புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
11 Posts - 4%
prajai
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 4%
Jenila
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
Rutu
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
jairam
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_m10சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2023 2:43 pm

பீட்சா 3 – சினிமா விமர்சனம்
-
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-0e32695b39e42deaa9425db6642fefc4
-
நடிகர்: அஸ்வின்,காளிவெங்கட்
நடிகை: பவித்ரா மாரிமுத்து,அனுபமா குமார்,கவிதா பார தி
டைரக்ஷன்: மோகன் கோவிந்த்
இசை: அருண் ராஜ்.
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள அஸ்வின் ஓட்டல் நடத்துகிறார்.
அவருடைய ஓட்டலில் ஒரு பொம்மை வைக்கப்படுகிறது. அந்த
பொம்மையின் வருகைக்கு பிறகு அஸ்வினை சுற்றியும் அவர்
நடத்தும் ஓட்டலை சுற்றியும் சில அமானுஷ்ய சக்திகளின்
விளையாட்டு ஆரம்பமாகிறது.
-
அதன் தொடர்ச்சியாக சில கொலைகளும் நடக்கிறது.
அஸ்வினை போலீஸ் சந்தேக்கிறது. கொலைகளை செய்தது யார்?
கொலைக்கான காரணம் என்ன? கொலை பழியிலிருந்து அஸ்வின்
தப்பித்தாரா? என்பது மீதி கதை.
-
பக்கத்து வீட்டு பையன் தோற்றத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்
அஸ்வின். கொலை பழி தன் மீது வீழ்ந்த பிறகு பதட்டப்படாமல்
உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காட்டும் வேகம்,
பாதிக்கப்பட்டவருக்கு நடந்த கொடுமையை அறிந்து புழுவாக
துடிப்பது, காதல், விரக்தி, கோபம், பரிவு என உணர்வுகளின்
அத்தனை அம்சங்களையும் பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பவித்ரா மாரிமுத்து அழகாக இருக்கிறார். கிடைத்த கொஞ்ச வாய்ப்பை
சரியாகவும் பயன்படுத்தியுள்ளார். அம்மாவாக வரும் அனுபமா
குமாருக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேடம்.
அதை அவரும் நேர்த்தியாக செய்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் செகரெட்டரியாக வரும் கவிதா பாராதி, போலீஸ்
அதிகாரியாக வரும் கவுரவ், மாணவியாக வரும் அபி நட்சத்திரா,
நூலகராக வரும் செய்மூர், காளிவெங்கட் என அனைவரும் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட வேடத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மகளின் பலகீனம் தெரிந்தும் தாய் கூடுதல் கவனம் செலுத்த தவறியது
உள்பட படத்தில் சில இடங்களில் விடை தெரியாத கேள்விகள் இருப்பது
பலகீனம்.

அடுக்குமாடி குடியிருப்பு, மின் தூக்கி, ஓட்டல் என படத்தில் சில
லொக்கேஷன்களே வந்தாலும் அதையெல்லாம் அழகாக, திகிலாக,
பார்வையாளர்களுக்கு கடத்துகிறது பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு.

பயமுறுத்த வேண்டிய காட்சியில் பயத்தை ஏற்படுத்துகிறார்
இசையமைப்பாளர் அருண் ராஜ். வழக்கமான பழிவாங்கும் பேய்
கதையை கொஞ்சம் பரிதாபம், பயம், சென்டிமென்ட் என கமர்ஷியல்
அம்சங்களை அளவாக சேர்த்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார்
இயக்குனர் மோகன் கோவிந்த்.
-
நன்றி- தினத்தந்தி

Dr.S.Soundarapandian and vasuselva இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2023 2:55 pm

வெப் - சினிமா விமர்சனம்
-
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு 1429999-cni23aug05007
-
நடிகர்: நட்ராஜு
நடிகை: ஷில்பா மஞ்சுநாத்
டைரக்ஷன்: ஆரூண்
இசை: கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : கிறிஸ்டோபர் ஜோசப்

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஷில்பா மஞ்சுநாத்,
சுபபிரியா மலர், சாஷ்வி பாலா ஆகிய மூவரும் நெருங்கிய
தோழிகள். இவர்கள் மது, புகை, போதை வஸ்துகள் என்று
கும்மாளம் போடுகின்றனர்.

இதனால் குடும்பத்தினர் கவலையில் இருக்கிறார்கள்.
ஒரு நாள் கேளிக்கை விடுதியில் தோழியின் திருமண
விருந்தில் நிதானம் இழக்கும் அளவுக்கு குடித்து காரில்
புறப்படுகின்றனர்.

நடுவழியில் ஷில்பா மஞ்சுநாத்தையும் அவருடைய
தோழிகளையும் நட்ராஜ் கடத்தி பாழடைந்த வீட்டில் சிறை
வைக்கிறார். அங்கு தோழிகள் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள்? கடத்திய நட்ராஜ் யார்?
போன்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை.

நட்ராஜுக்கு ஹீரோ, வில்லன் என இரண்டு மாறுபட்ட
குணங்களை கொண்ட வேடம். அதை அவரும் மிக அழகாக
கையாண்டு இருக்கிறார். மாடர்ன் வேடத்தில் நாயகியை
மிரட்டுவது, வேட்டி, சட்டையில் தங்கையிடம் பாச மழை
பொழிவது என நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி
இருக்கிறார்.

கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் நவநாகரிக பெண் வேடத்துக்கு
கச்சிதமாக இருக்கிறார். கை நிறைய சம்பளம் வாங்கும்
பெண்களின் மனநிலையையும், அணுகு முறையையும் சர்வ
சாதாரணமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஓரிரு காட்சியில்
வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரன் சிரிக்க வைக்கும்
வேலையை சரியாக செய்திருக்கிறார்.

துணை வேடங்களில் வரும் அனன்யா மணி, சாஷ்வி பாலா, முரளி,
சுபபிரியா மலர் உள்பட அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக
செய்திருக்கிறார்கள். பெரும்பகுதி கதை அறைக்குள்ளேயே நகர்வது
பலகீனம்.

திரில்லர் கதைக்கு பின்னணி இசைதான் முதுகெலும்பு என்பதை
கருத்தில் கொண்டு மிக அதிகமாக உழைத்திருக்கிறார்
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பாழடைந்த பங்களாவுக்குள்
கதை நடந்தாலும் சலிப்பு தட்டாத வகையில் வித்தியாசமான கேமரா
கோணங்களில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர்
ஜோசப்.

மது, புகை போன்ற போதை வஸ்துகள் இளம் பெண்களின் எதிர்
காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை சமூக
கண்ணோட்டத்தோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆரூண்.
கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.
-
நன்றி: தினத்தந்தி


சிவா, Dr.S.Soundarapandian and vasuselva இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 09, 2023 10:12 am

வான் மூன்று - விமர்சனம்
-
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-15ead3b6066aaa5478991c85f332f5ef
-
சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களை சொல்லும்
களமாக ஒ. டி. டி களம் இருக்கிறது. ஆஹா தமிழ் ஒ. டி. டி.
தளத்தில் வான் மூன்று திரைப்படம் வெளியாக உள்ளது.
சினிமாக்காரன் என்ற தயாரிப்பு நிறுவனம் வான் மூன்று
படத்தை தயாரித்துள்ளது.

டெல்லி கணேஷ், அம்மு அபிராமி, லீலா சாம்சன் முக்கிய
காதபத்திரங்களில் நடித்துளார்கள். AMR முருகேஷ் படத்தை
இயக்கியுள்ளார்.

ஒரு மருத்துவமனை அங்கிருக்கும் மூன்று முக்கிய நபர்கள்
சந்திக்கும் பிரச்சனைகளை வைத்து கதை நகர்கிறது.

மனைவியின் உயிரை காப்பாற்ற போதிய பணமில்லாமல்
தவிக்கும் டெல்லி கணேஷ், காதல் தோல்வியால்
தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்ட அம்மு அபிராமி,
வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஒரு ஜோடி என
மூன்று வகை கதை மாந்தர்களை வைத்து கதை நகர்கிறது.இந்த
மூவரும் ஒருவரிடம் இன்னொருவர் தனது வாழ்க்கையை பகிர்ந்து
கொள்கிறார்கள்.

இவர்களின் இந்த பகிர் தலை திரையில் பார்க்கும் போது
நம்மிடையே பகிர்வது போல் உள்ளது. இந்த உணர்வுடன் காட்சியை
வடிவமைத்த இயக்குனரை பாராட்டலாம். சக மனிதர்களுடன் பேசி
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள். படத்தின் பல
காட்சிகள் உரையாடல் வழியே நகர்கிறது. இருப்பினும் சலிப்படைய
வைக்காமல் செல்கிறது.

டெல்லி கணேஷ் நடிப்பில் ஒரு வயதான கணவராக வாழ்ந்திருக்கிறார்.
தன் மனைவியை காப்பாற்ற வேண்டுமே, தன்னிடம் பணம்
இல்லையே என்று பரிதவிக்கும் போது நம் வீட்டில் நடப்பது போன்ற
உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

லீலா சாம்சன் நம் வீட்டில் உள்ள ஒரு பாட்டியை நினைவு படுத்தி
விடுகிறார். அம்மு அபிராமி காதலும் கடந்து போகும் என்ற கருத்தை
உள்வாங்கி நடித்துள்ளார்.

அஜய் மனோஜ் எடிட்டிங்கில் கதை குழப்பமில்லாமல் நகர்கிறது.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மருத்துவமனையில்
நடந்தாலும், படம் முடிந்த பிறகும் பல மணி நேரங்கள் கதா
பாத்திரங்கள் பேசிய விஷயங்கள் மனதில் நிற்கின்றன.

தகவல் தொழில் நுட்ப சாதனங்களுடன் அதிக நேரம் செலவிடும் நாம்
சக மனிதர்களுடன் நேரம் செலவழித்தால் வாழ்க்கையில் சிறந்த
மாற்றங்கள் நிகழும் என்று சொல்லும் படம் வான் மூன்று.
படம் நாடகத்தன்மை யில் இருந்தாலும் சொல்ல நினைத்த
மனிதத்துவத்தை நம்முள் கடத்தி விடுகிறார் டைரக்டர்.

நன்றி- கல்கி



Dr.S.Soundarapandian and vasuselva இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2023 10:19 am

ஜெயிலர் - சினிமா விமர்சனம்
-
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு 1089300
’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு
ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன்
இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு
சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன்
இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம்.

சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை
திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல
ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன்
(வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்)

எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை
கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனின்
தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான
முத்துவேல் பாண்டியன் (ரஜினி), தன் மகனுக்காக பழிவாங்கப்
புறப்படுகிறார்.

பல கொலைகள், தேடுதல், சண்டைகளைக் கடந்து விநாயகனை
அடையும் ரஜினியை வேறு ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரிடம்
தனக்கு தேவையான ஒரு வேலையை செய்ய சொல்கிறார் விநாயகன்.
அந்த வேலையை ரஜினி செய்து முடித்தாரா, இறுதியில் என்ன ஆனது
என்பதே ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை.


படம் தொடங்கியதுமே சிலை திருடும் கும்பல், கொடூர வில்லன்,
அவரைப் பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரி என பரபரக்கிறது
திரைக்கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் சாதுவான குடும்பத் தலைவராக
அறிமுகம் ரஜினி கவர்கிறார்.

எந்தவித பஞ்ச் டயலாக்கோ, ஓபனிங் பாடலோ இல்லாமல் மகனுக்கும்
பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
மகன் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க ஒவ்வொருவராக
தேடிக் கொல்லும் காட்சிகள் தரமான ‘சம்பவங்கள்’.

சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ’டைகர்’ முத்துவேல்
பாண்டியனாக மாற்றம் அடையும்போது அரங்கம் ஆர்ப்பரிக்கிறது.
இங்கு தொடங்கும் ரஜினியின் ராஜ்ஜியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை
எங்கும் தொய்வடையவில்லை.

ஐந்து தசாப்தங்களாக ரஜினி தக்கவைத்திருக்கும் அந்த கரிஷ்மா
அசாதாரணமானது. எந்தப் படங்களிலும் இல்லாத வகையில் பல
இடங்களின் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்துள்ளார்.

குறிப்பாக, யோகிபாபு உடனான காட்சிகளில் ரஜினியை வைத்து அவர்
அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்வார்களா
என்பது கூட சந்தேகமே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2023 10:22 am

சினிமா விமர்சனம் - தொடர் பதிவு 16916592991138
-

படத்தின் முதல் பாதி முழுவதுமே இயக்குநர் நெல்சன் அதகளம்
செய்திருக்கிறார். யோகிபாபுவும் ரஜினியும் சேர்ந்து வரும்
காட்சிகளில் தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. படம் முழுக்க வரும்
டார்க் காமடி காட்சிகள் நன்றாக கைகொடுத்திருக்கிறது.

படத்தின் இடைவேளைக் காட்சி ‘திரை தீப்பிடிக்கும்’ ரகம்.
ரஜினியின் உடல்மொழியில் ஏற்படும் மாற்றமும், அதுவரை
அலட்சியமாக டீல் செய்து கொண்டிருக்கும் குடும்பம் கொடுக்கும்
ரியாக்‌ஷனும் கூஸ்பம்ப்ஸ்-க்கு உத்தரவாதம்.
ஒரு ரஜினி ரசிகனுக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் முதல்
பாதியில் நிறைவாக உள்ளன.

சமீபகாலமாக ஓரிரு படங்கள் தவிர்த்து தமிழ் சினிமாவில் வெளியாகும்
பெரும்பாலான படங்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, முதல் பாதி
அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதே. காரணம், முதல் பாதியே
கிட்டத்தட்ட ஒரு முழு படம் போல எழுதப்பட்டு விடுகிறது.

இடைவேளைக்கு முந்தைய காட்சி ஒரு க்ளைமாக்ஸ் போல
அமைக்கப்படுவதால் அதற்கு பின்னால் வரும் காட்சிகளின் வீரியம்
குறைந்து விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதில் ‘ஜெயிலர்’ படமும்
தப்பவில்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம்
பாதியில் எழுதப்பட்ட ‘வீக்’ ஆன திரைக்கதையால் காணாமல் போய்
விடுகின்றன. கூடவே முதல் பாதியில் காமெடிக்கு உதவிய
யோகிபாபுவும் காணாமல் போய்விடுகிறார். அதுவரை பழிவாங்கும்
கதையாக போய்க் கொண்டிருக்கும் கதை, திடீரென ‘ஹெய்ஸ்ட்’
பாணிக்கு மாறுவது சுவாரஸ்யம் தரவில்லை.

அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
முதல் பாதியில் அதகளமாக ஆர்ப்பரிக்க வைத்த காட்சியமைப்புகள்,
இரண்டாம் பாதியில், பார்க்கும் நம்மை அமைதியாக்கி விடுகின்றன.

முதல் பாதியில் பெரிதாக தெரியாத லாஜிக் குறைகள்,
திரைக்கதையின் பலவீனத்தால் இரண்டாம் பாதியில் அப்பட்டமாக
தெரிகின்றன. உதாரணமாக, ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கொல்லப்ப
டுவது என்பது சாதாரண விஷயமா?

ஆனால், படத்தில் குடும்பத்தினருக்கு தகவல் சொல்வதோடு
போலீஸாரின் பணி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ரஜினி இஷ்டத்துக்கு
ஆட்களை போட்டுத் தள்ளுகிறார. தலையை ஒரே வீச்சில் துண்டிக்கிறார்,
தொண்டையில் கத்தியை இறக்குகிறார், ஸ்னைப்பர் மூலம் சுட்டுத்
தள்ளுகிறார்.
ஆனால் படத்தில் அதையெல்லாம் போலீஸ் கண்டுகொள்வதே இல்லை

15 ஆண்டுகளுக்கு முன்பு திகார் சிறையில் ஜெயிலர் ஆக ரஜினி
இருந்ததாக காட்டுகிறார்கள். அதற்காக அவருக்கு இந்தியாவின்
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ரவுடி எல்லாம் உதவுவதாக
காட்சிகள் வைத்திருப்பது நெருடல். எனினும், அந்த ஃப்ளாஷ்பேக்
காட்சியும், அதில் ‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பம் மூலம் ரஜினியை
‘சிவாஜி’ பட தோற்றத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார்,
மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர்
சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே
உதவியுள்ளதே தவிர கதைக்கு கிஞ்சித்தும் உதவவில்லை.

க்ளைமாக்ஸில் ஆளுக்கு ஒரு ஸ்லோமோஷன் காட்சிகளைத் தவிர,
'காவாலா’ பாடலுக்காக மட்டுமே தமன்னா பயன்படுத்தப்பட்டுள்ளார்.
சுனில், தமன்னா வரும் காட்சிகள் போரிங் ரகம். அந்தக் காட்சிகளை
நீக்கியிருந்தாலே இரண்டாம் பாதி சிறப்பாக வந்திருக்க சாத்தியங்கள்
உள்ளன.

ரஜினிக்கு அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் வில்லனாக வரும்
விநாயகன். ஆசிட் நிரம்பிய தொட்டிகளை ஆட்களை கொல்லும்போதும்,
ரஜினியின் கட்டளைக்கு இணங்கி ரம்யா கிருஷ்ணனிடம் பிச்சை எடுக்கும்
காட்சிகளில் பவ்யம் காட்டியும் அப்ளாஸ் பெறுகிறார்.

ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோருக்கான காட்சிகள் குறைவு.
ரஜினியின் பேரனாக வரும் மாஸ்டர் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார்.
வசந்த் ரவி முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் வந்து
செல்கிறார். மற்ற நெல்சன் படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பலம்
சேர்க்கும் ரெடின் கிங்ஸ்லி இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியில் குறை சொல்ல எதுவும் இல்லை. அனிருத்தின்
இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ட்ரெண்டிங். படத்தில்
பாடல்களைத் தாண்டி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார்.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

முன்பே குறிப்பிட்டதைப் போல முதல் பாதியில் சிறப்பான
காட்சியமைப்புடன், மினி க்ளைமாக்ஸ் போன்ற ஒரு இடைவேளை
கொடுத்த ‘ஹைப்’-பால் இரண்டாம் பாதியின் வீரியம் குறைந்துவிடுகிறது.

முதல் பாதியின் விறுவிறுப்புக்கு ஏற்ப இரண்டாம் பாதியை சீராக்கி,
தேவைற்ற காட்சிகளை கத்தரித்திருந்தால் ரஜினி - நெல்சன் இருவருக்குமே
ஒரு நிறைவான ‘கம்பேக்’ ஆக இருந்திருக்கும்.
ஆனாலும், இருவருக்குமே மிக முக்கியமான கம்பேக்தான் இந்த ‘ஜெயிலர்’.
-
நன்றி- இந்து தமிழ் திசை



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 11, 2023 10:23 am

புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 23, 2023 9:30 am

பாக்யராஜ் நடித்த 3..6.9- விமர்சனம்
-------------
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-414e7c26592cd9dadac57d0bdcbb2ea8
-
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-53230d96744119b08303887853cab14f

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 23, 2023 7:35 pm

லாக் டவுன் டைரி – விமர்சனம்
------------
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-b2eeabcd691f9ef38e3daf92d78954b9
-----------
சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Main-qimg-85807cad196ed6c0fe3db34eb9a76c6d

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 24, 2023 12:37 am

24.08.2023

லாக்டவுண் டயரி 2023  படத்தின் ஆடியோ ரிலீஸ்

சினிமா விமர்சனம் - தொடர் பதிவு Lwv6CCh

பேபி சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக