புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
44 Posts - 59%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
3 Posts - 4%
viyasan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
236 Posts - 42%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
13 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 12 of 32 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:02 am

நெரிசல் பயணத்திலும் நெகிழ வைத்த இருவர்

நான் ஓய்வு பெற்ற ரெயில்வே பணியாளன். என் முதுகு பகுதியில் ஆபரேசன் செய்திருப்பதால் ஊன்று கோல் உதவியுடன் தற்போது நடந்து செல்கிறேன். சமீபத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்காக திருமுல்லைவாயிலில் இருந்து பிராட்வே செல்லும் பஸ்சில் ஏறினேன்.

பஸ்சில் நல்ல கூட்டம். ஊன்றுகோலுடன் சென்ற எனக்கு யாரும் உட்கார இடம் தரவில்லை. முதியோர், ஊனமுற்றோருக்கான இரண்டு இருக்கைகளிலும் இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் என்னை கண்டும் காணாமல் இருந்தார்களே தவிர, எழுந்து இடம் தரவில்லை.

நான் தள்ளாடுவதைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன் எழுந்து அவன் அதுவரை அமர்ந்திருந்த இருக்கையில் அமர வைத்தான். அவன் புத்தகப் பையை வாங்கி மடியில் வைத்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன்.

`பாடி` பகுதியில் பஸ் நிறுத்தத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி ஏறினார். அவருக்கும் எந்தப் பெண்ணும் எழுந்து இடம் கொடுக்கவில்லை. இதைக் கவனித்த நான் அந்தப் பெண்ணை அழைத்து என் இருக்கையில் அமரும்படி கூறினேன். `அவரோ பரவாயில்லை' என்று கூற, அதைக் கவனித்த இளைஞர் ஒருவர் தனது இருக்கையை விட்டு எழுந்து கர்ப்பிணி பெண்ணை அமரச் செய்தார்.

பள்ளிச் சிறுவன் மாதிரி, அந்தஇளைஞன் மாதிரி ஈவு, இரக்கம் உள்ளவர்கள் இப்போது மிகச்சிலர் தான் இருக்கிறார்கள். பஸ்சின் கடுமையான நெரிசல் பயணத்திலும் தங்கள் உதவும் குணத்தால் என்னை நெகிழ வைத்துவிட்டார்கள்.

எஸ்.வி.சந்தானம், திருமுல்லைவாயல்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 12:29 pm

உண்மையிலேயே நெகிழ வைக்கிறது...உங்கள் படைப்புக்கள். நன்றி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:26 pm

பட்டினி கிடக்கும் பக்தி தேவையா?

எனது அலுவலக நண்பர் ஒருவருக்கு பக்தி அதிகம். வாரத்தில் கிட்டத்தட்ட பல நாட்கள் விரதம் இருப்பார். நாங்கள் சாப்பிடும்படி வற்புறுத்தினாலும் கேட்க மாட்டார். `தெய்வ குத்தம்' என்று மறுத்து விடுவார்.

ஒருநாள் அவர், அலுவலகத்தில் பணியில் இருக்கும்போதே திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், அவருக்கு `அல்சர்' இருப்பதாக சொன்னார்கள். உடலில் ரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறினார்கள்.

இதனால் மனதொடிந்துபோன நண்பரை நாங்கள் அனைவரும் ஆறுதல் கூறி தேற்றினோம். இப்போது விரதத்தை குறைத்துக் கொண்டு, உணவுகளை சேர்த்து வருகிறார்.

பக்தி தேவைதான், அதற்காக இப்படியா? தொடர்ந்து உணவை அரைத்து வரும் வயிறு (இரைப்பை) சிறிது ஓய்வெடுக்கவும், உடல் புத்துணர்வு பெறுவதற்காகவும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பதைத்தான் விரதம் என்பார்கள். நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதையோ, பல நாட்கள் பட்டினி கிடப்பதையோ உடலும் ஏற்காது, மருத்துவ அறிவியலும் ஏற்காது.

- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:27 pm

புலம்ப வைத்த பொறாமை!

எங்கள் ஊரில் ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண், ஒரு பெண். மூவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகளை சொந்தத்திற்குள் கட்டிக் கொடுத்துள்ளனர். மருமகனுக்கு நிரந்தரமான வேலை கிடையாது.

மூத்தமகன் ராணுவத்தில் பணி செய்வதால் மனைவியுடன் அங்கேயே இருக்கிறான். இளைய மகன், பெற்றோருடனே வசிக்கிறான். நல்லாசிரியர் ஓய்வு பெற்றுவிட்டாலும் எழுத்தர் வேலை செய்கிறார். ஓய்வூதியமும், பணி ஊதியமும் கணிசமாக வருகிறது.

உள்ளூரில் இருக்கும் மகள் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, தட்டுமுட்டுச் சாமான்கள், சாப்பாடு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவார். இது இளைய மருமகளுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள், "இதென்ன சத்திரமா, சாவடியா? எப்பவும் மகள் வீட்டுக்கு தர்ம சாப்பாடு போய்க்கிட்டே இருக்கு?'' என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டினாள்.

வார்த்தை அர்ச்சனைகள் வாடிக்கையாகி விட, ஆரம்பத்தில் பொறுமை காத்த மாமியார், இளைய மருமகளை "நீ தனியாக சமைத்துக் கொள்'' என்று கூறிவிட்டார். அவளது கணவருக்கு போதிய வருமானம் கிடையாது. அப்பாவின் சம்பாத்தியத்தைக் கொண்டுதான் சமாளித்து வந்தான்.

இப்போது வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதால், இளைய மருமகள் குடும்பம் நடத்த வருமானம் போதாமல் தானும் வேலைக்கு கிளம்பினாள். அப்படியும் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாததால், வாயைக் கொடுத்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டேனே என்று புலம்பி வருகிறாள்.

-எல்.பி.நாகராசன், எரிச்சநத்தம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:27 pm

அலட்சியம் செய்த பெண்மணி... ஆபத்தில் உதவிய ஆட்டோக்காரர்!

நான் ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறேன். அங்குள்ள அனைவரும் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் வசதியானவர்கள். அந்த காம்பவுண்டில் ஒரு வீடு காலியாக இருந்தது. வீடு காலி என்று போர்டு போட்டிருந்ததால் ஒரு ஆட்டோக்காரர் வந்து வாடகைக்கு கேட்டார்.

அங்குள்ள அனைவரும் ஒப்புக் கொண்டாலும் ஒரு பெண்மணி மட்டும், ஆட்டோக்காரரை அனுமதிக்கக்கூடாது என்று சங்கக் கூட்டத்தில் தீர்மானமாகக் கூறினார். ஆனாலும் மெஜாரிட்டி ஆதரவில் ஆட்டோக்காரருக்கு வீடு விடப்பட்டது. குடிவந்தபிறகும் அந்தப் பெண்மணி மட்டும், ஆட்டோக்காரரை ஏதாவது குறை கூறி காலி செய்யச் சொல்லி மாதாந்திர கூட்டங்களில் முறையிடுவார்.

ஒரு நாள் இரவு, அந்த பெண்மணியின் கணவருக்கு ஹீட்டரை உபயோகிக்கும் போது ஷாக் அடித்து விட்டது. கூச்சல்போட்டும் யாரும் உதவ வரவில்லை. ஆட்டோக்காரர் தான் ஓடி வந்து அந்தப் பெண்ணின் கணவரை தூக்கி ஆட்டோவில் போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு வந்ததால் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் சொன்னதோடு, உடனடி சிகிச்சையில் அந்தப்பெண்ணின் கணவரை காப்பாற்றி விட்டனர். இப்போது அந்தப் பெண், ஆட்டோக்காரரை தாலிபாக்கியம் தந்த கடவுளாக நினைத்து கையெடுத்து கும்பிடுகிறார்.

எந்த தொழில் செய்தாலும் அவர்களும் மனிதர்களே. எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது.

- எஸ்.சுதா, மஞ்சகுப்பம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:28 pm

"சில்லறை'' மனிதர்கள்... சிக்கித் தவித்த பெரியவர்!

மின் கட்டணம் கட்டுவதற்காக மின் உதவிப் பொறியாளர் அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு வயதான பெரியவர் ஒருவர் மின் கட்டணம் ரசீது கொடுப்பவரிடம், ஏதோ முறையிட்டுக் கொண்டிருந்தார்.

நான் வரிசையில் நிற்கத் தொடங்கினேன். சிறிது நேரத்திற்கு ஒரு முறை அந்தப் பெரியவர் ரசீது கொடுப்பவரிடம் சென்று பேசிவிட்டு வந்தார். ஒரு மணி நேரம் காத்து நின்று எனது மின் கட்டணத்தை செலுத்தி விட்டு திரும்பும்போதும் அந்தப் பெரியவர் அங்குதான் காத்திருந்தார்.

முதியவரை அணுகிச் சென்று என்ன விவரமென்று கேட்டேன், ``தம்பி எனது மின் கட்டணம் 69 ரூபாய். 100 ரூபாய் கொடுத்தேன். மீதி 30 ரூபாய் கொடுத்து ரசீதும் கொடுத்து விட்டார்கள். இன்னும் ஒரு ரூபாய் சில்லறை இல்லையாம். என் மகன் நல்லவன், ஆனால் மருமகள் அப்படியில்லை. மீதி ஒரு ரூபாயை சரியாக கொடுக்காவிட்டால் அடுத்த கரண்டு பில் கட்டும் வரை என்னை திட்டிக்கிட்டே இருப்பா. சரியா சாப்பாடும் போடமாட்டா'' என்று பரிதாபமாகச் சொன்னார். ரசீதையும் காட்டினார். அவரிடம் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.

வரவர மனித நேயம் மறைந்து வருகிறது. வீட்டிலும், வெளியிலும் சில்லறைத் (மனிதர்களின்) தகராறில் சிக்கித் தவிப்பவர்கள், இந்தப் பெரியவரைப் போல எத்தனை பேரோ?

- சொ.தமிழன்பன், வேட்டைநல்லூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Nov 04, 2011 1:40 pm

அனைத்து படைப்புகளும் அருமை..... மகிழ்ச்சி



இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 10:52 am

வாடகை வீட்டில் வாடிய குடும்பம்!

என்னுடைய தோழியின் குடும்பத்தினர் தங்களுடைய மகளின் உயர்படிப்பிற்காக நகர்ப்புறத்தில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறினார்கள். அவசரமாக குடியேறியதால் வீட்டின் வசதிகளை சரி வர கவனிக்கவில்லை. அந்த வீட்டில் எதைத் தொட்டாலும் உடைவதும், செலவு வைப்பதுமாக இருந்தது. .

ஆரம்பத்தில் 2 மின் விசிறிகள் சரியாக ஓடாத நிலையில் இருந்துள்ளன. வீட்டின் உரிமையாளர் எதையும் சரி செய்து கொடுக்க மாட்டார். எல்லாம் வீட்டில் இருப்பவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும், பராமரிப்பு செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதனால் அவர்களே தங்களுடைய தேவைக்காக 3 மின் விசிறிகள் வாங்கி மாட்டிக் கொண்டார்கள்.

ஒருமுறை மோட்டார் ரிப்பேர் ஆகியிருக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி சரி செய்துள்ளனர். வீட்டுக்காரர் அந்த ரூபாயை வாடகையில் கழிக்கவும் இல்லை. கொடுக்கவுமில்லை. ஆனால் முன்கூட்டியே சொல்லாமல் வாடகையை திடீரென்று 500 ரூபாய் உயர்த்தி விட்டார்.

மகளின் படிப்பு முடிந்து வீட்டைக் காலி செய்தபோது வீட்டிற்கான அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு வீட்டில் நான்கு மின் விசிறிகள் உண்டு, இரண்டுதான் இருக்கிறது, அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று மழுப்பி பணத்தை அப்படியே விழுங்கி விட்டார். ஏமாந்தபிறகு இப்போது என் தோழி வீட்டார் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன தான்அவசரம் என்றாலும் வாடகை வீட்டுக்கு குடிபோகிறவர்கள் அந்த வீட்டில் பைப் இணைப்பு, மின்சார வசதி உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் நல்லநிலையில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த வீட்டு உரிமையாளர் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

- விஜயசாந்தி இளங்கோ, ஆண்டிவிளை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 10:53 am

அரட்டையடித்த டாக்டர்கள்... அரண்டுபோன நோயாளி!

பிரபல தனியார் கண் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்கு முன்னர் தயார்படுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் முறைப்படி சரியாக செய்தார்கள்.

ஆபரேஷனுக்காக அழைத்துச் சென்ற என்னை சிகிச்சை மேஜையில் படுக்க வைத்திருந்தார்கள். பிரபல மருத்துவரும் அறுவை சிகிச்சையைத் தொடங்கினார். அப்போது ஒரு பெண் மருத்துவர் உள்ளே நுழைந்தார். அவர்கள் இருவரும் தனிப்பட்ட விஷயமெல்லாம் பேச ஆரம்பித்தனர். அவர்களின் அரட்டை அறுவை சிகிச்சை முடியும் வரை நீடித்தது.

நானோ சர்க்கரை நோயாளி. அறுவை சிகிச்சை செய்யும்போது எனக்கு கண்ணில் அதிக வலி ஏற்பட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு படுத்துக் கிடந்தேன். `இடையில் இவர்களின் பேச்சால் சிகிச்சையில் ஏதேனும் தவறு நடந்து விட்டால்...` என்ற அச்சம் வேறு இன்னொருபுறம் என் கவலையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அடிக்கடி சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஆபரேஷனை திகிலுடன் சந்திக்கும் என் போன்ற நோயாளிகளுக்கு சாதாரணம்அல்ல. பயம் கலந்த சுய உணர்வுடன் படுத்துக்கிடக்கும் நோயாளியின் மனநிலையை கொஞ்சம் அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

-ஆர்.எஸ். சூரியபிரபா, நெடுங்காடு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 10:53 am

பட்டிக்காட்டு தந்தை... பகட்டு மகன்!

நான், நண்பர்களுடன் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி பணி செய்து வருகிறேன். ஒருநாள் பஜாருக்கு போயிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள கடையில் டீ சாப்பிட்டுவிட்டு நின்று கொண்டிருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர் ஒருவித தவிப்போடு நிற்பதை பார்த்தேன். அதேநேரம் என்னுடன் ரூமில் தங்கிக் கொண்டு ஆபீசில் வேலை செய்யும் நண்பன் வந்தான். நான் தூண் மறைவில் நின்று கொண்டிருந்ததால் அவன் என்னை கவனிக்கவில்லை.

அந்த பெரியவரை கூப்பிட்ட அவன் சிறிது தூரத்தில் போய் பேச ஆரம்பித்தான். "இந்த கோலத்தில் ஏன் என்னைத் தேடி வந்தீர்? என்னுடன் வேலை செய்கிறவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இதில் 50 ரூபாய் இருக்கு. ஊருக்கு போய்ச்சேரும். நீர் கேட்ட 500 ரூபாய் என்னிடம் இல்லை. இடத்தை காலி பண்ணும்'' என்று 50 ரூபாயை அவர் கையில் வைத்து அழுத்தி விட்டு அதேவேகத்தில்போய் விட்டான். அவன் போனபின், நான் அந்த பெரியவரை அணுகி ``யார் நீங்கள், எங்கே வந்தீர்கள்?'' என கேட்டேன். சற்று முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெரியவர் பேசினார். "வந்தவன் என் மகன். வீட்டில் மூத்தவன் இவன். வேறு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு அவசர செலவுக்கு பணம் தேவைப்பட்டது. கேட்க வந்தேன். என் பட்டிக்காட்டு தோற்றம் அவனுக்கு கேவலமாக இருக்கிறதாம். மற்றவர்கள் என்னோடு சேர்த்து அவனை பார்த்தால் அவனையும் நாட்டுப்புறம் என்று நினைப்பார்களாம்'' என்று சொல்லிவிட்டு தலையிலடித்துக் கொண்டு அழுதார், அந்த முதியவர்.

உடனே ரூமுக்கு போன நான், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவனுக்கு டோஸ் விட்டேன். அவனை அழைத்துச் சென்று தந்தையிடம் ரூ.500-ஐ கொடுக்க வைத்து பஸ் ஏற்றி விட்டோம். இப்படியும் பிள்ளைகள் இருக்கிறார்களே? என்று நினைத்து நண்பர்கள் எல்லாம் வருந்தினோம்.

- சி.முருகன், சிவந்தாகுளம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 12 of 32 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக