ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


மனித உடலியல்

மனித உடலியல் Empty மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:38 am

மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?

உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வு செய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,
தசை (muscular) மண்டலம்,
நரம்பு (nervous) மண்டலம்,
நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,
மூச்சு (respiratory) மண்டலம்,
இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,
நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,
செரிமான (digestive) மண்டலம்,
கழிவு (excretory) மண்டலம் மற்றும்
இனப்பெருக்க (reproductive) மண்டலம்


உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப் பொருத்த முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:38 am

ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?

தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:39 am

டி.என்.ஏ (DNA) என்பது என்ன?

டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். DNA என்பது deoxyribonucleic acid என்னும் ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். மனித உயிரைக் கட்டுப்படுத்தும் அடிப்படை அலகு இதுவே. இது நியூகிளியோடைட்ஸ் எனும் வேதி அலகுகளின் தொடர்களிலிருந்து பெறப்படும் மிகவும் சிக்கலான பொருளாகும். ஒரு புதிய உயிரினம் வளர்ச்சியுறுவதற்கான எல்லா அறிவுறுத்தல்களும் டி.என்.ஏ மூலக் கூறாகக் (molecule) குறிப்பிடப்படுகின்றன. ஓர் ஏணியை முறுக்கியது போன்று இதன் வடிவம் விளங்குகிறது. இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன; இவை குறிப்பிட்ட சில வழிகளால் மட்டுமே இணைக்கப்பட முடியும். இந்த அமினோ அமில இணைகளின் அமைப்பு டி.என்.ஏ மூலக்கூறின் குறியீடாக விளங்குகிறது; இவ்விணைப்புகளின் குழுக்கள் மரபணுக்கூறுகளாக (genes) விளங்குகின்றன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 குரோமோசாம்கள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவிலிருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குரோமோசோமிலுமுள்ள டி.என்.ஏவின் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது.

டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.

கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பது எது?

கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு (gene) காரணமாக அமைகிறது; ஆனால் பழுப்பு நிறம் ஊதா நிறத்தை விட விஞ்சி நிற்கிறது எனலாம். இருவரில் ஒருவர் பழுப்பு நிறக் கண்களுக்கான இரண்டு மரபணுவையும், மற்றவர் ஊதா நிறக் கண்களுக்கான இரண்டு மரபணுவையும் கொண்டிருந்தால் அவர்களுடைய குழந்தைகள் அனைவருமே பழுப்பு நிறக் கண்களையே கொண்டிருப்பர். ஆனால் இருவரும் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்து, ஒவ்வாத குறை ஊதா நிறத்திற்கான உயிரணுவைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மூன்று பழுப்பு நிறக் கண்களுடனான குழந்தைகளுக்கு ஒரு ஊதா நிறக் கண்களுடனான் அ குழந்தை பிறக்கும்.

பறக்கும் ஈ ஒவ்வொரு வினாடியிலும் 200 படிவங்களைப் (images) பிரித்துணரும் ஆற்றல் வாய்ந்தது. திரைப்படம் அல்லது தொலைக்காட்சியைத் தொடர்ச்சியான நிலை படிமங்களாகவே அது பார்க்கிறது. இதனால்தானோ என்னவோ ஈக்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பதில்லை போலும் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:39 am

எலும்பின் உட்கூறுகள் யாவை?

எலும்பானது இருவகை எலும்புத் திசுக்களால் ஆனது. அதன் வெளிப்புறத்தில் எலும்புச் சவ்வு (periosteum) எனப்படும் ஒரு வகைத் தோல் பகுதி அமைந்துள்ளது. இதன் கீழே தடிமனான, அடர்த்தி மிக்க, ‘திடவடிவிலான எலும்பு’ எனப்படுகிற மெல்லிய அடுக்கு (layer) ஒன்று அமைந்துள்ளது. இதுவே கடினமான அல்லது உறுதியான எலும்புத் திசுவாகும். இதற்கு உட்புறம் எலும்பின் நடுப்பகுதியான வேறொரு எலும்புத் திசு பஞ்சு அல்லது தேன்கூடு அமைப்பில் அமைந்துள்ளது. இதில் இடைவெளிகளும், துளைகளும் உள்ளன; இதனை பஞ்சு அமைப்பிலுள்ள அல்லது குழிவுகளைக் கொண்ட எலும்புத் திசு என அழைப்பர். இது வெளிப்புறம் இருக்கும் எலும்புத் திசுவை விட மிகவும் மென்மையானது; இதன் இடைவெளிகளில் புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் நாளங்களும், பாகு போன்ற எலும்புச் சோறும் (marrow) அமைந்துள்ளன.

சாதாரண மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் சிலரிடம் 12 இணை விலா எலும்புகளுக்குப் (Ribs) பதிலாக 13 இணைகள் இருப்பதுண்டு; இதனால் அத்தகையோர்க்கு மொத்தத்தில் 208 எலும்புகள் இருக்கும்.

இதய இரத்த ஓட்டம் என்றால் என்ன?

முழு உடலின் இரத்த ஓட்ட அமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவதே இதய இரத்த ஓட்டமாகும். இதனால் இதயத்தின் திசுக்களுக்கு இரத்தத்தை அனுப்புதல், அங்கிருந்து இரத்தத்தை வடித்தல் ஆகியன நடைபெறுகின்றன. மனித இதயத்தில் பெருந்தமனியின் (aorta) பிறைவடிவ வால்வுகளுக்கு அப்பாலிருந்து இரண்டு இதயத் தமனிகள் (arteries) தோன்றுகின்றன; இதய விரிவின்போது (diastole) [இதயத்தின் அறைகளில் நீர்த்த இரத்தம் நிரம்புகிறது] வால்வுகளுக்கு மேலே ஏற்படும் பெருந்தமனி அழுத்தத்தால் இரத்தம் இதயத் தமனிக்குள் செலுத்தப்பட்டுப் பின்னர் தசை மண்டலத்துக்குள் செல்கிறது. உயிர்வளி/ஆக்சிஜன் நீக்கம் செய்யப்பட்ட இரத்தம் இதயத்தின் அறைக்குள் இதய நரம்புகள் வாயிலாகப் பின்னர் திரும்ப வந்து, மூவிதழ் (tricuspied) வால்வுக்குக் கீழேயுள்ள வலது வெண்ட்ரிக்கிலுள் வடிந்து செல்கிறது.

இதய இரத்த ஓட்டத்தின்போது, இரத்தத்திலிருந்து 70% முதல் 75% ஆக்சிஜன் பெறப்படுகிறது. இந்த ஆக்சிஜன் அளவானது பிற உறுப்புகளின் இரத்த ஓட்டத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிக அளவாகும். இதயத் தமனியால் தடை ஏதேனும் ஏற்படுமானால், ஆக்சிஜன் மிகுதியுள்ள இரத்தம் இதயத் திசுக்களுக்குச் செல்வது தடைபட்டு, பலருக்கும் இதயத் தசைகளின் ஒரு பகுதி செயலிழந்து போகும் வாய்ப்பு ஏற்படும்.

சில நேரங்களில் இதய வால்வுகள் கடினமாக அல்லது கசியும் தன்மை கொண்டதாக மாறுவதுண்டு. அத்தகைய வால்வுகளை, வேறு விலங்கின் திசுக்களால் செய்யப்பட்ட வால்வுகளைக் கொண்டு மாற்ற இயலும்; அல்லது உலோகம் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வால்வுகளைக் கொண்டும் மாற்றலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:40 am

இரத்தத்தில் அடங்கியுள்ளவை என்னென்ன?

இரத்த ஓட்டத்தின் போது உடல் முழுதும் பம்ப் (pump) செய்யப்படும் திரவமாக இரத்தம் விளங்குகிறது. நுரையீரலில் (lung) இருந்து பெறப்படும் உயர்வளியை (ஆக்ஸிஜன்) இரத்தம் எடுத்துச் செல்கிறது. உடலின் ஒவ்வொரு உயிரணுவும் (cell) உயிர்வாழ ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதனை இரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது.

இரத்தத்தில் பல உறுப்புகள் உள்ளன; அவற்றின் செயல்பாடுகளும் பலவாகும். இதில் மஞ்சள் நிற பிளாஸ்மா என்னும் திரவப் பொருள் ஒன்றுள்ளது; இதில் சிகப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களுக்கும் தட்டையங்களும் (platelets) தொங்கவிடப்பட்டுள்ளன. தந்துகிகள் எனப்படுபவை பிளாஸ்மா திரவம் இரத்தத்திலிருந்து தப்பிச்செல்ல உதவுபவை. உயிரணுக்களும் பெரிய அளவு புரதங்களும் நாளங்களிலேயே விடப்படுகின்றன; இப்போது திரவம், இடைநிலைத் திரவமாக (interstitial fluid) விளங்குகின்றது (ஆதரவளிக்கும் பின்னணித் திரவம்). இது தந்துகிக்குத் திரும்பிச் செல்லும் அல்லது நிணநீர் அமைப்பில் இணைந்து விடும். மொத்த இடைவெளித் திரவத்தில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக விளங்கும்.

சிகப்பு மற்றும் வெள்ளை உயிரணுக்கள் எலும்புச் சோற்றில் அமைந்துள்ளன. இரத்தத்தின் கொள்ளளவில் 55% பிளாஸ்மா உள்ளது. இதில் 90% நீரும் 7% புரதங்களும் மீதமுள்ள 3% மூலக்கூறுகளும் ஆகும்.

இரத்தம் பொதுவாக கதகதப்பாக இருக்கும்; மைய வெப்ப அமைப்பில் உள்ள திரவம் போல் இரத்தம் விளங்குகிறது; உடலில் சுறுசுறுப்பான பகுதிகளாக விளங்கும் இதயம், தசைகள் போன்றவற்றிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, தோல் போன்ற குளிர்ந்த பகுதிகளுக்கு அவ்வெப்பத்தை இரத்தம் பரவச் செய்கிறது.

இரத்த உறைவு (Blood clotting) என்பது என்ன?

உங்கள் உடலின் எப்பகுதியிலாவது வெட்டு அல்லது காயம் ஏற்பட்டால் அங்கிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கவே இரத்த உறைவு நிகழ்கிறது. இரத்த உறைவு என்பது இரத்தத்திலுள்ள பொருட்களால் ஏற்படுவதே ஆகும். தட்டயங்கள் எனப்படும் சின்னஞ்சிறு பொருட்களுடன் இவை இணைந்து மெல்லிய வலை போன்ற அமைப்பு உருவாகிறது. இவை காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் தடுக்கின்றன. காயம்பட்ட இடத்தில் விரைந்து புதிய உயிரணுக்கள் உருவாகி சேதமடைந்த திசுக்களுக்கு மாற்றாக அமைகின்றன. உறைவுற்ற இப்பொருள் பொருக்காக (scab) மாறி அதுவும் கீழே விழுந்து, வெட்டுப்பட்ட அல்லது காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய தோல் உண்டாகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:41 am

நிணநீர் அல்லது வடிநீர் (Lymph) என்பது என்ன?

உடலின் முக்கிய தாக்கு விசை அமைப்பே நிணநீர் அல்லது வடிநீர் அமைப்பாகும். புண் போன்றவற்றில் இருந்து கசியும் ஒருவகை நீர் இது. இரத்த அமைப்பைப் போன்று இதுவும் உடல் முழுதும் திரவத்தைக் கொண்டு செல்லும் நாளங்களின் ஒரு தொகுதி. நிணநீரில் சிறப்பு இரத்த வெள்ளை அணுக்கள் (lymphocytes) உள்ளன. இவை கிருமிகளை எதிர்த்து நச்சுகளுடன் போராடும் நோய் எதிர்ப்புப் பொருட்களை (antibodies) உருவாக்குகின்றன. இது கீழ்க்கண்டவாறு பணியாற்றுகிறது:

இத்திரவம் தந்துகியில் (capillary) இருந்து வெளியேறி சிரை (vein) அல்லது மிகச் சிறிய மெல்லிய சுவர்ப்பகுதியுடனான நிணநீர் நாளத்துள் (vessel) செல்கிறது. இந்நாளங்கள் ஒன்றிணைந்து குழாய்களாக மாறி இறுதியில் பெருந்தமனிக்குப் (aorta) பக்கத்தில் செல்லும் மார்பக நிணநீர்க் குழலை (thoracic duct) அடைகிறது. இக்குழல் பெருஞ்சிரையின் (vena cava) முக்கிய கிளைகளுள் ஒன்றில் இணைகிறது. நிணநீர் ஒரு திசையில் மட்டுமே செல்லுமாறு வால்வுகள் பார்த்துக்கொள்கின்றன. நிணநீர்ச் சுரப்பிகள் (glands) உடல் முழுதும் நிணநீர் நாளங்கள் இணையுமிடத்தில் காணப்படுகின்றன.

குரல் வளை (Voice Box) என்பது என்ன?

காற்று நமது குரல் நாண்களில் (vocal cords) விசையை ஏற்படுத்தி அதிரச் செய்வதால்தான் நம்மால் ஒலியை ஏற்படுத்த இயலுகிறது. குரல் நாண்கள் குருத்தெலும்பின் (cartilage) இரண்டு ரப்பர் பேண்டுகளைப் போன்று மிடறினுள் (larynx) அமைந்துள்ளன. வாயின் இப்பகுதியே குரல் வளை (voice box) எனப்படுகிறது. இது மூச்சுக் குழலின் (wind pipe) மேற்பகுதியில் உள்ளது; தொண்டையின் வெளிப்பகுதியில் ஒரு முட்டை போன்று (lump) விளங்குகிறது; இதனை குரல் வளை மணி அல்லது ஆதாமின் ஆப்பிள் (Adam’s apple) என அழைக்கின்றனர்.

மிடறின் தசைப்பகுதிகள் நாண்களின் வடிவத்தை மாற்றுவதால்தான் பல்வேறு ஒலிகள் எழும்புகின்றன. நாண்கள் ஒன்றிணைந்து இருக்கும்போது குறைந்த அளவிலான ஒலியும் (low pitch) ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கும்போது பெரிய அளவிலான ஒலியும் உண்டாகின்றன. காற்று கடினமாக வெளியேற்றப்படும்போது உரத்த ஒலி எழுப்பப்படுகிறது. தொண்டையின் தசைகள், வாய் மற்றும் உதடு ஆகியவை ஒன்றிணைந்து பயன்படும்போது ஒலிகள் சொற்களாக மாறுகின்றன.

ஒருவன் வயதில் முதிர்ச்சியடையும் (puberty) போது அவனது குரல் “உடைந்து (breaks)” போகிறது என்கிறோம். டெஸ்டோஸ்டெரோன் எனப்படும் ஆண் ஹார்மோனின் விளைவினாலும் குரல் நாண்கள் நீளமாவதாலும் மிடறு விரிவடைகிறது. இதுவே அதற்கான காரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:41 am

நுரையீரல்களுள் (Lungs) என்ன உள்ளது?

நமக்கு இரண்டு நுரையீரல்களும் மார்பின் இரு பக்கங்களில் காற்று புகாத பெட்டி போன்ற அமைப்புகளுக்குள்ளே அமைந்துள்ளன. நமது விலா எலும்புகளும் (ribs) தசைகளும் ஒன்றிணைந்து உதரவிதானம் (diaphragm) எனும் சவ்வு போன்ற அமைப்புடன் சேர்ந்து அப்பெட்டி போன்ற அமைப்பு உருவாகிறது.

நுரையீரல்களின் உள்ளே தந்துகிகளால் சூழப்பட்ட சின்னஞ்சிறு கண்ணறைகள் (alveoli) அமைந்துள்ளன. ஆக்சிஜனும், கார்பன் டை ஆக்சைடும் அவற்றினூடே கடந்து செல்லும் அளவுக்கு தந்துகிகள் மற்றும் கண்ணறைகளின் சுவர்ப்பகுதிகள் மிக மெல்லியதாக அமைந்துள்ளன. வளர்ந்த ஒருவரின் கண்ணறைகளின் மொத்தப் பரப்பளவு சுமார் 70 சதுர மீட்டர் அளவுக்கு இருக்கும். மேலும், சுவாசிக்கும் அமைப்பானது புதிய காற்றை இரத்தத்துக்கு மிக அருகில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்று நுரையீரலுள் நிரம்புகிறது; மூச்சை வெளிவிடும் போது அக்காற்று வெளியே தள்ளப்படுகிறது. நுரையீரல்கள் மேலும் கீழும் விரிவடைந்து பலூன்களைப்போல் செயல்படுகின்றன; ஆயினும் அவை வெற்றுப் பைகளைப்போல் அமைந்திருக்கவில்லை. திசுக்கள், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற மென்மையான உறுப்புகள் அவற்றினுள்ளே இருக்கின்றன.

மீன் போன்ற நீரினுள்ளே வாழும் உயிரினங்களுக்கு, நுரையீரல்களுக்குப் பதிலாக செவுள்கள் (gills) எனப்படுபவை சுவாசிக்கும் உறுப்புகளாக அமைந்துள்ளன. நீருள்ளிருந்து அவை ஆக்சிஜனை உட்கொள்ளும். நாம் நீருள் மூழ்கி இருக்கும்போது ஆக்சிஜன் தொட்டி இல்லாவிடில் நம் நுரையீரல் முழுதும் நீர் நிரம்பி தண்ணீருக்குள் மூழ்கி விடுவோம்.

மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) என்றால் என்ன?

மூச்சுக்குழாய் (Bronchi) வழியே சுவாசிக்கும் காற்று நுரையீரல்களுக்குள் செல்கிறது. மூச்சுக்குழாய்களில் முழுமையாகவோ அல்லது அவற்றின் பகுதியிலோ ஏற்படும் அழற்சியே மூச்சுக்குழாய் அழற்சி எனப்படுகிறது. மூச்சுக்குழாய்க்கு உள்ளே காற்று நுழையும்போது, அதிலுள்ள நுண்ணுயிரிகளை மற்றும் பிற அயல்பொருட்களை நீக்குவதற்கு மூச்சுக்குழாய்ச் சுவர்களின் உயிரணுக்களில் அமைந்துள்ள மிக நுண்ணிய கண்ணிமை முடி போன்ற அமைப்புகளான இழைகள் (cilia) பயன்படுகின்றன. இந்த இழைகள் அலைகளைப் போன்று அசைவுற்று அயல்பொருட்களை மூச்சுக்குழாயின் மேற்புறம் மற்றும் மிடறுப் பகுதிகளுக்குள் பெருக்கித் தள்ளுகின்றன. இதனால் ஒருவகை உறுத்தல் (irritation) ஏற்பட்டு மூச்சுக்குழாய்ச் சுவர்ப் பகுதியிலுள்ள சுரப்பிகளில் தடிமனான கோழை அல்லது சளி (mucus) உருவாகி அயல்பொருட்களை நீக்குவதற்கு உதவிபுரிகிறது. அவ்வாறு சுரக்கும் சளி போன்ற பொருள் மூச்சுக் குழாய் சுவர்ப் பகுதியின் நரம்பு முனைகளைத் தூண்டி இருமலை உண்டாக்கி அயல் பொருட்களை வெளித்தள்ளுகின்றது.

தீவிரமான மூச்சு அழற்சியை ஒரு குறிப்பிட்ட நோய் என்பதை விட, பிற பொருட்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு எனலாம். மூச்சுத் தொற்றுகளுக்குக் காரணமான நச்சு நுண்ணுயிரிகளால் (viruses) மிகச் சாதாரணமாகத் தோன்றும் சளிப்பு அல்லது தடுமன் ஏற்பட இது காரணமாக அமைகிறது.

நுரையீரல்களைத் தூய்மைப்படுத்தும் இயற்கைத் தொழிநுட்பத்தை “புகைபிடித்தல்” சேதப்படுத்தி விடுகிறது. மேலும், நுரையீரல்களில் உள்ள உயிரணுக்களிலும் நச்சுத் தன்மையை உருவாக்கி விடுகிறது. எனவே புகைபிடிப்பவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி அடிக்கடி தோன்றுகிறது எனலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:42 am

இன்சுலின் என்பது என்ன?

இன்சுலின் என்பது கணையத்தினால் (pancreas) உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன். இன்சுலினின் முக்கிய நோக்கம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை இயல்பாக வைத்திருப்பதாகும்.

ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மிகுதியானால், கணைய உயிரணுக்கள் (Islets of Langerhans) இரத்த ஓட்டத்தில் இன்சுலினை வெளிப்படுத்தும். இதனால் கார்டிசோன் (cortisone) மற்றும் அட்ரினலின் (adrenalin) போன்ற ஹார்மோன்களின் விளைவுகளை எதிர்த்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதியாகும். இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.

இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற 21 உடலுறுப்புகளைத் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்த இயலும். இவற்றுள் சிறுநீரக அறுவை சிகிச்சை சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகங்களின் முக்கிய பணி இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதாகும்.

கணையம் (pancreas) என்பது என்ன?

உடலிலுள்ள மிகப் பெரிய சுரப்பிகளுள் கணையம் ஒன்று; உண்மையில் இது ஒன்றில் அடங்கிய இரு சுரப்பிகளாகும். ஏறக்குறைய இதன் உயிரணுக்கள் அனைத்தும் சுரத்தல் (secretion) செயலுடன் தொடர்புடையனவே. அடிவயிற்றின் மேற்பகுதியில் குறுக்கே, முதுகெலும்புக்கு (spine) முன்னர் மற்றும் பெருந்தமனிக்கும் (aorta) பெருஞ்சிரைக்கும் (vena cava) மேற்புறமாக கணையம் அமைந்துள்ளது. கணையத்தின் தலைப்பகுதியில் முன்சிறுகுடல் (duodenum) சுற்றிக் கவிந்துள்ளது. கணையத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக விளங்குபவை ஊனீர் சுரப்பு இழைகளாகும் (acini); இவை சிறு நாளத்தைச் (duct) சுற்றியுள்ள சுரக்கும் உயிரணுக்களின் திரட்சிகளாகும். ஒவ்வொரு நாளமும் பிற ஊனீர் சுரப்பு இழைகளின் நாளங்களுடன் இணைந்து கணையத்தின் நடுப்பகுதியில் செல்லும் முக்கிய நாளத்துடன் இணைகின்றன. கணைய உயிரணுக்கள் என்பவை உடலின் சர்க்கரை அளவை நிலையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்குக் காரணமான இன்சுலினை சுரப்பவையாகும். இந்த உயிரணுக்களே குளுகோன் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்காமல் உயர்த்துவதற்கும் காரணமாக அமைபவை. கணையம் மற்றுமொரு முக்கியமான செயல்பாட்டுக்கும் காரணமாக விளங்குகிறது; செரிமானத்திற்குத் தேவைப்படும் நொதிகளை (enzymes) சுரந்து உடலின் செரிமானச் செயலுக்கும் முக்கிய பங்காற்றுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:42 am

நமது செரிமான அமைப்பின் (Digestive system) செயல்பாடு என்ன?

நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப் படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன.

உணவுப் பண்டத்தை முதன்முதலாக வாயில் கடிக்கும்போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது. வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறுசிறு உருண்டைகளாகிறது. இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப்படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன. இங்குதான் உணவு பெருமளவு செரிமானமடைகிறது. செரிமானமாகாத உணவுப்பண்டம் பெருங்குடலுள் சென்று அதிலுள்ள நீர்மப் பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. மீதமுள்ளது குடலின் இறுதிப் பகுதியான மலக்குடலைச் சென்றடைகிறது.

நமது செரிமான அமைப்பு வாயில் துவங்கி மலக்குடல் வரை நீளும் நீண்டதொரு குழாயாகும். இதன் நீளம் வளர்ந்த மனிதருக்கு சுமார் 9 மீட்டர். உணவு இந்நீண்ட பகுதியைக் கடக்க 10 முதல் 20 மணி நேரம் பிடிக்கிறது.

வயிற்றின் உட்பகுதியில் இருப்பவை என்ன?

நமக்கு வயிறு என்னும் உடலுறுப்பு இல்லாவிடில் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறை முக்கிய உணவை உட்கொள்வது மட்டுமே போதாது. சிறு சிறு அளவில் உணவை ஏராளமான முறை உட்கொள்ள வேண்டியிருக்கும். வயிறு உணவைச் சேமித்து வைத்துக்கொள்ளும் பெரியதோர் உணவுப்பை போன்று விளங்குகிறது. ஒரு முழுமையான உணவை ஏற்றுக்கொள்ளும் வகையில் வயிறு விரிவடையக் கூடியது. பின்னர் வயிற்றின் சுவர்ப் பகுதியிலுள்ள தசைகள் உணவைப் பிசைவதற்கேற்ப சுருங்குகின்றன. இதற்கிடையில் வயிற்றுப் பகுதியிலுள்ள சின்னஞ்சிறு சுரப்பிகள் செரிமான வேதிப் பொருட்களைச் சுரக்கும்; உணவை அரிக்கக்கூடிய ஆற்றல் மிக்க அமிலங்கள் மற்றும் சத்துப் பொருட்களைப் பிரிக்கக்கூடிய நொதிகள் (enzymes) ஆகியவை இவ்வேதிப் பொருட்களில் அடங்கும். இத்தகைய இயற்பியல் மற்றும் வேதியியல் தாக்கங்களால் சில மணி நேரம் கழித்து உணவானது கூழ் போன்ற பொருளாக ஓரளவுக்குச் செரிமானமடைகிறது. சுமார் இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து ஓரளவு செரிமானமடைந்த உணவு செரிமான அமைப்பிற்கு உட்பட்டு சிறுகுடலுக்குள் அடுத்தபடியாகச் செல்கிறது.

சாதாரண எக்ஸ் கதிர் ஒளிப்படத்தின் வாயிலாக செரிமான அமைப்பின் பகுதிகளை நன்கு காண இயலாது. இருப்பினும் பேரியம் என்னும் பொருளால் எக்ஸ் கதிர் ஒளிப்படங்களை வெண்ணிறத்தில் காண முடியும். இந்த "பேரியம் உணவை" உண்டால் அழற்சிப் புண்கள், கூடுதலாக வளர்ந்த பகுதிகள் மற்றும் தடைகள் ஆகியவற்றைக் கண்டறிய இயலும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:43 am

ஈரலின் (Liver) பணி என்ன?

உடலில் அதிகமாகப் பணிபுரியும் உறுப்புகளுள் ஈரலும் ஒன்று. வயிறு, குடல்கள், இதயம் அல்லது தசைகள் போன்று இது நெளிவதோ புரள்வதோ இல்லை. இதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை; ஈரல் உடலின் மிகப் பெரிய உள் உறுப்பாக விளங்குகிறது; இதன் எடை 2-3 பவுண்டுகளாகும். அடி வயிற்றின் மேல் வலப் பகுதியில் நிறைந்திருப்பது இது. உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.

ஈரலில் தனிச் சிறப்பு வாய்ந்த இரத்த நாளம் உள்ளது; இதனைக் கல்லீரல் சிரை (hepatic portal vein) என்பர். இது இதயத்திலிருந்து நேரடியாக வரவில்லை எனினும், இரத்தத்தை வயிறு, குடல்கள் மற்றும் மண்ணீரல் (spleen) ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்கிறது. இந்த இரத்தத்தில் ஊட்டப் பொருட்கள் அதிகமாக உள்ளதால் உடலாற்றலுக்கு பெரிதும் காரணமாக அமைகிறது; இரத்தத்தால் கொண்டுவரப்படும் பல ஊட்டப்பொருட்களை ஈரல்தான் செயல்படுத்துகிறது. இது பலவற்றைக் குறிப்பாக சர்க்கரை, இரும்புச் சத்து, பி12 வைட்டமின் போன்ற கனிமங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கிறது. மேலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் இது நீக்குகிறது.

ஈரலின் உறுப்புத் தடிப்புக் கோளாறு (cirrhosis) என்பது நீக்க முடியாத நோயாகும்; இந்நோய்க்கு முக்கிய காரணமாக விளங்குவது மிகுதியாக மது அருந்துவதேயாகும்.

பித்தநீர் (Bile) என்பது என்ன?

ஈரலின் அடிப்பகுதியில், வலப்புறத்தில் அமைந்திருப்பது பித்தநீர்ப்பை (gall bladder) ஆகும். மஞ்சள் நிறமுள்ள பித்தநீர் சேமித்து வைக்கப்படும் சிறிய அளவிலான பை இது. பித்தநீர் எனப்படுவது கொலஸ்ட்ரால், பித்த உப்புகள் மற்றும் நிறமிகள் (pigments) ஆகியவை கலந்த ஒரு திரவம். இதில் ஒரு பகுதி ஈரலிலும் மற்றுமொரு பகுதி பித்தநீர்ப் பையிலும் நாம் உணவு உண்ணும் வரை தங்கியிருக்கும். பின்னர் பித்தநீர் ஈரலிலிருந்தும் பித்தநீர்ப் பையிலிருந்தும் பித்தநீர் நாளம் எனப்படும் முக்கிய குழாய்க்குச் சென்று அங்கிருந்து சிறுகுடலுள் போய்ச் சேரும். பித்தநீர் என்பது ஈரலில் இருந்து வெளிப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். ஆனால் இது உணவு செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இதிலுள்ள கனிம உப்புகள் சிதைவுற்று குடலுள் இருக்கும் பொருட்களைச் சின்னஞ்சிறு துணுக்குகளாக்கிக் குழம்பு நிலைக்கு மாற்றுகின்றன.

சில சமயங்களில் பித்தநீர்ப்பையில் கடினமான பொருட்கள் சேர்ந்து கொட்டை போல் மாறிவிடுவதுண்டு. இவை பித்தநீர்ப் பையிலுள்ள கற்கள் (gall stones) என அழைக்கப்படுகின்றன. முக்கியமாக கொலஸ்ட்ரால், கால்சியம் போன்ற பொருட்களால் இக்கற்கள் உருவாகின்றன. லேசர் அறுவை சிகிச்சை மூலம் இக்கற்களை மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:44 am

சிறுநீரகங்களின் (kidneys) பயன்பாடு என்ன?

நமது உடலிலுள்ள உயிரணுக்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை (nutrients) ஆக்சிஜனுடன் கலந்து எரித்து நம் உடல் வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான ஆற்றலை (energy) உருவாக்குகின்றன. மரக்கட்டைகளும் பிறவும் சேர்ந்து எரிந்து வெப்பச் சக்தியையும் உருவாக்குவது போன்றதே இச்செயல்பாடு ஆகும். மரக்கட்டைகள் எரிவதால் கழிவு வாயுக்களும் சாம்பலும் உண்டாவது போலவே நமது உடலின் உயிரணுக்களால் ஆற்றல் உருவாக்கப்படும்போது கழிவுப்பொருட்கள் உண்டாகின்றன. இக்கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து நீக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் அவை நம் உடலுக்கு நஞ்சாக மாறிவிடும்.

இக்கழிவுப்பொருட்கள் சிறுநீராகவும் மலமாகவும் நம் உடலை விட்டு வெளியேறுகின்றன. உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய உறுப்பாக விளங்குவதே சிறுநீரகம். நமக்கு இரு சிறுநீரகங்கள் முதுகெலும்புக்கு இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. அவை இரண்டு பெரிய சிகப்பு அவரைக் கொட்டைகள் போன்று இறுக்கி மூடிய கைமுட்டிகள் அளவில் அமைந்துள்ளன. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, உடலுக்குத் தேவையற்ற நீருடன் சேர்த்து வெளியேற்றி இரத்தத்தை அவை தூய்மைப் படுத்துகின்றன. இந்த நீர்மப் பொருளே சிறுநீராகும். இது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப் பட்டு சிறுநீர் கழிக்கும்போது வெளியேற்றப்படுகிறது.

ஒருநாளைக்கு நம் உடலில் இருந்து 3லிட்டர் அளவுக்கு வியர்வையாகவும் சிறுநீராகவும் மூச்சு விடுவதன் வாயிலாகவும் கழிவுநீர்ப் பொருள் நம் உடலை விட்டு வெளியேறுகிறது; கூடுதலாக உள்ள உப்பும் வெளியேறுகின்றது; மூச்சு விடுவதன் வாயிலாகக் கழிவுப் பொருளான கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது.

டயாலிசிஸ் (Dialysis) என்றால் என்ன?

உடலின் சிறுநீரகங்கள் பழுதடைந்து தமது பணிகளைச் செய்ய இயலாத நிலையில், சிறுநீரகத்திற்குப் பதில் எந்திரத்தின் வாயிலாக இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது. மனிதனின் கையில் ஒரு குழாய் வழியே உடலிலுள்ள இரத்தம் பம்ப் செய்யப்பட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட (sterile) திரவத்தையுடைய சிறு தொட்டி போன்ற பகுதிக்குள் செலுத்தப்படுகிறது; இரத்தக் கழிவுப் பொருட்கள் குழாயின் சுவர்ப் பகுதி வழியே வெளியேற்றப்பட்டு, தூய்மையடைந்த இரத்தம் மீண்டும் மனித உடலுக்குள் அனுப்பப்படுகிறது. சிறுநீரகத்தின் இரண்டு முக்கிய இரத்த நாளங்கள் – ஒன்று இரத்தத்தை வெளிக் கொணர்ந்து, மற்றொன்று உட்கொண்டு செல்வது - போன்றே டயாலிசிஸ் எந்திரம் பணிபுரிகிறது. எந்திரத்தின் ஒரு குழாய் [சிறுநீரகத் தமனி (renal artery) போல] வடிகட்டாத இரத்தத்தை உடலிலிருந்து எடுத்துச் செல்லவும் மற்றொரு குழாய் [சிறுநீரகச் சிரை (renal vein) போல] தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தத்தை உடலுள் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. டயாலிசிஸ் என்னும் செயல்முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் புதிய சிறுநீரகம் பொருத்தப்படும்வரை செய்யப்பட வேண்டும். மேலும் டயாலிசிஸ் அடிக்கடி வாரத்தில் சில முறைகளாவது செய்யப்பட வேண்டும்; இதன் வாயிலாக கழிவுப் பொருள் இரத்தத்தில் அபாய அளவுக்குச் சேராமல் தடுக்கப்படுகிறது.

மனித உடலின் 70% நீர்மப் பொருளால் ஆனது. எனவே ஒவ்வொரு நாளும் போதுமான அளவுக்கு நாம் தூய தண்ணீரைப் பருக வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:44 am

மூளையின் (brain) முக்கியப் பகுதிகள் யாவை?

அடிப்படையில் மூளையின் முக்கியப் பகுதிகளாக விளங்குபவை மூன்று: பின் மூளை, நடு மூளை மற்றும் முன் மூளை என்பனவே அவை. இப்பகுதிகள் ஒவ்வொன்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கென மேலும் பல நுண்ணிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூளையின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகின்றன.

பின் மூளையின் மிகப் பெரிய கட்டமைப்பாக விளங்குவது சிறுமூளை (cerebellum) ஆகும். மூளை முழுவதிலும் மிகப் பெரிய அமைப்பாக விளங்குவது முன்மூளையில் அமைந்து உள்ள பெருமூளை (cerebrum) ஆகும். இப்பகுதி வேறு எந்த விலங்கையும் விட மனிதர்களிடம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மூளையின் பிற பகுதிகள் பெருமூளைக்கே செய்திகளை அனுப்பி முடிவெடுக்க உதவி புரிகின்றன. பெருமூளையின் மேலே கவிந்துள்ள சாம்பல் நிற மூடி போன்ற உறை, மூளை மேலுறை (cerebral cortex) என அழைக்கப்படுகிறது. மூளையின் இப்பகுதி மனித மூளையில் மிக நன்கு வளர்ச்சியுற்று மடிக்கப்பெற்று மண்டைக்கூட்டினுள் (skull) பொருந்துமாறு அமைந்துள்ளது. மடிக்கப்பெறாத நிலையில் இப்பகுதி, மடிக்கப்பெற்ற நிலையில் இருப்பது போல் 30 மடங்கு பரந்து விரிந்து இருக்கக்கூடியது.

மனித உடலின் நடுக்க (shivering) உணர்ச்சியில் நான்கு இயங்குமுறைகள் (mechanisms) அமைந்துள்ளன. மூளையின் கீழ்ப்பகுதியிலுள்ள ஹைபொதாலமஸ், வெப்பநிலை குறைவாக உள்ளது என்பதை உணர்ந்து தைராய்டு சுரப்பிகளுக்குச் செய்திகளை அனுப்புகிறது; வளர்சிதை மாற்ற வீதத்தை விரைவு படுத்துமாறும் கூறுகிறது. இதன் விளைவாக உடல் தசைகள் விரைவாகச் சுருங்கி விரிந்து வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. பின்னர் நரம்புகளால் தோல் பகுதிக்குச் செய்தி அனுப்பப்பட்டு தோல் துளைகள் குறுகி வெப்ப உணர்வு உடலுக்குள்ளேயே சேமிக்கப்பட்டு நடுக்கத்தை ஈடுகட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மூளையின் முக்கியச் செயல்கள் யாவை?

மூளை மனித உடலின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது எனலாம். எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நினைவாற்றல் ஆகிய மூன்றிலும் தொடர்பு கொண்டு மனித உடல் இயல்பாகச் செயல்பட மூளை உதவி புரிகிறது.

மூளையின் பல்வேறு பகுதிகள் பல்வேறு பணிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மூளையின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது பெருமூளை (cerebrum) அல்லது முன் மூளையாகும் (forebrain). இது ஒரு கொட்டையின் பிளவுற்ற அரைப்பகுதி போல் காணப்படும். பெருமூளையின் முக்கியச் செயல் புலன்களால் அனுப்பப்படும் செய்திகளைப் பிரித்து அவற்றிற்கு விடையளிப்பதாகும். மேலும் தகவல்களைச் சேமிப்பதும் சிந்திப்பதும் கூட அதன் பணியே. புலன்களில் இருந்து வரும் செய்திகளை மேலாண்மை செய்வது பெருமூளையின் புலனுணர்வுப் பகுதி; தசைகளைக் கட்டுப்படுத்துவது அதிலுள்ள இயக்கப்பகுதி. சிந்தித்தல், நினைவிற் கொள்ளல் மற்றும் பேசுதல் ஆகியவற்றை மேலாண்மை செய்வது இணைவுப் பகுதி எனப்படும். சிறுமூளையானது (பின்மூளை) பெருமூளைக்குக் கீழே அமைந்துள்ளது. இது பெருமூளையின் இயக்கப்பகுதியாகப் பணியாற்றுவதால் தசைகள் இயல்பாக இயங்குகின்றன.

நூறாயிரக்கணக்கான செயல்பாடுகளைத் தற்போது கணினி வாயிலாக ஒரு சில நொடிகளில் செய்ய முடியும் என்றாலும், நமது மூளை அதனை விடவும் ஆற்றல் வாய்ந்தது, விரைந்து செயல்படக் கூடியது! ஒவ்வொரு வினாடியும் பில்லியன் கணக்கில் மின் சமிக்ஞைகளை அனுப்பி நமது மூளைகளால் மனித உடல்களைக் கட்டுப்படுத்த முடிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:45 am

விழித்திரை (retina) என்பது என்ன?

ஒளிக்கதிர்கள் கண்ணின் ஓளிப்படலம் (cornea) மற்றும் ஒளிவில்லைகள் (lens) வழியே செல்லும் போது அவை கண்கோளத்தின் (eyeball) பின்புற உட்பரப்பில் உள்ள விழித் திரையில் (retina) ஒளிர்கின்றன. இவ்விழித்திரை அஞ்சல் தலை அளவுக்கு மிகவும் மெல்லியதாக அமைந்துள்ளது. இருப்பினும் இதில் நுண்ணோக்கியால் காணக்கூடிய சுமார் 130 மில்லியன் உயிரணுக்கள் அடங்கியுள்ளன. ஒளி அவை மீது ஒளிரும்போது, நரம்பு சமிக்ஞைகள் (nerve signals) உருவாக்கப்படுகின்றன. உயிரணுக்கள் ஒளிகூருணர்வுத்திறன் (light sensitive) கொண்டவை. விழித்திரையில் இருவகைக் கூருணர்வுத்திறன் கொண்ட உயிரணுக்கள் உள்ளன; வடிவத்தின் அடிப்படையில் அவை நுண்கம்பி (rods) மற்றும் நுண்கூம்பு (cones) உயிரணுக்கள் எனப்படும். ஏறக்குறைய 125 மில்லியன் கம்பி மற்றும் கூம்பு உயிரணுக்கள் உள்ளன. வெள்ளை, சிகப்பு, ஊதா, பச்சை அல்லது மஞ்சள் நிறம் கொண்ட எல்லாவகை ஒளிக்கும் அவை ஈடுகொடுப்பவை. நுண்கம்பி உயிரணுக்கள் வலிமையற்ற ஒளியிலும் பணிபுரிபவை; எனவே கண்கள் மங்கலான நிலைமைகளிலும் பார்க்க உதவுகின்றன. ஒளி கூருணர்வுத்திறன் கொண்ட அடுத்தவகை உயிரணுக்கள் கூம்பு வடிவம் கொண்டவை ஆகும். விழிவில்லைக்கு எதிரே பின்புறத்தில் இவ்வகை உயிரணுக்கள் சுமார் 7 மில்லியன் அளவுக்கு உள்ளன.

பார்க்கும்போது பார்க்கப்படும் படிவம் (image) ஒரு நொடியின் மிகச் சிறு பகுதியளவு நேரம் விழித்திரையிலும் மூளையிலும் நகராமல் தங்கியிருக்கும். அதாவது இப்படிவங்கள் மிக விரைவாக மாறி அடுத்த படிவங்கள் தோன்றும். இதனால் அப்படிவங்களைத் தொடர்ச்சியாக நகரும் காட்சியாக நம்மால் காண முடிகிறது.

விழிக்கோளம் (eye ball) நகர்வதற்குக் காரணம் என்ன?

ஒவ்வொரு விழியின் நகர்வையும் ஆறு தசைகள் (muscles) கட்டுப்படுத்துகின்றன:

1) மூக்குக்கு அப்புறமாக விழியைச் சுழற்றும் தசை
2)மூக்கை நோக்கிச் சுழற்றும் தசை
3) மேற்புறம் சுழற்றும் தசை
4) கீழ்ப்புறம் சுழற்றும் தசை
5) கீழும் வெளிப்புறமும் சுழற்றும் தசை
6) மேலும் வெளிப்புறமும் சுழற்றும் தசை.

மேற்கூறிய எல்லா நகர்வுகளும் மூளையால் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒரு கண்ணிலுள்ள பக்கவாட்டு நேர்த்தசை (lateral rectus) சுருங்கினால் அடுத்த கண்ணிலுள்ள நடு நேர்த்தசையும் அதே அளவுக்குச் சுருங்கும். மேலேயுள்ள நேர்த்தசைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு கண்ணைப் பின்புறம் இழுத்து மேலே பார்க்கச் செய்கின்றன. கீழேயுள்ள நேர்த்தசைகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் கண் கீழே பார்க்க இயலுகிறது. மேலே இருக்கும் சாய்வான தசைகள் கண்ணைச் சுழற்றிக் கீழ்ப்புறமும் வெளிப்புறமும் காணச் செய்கின்றன. அதேபோல் கீழேயுள்ள சாய்வான தசைகள் செயல்பட்டு கண்ணை மேற்புறமும் வெளிப்புறமும் காணச் செய்கின்றன.

கண்கள் உடலின் சாளரங்கள் போல் செயல்பட்டு வெளியுலகைப் பார்க்கச் செய்வதால் அவற்றிற்குச் சிறப்புப் பாதுகாப்பு தேவை. ஒவ்வொரு வினாடியும் கண் இமைகள் செயல்பட்டு கண்ணில் தூசும் கிருமிகளும் சேராவண்ணம் தடுக்கின்றன. கண் புருவங்கள் நீர்ப்பொருட்களை கண்ணுக்குள் செல்லாமல் வடிகட்டுகிறது. கண்ணிமை முடிகள் தூசுகளைத் தடுப்பதற்குத் துணை செய்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:45 am

கண்பாவையின் (pupil) அனிச்சைச் செயல் (reflex) என்பது என்ன?

மிகுந்த ஒளியின்போது தசைகள் சுருங்கி கண்பாவை சிறியதாக மாற்றமடைகிறது; இதனால் மிகுதியான ஒளி கண்ணினுள் சென்று கண்பாவையின் நுட்பமான உட்பகுதிகளுக்குச் சேதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. விழித்திரையானது ஒளியினால் கூருணர்ச்சித் திறன் அடையக்கூடியதாகும். மிக அதிகமான ஒளி நாம் பார்க்கும் பொருளின் உருவத்தைச் சிதைத்து கண்களைக் கூசச் செய்துவிடும். கண்களின் பாவைகள் உருவ அளவுகளை மாற்றிக்கொள்வதன் வாயிலாக கண்களுள் நுழையும் ஒளியின் அளவைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ முடிகிறது. கூடுதல் வெளிச்சம் மிக்க ஒளியால் அனிச்சையான நரம்பு எதிர்வினை உருவாகி அது நடுமூளைப் பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இரு விழிகளிலுமுள்ள வட்ட வடிவமான கண்பாவைத் தசை சுருக்கமடைந்து, புரியிழைகள் நீட்சியடைவதால் பாவையின் விட்டம் சுருக்கமடைகிறது. மங்கலான ஒளியின்போது இரு கண்பாவைகளும் விரிவடைந்து போதுமான ஒளியை அனுமதித்து விழித்திரையின் உயிரணுக்கள் தூண்டிவிடப்படுகின்றன.

மனிதனது கண்கள் மிகவும் கூருணர்வுத்திறன் கொண்டவை. நிலவொளியே இல்லாத இருளில் ஒரு மலையுச்சியின் மீது அமர்ந்துள்ள மனிதனால் 80 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உரசப்படும் ஒரு தீக்குச்சியின் ஒளியையும் காண இயலும் எனக் கூறப்படுகிறது.

கண்ணின் குவிய இயக்காற்றல் (focusing mechanism) என்பது என்ன?

கண்ணின் ஒளி வில்லையானது (lens) ஒளிப்படக்கருவியின் (camera) ஒளிவில்லையைப் போன்றே பணிபுரிகிறது. பார்க்கப்படும் பொருள் அண்மையில் உள்ளதா சேய்மையில் உள்ளதா என்னும் நிலைமைக்கேற்ப ஒளிப்படலத்தின் குவிய ஆற்றலை அமைத்து ஒளிவில்லை நுண்ணிய மாறுதல்களைச் செய்கிறது. கண்ணின் ஒளிவில்லை ஓரளவுக்கு நீட்சித்தன்மை (elasticity) கொண்டிருப்பதால் அதன் அளவை மாற்றி குவியச் செயலை மேற்கொள்ள இயலுகிறது. ஒளிக்கதிர்கள், ஒளிவில்லையைத் தாண்டி, கண்கோளத்தின் இடைப்பகுதியிலுள்ள தெளிவான பாகு (gel) போன்ற பொருள் வழியே விழித்திரையை அடைகின்றன. தூரப்பார்வையில் தசைகள் ஓய்வாகவும் இணைப்பு இழைகள் ஒளிவில்லையை இழுத்து தட்டு வடிவத்தில் அமைக்கும்; கிட்டப்பார்வையில் அதிக வட்டத்துடனான ஒளிவில்லை தேவைப்படும்; எனவே தசைகள் ஒளிவில்லையை இறுக்கும், இணைப்பு இழைகள் ஓய்வாக அமையும்.

நமக்கு ஏன் இரு கண்கள் இருக்க வேண்டும்? ஒரு கண்ணை மூடிக்கொள்க; பென்சில் ஒன்றை கையில் பிடித்துக் கொள்க; உங்கள் கையை முன்னால் நீட்டி ஏதேனும் ஒரு பொருளைத் தொட முயல்க; உங்களால் தொட முடிகிறதா? இரு கண்களும் இணைந்து செயல்பட்டால் தான் பொருட்கள் எவ்வளவு அருகில் உள்ளன என்பதை அறிய முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by சிவா Fri May 22, 2009 1:46 am

காதுக்குள் இருக்கும் பகுதிகள் யாவை?

நம் கேட்கும் திறன், தலையின் இரு பக்கங்களிலும் உள்ள வெளிக்காதுகளுடன் மட்டுமே தொடர்பு கொண்டதல்ல. இவ்விரு செவிகளும் வெளிப்புறக் காதுகள் அல்லது தோலினால் மூடப்பட்ட குருத்தெலும்பினாலான தொங்கும் மடிப்புகள். உண்மையில் காதில் மூன்று பகுதிகள் உள்ளன. வெளிப்புறக் காது காற்றின் அதிர்வுகளான ஒலி அலைகளைத் திரட்டுகின்றது. நடுப்புறக் காது காற்றலைகளை செவிப்பறை (ear drum) மற்றும் சின்னஞ்சிறு எலும்புகள் ஆகிய திடப் பகுதிகளில் அதிர்வுகளை உருவாக்குகிறது. உட்புறக் காதில் அவ்வதிர்வுகள் திரவத்தின் அதிர்வுகளாக மாற்றப்படுகின்றன. பின்னர், அவை மின் நரம்புச் சமிக்கைகளாக மாறுகின்றன. உட்புறக் காது நமக்கு ஒரு சமநிலை உணர்வையும் (sense of balance) அளிக்கிறது. காதின் நடுப்பகுதியும் உட்பகுதியும் மண்டையோட்டு எலும்புகளால் அதிர்வுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன. வெளிப்புறக் காதிலுள்ள முடிகளால் தூசு, அழுக்குகள், கிருமிகள் ஆகியவை காதினுள் புகாமல் தடுக்கப்படுகின்றன.

மின்தூக்கி (lift), விமானம் ஆகியவற்றில் மேலே செல்லும்போது காதுகளில் உள்ள காற்று விரிவடைவதால் வெடிப்பொலி (pop) உண்டாகலாம். இது ஏற்படாவிடில் காதின் செவிப்பறை சிதைவுறக்கூடும்.

செவிச்சுருள்வளை (cochlea) என்பது என்ன?

செவியின் கேட்கும் பகுதி செவி அறையின் ஒரு முனையில் நத்தையின் ஓடு (snail shell) போன்று சுருள் (coil) வடிவில் அமைந்துள்ளது. இது செவிச்சுருள் வளை என அழைக்கப்படுகிறது; இதன் நீளவாட்டம் முழுவதிலும் தளச் சவ்வு (basilar membrane) எனும் மென்மையான சவ்வுப் பகுதி பரவியுள்ளது; இது சின்னஞ்சிறு நரம்பு முனைகளை செவிச்சுருள் வளைக்கு அளிக்கிறது. ஒலியளவின் மாற்றங்கள் அல்லது ஒலிகளின் உரத்த அளவுகள் சின்னஞ்சிறு முடிகளால் உணரப்பட்டு அழுத்த அலைகளாகப் பயணம் செய்யும்போது அவை உள்ளேயிருக்கும் செவிப்பறையில் (ear drum) அதிர்வு அல்லது அசைவை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் சுத்தி (hammer) எலும்பு, பட்டைச் (anvil) செவி எலும்பு மற்றும் அங்கவடி (stirrup) எலும்பு ஆகிய சின்னஞ்சிறு எலும்புகள் வாயிலாகக் கடந்து செல்கின்றன. மேலும் செவிசுருள்வளையைக் கடந்து செல்லுமுன் அவை ஒலிக்கின்றன. பின்னர் இந்த அதிர்வுகள் செவிச்சுருள் வளையினுள் இருக்கும் நரம்பு முனைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செய்திகளாக மாற்றம் பெற்று மூளைக்கு அனுப்பப்படுகின்றன.

உட்புறச் செவியைப் பாதுகாக்கும் பொருட்டு உரத்த ஒலிகள் செவிப்பறையை உறுதியாக்கி அங்கவடி எலும்பால் செவிச்சுருள் வளையிலிருந்து வெளியே இழுக்கப் படுகின்றன. மிகப் பெருமளவிலான உரத்த ஒலிகள் செவிப்பறையைக் கிழித்து காதைச் செவிடாக்கி விடக்கூடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடலியல் Empty Re: மனித உடலியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை