புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
29 Posts - 58%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
14 Posts - 28%
Balaurushya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
Barushree
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
nahoor
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
83 Posts - 74%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
4 Posts - 4%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 1%
nahoor
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 1%
Barushree
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 32 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 13, 2013 11:10 am

சிவா wrote:அக்கா மறந்தாள்.. அம்மா நெகிழ்ந்தாள்...

ஒரு நாள் நானும் என் அம்மாவும் தி.நகருக்கு சென்று இருந்தோம். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்.

நானும் என் அம்மாவும் அவள் அருகில் சென்று ஏனம்மா அழுகிறாய் என்று கேட்டோம் அதற்கு அவள், நான் என் அக்காகூட துணி வாங்க வந்தேன். என் அக்கா போன் பேசிக்கொண்டே என்னை விட்டுவிட்டு போய்விட்டாள் என்று கூறினாள்.

உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது, அவள் சைதாப்பேட்டையில் இருக்கிறது என்று கூறினாள்.

எங்க கூட வா! நாங்கள் உன் வீட்டில் விட்டுவிட்டு போகிறோம் என்று அவளிடம் சொன்னோம். அவளும் எங்களுடன் பேருந்தில் வந்தாள். சைதாப்பேட்டை வந்தவுடன் இறங்கி அவள் வீட்டு விலாசம் கேட்டு நடந்து சென்றோம்.

அப்போது அவளது உறவினர்கள் அவளை தேடிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். திடீரென்று அவள் உற்சாகமாக அதோ என் அம்மாவும் பாட்டியும் வருகிறார்கள் என்று கூறினாள். இதற்குள் மகளை பார்த்த தாய் ஓடோடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். சிறுமியின் பாட்டி எங்கள் கையை பிடித்துக் கொண்டு, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பிறகு நாங்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்து விட்டோம். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்களோ, உறவினர்களோ கவனமாக கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.

ந.மோகனா, அடையாறு.

குழந்தைக்கு உதவி செய்த இவர்கள் நன்றாக இருக்க வேணும் , இப்போவெல்லாம 4 வயது குழந்தை முதல் 80 வயது கிழவி வரை பாதுகாப்பு இல்லாமல் தனியாக இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது இந்தியாவில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 8:47 am

வாழ்த்தும் நெஞ்சங்கள், வாழும் இல்லங்கள்!

வெளியூரில் உள்ள தோழி தனது மகள் திருமணத்துக்கு கொரியரில் அழைப்பு அனுப்பியிருந்தாள். அதில் திருமண நாள், இடம் என எல்லாவற்றையும் தந்து விட்டு, இறுதியில் ஒரு குறிப்பு இருந்தது. அந்த குறிப்பில் திருமணத்திற்கு நேரில் வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும். ஆசீர்வாதத்தை விட உயர்ந்த பரிசு ஏதும் இல்லை. அதேநேரம் நீங்கள் மணமக்களுக்கு விரும்பிய அன்பளிப்பை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் மகிழ்வோம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அதோடு சில முதியோர் இல்ல முகவரிகளும் அதில் இருந்தன.

நாங்களும் எங்களது அன்பளிப்புத் தொகையை ஒரு குறிப்பிட்ட முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தோம். சுமார் 10 நாட்கள் கழித்து அந்த இல்லத்திலிருந்து மனதார மணமக்களை வாழ்த்தியும், பணம் அனுப்பியதற்கு எங்களுக்கு நன்கூறியும் கடிதம் வந்தது.

வயதான எத்தனை பெரியவர்களின் ஆசி அந்த மணமக்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தேன். என் தோழியின் வித்தியாசமான இந்த அணுகுமுறை என்னை வியக்கவைத்தது. மனித நேயமே உயரிய பண்பு என நெகிழ்ந்தேன்.

பானு பெரியதம்பி, சேலம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 8:51 am

சாலைப்பயணத்தில் சாய்த்த முந்தானை!

நானும் நண்பனும் பைக்கில் போய்க் கொண்டிருந்தோம். எங்களுக்கு முன் ஓர் இளம் ஜோடி பயங்கர அரட்டையுடன் உலகையே மறந்த நிலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தது. பின்னால் உட்கார்ந்திருந்த பெண்ணின் முந்தானை காற்றில் பறந்தபடி இருந்தது. அதிக வேகம் சென்றதால் திடீரென்று வீசிய காற்றில் முந்தானை நன்றாகச் சரிந்து பின் சக்கரத்தில் சிக்க, இருவரும் வண்டியோடு சாலையில் விழுந்தனர்.

பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள் எதிர்பாராதவிதமாக அவர்கள் வண்டிமீது மோதி விடப் போகிற பயத்தில் திடீர் பிரேக் போட, இதை எதிர் பார்க்காத நண்பன் கீழே விழுந்து முழங்கைகளிலும், கால்களிலும் நல்ல அடி. எங்களுக்கு முன்னால் விழுந்தவர்களுக்கும் பலமான காயம். சக்கரத்தில் சிக்கியிருந்த சேலையை எடுப்பதற்குள் அந்தப் பெண்படாதபாடு பட்டுவிட்டாள். ஒருசில நிமிடங்கள் மேலாடை இல்லாமல் அவள் பட்ட அவஸ்தை பரிதாபம் ஏற்படுத்தியது.

என்ன தான் இளம் ஜோடி என்றாலும் பொது இடங்களில் கொஞ்சம் அடக்கமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொண்டால் இதுபோன்று மற்றவர்களுக்கும் தொல்லைகள் நிகழாதிருக்கும் அல்லவா!

எம்.வி.அமுதன், வேதாரண்யம்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 8:56 am

அண்மையில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம்.

மாலை பள்ளி விடும் நேரம். மாணவ, மாணவிகளை அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஆசிரியர்கள் பள்ளியின் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவயது மாணவன் மட்டும் வேறு ஊர் செல்லும் பேருந்தில் மாறி ஏறி விட்டான். இதை ஆசிரியர்களும் கவனிக்கவில்லை. பேருந் தும் புறப்பட்டு விட்டது.

வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மகன் பேருந்தில் வருவான் என்று எதிர்பார்த்திருந்த அந்த தாய் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.

பள்ளி பேருந்தும் வந்து நின்றது. இறங்க வேண்டிய ஒன்றிரெண்டு குழந்தைகள் இறங்கின. ஆனால் இந்த தாயாரின் மகன் வரவில்லை. இதனால் அந்த தாய் பதறிப்போய் ஓட்டுனரை கேட்டாள். அவரோ, ஆசிரியர்கள் பேருந்தில் ஏற்றிவிட்ட பிள்ளைகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்ததாகவும் மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறிவிட்டுப்போய் விட்டார்.

தன் பிள்ளையை காணாத அந்த தாய் அழுது கண்ணீர் வடித்தார். பிறகு உறவினர்களை வரவழைத்து பல இடங்களில் தேடினர். பிறகு வேறுமார்க்கம் சென்ற அந்த பள்ளியின் எல்லா பேருந்து ஓட்டுனர்களிடமும் போன் போட்டு விசாரித்தார். அந்த ஓட்டுனர்களில் ஒருவர் மட்டும் நம்பிக்கை வார்த்தார். ஒரே ஒரு பையன் மட்டும் எங்கு போவது என்று தெரியாமல் பஸ்சில் அழுது கொண்டிருக்கிறான் என்றார். மேலும் விசாரித்ததில் அது அவர்கள் பையன் தான் என்று தெரிந்தது.

உடனே போய் அந்த சிறுவனை அழைத்து வந்தனர். அதன் பிறகே பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆசிரியர்களின் கண நேர கவனக்குறைவால் அந்த பெற்றோரும், உறவினர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர். சிறுபிள்ளைகள் விஷயத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நிர்வாகமும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

த.கணேசன், பெண்ணாடம்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:23 am

பெண்களுக்கு பெண்களா போட்டி...?

சமீபத்தில் வளைகாப்பு சடங்குக்கு விரும்பி அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். எனக்கு 2 பெண் குழந்தைகள். வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கியபோது பெண்ணுக்கு வளையல் அணிவிக்க அழைத்தார்கள்.

பெண்ணின் அருகில் இருந்த நான் முதல் ஆளாக எழுந்து வளையல் அணிவிக்கப் போனேன். அப்போது அங்கிருந்த எனக்குத் தெரிந்த பெண்மணி என்னிடம், முதல் பிரசவத்தில் ஆண்குழந்தை பெற்றவர்களுக்குத்தான் முன் உரிமை. நீ இரண்டும் பெண்ணாகப் பெற்றவள்” என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த அவமானமாகி விட்டது. இன்று பெண்கள் ஆதிக்கம் செலுத்தாத துறையே இல்லை. அப்படியிருக்க ஆணாதிக்க மனப்பான்மைக்கு பெண்களே துணை போகலாமா? பெண்களுக்கு பெண்கள்தான் முதல் எதிரி என்றே நினைக்கத் தோன்றுகிற து.

ஸ்ரீவித்யா, ஆந்திரப்பிரதேசம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 6:38 pm

தொலைந்தது ஆதாரம்: தொலையாத மனித நேயம்:

எனது மகள் வங்கித் தேர்வு எழுதுவதற்காக மதுரை சென்றிருந்தாள். கூடவே நானும் சென்றேன்.

அப்பொழுது அங்கு நடந்த சம்பவம் என்னை ஆச்சரியப்பட செய்தது. என் மகள் எழுதும் அதே வங்கித்தேர்வு எழுதுவதற்காக ஒரு மாற்றுத் திறனாளி மாணவி வெளியூரிலிருந்து வந்திருக்கிறாள்.

அவள் வரும்போது கைப்பையை தொலைத்திருக்கிறாள். அந்த பையில் தான் அவளது உடமைகள், ஹால் டிக்கெட், பணம், ஏ.டி.எம்., மாற்றுத் திறனாளிக்குரிய மெடிக்கல் சர்ட்டிபிகேட் என அனைத்தையும் வைத்தி ருக்கிறாள்.

தேர்வு மையத்துக்கு வந்தவள் ஒவ்வொரு அதிகாரியாக பார்த்து விவரத்தை சொல்லி பேசினாள். அனைவரும் அவளிடம் ஒன்றும் இல்லாமல் தேர்வு எழுத இயலாது என ஒரேமாதிரி பதில் கூறினார்கள்.

இதனால் தனது லட்சியம் தொலைந்து விட்டதே என்று அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது இவள் அழு கையை பார்த்து மனம் இரங்கிய அதிகாரி ஒருவ ர் விபரத்தை கேட்டறிந்து மும்பை ஹெட் ஆபீசுக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னார்.

சிறிதும் சளைக்காமல் அவரே ஒவ் வொரு ஆபீசிற்கும் போன் பண்ணி கேட்டும், மெயில் அனுப்பியும் முயற்சி செய்தார். இறுதியாக அந்த மாணவிக்கு தேர்வு எழுத அனும தி வாங்கிக் கொடுத்தார். இந்த பிரச்சினை தீருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இதனால் தேர்வு ஆரம்பித்து அரைமணி நேரமாகவே, அவளுக்கு கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கி தேர்வு எழுத வைத்தார்கள். இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரியா? என்று வியப்படைந்து அவரு க்கு மானசீகமாக ஒரு சல்யூ ட் வைத்தேன்.

பி.பாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 6:44 pm

அசந்து தூங்கினார், அதிர்ந்து பதறினார்

நான் வேலை நிமித்தமாக பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வேறெங்கும் இடம் இல்லாததால் மூன்றுபேர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பஸ்சில் ஏறிய து ம் தூங்கி விட்டார்.

அவரு க்கு பக்கத்தி ல் உட்கார்ந்திருந்தவர், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை நைசாக எடுத்து தனது வேட்டியில் வைத்து கட்டிக் கொண்டிருக்கிறார். இதை நானும் பார்க்க வில்லை.

வெகு வேகமாக சென்ற பஸ் திடீரென்று வேகத்தடை யில் வேகமாக ஏறி இறங்க, தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துக் கொண்டார். அப்போது தன் பாக்கெட்டில் கை வைத்தவர் செல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து அய்யய்யோ என் செல் பானை காணவில்லையே... என கத்தினார்.

என்ன சத்தம் என்று கேட் டுவந்த நடத்துனர் அவரை விசாரிக்க, இவரோ இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த எங்களைத் தான் சந்தேகத்துடன் பார்த்தார்.

எனக்கு என் னவோ போலாகி விட்டது. அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் செல்லை எடுத்து அவர் நம்பரைக் கேட்டு போன் செய்தேன்.

உடனே அவருக்கு அடுத்த பக்கம் உட்கார்ந்திருந்தவர் மடியிலிருந்து போன் அலறியது. அந்த நபர் அசடு வழிய பேசாமல் மடியிலிருந்து போனை எடுத்துக் கொடுத்தார். இதனை பார்த்த பஸ்சி ல் இருந்த எல்லோரும் அவரைக் கண்டபடி திட்டினார்கள்.

போனுக்கு சொந்த க்காரர் என்னை பாராட்டியதுமில்லாமல், அந்த நபரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட் டார்.

ஆகவே அவர் அவமானத்துடன் அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்க வேண்டியதாயிற்று.

பயணம் செய்யும்போது இறங்கு ம் வரை விழித்திருந்து செல்வது நல்லது. இல்லையென்றால் பணமோ, போனோ எதுவானாலும் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொண்டு தூங்கலாமே...!

என்.ஏ.பாலகிருஷ்ணன், ராசிபுரம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 6:57 pm


குழுவாக வந்தனர்... கும்மாளம் அடித்துச் சென்றனர்...

என் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு பிரபல ஜவுளிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்தோம். அப்போது கல்லூரி மாணவிகள் மூன்று பேர் வந்தனர்.

சுடிதாரில் ஆரம்பித்தவர்கள் அது இதுன்னு எல்லாவற்றையும் எடுத்து போடச் சொல்லி விட்டு, கடைசியில் நாங்கள் எடுத்து வைத்திருந்த புடவைகளை காட்டச் சொன்னார்கள்.

அதற்கு விற்பனையாளர், ஏற்கனவே அந்தப் புடவைகளை திருமண கோஷ்டியின ர் வாங்கி விட்டனர். அதனால் அவைகளை காட்ட இயலாது. வேண்டுமானால் இந்த புடவையை பாருங்கள் என்று மற்ற புடவைகளை எடுத்துக் காட்டினர்.

அவரது பதிலை அவமரியாதையாக எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவிகள், அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் முப்பது புடவைகளை எடுத்துப் போடச் சொன்னார்கள். புடவையை பிரித்து பார்த்தவர்கள் அது சரியில்ல, இது பிடிக்கல... இப்படி ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி, ஒன்றைக்கூட வாங்காமல் கடையை விட்டு வெளியேறி விட்டனர்.

அவர்கள் சென்றபின் விற்பனையாளர் “இந்த புடவைகளை மீண்டும் மடித்து வைக்க அரைமணி நேரமாவது ஆகும். அதோடு கஸ்டமரிட ம் நயம் படப் பேசி வியாபாரம் செய்யத் தெரியாதவன் என்று முதலாளியின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்” என்றார். அவரது வருத்தமும், ஆதங்கமு ம் முற்றிலும் நியாயமானது தானே!

எஸ்.பானுமதி, பாபநாசம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 32 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:39 pm

அன்று வள்ளல்... இன்று எள்ளல்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்ததும் நான் மிகவும் அதிர்ந்து போனேன். செல்வச்செழிப்பில் ரோஜாப் பூ மாதிரி இருந்த நண்பர் இப்போது எலும்பும் தோலுமாய் கன்னமெல்லாம் வற்றி அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். ஏன் இந்த நிலை என்று நண்பரிடம் கேட்டேன்.

அதற்கு பணம் சம்பாதிப்பதற்காக பல தொழில்களில் ஈடுபட்டுக் கைநிறைய சம்பாதித்தேன். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கணக்கு வழக்கில்லாமல் அள்ளிக் கொடுத்து செலவு செய்தேன்.

காலப்போக்கில் செய்து வந்த தொழில்கள் எல்லாமே மோசமான நிலைக்குப் போய்விட்டன. கடைசியில் கடன் தொல்லைகள் அதிகமாகி விட, வேறு வழி தெரியாமல் வீடு, கடைகள், நிலங்கள் என எல்லாவற்றையும் விற்று கடன்கள் முழுவதையும் அடைத்து விட்டேன்.

இப்போது சின்ன கூரை வீட்டில் தங்கி இருக்கிறேன். வயித்துக்கு ஜவுளிக் கடை ஒன்றில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் என்றார். மேலும் நான் செய்த பெரிய தப்பு, எதிர்கால தேவைக்காக கொஞ்சம் கூட, சேமிப்பில் கவனம் செலுத்தாதது தான். என்னால் பலன் அடைந்தவர்கள் இப்போது என்னைக் கண்டால் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்றெண்ணி கண்டும் காணாததுபோல் மறைந்து செல்கின்றனர்.

என்னோடு இருந்து லாபம் அடைந்த என் தம்பி என்னை அண்ணாந்து கூடப் பார்ப்பதில்லை. சொந்தம், நட்பு எல்லாம் காசு இருக்கற வரைதான்... என்று அவர் கண்ணீர் ததும்பக் கூறியபோது என் கண்களிலும் கண்ணீர்.

எம்.வடுகநாதன், வேதாரண்யம், நாகை.

Sponsored content

PostSponsored content



Page 32 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக