புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ணன் என் காதலன் - வேணி மோகன்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கர்ணன் என் காதலன் - முகவுரை
மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.
வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.
சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.
அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.
பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்
நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.
ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பகுதி ஒன்று : அதிரதன்
கரை புரண்டு ஒடும் கங்கையின் கரையில், இரு கரமும் தலைக்கு மேல் கூப்பி, கண்களில் கண்ணீர் பெருகி வழிய, உலகுக்கே ஒளி தரும் சூரியனை மனம் உருக, காண்பவர் மனம் உருக, வேண்டிக் கொண்டு இருந்தார் ஒருவர். அவர் தான் அதிரதன். மகவொன்றை வேண்டி, மாதங்கள் பலவாய் அங்கே நாள் தவறாது ஆதவனை வேண்டும் தம்பதிகள் அவர்கள். ராதை அவரது மனைவி.
மனமுருக வேண்டி, பின்னர் கண்ணீர் நிறைந்த விழிகளுடன், நதியை நோக்க, தூரத்தில் ஏதோ ஒன்று ஆற்றில் மிதந்துவரக் கண்டார். மனைவிடம் அதையே காட்ட, அருகே வர வர அங்கே அவர்கள் கண்டது நன்றாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு பேழை(பெட்டி)
நதியின் போக்கிலே செல்ல இருந்ததை, இவர் போய் எடுத்து வர, கரையிலே வைத்து இருவரும் பெட்டியை திறக்க, “தக தகதகக்கும் கதிரவனைப் போலே ஒளி கொண்ட, அரைத்தெடுத்த சந்தனமும் குழைத்தெடுத்த குங்குமமும் கலந்த பூங்குவியலாய் ஒரு சிறு குழந்தை.
உடலோடு ஒட்டிய கவசமும், காதோடு ஒட்டிய குண்டலமும், குழந்தையின் உடலில் தங்கமென ஜொலிக்க, தங்க விக்ரகம் தான் அந்தக் குழந்தை. கையில் ஏந்திய குழந்தை, அதிரதனை நோக்கி சிரிக்க, அவருக்கும், அவர் மனைவியும் அடைந்த ஆனந்தம் சொல்லில் அடங்காதது.
வசுசேனன் எனப் பெயரிட்டு சீரும் சிறப்புமாய் வளர்த்தனர். மகவை வேண்டிய தம்பதியினருக்கு, அவர்கள் குல தெய்வமாம் சூரியனார் அந்தக் குழந்தையை அனுப்பியதாக கருதி, அந்தக் குழந்தையை உயிராய் கருதி வளர்த்து வந்தனர்.
சூரியனார் அனுப்பிய குழந்தையா அவன்???

பகுதி இரண்டு : குந்தி
யாதவர்களிடம் இருந்து பிரிந்த ஒரு குலத்தவர்கள் போஜர்கள் என அழைக்கப்பட்டனர். குந்தி போஜனின் தேசம் பெரிதுதான். வளம் மிக்கதுதான். ஆயினும் புத்திரப் பேறு இல்லாத அரசன். இளவரசி ப்ருதா (ப்ரீதா) சூரசேனன் என்னும் போஜ யாதவ குலத் தலைவனுக்கு மகளாகப் பிறந்தவள். கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தமைக்கை(சகோதரி) இந்த ப்ருதா.
குந்தி போஜருக்கு சுவீகாரம் தரப் பெற்ற பின்னர்தான் குந்தி தேவி எனப் பெயர் பெற்றார்.
குந்தி, நல்ல அழகும், பெரியோரை மதிக்கும் பண்பும் கொண்டவராகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார்.
ஒரு சமயம் இவர்கள் அரண்மனையில் தங்கிப் போக துர்வாச முனிவர் வந்தார். இவர் அத்திரி முனிவருக்கும், அனுசுயா என்ற மாதரசிக்கும் மகவாய் பிறந்தவர். ருத்திரரின் அம்சமோ என அச்சம் கொள்ளும் அளவுக்கு மகா கோபக்காரர். பல முனிவர்கள், கோபம் கொண்டு மற்றவரை சபிக்கும் போதெல்லாம் அவர்களது தவ வலிமை குறைந்திடும். ஆனால், இவருக்கோ, அப்படி சபிக்க நேரிடுகையில் எல்லாம், வலிமை அதிகரிக்கும். கூடவே பின்னே நடக்க இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் வல்லமையும் படைத்தவராய் இருந்தாராம்.
எனவே இவர் சென்ற இடத்தில் எல்லாம், பெரும் மதிப்புடன் நடத்தப்பட்டார்.
அத்தகைய துர்வாசர் தம் அரமனைக்கு வருகை தருவதால், குந்தி தேவியே அவருக்கு பணிவிடை செய்யுமார் போஜ ராஜர் குந்தியை பணித்தார். குந்தியும், துர்வாசரின் மனதுக்கும், அமைதிக்கும், சிறிதும் குந்தகம் நேராது சிறப்பாய் பணிவிடை செய்து முடித்தார்.
அதில் அகம் மகிழ்ந்த முனிவரும், குந்திக்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். எந்த தேவரையும் நினைந்த மாத்திரத்தில் கூப்பிட அருளிய வரம் அது. அந்த தேவரின் அம்சமாக, அவரின் சிறப்புகளையும், சக்திகளையும் கொண்ட ஒரு மகவை அந்த தேவர் அந்த மந்திரத்தின் வலிமைக்கு கொடுத்தாக வேண்டும்.
பின்னாளில் குந்திக்கு மகப்பேறு இல்லாமல் போகும் நிலையை முன் கூட்டியே அறிந்ததால் அந்த மந்திரத்தை துர்வாசர் அருளியதாக சொல்லப்படுகிறது.
விடை பெற்று முனிவர் சென்றதும், மந்திரத்தை பரிசோதித்து பார்க்கும் ஆவல் தன்னை உந்தித் தள்ள, காலையில் தன் உதயத்தால் உலகை ஒளிர்விக்க வந்த கதிரவனை மனதில் நினைத்து அந்த மந்திரத்தை சொல்ல, மந்திரத்தின் வலிமைக்கு கட்டுண்ட ஆதவன் குந்தியின் முன் தோன்றினார்.
கண்ணைக் கூசச் செய்யும் காந்தியுடன் கதிரவனைக் கண்ட குந்திக்கு, என்ன செய்வதென்ற தெரியாத நிலை. தன் விளையாட்டு புத்தியால் நேர்ந்த தவறை சொல்லி, கதிரவனை திரும்பப் போகச் சொல்ல, மந்திரம் சொல்லி அழைத்தால், மகவைத் தராது தன்னால் செல்ல இயலாது என அவர் செல்ல மறுக்க, தன் நிலையை (கண்ணி) எண்ணி அவள் மீண்டும் மறுக்க, மகவை பெற்றாலும் அவள் கன்னியாகவே இருப்பாள் எனச் சொல்லி, அவருடைய அம்சங்களைக் கொண்ட ஒரு குழந்தையை குந்தியின் கரத்தில் தந்து விட்டு கதிரவன் மறைந்தார்.
அந்தக் குழந்தைதான் இந்தக் கதையின் நாயகன் கர்ணன். கதிரவனின் ஆகிருதி, அவர்தம் திறம், வீரம் அனைத்தும் அவர் அம்சமாகவே இருப்பினும். இந்தக் கவசமும், குண்டலமும், கர்ணனது முற்பிறவியின் மீதம் என சில தகவல்கள் கூறுகின்றன.

பகுதி மூன்று : சகஸ்ர கவசன் (கர்ணனின் முற்பிறவி)
இதை படிக்கும் வரை என்னடா, ஒரு பாவமும் அறியாத ஒருவனுக்கு, பிறந்தது முதல், சாவின் விளிம்பு வரை கூட எத்தனை அவமானங்கள்?? எத்தனை ஏச்சு பேச்சுக்கள் என அடங்காத என்ன ஓட்டங்கள் என்னுள்ளும் இருந்தது உண்டு. படித்த பின் கொஞ்சம் ஆறுதல் இருந்தாலும்.........
முதல் பிறவியில் கர்ணன் சகஸ்ர கவசன் என்னும் அசுரனாக இருந்தாராம். பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தின் படி அவருடைய உடலை ஆயிரம் கவசங்கள் மூடி இருந்தனவாம். அந்தக் கவசங்கள் இருக்கும் வரை சகஸ்ர கவசனுக்கு அழிவு என்பது இல்லை. எவர் ஒருவர் பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்துவிட்டு பின்னர் பன்னிரண்டு வருடங்கள் போர் புரிகின்றானோ அவனால் தான் அசுரனுடைய ஒரு கவசத்தை உடைக்க முடியும். இவ்வாறு இருபத்தி நான்கு வருடங்கள் எவன் ஒருவன் தவமும், போரும் செய்து ஒவ்வொன்றாய் அவனது ஆயிரம் கவசங்களை உடைப்பது?? பின்னர் அவனைக் கொல்வது???
இந்த வரம் தனக்கு இருந்த காரணத்தால், சகஸ்ர கவசன் தொல்லைகள் எல்லை மீறித்தான் போய்விட்டனவாம். அனைவரையும் தாக்கி, பெரும் துயருக்கு ஆளாக்கி கொடும் செயல்கள் பல புரிந்தானாம். தேவர்கள் இந்த துயரங்கள் தாங்க இயலாது, மஹா விஷ்ணுவிடம் முறையிட, அசுரனை அழிக்க அவரே நரனாகவும், நாராயணன் ஆகவும் அவதாரம் எடுத்தாராம். நரன் பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இருக்க, நாராயணன் அவனுடன் போரிட்டாராம். பின்னர் நரன் போரிட, நாராயணன் தவம் இருந்தாராம்.
இப்படியே, வருடங்கள் பல கழிந்தனவாம். ஒன்றன் பின் ஒன்றாக தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது கவசங்கள் உடைக்கப்பட்டது. அதற்குள் பிரம்ம பிரளயம்*** வந்து விட்டதாம். அப்போது, சகஸ்ர கவசன், இருந்த ஒரே கவசத்துடன், சூரியனிடம் தஞ்சம் புகுந்தாராம்.
இந்த சகஸ்ர கவசனே, மீதம் இருந்த ஒரே கவசத்துடன், கர்ணனாய், குந்தியின் மகனாய் பிறந்தானாம். இந்த அழிக்கப் பட வேண்டிய கவசத்தை அழித்திடவே, கிருஷ்ணர், நரனான அர்ஜுனனாகவும், நாராயணன் ஆகவும் பிறந்தனராம். வனவாசமாய் போன பன்னிரண்டு வருடங்கள் அர்ஜூனன் செய்த தவமாம்.
(ஆனால் அர்ஜூனன் இந்திரனின் அம்சம் என மஹாபாரதத்தில் வருகிறதே... அது உண்மை இல்லையா??? என ஐயம் வருகிறது)
அந்த ஒரு கவசமும், இந்திரனால், கர்ணனிடம் இருந்து பெறப் பெற்றதை நாம் அனைவரும் அறிவோம் இல்லையா?? பின் வரும் அத்தியாயங்களில் மீண்டும் விளக்கமாக வரும்.
__________________________________________________ _
****பிரம்ம பிரளயம் : ப்ரபஞ்சம் அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக ஒரு சுழற்சியே. ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு.
ப்ரம்மவின் பிறப்பு, இறப்பு காலத்தின் நடுவே உள்ளது "மஹாகல்பம்";; ப்ரம்மாவின் இறப்பிற்கு பிறகு வரும் ப்ரளயம் "மஹாப்ரளயம்".
ப்ரம்மாவின் ஒரு நாள் "கல்பம்";; இந்த கல்பம் 14 மந்வந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு மனு உண்டு.
அந்த மனுவின் வாழ்நாள் ஒரு "மன்வந்திரம்". இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.
ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவை—க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள்.
ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிகிறது. அதை சிறிய ப்ரளயம் என்பர். ப்ரம்மாவின் வயது 120 வருடங்கள். ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120x360 approx.).உருவாகின்றன.
இதிலும் இந்த யுகங்கள் எல்லாம் பல லட்சக் கணக்கான வருஷங்களைத் தன்னுள்ளே கொண்டதாம்
க்ருத யுகம் – 17,28,000 வருடங்கள் கொண்டது
த்ரேதா யுகம் – 12,96,000 வருடங்கள் கொண்டது
த்வாபரயுகம் – 8,64,000 வருடங்கள் கொண்டது
கலி யுகம் - 4,32,000 வருடங்கள் கொண்டது

பகுதி நான்கு : கர்ணனின் சிறு பிராயம்
கர்ணனின் எழில் மிகு குழந்தை பருவத்தை பற்றிய நிகழ்வுகள் இவை:
குழந்தையாய் இருக்கையிலும், அருகிருந்த முனிவரிடம் ஆசி பெற கர்ணனை எடுத்துச் செல்கையில், அவனது, கர்ண குண்டலங்களையும், உடலோடு போர்த்த கவசத்தையும், முக தேஜசையும் கண்ட முனிவர், அவனை எடுக்க, இரு கரத்தையும் நீட்டினாராம். உடனே குழந்தை, அதற்க்கு அணிவித்திருந்த அணிகலனை எடுத்து அவர் கையிலே வைத்தானாம்.
அகம் மகிழ்ந்த முனிவரும், குழந்தையை வாழ்த்தி, இவன் கொடுப்பதற்கு என்றே பிறந்தவன், என சொன்னாராம். அப்போது இருந்தே கேட்பவருக்கு கொடுக்கும் பண்பு கர்ணனுக்கு இருந்திருக்கிறது.
தன் தந்தை (வளர்ப்பு தந்தைதான்) அதிரதனைப் போலே தேர் ஓட்டினாலும், கர்ணனுக்கு போர்க்கலைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அனைத்துக் கலைகளிலும் அவனுக்கு ஆர்வம் இருந்தாலும், வில் வித்தையில் அவனுக்கு இருந்த ஈர்ப்பை வேறு எதுவும் ஈடு செய்யவில்லை. ஒரு பயிற்சி பெற்ற ஆசானிடம் முறையாய் இந்தக் கலையை கற்றிட வேண்டும் என உள்ளூர ஓடிய எண்ணத்தின் விளைவாய் அவன் துரோணரிடம் சென்றானாம்.
துரோணர், அப்போது, ஹஸ்தினாபுர இளவரசர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பணிவாய் அவரை நமஸ்கரித்து, வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தன் ஆர்வத்தை சொல்கிறான். தேரோட்டியின் மகனுக்கு வித்தை கற்றுத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.
மனம் வருந்திய கர்ணன், ஆசான் இல்லாமலே நான் இந்த வித்தையை கற்றுக் கொள்கிறேன் பார் என மனதுக்குள் சூளுரைத்து, சுயமாகவே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். இந்திய கலாசாரத்தின் படி, ஒரு வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்க்கு கண்டிப்பாய் யாரையேனும் குருவாக கொள்ள வேண்டும்.
கர்ணன் தன் தந்தையான சூரிய பகவானையே குருவாகக் கொள்கிறான். பகலெல்லாம் அஸ்திரங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி, பின்னர், சூரியன் மறைந்ததும், அந்த அஸ்திரங்களை பயிற்சி செய்தான். இப்படியே கடுமையான பயிற்சி மேற்கொண்டு தன்னை தானே இந்த வித்தையில் உயர்த்திக் கொண்டான்.
ஒரு சமயம், துரோணரின் குருகுலத்தில் மாணவர்களின் திறனை பரிசோதிக்க துரோணர் நடத்திய தேர்வை, கர்ணன் அறிய நேர்ந்தது. மரத்தால் செய்யப் பட்ட ஒரு பறவையின் உருவை, ஒரு மரத்தில் தொங்கவிட்டு, அதன் கண்ணை, இலக்காகக் கொண்டு அம்பு எய்யச் சொன்னாராம் துரோணர். பக்கத்தில் இருந்த பழ மரங்கள் பல வீணானதுதான் மிச்சம். ஒருவர் கூட பறவையை அடிக்க வில்லையாம்.
சரி என, மாணவர்களை அழைத்து என்ன தெரிகிறது என மட்டும் கேட்டாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் சொல்ல, அர்ஜூனன் மட்டுமே, அந்தக் பறவையின் கண் மட்டும் தெரிவதாய் சொல்ல, அவனை அம்பு எய்ய அனுமதிதாராம். இது அர்ஜுனனின் இலக்கை குறி பார்க்கையில் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் திறனை சொல்லும் ஒரு விஷயம்.
இதை கேள்விப்பட்டு நம் நாயகன் என்ன செய்தானாம்......
அர்ஜூனன் ஒரு கண்ணை மட்டும் தானே அடித்தான், நான் அதே போல பறவையின் இரு கண்ணையும் அடிக்கிறேன் பார் என, பயிற்சிக் களத்தில் இறங்க, சொன்னதை செய்ய அவன் எடுத்துக் கொண்டதோ சில மணி நேரங்கள் மட்டும் தானாம். ஒன்றன் பின் ஒன்றாக இரு அம்பை ஒரே நேரத்தில் பொருத்தி, இரவிலே, தீவர்த்தியின் ஒளியில் இதை செய்தானாம்.
இது, எல்லாக் காலங்களிலும், வில் வித்தையைக் கற்றுக் கொள்வதிலும், அதை பயன்படுத்துதளிலும், கர்ணனே சிறந்தவன் என்பதற்கு ஒரு சான்று.
இத்துணை கற்றுக் கொண்டாலும், தெய்வீக அஸ்திரங்களை தன் பயிற்சியில் சிறந்த ஒரு குருவினால் தான் தர முடியும் என்பதை கர்ணன் அறிந்தே இருந்தான். துரோணர் மறுத்து விட்ட படியால், அவரது குருவான பரசுராமரிடம் தான் அந்த வித்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்.
ஆனாலும், துரோணர் எப்படி, ஷத்ரியர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பேன் என இருந்தாரோ, அதுபோல பரசுராமர், பிராமணர்களுக்கு மட்டும் தான் கற்றுப் கொடுப்பது எனும் முடிவில் இருந்தார். வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க மாட்டார்.

பகுதி ஐந்து : கர்ணனும் பரசுராமரும்
பரசுராமரை பற்றி கர்ணன் முதல் முதலில் கேள்விப் படும் போதும் நடந்த நிகழ்வுகள் :
தான் வில்வித்தையில் நிபுணன் ஆக வேண்டுமானால், சிறந்த ஒரு குரு தனக்கு வேண்டுமே, என துரோணரின் மறுப்புக்கு பின் உள்ளுக்குள் மருகிக் கொண்டு இருக்கையில் யாரோ யாரிடமோ பேசுகையில் பரசுராமர் என்ற பெயரை கேள்விப்பட்டானாம்.
சொன்னவரிடமே வினவி இருக்கிறான்.
பரசுராமர் யார்???
அவர் ரிஷி ஜமதக்னியின் மகன். ரிஷியாக இருந்தபோதிலும் அவர் ஒரு சிறந்த யுத்த வீரனாகவும் விளங்கினார்.
எப்படி அவர் சிறந்த யுத்தவீரர்?
அவர் 21 முறை உலகை வலம் வந்தவர், எந்த க்ஷத்திரியனாலும் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அவர் வில்லைக் கையிலெடுத்தால் உலகம் நடுங்கும். வில்வித்தையின் நுணுக்கங்களை அவர் நன்கு அறிவார். முனிவர்களும் அவர் புகழ் பாடிக் கொண்டு இருக்கின்றனர்
சரி முனிவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்??
அவர் வில் வித்தையின் மறு உருவம். அவர் அநீதியை அழிக்க வந்த கடவுள் ஆவார் எனக் கூறுகின்றனர் என சொன்னார்கள்.
அதைக் கேள்விப் பட்டதில் இருந்து, பரசுராமின் மேல், கர்ணனுக்கு, அபார பக்தியும், அளப்பறிய ஈடுபாடும் வந்தது. கர்ணன் பரசுராமரிடமே வில்வித்தை கற்க வேண்டுமென்று விரும்பினான். அவர் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனாலும் தைரியமாக பரசுராமரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவன் அவரை விழுந்து வணங்கினான்.
பரசுராமர் அந்த சிறுவனைக் கண்டு
குழந்தாய் நீ யார்? எனக் கேட்டாராம்.
அதற்க்கு கர்ணன், என்னை கர்ணனென்று அழைப்பார்கள்
பரசுராமர் : இங்கு வந்ததன் காரணம்?
கர்ணன் : தாங்கள் ஈடு இணையற்ற சிறந்த வீரராகக் கருதப் படுகிறீர்கள். வில்வித்தையின் நுணுக்கங்களை அறிந்தவர். நான் உங்கள் சிஷ்யனாக விரும்புகிறேன். மறுத்து விடாதீர்கள்.
கர்ணனின் பணிவு, மற்றும் கல்வியின் ஆர்வத்தைக் கண்ட பரசுராமர் அவனிடம் கருணை கொண்டார். அவர் விருப்பத்திற்கிணங்க கர்ணனும் வித்தைகளை செய்து காட்டினான். அவனது நுணுக்கத்தையும் கவனத்தையும் கண்ட பரசுராமர் ஆச்சரியமடைந்தார்.
கர்ணனின் வல்லமை அவன் வயதிற்கு மிஞ்சியதாக இருப்பதைக்கண்டார். அவன் தமக்கு சிஷ்யனாகத் தகுதியுள்ளவனே என்று நினைத்தார்.
கர்ணனுக்கு வில் வித்தை கற்றுக்கொடுக்க சம்மதித்தார். இதைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
அக்கால கட்டத்தில் க்ஷத்திரியரும் பிராமனருமே குருகுலத்திலிருந்து வில்வித்தை கற்க அனுமதி பெற்றவர். பரசுராமர் க்ஷத்திரியர்களை வெறுத்து வந்தார். அதனால் அவர் பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்க விரும்பினார்.
அவர் கர்ணனை பிராமணச் சிறுவனாகவே நினைத்தார்.
கர்ணனின் பயிற்சி எந்தவிதத் தடையுமில்லாமல் நடந்தது. குருவின் போதனைகளை அவன் உடனுக்குடனேயே புரிந்துகொண்டான். முதல் முயற்சியிலேயே அவைகளை பூரணமாக செய்தும் காட்டினான். இவ்வாறு கர்ணன் வில்வித்தையின் நுட்பங்களை குருவிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் அன்புடன் குருஸேவையும் செய்து வந்தான். காலம் சென்றது.
ஓருநாள் பயிற்சிக்குப் பின்னர், மதியம் பரசுராமர் களைப்பாக இருந்ததால் கர்ணன் மடிமீது தலை வைத்துத் தூங்கி விட்டார்.
அப்பொழுது ஒரு வண்டு*** பறந்து வந்து கர்ணனின் தொடையில் அமர்ந்தது. சிறிது நேரத்தில் அது அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. அவனால் அதை விரட்டவும் முடியவில்லை.
சிறிது அசைந்தால் கூட குருவின் தூக்கம் கலைந்து விடும். தாங்க முடியாத வலியிலும் அவன் அசையாமல் இருந்தான். அவன் தனக்கு வலித்தாலும் பரவாயில்லை, குருவிற்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தான்.
வண்டு துளைத்துக் கொண்டிருந்ததால் கர்ணன் தொடையிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. பரசுராமரின் கன்னத்தில் பட்டது. அவர் உறக்கம் கலைந்து விட்டது. ரத்தத்தைக் கண்ட அவர் திடுக்கிட்டுக் கேட்டார்.
பரசுராமர் : என்ன இது? ரத்தம் எங்கிருந்து வந்தது?
கர்ணன் நடந்ததைக் கூறினான்.
பரசுராமர் : இத்தனை வலியையுமா நீ தாங்கிக்கொண்டாய்?
கர்ணன் : வலி தாங்க முடியாததாக இல்லை. (என்னே குரு பக்தி!!!)
பரசுராமர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அவர் கர்ணனைத் தலையிலிருந்து கால் வரைப் பார்த்தார். அவர் இதுவரை கர்ணனை பிராமணச் சிறுவன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஓரு பிராமணனால் இத்தகைய வலியைத் தாங்க முடியாது.
ஆகையால் கர்ணன் ஒரு பிராமணச் சிறுவனாக இருக்க முடியாது. க்ஷத்திரியனோ என்று நினைத்தார். கோபத்துடன் அவர் கர்ணனைப் பார்த்து,
பரசுராமர் : கர்ணா!
கர்ணன் : குருவே!
பரசுராமர் : உண்மையைச் சொல், யார் நீ? நீ என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லையா?
கர்ணன் : எதை மறைத்தேன்? எனக்குத் தெரியவில்லை.
பரசுராமர் : நீ பிராமணன் தானா?? உண்மையைக் கூறு.
கர்ணன் பதிலேதும் கூறவில்லை. தலைகுனிந்து நின்றான். அவன் தன்னை தேர்ப்பாகன் அதிரதனின் மகனாகத்தான் நினைத்து வந்தான். ஆகையால் தான் ஒரு பிராமணனோ க்ஷத்திரியனோ அல்ல என்று நினைத்திருந்தான்.
அவனால் குருவுக்கு என்ன பதிலளிக்க முடியும்? அவனுக்கு பயமும் வருத்தமும் ஏற்பட்டது. கர்ணனின் அமைதி பரசுராமரின் சந்தேகத்தை உறுதி செய்தது. கர்ணனின் பணிவு, வீரம், குருபக்தி, ஆர்வம், எல்லாவற்றையும் மறந்து விட்டார்.
“நீ குருவை ஏமாற்றி வித்தை கற்றதால் தேவையான சமயத்தில் அது உனக்கு நினைவிற்கு வராது.” என்று பரசுராமர் கர்ணனை சபித்தார்.
கர்ணன் தன் உலகமே இருண்டது போலே உணர்ந்தான். அவன் குருவின் மனதை அவனறியாமலே காயப் படுத்தி இருந்தான்
மேலும் தேவையான சமயத்தில் அவனுக்கு அவன் கற்ற வித்தை கை கொடுக்காது என்ற சாபத்தையும் பெற்றான். அவன் பரசுராமரின் ஆசிரமத்தை விட்டு அகன்றான்.
______________________________________
*** வண்டாய் வந்தவர், இந்திரன், (தன் அம்சமான அர்ஜுனனுக்கு போட்டியாய் எங்கே இவன் வந்து விடுவானோ என்ற அச்சத்தில் குருவின் சாபம் வாங்கித் தர வந்தானாம். சுயநலம் தேவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை போலும்...

பகுதி ஆறு : கர்ணனின் வாலிபப் பிராயம் :
அயராத பயிற்சியின் மூலம் வித்தையிலும் வளர்ந்து, தானும் வளர்ந்து, கண்ணையும் மனதையும் நிறைக்கும் வாலிபப் பருவத்தில் கர்ணன்:
ஹஸ்தினாபுரத்திலே, பாண்டவ மற்றும் கௌரவ இளவரசர்கள் வித்தைகளைக் கற்று முடித்து தங்கள் திறமைகளை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த ஒரு நாள் குறிக்கப்பட்டு அதற்காய் ஒரு களம் உருவாக்கப்பட்டு இருந்தது.
செய்தியை அறிந்த நம் நாயகனும், அங்கே வில் வித்தையை வேடிக்கை காணச் சென்றான்.
என்ன ஒரு பிரம்மாண்ட களம் அது. ஒரு ஊரையே வளைத்து உருவாக்கப் பட்டு இருந்தது களம். நடுவே ஒரு பெரிய மேடை. கணக்கிலடங்கா மக்களும், ராஜ குல தோன்றல்களும் அங்கே குவிந்து இருந்தனர்.
திறமைகள் வெளிப்பட ஆரம்பித்தன. அது காணவே இயலாத காட்சியாய், அதுவரை கண்டிடாத காட்சியாய் கண்டவரின் கண்களுக்கு பெரு விருந்தாய் இருந்ததாம். குதிரையேற்றம், யானை ஏற்றம், கத்தி சண்டை, யானையிலே சண்டை, விற்போர், மற்போர் என அத்தனையிலும் அற்புதங்கள் நிகழ்த்தினராம் அந்த இளம் வீரர்கள்.
ஆயுதங்களின் வீச்சு ஆயிரம் சின்ன மின்னல்கள் அந்தக் களத்திலே ஆங்காங்கே வந்தது போல, பிரகாசித்தன.
ஆனால், அனைவரின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் அர்ஜூனன் ஒருவனே. அவன் காண்பித்த வித்தைகளை கண்டு, மக்கள் ஒரு மித்த குரலில், வில் வித்தையில் நிகரில்லாதவன் அர்ஜுனன் தான்.. என கோஷங்கள் எழுப்பினர்...
அவன் சகோதர்களுக்கும், அன்னைக்கும் பெருமிதத்தில் கண்களில் நீர் துளிக்க ஒரு ஆனந்தக் காட்சியின் அரங்கேற்றம் அங்கே...
அப்போது... இடி முழக்கமாய் ஒரு குரல் “அர்ஜுனா அகந்தை கொள்ளாதே” என அரங்க மேடையின் அருகே கேட்டது... அனைவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க,
திண்ணென்ற தோள்கள் திரண்டே இருக்க,
பொன்னை ஒத்த வர்ணம் மேனிதனில் இருக்க,
கதிரொத்த காந்தி அவன் கண்களில் இருக்க,
பளபளத்த கவசமும், ஜொலித்த குண்டலமும்
அவன் அழகிற்கு அழகு சேர்க்க...
சவாலாய் மார்பதனைத் தட்டி, தற்பெருமை கொள்ளாதே
தனஞ்சயா, என அவைதனில் அவன் நடக்க, மலரைக்
மொய்க்கும் வண்டுகளாய் அவனை மொய்த்தன மக்கள்
கண்கள்.. அவர் அசைவின்றிப் போயினர் அவன்தம் வரவில்..
வந்தது நம் கதையின் நாயகன் தான்..
கர்ணன் : போட்டியிட ஆள் இல்லாததால், நீதான் சிறந்தவன் என கர்வம் கொள்ளாதே. நான் உன்னை விட சிறந்த வித்தைகளைக் காட்டுவேன். இதோ இங்கே நிறைந்திருக்கும் சபையினர் கண்களுக்கு என் திறமைகளை விருந்தாக்குகிறேன்..
என தான் கற்ற வித்தைகளை விருந்தாக்கினான். அசாதாரண விருந்து. கர்ணனின் ஆரம்பமே அசத்தல்தான்.
பர்ஜன்ய அஸ்திரத்தை விண்ணில் செலுத்தி, மழையை வருவித்தான், பின்னர் வாய்வ அஸ்திரத்தை கொண்டு மழையைக் கட்டுப் படுத்தினான்.
ஆக்னேயாஸ்திரத்தால் அக்னியை வரவழைத்தான். வருனாஸ்திரத்தால் அதைக் அணைத்தான்.
நிலையற்ற வேகத்துடன் சுழலும் உலோகத்தாலான பன்றியின் வாய்க்குள் குறிதவராது அஸ்திரங்கள் செலுத்தினான்.
அந்தர்தான அஸ்திரத்தைச் செலுத்தி மறைந்து, அரங்கத்தின் இன்னொரு இடத்தில் உடனேயே தோன்றினான்.
அதன் பிறகு கதையின் மூலம் பல சாகசங்களைச் செய்து காட்டினான். மக்கள் அவன் ஆற்றல் மிக்க வித்தைகளைக்கன்டு வியந்தனர்.
அங்கு ஆரவாரம் எழுந்தது. பாண்டவர்கள் அவனை ஸூத்புத்திரன் என்று கூறி அவன் வித்தைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஸூத்புத்திரன் (தேரோட்டியின் மகன்) என்பதால் அவன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதையும் மறுத்தனர். அவன் சமூகத்தாலும் அவமதிக்கப் பட்டான்.
போட்டிகள் முடிந்த உடனே துரியோதனன் அரங்கத்திற்கு ஓடிச்சென்று கர்ணனை ஆரத்தழுவி ஈடு இணையற்ற வீரனே, உன் வீரத்தையும், ஆயுதங்களைக் கையாளும் திறனையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் என் தேசமும் உன்னுடையதே. உன் விருப்பம் என்ன வென்று கூறு. நான் இப்பொழுதே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்

பகுதி ஏழு : கர்ணனும் துரியோதனனும்
கர்ணனின் வீரத்தையும், அவன் ஆயுதங்களை கையாளும் திறமையில் உள்ளம் மகிழ்ந்த துரியோதனன் கர்ணனிடம் நட்பாய் இருக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அவர்களைப் பற்றி இனி....
துரியோதனன் : கர்ணா, (என ஆவலுடன் கூவி அவனை ஆரத்தழுவி) ஈடு இணை அற்ற வீரனே, உன் வீரத்திலும், தீரத்திலும், ஆயுதங்களில் உனக்கு உள்ள தேர்ச்சியும் கண்டு ஆனந்தத்தின் எல்லையில் உள்ளேன் நான். நானும், என் தேசமும் இனி உன்னுடையது. என்ன வேண்டும் உனக்கு?? கேள்.. இப்போதே அதை நிறைவேற்றுகிறேன்
கர்ணன் : வேறெதுவும் எனக்கு வேண்டாம் அரசே. உங்கள் நட்பும், அர்ஜுனனுடன் வில் வித்தையில் போட்டியிட வேண்டும் என்பதுமே என் விருப்பம்.
துரியோதனன் : அப்படியானால், இப்போதே உன் விருப்பங்கள் நிறைவேறின என்று எண்ணிக் கொள். இன்றிலிருந்து நீ என் ஆருயிர் நண்பன். என்னைப் போலவே மதிக்கத்தகுந்த ஒருவன்
அர்ஜூனன் : கர்ணா இங்கே உன்னை யாரும் அழைக்கவில்லை. நீயாக வந்தாய். நாங்கள் உன்னிடம் பேசவில்லை. நீதான் அதிகமாகப் பேசுகிறாய். இந்த அமைதியான கூட்டத்தை அமைதியிழக்கச் செய்து விட்டாய். நான் இப்பொழுதே உன்னைக் கொன்று விடுவேன். ஆயுதம் எடுத்து வா, என்றான்.
(இப்படி பேசியே... தன் அமைதி இன்மையைக் காட்டிக் கொண்டான் அர்ஜூனன்)
கர்ணன் : (கோபம் அதிகரித்த கர்ணன்) அர்ஜுனா, இந்த அரங்கம் உனக்கு சொந்தமானதல்ல. இது ஒரு பொது இடம். வித்தை தெரிந்த யாரானாலும் இங்கு வந்து தன் ஆற்றலைக் காட்டலாம். அதில் உனக்கு என்ன ஆட்சேபணை?
நீ என்னை அவமதிக்கிறாய். உண்மையான வீரன் உன்னைப்போல் பேசுவானா?? போர் என்றால் நானும் தயார்தான். நான் இப்பொழுதே இங்கேயே உன்னை வீழ்த்தி விடுவேன், என்றான்.
இருவரும் போருக்கு ஆயத்தமாயினர். அரசகுமாரர்களுக்குப் பயிற்சி அளித்த துரோணாச்சாரியார் இடை இட விழைந்தார். கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கர்ணனும் அர்ஜுனனும் சண்டையிடப் போவதை அறிந்த பாண்டவர்களின் தாயாரான குந்திதேவி மயக்கமடைந்தாள். கிருபாச்சாரியார் அரங்கத்தை அடைந்தார். துவந்த யுத்தத்தின் நியமங்களை அவர் அறிந்திருந்தார்.
கிருபாச்சாரியார் : கர்ணா உன்னுடன் போரிடத் தயாராக இருப்பவன் அர்ஜுனன். அவன் சந்திர வம்சத்து அரசகுமாரன். பாண்டுவின் மகன். அவனுடன் சண்டையிடுபவன் எல்லாவிதத்திலும் அவனுக்கு சமமாக இருக்கவேண்டும். நீ யாருடைய மகன்? யாருடைய மாணவன்? அதை இந்த சபைக்குக் கூறு, என்றார்.
கர்ணன் வெட்கத்தினாலும் அவமானத்தினாலும் தலை குனிந்து நின்றான். நான் ஒரு தேர்ப்பாகன் மகன். ஆகையால் நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். மக்கள் அதைப்பெரிது படுத்துகிறார்கள். நான் யாராக இருந்தால் என்ன? மனிதனுக்கு வீரம் போதாதா? என்று கர்ணன் நினைத்தான்.
(அக்காலத்து வழக்கம் அதுவாக இருந்தது. என்ன செய்வது?)
நடந்ததைக் கண்ட துரியோதனன் ஆத்திரமடைந்தான்.
துரியோதனன் : கிருபாச்சாரியாரே நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? அர்ஜுனன் அரசகுமாரன், கர்ணன் அரசகுமாரன் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? நான் இப்பொழுதே கர்ணனை அரசனாக்குகிறேன். அப்பொழுது அவன் அர்ஜுனனுக்கு சவால் விடலாம் இல்லையா?
என்று கூறிக்கொண்டே கர்ணனை அங்க தேசத்திற்கு அரசனாக்கினான். மக்கள் அதை வரவேற்றனர்.
கர்ணன் : (நன்றியுடன்) நான் இதற்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?
துரியோதனன் : நான் எல்லாவற்றிற்கும் மேலாக உன் நட்பை மதிக்கிறேன். அதுவே போதும், என்று கூறி அவனை அணைத்துக் கொண்டான்.
கர்ணன் : என் மானம் காத்த மகாத்மாவே, என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் மறவேன், உன் வெற்றிக்கு வழி செய்யாது நான் இறவேன் என அவனை ஆரத்தி தழுவிக் கொண்டு அதீத உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடித்தான்.
அன்னை அறியேன், தந்தை அறியேன்....
என் ஆதியாய் நான் எதையும் அறியேன்..
என் குலம் அறியேன், அதன் வளம் அறியேன்..
உறவெனச் சொல்ல ஒருவரையும் அறியேன்...
என் திறம் அறிவேன், அதன் மறம் அறிவேன்..
எனை எனக்காக நேசித்த உன் அன்பை அறிந்தேன்
எனை மீட்டெடுத்த உன் நட்பை வரம் என அறிந்தேன்
உன் அன்பின் ஆழம் அறிந்தேன், என் உயிர் உள்ள வரை
உன்னை நான் பிரியேன் என் ஆருயிரே.. நானும் நீயும்
இனி ஓர் உயிரே...
(என கர்ணனுள் ஓடியது எண்ண ஓட்டம்....)
அர்ஜுனனும் கர்ணனும் சண்டையிட ஆரம்பிக்கும்போது தன் மகன் அரசனானதை கேள்விப்பட்ட அதிரதன் அங்கு வந்தான்.
அதிரதன் : மகனே... கர்ணா ...
கர்ணன் : தந்தையே... என அவர் பாதம் பணிந்தான்
அதிரதன் : பல்லாண்டு நீ வாழ்வாய் என் மகனே என உச்சி மோர்ந்தாய்.
அதைக் கண்ட பீமன் கர்ணன் அதிரதனின் மகன் என்பதைத் தெரிந்து கொண்டான்.
பீமன் : கர்ணா நீ தேர்ப்பாகன் அதிரதனின் மகன்தானே? சந்திர வம்சத்தில் பிறந்த அர்ஜுனனுக்கு நீ எப்படி இணையாக முடியும்? என ஏளனத்துடன் கேட்டான். கூடவே, நாய் ஒன்று யாக குண்டத்தின் அருகில் இருப்பதால் அதன் பிரசாதம் அதற்குக் கிடைக்குமா?
நீ அங்க தேசத்திற்கு அரசனாகத் தகுதியானவனல்ல. அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்படுவதற்குக் கூட உனக்குத் தகுதி இல்லை, என்று கூறி அவமானப் படுத்தினான்.
அதைக்கேட்ட துரியோதனன் கோபம் கொண்டான்.
துரியோதனன் : நீ க்ஷத்திரியனைப்போல் பேச வில்லை. வீரம் தான் மிகமுக்கியம். கேவலம் ஜாதியைக் கொண்டா திறமையை எடை போடுவது??
அப்படி பார்த்தால், நமது ஆசிரியர்களான துரோணர் - ரும், கிருபாச்சாரியாரும் கூட ஷத்ரியர்கள் அல்ல தானே. அவர்கள் குலத்தைப் பற்றி நாம் குறை கூற முடியுமா???
ஆகையால் பிறந்த குலம் முக்கியமல்ல. கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்து, ஸூர்யனைப் போல் பிரகாசிக்கிறான்.
அங்கதேசத்தின் அரசனாக அவனுக்கு ஏன் தகுதியில்லை? அவன் அரசனாகத் தகுதியில்லை எனக் கூறுபவர் அவனுடன் போரிட்டு வெற்றிபெறட்டும்.
இதைக்கேட்டு சபையில் குழப்பம் ஏற்பட்டது. இருள் பரவியதால் சபை கலைக்கப்பட்டது. மக்கள் கர்ணனைப் புகழ்ந்து கொண்டே வீட்டுற்குத் திரும்பினர்.

பகுதி எட்டு : துரோணர்
சண்டை அப்போதே நடந்திருந்தா, நமக்கும் ஒரு முடிவு தெரிஞ்சிருக்கும்..... வில் வித்தையில் அர்ஜூனன் பெரியவரா, இல்லை நம்ம கதா நாயகன் பெரியவரா-ன்னு...
எப்போதுமே வந்து துரோணர் ஏன் அர்ஜுனனுக்கே சப்போர்ட் பண்றாரு... ஏன் வந்து வில் வித்தையில வேற யாரையுமே மேல வர விட மாட்டேன்றாறு??? இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாவே இருந்தது. அப்புறம் வழக்கம் போலே எங்க அப்பாவை தொல்லை பண்ணி (நச்சி, நச்சி... என் நச்சு தாங்க முடியாம) அவர் ஒரு நாள் இந்தக் கதையை சொன்னாரு.
மொதல்ல, ஏகலைவனை பார்த்தாரு. அவரோட வில் வித்தையை பார்த்ததுக்கு அப்புறம், எங்கே இவன் அர்ஜுனனுக்கு போட்டியா வந்துடுவானோ-ன்னு அவரோட கட்டை விரல, குரு தட்சினையா வாங்கிட்டாரு.
அடுத்ததா நம்ம ஹீரோ வை பாக்கறாரு இங்கே அவரோடையும் நடக்குது தகராறு.... என்னதான் இருக்கு இதுக்கு பின்னாடி... அப்டீன்னு தான் என் கேள்வி...
இதோ எங்க அப்பா சொன்ன பதில் உங்களுக்காக...
துரோணர் முதலில் ஒன்றும் பிரசித்தி பெற்றவர் எல்லாம் இல்லையாம். ஏழ்மையான குடும்பம். ஒரு சமயம், பரசுராமர், ஷத்ரியர்களிடம் இருந்து கைபற்றிய நாடு நகரங்களை எல்லாம் பிராமணர்களுக்கு தானம் பண்றதா கேள்விப் பட்டு, அங்கே போனாராம் இவர்.
அப்போ, எல்லாம் முடிஞ்சு போய், வெறும் அஸ்திரங்கள் மட்டும் தான் பரசுராமரிடம் மீதம் இருந்ததாம். அவற்றை துரோணருக்கு அளித்து, அஸ்திரங்களை பிரயோகிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தார் பரசுராமர்.
தவசீலரான கிருபாச்சாரியாரின் தங்கையை மணமுடித்து... வாழ்ந்து வந்தனர் இருவரும். அசுவத்தாமன் பிறந்ததும், தன் பால்ய சிநேகிதனான, துருபதனை சந்திக்கச் சென்றார். மன்னனான துருபதன், ஏழை துரோணரின் நட்பை ஏற்க மறுத்தார். அவரை மதியாது அவமதித்தானாம்.
முனிவர்களும், ஆச்சாரியர்களும், வேத கல்வியுடன், கலைகள் அனைத்திலும் தேர்ந்து அவற்றின் பெருமையை காப்பதுடன், அடுத்த தலைமுறைக்கும் அவைகளைக் கற்றுத் தரும் பொறுப்பை ஏற்றவர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஏற்றத்திற்கும் இவர்களின் பங்களிப்பும், வழி நடத்துதலும்... மிகவும் முக்கியம். எனவே தான் துருபதன் தேசத்திருக்கு, துரோணர் சென்றார்.
ஆனா, ஒரு அரசருடன் நட்பு கொள்ள இன்னொரு அரசன் தான் தகுதியானவர்-ன்னு துருபதன் அவமானமா பேசி இவரை வெளியே அனுப்பினார்.
அப்போ துரோணாச்சாரியார் ஒரு முடிவு பண்ணினார்...
அரசிருக்கும் அகந்தையில்
மமதை உன் சிந்தையில்
என் மாணவன் ஒருவனைக்
கொண்டு உனக்கு நான்
உண்மை உரைப்பேன்
ஒரு நாள்.... என.....
மனைவி மற்றும் மகனுடன், கிருபாச்சாரியாரிடமே தஞ்சம் புகுந்தார். அப்போதுதான், அவரது வித்தைகளையும், திறமையும் கேள்வியுற்ற பீஷ்மர் இவரை தன் பேரக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்குமாறு வேண்டினார்.
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டும் இன்றி தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் கற்றுத் தந்தார். என்ன இருந்தாலும் மகன் அல்லவா?? அதனால் தனிக் கவனம் மற்றும் பாராட்டுதல்கள் அஸ்வத்தாமனுக்கு இருந்தன.
அதைக் கண்டு பொறாமை உற்ற அர்ஜூனன், எப்படியும் ஆசிரியரின் உள்ளத்தில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என வெறியுடன் இருந்தான்.
கடும் பயிற்சி மேற்கொண்டு அவர் உள்ளத்தில் இடம் பிடித்தான். அந்த குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவனாக அர்ஜூனன் இருந்தான்.
இங்குதான், இந்த சமயத்தில் தான் துரோணர் எகலைவனை சந்தித்திருக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை தட்சினையாய் பெற்றுக் கொண்டார்.
காலங்கள் உருண்டன. பயிற்சிகள் முடிந்ததும், குருதட்சினை தர பாண்டவர்கள் முன்வருகையில், துரோணர் கேட்ட குருதட்சினை இதுதான். அதுவும் அவரது பிரிய மாணவன் அர்ஜுனனிடம் “துருபதனை, போரில் வென்று என் முன்னே கொண்டு வந்து நிறுத்து” என்பதுதான். அவர் விருப்பத்தை அவ்வாறே நிறைவேற்றினான் அர்ஜூனன்.
அர்ஜுனனுடன் போரில் தோல்வி அடைந்த துருபதனை பார்த்து, அரசரும், அரசரும் தான் நட்பாய் இருக்க முடியும் என்றாயே... நான் இப்போது ஒரு அரசன், உன் ராஜ்ஜியம் என்னுடையது. இப்போ நாம் நட்பு கொள்ளலாமா?? என்று கேட்க வேறு செய்திருக்கிறார்.
வெட்கித் தலைகுனிந்த துருபதன், அவமானத்துடன் நாடு திரும்பினான். அவனுக்குப் பாடம் புகட்டியதாக சந்தோஷப்பட்டார் துரோணர்.
நட்பை நல்ல வழியில் புதுப்பித்து சிறப்பாய் இருந்திருக்கலாம் அதை விடுத்து பகையை மேலும் வளர்த்து விட்டார்.
மேலே நீல நிறம் மாறி உள்ள வரிகள், நான் கேள்விப்பட்ட நிகழ்வுகள். கூடவே தினகரனின் வலைத்தளத்தில் எப்போதோ ஒரு பதிவாய்க் கண்டது. அது தவறு போலும்...
இவை கீழே சொன்னவாறு தான் நடந்ததாக... காந்தா மா அவர்கள் சொன்னார்கள். அதன் படி...
போரில் தோல்வி அடைந்த துருபதனை நோக்கி..
"செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார். செல்வம் கடைசி வரை நில்லாது என்பதை உணர்ந்து ஆணவத்தை விட்டு அடக்கத்தைக் கடை பிடி என அறிவுரை சொல்லி, உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன், நாம் நட்பைத் தொடரலாம்" என்று கூறி துருபதனை அவன் நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்
ஆனால்..துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்

பகுதி ஒன்பதில் ஒன்று : துருபதன் கோபம்
துரோணரின் மீது பல மடங்கு கோபம் கொண்ட துருபதன், துரோணரை வெல்ல தனக்கு ஒரு புத்திரன் வேண்டி ஒரு வேள்வியை ஆரம்பித்தானாம்.
அது சௌத்ராமணி என்ற வேள்வியாம்
அந்த வேள்விதீயிலிருந்து அக்கினி போன்ற முகமும் பயப்படத்தக்க உருவமும் கொண்டு கத்தி, வில், அம்பு , கவசம் ஆகியவற்றுடன் ஓர் ஆண்மகன் தோன்றினான்
அப்போது ஒரு அசரீரி எழுந்து இவன் துரோணரின் சீடனாக வளர்ந்து அவருக்கே யமனாக மாறுவான். இவனால் பாஞ்சால தேசம் புகழ் பெறும் என்று ஒலித்தது.
அதன் பின் மீண்டும் மந்திரம் கூறி அக்னியில் அவிர் சொரிந்தபோது யாககுண்டத்தில் கரிய மேனியுடன் கூடிய அழகும், தாமரை இதழ்கள் போன்று கண்களும் கொண்டு ஒரு பெண் எழுந்து வந்தாள். அரசகுலத்திற்கே படு நாசம் விளைவிக்க போகும் பாஞ்சாலி இவளே என்று கூறியது அசரீரி.
ஆணுக்கு திஷ்டத்துய்மன் என்றும் பெண்ணுக்கு திரௌபதி என்றும் பெயரிட்டனர்.
திஷ்டத்துய்மன் துரோணரிடம் சீடனாக சேர்த்தான். துரோணர் தமது ஞானதிருஷ்டியால் திஷ்டத்துய்மன் என்று தெரிந்து கொண்டபோதிலும் எதிரி என்று எண்ணி மறைக்காமல் அனைத்து வேதங்களையும் நன்கு உபதேசித்தார். முடிவில் இந்த திஷ்டத்துய்மன் கையாலே அவர் மரணம் அடைந்தார் எனப் போகிறது பாரதம்.
பகுதி ஒன்பதில் இரண்டு : கர்ணனும், பானுமதியும்:
இனி நாம் நம் கதையின் நாயகனைப் பற்றிப் பாப்போம். இதை பற்றிய தகவல்கள் அதிகமாய் எங்கும் இல்லாததால், இணையத்திலும் கூட..... இந்தப் பகுதி கர்ணன் திரைப்படத்தை தொட்டவாறு இருக்கும்.. கொஞ்சம் என் கற்பனையும்....
துரியோதனன் தன் நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே... தன் மன்னவன் தன்னை தவிர அனைத்தையும் சிறப்பாய் கவனிப்பதாய் தன் தோழியிடம் “பானுமதி” குறை கூறிக் கொண்டு இருக்கிறார்.
அன்னையைக் காண்பார், அவர் தந்தையைக் காண்பார்,
தன் சோதரர்கள் அனைவரையும் காண்பார், தன் மண்ணைக்
காண்பார், அதன் மக்களைக் காண்பார்... அனைத்தையும்
சிறப்பாய்க் காண்பார்... என்னைக் காண மட்டும் வேளை
இல்லையா அவருக்கு....
(ஏனடி தோழி கேள் ஒரு சேதி என ஒரு பாடல் வரும் கர்ணன் படத்தில்)
அப்போது உள்ளே நுழைகிறார்கள் இருவரும். புதிய ஒரு ஆண்மகனைக் கண்ட நாணத்தில் பானுமதி உள்ளே செல்ல விழைய, அவளைத் தடுத்து, கர்ணனை அறிமுகப் படுத்துகிறான் துரியோதனன்.
(கர்ணன் படத்தில் இந்தப் பாடல் முடியும் வேளையில் இவர்கள் இருவரும் வர, பானுமதி ஓட, அவர் பின்னே செல்லும் துரியோதனன், கூடவே கர்ணன்... அந்த உரையாடலை நான் மிக ரசித்தேன்... உங்களுக்காய் அதையும் பதிக்கிறேன்)
கர்ணன் : நிற்கக் கூடாத பாடல் நின்று விட்டது...
(பானுமதி யார் இவர் என ஒரு பார்வை பார்க்க.....)
துரியோதனன் : பானமதி யார் இவர் என்ற பார்வை வேண்டாம்.... அவர் சொன்னதற்கு சரியான ஒரு பதிலை நீ கூற வேண்டும்..
பானுமதி : நிற்கவில்லை... நின்று கொண்டே தொடர்கிறது....
கர்ணன் : புரியவில்லையே... பாட்டு எங்கே தொடர்ந்தது.... இங்கே யார் பாடினார்கள்???
பானுமதி : தாங்கள் இப்போது பேசவில்லையா???
துரியோதனன் : பலே... பார்த்தாயா நண்பா.. உன் பேச்சையே பாட்டாக்கி விட்டாள் ..... என் மனைவி...
கர்ணன் : பேசிய நான், இந்தப் பேச்சை கேட்டு நான் நாணி விட்டேன் நண்பா... பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்...
துரியோதனன் : ஆஹா இதல்லவோ.. பேச்சு... ம்ம்ம்ம் நிற்பது தொடரட்டும்....
பானுமதி : வேண்டாம். ஆசனத்தில் அமரட்டும் ....
கர்ணன் : ஆஹா நல்ல சிலேடை....
பானுமதி : தாங்கள், இவர் யார் என சொல்லவே இல்லையே....
துரியோதனன் : இவன்.. கர்ணன்.. என் உயிர் நண்பன், கௌரவர்களின் மானத்தைக் காக்க, மண் மீது தோன்றிய மாவீரன். சூரியனைப் போல பிரகாசித்து, எதிரிகளை களத்தில் சூறையாடும் வல்லமை கொண்டவன். தயாள சிந்தனை, இரக்க குணம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவன். உன் அண்ணன்.
(கர்ணன் தன்னை பற்றித் தன் நண்பன் சொன்னதைக் கேட்டு பெருமிதத்தால் பூரித்து கண்கள் கசிய.. பானுமதிக்கு முகமன் சொல்கிறான்)
பானுமதி : அண்ணா, தங்களின் உறவும், நட்பும் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
அப்போது அங்கே வரும் சகுனியுடன் கர்ணனை அங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கிறான் துரியோதனன். கூடவே அன்பான வேண்டுகோளுடன்.
அங்கே சென்று பட்டமேற்ற பின் இங்கே வந்துவிடு நண்பா, நாடுதான் உனக்கு அது... வீடு இதுதான்.... நானும் உன் தங்கையும் உனக்காய் காத்திருப்போம் என்கிறான்.
கர்ணனுக்கு... பிறப்பில் இருந்தே... மற்றவருக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்ற கருத்து மனதிலே இருந்தாலும்... தன்னையும் ஒரு அரசனாக... தன்னையும் ஒரு மனிதனாக... திறமை கொண்ட வீரனாக மதிக்கும் துரியோதனின் பால் எல்லை இல்லா பிரியமும்.. நேசமும், நட்பும் அவன் உள்ளத்துள்ளே பொங்கி அவன் நெஞ்சை நிறைத்தன.

- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நட்புடன் நான் - வேணி மோகன்
» ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

» என் சகோதரி வேணி மோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6