புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
90 Posts - 78%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
255 Posts - 77%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 12:59 pm

ஞாயிறு நவம்பர் மாற்கு 13:33-37


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: �கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

-- வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு அவரிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட பொறுப்பை முழுமனதோடு ஏற்று நடைமுறைப்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க நமக்கு உந்துதல் தர வேண்டும். விழித்திருப்போர் தூக்க மயக்கத்தில் இருக்கமாட்டார்கள் (காண்க: மாற்கு 13:36). அவர்களுடைய இதயம் மழுங்கிய நிலையில் இருக்காது. மாறாக, விழித்திருப்போர் தம் இதயத்தைக் கடவுளுக்குத் திறந்து வைப்பார்கள்; அவர்களது இதயத்தில் கடவுள் நுழைந்திட யாதொரு தடையும் இருக்காது. எந்த நேரத்தில் கடவுள் அவர்களைத் தேடி வந்தாலும் அவர்கள் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்துவிட உடனடியாக முன்வருவார்கள். எனவே, இயேசு நம்மைப் பார்த்து, ''நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்'' என அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் கூட.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 1:10 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 2825183110 இளா நான் ஏற்க்கனவே கேட்டிருந்தேன்
இத்தகவலை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று. சிரி
கூறமுடியுமா pls இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 440806

http://www.bibleintamil.com/indextamil.html

நன்றி இளா!!!! இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:51 am

மத்தேயு 8:5-11



5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.

6 "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார்.

7 இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.

9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

இயேசு தம் பணிவாழ்வின்போது பல புதுமைகள் புரிந்தார். அப்புதுமைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை கொணர்ந்தன. நோயுற்றோர் நலமடைந்தனர்; பசியுற்றோர் பசியாறப்பெற்றனர்; பார்வையிழந்தோர் பார்வை பெற்றனர்; முடமானோர் நடக்கும் திறன் பெற்றனர்; பேச்சிழந்தோர் பேசும் ஆற்றல் பெற்றனர். இவ்வாறு இயேசு மக்களுக்கு நலம் கொணர்ந்தபோதெல்லாம் அவர்களிடமிருந்து தகுந்த பதில் மொழி எதிர்பார்த்தார். அப்பதில் மொழிதான் ''நம்பிக்கை'' என்னும் நற்பண்பாகும். நம்பிக்கை என்பது கடவுளிடத்தில் நம்மையே முழுமையாகக் கையளிப்பதைக் குறிக்கும். நம்பிக்கை என்றால் நமது சொந்த சக்தியை நம்பியிராமல் கடவுளின் வல்லமையை நம்பியிருப்பதைக் குறிக்கும். ஒருநாள் இயேசு கப்பர்நாகும் ஊருக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் என்னும் பதவி வகித்த ஓர் அலுவலரைச் சந்திக்கிறார். இந்த அலுவலர் உரோமைப் பேரரசின் ஆட்சியோடு ஒத்துழைத்தவர்; அவருடைய தலைமையின்கீழ் நூறு போர்வீரர்கள் இருந்தனர். அவர் இஸ்ரயேல் இனத்தவரல்ல. மாறாக, யூத மக்களை ஒடுக்கிய அன்னிய அரசைச் சார்ந்தவர். ஆனால், அவருடைய உள்ளத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. எனவே, இயேசுவை அணுகிச் சென்று தம் ''பையன் (பணியாள், வேலைக்காரச் சிறுவன்) முடக்குவாதத்தால் மிகுந்த வேதனைப்படுவதாக'' (காண்க: மத் 8:6) கூறி, இயேசு அச்சிறுவனைக் குணமாக்கவேண்டும் என மன்றாடுகிறார்.

-- நூற்றுவர் தலைவர் தம் சொந்த நலனுக்காக இயேசுவைத் தேடி வரவில்லை. மாறாக, தம் வீட்டுப் பணியாள் மட்டில் இயேசு இரக்கம் காட்ட வேண்டும் என மன்றாடுகிறார். இந்த மன்றாட்டு இயேசுவின் காதுகளில் விழுந்ததும் இயேசு வியப்படைந்திருக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு இயேசுவை அணுகிச் சென்ற மனிதர் யூதரல்ல, மாறாக யூதரை ஒடுக்கிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஆனால் அந்த அதிகாரி இயேசுவிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரிடம் துலங்கிய நம்பிக்கை இயேசுவின் இனத்தாராகிய யூத மக்கள் சிலரிடம் காணப்பட்ட நம்பிக்கையைவிட அதிக வலுவுள்ளதாய் இருந்தது. எனவே இயேசு நூற்றுவர் தலைவரைப் போற்றியுரைக்கிறார்: ''இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை'' (மத் 8:10). கடவுளிடத்திலும் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்கின்ற மனிதர் நமது சாதாரண கணிப்புக்கு உட்பட்டுத்தான் அவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாம் முடிவுசெய்ய இயலாது. கடவுளின் அருள் எந்த மனிதரின் உள்ளத்தையும் தொட முடியும்; அவர்களுடைய இதயத்தில் நம்பிக்கையை உருவாக்க முடியும். கடவுளின் பார்வை நம் பார்வையைவிட விரிவானது. நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் என நாம் கடவுளை நோக்கி இடையறாது இறைஞ்ச வேண்டும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 12:00 pm

செவ்வாய் டிசம்பர் 2, 2008 லூக்கா 10:21-24


21 அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.

22 "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.

23 பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

24 ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

கடவுளின் ஆட்சி நெருங்கி வருகிறது என இயேசு நற்செய்தி கூறுகிறார். அவர் கூறுவதைச் சிலர் ஏற்கின்றர்; பலர் ஏற்க மறுக்கின்றனர். இயேசுவின் சொல்லைக் கேட்டு அதில் உண்மையுள்ளது என உணர்ந்து ஏற்றவர்கள் யார்? திறந்த உள்ளமுடைய அம்மனிதர்களை இயேசு ''குழந்தைகள்'' என அழைக்கிறார். தம்மையே பெரியவர்களாகக் கருதுகின்ற மனிதர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியின் பொருள் என்னவென்று உணரத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் தங்களை ஞானிகளென்றும் அறிஞர்களென்றும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், யார் தங்களைக் குழந்தைகளாக ஆக்கிக் கொண்டு, கடவுளிடத்தில் தங்களையே முற்றிலுமாகக் கையளித்து, திறந்த உள்ளத்தோடு கடவுளை அணுகிச் செல்கின்றார்களோ அவர்களே இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் புரிந்துகொள்வார்கள்.

-- குழந்தைகள் பெற்றோரையும் பிறரையும் சார்ந்திருக்கும் பண்புகொண்டவர்கள். அவர்களுடைய சொந்த சக்தியால் யாதும் நடக்கவியலாது. தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெறுவதற்குக் குழந்தைகள் பிறரைத்தான் நம்பியிருக்க வேண்டும். இயேசு இதே உண்மையை உணர்த்துவதற்காகத்தான் ''கடவுளாட்சி குழந்தைகளுக்குரியது'' என அறிவித்தார். மனித ஞானம் எல்லைகளுக்கு உட்பட்டது; மனித அறிவும் எல்லை கடந்ததல்ல. ஞானமும் அறிவும் நமக்கு இருந்தாலும் நாம் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று சொல்லவியலாது. கடவுளாட்சியில் ஞானிகள் எனப்படுவோர் கடவுளின் கைகளில் தம்மை முழுமையாகக் கையளிப்போரே. அவர்கள் இவ்வுலக கணிப்புப்படி ஞானியராகவோ அறிஞராகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவர்கள் உண்மையான அறிவாளிகள்; சிறந்த ஞானிகள். இவர்களுக்கு ''இறைவனின் வெளிப்பாடு'' அருளப்படும். அதாவது, கடவுள் தம் உண்மை இயல்பை எளியோராகிய இவர்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுகிறார் என நாம் முடிவுகட்டிவிடல் ஆகாது. திறந்த உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 12:00 pm

மத்தேயு 4:18-22

அப்போஸ்தலரான புனித அந்திரேயா விழா



18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.

19 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.

20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.

இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:39 am

மத்தேயு 7:21,24-27




21 என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

24 ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.

27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."

விண்ணரசை பற்றிய வாசகங்களை வாசிக்கும்போது மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்படுவது ஒரே கருத்துதான். இறைவனின் விருப்பப்படி நாம் செயல்பட வேண்டும். ஆண்டவர் என்றுமுள்ள கற்பாறை. அவருடைய விருப்பப்படி நடந்தால், அவரின் வார்த்தயை நம் வாழ்வின் ஆதாரமாக கொண்டு அதைக்கடைபிடித்து வாழ்ந்தால், பாறையின் மீது வீடு கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவோம். வெள்ளத்தை இங்கு பாவநாட்டங்களுடனும் உலக சூழ்நிலைகளுடன் ஒப்பிடலாம். இறைவனோடு ஒன்றி வாழும்போது பாவசூழ்நிலைகள் நம்மை அணுகாது. இறைவன் நம்மை காத்துக்கொள்வார். அவரை விட்டு விலகும்போது பாவசூழ்நிலைகள் நம் வாழ்வை அலைக்கழித்து விண்ணரசின் பாதையில் இருந்து விலகச்செய்கிறது. நாம் இறைவனை முழுமையாக நம்பி வாழும்போது, நம்மை இவ்வுலக துன்பங்கள் தாக்காது. நம்மைச்சுற்றி பலவிதமான கலவரங்கள், பிரச்சனைகள் நடக்கலாம் ஆனால் எதுவும் நம்மை பாதிக்காது.

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

மீக்கா 6 : 8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

எரேமியா 9 : 23,24 ஆண்டவர் கூறுவது இதுவே;ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.பெருமை பாராட்ட விரும்புபவர், "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்

இறைவன் வெறுப்பது என்ன?

நீதிமொழிகள் 6:17-19அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

சிந்திப்போம்!! செயல்படுவோம்!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 11:37 am

மத்தேயு 9:27-31

திருவருகை காலம்; முதல் வாரம் வெள்ளி



27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.

28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள்.

29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார்.

30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.

31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.


நம் வாழ்க்கை சூழ்நிலைகளில் நம் நம்பிக்கை யார்மீது உள்ளது?
நம் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது யாரை நாடி செல்கிறோம்?
வியாதியின் கொடுமையில் நம் எண்ணம் எப்படி செல்கிறது?
கடன் பெருகி நம்மை மூழ்கடிக்கும்போது என்ன நினைக்கிறோம்?

நம் சொந்த திறமையை நம்புகிறோமா? (அ) மந்திரவாதிகளை / ஜோசியர்களை நம்புகிறோமா? (அ) யாரையும் நம்பாமல் மனம்தளர்ந்து போகிறோமா? அப்படியென்றால் நாம் இயேசுவின் அன்பை, அவரது அதிகாரத்தை அறிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

சமீபத்தில் ஒரு நோயாளியை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் மிகவும் மனம் தளர்ந்த நிலையில், இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பேன் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டார். நாங்கள் அவருக்கு ஆதரவுகூறி செபித்து வந்தோம். இயேசுவால் முடியாத காரியம் எதுவுமில்லை. இதை நாம் நம்பவேண்டும். அவருடைய நாமத்தை சொல்லி செபிக்கும் எந்த இடத்திலும் அற்புதம் நடக்கும். இறைவனிடம் நம்மை, நம் தேவைகள் அனைத்தையும் ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஒரு சுலபமான வழி என்னவென்றால், முடிந்தவரை ஒவ்வொருநாளும் திருப்பலியில் பங்கு கொள்வோம். நம் அனைத்து பிரச்சினைகளையும் நம் காணிக்கையாக இறைவனிடம் சமர்ப்பிப்போம்!! அவரையே நம்புவோம்!! இறைவனிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்புவோம்!!!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 1:40 pm

மத்தேயு 9:35-10:1,5-8

திருவருகைக் காலம் முதல் வாரம் சனி



35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.

37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.

அதிகாரம் 10

1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது; ";பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.

6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

7 அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.

8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.


இயேசு மக்கள் மேல் ''பரிவுகொண்டார்'' என்னும் தகவல் நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உள்ளது. குறிப்பாக, இயேசுவின் போதனையைக் கேட்க அவரிடம் வந்த மக்கள் பசியால் வாடியதைக் கண்ட இயேசு அவர்கள் மேல் ''பரிவுகொண்டார்'' (காண்க: மாற் 6:34). இங்கே வருகின்ற ''பரிவு'' என்னும் சொல் ஆழ்ந்த பொருள் கொண்டது. அன்பு, இரக்கம், கனிவு, தயவு, கவலை, கரிசனை போன்ற உள்ளுணர்வுகள் இங்கே குறிக்கப்படுகின்றன. இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற அன்புணர்வு இயேசுவிடம் துலங்கியதை நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். இவ்வாறு மக்கள் மேல் பரிவுகொண்ட இயேசு ''ஆயர் இல்லா ஆடுகளைப் போல'' அவர்கள் சோர்ந்த நிலையில் இருப்பதைக் காண்கின்றார். இஸ்ரயேல் மக்களிடையே ''ஆயர்'' என்னும் சொல் ஆடு மேடு மேய்க்கின்றவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, மக்களை ஆண்டு வழிநடத்திய அரசர்களும் ஆயர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆகவே, மக்களுக்கு வழிகாட்டுகின்ற தலைவர்கள் இல்லாததைக் கண்டு இயேசு வருத்தம் கொள்கிறார்.

-- திருச்சபையில் ஆயர்கள் பணிப் பொறுப்புக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஆயருக்கு உரிய பணியை எல்லாக் கிறிஸ்தவர்களும் நிறைவேற்ற அழைக்கப்படுகிறார்கள். அதாவது, ஒருவர் ஒருவருக்கு வழிகாட்டிகளாக இருந்து செயல்படும் பொறுப்பு எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இவ்வாறு வழிகாட்டும் போது நம் அனைவருக்கும் தலைசிறந்த வழிகாட்டியாக இருப்பவர் இயேசுவே என்பதை நாம் மறந்துவிடலாகாது. இயேசு நம் ''தலைமை ஆயராக'' இருக்கின்றார். அவரிடமிருந்தே திருச்சபை ''ஆயர் பணி''யைப் பெறுகின்றது. எனவே, இயேசுவிடம் விளங்கிய தலைமைப் பண்பு திருச்சபையின் ஒவ்வோர் உறுப்பினரிடமும் துலங்க வேண்டும். மக்கள் சோர்வடைந்து தளர்ந்துபோகாமல் உறுதியோடு இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகள் தேவை. அவர்களிடம் துலங்க வேண்டிய பண்புகள் யாவை என அறிய வேண்டும் என்றால் நாம் இயேசுவின் தலைமைப் பண்பைப் பார்த்தால் போதும். இயேசு மக்கள் மேல் ''பரிவு கொண்டார்'' என்பதே தலைமைப் பண்பின் உள்பொருள் ஆகும். அத்தகைய பரிவு எங்குள்ளதோ அங்கு இயேசுவின் தலைமைப் பண்பு வெளிப்படுகிறது என்பதே உண்மை.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 12:37 pm

டிசம்பர் 7, 2008 மாற்கு 1:1-8

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு



நற்செய்தி வாசகம்

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: �இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார்.
அவர் தொடர்ந்து, �என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறைசாற்றினார்.


மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் சந்திக்கின்ற முதல் ஆள் திருமுழுக்கு யோவான். இவர் தம்மைப் பற்றி அறிவிக்கவில்லை; மாறாகத் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஒருவரைப் பற்றி அறிவிக்கிறார். யோவான் பாலை நிலத்தில் தோன்றி மக்களை நோக்கி, ''பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று அறிவித்தபோது மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். பண்டை நாள்களில் இஸ்ரயேலிலும் யூதாவிலும் தோன்றிய இறைவாக்கினர் இவ்வாறே மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். யோவான் கூறிய சொற்களைக் கேட்டு பல மக்கள் யோர்தான் ஆற்றில் இறங்கித் திருமுழுக்குப் பெற்றனர். ஏன், இயேசு கூட யோவானின் சொற்களுக்கு இணங்கி, திருமுழுக்குப் பெற்றார். இயேசுவைவிட யோவான் பெரியவரா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். அக்கேள்வி அர்த்தமற்றது என்று பதில்கூறுவதுபோல அமைந்துள்ளது யோவானின் கூற்று: ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்'' (மாற்கு 1:7). யோவான் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் இயேசுவோ கடவுளின் மகனாக நம்மிடையே வந்தார். இந்த உண்மையை யோவானின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

-- மனிதர் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி இயல்பாகவே எழுவதுண்டு. சிறுவர்கள் விளையாடும்போது யார் அதிகத் திறமையாக ஆடுகிறார்கள் என்று பார்க்க போட்டியில் ஈடுபடுவதை நாம் காணலாம். அதுபோலவே வளர்ந்தவர்கள் நடுவிலும் போட்டி என்பது சில வேளைகளில் மிகக் கடுமையாக இருப்பதும் உண்டு. யோவான் இவ்வாறு போட்டியில் ஈடுபடவில்லை. அவருக்கென்று கடவுள் அளித்த பணி என்னவென்பதை அவர் உணர்ந்தார். அப்பணியை நிறைவேற்றுவதிலேயே அவர் முனைந்திருந்தார். எனவே, இயேசுவைப் பற்றி யோவான் கூறிய சொற்களும், இயேசுவின் வருகைக்குப் பிறகு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று கூறியதும் அவருடைய பணிவான, பண்பட்ட மன நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போட்டி மனப்பான்மை என்பது சில வேளைகளில் கசப்பான விளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. எப்படியாவது பிறரைத் தோற்கடிக்க வேண்டும் என முனைந்து செயல்படுவோர் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனால் ஏதோ வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிவிட்டதாக நினைத்துச் சோர்ந்துபோவதும் உண்டு. கடவுள் நமக்குத் தருகின்ற பணியை நன்முறையில் ஆற்றுவதே நம் பொறுப்பு என நாம் உணர்ந்தால் வீண் போட்டிகள் நம் எண்ணத்திலிருந்தே மறைந்து போகும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 11:51 am

மத்தேயு 18:12-14

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், செவ்வாய் கிழமை



12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

மனிதர் தம்முள்ளே வேறுபாடுகள் கற்பித்துக்கொள்வதுண்டு; ஒருவர் மற்றவரைவிட மேலானவர் எனக் கருதுவதுண்டு. இவ்வாறு வேறுபடுத்தி ஒதுக்குகின்ற செயல் ஏற்கத்தகாதது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே; அனைத்து மனிதருக்கும் சமமான மாண்பு உண்டு. இந்த உண்மையை உணர்த்த இயேசு காணாமற்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் இருக்கின்ற மந்தையை விட்டு ஓர் ஆடு தவறிச் சென்றாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கச் செல்கின்ற நல்ல ஆயர் நம் கடவுள். தவறிச் சென்ற ஆடு கிடைத்துவிட்டால் ஆயருக்குப் பெருமகிழ்ச்சி. அதுபோலவே, எந்த ஒரு மனிதருமே தவறிப் போய்விடலாகாது என்பதே கடவுளின் விருப்பம். அப்படியே தவறிச் சென்றுவிட்டாலும் அவர்களை அன்போடு அணுகிச் சென்று, அவர்களை நல்வழிப்படுத்துவது இயேசுவின் சீடருக்குத் தரப்படுகின்ற பொறுப்பு.

-- வழிதவறிச் செல்வது எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் நடக்கக் கூடும். தவறிச் சென்றவர்களை இழிச்சொல் கூறிப் பழிப்பதற்குப் பதிலாக, அவர்களை நல்வழியில் கொணர்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். நல்வழியில் மனிதரைக் கொண்டுவருவதற்குக் கடவுளின் துணை எப்போதுமே உண்டு. ஏனென்றால் கடவுளை விட்டு அகன்றோரைத் தேடி மீட்கவே இயேசு வந்தார். அவருடைய அன்புக்கும் கரிசகனைக்கும் உரிய மனிதர்கள் தங்கள் தவற்றினைத் தயங்காது ஏற்றுக்கொள்வார்கள்; அதே நேரத்தில் தாங்கள் தவறிச் சென்ற வழியை விட்டுவிட்டு நேரிய வழியில் நடந்திட முன்வருவார்கள். கடவுளிடமிருந்து பிரிந்து செல்ல முயல்கின்ற மனிதர் சில வேளைகளில் அறியாமையால் அவ்வாறு செய்யக் கூடும். ஆனால் தங்கள் தவற்றினை உணர்ந்த உடனேயே அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்; கடவுளின் வழியில் நடந்திட விரைந்திட வேண்டும். தந்தையின் திருவுளம் மனிதர் உயர வேண்டும் என்பதும் மாண்புடையோராய் வாழ வேண்டும் என்பதுமே. ஆகவே, கடவுளின் விருப்பம் நிறைவேற வேண்டும் என நாம் கருதினால் அந்த விருப்பத்தை நம் விருப்பமாக ஆக்கிக் கொண்டு அதன்படி ஒழுகுவோம்.







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 9 Ila
Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக