புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon May 03, 2010 2:47 pm

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்


‘‘எங்கள் வீட்டில் தங்கி இருந்தபடி வேலைக்குப் போய் வருகிறான் என் தம்பி. அவனுக்கு வயது30. என் மகள்மீது (அவளுக்கு 20 வயது) அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந் தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் ஆகிவிட்டான். அவனிடம் தற்போது சில கெட்ட பழக்கங்களும் வந்து விட்டன. நான் குளிப்பதை மாடியிலிருந்து பார்க்கி றான். சரியாகச் சாப்பிடு வதோ, தூங்குவதோ இல்லை. இது எனக்கு வேதனையாக உள்ளது.

அவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவானா? இதற்கு வேறு என்ன வழி? அவனைத் திருத்த ஆலோசனை வழங்குங்கள்...’’

டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:
‘‘நீங்கள் பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P48குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அவருக்கு மனநோய் இருப்பதையே உணர்த்துகிறது. தவிர, அவர் அடிக்கடி தனிமையை விரும்புகிறாரா, வேலைக்கு ஒழுங்காகப் போகாமல் டிமிக்கி அடிக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். குளியலறையில் எட்டிப் பார்ப்பது, நார்மலான நடத்தையே அல்ல.

அவருக்கு உங்கள் மகளை கல்யாணம் செய்துவைத்தால் அவர் நார்மலாகிவிடுவார் என்று சொல்லமுடியாது. வலுக்கட்டாயமாக, உங்கள் மகளின் விருப்பத்துக்கு மாறாக மணம் முடித்துவைத்தால் அது விபரீதங்களைத் தான் உண்டாக்கும்.

உடனடியாக அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள். சிகிச்சை மற்றும் ஆலோசனையின் மூலம்தான் அவரை முற்றிலும் குணப்படுத்த முடியும்!’’


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


‘‘என் கணவருக்கு வயது 40. பல வருடங்களாக காலையில் எழுந்தது முதல் அவருக்கு அடிக்கடி தும்மல் வந்துகொண்டே இருக்கிறது. டாக்டரிடம் சென்றுவந்தால் ஒரு வாரம்தான் நன்றாக உள்ளார். பல பரிசோதனைகள்
செய்து பார்த்துவிட்டோம். ஒரு குறையும் இல்லை என்றே சொல்கிறார்கள் டாக்டர்கள். ஒவ்வொரு முறையும் அடுக்கடுக்காக தும்மல் வந்து, ரொம்ப கஷ்டப்படுகிறார். என்ன காரணத்தினால் தும்மல் வருகிறது? அதை நிறுத்த
முடியாதா?’’

டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘தும்மல் என்பது நம் மூக்கில் உண்டாகும் நமைச்சலினால் ஏற்படுவது. ஒருவகையில் தும்மல் என்பது, நமது மூக்குக்கு இயற்கை அளித்துள்ள பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P48a
பாதுகாப்பு அம்சம்.


உதாரணமாக, மூக்கினுள் மிளகாய்த்தூள் சென்றதும் தும்மல் வரும். மிளகாயின் காரம் நம் நுரையீரலுக்குள் சென்று கெடுதல் விளைவிப்பதைத் தடுக்கத்தான் இந்த தும்மல்! ஆனால், இதுபோன்ற நியாயமான காரணம் எதுவும் இல்லாமலும் தும்மல் வரும். அது அலர்ஜியின் விளைவு.


அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் உடலுக்கு உள்ளேயும் இருக்கலாம். வெளியேயும் இருக்கலாம்.


சாப்பிடும் பொருள்கள், மூக்கினுள் போகும் தூசி, முடி, பஞ்சு மற்றும் கடினமான நெடி போன்றவற்றினால் ஏற்படுகிற அலர்ஜி வெளி காரணங்களால் வருவது. சாப்பிடும் பொருளால் அலர்ஜி என்றால், அந்தப் பொருளை
சாப்பிடாமல் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, தக்காளி சாப்பிட்டதும் அலர்ஜி ஏற்பட்டு தும்மல் வருகிறது எனில், தக்காளிக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும். அலர்ஜியை முறியடிக்க தடுப்பு மருந்தும் உண்டு.


உடலுக்குள் நிகழும் சில மாற்றங்களால் அலர்ஜி ஏற்படுகிறது எனில், சில சமயங்களில் அது உடல் வளர்ச்சியிலேயே சரியாகிவிட வாய்ப்பு உண்டு.


உங்கள் கணவருக்கு தும்மலுடன் மூக்கடைப்பும் இருந்தால், சிறு அறுவை சிகிச்சை மூலம் சதையை அகற்றி சரி செய்யலாம். அலர்ஜிக்கு வெறுமனேஒரு வாரம் மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதாது. அது ஏற்படும் போதெல்லாம் சாப்பிட வேண்டும். அலர்ஜி எதனால் வருகிறது என்பதை முறையான பரிசோதனை மூலம்
கண்டுபிடித்து அந்த காரணத்தையே களைவதுதான் இதற்கு சரியான தீர்வு!’’


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


‘‘என் அம்மாவுக்கு 49 வயது ஆகிறது. இன்னும் மெனோபாஸ் ஏற்படவில்லை. திடீரென அவருக்கு உடம்பு முழுதும் வீக்கம் வந்து ரொம்ப வலியாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்ததில் ‘ஹைபோ தைராய்டு’ எனச் சொன்னார். இதற்கு ‘எல்-தைராக்ஸின்’ என்கிற மாத்திரை தினமும் பாதி மட்டும் சாப்பிடுகிறார். அவருக்கு பி.பி\யும் சர்க்கரையும் உள் ளது. இதனால் வேறு ஏதும் பிரச்னை வருமா? என்ன டயட் எடுத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவாகக் கூறுங் களேன்...’’


டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

‘‘தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்ஸின் குறைவாகச் சுரப்பதினால் ஏற்படும் பிரச்பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P49aனைக்கு ‘ஹைபோ தைராடிஸம்’ என்று பெயர். இதனால் உடலின் எடை சற்று அதிகரிக்கும். உடலில் வலி ஏற்படும். தூக்கம் அதிகம் வரும். மலச்சிக்கல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.


இதற்கு உங்கள் தாயார் எடுத்துக் கொள்கிற மாத்திரைதான் சரியான தீர்வு. இந்தப் பிரச்னைக்கு தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. இருந்தாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால்
உணவில் உப்பைக் குறையுங்கள். முற்றிலுமாக தவிர்த்தால் ரொம்பவும் நல்லது...’’


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம்.எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத்தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக்
குழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்...’’

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P49
டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:
‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன்
செய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.

அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!’’

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

‘‘என் வயது 21. இரண்டே வருடங்களில் உடல்பெருத்து 45 கிலோவிலிருந்து 55 கிலோவாகி விட்டேன். சொதசொதவென தொப்பையுடன் இருக்கிற என்னைப் பார்க்க எனக்கே கவலையாக உள்ளது.

எனக்கு நிறைய சந்தேகங்கள்... தற்போது எனக்கு மாதவிலக்கு 4-5 நாட்கள் முன்னும் பின்னுமாக வருகிறது. இப்படி ஒழுங்கற்று இருப்பதால் ஏதேனும் ஹார்மோன் பிரச்னை இருந்து அதனால் எடை அதிகரிக்குமா?
ஆறு மாதங்கள் முன்புவரை எண்ணெய் அதிகமுள்ள உணவும், இனிப்பும் அதிகம் சாப்பிட்டு வந்தேன். இதனால் எடை கூடியிருக்க வாய்ப்பு உள்ளதா? ஆனால், இப்போது அவற்றை முற்றிலும் நிறுத்தி விட்டேன். அப்படியும்
எடை கூடுகிறதே, ஏன்? அடிக்கடி மலச்சிக்கல் பிரச்னை வேறு. எடை குறைக்க டானிக் குடிக்கலாமா? உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன் றவை பயனளிக்குமா? அப்படியே என் முகத்தைக் கெடுக்கும்
பருக்கள் மறைய வழிசொல்லுங்கள்... எனக்கு வீட்டில் வரன் தேடுகிறார்கள். அதற்கு முன் பழைய
எடையை திரும்பப் பெற உதவுங்கள்...’’


டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P50
‘‘கடிதத்தில் நீங்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் எடை சரியான விகிதத்தில்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை. மகப்பேறு மருத்துவ நிபுணரையோ அல்லது நாளமில்லா சுரப்பி நிபுணரையோ (என்டோகிரனாலஜிஸ்ட்) அணுகி, ஹார்மோன் பிரச்னை உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.


கொழுப்பு உள்ள உணவுப் பண்டங்களையும் இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் சாப்பிடுவதால் கண்டிப்பாக எடை அதிகரிக்கும். நீங்கள் இவற்றை நிறுத்தினது மட்டும் போதாது. தொடர்ந்த உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கும். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி போன்றவற்றை நீங்கள்
மேற்கொள்ளலாம்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க: எண்ணெயில் பொரித்த உணவு வகைகளையும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளையும் தவிர்த்து, வேக வைக்கப்பட்ட உணவை சாப்பிடுங்கள்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க: அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். காலைக்கடனை உரிய நேரத்தில் கடைப்பிடிப்பது
மிகவும் அவசியம்...’’


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


‘‘என் மகளின் வயது 26. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, கைகளில் வெள்ளைத் தழும்புகள் இருக்கின்றன. முதலில் ஒரு பைசா அளவில் ஒன்று மட்டும் இருந்தது. இப்போது, இடுப்புக்குக் கீழிருந்து, கால்கள், பாதம் வரை 2 கால்களிலும் வில்லை வில்லையாக, 3 அங்குல நீளத்தில் உள்ளது. இது வெண்குஷ்டத்தில் சேர்ந்ததா? ஆங்கில வைத்திய முறையில் எந்த டாக்டரை அணுகலாம்? குணமாக எத்தனை நாளாகும்? எவ்வளவு செலவாகும்?’’

டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘இந்தப்பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் P50a
பிரச்னைக்குப் பெயர் ‘விடிலைகோ’. இதை வெண்குஷ்டம் என்று சொன்னாலும், தொழுநோய்க்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

நமது தலைமுடி எப்படி நரைத்துப் போகிறதோ, அதேபோல் தோலில் சில இடங்கள் வெளுக்கிறது. தோலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் நிறமிக்குள் இருக்கும் மெலனோசைட் செல்கள் சில இடங்களில் மட்டும் அழிந்து போவதால் இந்த வெள்ளை நிறம் உண்டாகிறது. இந்த செல்கள் அழிவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


இது, அழகு சம்பந்தப்பட்ட ‘காஸ்மெடிக் பிராப்ளம்’ என்பதைத் தவிர, தொற்றுநோய் அல்ல. உயிருக்கு ஆபத்தானதும் இல்லை.

இதை ஓரளவுக்கு குணப்படுத்த வாய்ப்பு உண்டு. தோல் வைத்தியரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘இத்தனை நாள்களில் குணமாகும்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 6 மாதங்களிலிருந்து, ஒரு வருடம் வரை ஆகலாம். மருந்துகளும் அதிக விலையில்லை.

ஒரு இடத்தில் மட்டும் நீண்ட நாட்களாக இருக்கும் ‘ஸ்டேபிள் விடிலை கோ’வுக்கு, மருத்துவர் ஆலோசனையுடன், ‘காஸ்மெடிக் சர்ஜரி’ செய்யலாம்.ஆனால், பரவக்கூடிய விடிலைகோவுக்கு இந்த சிகிச்சை பயனளிக்காது...’’


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

நன்றி:- டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:

நன்றி:- டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

நன்றி:- டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:

நன்றி:- டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:

நன்றி:- டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- அ.வி

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 03, 2010 3:00 pm

பயனுள்ள திரியை ஆரம்பித்து தொடர்ந்து தகவல்களை அளித்து கொண்டு உள்ளீர்கள். நன்றி.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Uபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Dபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Aபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Yபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Aபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Sபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Uபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Dபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Hபகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 03, 2010 4:51 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்ளின் தளமும் அருமையான களஞ்சியம் மிக்க நன்றி நண்பரே..... பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் 678642



நேசமுடன் ஹாசிம்
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 5:01 pm

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா மேலும் தொடருங்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:41 pm

அனைவருக்கும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon May 03, 2010 8:30 pm

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 8:36 pm

நல்லா, பயனுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக