புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
32 Posts - 42%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
32 Posts - 42%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
1 Post - 1%
jothi64
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
398 Posts - 49%
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள்  - 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரியின் தத்துவங்கள் - 5


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:29 am

உயர்ந்த சிந்தனை


1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.

2.உழைப்பினால், உடலும் உள்ளமும் உலகமும் பயன் பெறும் உணர்வீர்!

3.கடமை உணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம்.
கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.

4.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.

5.ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து, ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.

இந்த உயர்ந்த சிந்தனைகள் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனத்தில் உதித்தவை.

எடுத்துக்காட்டுகள் :

1.மக்கள் பல சமயங்களில் உணர்ச்சியின் வெளிப்பாடாகத் திகழ்கிறார்கள். உணர்ச்சியை வெல்பவரே அறிஞராவார். எடுத்துக்காட்டு: அறிவால் உயர்ந்தவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

2.உண்மையான உழைப்பினால் உலகத்துக்குப் பலன் கிடைக்கும். உழைப்பவரின் உடலும் உள்ளமும் வலிமை அடையும். எடுத்துக்காட்டு: அன்னை தெரசா. அவரின் உண்மையான உழைப்பை உலகம் போற்றியது.

3.பிறந்த நோக்கத்தை உணர்ந்து அதை வாழ்வில் செய்து காட்டுபவன் தியாகி என்று போற்றப்படுவான். கடவுளின் தன்மை மனிதனிடம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துபவர் ஞானியாவார். எடுத்துக்காட்டு: ஆச்சார்யா வினோபா பாவே.

4.எளிமையான பொருத்தமான தூய உடை, இரக்க உள்ளம். மதிக்கத் தக்க வாழ்க்கை முறை ஆகியவையே நல்லவர்களின் பண்புகள். எடுத்துக்காட்டு: டாக்டர். இராதாகிருஷ்ணன்.

5.நல்லதை நினை. நல்லதைப் பேசு. நல்லதைச் செய். அது அனைவருக்கும் நன்மையைத் தரும். செய்ய முடிவதை மனத்தில் உறுதி கொண்டு நினை. நினைத்ததைச் செய். எடுத்துக்காட்டு: மகாத்மா காந்தியடிகள்.


எனது நோக்கமும் செயல் முறையும்


இயற்கை என்பது ஒரு தெய்வீகப் பெருநிதி. உயிரினங்கள் தோன்றவும் வளரவும் மகிழ்ச்சியோட வாழவும் தேவையான அனைத்தும் இயற்கையில் அமைந்திருக்கின்றன.

ஆறாவது அறிவு பெற்ற மனித இனம் அறிவிலும் செயலிலும் சிறந்து புலனின்பமும் பேரின்பமும் துய்த்து வாழ்வில் நிறைவும் அமைதியும் பெற எல்லா வளங்களும் நிறைந்த கருவூலம் இயற்கை.

மனித வாழ்வுக்கு இயற்கையை உணர்ந்து மதித்து அதன் ஆற்றலோடு தன் ஆற்றல் முரண்படாமல் விழிப்போடு செயலாற்றி வாழவேண்டியது அவசியம். இதுவே இறைவழிபாடு. மேலும் சமுதாய மக்கள் நட்பு இன்றியமையாத செல்வம். ஒழுக்கம் கடமை ஈகை என்ற மூன்றிணைப்பு வாழ்க்கை நெறியான அறம் என்பது மனிதன் உணர்ந்தும் பின்பற்றியும் வாழவேண்டும்.

கல்வி, தொழில், பொருள் சேமிப்பு, பொருள் உரிமை இவற்றில் அனைவருக்கும் தடையில்லாத சமவாய்ப்பு உலக சமுதாயத்தில் அமைய வேண்டும்.

ஒவ்வொருவரும் பிறரை மதித்தும் பிறருக்கு ஒத்தும் உதவியும் வாழ வேண்டும். உலகத்தில் எந்தப் பகுதியிலும் போர் எழ வாய்ப்பில்லா அமைதி வாழ்வு நிலை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான யுனைட்டட் நேஷன் நிறுவனத்தின் மூலம் திட்டமிட்டு அமுல் நடத்த வேண்டும்.

தெய்வம் என்பதின் உண்மை நிலையை அனைவரும் விளங்கிக் கொண்டு அதே தெய்வம் அனைவரிடத்திலும் அறிவாக விளங்கிக் கொண்டிருப்பதை உணர ஏற்றபடி விஞ்ஞான, மத, அரசியல் அறிவைக் கல்வி மூலம் விளங்கிக் கொள்ள ஏற்ற கல்வி முறை உருவாக வேண்டும்.

ஆண்களுக்குப் பெண்கள் அடிமையும் அல்லர், உயர்ந்தவர்களும் அல்லர், சமமானவர்களுமல்லர். ஆனால் இயற்கையமைப்பாலும் சமுதாய அமைப்பிலும் பெண்கள் ஒரு சிறப்பு நிலையுடையவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்து ஆண்களும் பெண்களும் ஒருங்கிணைந்த உயர் கருத்தில் வாழ வேண்டும்.

இவற்றின் மூலம் தனிமனிதன் வாழ்விலும் சமுதாய வாழ்விலும் அமைதியும், இனிமையும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்பதே எனது நோக்கமும் செயல் முறைத் தொண்டும் ஆகும்.


வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்


நெருப்பு சுடும். இது தான் இயல்பு எனினும் நெருப்பு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத தேவைப் பொருளாக இருக்கிறது. முறையோடும் அளவோடும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நெருப்பை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெறுகிறோம். உணவு சமைக்கும் போது அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தைக் கையால் எடுத்தாலும், தொட்டாலும் சுட்டு விடுகிறது. அதற்கு என்ன செய்கிறோம் அதை அப்படியே விட்டு விடுகிறோமா? ஒரு கந்தைத் துணியைக் கையில் பிடித்துக் கொண்டு அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தை நகர்த்துகிறோம், எடுக்கிறோம், பயன்பெறுகிறோம்.

இது போன்றே நாம் நமது வாழ்வில் கருத்து வேறுபாடு உடைய பலரோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவின் வளர்ச்சி என்ற நான்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் ஒருவரோடு ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வது இயல்பு. தவிர்க்க முடியாதது. இக்கருத்து வேறுபாடுகளில் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு உணர்ச்சி வயப்படுத்துகிறோம். தவறு செய்கிறோம். வருந்துகிறோம். மேலும் மேலும் வாழ்வில் சிக்கல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். மனிதன் தனித்து வாழ்வது முடியாது. கூடாது. இயன்ற மட்டும் எல்லோருடனும் அளவோடும், முறையோடும் பழகி வாழ்வில் நலம் பெற்று வெற்றிகாண வேண்டும்.

சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைக் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காண வேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழாது. வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இன்பமும், அமைதியும் ஓங்கும்.

இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெறி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளி வீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.


உயர்புகழ்


எப்படியும் புகழ் பெறலாம். எப்படி வேண்டுமானாலும் புகழ் பெறலாம் என்பது சரி அல்ல. உலகத்துக்கு நன்மையான காரியங்களையே செய்து, அதனாலே மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று, அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரக் காணும்போது, அந்த மக்களால் அளிக்கப்படக்கூடிய ஒரு வாழ்த்து. ஒரு மனநிறைவுதான் உயர் புகழ். ஆகவே புகழ் என்பது, தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வர வேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன்செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலை தான் புகழாக இருக்கும், அதுவே உயர் புகழாகவும் இருக்கும்.

இந்த உலகத்திற்கு இந்தச் சமுதாயத்திற்கு தன்னை வளர்த்து, காத்து, எல்லா வசதிகளையும் அளித்து வரக்கூடிய சமுதாயத்திற்கு நாம் செய்யும் கடமைகள் மூலமாகவே அத்தகைய புகழைப் பெற முடியும். அந்தக் கடமைகளை நல்ல முறையில் ஆற்றும் பொழுது அந்தக் கடமையின் மூலமாக எத்தனையோ பேருடைய வாழ்க்கை செழிப்புறும். அவர்களுடைய உள்ளங்கள் மலரும், நிறைவுபெறும். அதுவே, அந்த வாழ்த்தே, அந்த மனநிறைவுதான், ஒரு மனிதனுக்குப் புகழ் என்று கூறப்படுகிறது. அத்தகைய புகழ்தான் உயர் புகழாகும்.



பிரபஞ்ச பரிணாமச் சுருக்கம்


1.உயிர் என்பது தனிப் பொருள் அல்ல. அணுவின் அசைவியக்கமே.

2.அணுவின் அசைவியக்கம் அணுவின் பக்குவப் பரிணாம நிலைகளுக்கு ஏற்ப பலவாறான சிறப்புகளைப் பெற்று உணர்ச்சி நிலையாகவும் உணரும் நிலையாகவும் இயங்குகின்றது.

3.உலகங்களாகவோ, ஜீவ இனமாகவோ உள்ள எந்தப் பொருளையும் எவரும் அறிவைக் கொண்டு சங்கற்பத்தால் படைக்கவில்லை. எங்குமே நிறைந்துள்ள பேராதாரப் பரம்பொருள், சர்வ இயக்கச் சக்தியாக அணுவிலும் அமைந்து அறிவுக்கு அப்பாலும் நிறைந்து நிறைந்து, அதுவே அந்தந்த நிலைக்குத் தக்கவாறு உலகங்கள் ஜீவ இனங்கள் அவைகளின் அங்க அமைப்புச் சிறப்புகள் இவைகளாகத் தொடர்ந்து, பரிணாமமடைந்து கொள்ளும் நிலைகளே பிரபஞ்சமாகக் காணும் சர்வமும்.

4.விந்துவையும், இரச ஓட்டம் அல்லது இரத்த ஓட்டச் சுழலையும் பெற்று இயங்கும் ஒரு எல்லைக்குள்ளேயே உள்ள ஒரு மின் ஓட்டச் சிறப்பியக்கமே இன்பம் துன்பம் என்ற இருவித உணர்ச்சிகளும் ஆராய்ச்சியும் ஆகிய அறிவு.

5.பரம்பொருளாகிய பேராதாரச் சக்தியே அணுவுக்கு அப்பால் வெளியாகவும் மௌனமாகவும் இருந்து கொண்டு அணுவில் அசைவு இயக்கம் என்ற உயிராக இயங்கிக் கொண்டும் அணுவின் கூட்டுப் பக்குவப் பரிணாம நிலைகளுக்கேற்ப உணரும் நிலையாகவும் ஆராய்ச்சியாகவும் உள்ள அறிவாகவும் இருக்கின்றது.



சடங்கு முறைகள்


சொல் ஆராய்ச்சி பயனுள்ள பணியாகும். சொற்களை ஆழ்ந்து ஆராய்வது போலவே சடங்குகளையும் நிதானமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சடங்கும் அடியோடு ஒன்றுமில்லை என்று எடுத்து விடாமல் அதற்குரிய காரணங்களை எல்லாம் கண்டுபிடித்தோம் என்றால் பல சடங்குகளுக்கு இன்னும் மனித சமுதாயத்திலே தேவையிருக்கிறது என்பது புலப்படும். இன்னும் பலவற்றை உதறி விட்டு முன்னேற வேண்டியதாக உள்ளது. சடங்குகள் பற்றி ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தி நடத்தி முடிவுக்கு வரவேண்டும்.

முடிவெடுத்த பின் அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்தினால் தான், அதன் பிறகு சமுதாயத்திலே மாற்றம் வரும். இந்தச் சீர்திருத்தப் பணி காலத்தால் தேவையாகிவிட்டது. முக்கியமாக இளைஞர்கள் இதிலே அக்கறை காட்ட வேண்டும். இத்துறையில் ஆர்வம் கொண்டோர், சமுதாய நலநாட்டம் கொண்டோர் விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் செயலாற்ற வேண்டும்.


தேவையில்லாதது தலையிடாதீர்


ஒரு குடும்பத்தில் வயதில் மூத்த பாட்டனார், பாட்டி, அன்னை, தந்தை, அண்ணன் என்ற பொறுப்புடையவர்கள் அவ்வீட்டில் உள்ள குழந்தை தவறு செய்யாமல் வாழ்க்கை அனுபவம் பெற கண்காணித்து, புத்தி கூறி, அடிக்கடி விழிப்பூட்டி வழி நடத்துவது இயல்பு, நன்மையும் கூட.

அதே குழந்தை வளர்ந்து வயது 16, 20 ஆன பிறகும் பழக்கத்தாலேயே தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டேயிருப்பதும், தேவையில்லாதபோது கூட, புத்தி கூறிக் கொண்டிருப்பதும் வெறுப்புணர்ச்சியையே ஊட்டும்.

பெரியவர்களுக்கு காப்பு உணர்வு, சிறியவர்களுக்கு அது தடையுணர்வு, காப்புணர்வு, அவனுக்கும் அறிவு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதை நம்பி அவர்கள் செயல்களில், வாழ்வில் அவசியமின்றி தலையிடாது இருப்பது இனிமையளிக்கும்.


எல்லோரும் உலகம் சுற்றலாம்


உலகில் பிறக்கும் எல்லோருக்கும் உலகைச் சுற்றிவர வாய்ப்பு இருக்க வேண்டும் என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு திட்டம் வைத்திருக்கின்றார்கள் அது ஆகுமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்.

பணம் என்னும் அவசியமற்ற பண்டத்தை ஒழித்துவிட்டு, குறுகிய ஞாபகம் ஆகிய பாசம், பந்தம் என்னும் அறிவின் மயக்கப் பிடிப்புகளை அறுத்து, உலக மக்கள் பற்று அற்று நிம்மதியாக வாழும் முறை அமுலுக்கு வந்தால், உலக மக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைக்கு உரிய பொருள்களை, மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர்களின் உழைப்பினாலேயே உற்பத்தி செய்ய முடியும்.

குழந்தைகள் எண்ணிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்கு போக, மிகுதிப்படும் மக்களின் உழைப்பைக் கொண்டு அணுசக்தி, மின்சார சக்தி இவைகளை அதிகரித்து, வேக வாகன வசதிகளாக கப்பல்கள், ஆகாய விமானங்கள், வண்டிகள் இவைகளையும் அதிகரித்துப் படிப்படியாக இந்தத் திட்டத்தை அமுல் நடத்த முடியும்.

ராணுவமும், தங்கள், வெள்ளி முதலிய பொருட்களின் உற்பத்தி மற்றும் வியாபாரமும், அவசியமற்ற, ஆடம்பரமான பொருட்கள், பணம் என்ற இவைகளும் ஒழிக்கப்பட்டுவிட்டால் ஆண் பெண் அனைவருமே தொழில்களை, இயந்திரங்களின் மூலமாக, விஞ்ஞான அறிவுடையோர் நிர்வாகத்தின்கீழ் செய்து வரலாம், அதனால் அனைவருக்கும் வாழ்க்கை வசதிகள் சரியாகவும், சமமாகவும் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தை ஞாபத்தில் வைத்துக் கொண்டு, ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். இன்று உலகில் பெரும்பாலான மனிதர்களின் சக்தி எந்த அளவில் வீண் விரயமாகிறது என்பது நன்றாயத் தெரியும். விரையம் ஒழிந்தால் மிச்சப்படும் பொருள் அனைவரின் வாழ்க்கை வசதிக்கும் அதிகமாகிவிடும். அந்த மேல்மிச்சத்தை உலகில் பிறந்தோர் அனைவரும் பெற்று, எந்த ஒரு ஜீவனுக்கும் மனிதனுக்கும் இந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் ஜீவாதார உரிமை செயல்பாட்டுக்கு வந்துவிடும். இப்போது அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.



அருளும் இருளும்


எல்லா செயல்களுக்கும் மனம்தான் காரணம். மனமோ கருமையத்தில் பல தலைமுறைகளில் ஆன்மா அனுபவமாகப் பெற்ற வினைப் பதிவுகள், பிறந்த பின் ஒருவர் அன்று வரையில் ஆற்றியுள்ள செயல்களுடைய பதிவுகள் இவற்றிற்கேற்ப தொகுப்பு விளைவாகும்.

பொருள், புகழ், புலனின்பம், அதிகாரம் நான்கிலும் பற்றுக்கொண்டு மனம் இயங்கும்போது உணர்ச்சிவயப்பட்டு ஆன்மாவானது தன்முனைப்புப் பெறும். தன்முனைப்பின் வெளிப்பாடு தான் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற ஆறு குணங்களும். இந்த ஆறு குணங்களின் வயப்பட்டு மனிதன் செயல் புரியும்போதுதான் தனக்கும் பிறர்க்கும் உடலுக்கும் அறிவிற்கும் துன்பம் விளைவிக்கும் செயல்கள் பிறக்கின்றன.

இந்தத் தன்முனைப்பு அடங்கினால்தான் இறையுணர்வு உண்டாகும். அன்பும் கருணையும் இயல்பாக மலரும். பிறகு செய்யும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களாகவே இருக்கும். ஏனெனில் எல்லாம் வல்ல பேராற்றல் தான் உலகமாக, உயிர்களாக பரிணாமமடைந்து, தோன்றி இயங்கும் அனைத்திலும் உட்பொருளாக, மூல ஆற்றலாக அமைந்து எல்லாப் பொருளையும், உயிர்களையும் அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையினை அறியாத மனிதன் தனது உடல் வலிவு, அறிவுத் திறன், தனக்குச் சொந்தமான மக்கள், பொருட்கள் இவற்றை வைத்துக் கொண்டு அந்த அளவிலே பெரியவனாக நினைக்கிறான். இந்த நினைவே தன்முனைப்பாகும். மெய்ப்பொருள் மறதி அல்லது அறியாமை என்று தன்முனைப்பைக் கூறலாம்.

ஆசான் மூலம் அகத்தவம் ஆற்றத் தன்னை உணர்ந்து இறைநிலையையும் உணர்ந்தால் இறைநிலையென்ற எல்லையற்ற பேராற்றலில் தன்முனைப்பு இயல்பாக மலரும். இந்தப் பேரறிவு நிலையில் பேராசை நிறைமனமாகவும், சினம் சகிப்புத் தன்மையாகவும், கடும்பற்று ஈகையாகவும், முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாகவும், உயர்வு தாழ்வு மனப்பான்மை நேர் நிறை உணர்வாகவும், வஞ்சம் மன்னிப்பாகவும் தன்மாற்றம் பெறும். தன்முனைப்பு அடங்கிய இந்த உயர் அறிவு நிலையைத்தான் அமர்ந்த அருள் எனப்படுகிறது. அவ்வாறு அடங்காத தன்முனைப்பு நிலை அறிவிற்கு மயக்க நிலையை, இருள் நிலையை ஏற்படுத்தும், வாழ்வு துன்பம் சூழ்ந்ததாகவே இருக்கும்.

பேராற்றலுள்ள இறைநிலையில் அதன் மதிப்புணர்ந்து அடக்கம் பெற்றால், அப்பெரு நிலையில் ஆற்றல்கள் அனைத்தும் நமதாக அருள் வெள்ளத்தில் நீந்தி அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இறைவனோடு அறிவால் இணைந்து கொண்டால் அருள் என்ற பேரின்ப வாழ்வு கிட்டும். இல்லையேல் இருள் என்ற மயக்க நிலையில் துன்புற வேண்டும்.



இறைத்துகள்கள் பற்றியும் அதன் இயக்கச் சிறப்புகள்
பற்றியும் மகரிஷி கூறுவது

[/b]

“இறைத்துகள் என்பது இறைநிலையேதான். இந்த இறைநிலையில், பேரியக்கமாக நிகழும் அனைத்து ஆற்றல்களும் அடக்கமாக அமைந்திருக்கிறது. எனவே இறைநிலை என்பது Potential state of the whole Universe இங்கு, இறைநிலையானது பிரபஞ்சமாக மலரும் ஆற்றல் எங்கு தொடங்குகிறது? ; அவ்வாற்றலுக்கு சொல் வழக்கில் என்ன பெயர் வழங்கப்படுகின்றது?

இறைத்துகள் ஒவ்வொன்றும் பிரபஞ்ச ஆற்றல் அனைத்துக்கும் அடிப்படையான நிலை என்று உணர்ந்து கொண்டோம். இறைநிலையானது தன்மாற்றத்திலேயே துகள்களாக பரிமாற்றம் அடைந்தபோது ஒவ்வொரு துகளும் இறைநிலையின் ஆற்றல்கள் அனைத்தும் உடையதாகவே இருக்கின்றது.

இறைத்துகள் எனும் பரமாணுக்கள் ஒவ்வொன்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருப்பது இறைநிலைதான். இறைத்துகள் இந்த சூழ்ந்தழுத்தத்தினாலே தற்சுழற்சி அடைகிறது. அப்படி சுழலும்போது இறைத்துகள்களின் தற்சுழலின் விரைவுக்கும் அதை சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கக்கூடிய இறைநிலைக்கும் இடையே ஏற்படும் உரசல் அத்துகளில் அடங்கியுள்ள பேரியக்க மண்டல ஆற்றல்கள் அனைத்தையும் ஊக்குவிக்கின்றது. இந்த இயற்கையான அருளாற்றலே, துகளில் Potential ஆக இருக்கும் ஆற்றல் அனைத்தையும் இயக்க ஊக்கம்பெற வைக்கிறது. இந்த செயல்களின் விளைவாக எழும் திருக்கூத்து காந்தமாக மலர்கிறது. இவ்வாறு மலர்ந்த காந்தம்தான் இறைத்துகள் கூட்டான விண்ணில் மேலும் மேலும் வளர்ச்சி பெறுகிறது; விரைவு பெறுகிறது. பரிணாமம் அடைந்த எந்தப் பொருளிலும் இதே இறைத்துகள், அதன் ஆற்றல்கள் அனைத்தும் உள்ளதால், கூட்டுசேரும் பொருளுக்கு ஏற்ப இந்த காந்த ஆற்றலின் தரமும் தன்மையும் மேலும் மேலும் உயரும்போது ஏற்படும் விளைவுகளே பிரபஞ்ச இயக்கத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளாகும். இங்கு ஒன்று நினைவில் வைக்க வேண்டும்! இறைத்துகளே அதன் கூட்டினால் விண் என்ற நுண் இயக்க மூலக்கூறு (Infinitesimal Energy Particle) ஆகையால், அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட இறைத்துகள்கள் ஆற்றலின் பலகட்ட சிறப்பும் உயர்வும் அடைகிறது.

இதுவே காந்த நிலையின் பிறப்பும் சிறப்பும் ஆகும். இந்த காந்த ஆற்றலுக்கு, தாக்கம், தேக்கம், ஊக்கம், ஆக்கம் எனும் முறையான இயக்கத்தொடர் உண்டு. தோற்றமூலம் விண் என்றால் இயக்க மூலம் காந்தம் ஆகும்”.

இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தால் நுண்துகளில் Potential ஆக இருக்கும் காந்த ஆற்றல் மேலும் மேலும் உயர்ந்து, விண்ணிலிருந்து வெளியேற, அவ்விண் கரைந்து, விண்ணைச் சுற்றி காந்த அலைகள் உருவாகின்றன.

தண்ணீர் ஒரே பரப்பாகத் தெரிந்தாலும் அது மூலக்கூறுகளின் கூட்டுதானே. ஒரு தனி பார்வைக்கு இடைவெளி இல்லாத ஒரே பரப்பாகத் தெரிந்தாலும், நூல்களின் கூட்டுதானே துணி. அதைப்போல சுத்தவெளி என்பது இறைத்துகள்கள் நிறைந்த எல்லையற்ற காந்தக் கடலே.

இறந்தபின் உயிரின் நிலை


இறந்தபின் மனிதனுடைய வினைப்பதிவுகள் என்னவாகிறது? இது பரவலாக நிலவி வரும் வினா. வினைப் பயன் விட்டுப் போகாது. ஒவ்வொரு உயிரும் தன் வினைப் பயனைத் தூய்மை பெறும்வரையில் வேறு உடலில் சேர்ந்தேனும், தன் வினைப்பயனாக துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தே தீரும். அதற்காகப் புதிதாகப் பிறவி எடுக்க வேண்டும் என்பதில்லை.

ஒரு குழந்தை பிறந்து அது தன் பன்னிரெண்டு வயது வரை தன்னிச்சையாக வினைகளைப் பெறவில்லை; பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்வோம். பன்னிரண்டு வயதிலே இறந்து விட்டது. இந்நிலையில் அக்குழந்தையின் உயிரின் நிலை என்ன? 12 வயதிற்குள்ளாக எந்தக் குழந்தை உயிர் விட்டாலும் தன், தாய் அல்லது தந்தை, பாட்டன், பாட்டி போன்ற கருத்தொடரான உறவினர்களின் உயிரோடு அடைக்கலமாகி விடும். விரிந்த உயிர் சுருங்கி விடுவதுபோல அவ்வுயிருக்கு வேறு எந்தப் பதிவும் இல்லை. ஆகவே அந்த உயிரில் பதிவு பெற்ற உயிர்கள் தாயும் தந்தையும்தான். எனவே, அவ்வுயிர் தாய், தந்தையரிடமே சேர்ந்து விடும். அவ்வுயிருக்கும் அமைதி ஏற்பட்டு விடும். பெற்றோர்களுக்கும் அக்குழந்தையை வளர்த்தமையால் அவர்களின் வினைகளும் ஒரு பகுதி கழிந்து விடுகின்றன. இவ்வாறு இருவர் வினைகளும் கழிந்த ஒரு கூற்றுதான் அக்குழந்தையின் முடிவு.

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை பற்றி நாம் பல கதைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். இறந்த உயிர் வானுலகம் செல்லும். வானுலகத்தில் சொர்க்கம், நரகம் உண்டு. நல்வினை செய்த உயிர்கள் சொர்க்கத்திற்குச் சென்று இன்பமுறும். தீவினை செய்த உயிர் நரகம் சென்று அங்குள்ள நெருப்புக் கொப்பரையில் விழப்படச் செய்தும், செக்கிழுத்தும், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களாலும் துன்புறும் என்று கருடபுராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு, மனிதனுக்கு அச்சமூட்டி, தவறுகள் செய்யாது இருப்பதற்காக, தீவினைகள் செய்யாது இருப்பதற்காக பல கதைகள் சொல்லப்பட்டு வந்தன. அக்காலத்தில் அவை நன்மையே அளித்து வந்தன.

இக்காலத்தில் இதை நம்புபவர்கள் இல்லை. இந்த விஞ்ஞான காலத்தில் சொர்க்கம், நரகம் என இரு உலகங்கள் பூமிக்கு மேல்புறமாக இருக்கிறது என்பதை நம்பவும் முடியாது. காலத்தால் அக்கதைகள் மறைந்து விட்டன. உண்மையான சிந்தனைக்குரிய, அறிவுக்குப் பொருத்தமான நல்ல கருத்துக்களை, நம் பழக்கத்தின் காரணமாக ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மையான கருத்துக்களை மனித குலத்தின் வாழ்வின் நலத்திற்காக வெளியிட்டுத் தான் ஆக வேண்டும். இவற்றை இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் வரும் சிந்தனையாளர்களுக்கு இது மிகவும் அவசியம். மரணமென்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால் உயிரினத்தில் அமைந்துள்ள கருமைய இரகசியங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக