புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
2 Posts - 1%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
429 Posts - 48%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
29 Posts - 3%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  -  3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரியின் தத்துவங்கள் - 3


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:04 am

ஒலி, ஒளி, எண்ணம்


ஒலி மற்றும் ஒளியின் வேகம் நொடிக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல்கள் என்று அறிவியலார் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் அவர்களால் எண்ணங்களின் வேகத்தைக் கணக்கிட இயலவில்லை.

எங்கோ தொலைதூரத்தில் ஒலிபரப்பப்படும் இனிமையான பாடலை வீட்டிலிருந்தபடி கேட்டு மகிழ்கிறோம். மின்சாரத்தால் ஒலியலைகளை ஈதர் அலைகளாக மாற்றிக் காற்றுடன் கலந்துவிடுகின்றனர். அந்த ஈதர் அலைகளை நம் வீட்டில் வானொலிப் பெட்டியிலுள்ள கருவி கேட்பு ஒலியாக உடனுக்குடன் மாற்றிவிடுவதால் நம்மால் கேட்க முடிகிறது.

அதே போலத்தான் நிலத்திலிருந்து படங்கள், உரைகள் விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் செயற்கைக் கோளுக்கு அனுப்பப்பட்டு செயற்கைக் கோள் மூலமாக நம் வீட்டுத் தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்டு நாம் தொலைக்காட்சியைப் பார்த்து மகிழ்கிறோம்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அமெரிக்காவிலிருந்து ஒருவர் பேசும்போது இந்தியாவில் உள்ள ஒருவரால் அதைப் புரிந்து கொண்டு மறுமொழியைத் தொலைபேசி மூலம் தெரிவிக்கும்போது கேட்டு மகிழ்கிறோம்.

அதுபோல எண்ணங்களில் பயிற்சியுடைய ஞானியால், தான் விரும்பும் எண்ணங்களை ஆன்மீக அலைகளாக மாற்றி உலகின் எந்தக் கோடியில் இருப்பவராயிருந்தாலும் அவர் மனதில் தம் எண்ணங்களைப் பதிய வைக்க முடியும்.

மின்னலின் வேகத்தைவிடவும் வேகமாக ஞானி, சாந்தியையும் சமாதானத்தையும் எண்ண அலைகள் மூலம் உலகின் எவ்விடத்திற்கும் அனுப்ப முடியும்.

மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளும் சக்தியைப் பெருக்கிக் கொண்டவர்களால் நல்ல எண்ணங்களையே உலகில் பரப்ப முடியும். இப்போது பரவிவரும் தீவிரவாத கொடுமைகளுக்கு, உலகில் தீய எண்ணங்கள் தீய சக்திகளால் பரப்பப்பட்டு வருவதே காரணமாகும்.


அறிவின் தரம்


மனிதனின் அறிவின் தரத்தை பிரிவுகளாகப் பிரிக்கலாம். பசி, தாகம், பாலுணர்ச்சி வேகம் ஆகியவற்றைச் சமன் செய்து கொள்ளுதல் மட்டும்தாம் வாழ்க்கை என்ற அளவில் சில பேருக்கு அறிவு நின்றுவிடும். இதுவே முதல் படி. முன்னோர்கள் சொன்ன அன்னமயகோசம் இது என்று சொல்லலாம்.

உடல் தேவைகள் நிறைவு பெற்றுவிட்டன என்ற பிறகு அவற்றுக்கப்பால் மனதின் தேவை என்று ஒன்று வரும். இயற்கையழகுகளை ரசித்தல், அவற்றைப் போல போலி செய்தல் என்ற அளவில் அறிவு விரிந்து சிலருக்கு நிற்கும். இதுவே இரண்டாம் படி, இதனை முன்னோர்கள் சொன்ன மனோமயகோசமாகக் கொள்ளலாம்.

அறிவின் தரம் இன்னும் ஒருபடி உயரும்போது இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் இயற்கை நியதிகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாக அறிவு எழுந்து நிற்கும். இதுவே மூன்றாம் படி, இதனை முன்னோர்களின் விஞ்ஞானமயகோசம் எனலாம்.

அப்படி நியதி தவறாமல் இயக்கம் நடத்தும் அந்த இயற்கையின் தத்துவமென்ன? அதனை ஆராயும் நான் யார்? எனக்கும் அதற்கும் தொடர்பென்ன? உறவென்ன? என்று ஆராயும் பக்குவம் பெற்ற அறிவின் நிலையே அதன் நான்காம் படி. இதனையே முன்னோர் சொன்ன பிராணமயகோசத்துக்கும், அதன் முடிவான ஆனந்தமய கோசத்திற்கும் ஒப்பிடலாம்.


அகக்கதவைத் திறவுங்கள்


எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையை விரித்துக் கொண்டும் வேண்டியதோ, வேண்டாததோ வாய்ப்புக் கிடைத்தபடி சில பொருட்களை, சில மக்களை ஒட்டிப் பிடித்துக் கொண்டும் இருப்பதுமானது அருள்வழி நாட்டத்திற்கும் தேட்டத்திற்கும் தடையான உள்ளன. எனக்கு வேண்டியனவெல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்ற உண்மை அறிவில் அவசியமற்ற பற்றுக்களை விட்டுவிட்டால் அருள்வழி வாயில் திறந்து விடுகிறது. மனிதன் கற்பனையால் இன்பமென்று நினைத்துக் கொள்ளும் பற்றுதலே அருட்கததை அடைத்து வைக்கிறது. ஆக அவனேதான் அந்தக்கவை திறந்து கொள்ள வேண்டும்.


வேதாத்திரியின் புதிய கல்விமுறை


உலகில் உள்ள மனித இனம் தன் கருத்துக்களைக் கூறுவதற்கும்இ அறவழியில் நடப்பதற்கும்இ பிறர் கூறும் கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடப்பதற்கும் மிக இன்றியமையாத கூறாகக் கல்வி இன்று விளங்குகிறது. மனித மனம்இ நடத்தைஇ பழக்கவழக்கங்கள்இ செயல்கள்இ சொல்இ இயற்கை மற்றும் செயற்கை பற்றி அறிந்துகொள்ளுதல் போன்றவைகளுக்கு அடிப்படையாய் இருக்கும் கல்வியை மகரிஷி எப்பார்வையில் எத்தனிக்கிறார் என்பதைக் காண்போம்.

கல்வி


எந்தக்கல்வி மக்களின் வாழ்வை இனிதாக்கி உள்ளத்திலெழும் கேள்விகளுக்கெலாம் அறிவு விடை கண்டிடுமோ அக்கல்வி தான் சிறந்த கல்வியாக இருக்க முடியும். பொதுவாக எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோஇ மனவலிமையை வளர்க்கச் செய்யுமோஇ விரிந்த அறிவைத் தருமோஇ ஒருவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்கச் செய்யுமோ அதுவே சிறந்த கல்வி என்று விவேகானந்தர் கூறுகிறார். இதுவே, மகரிஷி பார்வையில் கல்வி என்பது எழுத்து, தொழில், ஒழுக்கம், ஞானம் கற்பதும் பின் வழுவாமல் நிற்பதே என்கிறார். மேலும், எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஒழுக்க பழக்கங்கள், உணர்த்தும் முறையே கல்வி. மேலும், கல்வியிலே சிறந்த கல்வி ‘அருட்கல்வி’ என்றும் இக்கல்வியை உலகிணைந்த கல்வி முறையாக மக்களுக்குக் கொண்டு வரவேண்டும்.

இயற்கைக் கல்வி


உலக மனித இயங்கியலின் விளைவாகத் தேவைப்படும் தேவைகளையும், அவைகளை நிறைவு செய்துகொள்ள, பொருட்கள் உற்பத்தி, அனுபோகம் இவைகளை இயற்கை நெறிக்கு அல்லது நியதிக்கு முரணாகப் பெறாமல் இயற்கையோடு இயைந்து அவற்றின் கூறுகளை ஆராய்ந்து அவ்வமைப்புகளை அறிவதற்கு உதவியாய் இருப்பது கல்வியாகும். இந்த இயற்கையமைப்பை அறிந்து இனிமையாக வாழும் ‘அறிவாட்சித் திறத்தை’ உருவாக்க உயர்த்திக் கொள்ளும் பயிற்சியே கல்வி என்கிறார்.

அடிப்படைக் கல்வி


அடிப்படைக் கல்வியாக மாணவர்களுக்குப் பதினோடு வயது முதல் பதினைந்து வயது வரை எழுத்தறிவோடு வேளாண்மை, நெசவு, வீடுகட்டுதல், விஞ்ஞானக் கருவிகள் செய்தல், சமையல் செய்தல் போன்ற கல்வி முறைகளை இளம் வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார். மேலும், பதினாறு முதல் இருபது வரையில் (அவரவர்களுக்கு விருப்பமானவற்றை) உயர்கல்வியாகக் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறார்.

இவ்வாறாக, கல்வி போதிக்கப்படும் பள்ளிகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கவும், தானியங்களை உற்பத்தி செய்யவும் போதுமான அளவிற்கு நிலங்களும், பால் கறக்கும் மாடுகளும், பள்ளிகளுக்கு அவசியம் வேண்டும் என்கிறார்.

கல்விமுறை மட்டுமின்றி மாணவர்களுக்கு உணவு முறையையும் சிறப்பாக எடுத்தியம்புகிறார். காலை நேரத்தில் புஞ்சை நிலத்தில் விளையும் பயிர்களைக் கொண்டு கஞ்சியும், பகலில் அரிசிச்சோறும், காய்கள், பருப்பு, மோர், தயிர், நெய் இவற்றையும் சேர்த்து எளிய உணவாக அளிக்க வேண்டும்.

விளையாட்டைப் பொறுத்தமட்டில் எந்த எந்த விளையாட்டு மென்மையாகவும், அறிவுக்கூர்மை பெற உதவியாகவும் இருக்கிறதோ அத்தகைய விளையாட்டில் மாணவர்களைக் கட்டாயம் ஈடுபடுத்த வேண்டுமென்கிறார்.

புதிய கல்வி முறையால் விளையும் நன்மைகள்


இந்தக் கல்வி முறையின் மூலம் பலவகையான நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதாரம், நாட்டின் உற்பத்தி விகிதம் இதற்கேற்றவாறு கல்வி அளிக்கப்படுவதினால் கல்வியில் முழுத்தேர்ச்சி பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சிறந்த நிபுணராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், கல்விக்காக அரசாங்கம் செலவழிக்கும் பணம் மிச்சப்படுகிறது. கல்விக்கூடமே சிறந்த தொழிற்கூடமாக மாறிவிடும்.

உலகில் உள்ள எல்லாச் செல்வங்களும் நிரந்தரமன்று. ஒருவன் சிறப்பாகப் பெறும் கல்விச் செல்வமே எக்காலத்திலும் அழியாச் செல்வமாகும். வேதாத்திரி கல்வியைப் பொருளாதார நோக்கிலும் மெய்ஞ்ஞான நோக்கிலும் பார்க்கிறார். இவரின் கல்வி போதனையில் மெய்ஞ்ஞானத்தில் ‘பிரம்மத்தை’ச் சிறப்பாக அறிய வேண்டுமென்கிறார்.




கடமையும் உரிமையும்


பிறந்த மனிதனுக்கு உலகில் பொருள் ஈட்ட, காக்க, துய்க்க, பிறர்க்கு உதவ, விரும்புவோரிடம் நட்புக் கொள்ள, இயற்கை எழில்களை ரசிக்க, சிந்தித்து தெளிந்து மகிழ முழு உரிமையுண்டு. வாழத் தெரியாதவர்களையும், வாழ இயலாதவர்களையும் சிறப்பாக வாழ வைக்கப் பொருள், ஆற்றல், அறிவு இவை மிக்கோருக்கு கடமை உண்டு. கடமையை உணர்ந்த இடத்தில் அதைப் பொறுப்போடு காலா காலத்தில் ஆற்றும் இடத்தில் உரிமை யென்ற உணர்வே எழ இடமில்லை. கடமை மறந்த இடத்தில் தான் உரிமை பல்வேறு வடிவத்தில் தோன்றுகின்றது.

பிணக்கு, அச்சம், பகை, வஞ்சம், போர் மற்றும் கூறப்படும் பழிச்செயல்கள் யாவும் உரிமை வேட்கையின் விளைவுகளே. உரிமை வேட்கையோ கடமை மறந்த இடத்தில் பிறந்ததேயாகும்.

சிந்தனை ஆற்றல் மிக்க அன்பா உனது கடமைகளை உணர்ந்து முறைப்படுத்திக் கொள். மனிதனுக்கு, உடல், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் என்ற ஐந்து வகையிலும் கடமையுண்டு. எனினும் ஒரு மனிதன் ஆற்றலுக்கேற்ப ஒன்று முதல் ஐந்துக்கும் கடமையின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஓம்பும் கடமையாகிய ஒன்று முதல் ஐந்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், ஒன்றால் மற்றது கெடாமலும், ஆற்றும் விழிப்பு என்றுமே எக்கடமையிலும் பிறழாத ஒழுங்கமைப்பை உருவாக்கித் தரும்.



உலக சமாதானம்


ஒவ்வொரு மனிதனும் உடலுக்கும் அறிவிற்கும் அவ்வப்போதைய தேவைக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப அனுபோகங்களை நாடுகின்றார்கள், தேடுகின்றார்கள், அனுபோகிக்கின்றார்கள். இன்ப துன்பங்களை அடைகின்றார்கள். ஆராய்கின்றார்கள். அனுபவ ஞானம் பெறுகின்றார்கள்.

எனினும் எங்கேனும் எப்போதேனும் மேலே சொன்னவைகளில் மனிதனால் மனிதனுக்குத் தடையோ, செயல் போட்டியோ ஏற்படின் பன்னெடுங்காலம் ஐயுணர்வின் நிலையில் செயல்பட்டு அடங்கியுள்ள உணர்ச்சி வேகம் மீறி காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற அறுகுண எழுச்சிகளாகி அவ்வக்காலச் சூழ்நிலை பலத்திற்கு ஒருவரையொருவர் துன்புறுத்தும் கொடுஞ் செயல்கள் நிகழ்கின்றன.

அறிவிலும் பண்பிலும் உயர்ந்து வரும் மனித இனம் உலக மக்கள் அனைவருக்கும் உடலியக்கத் தேவைகளான தொழில், உணவு, உடை, இடம், வாழ்க்கைத் துணை இவைகளையும், அறிவியக்கத் தேவைகளான கல்வி, ஒழுக்கம், சிந்தனை சூழ்நிலை இவைகளையும் சமுதாயக் கூட்டு முறையில் குறைவுபடாமல் பெற்று அனுபவித்து வாழ வழி கண்டுவிட்டால் அன்றே மனித இனத்தில் தனிமனிதன் வாழ்வில் சமாதானமும் அதை அடிப்படையாகக் கொண்டு உலக சமாதானமும் ஏற்படும்.


அறிவும் குணங்களும்


தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தால் மனிதனுடைய உருவம் பலதரப்பட்ட ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எண்ணிறந்த உடல்களின் தொகுப்பே என்பது தெளிவாக விளங்குகிறது. மூதாதையர் விந்துநாதத் தொடர்பை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு உடலுக்கும் ஆதாரமான விந்து நாதத்தில் பல்லாயிரம் ஜீவன்களின் உடலில் விளைந்த ரசாயனங்கள் அனுபவித்த உணர்ச்சி நிலைகள் சேர்ந்தே இருக்கரங்களில் தொழில், திறமை, பழக்கம் அமைந்திருப்பது போல உடலில் பரிணாமத்தால் பல உருவங்களில் அடைந்த அனுபோகங்கள் தேவையுணர்ச்சிகள், செயலாற்றும் வேகம் இவைகள் அமைந்திருக்கின்றன.

ஆராய்ச்சியறிவின் பூரண அமைப்பைப் பெற்ற மனிதனுக்கு அறிவு வேகம் மீறி, தன் ஆதி நிலையாகிய அரூப சக்தியை அறிந்து கொள்ளும் ஆர்வம் எழுகிறது. உடலில் அமைந்துள்ள உணர்ச்சிகள் அறிவை அவ்வப்போது அதன் வழி ஈர்க்கிறது. இத்தகைய உணர்ச்சி, ஆராய்ச்சி, போட்டிகளே மனிதனுடைய வாழ்வாகிறது.

ஆகையால் மனிதன் உணர்ச்சிகளின் இயல்பறிந்து ஒழுங்காக உடல் தேவைகளை முடித்துக் கொள்ளவும் அனுபவங்களையும் ஆராய்ச்சியையும் கொண்டு, அறிவை உயர்த்தித் தன்னிலை அறிந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறான், தகுதியுடையவனாகிறான்.

வாழ்க்கை முறை


பிரம்மம் என்பது ஆதி நிலையைக் குறிக்கும் ஒரு வார்த்தை. அறிவிலே நுட்பம், கூர்மை, வேகம், சிந்திக்கும் ஆற்றல், ஆராய்ச்சித் திறமை இவை அதிகரிக்கப் பெற்ற மனிதன் பிரபஞ்சத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து ஆராய்கின்றான். ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தன்மைகளையும், காரணங்களையும் விளைவுகளையும் தெரிந்து கொள்ளுகிறான்.

இயற்கையின் ஆதிநிலை, அது அணுவாகிய நிலை, அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாமங்களாகிய அண்டங்கள், பொருட்கள், ஜீவராசிகள் இவற்றின் நிலைகள் இவையனைத்தையும் உணர்ந்து கொள்ளுகிறான். இயற்கை என்ற ஒன்றே மூலத்தின் பிரம்மமாகவும் பின்னர் அடைந்த பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் இணைந்து முடிவாக அறிவு என்ற ஆற்றல் சிறப்பாகவும் இருக்கிறது என அறிந்து கொள்ளுகிறான். இந்தத் தெளிவிலே இயற்கையே எல்லாமாகவும் இருக்கின்றது. நானும் அதுவே, இயற்கையே நான். நானே இயற்கை அல்லது பிரம்மம் என்ற ஓர்மை உணர்வு நிலையைப் பெறுகின்றான். இவ்விதமாகவே பிரம்மம் தான் என உணர்ந்த பேரறிவாளனை பிராம்மணன் எனக் கூறுகிறோம்.

அறிவு என்ற நிலையை அறிந்து விட்டதால் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தா உணர்வு உணர்ச்சியாகிய துன்பம் என்பது குறைய வேண்டும். இயற்கையாக உள்ள இன்பம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கனிவே அவன் வாழ்க்கை நோக்கமாகி விடுகின்றது. இத்தகைய கருணை உள்ளத்தோடு எண்ணம், சொல், செயல் இவைகளைப் பண்படுத்தி அளவு முறை அறிந்து விழிப்போடு பயன்படுத்தி வாழுகின்றான்.

பிரபஞ்சத்தில் ஆதியந்த பிரம்மம் அறிவு நிலையறிந்து சீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்து அப்பேரறிஞன் நடத்தும் அறநெறி பிறழாத ஒரு சிறந்த வாழ்க்கை முறையே பிராம்மணீயம் எனப்படும்.


உழைப்பாளிகளின் கடமை


உலக அரங்கில் தேசங்கள் ஒன்றோடு ஒன்று பிணக்குற்று பகை கொண்டு குழப்பங்கள் விளைவதும், ஒரே நாட்டில் தனி மனிதர் ஒருவரோடு ஒருவரோ, ஒரு குழுவினரோடு ஒரு குழுவினரோ, பிணக்கு கொண்டு பகைத்துக் குழப்பங்கள் விளைவதும் பொருளாதாரத் துறையிலும் அரசியல் முறையிலும் உள்ள குறைபாடுகளாலேயே ஆகும்.

பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே வாணிபம் இருந்தபோது உழைப்பிற்கே மதிப்பு இருந்தது. உழைப்பாளிகள் உயர்வாகக் கருதப்பட்டார்கள்.

பணத்தை ஒரு இயந்திரமாகக் கொண்டு வேகமாகவும் பரவலாகவும் நடத்தும் வாணிபத்தின் மூலம் தனி மனிதனுக்கு எளிதாக மிதமிஞ்சிய செல்வம் சேர வழி ஏற்பட்டதால், உழைப்பின் மதிப்பு குறைந்து பணத்தின் மதிப்பு மிகுந்தது. உழைப்பாளிகளை ஆதரவாகக் கொண்டு நடைபெறத் தொடங்கியது.

உழைப்பாளிகளிடம் வரி வாங்குவதைவிட வணிகர்களிடம் வரி வாங்குவது எளிதாக இருந்தது. நாளாவட்டத்தில் வணிகர்களுடைய ஆதிக்கத்திற்கே ஆட்சியதிகாரம் வந்துவிட்டது.

உழைப்பிற்கு மதிப்பு ஏற்பட வேண்டுமெனில் வாணிபமும் ஆட்சியும் உழைப்போர் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும், உழைப்பாளிகளே கூட்டுறவு முறையில் உற்பத்தி விற்பனை திட்டத்தை முயற்சியோடு நடத்தி, ஆட்சியையும் தங்கள் நலம் நாடும் அறிஞர்களிடம் ஒப்புவிக்க வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள். நீங்களே, கல்வியிலும் சிந்தனையிலும் உயர்ந்து வர ஏற்ற கல்வி முறையை அடைய முயலுங்கள். இதுவே நீங்கள் இன்று ஆற்றவேண்டிய கடமை.


vethathiri.org




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:11 am

அறவாழ்வுக்கு இலக்கணம்


எல்லாம் வல்ல மெய்ப்பொருள் (பிரம்மம்) இயக்க நிலையில் சக்தியாக உள்ளது, இயக்கம் அற்ற நிலையில் சிவமாக உள்ளது. சிவத்தின் எழுச்சி பெற்ற நிலை சக்தி. அதுவே எல்லா உயிரும். அதுவே உயிராக, உடலாக, மனமாக, அறிவாக உள்ளது. இதை உணர்ந்து எவ்வுயிருக்கும் துன்பம் தராத வாழ்க்கையை வாழ்வது தான் அறவாழ்வு. உயிர் உடலில் இருக்கும் வரை உலகில் வாழ்வதற்குப் பொருட்கள் தேவை அருளின்றிப் பொருளோ பொருளின்றி அருளோ அமைதியைத் தராது.

பிறருடைய தேவையை உணர்ந்து அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வது நன்மை பயக்கும். கொடுத்துப் பெறுவது ஈகை, இதைத்தான் ஐயம் இட்டு உண் என்றார்கள். தன்மதிப்பைக் குறைத்துக் கொண்டு பிறரிடம் கேட்டுப் பெறுவது பிச்சை. இதை ஏற்பது இகழ்ச்சி என்றார்கள். எப்போதும் பிறருக்கு நாம் உதவத்தயாராக இருக்க வேண்டுமே தவிர எதை யாரிடமிருந்து பெறலாம் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கலாகாது.

வெட்டவெளி இரகசியம்


ஒரு கண்ணாடியில் உருவம் தெரிகின்றது. ஒரே உருவம் அதைச் சுற்றி எத்தனை கண்ணாடிகளிலிருந்தாலும் அவை அனைத்திலும் பிரதிபலிக்கும். இதனால் உருவம் கண்ணாடிக்குப் போகின்றது என்பதில்லை. பிரதிபலிப்பேயாகும்.

இதே போன்று ஒளி, ஒலி என்ற இரண்டும் அணுவை விட்டு வெளி÷றுவதில்லை. ஒரு அணுவிலோ அல்லது அணுக்கூட்டத்தாலாகிய எந்த அளவான உருவத்திலோ ஏற்படும் ஒளி, ஒலி இவைகள் சுற்றியுள்ள அணுக்களிலும், அணுக்கூட்டத்தாலாகிய உருவங்களிலும் பிரதிபலிக்கின்றன.

பிரதிபலிக்கும் தன்மை அணுவுக்கு இயல்பு. ஆகையால் எந்தப் பிரதிபலிப்பும் ஒரு தொடரியக்கமாகிப் பிரபஞ்சம் முழுவதுக்கும் வியாபித்து விடுகின்றது. பிரதிபலிப்பில் உள்ள வேகமும், பிரதிபலிக்கும் செயலம் இடைவெளியாக உள்ள, எங்கும் நிறைந்த பேராதாரப் பெருவெளியில் அமைந்திருக்கின்றன.

ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பல மணிகள் போல் ஏகவெளியால் எல்லாப் பொருட்களும் இணைந்து இருக்கின்றன. அறிவு என்ற ஒரு இயக்கமும் இதே போல் மூளைக்கு அப்பால் வெளிச் செல்வதில்லை. பிரபஞ்சத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியும் மூளையிலேயே பிரதிபலிக்கின்றது, அறிவின் யூக வேக அளவுக்கு ஏற்றபடி காட்சியாகின்றது. ஒரு மூளையில் நடைபெறும் அறிவியக்கம் அதே அளவான ரசாயன அமைப்புப் பெற்ற எல்லா மூளைகளுக்கும் பிரதிபலிக்கின்றது.
ஆனால் பழக்கம், தேவை, திறமை, நுட்பம் என்றவைகளுக்கு ஏற்ப அறிவிற்கு அது காட்சியாகின்றது. எல்லாப் பொருட்களும் தோன்றக் காரணமாகவும் இருக்க இடமாகவும் அவைகளைத் தாங்கும் இயக்கும் சக்தியாகவும், ஒளி, ஒலி, அறிவு என்ற மூன்று விதமான எழுச்சி இயக்கத்தைப் பிரபஞ்சம் முழுவதுக்கும் வியாபிக்கச் செய்யும் பெரு வல்லமைப் பொருளாகவும் இருந்து கொண்டு பொருள் என்றே கூற முடியாதபடி புலன்களுக்கெட்டாமல் தான் அசையாத் தன்மையதாய் உள்ள போராதாரப் பெருவெளியில், அறிவுக்கு இது வரையில் எட்டியவைகளாகவும், இன்னும் எட்டாதவைகளாகவும் உள்ள எல்லா ரகசியங்களும் அடங்கியுள்ளன.



உணர்ந்தால் தெளிவு


உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை. உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.

உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது. உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு இந்த நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் கொள்ள வேண்டும்.


அகத்தவம் யோகநெறி


இயற்கையின் பரிணாமப் பூரிப்பில் உன்னதமான உடலையும் ஆறாவது அறிவு உட்பொருளாகவுள்ள உயிரையும் பெற்றுள்ளவன் மனிதன். இயற்கை வளங்களைக் கைத்திறனாலும் அறிவின் நுட்பத்தாலும் உருமாற்றி அழகுபடுத்தி அனுபவிக்கும் சிறப்புடைய வாழ்வு மனிதனுடையது. மனிதனுடைய வாழ்வே கலையாகத் தான் அமைந்திருக்கிறது. கலைத் திறன் கொண்ட மனித வாழ்வில், சிக்கலும், துன்பமும் விளையாமல் காத்து அமைதி நிலவச் செய்ய ஒழுக்கம், கடமை, ஈகை என்ற முக்கருத்து இணைப்பான அறம் வகுக்கப்பட்டது. அறநெறி வழுவாத வாழ்வு தான் மனித குலத்துக்கேற்றது. கலையும் அறமும் ஒன்றால் ஒன்று காக்கப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் சிறப்புச் சொல் தான் கலாச்சாரம் ஆகும். ஆச்சாரம் என்பது அறநெறி.

இந்த அறநெறி வயதுக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ப இரண்டு பிரிவுகளாகக் கூறப்படுகிறது. ஒன்று இல்லறம், மற்றொன்று துறவறம். இருவகை அறங்களுக்கும் பயிற்சி முறைகள் உண்டு.

இல்லறத்துக்கேற்ற பயிற்சி முறை இளமை நோன்பு, துறவறத்துக்கேற்ற பயிற்சி முறை அகத்தவம் ஆகும். பயிற்சி முறைகளோடு சேர்ந்து இளமை நோன்பு, இல்லறம், அகத்தவம், தொண்டு என நான்கு வகை வாழ்க்கைப் பிரிவுகளாகக் கூறப்படுகின்றன. இவற்றை முறையே பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று வடநூலார் கூறுவர்.

அறம் என்பது பிறர் நலம் கெடாது தான் வாழ்ந்து கொண்டே கடமைகளை வழுவாமல் ஆற்றி அறிவின் முழுமையைப் பெறுதல் ஆகும். அவ்வாறாயின் இல்லறம், துறவறம் இரண்டுமே தொண்டு தான். ஒன்று பொருளீட்டிக் காத்துத் துய்த்து, பிறர்க்கிட்டு ஆற்றும் தொண்டு. இது தான் இல்லறம். உயிரறிந்து, அறிவறிந்து, உடலறிந்து, சமுதாய அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு தொண்டாற்றும் முறையே துறவறம் ஆகும். இந்த நான்கு ஆஸ்ரமங்களையும் பிரித்துத் தனித் தனியே அமைப்பாகக் காட்டியுள்ளார்கள் வடநூல் எழுதியவர்கள். இம்முறை வேத காலத்திற்கே பொருந்தும். ஆனால் தமிழ்நாட்டுத் தத்துவ ஞானியர்கள் இந்த நான்கு பிரிவுகளையும் ஒன்றி இணைந்து மனிதனுக்கேற்ற பொதுவான வாழ்க்கை நெறியாக்கி உள்ளார்கள். எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்க பழக்கங்கள், இவற்றை இளமையிலேயே கற்க வேண்டுமென்றும், இந்த கல்வியை அடிப்படையாகக் கொண்ட குடும்பக் கடமைகளையும் ஏற்றுக் கொண்டு பொருளீட்டும் துறையிலும் ஈடுபட வேண்டும் என்றும், இல்லறம் ஆற்றும்போதே அகத்தவமும் குருவின் மூலம் பயின்று அறிவறிய வேண்டுமென்றும், அறிவறிந்த பேராண்மையினால் உடல் சமுதாயத்தால் ஆக்கவும், காக்கவும்படுகிற உண்மை உணர்வில் உழைப்பை சமுதாயத்திற்கும், அறிவு இறைநிலையின் கூறுதான் என்ற உணர்வில் அறிவை இறை நிலைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, தன்முனைப் பற்று சமுதாயத்திற்கே தனது வாழ்வு என்ற நிலையில் விரிந்த மனநிலையில் வாழ வேண்டுமென்றும், நான்கு பிரிவுகளையும் ஒன்றாகவே இணைத்து வாழ்வின் நடைமுறைக்கு ஒப்ப, எக்காலத்துக்கும், எந்த நாட்டுக்கும் ஒப்ப, வாழ்க்கை நெறியை வகுத்தார்கள். போதித்தார்கள், வாழ்ந்து காட்டினார்கள்.

இந்த நடைமுறை வழியிலே தான் நாம் நமது வாழ்வில் இல்லறத்தோடு அகத்தவம் ஆற்றி வருகிறோம். அகத்தவத்தின் பெருநோக்கம் தீய வினைப் பதிவுகளைக் களைந்து தூய்மை பெறுதல், அறிவை அறிதல், இறை நிலையுணர்தல், இறைநிலையே அறிவு எனத் தெளிதல், இறைநிலையே அறிவாக எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் நிறைந்து அகக்காட்சியாக இருக்கின்றதென்ற தெளிவில் எல்லா உயிர்களுக்கும் ஒத்தும் உதவியும் வாழ்தல் என்பதாகும்.


வறுமை


உழைப்பினை ஈந்து அதற்கு ஈடாக வாழ்க்கை ஆதாரப் பொருள்களைப் பெற்று அனுபவிக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் அளிக்காத சமுதாயத்தில் வறுமை உருவாகத்தான் செய்யும்.

1.உடலியக்கத் தேவைகளின் வேகம்.

2.அவற்றை நிறைவு செய்ய வேண்டிய பொருளில்லாமை

3.உரிமைக்கும் ஒழுக்கவுணர்வுக்கும் மற்றும் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டம் என்றதோர் சங்கடமான நிலை.

இம்மூன்று அம்சங்களின் கூட்டுத்தான் வறுமை எனும் பெயரைப் பெறுகிறது.


வேதாந்தம்


உலகில் மனித இனம் தோன்றி, உண்டு உறங்கி உலாவி அறிவு சிறிது வேகங்கொண்ட போது, அவனுடைய சிந்தனை முதலில் நாம் அடையும் இன்பத்திற்கு நம் வாழ்விற்கு ஆதாரமானது எது? என நாடியது.

அதன் விளைவாக உணவு தான் வாழ்விற்கு ஆதாரம் என்று கண்டான். அதுவே அவனுக்கு வாழ்வையளிக்கும் பெரும் பொருள் என்று கொண்டான். இறை என மதிக்கக் கூடியது, அதுவே நம் அனைவருக்கும் ஆதாரம், மூலம் என அனைவருக்கும் அறிவித்தான்.

மேலும் சிந்தனை வேகம் அதிகரித்தது. உணவு தான் நம் வாழ்விற்க ஆதாரம் எனினும் அது எங்கிருந்து தோன்றுகிறது என ஆராய முற்பட்டான். பூமியே உணவை அளிக்கும் ஆதாரப் பொருள் எனக் கண்டான்.

மேலும் சிந்தனை சக்தியால் ஆராய்ந்தான், தண்ணீர் இல்லாவிடில் உணவு பூமியில் உற்பத்தியாகாது ஆகவே மனிதனின் உணவு, பூமி இவற்றிற்கெல்லாம் தண்ணீர்தான் ஆதாரப் பொருள் என உணர்ந்தான். பின்னர் மேலும் மேலும் ஆராய்ந்து வெட்ப, தட்ப நிலைகளின் மாறுபாட்டினால் தான் மழை பெய்கிறது. தண்ணீரைவிட கனல் தான் பெரிது என்றும் பின்னர் அணுக்கூட்டச் சேர்க்கை, உருவமாகாத முன் கூடி சுழன்று, மோதி, இயங்கும் காற்றையும் அதற்கும் மேலான அணுவையும் அறிந்து கொண்டான்.

யூக வேகம் அதிகரித்து அணுவைக் கடந்தும் அணுவைத் தாங்கியும் அணுவுக்கு மூலமாகவும் உள்ள வெட்டவெளி என்ற சூனிய தத்துவத்தைக் கண்டான். இதுவரை விரிந்து கொண்டே வந்த ஆராய்ச்சி இங்க முடிவு பெற்றுவிட்டது.

இந்த விளக்கங்களின் தொகுப்பு தான் வேதாந்தம். அதாவது நிலம், நீர், அனல், காற்று, அணு, வெளி என்ற ஆறு தத்துவங்களையும் உடல், உணவு, அறிவு இவற்றையும் முறைப்படுத்தி எழுதிய விளக்கம் வேதாந்தம்.


கர்மயோகம்


கர்மம் என்றால் செயல், யோகம் என்றால் அற வாழ்வு என்று பொருள். மனத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு, நல்ல முறையில் தனக்கும் பிறர்க்கும், இப்பொழுதும், பிற்காலத்திலேயும், தீமை எழாது, நன்மையே விளைவிக்கக் கூடிய முறையிலே செயல்கள் ஆற்றி வாழும் பண்புதான் அறம் எனப்படுகிறது. ஆகவே, கர்மயோகம் என்பது விளைவைத் தெரிந்து கொண்டு, வினைகளை முறைப்படுத்திக் கொண்டு, அறநெறியோடு வாழக் கூடிய ஒரு தவவாழ்வு இதைக் கடமை அறம் என்று சொல்லலாம்.

கர்மயோகம் என்ற சமஸ்கிருதம் சொற்றொடருக்குத் தமிழிலே கடமை அறம் எனப்பொருள் கொள்ளலாம். கடமை அறம் நன்றி உணர்வு, விளைவறிந்த விழிப்பு நிலை என்ற இரண்டு தத்துவங்கள் அடங்கியது. கர்மயோகத்தின் சிறப்பு என்னவென்றால், செயலினாலேயே நலம் காண வேண்டும் என்பதாகும். அதற்கு மனவளம் வேண்டும், உடல் நலம் வேண்டும். சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் கடமையைப் புரிந்து கொண்டு நலம் செய்ய வேண்டியது. இதுவே அறவாழ்வு கடமை அறம். இதுவே கர்மயோகம் எனப்படுகிறது.



உணர்ந்தால் தெளிவு


உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை. உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.

உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது. உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு இந்த நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் கொள்ள வேண்டும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:17 am

உடலுழைப்பு


மிதமான உடலுழைப்பு உடலுக்கு வலிவும் உள்ளத்திற்கு அமைதியும் அளிக்கின்றது. உடலில் கெட்டிப் பொருள் வெப்பப் பொருள், காற்றுப் பொருள், உயிர் ஆற்றல் ஆகிய ஐந்து நிலைகளும் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாக, ஒவ்வொன்றுக்குள்ளும் மற்றவை அனைத்துமாக இணைந்து ஊடுருவி ஓடி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பூமியின் ஆகர்ஷ்ண சக்தியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கெட்டிப் பொருளை விட, நீர்ப் பொருள் லேசானது, விரைவாக ஓடி இயங்கக் கூடியது. இது போன்றே வெப்பம், காற்று, உயிராற்றல் ஆகியவைகளும் ஒன்றை விட ஒன்று லேசானதும், விரைவாற்றலும் உடையனவாக இருக்கின்றது. பாதவாக இயற்கை ஒழுங்கமைப்பின் மூலம் இந்த ஐவகைப் பொருட்களும் சில அளவில் மீறிய இயக்கவிரைவு பெற்று உடலை விட்டுப் பிரிந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த இயற்கை நியதிக்கு ஒத்த முறையில் நமது உடலை அசைத்து இயக்கிக் கொண்டிருந்தால் தான் எல்லா சக்திகளும் முறையாக ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் உடலும் நலமுடன் இருக்கும் அசைவு குறைவாகவோ, அசைவே இல்லாமலோ இருந்தால் பூமி பக்கமான இழுப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இரத்த தேக்கத்தை உண்டு பண்ணும், நாளா வட்டத்தில் அந்தப் பகுதி அணு அடுக்கு செயல் விரைவு குறைந்து இரத்த, வெப்ப, காற்று, உயிர் ஓட்டங்களுக்குத் தடை ஏற்படும் எனவே உடலை எப்போதும் முறையான இயக்கத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமுதாய மக்கள் உழைப்பினால் எல்லா வாழ்க்கை வசதிகளையும் பெற்று வாழும் ஒவ்வொரு மனிதனும் அந்த சமுதாய நலன்கள் வரண்டு போகாமலிருக்க தன் உழைப்பால் பொருளுற்பத்தியோ அல்லது தொண்டோ செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். இல்லையேல் சமுதாய நலம் வரண்டு போகும். வாழ்வில் அமைதி கிட்டாது.

எனவே உடலுழைப்பின் மூலம் தனது இரத்த ஓட்டத்தை ஒழுங்குசெய்து உடல் நலத்தை பேணிக் கொள்ள முடிகிறது. சமுதாயத்திற்கும் கடமை செய்ய முடிகிறது. மித மிஞ்சிய உழைப்பு உடல் நலத்தைக் கெடுக்கும். உடலுழைப்பு இல்லாமல் அறிவைக் கொண்டு சமுதாயத்திற்கு தொண்டாற்றித் தொழில் புரிந்து வாழ்பவர்கள் முறையான உடல் பயிற்சியின் மூலம் இக்குறையை ஈடு செய்து கொள்ளலாம்.
ஆசனப் பயிற்சிகள் பல இருக்கின்றன. அவரவர்கள் தொழிலுக்கு ஏற்றபடி உடலுழைப்பை ஈடு செய்ய ஏதேனும் சில முறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்து வருவது நல்லது. பல கோணங்களில் உடலை வளைத்து நிறுத்தும்போது உடலில் புவிஈர்ப்பு நிலை வேறுபடுகிறது. இதன் மூலம் உடலியக்கம் ஊக்குவிக்கப்படுகிறது.

உடலில் உள்ள சுரப்பிகள் நன்கு தொழில் புரியத் தூண்டப்படுகின்றன. இதன் மதிப்பை மாக்கோலக் கவியில்

"உழைப்பினால் உடலும் உள்ளமும்
உலகமும் பயன்பெறும் உணர்வீர்."

என்று விளக்கியிருக்கிறேன்.


பற்றற்ற நிலை


தேவையுணர்வாலும் தொடர்ந்து வந்த பழக்கத்தாலும் கிடைத்துள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் அறிவின் வளர்ச்சிக்கேற்றவாறு ஒவ்வொரு மனிதனும் தேசம், மதம், ஜாதி, மொழி, இனம், பொருட்கள், பந்துக்கள் என்றவைகள் மீது உரிமை கொண்டாடுகிறான். அவ்வந்த எல்லையில் குறுகியும் நிற்கிறான். இத்தகைய நினைவு நிலையை பற்று என்று சொல்லுகிறோம்.

இவ்வகையான பற்றுதல் என்ற நினைவு நிலையால் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு வகையால் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் கற்பனையினால் மனிதனிடம் கர்வம், பொறாமை, பயம், வறுமை, பஞ்சமா பாதகங்கள் தோன்றுகின்றன. பலவிதமான துன்பங்களும் விளைகின்றன.

மனிதனின் அனுபோக அனுபவ ஆராய்ச்சிகளினால் அறிவு வளர்ச்சி பெற்று தன்னிலை விளக்கம் பெறும் போது உருவ அளவிலே மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் உயிர் என்ற நிலையால் ஒன்றுபட்டே ஏகமாகவே இருப்பது அறிவிற்கும் தெளிவாக விளங்கி விடுகிறது. அவனுடைய ஞாபக எல்லை அகண்ட நிலையை அடைகின்றது. அப்போது பிரபஞ்சத்தில் உள்ள சில பொருட்களை மாத்திரம் தனதென்று எண்ணிக்கொள்ளும் பற்றுதல்கள் தானாகவே விடுபட்டுப் போகின்றன.

இவ்விதமாக உயிர் நிலையை அறிந்து கொண்ட பேரறிவின் சிகரமே பற்றற்ற நிலையாகும்.


ஆலய வழிபாடு


(1)வித்து முதிர்ந்தும் சிந்தனை வளர்ந்தும் புறவணக்க முறையிலே ஆலய வழிபாடு ஆற்றுவது அறிவின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். எனவே பருவமும் வந்து சிந்தனையும் மிக்கோர் அகநோக்குமுறையில் ஆலய வழிபாடு ஆற்றுவதே சரியான முறை.

(2)எல்லா மதங்களுடைய கோயில்களிலும் அகத்தவப் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். தன்னையறிவதே உலக மதங்கள் எல்லாவற்றிற்கும் முடிவான எல்லையாக உள்ளதால் இந்த அகத்தவத்தின் மூலம் மதங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுவிடும்.

(3)ஆன்மீக நாட்டமுடைய எந்த நிறுவனமும் இந்தத் தவ முறையை அவர்கள் வழிபாட்டோடு இணைத்துப் பயன்பெறலாம்.

அகந்தைக்குக் காரணம்


பேரியக்க மண்டல மலர்ச்சிகட்கு ஆதியானதே தெய்வம். அதன் மலர்ச்சி நிலைகளில் சிறந்த கட்டம்தான் மனிதன். அவன் தெரிந்தோ தெரியாமலோ அவனுள் அடங்கியுள்ள முழுமைப் பொருளானது, தான் உயர்ந்தவன் என்று ஒலிக்கிறது.

இதனால் எந்தத் தவறும் இல்லை ஆயினும் எல்லா உயிர்களும் என்போன்று பிறப்பிலும், அததற்குரிய செயல்களிலும் சிறப்புப் பெற்றுத் தானே விளங்குகின்றன. என்ற உண்மையை மறந்து, தான் மாத்திரம் உயர்ந்தவன் என்று எண்ணும் மயக்கம்தான் அவன் அறிவின் சிறுமையை விளக்ககின்றது.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே கால எல்லையைக் கொண்டு இயங்கும் உடலைப் பற்றியும் அதனூடு இயங்கும், உயிரைப் பற்றியும், அதன் படர்க்கை நிலையாகிய அறிவைப் பற்றியும் அறியும் வரை இந்த மயக்கம் ஒவ்வொருவருக்கும் இயல்புதான்.


அறிவும், அறமும் சிறப்படைய வேண்டும்


மனித வாழ்வு சிக்கல் நிறைந்தது. பொறுப்பு மிக்கது. அறிவின் உயர்வும் விளக்கமும் செயலின் திறமையும், நேர்மையும்தான் வாழ்வின் தேவைகளை நிறைவாக்கி வெற்றி பெறச் செய்யும். வாழ்வின் விளக்கத்தைச் சிந்தனையாலும் செயல் விளைவுகளாலும் கண்ட முற்காலத்திய அறிஞர் பெருமக்கள் சுருக்கமாக மனிதகுல நல்வாழ்வுக்கு இறைவழிபாடும் அறநெறியும் இன்றியமையாத தேவைகள் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு உடல் நிலையில் எல்லை கட்டிய அறிவுடையோர்களுக்கு கற்பனையால் வடிவமைக்கப்பட்ட தெய்வநிலையையும், சடங்குகளாலும் திட்டமிடப்பட்ட அறநெறியும் கூடிய மதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். எல்லாத் தோற்றத்திற்கும் குணங்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்து மறைபொருட்களாக இயங்கும், இயக்கும் உயிர், மனம், அறிவு, சீவகாந்தம், தெய்வம் ஆகிய மறை பொருட்களை உணர்ந்து கொள்ள ஏற்ற போதனை சாதனை முறைகளாலும் செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நீதியை உணர்ந்து எண்ணம், சொல், செயல்களை அளவோடும் முறையோடும் ஆற்றி மெய்ப்பொருள் உணர்ந்த தெளிவோடு வாழத்தக்க சமய ö நறியினை உருவாக்கித் தந்துள்ளார்கள்.

எனினும் இக்காலத்திலும் மக்களால் அவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளவோ, முறையாகப் பின்பற்றி பயனடையவோ முடிவில்லை. காலத்திற்கேற்றபடி விளக்கி வழிகாட்டக் கூடிய ஆன்மீக தலைவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். மக்கள் மனம் குழப்பம் அடைந்துள்ளது. விளைவாக உலக மக்கள் வாழ்வில் சிக்கல், பிணக்கு, பகை, நோய்கள், குற்றங்கள், போர்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது விஞ்ஞானயுகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பல நாட்டில் குடியேறியும், பலநாட்டு மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் குவிந்தும் வாழ்கின்றார்கள். போக்குவரத்து சாதனங்களாலும், செய்தித் தொடர்பு சாதனங்களாலும் மனிதகுலம் பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைப் பண்பாடு இவற்றில் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த நிலைமைக்குப் பொருந்துமாறு மனித அறிவுக்கு இறைநிலை உணர்வும், இறைவழிபாடும், அறநெறியும் விளங்கிக் கொள்ளவும் பின்பற்றவும் ஏற்றமுறையில் போதனை சாதனை வழிகள் தேவையாக உள்ளன. அறியாமை, பழக்கம், உணர்ச்சிவயம் என்ற மூன்றாலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்றவாறு அறிவாட்சித் தரத்தோடு வாழும் மக்களைச் சட்டங்களைக் காட்டி அதிகாரம் செய்தோ, இறந்த பின்னர் சொர்க்கம், நரகம் கிட்டுமென்று ஆசைகாட்டியும், அச்சமூட்டியும் நல்வழிப்படுத்த முயலும் மதங்கள் மூலமோ திருத்தி வாழ்வில் அமைதி காண முடியாது.

இயற்கையாக அமைந்துள்ள பேராற்றலான சிந்தனையாற்றலைத் தூண்டி விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூடிய விளக்கத்தின் மூலமும், பயிற்சிகள் மூலமும் தனி மனிதனின் அறிவிலும் அறத்திலும் சிறப்படைய வேண்டும்.

ஒழுக்கம் ஏன்?

இன்பம் துன்பம் என்றவைகளைத் தவிர வேறு பயன் ஒன்றும் இல்லை. எண்ணத்தைத் தவிர்த்து ஒரு நிகழ்ச்சியுமில்லை. இயற்கையைத் தவிர்த்து ஏதும் இல்லை. இன்ப துன்பங்களை ஆதாரமாகவும் அடிப்படையாகவும், கொண்டு எண்ணத்தின் இயல்பு, இயக்கம் இவைகளை அறிந்து ஒழுங்குபடுத்தி சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப இயற்கையின் வல்லமைகளையும் வளங்களையும் பயனாகக் கொண்டு வாழ்வதே, மனித இனத்துக்குத் தகுதியானதும் சிறந்த முறையும் ஆகிறது.

அறிவின் நிலையிலும் உடல் வலுவிலும் பருவங்களிலும் பல பேத நிலையில் மனிதர்கள் எப்போதும் இருந்து வருவதால் சமுதாயம் என்ற வகையில் இவ்வேற்றத் தாழ்வுகளைச் சரிப்படுத்தி நிரவி அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டியது அவசியமாகி விட்டது. இது கடமையாகவும் உள்ளது.

உடல் கருவிகளுக்கு உபகருவிகளைத் தோற்றுவித்துக் கொண்டு ஒருவர் பலர் வாழ்விற்கு நன்மையோ, தீமையோ விளைவிக்கும் ஆற்றலும், செயற்கை உணவுப் பொருள்களில் ரசாயன வேகத்தை அதிகரிக்கச் செய்து உபயோகிப்பதால் பல்வேறு உணர்ச்சிகளும் எழுச்சியடைந்து இயங்கும் இயல்பினையும் மனிதர்கள் பெற்று விட்டதால், ஒருவர் எண்ணம், சொல், செயல் இவைகளால் அவருக்கோ, மற்றவர்களுக்கோ, அப்போதோ, எதிர்காலத்திலோ, உணர்ச்சிக்கோ, ஆராய்ச்சி அறிவிற்கோ துன்பம் ஏற்படாதவாறு வாழ்க்கையில் ஒழுக்கங்களைக் கற்பித்துக் கொண்டு அதன்படி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.



இறைநிலை அறிவு

இறைவழிபாடும் அறநெறி வாழ்வும் மனித குலத்திற்கு வாழ்வின் வளமும் நலமும் காக்கத் தேவையானவையாகும். இந்த பண்பாடு வளர வேண்டுமானால் மனம் விரிந்து நின்று பழக வேண்டும். இத்தகைய பயிற்சியினால் தான் மனம் நுண்மை நிலைக்கு வரும். உண்மை உணர்வாகிய இறைநிலையறிவும் அதைத் தொடர்ந்து அறநெறி வாழ்வும் கிட்டும். விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப இறைநிலையறிவு எளிதில் கிட்டுவதற்கு இங்கு ஒரு தூய்மை தரும் உளப் பயிற்சியை உங்கள் எல்லோருக்கும் ஒரு கவியின் மூலம் விளக்குகிறேன். இதை மனப்பாடம் செய்து கொண்டு அதிலுள்ள கருத்துப்படி மனதை இயக்குங்கள். எப்போதும் இறைநெறி மறவாத அறநெறி வாழ்வும் அமைதியும் கிட்டும்.

இக்கருத்தானது சிந்தனை ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் தவம் செய்ய ஏற்றதாகும். நாள்தோறும் உங்கள் வாழ்வில் எவர் மீதும் எந்த நிகழ்ச்சியின் மீதும் வெறுப்புணர்ச்சியைக் கொள்ளாதீர்கள். வெறுப்பு உணர்ச்சியானது மன அலைச் சுழலை அதிகப்படுத்தும். இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். மூளை செல்களிலும் உடல் செல்களிலும் உளள் காந்தத் துருவங்களை சீர்குலைக்கும். மின்குறுக்கு ஏற்பட்டு உடலில் நோய்கள் உண்டாகும். மன அமைதி குலையும், வெறுப்பை விழிப்பான பயிற்சியினால் விலக்கி விட்டால் மனம் தூய்மையாகும். இந்தச் சித்தியிலிருந்து வாழ்வின் வளங்கள் அனைத்தும் சித்தியாகும். உலகில், வாழ்வில் வெறுப்புக் கொள்வதற்கு பேரியக்க மண்டலத்தில் ஒன்றுமே இல்லை.

தன் முனைப்பு என்ற மயக்கம் பொதுவாக எல்லாரிடமும் உண்டு. நான் தான் நீதியோடு நடக்கிறேன். என் விருப்பப்படித்தான் அனைவரும் நடக்க வேண்டும், என்ற மனநிலையை உருவாக்குவது தன்முனைப்புதான். இது இறையுணர்வால் தான் தெளிவடையும்.

"உன்னுளே நான் அடங்க என்னுளே நீ விளங்க உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்"

என்ற வெளிச்சம் எப்போதும் உங்கள் உள்ளத்தில் அமையட்டும். இந்த விளக்கத்தை என் பரிசாக ஏற்றுப் பின்பற்றுங்கள் வளம் பெறுவீர்கள். நலம் காண்பீர்கள்.


மத நம்பிக்கை குறைந்து வருகிறது

அறிவு வளர்ச்சி பெறுவதற்காகப் பல கற்பனைகளைப் புகட்டி, வாழ்க்கையில் ஒழுக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் முன்னோர்கள். அதன் விளைவாக இன்றுவரை எவ்வளவோ நன்மைகள் விளைந்தும் இருக்கின்றன. ஆனால், அறிவு விஞ்ஞானத் துறையில் புகுந்து நல்ல விளக்கம் பெற்றுவரும் இக்காலத்தில், மதங்களிலுள்ள சில கற்பனைச் சொற்கள் மீது மனிதர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.

இப்போது அவ்வாராய்ச்சியைப் பயன்படுத்தி உலக மக்கள் அறிவின் உயர்விலும், பண்பிலும் ஒன்றுபட்டு வாழத் தகுதியான காலம் நெருங்கி விட்டது. அதை நாம் இப்போது கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
எல்லா மனிதர்களும் எல்லா நாட்டிலும் சென்று கலந்து பரவி வாழ ஏற்ற காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் உலகில் உள்ள எல்லா மதங்களின் உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முயற்சியில் மதங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி விடலாம். விஞ்ஞான அறிவும் ஆன்மீக வளர்ச்சியும் ஒன்றுபடும் இடமாகும் இது என்ற உண்மையை இங்கு வலியுறுத்திக் காட்டுகிறேன்.

இந்த இடத்தில், விதி, மதி, இயற்கை செயற்கை, தெய்வம் மனிதன், அரூபம் ரூபம், பொருட்கள் அனுபோகம், காரணம் காரியம், சுவர்க்கம் நரகம் என்ற அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்றும், தனிமனிதன் வாழ்விலும் சமுதாய வாழ்விலும் அமைதி மற்றும் சமாதானம் ஏற்படும் என்றும் உறுதியாகச் சொல்லுகிறேன்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக