புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
60 Posts - 48%
heezulia
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_m10தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 05, 2011 3:20 pm

ஈழம் என்றால் என்ன ?

ஈழம் என்றால் நாம் நினைப்பது போல தமிழீழமோ அல்லது தனிநாடோ இல்லை. உண்மையில்
இலங்கைத் தீவு முழுவதையும் சுட்டுவதற்காக பண்டையத் தமிழர்கள் குறிப்பிட்ட
சொல்லே ஈழம் என்பதாகும். ஈழம் என்பது சிங்கள ஹெல ( HELA ) என்ற சொல்லில்
இருந்து வந்ததாக சிங்கள ஆய்வாளர்களும். ஹெல என்ற சொல் தான் தமிழ் ஈழம் என்ற
சொல்லில் இருந்து வந்ததாக தமிழ் ஆய்வாளர்களும் முரண்படுகின்றார்கள்.

தமிழ் ஈழம் என்றால் என்ன ?

தமிழ் ஈழம் என்றுக் கூறுவது தமிழ் மொழி பேசப்படும் ஈழப் பகுதிகளாகும்.
தமிழ் ஈழம் எனப்படும் சொல் 1950-களுக்கு முன் எழுதிருக்கவில்லை என்பதும்
நினைவில் வைக்கத் தக்கது. தமிழ் ஈழம் எனில் அது இலங்கையின் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களையே இன்றளவும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. காரணம்
இந்த இரு மாகாணங்களில் அதிகப் படியான மக்கள் பேசும் மொழி தமிழாகும். [
வடக்கில் - 99 சதவீதம், கிழக்கில் - 78 சதவீதம் தமிழ் மொழி பேசப்படுகின்றது
].

ஈழத் தமிழர்கள் யார் ?

ஈழத் தமிழர்கள் என நாம் சொல்லப் போனால் ஒட்டு மொத்த ஈழத்தில் ( SRI LANKA )
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் ஈழத் தமிழர்களே ஆவார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும், இன்ன பிற அரச காரியங்களிலும் தமிழர்களை
பல்வேறு பிரிவுகளாக இலங்கை அரசுப் பிரித்து வைத்துள்ளது என்பதே உண்மை.

எத்தனைப் பிரிவுகள் ?

மொழி ரீதியாகப் பார்ப்பின் இலங்கையில் இரண்டு மொழி பேசுவோரே அதிகமாக
இருக்கின்றன. அவர்கள் தமிழ் மற்றும் சிங்களம். ஆனால் இலங்கையின் குடிமக்கள்
கணக்கெடுப்பில் தமிழ் மொழி பேசுவோரைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து
வைத்துள்ளனர். அவர்கள் இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கை
முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள் ( 1981-க்குப் பிறகு, இவை இலங்கை
முஸ்லிம்களோடு இணைக்கப்பட்டுவிட்டது). இதர ஆகும்.

இதர என்பதில் இருப்போர் யார் ?

இதர என்பதில் இருக்கும் பிரிவுகளில் மலாயர், பேர்கர் தவிர்த்து ஏனைய
கொழும்புச் செட்டிகள், பரதவர்கள் ஆகியோர் தமிழ் வம்சாவளியினர் ஆவார்கள்.
இருப்பினும் அவர்களைத் தமிழர்கள் என்பதில் அடக்க இலங்கை அரசு
தீர்மானிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் யார் ?

இலங்கைத் தமிழர்கள் எனப்படுவோர் பெரும்பாலும் வடக்கு, கிழக்கு மற்றும்
புத்தளம் மாவட்டம், நீர்கொழும்பு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட
தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் 18-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து அங்கே
வாழ்ந்துவருபவர்கள் ஆவார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் யார் ?

இலங்கை முழுதும் பரவி வாழும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இலனை
முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். இவர்கள் 18-ம் நூற்றாண்டுக்கு முன்னரே
இலங்கையில் வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள். பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள்
திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார் ஆகிய தமிழ்
பகுதிகளிலும். கண்டி, மாத்தளை பொலனறுவை, அனுராதபுரா, குருனேகல, கீகல,
கொழும்பு, கம்பஹா ஆகிய சிங்கள பகுதிகளிலும் வாழ்கின்றார்கள்.

இந்திய முஸ்லிம்கள் யார் ?

ஆங்கிலேயர் காலத்திலும், அதன் பின்னரும் இந்தியாவில் இருந்து குடியேறிய
முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்கள் எனப்பட்டனர். இவர்கள் 1953-யில் 48,000
பேரும், 1962-யில் 55,000 பேரும் இருந்தனர். 1981-யில் இவர்கள் இலனை
முஸ்லிம்கள் என்னும் பிரிவினுள் இணைக்கப்பட்டுவிட்டனர்.

இந்தியத் தமிழர்கள் யார் ?

18-ம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு
குடியேறியத் தமிழர்களும், அவர்களின் வம்சாவளியினரும் இந்தியத் தமிழர்கள் என
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மலைகளில் உள்ள எஸ்டேட்களில்
பணியாற்றியவர்கள். இவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி நுவரெலியா (
மாவட்டத்தின் 60 சதவீத மக்கள் தொகை ), கண்டி, பதுளை, இரத்தினபுரா, கீகல,
மாத்தளை ஆகிய சிங்களப் பகுதிகளிலும். வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய
தமிழ்ப் பகுதிகளிலும் வசிக்கின்றார்கள்.

வடக்கு இந்தியத் தமிழர்கள் ?

வடக்கு மாகாணத்தில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழர்களோடு கலந்துவிட்டனர் என்றே எண்ணவேண்டியுள்ளது.

முகம்மது ஆசிக்குக்கான பதில்கள் :

Q : 'சிங்கள-இலங்கை', 'தமிழ்-ஈழம்...' & "முஸ்லிம்-ஈழஸ்தான்..."
என்று மூன்று தனித்தனி அரசுகளாக ஆகட்டுமே..? என்ன கெட்டுவிடும் இப்போது..?



இங்கே தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு
மட்டும் என நினைப்பது அறியாமை ஆகும். தமிழ் ஈழம் என்பது ஒட்டுமொத்த
இலங்கையில் இருக்கும் தமிழ் மொழி பேசுவோருக்கும் என்ற கருத்தியலில் சிங்கள
மொழி பேசுவோருக்கு எதிராக எடுத்து வரப்பட்ட கொள்கை ஆகும். தமிழ் ஈழம்
என்பது வெறும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமே என்றாலும், வடக்குத்
தமிழர்களுக்கு மட்டுமே என்றாலும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மட்டுமே
என்றாலும் கேலிக்குறியதாகிவிடும் என்பதை மறக்கக் கூடாது. இப்படி
நினைத்துதான் தமிழ்ப் புலிகள் உட்பட சில அமைப்புக்கள் ஏனையோரை
ஓரங்கட்டினார்கள் என்பதும் உண்மை. அதனால் அவர்கள் அடைந்த பயன் என்ன
என்பதையும் யாவரும் அறிவார்கள்.

தமிழீழம் என்றால் என்ன & அது யாருக்கு ?

தமிழீழம் என்றதுமே அது தனிநாடு என்ற எண்ணத்தில் சிங்களவர் மற்றும்
தமிழர்கள் எண்ணியதன் விளைவே உச்சக்கட்ட போருக்கான காரணம் ஆகும். உதா.
இப்படி எடுத்துக் கொள்வோம். இலங்கைத் தீவானது இந்தியாவின் அங்கமாக
இருந்தால் என்ன நடந்திருக்கும். மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டு
இருக்கும். அப்போது இலங்கையின் தமிழர்கள் வாழ்ந்த மாவட்டங்கள்
பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடனோ அல்லது ஒரு தனிமாநிலமாக ஆக்கப்பட்டு
இருக்கும். அப்போது அந்த தனிமாநிலம் ஈழத் தமிழ்நாடு என்றோ அல்லது தமிழ்
ஈழம் என்றோ அழைக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் மாநிலப் பிரிப்பின் போது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் - அது
மொழி வழியாகப் பிரிக்கப்பட்டது, மதவழியாக அல்ல. அது காலம் காலாமாகத் மக்கள்
வாழ்ந்த நிலத்தை இணைத்து நடந்தது, அண்மையக் குடியேற்றங்களை கருத்தில்
எடுக்கவில்லை. அப்படிப் பார்த்தால் இலங்கை மொழிவாரி மாநிலமாக
பிரிக்கப்பட்டு இருந்தால் - தமிழ் பேசும் காலம் காலமாக வாழ்ந்த வடக்கு
கிழக்கு தனி மாநிலமாகவும். பிற சிங்களப் பகுதிகள் இன்னொரு மாநிலமாகவும்
இருந்திருக்கும் அல்லவா?

இப்படிசி சிந்தித்துப் பார்த்தால் தமிழீழம் என்ற CONCEPT-ஐப் புரிந்துக்
கொள்ளலாம். ஒன்றுப் பட்ட இலங்கைக்குள்ளும் ( என்று வைத்தால் கூட ) இதே
கருத்தியலில் தான் செயல்படவேண்டி வரும்.

முஸ்லிம் ஈஸ்தான் & மலையகத் தமிழ்நாடு ?

முகம்மது ஆசிக் முஸ்லிம் ஈழஸ்தான் அமைந்தால் என்ன எனக் கேட்டார். தமிழீழம்
என்றக் கருத்தியலே அனைத்து தமிழ் பேசுவோருக்குமான ஒன்றாகும். அப்படி
இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்கள் தனித்தனி இனமாகிவிட்டனர்.
இருவரும் சேர முடியாது தனி மாநிலம் ( அல்லது நாடு ) தான் வேண்டும் என்றால்.
இதே அளவீடு இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குப் பொறுந்தும் அல்லவா?
அப்படியானால் அவர்களும் மலையகத் தமிழ்நாடு என்ற ஒன்றைக் கோரலாம் ( சிலர்
கோரியுள்ளார்கள் ). இது எப்படியான சிக்கல்களை உருவாக்கும் என்பதை நாம்
ஆராய்ந்துப் பார்க்கவேண்டும்.

என்ன சிக்கல்கள் வரும் ?

முஸ்லிம் ஈழஸ்தான் என்ற ஒரு கொள்கையை ( சும்மாவேணும் ) ஏற்றுக் கொள்வோம் என
வைத்துக் கொள்வோம். ஒரு மாநிலம் உருவாக முதலில் எது தேவை - ஒரு
நிலப்பரப்பு தேவை. முஸ்லிம் ஈழஸ்தான் என்ற மாநிலமாக இலங்கையின் எந்த
நிலப்பரப்பை கோரமுடியும். இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திலும்
இலங்கை முஸ்லிம்கள் அதிகமாக வாழவில்லை என்பதே உண்மை. அவர்கள் செறிவாக
வாழும் ஒரே மாவட்டம் அம்பாறை அங்கு கூட 40 சதவீத மக்கள் தொகையினரே
முஸ்லிம்கள். ஏனையோர் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஆவார்கள். அங்கு அவர்கள்
வாழும் பகுதியை ஈழஸ்தான் ஆக்குவோம் என வைத்துக் கொள்வோம். அவற்றில் எத்தனை
ஊராட்சியினை ஈழஸ்தானில் இணைக்க முடியும். ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்துக்கு
இடையில் பற்பலத் தமிழ் கிராமங்கள் இருக்கின்றன. யதார்த்தத்தில் இவை
சாத்தியப்படுமா ? என யோசிக்க வேண்டும்.

அப்படி ஈழஸ்தான் என சிலவற்றை இணைத்து உருவாக்கினால் - ஏனைய முஸ்லிம்கள்
என்னாவார்கள். அவர்களின் கிராமங்களும் காலம் காலமாக வாழ்ந்த வாழ்விடங்களும்
அநாதையாக்கப்படும். குறிப்பாக மன்னார் மற்றும் மட்டக்களப்பில் பல தமிழ்
ஊர்களுக்கு நடுவிலேயே முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. அவர்களின் நிலைமையை
மூளை இருப்பவன் எவனும் யோசித்துப் பார்ப்பான். அதே போல பல சிங்கள
கிராமங்களுக்கு இடையில் இருக்கும் முஸ்லிம் கிராமங்களின் நிலை என்னவாகும்.

இது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதே நிலைதான் மலையகத் தமிழ்நாடு என்ற ஒன்றைக் கோரினாலும் நடக்கும் என்பதை
பலரும் உணர்வார்கள். பல மலையகத் தமிழ் கிராமங்களுக்கு நடுவில் சிங்கள
கிராமங்களும், சிங்கள கிராமங்கள் பலவற்றுக்கு நடுவில் மலையகத் தமிழ்
கிராமங்களும் இருக்கின்றன.

கிழக்கு மாகாணமே தமிழ் ஈழத்துக்கு ஆப்பு ?

தமிழ் ஈழம் என்ற CONCEPT வெறும் வடக்கு மாகாணம் என்ற ஒன்றை மட்டுமே வைத்து
கேட்டிருந்தால் - இன ரீதியாக அது வெற்றியளித்து இருக்கும். ஆனால் தமிழ்
ஈழம் என்பது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியது. கிழக்கு என்பது
பொஸ்னியா-ஹெஸ்ரகோவினாவை விட சிக்கலான ஒரு பிரதேசமாகும். அங்கு தமிழ் -
சிங்கள - முஸ்லிம் கிராமங்கள் கலந்து கலந்து இருக்கின்றன. ஒவ்வொன்றையும்
தனித் தனியேப் பிரிப்பது நடக்காத காரியம். ஆனால் அவற்றில் ஒரே ஆறுதல் தமிழ்
பேசும் பகுதிகள் கடற்கரையோரங்களாகவும், சிங்களம் பேசும் பகுதிகள் உள்ளே -
சிங்கள மாவட்ட எல்லைகளிலும் இருக்கின்றன்.

இவ்வாறாக சிங்கள - தமிழ் எனப் பிரிக்க முன்பு சில முயற்சிகள் நடந்தன. ஆனால்
அவை யாவும் தமிழ்ப் புலிகள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ஆதரவுகள் இல்லாதபடியால் தோல்விக் கண்டன எனலாம்.

முகமது ஆசிக்கின் கூற்றுப்படி முஸ்லிம்கள் அதிகமுள்ள ஊராட்சி ஒன்றியங்களை
இணைத்து ஈழஸ்தான் அமைத்தால் கீழ்கண்ட நிலவரையில் பச்சையாக இருக்கும்
இடங்கள் மட்டுமே இணைக்க முடியும். இது எப்படி சிக்கல்களை உருவாக்கும்
என்பதை உணரலாம்.

அதே போல திருகோணமலை மாவட்டத்தின் நிலவரையில் சென்றுப் பாருங்கள் - சிங்கள -
தமிழ் - முஸ்லிம் கிராமங்கள் எப்படி கலந்து கலந்துள்ளன என்று.

அதே போல பல்லாயிரம் முஸ்லிம்கள் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் தமிழ்
கிராமங்களுக்கு இடை இடையிலும், கலந்து வாழ்கின்றார்கள். அவர்களின் நிலைமை
என்னவாகும். அவர்கள் பிரிந்து போக நினைத்தாலும் - புவியியல், வாழ்வியல்
எனப் பல காரணங்களால் தமிழர்களோடு இணைந்தே வாழ வேண்டிய சூழல் இருக்கின்றது.
இதனையும் முகமது ஆசிக் தவறாகப் புரிந்துக் கொண்டு என் மீது பொங்கி
எழுந்துள்ளார்.

தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Tamil+divisions
படம் 1:வடக்குக் கிழக்கில் இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள். ( சிவப்பில் ).
வடக்குக் கிழக்கில்
இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள். ( சிவப்பில் ).
இவற்றில் வடக்கு தவிர்த்து ஏனையப் பகுதிகள் பிரிந்து பிரிந்ததே
இருக்கின்றன. முஸ்லிம் மக்களின் ஆதரவும் , ஒற்றுமையும் இல்லாமல் கிழக்கில்
இருக்கும் பகுதிகளை வடக்குப் பகுதிகளோடு இணைந்து ஒரு மாநிலமாக்குவதோ ( தனி
நாடு ஆக்குவதோ ) இயலாத காரியம். ஆகையால் வடக்கு ஒரு தனித் தமிழ்
பகுதியாகவும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு தனித் தமிழ்
பகுதியாகவும், ஏனைய பகுதிகள் தமிழ் - முஸ்லிம் கிராமங்களாக கலந்தும் உள்ளன.
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Lanka+muslim+divisions
படம் 2:வடக்குக் கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள்( பச்சையில் )
முகம்மது
ஆசிக் கோரிய ஈழஸ்தானம் இப்படித் தான் இருக்கும். முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை இணைத்தால் வருவதை பச்சையில் குறியிட்டு
உள்ளேன். இவற்றில் அம்பாறை பகுதியில் சில ஊர்களைத் தவிர ஏனையவை அனைத்தும்
பிரிந்தே இருக்கின்றன. அம்பறையிலும் கூட ஒரு தொகுதி மற்றொரு தொகுதியோடு
தொடர்பில்லாமல் இருக்கின்றன.


அத்தோடு இல்லாமல் மட்டகளப்பு
மற்றும் மன்னார் பகுதிகளில் பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர்களின்
கிராமங்களுக்கு இடையில் இருக்கின்றன. முஸ்லிம்கள் விரும்பினாலும்,
விரும்பாவிடினும் - அந்த கிராமங்கள் தமிழ் கிராமங்களோடு ஒட்டித் தான் வாழ
முடியும். தனித்தனியாகப் பிரிப்பது இயலாத காரியம்.
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Indian+divisions
படம் 3:இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள்( நீல நிறத்தில் )
இலங்கையில்
இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமக்கான ஒரு மாநிலத்தையோ ( நாட்டினையோ )
உருவாக்க விரும்பினால் அது இப்படித் தான் இருக்கும். இந்திய வம்சாவளித்
தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை இணைத்தால் அது இப்படித் தான்
இருக்கும் ( நீல நிறத்தில் ). இவற்றில் நுவரெலியா மாவட்டம் தவிர்த்து ஏனைய
பகுதிகள் தனித்தனியாக பிரிந்துள்ளன.


இந்தப் பகுதிகள் அனைத்தும்
பாரம்பரிய சிங்கள நிலங்களில் தமிழர்கள் குடியேறினார்கள். அதனால் இவற்றில்
உரிமைக் கோருவதை சிங்கள மக்கள் துளியும் விரும்ப மாட்டார்கள். LAND LOCKED
பகுதிகளான இவை தனிநாடாக மாறுவதெல்லாம் நடக்காத காரியம். அது மட்டுமின்றி பல
ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிங்கள மக்களோடு கலந்து வாழ்வதால் -
இப்படியானக் கோரிக்கைகள் பெரும் பிணக்குகளைத் தான் ஏற்படுத்தும்.
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Sinhala+divisions
படம் 4:வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள்( சந்தன நிறத்தில் )
வடக்கு
கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தாம் வாழும் பெரும்பான்மை பகுதிகளைப்
பிரித்து சிங்கள மாவட்டங்களோடு இணைய விரும்பினால். அது சாத்தியமே. காரணம்
ஒன்று அவை சிங்கள மாவட்டங்களின் எல்லைகளில் இருக்கின்றன. இரண்டு அவற்றில்
சில கிராமங்கள் சிங்கள பாரம்பரிய கிராமங்கள் - பல குடியேற்று கிராமங்கள்
ஆகும். மூன்று அரசியல் அதிகாரப் பலம் அவர்களின் கையில் இருக்கின்றன.


வடக்கு கிழக்கில் சிங்கள பெரும்பான்மை பகுதிகளை இங்கு சந்தன நிறத்தில் குறியிட்டுள்ளேன்.
தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?  Tamil+language+divisions
படம் 5:இலங்கையில் தமிழ் மொழி பேசுவோர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள்( மஞ்சள் நிறத்தில்)
இலங்கையில்
தமிழ் மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை மஞ்சள் நிறத்தில்
குறியிட்டுள்ளேன். இவை இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம், இந்திய
வம்சாவளியினர் பெரும்பான்மையான பகுதிகள் இவைகள் ஆகும். இவற்றில் இந்திய
வம்சாவளியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் சிங்கள பகுதிகளுக்கு
நடுவில் அமைந்துள்ளதால் - தமிழ் மாநிலம் ஒன்றை உருவாக்கும் போது அவற்றை
இணைப்பது சிரமம் ஆகும். அத்தோடு மட்டுமில்லாமல், அவை சிங்கள பாரம்பரிய
கிராமங்களில் குடியேறிய பகுதி என்பதால் உரிமைக் கோருதல் இயலாத காரியம்.


இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம்
தமிழர்கள் இணைந்து ஒரு மொழிவாரி மாநிலமாக ( அல்லது நாடாக ) தமது
பகுதிகளைக் கோரினால் அதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். காரணம் அவை ஒரேத்
தொடர்ச்சியான பகுதிகள் மற்றொன்று இவை தமிழ் மொழி பேசுவோரின் பாரம்பரிய
நிலங்கள் ஆகும்.


குறிப்பு : வடக்கில் வன்னியில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் - இலங்கைத் தமிழர்களோடு இணைத்தே கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
இப்போது சொல்லுங்கள் - இலங்கையில் எது சாத்தியம் ? எது சாத்தியமில்லை என்பதை ?

இலங்கைத் தமிழர்கள் மட்டும் எனில் அது வடக்கு + மட்டகளப்பு மட்டுமே சாத்தியம்.

இலங்கைத் தமிழர்கள் + இலங்கை முஸ்லிம்கள் எனில் அது வடக்கு + கிழக்கு - சிங்கள பகுதிகள் சாத்தியம்.

இலங்கைத் தமிழர்கள் + இலங்கை முஸ்லிம்கள் + மலையகத் தமிழர்கள் எனில் சிங்கள அரசியல் சட்டத்தினை திருத்த நிர்பந்திக்கும் சாத்தியம்.

இலங்கைத் தமிழர்கள் + இலங்கைத் தமிழர்கள் + இலங்கை முஸ்லிம்கள் + மலையகத்
தமிழர்கள் + மிதவாத சிங்களவர் எனில் சமத்துவ இலங்கை, அனைவருக்கும் உரிமை,
வடக்கு கிழக்கில் தமிழ் மாநிலம் சாத்தியப்படலாம்.


இவை அனைத்தும் ஆய்வுக்காக தொகுத்தவற்றில் இருந்து இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி:கொடுக்கி.நெட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக