புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
59 Posts - 55%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
54 Posts - 55%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 28 of 32 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30, 31, 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 12:50 pm

அரைகுறை வைத்தியம்... தப்பியது விரல்!

சட்னி அரைப்பதற்காக மிக்ஸியின் சின்ன ஜாரில், தேங்காய், பொட்டுக்கடலை எல்லாம் போட்டவள், அவசரத்தில் மிக்ஸி `சுவிட்ச் ஆனில்' `இருப்பதைக் கவனிக்காமல் மெயின் சுவிட்சைப் போட்டுவிட்டேன். உடனே சூரன் தலை மாதிரி ஜாடி ஆடியதில், எல்லா பொருள்களும் வெளியே தெறித்ததால், பதட்டத்தில் மூடியைக் கையில் பிடிக்கப்போக, மூடி நழுவி, ஜாடி உயரம் குறைவானதால் என் வலது கை விரல் பிளேடில் சிக்கிக்கொண்டது.

அதற்குப்பிறகு என்னவாயிற்றென்றே தெரியாமல் ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியதில், உடனே பக்கத்திலேயே இருந்த ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு இருந்த டாக்டர், கைவிரலில் உருட்டி உருட்டி துணி தைப்பது போல தையல்கள் போட்டு கட்டும் போட்டு, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார்.

இரண்டு நாட்கள் வலியால் கடும் அவஸ்தை. மறுபடி போய் அந்த டாக்டரைப் பார்த்தால், கட்டைப்பிரித்தவர், `விரல் கறுப்பாகி விட்டது. விரலை எடுத்தாகணும், நாளை வாருங்கள்' என்றார். பயந்து போய் சென்னையிலுள்ள என் தம்பி தங்கையிடம் பேசியதில் அவர்கள், உடனேயே வேறு டாக்டரைப் பார்க்கச் சொல்லி அட்வைஸ் பண்ணினதும், வேறு ஒரு ஆர்த்தோ டாக்டரிடம் போனோம். பரிசோதித்துப் பார்த்த அந்த டாக்டர், "விரலை எடுப்பதாவது... தேவையில்லாமல் ஏகப்பட்ட தையல்கள் போட்டதால் ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது'' என்றவர், எல்லாத் தையல்களையும் பிரித்து, மருந்து தடவி, சரியான சிகிச்சை கொடுத்து குணமாக்கினார். இந்த அனுபவத்தின் மூலம் ஒரு பாடமே கற்றுக் கொண்டோம். எத்தனை அவசரமானாலும், டாக்டர்களின் தரத்தை விசாரித்துக் கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் கண்டிப்பாக மற்றொரு டாக்டரைத் தயங்காமல் அணுகவேண்டும்.

- பாமதி நாராயணன், பெங்களூர்-61



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 12:50 pm

வார்த்தை இல்லை... வாஞ்சை உண்டு...

சமீபத்தில் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவியும் நானும் சென்றிருந்தோம். வேலை முடிந்து அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது ஒன்பது மணியாகி விட்டது. அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் வந்து நாங்கள் பேருந்துக்காகக் காத்திருந்தோம். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்தும் பேருந்துகள் எதுவும் வரவில்லை.

அப்போது சைக்கிளில் வந்த பேசும் திறன் இல்லாதஒரு இளைஞர் எங்கள்அருகில் சைக்கிளை நிறுத்தி, சைகையிலேயே எங்களிடம் அங்கே பஸ் வராது என்று உணர்த்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஒரு ஸ்டாப் தள்ளியிருந்த டெர்மினஸ் வந்து பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த நேரத்தில் பலபேர் அந்தப் பக்கம் போய் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை, அந்தப் பேசும் திறன் அற்ற அந்தச் சகோதரருக்கு மட்டும் வந்ததை எண்ணி நாங்கள் வியந்தோம்...!

- கே.எம்.பாருக், சென்னை-92.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 12:51 pm

சந்தித்த சம்பந்திகள்... சிந்தித்த வாழ்க்கை...

என் உறவினர் மகனுக்கு பெண் பார்க்கச் சென்றிருந்தோம். பெண் பார்க்கும் படலம் முடிந்ததும், பெண்ணின் பெற்றோரும், பையனின் பெற்றோரும் அவரவர்களுடைய பையன், பெண்ணிடம் அபிப்பிராயம் கேட்டனர், ரகசியமாக. இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருப்பதாகக் கூறினர். அதன் பிறகு அதிரடியாக பையனின் தாயார், "நான் வருங்கால சம்பந்தியம்மாவுடன் பேசவேண்டும்,'' என்று கூறினார். அதன்படியே இருவரும் தனியறையில் பேசிவிட்டுத் திரும்பினர். எங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பையனையும் பெண்ணையும் தனிமையில் பேச வைப்பது தான் வழக்கம்.

நாளைய தம்பதிகளாகப்போகும் அவர்கள் இருவரும் அந்த சந்திப்பின்போது மனம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அது அமையும். ஆனால் இங்கே நடந்தது வேறு. சம்பந்திகளாகப் போகிறவர்கள் இருவரும் சந்தித்து என்னதான் பேசினார்கள் என்று கேட்டோம். "கல்யாணத்திற்கு பிறகு மணமகள் மணமகனுடன் காலம் முழுவதும் புரிந்து கொண்டு வாழ்ந்து விடுவார்கள். ஆனால் சம்பந்திகள் ஒற்றுமை தான் கல்யாணத்தில் முக்கியமான அம்சம். நாங்கள் இருவரும் அனுசரித்துப் போவோம் என்பதை சம்பந்தியம்மா பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். எனக்கு வரும் மருமகளை மகளாக பாவிப்பேன் என்று நானும், `என் மாப்பிள்ளையை மகனாக பாவிப்பேன்' என்று சம்பந்தியம்மாவும் உறுதி கூறினார்கள். எங்கள் உறவில் தான் மணமக்களின் எதிர்கால மகிழ்ச்சியே அடங்கியுள்ளது,'' என்றார்.

பிறகென்ன...திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. தம்பதிகள் மட்டுமின்றி சம்பந்திகளும் எடுத்த உறுதிமொழிக்கேற்ப ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 2:44 pm

அட வித்தியாசமான சந்திப்பால இருக்கு...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 7:12 pm

அருமையான சந்திப்புகள்.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 10:03 am

கொக்கி உபயத்தில் கொட்டிய ரசம்...

என் உறவுக்கார பெண்மணி வீட்டுக்கு சென்றிருந்தேன். அவள் அடுப்படியில் சமையல் செய்து கொண்டிருந்தாள். நான் ஹாலில் உட்கா£ர்ந்து டி.வி. பார்த்தபடியே அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

திடீரென அவள் அம்மா என அலறும் சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடினேன். அவள் கைவிரலில் சூடாக ரசம் கொட்டியதால் இரண்டு விரல்கள் வெந்து போயிற்று. உடனே நான் கியாசை அணைத்து விட்டு அவளை பேன் காற்றில் உட்கார வைத்து, டேபிளில் இருந்த இங்க் பாட்டில் மையை அவள் இரண்டு விரல்களிலும் கொட்டி தடவினேன். பிறகு பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஸ்டோருக்குப் போய் தீப்புண்ணை ஆற்றும் களிம்பு மருந்தை வாங்கி வந்து அதையும் தடவினேன். அதற்குப் பின்பே அவள் ஓரளவு வலி குறைந்து ஆசுவாசமானாள்.

அவள் ரசத்தை இறக்க தன் பழைய ஜாக்கெட் துணியை பயன்படுத்தி இருக்கிறாள். ரசம் இறக்கும்போது ஜாக்கெட்டின் கொக்கியானது ஸ்டவ்வின் மேல் உள்ள இரும்பில் மாட்டிக்கொள்ள, ரச பாத்திரம் எடுக்க வராமல் தடுத்ததில், அதேவேகத்தில் சூடான ரசம் அவள் கைமேல் கொட்டியிருக்கி றது. பெண்கள் சமையல் கட்டில் சூடான பாத்திரங்களை இறக்க ஜாக்கெட் துணிபோன்ற பாதுகாப்பாற்ற வகையறாக்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

கஸ்தூரி லோகநாதன், அம்பத்தூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 10:04 am

நிறம் வேண்டாமே!

என் தோழி ஒருத்தி தன் மகனுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தாள். என் உறவினர் ஒருத்தியின் மகளைப் பற்றியும் குடும்பத்தைப்பற்றியும் விரிவாக சொல்லி விட்டு, பெண் கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள் என்றேன். நான் இப்படி சொல்லி முடித்ததும் உடனே அவள் முகமே மாறி விட்டது. எனக்கு வரப்போற மருமகள் தக்காளி கலர்ல சிவப்பா இருக்கணும். அந்த முடிவுலே இருந்து மாற மாட்டேன். மேற்கொண்டு அவளைப் பத்தி எதுவும் கூறவேண்டாம் என முகத்திலடித்தாற் போல் பேசி விட, எனக்கு என் னவோ போல் ஆகி விட்டது.

இது நடந்து ஒரு சில மாதங்களில் அவள் விருப்பப் பட்டபடியே சிவப்பான மருமகள் கிடைத்தாள். அன்று யதேச்சையாக காய்கறி மார்க்கெட்டில் அவளை சந் திக்கவே நலம் விசாரித்தேன். அழாத குறையாக பேச ஆரம்பித்தாள். நிறத்தை மட்டும் நம்பி நான் மோசம் போயிட்டேன். அவ பண்ற அட்டூழியம் தாங்க முடியலே. சொல்லப் போனா அவ என்னை ஒரு மனுஷியாகவே மதிக்கிறதில்லை... இப்படி சொல்லிக் கொண்டே போனாள். நானோ என்னால் முடிந்தவரை தைரியமும், ஆறுதல் வார்த்தைகளும் கூறினேன்.

பையனுக்கு பெண் தேடும் பெற்றோரே! பெண்ணின் நிறத்தைப் பார்க்காதீர்கள். குடும்பப்பாங்கான குணநலன்கள் இருக்கிறதா என்று மட்டும் கவனியுங்கள். அதுதான் மகிழ்ச்சியும், நிம்மதியும் தரும்.

டி.ஆர்.கிருஷ்ணன், திருப்பூர்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 10:05 am

கல்யாண மண்டபத்தில் காண்ட்ராக்ட் சிஸ்டம்!

என் நண்பரின் மகளுக்கு கல்யாணம் நடக்க விருந்தது. மண்டபம் பேசி அட்வான்சாக ஒரு பெரும் தொகையை கட்டினோம். மேளம், சமையல், பூ அலங்காரம், ஐயர், மணமகன் அழைப்புக்கான கார் ஏற்பாடுகளை என் பொறுப் பில் விட்டிருந்தார் நண்பர். மற்ற எல்லா ஏற்பாடுகளையும் சிரமமின்றி முடித்து விட்டேன். அந்த நேரம் பார்த்து திருமண மண்டப முதலாளி அழைத்தார். போய்ப் பார்த்தேன். கல்யாணத்திற்கு முந்தின நாள் இரவு மணமகன் அழைப்புக்கு வேறெங்கும் கார் ஏற்பாடு செய்து விடாதே. இந்த மண்டபத்தில் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் நபரிடம் தான் கார், காருக்கு பூ அலங்காரம், ஜோடனை போன்றவற்றை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து யார் காரும் இங்கு வர அவர் அனுமதிக்க மாட்டார் என் றார்.

நான் உள்ளுற அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளா மல் அந்த காண்ட்ராக்ட் நபரிடம் பேசினேன். அவர் சொன்ன தொகை பகல் கொள்ளை. உடனே நான் எனக்குத் தெரிந் தவர்களிடம் கார் உள்ளது. நான் ஏற்பாடு செய்து கொள்கிறேன் என்று சொன்னதுதான் தாமதம், வேறு காரை ஏற் பாடு செய்து கொண்டு வந்து விடுவீர்களா? அதையும் பார்க்கிறேன் என்று சவால் விடுகிற மாதிரி மிரட்டல் தொனி யில் பேசினார். தெரிந்த நண்பர்களும், நாங்கள் வரவில்லை. மங்களகரமான திருமண வைபவத்தில் வீண் தகராறு, அடி தடி இதெல்லாம் எங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது என்றபடி நழுவி விட்டார்கள்.

அதன்பிறகே அந்த ஊரில் உள்ள எல்லா திருமண மண் டபங்களிலும் இதே காண்ட்ராக்ட் சிஸ்டம்தான். கல்யாண செலவில் இதை மட்டும் விரயக் கணக்கில் எழுதிவிட வேண்டியதுதான் என்று எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சொன்னார்.

கொள்ளை அடிப்பதற்கு இப்படியும் ஒரு புது திட்டமா? சிறப்பாகத் திருமணம் நடந்தது என்பது ஒன்றே மன நிறை வைத் தந்தது.

சி.ரகுபதி, வசந்தம் நகர்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 10:05 am

போதை வந்தபோது புத்தி இல்லையே!

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தொலை தூர ஊரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரது வீட்டில் மகளுக்கு திருமண ஏற் பாடு நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு தேவைப் பட்ட பணத்திற்காக தான் வேலை செய்த கம்பெனி யில் இருந்து கணக்கை செட்டில்மெண்ட் செய்துகொண்டு கை நிறைய பணத்தோடு ஊருக்கு திரும்பியிருக்கிறார்.

நண்பருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கை நிறைய பணம் இருந்ததால் டாஸ்மாக் கடையில் நன்றாகவே குடித்து விட்டு எங்கோ போதையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் அவர் வரவை எதிர்பார்த்து காத்திருந்த னர். அவர் வரவே இல்லை. பயந்து போன குடும்பத் தார் அவர் வேலை செய்த கம்பெனிக்கு தொலைபேசி மூலம் விசாரிக்க, அவர் ஏற்கனவே கணக்கைமுடித்துக் கொண்டு போன விஷயத்தை சொல்லி உள்ளனர். ஒரு வாரகாலம் கழித்து நண்பர் வீடு திரும்பினார்.

அவரிடம் நடந்ததை விசாரித்தபோது போதையில் சுயநினைவின்றி கிடந்த நேரத்தில் பணத்தை பறி கொடுத்ததை சொல்லி அழுதிருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை மன்னித்து விட்டு விட்டனர். ஆனால் நடக்க வேண்டிய திருமணமும் தள்ளிப் போனது. மதுவுக்கு அடிமையானவர்கள் குடிக்கும் முன்பு தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தாரையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக பணம் அதிகம் இருக்கும் நேரத்தில் டாஸ்மாக் பக்கம் எட்டிக் கூட பார்க்கக் கூடாது.

ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 11:22 am

வளரும் பொழுதே வள்ளல் குணம்!

டூரிஸ்ட் பஸ்சில் நண்பர், உறவினர்களுடன் திரு வண்ணாமலை, சென்னை போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்றிருந்தேன். திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் சரியான வெயில். எங்களுடன் வந்திருந்த எங்கள் சொந்தக்காரப் பெண் ஐந்து வயது வர்ஷினி காலையிலிருந்தே தாகமாக இருக்கிறது என்று குளிர் பானங்கள், சர்பத், ஐஸ்கிரீம் என சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள். இதனால் மூக்கில் நீர் ஒழுகி அடிக்கடி தும்ம ஆரம்பித்து விட்டாள்.

ஓரிடத்தில் ஐஸ் மோர் விற்பதையும், சிலர் வாங்கிக் குடிப்பதையும் பார்த்த அவள் தன் தந்தையிடம் தனக்கும் ஐஸ் மோர் வாங்கித்தரும்படி பிடிவாதம் பிடித்தாள். ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அவள் ஐஸ்மோர் குடித்தால் இன்னும் அவதிப்படுவாள் என்று எண்ணிய அவள் தந்தை, “வர்ஷி குட்டி... அப்பாவோட பர்ஸ் காலி. கொண்டு வந்த எல்லா பணமும் செலவழிஞ்சுருச்சு. காசு இல்லாம மோர் குடுப்பாங்களா? நம்ம ஊர் போனதும் உனக்கு வாங்கித் தரேன் என்று கூறியதும் அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவழியாக எங்கள் டூரிஸ்ட் பஸ் நிற்கும் இடத்தை அடைந்தோம். மற்றவர்கள் வருகைக்காக வெளியே காற்றாட நின்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரப் பெண்மணி பிள்ளைக்கு பால் வாங்க காசு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்த வர்ஷினி, “டாடி உங்க பர்சை நல்லா தேடிப் பாருங்க. காசு இருக்கும்.

பாவம்பா அந்த குழந்தை என்று கூறவே, பர்சிற்குள் தேடுவது போல் பாவனை செய்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து மகள் கையில் தர, அவள் சந்தோஷத்தோடு அந்த பெண்மணியிடம், “பாப்பாவுக்கு பால் வாங்கிக் கொடு என்று கொடுத்தாள். இப்ப மட்டும் ஐந்து ரூபாய் கொடுத்தீங்களே, அப்பவே தேடிப்பார்த்து எனக்கு ஐஸ்மோர் வாங்கி கொடுத்திருக்கலாமே? என்று கேட்காமல், ஏழைச்சிறுமியின் பசியைப்போக்க பணம் கொடுத்த அந்த ஐந்து வயது சிறுமியின் இரக்க குணம் என்னை ஒருகணம் சிலிர்க்க வைத்து விட்டது.

டி.ஜானகி, கரூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 28 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 28 of 32 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக