புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
2 Posts - 18%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
372 Posts - 49%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
25 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 10:47 am

லூக்கா 12:49-53

பொதுக்காலம், வாரம் 29 வியாழன்



49 "மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.

53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்



இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.

-- ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 11:38 am

லூக்கா 13:1-9

பொதுக்காலம், வாரம் 29 சனி



1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.

6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்; "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார்.

8 தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். "


இன்றைய நற்செய்தி வாசகம் நமது வாழ்வு கனி தருவதாக அமைந்திருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. “நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராயிருப்பதே தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவா 15:8) என்னும் வார்த்தையை இங்கு நாம் நினைவுகூர வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து நற்கனிகளை எதிர்பார்க்கின்றார். நாம் கனி தராவிட்டால், நாம் பரிதாபத்துக்குரியவர்களே!

இயேசு கூறிய அத்திமர உவமையில், உரிமையாளர் தொழிலாளியிடம் சொல்லும் புகாரைக் கொஞ்சம் கவனிப்போம்: “மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடிவருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” ஆம், கனி தராத மரம் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது. கனி தராத ஒவ்வொரு கிறித்தவரும், இந்த உலகில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் கனி தரவேண்டும். உரிமையாளர் அந்த மரத்துக்குப் போதுமான காலம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகளாகக் கனி தேடியபிறகுதான், மரத்தை வெட்டும் முடிவுக்கு அவர் வந்தார். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால், இறைவன் ஏமாற்றமே அடைவார். எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் உகந்ததாக அமையட்டும்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Oct 22, 2011 1:36 pm

பகிர்வுக்கு நன்றி இளமாறன்
மகிழ்ச்சி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Oct 22, 2011 1:38 pm

பகிர்வுக்கு நன்றி இளமாறன்
மகிழ்ச்சி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 12:10 pm

kj;NjA 22:34-40

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார். அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.


இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள். திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள். தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது, மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில் காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார் இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!'' (6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும் சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.

-- எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக் கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும் அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர். கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை, அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூயஅp;ன்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில் நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 24, 2011 10:50 am

லூக்கா 13:10-17

பொதுக்காலம், வாரம் 30 திங்கள்



10 ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.

11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி,

13 தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்" என்றார்.

15 ஆண்டவரோ அவரைப் பார்த்து, "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ?

16 பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?" என்று கேட்டார்.

17 அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

"நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்". நம்மை, நம் தேவையை, நம் குறைகளை, நம்மைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிவார். "நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்"( 2 அரசர்கள் 19 :27) இதுதான் நம் தெய்வம். "இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார்."

அந்த பெண் எதுவும் கேட்கவில்லை.கேட்பதற்கு முன் அவளது தேவையை இயேசு அறிவார். இந்த நோயிலும் வேதனையிலும் பதினெட்டு ஆண்டுகள் கடும் பாடுகள்பட்டபோதிலும் இயேசு போதிப்பதைக் கேட்க தொழுகைக்கூடம் வந்திருக்கும் அப்பெண்ணின் மனதையும் தெய்வ பக்தியையும் அவளது விசுவாச வாழ்வையும் அவர் அறிவார். எனவே தம் கையை அவள்மீது வைக்கிறார்.குணப்படுத்துகிறார்.

நம்மையும் நம் இயேசு அறிவார். நம் தேவைகளை அறிவார். நாம் கேட்பதற்கு முன் நமக்கு தருவார். ஒரு சிலவற்றை அப்பெண் செய்ததுபோல நாமும் செய்ய வேண்டும். பல ஆண்டுகள் வேதனை, சோதனை மத்தியில் நிலைகுலையாத நம்பிக்கை வேண்டும். எத்தகைய உடல் நலக்குறைவுடனும் ஆண்டவன் ஆலயம் வந்து அவரிடம் கற்றுக்கொள்ள வரவேண்டும். அவரது கடைக்கண் பார்வை பெற நம்மையும் நம் வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் கடவுளைப் போற்றிப் புகழும் பண்பு வேண்டும்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 10:47 am

லூக்கா 13:18-21

பொதுக்காலம், வாரம் 30 செவ்வாய்



18 பின்பு இயேசு, "இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

19 அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின" என்று கூறினார்.

20 மீண்டும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்?

21 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார்.


கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.

-- வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:52 am

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17

சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 10:59 am

லூக்கா 13:31-35

பொதுக்காலம், வாரம் 30 வியாழன்



31 அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்" என்று கூறினார்.

32 அதற்கு அவர் கூறியது; "இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.

33 இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

34 "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!

35 இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். "ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்" என் நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது,

இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றி;த் துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நுhல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து இந்த தலைமைப் பண்பை நாம் கற்றுக்கொள்வோம். விரைந்து செயலாற்றவும், திட்டமிட்டுப் பணியாற்றவும், குறுகிய காலத்தில் நிறைவான பணிகள் புரியவும் இயேசுவே நமக்கு மாதிரி.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 6 Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 27, 2011 11:14 am

லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார்.

இத்தகவலை எங்கிருந்து பெருகிறீர்கள் இளா?

Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக