புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
100 Posts - 48%
heezulia
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
7 Posts - 3%
prajai
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
cordiac
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
227 Posts - 51%
heezulia
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
18 Posts - 4%
prajai
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Barushree
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இரண்யகன் வரலாறு Poll_c10இரண்யகன் வரலாறு Poll_m10இரண்யகன் வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்யகன் வரலாறு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:11 pm

சீரும், சிறப்பும், வளமும் நிறைந்த ஒர் ஊர் உண்டு. ஊரின் வட எல்லையிலே பெரிய சிவன் கோயில் ஒன்று. இருக்கின்றது. அந்தக் கோயிலை ஒட்டி கோயிலின் ஒர் அங்கம் போல மடம் ஒன்று அமைந்திருக்கின்றது. அந்த மடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு பூடகர்ணன் என்ற ஒரு சன்யாசி வாழ்ந்து வந்தான்.

அந்த மடத்திலே ஒரு பக்கமாக இருந்த பெரிய வளையிலே இரண்யகன் என்ற சுண்டெலி தனது பரிவாரங்களுடன் வசித்து வந்தது.

பூடகர்ணன் அன்றாடம் உணவு நேரத்தில் தனது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு பிச்சைக்குப் புறப்படுவான்.

அந்த ஊர் மக்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாகவும், தரும சிந்தனை மிக்கவர்களாகவும் இருக்கும் காரணத்தால் பூடகர்ணனுக்கு நல்ல சுவையான உணவு வகைகளையும், மற்றும் இனிய கனிவகைகளையும் மனமுவந்து அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பூடகர்ணன் மடத்திற்குத் திரும்பிய பிறகு தான் பிச்சை மேற்கொண்டு வந்த உணவையும் பிற பண்டங்களையும் வயிறார உண்பான். எஞ்சியிருக்கும் உணவையும் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி சுவரின் உயரத்தில் இருந்த ஒரு ஆணியில் அந்தப் பாத்திரத்தை மாட்டி வைப்பான்.

இரவில் சன்யாசி உறங்கிய பிறகு இரண்யகன் என்ற சுண்டெலி அதன் குழுவினரும் வளையை விட்டு வெளிப்பட்டு சுவர் வழியாக மேலேறி பூடகர்ணன் தொங்கவிட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவையும், பிற தின்பண்டங்களையும் உண்டு மகிழ்ந்து பசியாற்றி பிறகு இருப்பிடம் திரும்பி வந்துவிடும்.

இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்தது.

மிச்சப்படுத்தி வைக்கும் உணவுப் பண்டங்கள் காணாமல் போய் விடுவதை பூடகர்ணன் கவனித்தான். அதற்கு இரண்யகன் என்ற சுண்டெலி அதன் பரிவாரத்தினருமே காரணம் என்பதையும் விளங்கிக் கொண்டான்.

அதனால் எங்களை அந்தப் பக்கம் வரவொட்டாமலும், உணவுப் பண்டங்களைத் தின்னாமலும் இருக்கச் செய்வதற்காக என்னென்னவோ முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்தான்.

பூடகர்ணன் எவ்வளவு சாமர்த்தியமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்; அவற்றை முறியடித்து அவன் மிச்சம் வைக்கும் உணவைத் தின்று நிம்மதியாகக் காலம் கழித்து வந்தது சுண்டெலிகள்.

ஒரு நாள் தவச் சிறப்பு மிக்க முனிவரான பிருகஸ்பதி, தல யாத்திரை செல்லும் வழியில் பூடகர்ணன் மடத்துக்கு வருகை தந்தார்.

பெருந்தவ முனிவரான பிருகஸ்பதி தனது மடத்துக்கு வருகை தந்ததை பெரும் பாக்கியமாகக் கருதிய பூடகர்ணன் அவரைப் பேரானந்தத்துடன் வரவேற்று உபசரித்து சில நாட்கள் அங்கே தங்கி களைப்பாறிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

பிருகஸ்பதியும் அவன் வேண்டுகோளை ஏற்று தங்க விருப்பம் கொண்டார்.

இருவரும் அன்று இரவு உணவை முடித்துக் கொண்டனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:11 pm

பூடகர்ணன் வழக்கம்போல மிச்சமிருக்கும் உணவை ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி, உயரே தொங்கிய உரியில் அந்த பாத்திரத்தை வைத்தான்.

பிறகு பூடகர்ணனும் பிருகஸ்பதியும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

பூடகர்ணனுக்கு தவ முனிவரின் பேச்சைக் கேட்பதை விட மிச்சம் வைத்திருக்கும் உணவை சுண்டெலிகள்யிடம் காப்பாற்றுவதில் தான் அதிக நாட்டம் இருந்தது.

அதனால் முனிவர் பேச்சை அரைகுறையாகக் காதில் வாங்கியவாறு ஒரு நீண்ட குச்சியினால் உரியில் இருந்த பாத்திரத்தைத் தட்டிக் கொண்டே யிருந்தான்.

பூடகர்ணனின் அந்தச் செயலுக்குக் காரணம் என்ன என்று விளங்காத பிருகஸ்பதி, பூடகர்ணன் தன்னை வேண்டுமென்றே அவமரியாதை செய்கிறான் என்று எண்ணிக்கொண்டு கடு்சினம் கொண்டார்.

பூடகர்ணா, உன்னுடைய நடவடிக்கைகள் என் மனத்தைப் பெரிதும் புண்படச் செய்கின்றது. எனக்குத் தங்குவதற்கு வேறு இடம் இல்லை என்று நான் இங்கே தங்க வரவில்லை. நீ வேண்டிக் கொண்டதால் தான் நான் தங்க முற்பட்டேன்.

ஒரு துறவிக்கு அறுசுவையுடன் உணவு படைப்பது பெரிய காரியம் அல்ல, ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி உப்பில்லாக் கூழ் இட்டால் கூட என் போன்றோர் அதனை அமுதமாக எண்ணி உண்போம்.

அன்புடன் வரவேற்று முக மலர்ச்சியுடன் உபசரித்து விருந்தளிக்காதவன் வீட்டில் உணவு கொள்ளுவதை விட கொடிய ந்சை மனமொப்பி உண்டு விடலாம்.

நீயோ என் வயிற்றுக்கு உணவு அளிப்பதில் காட்டிய அக்கறையை என்னை மனப்பூர்வமான அன்புடன் உபசரிப்பதில் காண்பிக்கவில்லை.

நீ விவரம் தெரியாத சாதாரணக் குடிமகனாக இருந்திருந்தால் கூட நீ என்னை அலட்சியமாக நடத்துவதை மன்னித்து விடுவேன். நீயும் என்னைப் போல ஒரு துறவி. ஒரு மடத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். இந்த நிலையில் ஓர்அதிதியை முறையாக உபசரிக்கும் பண்பு உன்னிடம் இல்லை. நீ உன்னைப் பற்றியும், உன்னுடைய நிலை குறித்தும் அளவுக்கு மீறி அகந்தையும் ஆணவமும் கொண்டிருக்கின்றாய் இனி உனது மடத்தில் ஒரு கணமும் தங்க மாட்டேன். இரவு நேரமாக இருந்தாலும் கவலைப்படாமல் இப்பொழுதே புறப்பட்டுப் போய் விடுகிறேன். உனது மடத்தை விட ஒரு குப்பைமேடு எனக்கு உயர்வாகத் தோன்றுகின்றது என்று கூறியவாறு பிருகஸ்பதி எழுந்தான்.

அவருடைய கடு் சினத்தை கண்டு பூடகர்ணனன் பதறிவிட்டான்.

பரபரப்புடன் எழுந்து முனிவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி தவமுனியே என்னை மன்னிக்க வேண்டும் உண்மைக் காரணத்தைத் தாங்கள் தெரிந்துக் கொண்டால் என்மீது கோபப்படாமல் அனுதாபமே கொள்வீர்கள்.

இங்கே ஒரு சுண்டெலி தனது பரிவாரத்துடன் வாழ்கின்றது. அந்த சுண்டெலியின் அட்டகாசத்தை என்னால் சகிக்க முடிவதே இல்லை. அன்றாடம் நான் மிச்சப்படுத்தி வைக்கும் உணவுப் பண்டங்களை சுண்டெலியும் அதன் கூட்டமும் தின்று தீர்த்து விடுகின்றன. இதனால் நானும் மடத்துப் பணியாளர்களும் பல சமயம் கடும் பட்டினியாகக் கிடந்து அவதியுற நேரிடுகின்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:13 pm

நாம் சற்று கவனக் குறைவாக இருந்தால் மிச்சமிருக்கும் உணவை எலி தின்று தீர்த்து விடும். நாளைக் காலையில் தங்களுக்கு உணவளிக்க எதுவுமே மி்சாது. தங்களை பட்டினி போடும் நிலை வந்துவிடக் கூடாதே என்ற கவலையினால் தான் ஒரு கழியினால் உணவுப் பாத்திரத்தைக் தட்டிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு செய்வதனால் தான் இதுவரை எலிக்கூட்டம் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இதுதான் தங்கள் பேச்சில் நான் முழுக் கவனம் வைக்க முடியாமல் போனதற்குக் காரணமே தவிர தங்கள் மீது நான் அலட்சியப்படுத்துவதாகத் தாங்கள் நினைப்பது சரியே அல்ல என்று கூறினான்.

அப்படியா ? அந்த எலியின் வளை எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா ? என்று கேட்டார் பிருகஸ்பதி.

தெரியாது சுவாமி. தெரிந்திருந்தால் அந்த எலி வர்க்கத்தை நிர்மூலப்படுத்தியிருப்பேனே என்று பூடகர்ணன் கூறினான்.

பிருகஸ்பதி அந்த மடத்தின் உட்புறம் நாலாபுறமும் கவனித்தார். ஒரு மூலையில் தானியம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

பிருகஸ்பதி பூடகர்ணனை நோக்கி அதோ தெரிகிறதே அந்தத் தானியக் குவியில் பக்கமாக எலி வசிக்கும் வளை இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த இடத்தில் எலி தேடி வைத்திருக்கும் உணவின் மணத்தின் காரணமாகத்தான் இந்த எலி இவ்வளவு அட்டகாசம் செய்கின்றது.

பணத்தைப் பற்றி நினைவு ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் கூட அவன் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பெற்று விடுகின்றான். வாழ்க்கையை முற்றிலுமாகத் துறந்து விட்ட துறவினால் கூட பணத்தின் மீது இருக்கும் பற்றினை நீக்க முடிவதில்லை இதே போன்று சுண்டெலி நல்ல வசதி வாய்ப்புடன் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றது என்று தோன்றுகின்றது. அதனால் தான் மிகுந்த உற்சாகத்துடனும் துணிச்சலுடனும் நீ வைக்கும் உணவை அபகரித்து தின்று விடுகின்றது.

பூடகர்ணா, எலி சேர்த்து வைத்திருக்கும் தானியக் குவியல்தான் அதன் அட்டகாசத்துக்குக் காரணம். அந்த எலி எவ்வாறு வருகின்றது ? என்று கேட்டார்.

அது தனியாக வருவதில்லை. கூட்டமாக வருகின்றது என்று பூடகர்ணன் பதில் சொன்னான்.

எலி வளையைப் பெயர்த்து தோண்டி எடுக்க உதவும் வகையில் ஏதாவது சாதனம் உன்னிடம் இருக்கிறதா ? என பிருகஸ்பதி கேட்டார்.

ஒரு சிறிய இரும்பு கடப்பாறை இருக்கிறது சுவாமி என்று பூடகர்ணன் பதிலளித்தாள்.

அதிகாலையில் எழுந்து எலியின் சுவடுகளைப் பார்த்துக் கொண்டே சென்றால் எலி வளை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து விடலாம். பிறகு வளையைத் தோண்டி எலிக் கூட்டத்தை நிர்மூலப் படுத்தி விடலாம். என்று பிருகஸ்பதி கூறினார்.

அவருடைய சொற்களைக் கேட்ட எலிகள் நடுநடுங்கி விட்டனா.

மிகவும் தந்திரசாலியான பிருகஸ்பதி எலிகள் சேமித்து வைத்திருக்கும் தானியக் குவியலைக் கண்டு பிடித்து விட்டதைப் போல தன் குடியிருப்பு வளையையும் நிச்சயம் கண்டு பிடித்து விடுவார். ஆகவே தன் அழிவு உறுதிப் பட்டு விட்டது என மிகவும் கவலையுடன் நினைத்துக் கொண்டது எலிகள்.

உலகத்தில் சில சாமர்த்தியசாலிகள் உண்டு. ஒரு பொருளை அவர்கள் கையில் எடுத்துப் பார்த்தார்களானால் சற்றும் பிசகாமல் அதன் எடையைச் சரியாகக் கூறி விடுவார்கள். இதே போன்று ஒருவன் முகத்தை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்த கனத்திலேயே அவன் குண இயல்புகளைத் துல்லியமாக மதிப்பிடும் ஆற்றல் சிலருக்கு உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:14 pm

இந்த பிருகஸ்பதி அத்தகை திறமைசாலி இவர் நிச்சயம் தன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அழித்து விடுவார் என்று எண்ணிக் கொண்டு வழக்கமாகச் செல்லும் வழியை மாற்றி தன் பரிவாரத்துடன் செல்லத் தலைப்பட்டது.

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல ஒரு பெரிய பூனை எதிரே வந்தது. தங்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அந்தப் பூனை தங்கள் மீது பாய்ந்து தங்களில் சிலரைக் கொன்று விட்டது.

மற்ற எலிகள் சிதறி ஓடி பழைய வளைக்குள் புகுந்துக் கொண்டன. தான் மட்டும் வெளியே தப்பியோடிவிட்டது இரண்யகன் என்ற சுண்டெலி.

மறுநாள் பிருகஸ்பதி வளையை அடையாளம் கண்டு அதனைக் கடப்பாறையால் தோண்டி அங்கு இரண்யன் படாத பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த தானிய மணிகளை அள்ளிக் கொண்டு போய் விட்டார்.

தன் செல்வத்தை இழந்ததால் சக்தி இழந்தவனாக ஆகிவிட்டது இரண்யன்.

மறுநாள் பூடகர்ணன் வைத்திருக்கும் உணவை உண்ணுவதற்காக மடத்துக்குச் வந்த இரண்யன்..

வழக்கம் போல தாவிக் குதித்து உணவுப் பாத்திரத்தின் மீது ஏற தன்னால் இயலவில்லை. தொத்தித் தொத்தி மேலேற முயன்றது.

பூடகர்ணன் தன் கைத்தடியினால் தட்டி எலியை விரட்ட முயற்சி செய்தான்.

வீணாக ஏன் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அவதிப்படுகிறாய் ? என்று பிருகஸ்பதி கேட்டார்.

அந்த துஷ்ட எலி மறுபடியும் வந்து விட்டது சுவாமி என்றான் பூடகர்ணன்.

பூடகர்ணா, கவலையை விடும். இனி அந்த எலி செத்த எலிக்கு சமம்தான். உன் உணவைப் பறித்து உண்ணும் அளவுக்கு இப்போது அதற்கு சக்தி கிடையாது ஏனெனில் இது தன் சொத்து அனைத்தையும் பறி கொடுத்து நிற்கின்றது. இந்த உண்மை இந்த எலிக்கு மட்டுமல்ல. உலகத்தில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தும்.

ஓர் உண்மையை நீ விளக்கிக் கொள்ளலாம். யாராவது ஒருவன் எந்த நேரமும் உற்சாகத்துடனும் இருக்கிறான் என்றால், பிறரைச் சற்றும் லட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் ஆணவத்துடன் செயற்படுகிறான் என்றால், மற்றவர்களை எப்போதும் அதிகாரம் செய்து மிரட்டுகிறான் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும். அவன் அதிக அளவுக்கு செல்வத்தைப் பெற்றவனாக இருப்பான்.

இவ்வாறு பிருகஸ்பதி கூறியதைக் கேட்ட எலிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் கூறுவது வெறும் பொய் வேதாந்தம் என்பதை நிரூபிக்கும் நோக்கத்தில் தன் சக்தி முழுவதையும் திரட்டிக் கொண்டு உணவுப் பாத்திரத்தை நோக்கித் தாவியது.

ஆனால் எலியால் உயர உரி மீது இருக்கும் உணவுப் பாத்திரத்தைத் தொடக் கூட முடியவில்லை.

எலி உணவுப் பாத்திரத்தை நோக்கித் தாவித் தாவி கீழே விழுவதைப் பார்த்து பிருகஸ்பதி அட்டகாசமாகக் சிரித்தார்.

பூடகர்ணா, இந்த எலியின் கதியைப் பார்த்தாயா ? இத்தனைக் காலமாக ஒரு பெரிய பரிவாரத்தின் தலைவனாக இருந்த எலி இப்போது மற்ற எலிகளைப் போல சாமானியமான ஒன்று ஆகிவிட்டது. வழக்கமாக ஒரு பெரிய கூட்டம் புடை சூழ வரும் இந்த எலி இன்று தன்னந்தனியாக வந்திருப்பதைக் கவனி. இனி இந்த எலியை அதன் கூட்டம் கொ்சங்கூட மதிக்காது. இதன் மனைவி மக்கள் கூட சட்டை செய்யமாட்டார்கள். பணத்தை இழந்து வறுமை வயப்பட்டு விட்ட ஒவ்வொருவருடைய நிலையும் இதுதான். விஷப்பல்லை ஒரு பாம்பு இழந்து விட்டால் அதைக் கண்டு யாரும் அச்சமடையமாட்டார்கள். மதநீர் இல்லாத யானை ஒரு பூனைக்குச் சமமாகத்தான் ஆகி விடும். இதே நிலைதான் பணமில்லாதவனுக்கும் ஏற்படும்.

பிருகஸ்பதியின் சொற்களில் இருந்த உண்மை எனக்குத் தெளிவாக விளங்கியது. பணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் ஒருவனுடைய வாழ்க்கை பாழான மாதிரி தான். ஓருவனிடம் சிறந்த கல்வித் தகுதியும், உயர்ந்த நற்குணங்களும் இருந்தாலும் அவனிடம் பணம் இல்லை என்றால் அவையெல்லாம் உலகத்தில் எடுபடவே மாட்டா. நல்ல வெளிச்சம் இருந்தால் தான் பொருட்கள் கண்களுக்குத் தென்படுவது போல, பணம் இருந்தால் தான் ஒரு மனிதனிடம் இருக்கும் சிறப்பு அம்சங்கள் மக்கள் கண்களுக்குப் புலப்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:14 pm

பூடகர்ணனின் உணவைத் திருடி உண்ணும் முயற்சியில் இரவெல்லாம் ஈடுபட்டுப் பார்த்துத் தோல்வியடைந்து பொழுது விடியும் போது தன் மறைவிடத்திற்குச் சென்றுவிட்டது. தன்;னிடம் செல்வம் இல்லை என்று தெரிந்த உடன் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருந்த தன் கூட்டத்தினர் தன்னை அவமரியாதை செய்யத் தலைப்பட்டு விட்டனர் கண்டுங்காணாமலும் தன்னை ஏசி நிந்தனை செய்யத் தொடங்கினர்.

நல்ல நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து வறுமை வயப்பட்டவர்கள் கூறும் சொற்களை யாரும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். உற்றார் உறவினர் அவர்களை அலட்சியம் செய்வார்கள். சாமானிய நிலையில் இருப்பவர்களும் அவர்களை வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் கேலி செய்வார்கள், நண்பர்கள் அவர்களை விட்டு விலகிப் போய் விடுவார்கள். மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கான பழி இவன் தலை மீது சுமத்தப்படும், நேற்று வரை நட்புறவுடன் பழகியவர்கள் எல்லாம் இன்று விரோதிகளாக மாறி விடுவார்கள்.

நேற்று வரை செல்வந்தனாக இருக்கும் போது இருந்த இதே மனிதன் தான் இன்று வறுமையாளனாக இருக்கின்றான். நேற்று இருந்த மதிப்பும் மரியாதையும் இன்று ஏன் இல்லாமல் போய்விட்டது. எல்லாம் பணமில்லாமை தான். செல்வத்தை இழந்தவன் மானத்தை இழந்தவனாகத் தான் கருதப்படுவான். இப்படிப்பட்ட நிலையில் பழகிய இடத்தில் தொடர்ந்து இருப்பதை விடத் பயங்கர தண்டனை வேறு இல்லை. வாழ்க்கையில் கெட்டுப் போனவன் இரந்து உண்ணும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

பிச்சையெடுத்து வாழ்வதை விட மரணத்தைத் தழுவுவது இன்பமானதாகும். பிச்சைக்காரன் ஆகி விட்ட ஒருவன் முதலில் தன் மானத்தை இழந்து விடுகின்றான். மானம் இழக்கப்பட்ட காரணத்தால் பெருந்தன்மை அவனை விட்டு விலகு விடுகின்றதது அவன் சிறுமை அடைந்து விடுகின்றான். சிறுமை காரணமாக மன வேதனை தரும் நிகழச்சிகளுக்கு அவன் இலக்காக நேரிடுகின்றது. இதன் காரணமாக அவன் துயரமடைகின்றான்.

துயரம் அதிகமாகும் போது அறிவு வேலை செய்வது இல்லை. அறிவு செயற்படவில்லை என்றால் அவன் மனிதத் தன்மையை இழந்து விடுகின்றான். இவ்வாறு வறுமையின் காரணமாகத் தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு இலக்காக நேரிடுகின்றது. உன்னுடைய வறுமை நிலை கண்டு பரிதாபப்பட்டு கர்வம் பிடித்த ஒருவன் அளிக்கின்ற உதவியை ஏற்பதை விட சீறுகின்ற பாம்பின் வாயில் கையை வைக்கலாம். கொடிய ந்சை அமுதமாக எண்ணிக் கொண்டு பருகி விடலாம்.

நண்பனே, நீ வறுமையில் வாடும் பரிதாப நிலைக்கு இலக்காகி விட்டால் தீக்குளித்து உன் உடலை அழித்துக் கொள்ளலாம். மறந்து கூட இரக்கமற்ற ஒருவனிடம் சென்று கையேந்தி நிற்காதே * பிறர் தரும் தானத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாழ்வதை விட மரணத்தைத் தழுவிக் கொள்வது மிகவும் உயர்ந்த ஒரு நிலையாகும்.

ஓன்று இழந்த தன் செல்வத்தை தான் திரும்பப் பெற வேண்டும். அல்லது மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து ஒருநாள் இரவு மடத்துக்கு எலி சென்றது..

மடத்தில் பிருகஸ்பதி முனிவர் எலியுடைய தானிய மணிகளை மூட்டையாகக் கட்டி தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

எலி மெதுவாகச் சென்று முனிவரின் தலையிலிருந்த தானிய மூட்டையில் துவாரமிட்டுத் தானிய மணிகளைத் திரும்பப் பெற முயன்றது.

உறக்கம் கலைந்து எழுந்த பிருகஸ்பதி முனிவரின் பார்வையில் எலி பட்டுவிட்டது. அருகில் வைத்திருந்த குண்டாந்தடியினால் எலி தலையில் அடித்தார் நல்ல வேளை அது சடுதியில் விலகி தப்பித்துக் கொண்டது. அந்த அடி அதன் மீது விழுந்திருந்தால் அது நசுங்கிக் கூழ் கூழாக ஆகியிருக்கும்.

விதிப்படி ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும். அவ்வாறு கிடைக்க வேண்டியதை தேவர்களே முயன்றால் கூட தடுத்துவிட முடியாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக