புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
16 Posts - 59%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
58 Posts - 62%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 9:27 pm

maniajith007 wrote:அருமை அய்யா மற்றும் அன்பு நண்பர் பாலா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 6:14 pm

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர் கம்பர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாகவே அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார்.

"ஒரு காலடி நாலிலைப் பந்தலடி"

இந்தக் கேள்வியால் வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:
இந்தப் பாடலில் அந்தக் கேள்விக்கான பதிலையும் ஒளவை சொல்லியிருந்தார் .

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.


தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை".  

பெரியம்மை வாகனம் என்பதுஅளவில்லா துன்பத்தைத் தரும் மூதேவியின் வாகனமான கழுதையே.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது குட்டி சுவர்

"ஆரையடா சொன்னாய் அடா. "

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும் ( கால் ) நான்கு இலையுமுண்டு என்று அவரின் கேள்விக்கு பதிலையும் சொல்கிறார்.

அதே சமயம்  கம்பர் அடீ என்று விளித்ததற்காக, ஒளவை அடா என்று கேட்டு சமநிலைப்படுத்திவிட்டார்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 6:29 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

பாலா, நான் வேறு விதமாகவும் கேள்வி பட்டது உண்டு. இருந்தாலும் நானூறுக்கு மேல் தொடர்கிறேன்.

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
(மன்னர் இல்லை , பிரபு தான் அடுத்தப் பார்ட்டி, அவரும் தமிழ் கற்றறிந்த அறிஞர் )
பிரபு : தருகிறேன்.
புலவர்: அறுநூறு------ தரமுடியுமா?
பிரபு: தருகிறேன்.
புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
பிரபு: தருகிறேன்.
புலவர்: எண்ணூறு சந்தோஷமாக இருக்கும்.
பிரபு: தருகிறேன்.

ஆனால், பிரபு கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றிறே?
பிரபு: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: அறுநூறு தருகிறேன் என்றிறே?
பிரபு: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றிறே?
பிரபு: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
பிரபு: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும்,பிரபுவே உங்கள் தமிழ்,பொருளுடன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.
பிரபுவும் ,புலவரே,தமிழுடனும் பொருளோடு விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

ரமணீயன்.

அட இது புதுசால இருக்கு ரொம்ப அருமை ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 6:41 pm

காளமேகத்தின் பாடலில் இதுவும் ஒன்று.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி

தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது!
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தித்தித்தது _ எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!


இதற்க்கு விளக்கம் தோழியின் மூலமாக அனுப்பும் தூது நன்மை பயக்காது. கிளியோ தூதுப் பணியில் தூதை திறம்பட ஓதாது. தோழியின் தூதோ நாளைக் கடத்திக் கொண்டே போகும். தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் தீதாகும். ஆகவே பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என் மேல் படராது எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 7:18 pm

விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 7:22 pm

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 7:23 pm

ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு,
டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 03, 2010 8:26 pm

காளமேகபுலவர் எழுதியது

காக்கைக்காகாகூகை கூகைக்காகா காக்கை ..."

இந்தப் பாடல்களை ஒருவர்க்கப்பாடல்கள் என்று சொல்வார்கள்.
இந்த குறிப்பிட்ட பாடல் "க" வரிசையை மட்டுமே கொண்டு விளங்குகிறது.
அதனை "ககர வர்க்கப்பாடல்" என்று கூறுவார்கள்.

"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"

இதனைப்பிரித்துப் படிக்கவேண்டும்.
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகையை(ஒரு வகை ஆந்தை)
இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை
வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும். திருக்குறள்: "கொக்கொக்க கூம்பும்பருவத்து..."இல்லையெனில்,
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஐக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.

இந்தப்பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து,
வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 03, 2010 11:43 pm

எல்லா சிலேடையும் ரசித்தேன் பாலா... அசத்தலா இருக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 10:16 am

கலை wrote:எல்லா சிலேடையும் ரசித்தேன் பாலா... அசத்தலா இருக்கு..!
நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக