புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
429 Posts - 48%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரியின் தத்துவங்கள் - 4


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:19 am

உழைப்பாளிகளின் கடமை


உலக அரங்கில் தேசங்கள் ஒன்றோடு ஒன்று பிணக்குற்று பகை கொண்டு குழப்பங்கள் விளைவதும், ஒரே நாட்டில் தனி மனிதர் ஒருவரோடு ஒருவரோ, ஒரு குழுவினரோடு ஒரு குழுவினரோ, பிணக்கு கொண்டு பகைத்துக் குழப்பங்கள் விளைவதும் பொருளாதாரத் துறையிலும் அரசியல் முறையிலும் உள்ள குறைபாடுகளாலேயே ஆகும்.

பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே வாணிபம் இருந்தபோது உழைப்பிற்கே மதிப்பு இருந்தது. உழைப்பாளிகள் உயர்வாகக் கருதப்பட்டார்கள்.

பணத்தை ஒரு இயந்திரமாகக் கொண்டு வேகமாகவும் பரவலாகவும் நடத்தும் வாணிபத்தின் மூலம் தனி மனிதனுக்கு எளிதாக மிதமிஞ்சிய செல்வம் சேர வழி ஏற்பட்டதால், உழைப்பின் மதிப்பு குறைந்து பணத்தின் மதிப்பு மிகுந்தது. உழைப்பாளிகளை ஆதரவாகக் கொண்டு நடைபெறத் தொடங்கியது.

உழைப்பாளிகளிடம் வரி வாங்குவதைவிட வணிகர்களிடம் வரி வாங்குவது எளிதாக இருந்தது. நாளாவட்டத்தில் வணிகர்களுடைய ஆதிக்கத்திற்கே ஆட்சியதிகாரம் வந்துவிட்டது.

உழைப்பிற்கு மதிப்பு ஏற்பட வேண்டுமெனில் வாணிபமும் ஆட்சியும் உழைப்போர் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும், உழைப்பாளிகளே கூட்டுறவு முறையில் உற்பத்தி விற்பனை திட்டத்தை முயற்சியோடு நடத்தி, ஆட்சியையும் தங்கள் நலம் நாடும் அறிஞர்களிடம் ஒப்புவிக்க வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள். நீங்களே, கல்வியிலும் சிந்தனையிலும் உயர்ந்து வர ஏற்ற கல்வி முறையை அடைய முயலுங்கள். இதுவே நீங்கள் இன்று ஆற்றவேண்டிய கடமை.


செயலின் பிரிவுகள்


உடலியக்கத்தால் இயற்கையாக எழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ள உணவு, உடை, வீடு, வாழ்க்கைத் துணை இவைகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன. இந்தத் தேவைகளைத் தேட, பெற வைத்திருக்க, அனுபோகிக்க, பிறர்க்கு அளித்து உதவ ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. இயற்கையான இந்த உரிமையின் அடிப்படையில் மனிதனின் உடல் வலிவு, அறிவாற்றல் என்ற இருவகையும் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தும் முறையைப் பொதுவாகச் செயல் என்று சொல்லுகிறோம்.

மனிதனுடைய செயல்கள் அதற்குரிய நோக்கங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டதில் அவை தொழில், கடமை, தியாகம், தொண்டு என நான்கு வகையாகி விட்டன. தன் உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு ஒருவர் புரியும் செயல் தொழில் எனப்படும்.

தான் வாழ்வதற்காக உதவியுள்ள சமுதாயத்திற்கு பிரதி பலனாக ஒவ்வொருவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை என்று வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்த அறிஞர்களால் வரையறுத்துக் கூறப்பட்ட உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற ஐவகை நலன்களுக்காகவும் புரிய வேண்டிய செயல்கள் கடமை எனப்படும்.

குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனிதர் குழு ஒன்றிற்காகவோ உணர்ச்சி வயப்பட்டுத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் செயல் தியாகம் என்று சொல்லப்படும்.

இயற்கை நிலையினையும் எண்ணத்தின் நிலையினையும் இன்ப துன்ப இயல்பினையும் அறிந்த பேரறிவின் எல்லையில் நிலைத்துத் தான், தனது என்ற குறுகி நிற்கும் எல்லையைக் கடந்து தன்னை உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அர்ப்பணித்து எண்ணம், சொல், செயல் என்ற மூன்று வித ஆற்றல்களைப் பயன்படுத்தும் பெருநோக்கச் செயல் தொண்டு என்ற மிகச் சிறப்பாகக் கருதப்படும்.


மெய்யும் பொய்யும்


மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று கருதப்படுகின்றது. இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைத் தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.

ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்துவிடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.

அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது இல்லையென்று சொல்ல வேண்டுமென்பது, அகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கின்றது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டுபட்டு விட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.

இதே போன்று ஏக நிலையாக அரூப நிலையாக இருந்த தெய்வ நிலை, அணுவாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இருநிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும், அவைகளின் இயக்க நிகழ்ச்சிகளையும் வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டுபட்ட நிலை என்று சொல்லுகின்றார்கள். அப்படி இரண்டு பட்ட நிலைகளில் ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டுபட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.


வேதம்


ஓதிக் கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப் படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக்கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.

இதனால் வேதம் ஓதாதவர் எல்லோருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு ஓதியும் உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டும். என்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.

அறிவும், அறமும் சிறப்படைய வேண்டும்


மனித வாழ்வு சிக்கல் நிறைந்தது. பொறுப்பு மிக்கது. அறிவின் உயர்வும் விளக்கமும் செயலின் திறமையும், நேர்மையும்தான் வாழ்வின் தேவைகளை நிறைவாக்கி வெற்றி பெறச் செய்யும். வாழ்வின் விளக்கத்தைச் சிந்தனையாலும் செயல் விளைவுகளாலும் கண்ட முற்காலத்திய அறிஞர் பெருமக்கள் சுருக்கமாக மனிதகுல நல்வாழ்வுக்கு இறைவழிபாடும் அறநெறியும் இன்றியமையாத தேவைகள் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு உடல் நிலையில் எல்லை கட்டிய அறிவுடையோர்களுக்கு கற்பனையால் வடிவமைக்கப்பட்ட தெய்வநிலையையும், சடங்குகளாலும் திட்டமிடப்பட்ட அறநெறியும் கூடிய மதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

எல்லாத் தோற்றத்திற்கும் குணங்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்து மறைபொருட்களாக இயங்கும், இயக்கும் உயிர், மனம், அறிவு, சீவகாந்தம், தெய்வம் ஆகிய மறை பொருட்களை உணர்ந்து கொள்ள ஏற்ற போதனை சாதனை முறைகளாலும் செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நீதியை உணர்ந்து எண்ணம், சொல், செயல்களை அளவோடும் முறையோடும் ஆற்றி மெய்ப்பொருள் உணர்ந்த தெளிவோடு வாழத்தக்க சமய நெறியினை உருவாக்கித் தந்துள்ளார்கள்.

எனினும் இக்காலத்திலும் மக்களால் அவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளவோ, முறையாகப் பின்பற்றி பயனடையவோ முடிவில்லை. காலத்திற்கேற்றபடி விளக்கி வழிகாட்டக் கூடிய ஆன்மீக தலைவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். மக்கள் மனம் குழப்பம் அடைந்துள்ளது. விளைவாக உலக மக்கள் வாழ்வில் சிக்கல், பிணக்கு, பகை, நோய்கள், குற்றங்கள், போர்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது விஞ்ஞானயுகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பல நாட்டில் குடியேறியும், பலநாட்டு மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் குவிந்தும் வாழ்கின்றார்கள். போக்குவரத்து சாதனங்களாலும், செய்தித் தொடர்பு சாதனங்களாலும் மனிதகுலம் பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைப் பண்பாடு இவற்றில் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த நிலைமைக்குப் பொருந்துமாறு மனித அறிவுக்கு இறைநிலை உணர்வும், இறைவழிபாடும், அறநெறியும் விளங்கிக் கொள்ளவும் பின்பற்றவும் ஏற்றமுறையில் போதனை சாதனை வழிகள் தேவையாக உள்ளன.

அறியாமை, பழக்கம், உணர்ச்சிவயம் என்ற மூன்றாலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்றவாறு அறிவாட்சித் தரத்தோடு வாழும் மக்களைச் சட்டங்களைக் காட்டி அதிகாரம் செய்தோ, இறந்த பின்னர் சொர்க்கம், நரகம் கிட்டுமென்று ஆசைகாட்டியும், அச்சமூட்டியும் நல்வழிப்படுத்த முயலும் மதங்கள் மூலமோ திருத்தி வாழ்வில் அமைதி காண முடியாது.

இயற்கையாக அமைந்துள்ள பேராற்றலான சிந்தனையாற்றலைத் தூண்டி விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூடிய விளக்கத்தின் மூலமும், பயிற்சிகள் மூலமும் தனி மனிதனின் அறிவிலும் அறத்திலும் சிறப்படைய வேண்டும்.


vethathiri.org வேதாத்திரியின் தத்துவங்கள்   - 4 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:22 am

அறிவின் உண்மை நிலை


உடலோ பல அணுக்களால் கட்டப்பட்ட ஒரு தோற்றம். அணுவோ எல்லாம் வல்ல அருட்பேராற்றலின் நுண்ணிய சுழலலை. அணுவினால் கட்டப்பட்ட தோற்றம் இந்த உடல். உடலுக்குள் அந்த நுண்ணிய பொருளாக உள்ள அணுவோ உயிர். அணுதிரட்சியில் உடலாகவும் இருக்கிறது. உயிருக்கு மத்தியில் தொடங்கி பேரியக்க மண்டலம் முழுவதும் விரிந்து எல்லையற்ற விரிவு உடைய ஒரு அரூபநிலையே அறிவு.

நீ உன் உடலை நினைத்துப் பார். நீ புலன்கள் வரையில் உன்னை எல்லை கட்டிக் கொண்டு உடலே நான் என்று எண்ணுகிறாய். உடலில் உள்ள உயிரை நினைத்து பார். உலகிலுள்ள எல்லா உயிர்களோடும் பேரியக்க மண்டலத்தில் ஆற்றல் களமாக நிறைந்துள்ள பரமாணு மண்டலத்தோடு ஒன்றுபட்டிருக்கிறாய். இந்த நினைவில் நீ ஆன்மாவாய் பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள சக்தியாக உணர்கிறாய்.
அதற்கும் மேலாக நுணுகி நின்று உன் அறிவை நோக்கு. உயிராற்றலின் மையத்தில் தொடங்கி, உடலிலே பரவி பேரியக்க மண்டலம் முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் உள்ள பிரம்ம நிலையாய், சுத்தவெளியாய் உள்ளதை உணர்வாய். உனது அறிவின் உண்மை நிலையை உணர்ந்த பின் உனது அறிவின் விரிவே அன்பாக மலர்ந்து உயிர்கட்கு உதவி செய்து, உயிர்த் துன்பம் போக்கவும், எந்த உயிருக்கும் துன்பம் தராமல் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும், என்ற விழிப்பு நிலையும் வந்துவிடும்.

இந்த அறிவு நிலையிலேயே உன்னை உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் உணர்வாய். உனது அறிவு எல்லையற்றது, விரிந்து அரூபமாக உணரும் நிலையில் அறிவேதான் பிரம்மம் என்ற உண்மையை உணர்வாய்.

இந்த உள்ளொளியில் தன் முனைப்பு என்ற இருள் மறைந்துவிடும். ஒரு தலைப்பட்சம், வெறுப்புணர்ச்சி, பொறாமை, கடும்சொல் நீக்கி நீ உன்னை உத்தமப் பொருளான இறைவனாகவே காண்பாய். உன் அறிவை அறிந்த பேரறிவால் எந்த ஒன்றையும் குறிப்பால் உணர்ந்து தக்கபடி கடமையாற்ற முடியும்.

உன்னுடைய நிலையை உனக்கு உட்பொருளாக உள்ள ஆன்மாவை உணர்ந்து கொண்டால் உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகும். அந்த அறிவைக் கொண்டு எவருள்ளத்தும் எழும் எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து தக்கபடி வெற்றியோடு உன் கடமையாற்றலாம். அகம் என்பது ஆன்மாவைக் குறிப்பதாகும். அது மனிதனுடைய கருமையத்தில் இறைநிலையையும் அதன் அளவற்ற ஆற்றலையும் சுருக்கி வைத்திருக்கும் தெய்வீக நிலையம்.

ஆன்மாவை உணர்ந்தவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாக உணர்வார். ஆகையால் ஆன்மாவை அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிது கூட சந்தேகமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர்.


வாழ்வும் - பொருளும் - பயனும்


மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.

அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இவ்வறவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.

மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.

இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.

எண்ணம் ஆராய்தல்


அன்பர்களே தீய எண்ணத்துக்கு ஒரு போதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றிவையுங்கள். தீய எண்ணங்களளைக்கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள். தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழல விட்டுக் கொண்டிருந்தாலும் கூட தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையின் அந்தந்த காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான பொதுவானதொரு சங்கற்பமாகவும் இருக்கலாம். அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்பு நிலை எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.

எண்ணந்தான் அனைத்துமே. எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை. நன்மையும் தீமையும் எண்ணத்துள்ளே சிறிதும் பெரிதும் எண்ணத்துள்ளே வெற்றியும் தோல்வியும் எண்ணத்துள்ளே. வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணந்தான் உயர்வானது. இன்பமோ, துன்பமோ எண்ணத்துக்கு அப்பால் இல்லை. எனவே அன்பர்களே எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார் மீதும் குறை சொல்லிப்பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தில் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்யுங்கள்.

தவப்பயன் காப்பீர்


ஆன்மீகம் என்றாலே உயிர்ச்சக்தி, தவத்தைச் செய்து அமைதி நிலைக்கு வந்து பேரின்பம் எனும் Ecstasy–ஐ அடைகிறோம். இந்தநிலை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் உணர்ச்சிவயப்பட்டோமேயானால் உயிர்ச்சக்தியானது அளவிலும் அழுத்தத்திலும் குறையும் உடலில் உள்ள அணு அடுக்கு அதிகமாகச் சீர்குலையும், அதேபோல் மூளையில் உள்ள அணு அடுக்கும் வெகுவாகச் சீர்குலையும். தவநிலையில் மனம் ஒன்றிப் பேரின்ப நிலையை அடைகின்றபோது சினம் கொள்ளாமலும், உணர்ச்சிவயப்படாமலும் பேராசை கொள்ளாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

சினம் கொள்ளாமல் இருப்பதற்கு எங்கேயோ செல்ல வேண்டியது இல்லை. நம்முடைய குடும்பத்திலேயே தாய், தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியவர்களிடையே சினம் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டால் போதும். எப்போதும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய தன்மைகளை ஏற்றிருக்க வேண்டும்.

பிறருடைய தவறைத் தவறு செய்தவுடனேயே சுட்டிக்காட்டாமல் நேரம் வரும்போது பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தவறு செய்த உடனேயே சுட்டிக்காட்டுவது என்பது வெந்த புண்ணில் ஊசியைச் செலுத்துவதுபோன்றது. ஏனென்றால் தவறு செய்தவர்களுக்கே தெரியும். நாம் இப்போது தவறு செய்து விட்டோம், என்று அப்போதே நாமும் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு தவறைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பினும்கூட அந்த நேரத்திலே பொறுமையுடன் அமைதிகாத்துப் பின்னர் ஆக்கரீதியாகச் செயல்பட வேண்டும்.


வெறுப்பின்மை


வெறுப்பு என்பது சினம் என்னும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு ஆகும். வெறுப்புணர்ச்சியென்பது, பிறரை, பிறபொருளை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். இது வெறுப்புணர்ச்சியின் இளநிலையென்று கூறலாம். அதன் முதுநிலையானது பிறரை அல்லது பிறபொருளை துன்புறுத்தல் அல்லது அழித்தல் ஆகும்.

இவ்விரண்டு நிலைகளுமே மனித வாழ்வின் நலத்தையும், வளத்தையும் அளிக்க வல்லவை. இதனால் வெறுப்புணர்ச்சியற்ற மனநிலையை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். வெறுப்பு ஒழிந்தால் மிச்சமிருப்பது என்ன நட்பு, அன்பு, கருணை இவைதானே.

வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும் மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம். நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்துவிடும். வாழ்வின் இன்பம் இழந்து, அமைதியிழந்து தனித்து நின்று துன்புற வேண்டியதே, மாக்கோல மதிவிருந்தில் ஒரு கவி இருக்கிறது. அது விருப்பத்தை ஒழித்துவிட முயலவேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே இனிமை நல்கும் என்பதாகும்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில் எந்தப் பொருள் பேரில் வெறுப்பு இருக்கிறது என்று கண்டு அதைப் போக்கிக் கொள்ளுங்கள். துன்பம் தருவனவற்றை விட்டு ஒதுங்கியிருக்கலாம். உணர்ந்து தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவையே இல்லை. நீங்கள் சிந்திக்க சிந்திக்க இக்கருத்து உங்கள் மன ஆழத்திற்குப் போய் ஒரு மதிப்புடைய நல் விளைவை வாழ்வில் உண்டாக்கும்.

வெறுப்பின்மைதான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகவே அன்பு ஒளிர் விளக்காகும்.

ஆன்மீக ஒளி


நாம் உலகில் வாழ்ந்து வருகின்ற போது எத்தனையோ இடையூறுகள் வருகின்றன. அப்போது நாம் தேக்கமடைகின்றோம். சோர்வடைகின்றோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமானால் இவையாவும் மனிதன் தானாகவே ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமே ஒழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வசதிகள் யாவும் இயற்கை ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டே இருக்கின்றன. பற்றாக்குறை என்பது மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்வதுதான். மனிதன் மனிதனை உணர்ந்து கொள்ளாமை தான் பெருத்த குறைபாடாக இருந்து வருகிறது. ஆன்மீக அறிவு பரவினால் தான் மனிதன் இக்குழப்பங்களிலிருந்து விடுபட முடியும். ஆன்மீக அறிவு ஏற்படும் போதுதான் அன்பு மலரும். அன்பு மலர்ந்தால் தான் பிற ஜீவனிடமிருந்து கருணை பிறக்கும். அப்போதுதான் மனிதன் ஒத்தும், உதவியும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இன்பம் காண முடியும்.

இயற்கை பரிணாமத்தில் ஐயறிவு உயிரின் தொடர்பாகவே மனிதன் தோன்றியிருப்பதால் அவன் இன்னும் ஐம்புலன் அறிவிலேயே சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறான். ஆறாவது அறிவின் நோக்கமாகிய தன் உணர்வு என்ற கட்டத்திற்கு இன்னும் அவன் முனையவில்லை. ஆகவேதான் மறதியில் இருந்து வேதனையும் சிக்கலும் அனுபவிக்கிறான். எனவே சிந்தனை ஆற்றல் மிக்க எல்லோரும் ஆன்மீக ஒளி பரவ வேண்டும் என்ற நன்நோக்கத்தை சதா நினைவில் இறுத்தி வரவேண்டும்.

நாம் எல்லோரும் சமுதாயத்தின் மத்தியில் இருந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே சமுதாய அமைப்பு நல்ல முறையில் இருந்தால் தான் நாமும் நல்லமுறையில் வாழ முடியும். எனவே நாம் சமுதாய நன்மையிலே நாட்டம் கொண்டு கடமையைச் செய்து வருவோமானால் நிச்சயம் நம்வாழ்வு மேம்பாடடையும். நம் குடும்பத்தில் முதலில் இனிமையை வளர்க்க வேண்டும். ஆன்மீக மணம் கமழும்படி நினைவோடு செயலாற்ற வேண்டும். அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கும்படி பழக்கி வர வேண்டும். உணர்ச்சி வயப்பட்டு செலாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். மனோதிடம் வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை நன்கு உணர்ந்து கொண்டு எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். அப்போதுதான் துன்பம் இன்றி வாழ முடியும்.

நமக்கு வேண்டுவது என்ன? அதை அடையும் முறையில் ஏதும் தவறில்லாமல் இருக்குமா? இதனால் பிறர்க்கு ஏதும் கேடுண்டாகாமல் இருக்கமா? என்றெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும். இதற்குத் தவமும் தற்சோதனையும் பெரிதும் பயன் அளிக்கும். இவை இரண்டும் நம் இரு கண்களுக்கு ஒப்பாகும். இவை வாழ்வை ஒளிமயமாக்கி இன்பத்தை கூட்டித் தரும்.


பக்தி ஞானம்


நமது குண்டலினி யோகத்தின் சிறப்பும், பயனும் ஆன்மீக நாட்டமுடைய அன்பர்களால் நன்கு உணரப்பெற்று வருகிறது. பயிற்சியில் தேறியவர்கள் தொண்டு இனி உலகுக்கு அதிகமாகத் தேவைப்படும். குடும்ப கடமைகள் கெடாத முறையில் ஓய்வு நேரங்களை ஒதுக்கி அருட்தொண்டு புரிய தயாராக இருக்கும்படி அறிவித்து மகிழ்கிறேன்.

அன்பர்களே நமது குண்டலினியோகம் மெய்விளக்க வாழ்க்கை வழியாகும். பக்திவழி, ஞானவழி என்னும் இருவழிகளில் குண்டலினி யோகமானது ஞானவாழ்வை விளக்கி வழி நடத்துவதாகும். இதனால் இது பக்தி வழியைப் புறக்கணிக்கின்றதாகாது. சில அன்பர்கள் பக்தி வழி, ஞான வழி இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக எண்ணுகிறார்கள். அது தவறு. தனிமனிதன், சமுதாயம், இயற்கை மூன்றையும் நன்குணர்ந்து வாழ்வை வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நடத்த ஏற்ற அறிவின் விளக்கமே ஞானமாகும். அறிவில் முழுமை பெற்ற அத்தகைய ஞானிகள் வாழும் வாழ்க்கை வழியே, ஞானவழியாகும்.

மெய்ப்பொருள் உணர்ந்த அறிவின் முழுமை, ஒழுக்கம், கடமை, ஈகை என்ற முற்சிறப்பும் கொண்ட அறநெறியை பின்பற்றி வாழும் உயர்பண்பு இவையே ஞான வழியின் சிறப்பாகும். இச்சிறப்பான வாழ்க்கை நெறியே மனித குலம் முழுமைக்கும் நலம் தரும். அதனால் எல்லா மக்களும் ஞானவழியே பின்பற்றி வாழவேண்டும் என அறிவறிந்த ஞானிகள் எண்ணினார்கள். அறிவிலே முழுமை பெறும் தகுதிபெற்றாலன்றி ஞானவாழ்வை உணர்ந்து பின்பற்ற முடியாது. ஆகவே இறைநிலை நாட்டத்தில் பழக்கம் ஏற்பட ஆலயவழிபாடும், அறநெறி பழக்கத்தில் நிலைபெற சடங்குமுறைகளும் வகுக்கப் பெற்றன.

இயற்கையின் இயல்பூக்கச் சிறப்பு, பொட்களின் தன்மை, வினையின் விளைவு இவற்றை அறியாதவர்களும், ஞானவழி வாழ்வைப் பின்பற்றி வாழ வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறையே பக்திவழியாகும். தனக்குத் தெரிந்ததும், தன்பழக்கத்திலுள்ளதும் இவையே உயர்ந்த நெறி என்று எண்ணும் பிடிவாதக்காரர்கள் ஞானம் வேறு, பக்தி வேறு என்று பிரித்து வேறுபடுத்திக் கூறுகிறார்கள். கருத்துப் பிணக்குகளும் உண்டாகின்றன.

முட்டையிலிருந்து குஞ்சு உருவாகி வெளிவருகிறது. அதுவரையில் அடைகாப்பதும், ஓடு உடையாமல் காப்பதும் அவசியம். ஓட்டைப் போன்றது மதம். அடைகாப்பது போன்றது பெரியோர்கள் பாதுகாப்பும், போதனைகளும் சடங்குமுறைகளும், குஞ்சு உருவாகிய பின் ஓடு வேண்டியதில்லை. அடைகாப்பதும் தேவையில்லை. இது போன்றே அறிவின் முழுமை பெற்ற பின் மதமோ, சடங்குகளோ தேவையில்லை. ஓடும், அடைகாப்பதும் ஒக்கும் பக்தி. உருவாகி வெளிப்பட்ட குஞ்சு போன்றதே ஞானம். பக்தி பக்குவப்படுத்தும் வழி. ஞானம் முழுமை பெற்ற நிலை. காயைப் போன்றது பக்தி. பழம் போன்றது ஞானம், காய் இன்றி பழம் இல்லை. பக்தியின்றி ஞானம் இல்லை. எனவே வாழ்வின் சிறப்பறிந்து இரண்டு நிலைகளையும் போற்றி நமது கடமையாற்றி வாழ்வோம்.


பக்தி


தொடர்ந்துவந்த பழக்கத்தால், எனக்கும் கற்பிக்கப்பட்ட முறைப்படி, வணக்க முறைகளை நான் நடத்தி வந்தேன்.

வணங்குபவன் யார்? வணக்கத்துக்கு உரியவர் யார்? வணங்குவதன் பயன் இதுவரை என்ன? இனி என்ன? என்று ஆராய்ந்தேன். என் அறிவு நிலையை இந்த அளவுக்கு உயர்த்துவதற்காக முன்னோர்களால் கற்பிக்கப்பட்டது, தான் வணக்க முறை என்று அறிந்துகொண்டேன். எந்த ஒரு பெரும் அகண்டாகார அரூப சக்தியை அறிய என்னை வணங்கச் சொன்னார்களோ, அந்தச் சக்தி என்னிடத்திலும் நிறைவு பெற்றுத்தானே இருக்க வேண்டும்? அப்படி என்னிடத்தில் நிறைவு பெற்று இருந்தால், நான் வேறு அது வேறாகப் பிரிந்து இருக்க முடியாது. ஆகையினால், என்னிலை என்ன? என்று ஆராய வேகம் கொண்டேன். அன்று முதல் வணக்கத்தை விட்டுவிட்டேன்.

எந்தப் பொருளோ சக்தியோ ஒருவன் தன் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கருதினாலும் அதையே அவன் வணங்குகிறான். அவனவன் அறிவின் வளர்ச்சிக்கேற்றவாறு வணக்கத்திற்குரிய பொருள்கள் மாறுபடும்.

ஆகாரம் தான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கொண்டவன் உணவை வணங்கினான். ஆகாரம் பூமியில் கிடைக்கிறது. அதுதான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கண்டவன் பூமியை வணங்கினான். தண்ணீரில் வாழ்வுக்கு அனைத்தும் கிடைக்கிறது அதுதான் ஆதாரம் என்று கொண்டவன் தண்ணீரை வணங்கினான்.

மேலும் மேலும் ஆராய்ச்சி வேகம் கூடக் கூட, காற்று, ஆகாயம், வெட்டவெளி என்றும், ஆயுதங்கள் சிலைகள் செங்கல் முதலியவற்றால் தொழில் செய்து பிழைத்தவன் அவையவைகளை அவன் வாழ்வின் ஆதாரப் பொருள் என்றும் வணங்கினான், வணங்குகிறான்.


அறிவும், அறமும் சிறப்படைய வேண்டும்


மனித வாழ்வு சிக்கல் நிறைந்தது. பொறுப்பு மிக்கது. அறிவின் உயர்வும் விளக்கமும் செயலின் திறமையும், நேர்மையும்தான் வாழ்வின் தேவைகளை நிறைவாக்கி வெற்றி பெறச் செய்யும். வாழ்வின் விளக்கத்தைச் சிந்தனையாலும் செயல் விளைவுகளாலும் கண்ட முற்காலத்திய அறிஞர் பெருமக்கள் சுருக்கமாக மனிதகுல நல்வாழ்வுக்கு இறைவழிபாடும் அறநெறியும் இன்றியமையாத தேவைகள் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு உடல் நிலையில் எல்லை கட்டிய அறிவுடையோர்களுக்கு கற்பனையால் வடிவமைக்கப்பட்ட தெய்வநிலையையும், சடங்குகளாலும் திட்டமிடப்பட்ட அறநெறியும் கூடிய மதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். எல்லாத் தோற்றத்திற்கும் குணங்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்து மறைபொருட்களாக இயங்கும், இயக்கும் உயிர், மனம், அறிவு, சீவகாந்தம், தெய்வம் ஆகிய மறை பொருட்களை உணர்ந்து கொள்ள ஏற்ற போதனை சாதனை முறைகளாலும் செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நீதியை உணர்ந்து எண்ணம், சொல், செயல்களை அளவோடும் முறையோடும் ஆற்றி மெய்ப்பொருள் உணர்ந்த தெளிவோடு வாழத்தக்க சமய நெறியினை உருவாக்கித் தந்துள்ளார்கள்.

எனினும் இக்காலத்திலும் மக்களால் அவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளவோ, முறையாகப் பின்பற்றி பயனடையவோ முடிவில்லை. காலத்திற்கேற்றபடி விளக்கி வழிகாட்டக் கூடிய ஆன்மீக தலைவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். மக்கள் மனம் குழப்பம் அடைந்துள்ளது. விளைவாக உலக மக்கள் வாழ்வில் சிக்கல், பிணக்கு, பகை, நோய்கள், குற்றங்கள், போர்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது விஞ்ஞானயுகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பல நாட்டில் குடியேறியும், பலநாட்டு மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் குவிந்தும் வாழ்கின்றார்கள். போக்குவரத்து சாதனங்களாலும், செய்தித் தொடர்பு சாதனங்களாலும் மனிதகுலம் பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைப் பண்பாடு இவற்றில் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த நிலைமைக்குப் பொருந்துமாறு மனித அறிவுக்கு இறைநிலை உணர்வும், இறைவழிபாடும், அறநெறியும் விளங்கிக் கொள்ளவும் பின்பற்றவும் ஏற்றமுறையில் போதனை சாதனை வழிகள் தேவையாக உள்ளன.

அறியாமை, பழக்கம், உணர்ச்சிவயம் என்ற மூன்றாலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்றவாறு அறிவாட்சித் தரத்தோடு வாழும் மக்களைச் சட்டங்களைக் காட்டி அதிகாரம் செய்தோ, இறந்த பின்னர் சொர்க்கம், நரகம் கிட்டுமென்று ஆசைகாட்டியும், அச்சமூட்டியும் நல்வழிப்படுத்த முயலும் மதங்கள் மூலமோ திருத்தி வாழ்வில் அமைதி காண முடியாது.

இயற்கையாக அமைந்துள்ள பேராற்றலான சிந்தனையாற்றலைத் தூண்டி விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூடிய விளக்கத்தின் மூலமும், பயிற்சிகள் மூலமும் தனி மனிதனின் அறிவிலும் அறத்திலும் சிறப்படைய வேண்டும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக