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டு சித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போல அமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடு பாதையேதானா?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_2_201237-60

இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனின் சித்திரம். யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம். இந்தச் சித்திரத்துக்கு 'த அஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_3_201237-60

இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_1_201237-62

நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.

இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும், வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.

ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒரு பிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 6 NellaiEruvadi_Article_1158_2_201237-62

இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது. நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.

உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு. அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் கிறிஸ்டல் மண்டையோடுகள், நாஸ்கா கோடுகள் ஆகிய இரண்டையும் முழுமையாகப் பார்க்காவிட்டாலும், ஓரளவுக்குப் பார்த்திருக்கிறோம். பார்க்காமல் இருப்பது சோளச் சித்திரங்கள்தான். ஆனால் அதை நாம் பார்ப்பதற்கு முன், மாயா இனத்தவர் பற்றி முழுமையாகப் பார்த்துவிட்டு வரலாம்.

அடுத்த தொடரில் நேரடியாக மாயாவைப் பற்றித் தெரிந்து கொள்வோமா....?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 2:07 pm

அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 2:12 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக