புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
44 Posts - 60%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
236 Posts - 42%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
13 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 11 of 32 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 21 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 2:20 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 3:17 pm

செல்போன் பேச்சு சுவாரஸ்யம்... கட்ட வைத்தது அபராதம்...

திண்டுக்கல்- நத்தம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினேன். அன்று சுபமுகூர்த்த தினம். கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வண்டி புறப்படும் நேரத்தில் கல்லூரி மாணவி ஒருத்தி ஏறினாள். நெருக்கடிக்குள் முண்டியடித்து பஸ்சின் நடுப்பகுதிக்கு வந்துவிட்ட அவள் உடனே செல்போனை எடுத்து பேசத் தொடங்கினாள்.

பஸ் கிளம்பியது. கண்டக்டர் பஸ்சுக்குள் நடந்தபடி டிக்கெட் கொடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். எனவே `டிக்கெட் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சப்தமாக சொல்லி விட்டு பயணச்சீட்டை கொடுத்து கொண்டு இருந்தார்.

கல்லூரி மாணவியோ அருகில் நின்ற ஒரு இளைஞனிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் பயணச்சீட்டையும், மீதி சில்லரையையும் கேட்டுப் பெற மறந்து விட்டாள். நத்தம் வந்துவிட்டது. அப்போதும் பேசிக்கொண்டே இருந்தாள்.

அவள் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு முந்தின நிறுத்தத்தில் எதிர்பாராமல் டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் ஏறினார். ஒவ்வொருவரின் பயணச்சீட்டையும் வாங்கி சோதனை செய்தார். இந்தப் பெண்ணிடம் கேட்டபோது, திருதிருவென முழித்தாள். நடந்த விபரத்தை சொன்னாள். பரிசோதகரோ அபராத தொகையை கட்டிவிட்டு செல் என்று கூறி விட்டார். செய்வதறியாது அழுதுவிட்ட அந்த மாணவி தன்னிடம் இருந்த தொகையை அபராதமாக செலுத்தி விட்டு சென்றாள்.

தொலைபேசி நமக்கு பயன்தரக்கூடியதுதான். ஆனால் அதை இப்படி தொல்லை தரும் அளவுக்கு முறையின்றி பயன்படுத்துவதில் நியாயமில்லையே?

கு.செந்தமிழ் செல்வன், ஆண்டிபுரம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 3:18 pm

விரும்பியதை படிக்கவிடாமல் விரட்டிய பெற்றோர்!

என் தோழி தன் தங்கையை மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-1ல் சேர்க்க சென்றிருந்தாள். அங்கே ஒரு மாணவியும் அவளுடைய பெற்றோரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டிருக்கிறாள். அந்த மாணவி நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள். அவளுக்கு வணிகப் பிரிவில் சேர்ந்து சி.ஏ. படிக்க ஆசை. ஆனால் பெற்றோரோ டாக்டருக்குத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

தலைமையாசிரியர் அறைக்கு சென்று திரும்பும்போது அந்த மாணவியின் முகம் வாடியிருந்திருக்கிறது.. அதிலிருந்து அந்த மாணவியின் விருப்பம் நிறைவேறவில்லை என்பது தெரிந்திருக்கிறது. தங்கள் விருப்பத்தை திணிப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தை வீணடிக்கிறார்களே? என்று வேதனைப்பட்டாள் தோழி. மனம் ஒன்றாமல் படித்தால் மாணவர்களுக்கு மதிப்பெண் குறையாமல் என்ன செய்யும்? குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைப்பதுதான் சிறந்த பெற்றோரின் கடமை.

நி.கண்ணாத்தாள், திருச்சுழி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 3:19 pm

கண்ணயர்ந்த குழந்தை... கதவைப்பூட்டிய ஆயா!

என் தம்பியின் குழந்தைக்கு 41/2 வயதாகிறது. யு.கே.ஜி. படிக்கிறான். தினமும் பள்ளி முடிந்ததும் வேனில் 4 அல்லது 41/2 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான். ஒரு நாள் 51/2 மணியாகியும் குழந்தை வரவில்லை. பெற்றோருக்கு பயமாகி விட்டது.

உடனே வேன் டிரைவரிடம் போன் செய்து கேட்டதற்கு உங்கள் மகன் வேனில் ஏறவில்லை என கூறி விட்டார். பதறிப்போனவர்கள் உடனடியாக குழந்தையை தேடி பள்ளிக்குச் சென்றார்கள். பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தார்கள்.

வருகைப் பதிவேட்டில் குழந்தை வந்ததாக பதிவாகியுள்ளது. வகுப்பு ஆசிரியை குழந்தைகளை ஆயா பொறுப்பில் விட்டுவிட்டு சென்றதாக கூறினார். ஆயாவை கேட்டதற்கு குழந்தைகள் எல்லாம் வேனில் ஏறிய பிறகுதான் வகுப்பறையை மூடியதாகக் கூறினார். பிறகு குழந்தை எப்படி காணாமல் போனது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை, ஆயா உள்ளிட்ட அனைவரும் பள்ளி முழுவதும் குழந்தையை தேடினார்கள்.

அந்த நேரத்தில் வகுப்பறையின் உள்பக்கம் இருந்து குழந்தையின் அழுகுரலும், கதவைத் தட்டும் சத்தமும் கேட்டிருக்கிறது. கதவை திறந்து பார்த்தால் பயந்த நிலையில் அழுது அழுது சோர்ந்த நிலையில் குழந்தை இருந்திருக்கிறான். பெற்றோர் குழந்தையை வாரி அணைத்து முத்தமழை பொழிந்து சமாதானம் செய்தார்கள். வீட்டிற்கு வந்த குழந்தைக்கு பயத்தினால் ஒரு வாரம் காய்ச்சல் கண்டுவிட்டது.

குழந்தை விளையாடிக் கொண்டே கடைசி பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான். இதை கவனிக்காத ஆயா வகுப்பு கதவை மூடியிருக்கிறார். குழந்தை கண்விழிக்காமல் இரவுவரை தூங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தினர் கவனமாக இருக்க வேண்டும். ஆயாக்களும் குழந்தைகளை எண்ணி வேனில் ஏற்ற வேண்டும். வகுப்பின் உள்ளே சென்று முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு கதவை அடைக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் குழந்தைகள் மேல் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பி.ஜெயஸ்ரீ, ஆவடி



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 3:20 pm

சந்தோஷமான நேரத்தில், சங்கடப் பேச்சு!

என் உறவினரின் மகள் பெரியவளாகி இருந்தாள். அதை விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். வசதி குறைந்தவர்கள் தான் என்றாலும் மேளதாளம், பாட்டு, சாப்பாடு என்று விசேஷமாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உறவினர்கள் பலரும் விழா நாயகியாக மேடையில் நின்ற பெண்ணிடம் பரிசுகளைக் கொடுத்து வாழ்த்து சொன்னார்கள். உடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பெண்ணும் புத்தாடை, நகைகள் அணிந்து சந்தோஷமாக இருந்தாள்.

திடீரென பெண் அழத் தொடங்கி விட்டாள். ஏனென்று விசாரித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொள்ளச் சென்ற உறவுக்கார பெண் ஒருவர், "இந்த நேரத்தில் ஒங்க அப்பா தான் இல்லை; அவன் இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமே'' என்று கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

பெண்ணின் தந்தை இறந்துவிட்டார். எல்லா கஷ்டங்களையும் தாண்டி விழா எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தோஷமான நேரத்தில், அப்பா இறந்த கசப்பான கடந்த காலத்தை உறவுக்கார பெண்மணி நினைவுபடுத்திவிட்டுப் போக, அதனால் மனசு தாங்காத குழந்தை அழுது விட்டாள்.நல்லது பேசுகிறோம் என்று நினைத்து இப்படி கசப்புகளையும், கடுப்புகளையும் கிளறிவிட்டுப் போய்விடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இடம், பொருள் பார்த்து பேச வேண்டாமா?!

வி.ரவிச்சந்திரன், ராதாபுரம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu Sep 08, 2011 3:26 pm

அனைத்து பகிர்வுகளும் அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:29 pm

எல்லாமே நல்லா இருக்கு அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:00 am

நடுரோட்டில் காய்கறிகள்; கைகொடுத்த காவல்துறை!

நான் தாம்பரம் அருகில் மளிகைக்கடை நடத்தி வருகிறேன். தினமும் இரவு 10 மணிக்கு கடையை மூடி விட்டு, தாம்பரத்திற்கு சென்று மறுநாள் கடைக்கு தேவையான சாமான்களை வாங்கி வருவது வழக்கம்.

ஒருநாள் இரவு வழக்கம்போல சாமான்கள் வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11.30 மணி இருக்கும். எனது மோட்டார் சைக்கிளில் கட்டி இருந்த கயிறு அவிழ்ந்ததால் சாமான்கள் நழுவி நடுரோட்டில் சிதறின.

மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மளிகைச் சாமான்களை அள்ளுவதற்காக ரோட்டிற்கு ஓடினேன். இரவு நேரமானதால் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வந்து போய்க் கொண்டிருந்தன. என்னால் நடுரோட்டிற்கு செல்லவே சிரமமாக இருந்தது. "இன்றைக்கு அவ்வளவுதான்... எவ்வளவு சாமான்கள் வீணாகப் போகிறதோ..." என்று நினைத்துக் கொண்டே ஒருவழியாக ரோட்டின் மையத்திற்கு வந்துவிட்டேன். ஆனால் எந்த வாகன ஓட்டியும் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக சென்று கொண்டிருந்ததால் என்னால் பொருட்களை எடுக்க முடியவில்லை. சில பொருட்கள் சேதமும் அடைந்தன.

அப்போது கடவுள் மாதிரி ஒரு காவல்துறை அதிகாரி ஜீப்பில் வந்தார். சூழ்நிலையை சட்டென புரிந்து கொண்டவர் எனக்காக வாகனங்களை நிறுத்தினார். நான் அவசர, அவசரமாக அனைத்து சாமான்களையும் அள்ளிக் கொண்டு ரோட்டு ஓரத்திற்கு வந்து சேர்ந்தேன். அதன்பிறகே போக்குவரத்தை அனுமதித்தார். நான் அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்தேன். அவர் என்னை பார்த்து ``பார்த்து போங்க அண்ணாச்சி'' என்று சொல்லி விட்டுப் போனார்.

-ஜி.தங்கபாண்டி, முடிச்சூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:01 am

வாங்கினார் செல்போனை; உருவினார் மெமரி கார்டை!

ஈரோட்டிலிருந்து கோவைக்கு தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பஸ் கோவையை நெருங்கும் சமயத்தில் என் அருகில் அமர்ந்திருந்தவர், " என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை. அவசரமாக போன் பேச வேண்டும். உங்களுடைய போனைத் தந்தால் என் சிம் கார்டைப் போட்டு பேசிவிட்டு தந்து விடுவேன்'' என்று கேட்டார்.

நானும் செல்போனைக் கொடுத்தேன். அவரும் தன்னுடைய சிம் கார்டை மாற்றி பேசி முடித்துவிட்டு என்னிடம் போனை திரும்பக் கொடுத்து விட்டார். இந்நிலையில் கோவை சென்று இறங்கி வீட்டுக்கு பயணப்பட்ட நேரத்தில் எனது போன் ஒலித்தது. வழக்கமான ரிங்டோனுக்குப் பதிலாக வேறு ஒரு ரிங்டோன் கேட்டது. போனில் செட்டிங் மாறிவிட்டதோ என்று சரிபார்த்தபோது எனது போனில் இருந்த மெமரி கார்டு காணாமல் போயிருந்தது. பஸ்ஸில் செல்போனை வாங்கிய அந்த ஆசாமி சிம் கார்டை மாற்றும்போது என்னுடைய மெமரி கார்டை திருடிச் சென்றிருக்கிறான்.அறிமுகம் இல்லாதவர்களிடம் செல்போனைக் கொடுத்தால் இம்மாதிரியான ஆபத்துகளும், இழப்புகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

-ஜி.முருகானந்தம், வெள்ளோடு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:02 am

வாழ்த்த வந்தார்கள்... வருந்திப் போனார்கள்..!

உறவினரின் மகள் திருமணத்திற்கு கோவை சென்றிருந்தேன். மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். பெரிய கல்யாண மண்டபத்தில் தடபுடலாக நடந்தது திருமணம். பணம் தாராளமாகச் செலவழித்து ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

`பெண் கழுத்தில் தாலி எப்பொழுது ஏறும்? பரிசு கொடுத்து வாழ்த்திவிட்டு, சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு எப்போது ஊருக்கு கிளம்பலாம்' என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள் சொந்தக்காரர்கள். முகூர்த்த நேரமும் வந்தது. தாலிகட்டி முடித்த கையோடு மாப்பிள்ளையும், பெண்ணும் உறவினர்களை சந்திக்கவில்லை. மணமேடையிலிருந்து இறங்கி நேராக ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

திருமணத்தைப் பதிவு செய்வதற்குத்தான் இவ்வளவு அவசரமாம். மாப்பிள்ளைக்கு கொஞ்ச நாட்கள்தான் விடுமுறை. அதற்குள் `விசா' பெற வேண்டுமாம். மாப்பிள்ளையுடன் பெண்ணையும் அமெரிக்கா அழைத்துச் செல்கிறாராம். அதனால் பரபரப்பாக செயல்பட்டார்கள்.

மாப்பிள்ளை பெண்ணுடன், அவரது பெற்றோர் உள்ளிட்ட முக்கியமான உறவினர்களும் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு சென்று விட்டார்கள். திருமண மண்டபத்தில் நின்ற உறவினர்களோ, `யாரிடம் மொய் எழுதுவது? யாரிடம் பரிசு கொடுப்பது?' என்று தெரியாமல் தடுமாறினார்கள். சாப்பாட்டு பந்தி கூட சரிவர கவனிக்கப்படாமல் `ஏனோதானோ' என்று நடந்தது. மகிழ்ச்சியோடு மணமக்களை வாழ்த்த வந்தவர்களில் பாதிப்பேர் சாப்பிடாமலே சென்றார்கள்.

ஏராளமாக பணம் செலவு செய்து திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள், வாழ்த்த வந்தவர்களை மனங்கோணாமல் கவனிக்கவும் உரிய ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?

கே.என்.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 11 of 32 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 21 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக