புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 3 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 3 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 6:44 pm

இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 03, 2012 6:47 pm

31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே
32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
[/color]

பொருள் விளக்கம்

31.சிறிய புத்தி உடையவர்கள் செய்யும் சிறிய தவறுகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை.

32. சிறிய புத்தி உடையவர்கள் அடுத்தவருக்கு துன்பம் வரும் வகையில் பெரிய குற்றம் செய்தால் அதை பெரியவர்கள் பொறுத்து மன்னித்து விடுதல் மிகவும் அரிதானது. அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

33. நூறு வருடம் இணைந்து பழகினாலும் சிறிய புத்தி உடையவருடன் இருக்கும் நட்பு நீருக்குள் இருக்கும் பாசி போல் வேர் கொள்ளாமல் விலகி விடும். இருக்கும் நீர் இருக்கும் வரை வளரும், வளர்ந்து நீரின் தூய்மையை கெடுத்து விடும். நீரில் மாசு உண்டாக்கி அந்த நீரில் துர்நாற்றம் வீசச் செய்யும். சின்ன குணம் உடையவர்களில் நட்பு இது போல் தான்.

34. நல்ல குணம் உடையவரின் நட்பு ஒரு நாள் பழகினாலும் ஆழமான நிலத்தை வெடித்து பிளந்து செல்லும் வேர் போல் உறுதியாக இருக்கும். நிலத்தை வெடித்து பிளந்து சென்றாலும் வேர் மண்ணின் ஈரத்தை தக்க வைத்து கொள்ளும். நிலம் வளம் பெற்ற மரம் தந்து மழை தந்து நாட்டுக்கு பயன்படும். பெரியவர்கள் நட்பு இது போல் தான்.

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 03, 2012 7:41 pm

பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி
பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி

நன்றி ராமன்
:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 04, 2012 6:59 pm

35.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
36.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
37.
நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே.
38.
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.
39.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
40.
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று

பொருள் விளக்கம்

35.
கல்வி கற்பது சிறந்தது, கல்வி கற்பது சிறந்தது வறுமை வந்து தாழ்ந்து போனாலும் கல்வியை நிறுத்தாமல் கல்வி கற்பது என்றும் நன்று (கல்வியை வலியுறுத்த இரண்டு முறை கூறப்பட்டுள்ளது)

36.
கல்வி கற்காத ஒருவன் தன் குலத்தின் பெருமையை பேசுதல் நன்றாக விளைந்த நெல் இடையே இருக்கும் பதரைப் போன்றது. பதர் என்பது அரிசி மணி இல்லாமல் காலியாக இருக்கும் நெல் மணி. பார்ப்பதற்கு நெல் போன்று தோற்றம் அளித்தாலும் அரிசியாக்கும் இடத்தில் இதன் குணம் தெரிந்துவிடும். அது போல் நல்ல குலத்தில் பிறந்து ஊரார் இவர் சிறந்தவர் என்று எண்ணி இருந்தாலும் கல்வி கேள்வி விஷயங்கள் வரும் போது படிக்காதவரின் அறியாமை வெளியில் தெரிந்து விடும். ஊரார் மதிக்கும் மிக உயர்ந்து குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனுக்கும் கல்வி அவசியம்.

37.
நான்கு வர்ணத்தாரின் மேல் வர்ணம் என்று சொல்லப்படும் வர்ணத்தில் பிறந்தவன் கல்வி கற்கவில்லை என்றால் கீழானவன் ஆவான்.

38.
எந்த குடியில் பிறந்தவன் ஆனாலும், எந்த இடத்தில் இருந்து வந்தவன் ஆனாலும் அக்குடியில் கற்றோறை உலகத்தார் மேல் வருக என்பர்.

39.
அறிவுள்ள ஒருவனை அரசனும் ஆபத்து காலத்தில் உதவுவான் என்று, தன்னருகே வைத்து கொள்வான்.

40.
கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்து தவறு செய்ய அச்சமும், அறிவு அகத்துள்ளே இல்லாத ஒன்றுக்கும் உதவாத மக்களைப் பெறுவதை விட வாரிசு இல்லாமல் ஒரு குடி அழிவதே மேல்.

இந்த பாடலுக்கு மூலமாக இருந்து இதே கருத்தை வலியுறுத்தும் புறநானூறுப் பாடல்.

உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

பொருள் விளக்கம்

கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.

ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.

பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 06, 2012 2:46 pm

குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற

மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 06, 2012 5:43 pm

பிஜிராமன் wrote:
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற

மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி ராமன்
:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 06, 2012 6:20 pm

41. யானைக் கில்லை தானமுந் தருமமும்.
42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
43. ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும்.
44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.
47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.

.

பொருள் விளக்கம்

41. யானைக்கு தும்பிக்கை என்ற கை இருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. கைகளுக்கு அழகு பலம் இல்லை, பிறருக்கு செய்யும் தானமும், தருமமும் தான். ஆதலால் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

42. பூனை கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் அது தவம் செய்வதில்லை. அது போல் கருணையுடன் இருப்பதில்லை. இது போல் கபட வேடமணிந்த மனிதர்களுக்கு வெளித்தோற்றம் அழகாக இருந்தாலும் அவர்களிடத்தில் உயிர்களை துன்புறுத்தாத தவமும், கருணையும் இருக்காது.

43. உலகைத்துறந்து பற்றற்று இருக்கும் ஞானிகளுக்கு இன்பமும் துன்பமும் இல்லை. ஒரு பொருளில் இருந்து இன்பம் வருமானால் அந்த பொருளில் இருந்து துன்பம் வரும். இன்பத்தை எதிர்பார்க்காமல் இருந்தால் துன்பம் வராது.

44. மரத்தை அரித்து தின்னும் செல்லுக்கு, பணம், காகிதற்கு வித்தியாசம் தெரியாது, செருக்கும் வராது. அது அனைத்தையும் தின்றுவிடும். அது போல் அறிவீலிகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியாது, தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வும் இருக்காது. அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கக்கூடாது.

45. முதலைக்கு நீரென்றும், நிலமென்றும் வித்தியாசம் தெரியாது. அது இரண்டு இடங்களிலும் வசிக்கும். அது போல் வாழத்தெறிந்த அறிவாளி எந்த சூழ்நிலையிலும் வாழ்வான். அரச பதிவியில் இருப்பவர், உயர்நிலையில் இருப்பவருக்கு எந்த நேரத்திலும் தன் நிலை மாறலாம். இப்படி மாறும் போது நிலைமைக்கு தகுந்தது போல் தன் பலத்தை உபயோகித்து வாழவேண்டும்.

46. தவறு செய்ய அச்சமும், செய்த தவறு வெளியில் தெரிந்து நான்கு பேர் முன்பு தலை வணங்க நாணமும் அறிவில்லாத மூடர்களுக்கு இல்லை.

47. உடல் நோய்யால் துன்பத்தில் இருப்பவருக்கு நல்ல நாள், கிழமை விரதம் என்பது அவசியம் இல்லை.

48. நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.

தொடரும் ..

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 8:59 pm

நட்பும், சுற்றத்தாரும் வறுமை வந்தவருக்கு இல்லை. பணம் இருக்கும் வரை தான் நட்பு , உறவு எல்லாம். பணம் இழந்தால் பழகிய நட்பும், உடன் இருந்த சுற்றத்தாரும் விலகி விடுவார்.

அந்த காலத்துலயும் இப்டி தான் இருந்திருகாங்களா ஐயா....கொடுமை.......

மிக அருமையாக இருந்தது ஐயா விளக்கம்,
ஒருவரிக்குள் இருக்கும் உன்னத ஓவியத்தை வெளியில் கொணர்ந்து தருவது அருமை ஐயா

மிக்க நன்றிகள் ஐயா புன்னகை மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 11:14 pm

அருமையான விளக்கம் அண்ணா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 08, 2012 4:14 pm

நன்றி ராமன்,
நன்றி பிரபு.
:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக